Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் அன்பே ஏங்காதே 5

Advertisement

A. Pavi

Member
Member
அறைக்குள் வந்த திவ்யாவிற்கோ ஒரே குழப்பமாய் இருந்தது. இவங்களுக்கு நம்மை கொஞ்சம் கூடவா அடையாளம் தெரியாது? ஏன் யாரோ மாதிரி பார்த்தாங்க சே, நான் ஒரு பைத்தியம் அடுத்தவர்களை பற்றி நமக்கு என்ன யோசனை. நாம ஜாலியா இருப்போம்.


குழப்பத்தை குழப்பமாய் விட்டு அதனை மேலும் யோசிக்காது கீழே ஹாலிற்கு வந்து சேர்ந்தாள்.


குடும்பத்தினர் மட்டுமே இருக்க புதியவன் சென்றிருந்தான். கலா சமையலறைச் செல்ல அவரை தடுத்த திவ்யா நானே சமையல் முடிச்சிட்டேன் மா வெய்ட் பண்ணுங்க நான் தான் பரிமாறுவேன் என்று உள்ள செல்லும் மகளை பார்த்தவர் இன்னைக்கு இவ நம்மளை முடிக்காம இருந்தா சரி என்று தேவ்விடம் கூற தந்தையும் மகனுமாய் சிரித்த படி டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.


உதவி செய்கிறேன் என்று வந்த தாயை வலுக்கட்டாயமாக சேரில் அமர வைத்து பரிமாறினாள் திவ்யா.

இரவு உணவாக காளான் பிரியாணி மற்றும் காலிபிளவர் பிரை என செய்திருக்க அவள் எடுத்து வைத்ததை நம்ப மாட்டாமல் பார்த்திருந்தார் அவரின் தாய்.


சாப்பாட்டை அனைவரும் ருசித்து சாப்பிட்டு பாராட்ட முதல் முறை செய்த திவ்யாவிற்கோ ஏக சந்தோஷம். தாயினை எப்படி என் சமையல் என்பது போல் பார்க்க கலாவோ அமைதியாக உண்டு கொண்டிருந்தார்.



மா சாப்பாடு நல்லா இல்லையா? ஏன் எதும் சொல்லமா இருக்க என்றிட அவரோ நல்லா இருக்கு, நல்லா இருக்கு, அட நல்லா இருக்கு என்றிட சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவருக்கு சிரிப்பு தாங்கவில்லை.


அனைவரும் ஒன்று சேர்ந்து நகைத்திட, அவளுக்கோ சமையல் நன்றாக இல்லாததால் கேலி செய்கின்றனர் என்று எண்ணியவள், தந்தை கூப்பிட்டும் நில்லாது மேலே தனதறைக்கு சென்று விட்டாள்.


மனைவியைப் பார்த்தவர் என்ன மா எப்போதும் திவ்யாவை எதாச்சும் சொல்லிட்டு இருக்க என்றிட, ஆமா உங்க பொண்ணை எதும் சொல்ல கூடாது நீங்க செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கிங்க என்றார்.


இவ்வளவுக்கும் தேவ் ஏதும் கூறாது சாப்பிட்டு கொண்டு இருக்க திரும்பி அவனை ஒரு பார்வை இராமநாதன் பார்த்திட, கலா தான் தேவ் என்றிட, நிமிர்ந்தவன் என்னம்மா என்க தந்தையைப் பார்க்க சைகை செய்திட, என்னப்பா என்றான்.



பதிலேதும் கூறாது அவனைப் பார்த்திட அவனோ உண்டு முடித்த தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்தவன் திவ்யாவை சாப்பிட வைக்கிறேன் நீங்க ஏதோ முக்கியமாக பேசிட்டு இருந்திங்க அதை கண்டினீயூ பண்ணுங்க என்றவன் மேலே திவ்யா ரூம் சென்றான்.



பார்த்தியா உன் பையனை எப்படி பேசுறானு என்றிட, நாம்ப இப்படி பேசிட்டு இருந்ததை தான் கிண்டல் பண்ணிட்டு போறான் என்றார்.



மனைவியை பார்க்க தண்ணீர் எடுத்துக் கொடுங்க எனக்கு, அப்புறமா என்னை பார்க்கலாம் என்றிட, அவரோ எங்க அம்மா இல்லாதுனால எப்படி பேசுற அவங்க இருக்கும் போது இருந்த இடமே தெரியாம இருந்துட்டு இப்போது எல்லாம் ரொம்ப பேசுற என்றிட பதிலேதும் கூறாது எழுந்து மேலே சென்று விட்டார்.


தேவ்வோ கெஞ்சிக் கொண்டு இருந்தான் திவ்யாவை சாப்பிட சொல்லி அவளோ வேண்டாம் என்று மட்டும் வாயை திறந்தவள் மேலே ஏதும் பேசாது அமைதியாகி விட்டாள்.


முதலில் கெஞ்சியவன் பின்னர் அவளை தூக்கி சேரில் அமர வைத்து இரண்டு கைகளையும் கூப்பி சாப்பிடு டி என்னால முடியலை என்றான்.


அவனது இந்த செயலில் சிரித்தவள் வாயை திறந்து காட்ட உணவை ஊட்டி விட்டான். மேலே வந்த அவர்களின் பெற்றவர் சிரித்த படி கட்டிலில் அமர்ந்து பார்த்தனர்.



ஆனாலும் இவ்வளவு அடம், கோபம் எல்லாம் பொண்ணுக்கு ஆகாது திவ்யா , நீ கல்யாணம் பண்ணிட்டு போற வீட்டில்ல என்னைத் தான் சொல்லுவாங்க, பெண்ணை எப்படி வளர்த்தி வைச்சிருக்கேன் என்றிட திவ்யாவிற்கு கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் வந்த படியே இருந்தது.


இராமநாதன் நம்ம ரூமுக்கு வா கலா என்றவர் அறையை விட்டு வெளியேறிட கலா பயந்த பார்வைப் பார்த்திட, அவரின் மக்களோ தாயைப் பார்க்க தேவ் தான் நீங்க போங்க நாங்க பின்னாடி வந்துடுவோம் என்க, பயமா இருக்கு என்றிட, திவ்யா தான் மா நீ வா போலாம் என்றாள்.

பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் தான்!!!
 
Top