Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் அன்பே ஏங்காதே 4

Advertisement

A. Pavi

Member
Member
ஹேய் பாரத் மாதாஜி ஏன் இப்படி சோகமா இருக்கீங்க சொல்லுங்க உங்க பையன் நான் சரி செய்யறேன் என்று அலுவலகம் சென்று வந்த தேவ் கூறிட அவரின் தாயோ அவனை முறைத்த படி பதிலேதும் கூறாது வாசலையும்
பார்த்துக் கொண்டு இருந்தார் கலா.




மா என்னம்மா இன்னைக்கு என்ன மௌன விரதமா பேசாம இருக்க என்றிட அதற்கும் முறைத்து விட்டு அமைதியாய் இருந்திட அதற்கு மேல் ஏதும் கேட்காது அவனது அறைக்கு சென்று விட்டான் தேவ்.



கீழே வந்தவனிடம் டேய் தேவ் அம்மா கோவிலுக்கு போய்ட்டு வரேன் நீ காபி போட்டு குடி நான் வண்டிய எடுத்துட்டு போறேன் ஓகே யா என்றிட ம்ம்ம் என்றான்.



அப்புறம் ஏன்மா சோகமா இருக்க என்றிட அப்பா வந்தா அவர் கூட கோவிலுக்கு போலாம் நினைச்சேன் அதான் பார்த்தா வரவே இல்லை, நானே போய்ட்டு வரேன் என்று கிளம்பி விட்டார்.



இரவு வீடு வந்த இராமநாதன் மனைவியை காணாது டிவி பார்த்துக் கொண்டு இருந்த திவ்யாவிடம் கேட்க அவளோ தெரியலை பா என்றாள்.




என்னம்மா பதில் இது என்றவரிடம், அம்மா கோவிலுக்கு தான் போய் இருக்கணும் பா போன் பண்ணா எடுக்கலையா , எனக்கு என்ன பண்ணறதுனு தெரியலை அதான் டிவி பார்த்துட்டு இருக்கேன்.




சரிம்மா டிவி பார்த்த இல்லை சமையல் முடிச்சாச்சானு பார்த்தியா என்று கேட்க மகளோ தலை குனிந்து படி இல்லை பா என்றாள்.




ஆபிஸ் போய்டு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு அம்மாக்கு ஹெல்ப் பண்ணுடா புரியுதா என்ற மகளிடம் ம் என்ற பதில் வர தனதறைக்கு சென்று விட்டார்.




தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு கீழே வந்தவர் டிவியை ஆன் செய்து கொண்டே தேவ் என்றிட இதோ வரேன் பா என்றான்.




என்னடா ஆபிஸ் விட்டு வந்தா எப்போதும் மொபைல் எடுத்துட்டு உட்காந்திடற சும்மா அப்படியே வாக் போடா சரியா என்க சரிப்பா என்றான்.




அம்மாக்கு போன் பண்ணுப்பா எங்க போயிருக்காங்க தெரியலை என்றிட கோவிலுக்கு தான் போய் இருக்காங்க பா என்று தேவ் கூறிட அழைப்பு மணி ஒலித்தது.




திவ்யா தந்தைக்கும் அண்ணணுக்கும் காபி கொடுத்தவள் யாரென்று பார்க்கச் செல்ல அவளை தடுத்து தேவ் செல்ல தாயுடன் ஒரு இளைஞனை பார்த்திட மா போன் அட்டன் பண்ணலை என்ன ஆச்சு என்று கேட்டிட தாயோ மகனை முறைத்து பார்த்தார்.




ஏன் இந்த கோபம் என்று அறியாதவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டிட நீங்க உள்ள வாங்க பா என்று அந்த இளைஞனை உள்ளே அழைத்துச் சென்றார் கலா.




வந்தவுடன் யார் இவன் என்ற பார்வையை தாங்கி நின்ற கணவரிடம் இவர் பேரு சிவா என்னோட வண்டி பஞ்சர் இவர் தான் லிப்ட் கொடுத்தார் என்று இன்ட்ரோ கொடுத்தார்.





திவ்யா பேச்சு குரல் கேட்டு அனைவருக்கும் காபி எடுத்துச் சென்றவள் காபி கொடுத்தவள் சிவாவிடம் கொடுத்து விட்டு அவனை பார்த்தவள் இவங்களா என்று பார்த்திட அவனோ அறியா பார்வையை செலுத்தியவன் பெரியவர்களுடன் பேச ஆரம்பித்து விட்டான்.
 
ஒரே அப்டேட் இரண்டு தடவை வந்திருக்கு
Repeated update
 
Last edited:
Top