Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 12

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew


அத்தியாயம் 12 :


அன்று காலை....எப்பொழுதும் போல் தனது அறையில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அப்பொழுது....வேகமாக உள்ளே நுழைந்த ஆதித்யன்...நுழைந்த வேகத்திலேயே,"நித்திலா....!கமான்....வெளியே போக வேண்டியிருக்கு.....",என்று அவளை அழைக்க,

"எங்கே சார்...?",என்றபடியே எழுந்தவளைப் பார்த்தவன்,

"சைட்க்குப் போகணும்....லோட் வந்திருக்கு....!",என்க,

"திரும்பி வர்றதுக்கு எவ்வளவு மணி நேரம் ஆகும்....?",அவளுக்கு அவள் பிரச்சனை.மதியமும் அங்கேயே இருக்க நேர்ந்தால் கையோடு லன்ச்சை எடுத்துப் போய் விடலாம் என்று அவள் நினைத்தாள்.

"ஹப்பா....!உனக்கு இப்ப என்ன பிரச்சனை....?திரும்பி வர்துறக்கு ஈவ்னிங் கூட ஆகலாம்....மதியம் லன்ச்சை ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்....இப்ப நீ மட்டும் கிளம்பி வந்தா போதும்.....!வர்றியா....?"

"இதோ வரேன் சார்...!",என்றபடி நோட் பேடையும்....பேனாவையும் கையிலெடுத்தவளைப் பார்த்தவன்,

"ஏய்...ஏய்...!அதெல்லாம் எதுக்கு எடுத்து வைக்கிற....?",என்று கத்தினான்.

அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,"சார்....சைட்க்குப் போறோம்....நீங்க ஏதாச்சும் சொன்னா....நான் நோட் பண்ணிக்க வேண்டாமா...?",என்று வினவ,

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன்...'சரி' என்பது போல் தலையாட்ட....மனதிற்குள்ளோ....'ஆனாலும் பேபி...!நீ இவ்வளவு பொறுப்பா இருக்கக் கூடாது....நானே....உன்கூட சேர்ந்து வெளியே சுத்தலாம்ங்கிற நினைப்பிலதான்....உன்னை சைட்க்கு கூட்டிட்டுப் போறேன்...இதுல நோட் பேட் வேற...?',என்று நமட்டுச் சிரிப்புடன் நினைத்துக் கொண்டான்.

கௌதமிற்கு போன் பண்ணி....ஆபீஸைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியவன்....அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.இவனைப் பார்த்ததும்....கார் டிரைவர் ஓடி வர,அவரை வேண்டாம் என்று மறுத்தவன்....தானே காரை எடுத்தான்.

பின் சீட்டில் அமரப் போனவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்,"முன்னாடி வந்து உட்காரு....!",என்க,

"இல்ல சார்....!நான் பின்னாடியே உட்கார்ந்துக்கிறேன்...",என்று மறுத்தாள்.அவளுக்கோ....ஒரு அந்நிய ஆடவனின் அருகில் அமர்ந்து செல்ல விருப்பமில்லை.அவனுக்கோ....அவளுக்கு மட்டுமே உரிமையான இடத்தில் அவள் அமராமல்....யாரோ போல் பின்னாடி போய் அமருவது பிடிக்கவில்லை.

அவள் மறுத்ததில் கோபமுற்றவன்,"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் கிடையாது....முன்னாடி வந்து உட்காருன்னு சொன்னா....வந்து உட்காரு...!",என்று கத்த,

'ஷப்பா....!ஒரு விஷயத்தை வேண்டாம்ன்னு மறுத்தறக் கூடாது...உடனே....மூக்குக்கு மேல கோபம் வந்திடும்....' என்று முணுமுணுத்தபடியே முன்னாள் ஏறி அமர்ந்தாள்.'இதை முன்னாடியே செய்வதற்கு என்ன....?' என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன் காரைக் கிளப்பினான்.

கார் ஊர்ந்து சென்று சென்னை டிராஃபிக்கில் நீந்தியது.

அவள் புறம் திரும்பியவன்,"அப்புறம் நித்திலா....!உன்னைப் பத்தி சொல்லேன்....",என்று பேச்சை வளர்க்க,
"என்ன...",என்று விழி விரித்தவளைப் பார்த்தவன்,"எப்படியும் நாம போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்றதுக்கு...ஒரு மணி நேரமாவது ஆகும்.....அதுதான்,சும்மாவே வர்றதுக்கு ஏதாவது பேசலாமேன்னு கேட்டேன்....",என்று சமாளித்தாள்.

"ஓ...!",என்று உதட்டை சுழித்தவள் ,"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு சார்....?என் ஃபேமிலியைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே....?உங்க பேமிலியைப் பத்தி சொல்லுங்க...?",என்று கேள்வியைத் திருப்பினாள்.

"ஹ்ம்ம்....என் தாத்தா,பாட்டி,அம்மா, அப்பா அண்ட் இவங்களோட ஒரே வாரிசான நான்....இதுதான் என் பேமிலி....!",என்றவன் 'அப்புறம் நீயும் என் பா,பேமிலிதான்....' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

"நைஸ்....!தாத்தா...பாட்டிக் கூட இருக்கறது ஜாலியா இருக்கும்ல...",என்று ஆர்வாமாகக் கேட்டவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

"ம்...ஆமா!என் அம்மா அப்பாவை விட....நான் அதிகமா பழகறது என் தாத்தா பாட்டிக்கூடத்தான்....ஸச் அ வொண்டர்ஃபுல் கப்புள்....!",என்று ரசித்துச் சொன்னான்.

"உனக்கு ஹாஸ்டல் லைஃப் எப்படி போகுது....?",என்று மேலும் பேச்சை வளர்க்க,

"ம்ம்....நல்லா போகுது....பிரெண்ட்ஸ் கூட ஜாலியா ஷாப்பிங்....அரட்டை...விளையாட்டுன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன்....பட்...அம்மா அப்பாவைத்தான் ரொம்ப மிஸ் பண்றேன்...!",அவளது வருத்தத்தைக் கண்டவன்,

"உன் பேரண்ட்ஸை உனக்கு ரொம்ப பிடிக்குமோ...?",குரலில் பொறாமை வழியக் கேட்டான்.

"ம்....அவங்களைப் பிடிக்காம இருக்குமா...? இதுதான் பர்ஸ்ட் தடவை...அவங்கள பிரிஞ்சு இருக்கறது...",

அவள் கூறியது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை.அவளுக்குத் தன்னை மட்டும்தான் பிடிக்க வேண்டும்....தான் மட்டும்தான் அவளுக்கு முதன்மையானவனாகவும்....முக்கியமானவனாகவும் இருக்க வேண்டும்..என்று அவன் காதல் மனம் நினைத்தது.

அவளைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரி....தனக்குப் பின்தான் அவளுக்கு....அனைவரும் என்று சுயநலமாக எண்ணினான் அவன்....!

"நீ இங்க வந்து ஜாயின் பண்ணினத்துக்கு அப்புறம்...உன் அம்மா அப்பாவை பார்க்கப் போகலையா....?",

"ம்ஹீம்....போகல சார்...!எங்கே....நீங்க லீவ் கொடுத்தாத்தானே போறதுக்கு...?சனிக்கிழமை கூட விடாம ஆபிஸ்க்கு வரச் சொன்னா...என்னை மாதிரி இருக்கிறவங்க என்ன பண்றது....?",இதுதான் வாய்ப்பென்று அவன் விடுமுறை விடுமுறை அளிக்காததைப் பற்றிக் கூறினாள்.

அதைப் புரிந்து கொண்டவன் சிரித்தபடியே,"அதுதான் மன்த்லி ஒன் சாட்டர் டே லீவ்தான....?அப்ப போயிட்டு வந்திருக்கலாம்ல....?",என்க,

"அந்த சனிக்கிழமையும் பிரெண்ட் மேரேஜ்ன்னு ஓடிப் போச்சு...இந்த வாரம்தான் போகணும்....!"

"பார்த்தயா...உன் மேல தப்ப வைச்சுக்கிட்டு....என் கம்பெனி மேல பழியத் தூக்கிப் போடற....",அவன் கேலியாக வினவ,

சிறிது நேரம் என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தவள் பிறகு ஏதோ ஞாபகம் வரவும்,"ஹ....நான் ஒண்ணும் உங்க மேல பழி போடல...இப்ப நான் லீவ் கேட்டா கொடுத்திருவீங்களா...?",என்று அவள் விடுமுறை கேட்கும் போதெல்லாம் அவன் மறுத்தது ஞாபகம் வரவும் அவனிடம் அவ்வாறு கேட்டாள்.

"லுக் நித்திலா....வேலைக்குன்னு வந்துட்டா மற்றதையெல்லாம் மறந்திடணும்....அதிலேயும் நீ என் செக்ரெட்டரி....!உனக்கு அடிக்கடி லீவ் எல்லாம் தர முடியாது....அதிலேயும்....ஊருக்குப் போகணும்ங்கிற சின்ன விஷயத்துக்கெல்லாம் லீவ் தர முடியாது....அண்டர்ஸ்டாண்ட்....?",என்று நீளமாக விளக்கமளித்தான்.

அவனுக்கு என்ன எண்ணமென்றால்....அவளுக்கு அடிக்கடி விடுமுறை அளித்தால்...அவள் ஊருக்குச் சென்று விடுவாள்.பிறகு....பெற்றவர்களின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே சுற்றுவாள்.அவளை...அவர்களிடம் இருந்து பிரித்து வைத்தால்தான்...தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பாள் என்று முரட்டுத்தனமாகக் கணக்குப் போட்டது அவனது காதல் இதயம்...!

காதலின் மறு உருவமே சுயநலம்தானே...!தன் இணை தன்னை மட்டும்தான் உயிராக நேசிக்க வேண்டும் என்று காதல் கொண்ட மனது துடிப்பது இயற்கையல்லவா....?

அதற்குள் சைட் வந்துவிட...காரை ஒரு மரநிழலில் நிறுத்த....இருவரும் இறங்கி நடந்து சென்றனர்.'ஆதித்யன் கன்ஸ்ரட்க்க்ஷன்' என்ற பெயர்ப் பலகை அவர்களை வரவேற்க,வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

ஆங்காங்கு சிறு சிறு கட்டிடங்கள் எழும்பியிருக்க....வேலையாட்கள் அனைவரும் ஒரு ஒழுங்குடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.இவர்களைக் கண்டதும் மேனேஜர் மூர்த்தி ஓடி வந்து வணக்கம் தெரிவித்தார்.

அவரைப் பார்த்து தலையசைத்தவன்,"மூர்த்தி....!எல்லா வேலையும் ஒழுங்கா நடந்துட்டு இருக்கா....?",என்று விசாரிக்க,

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார்....நல்லா போய்க்கிட்டு இருக்கு...",என்று பணிவுடன் கூறினார் மூர்த்தி.அவருக்கு எப்படியும் வயது 40 இருக்கும்....அவ்வளவு வயதானவரே....ஆதித்யனிடம் பணிந்து பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தவளுக்கு,'இவன் யாரையுமே ஒரு எல்லைக்கு மேல் நெருங்க விட மாட்டான்....!'என்பது தெளிவாகப் புரிந்தது.

"குட்....!லோட் எல்லாம் இறக்கியாச்சா...?",என்று விசாரித்துக் கொண்டே அவன் நடக்க,அவனைப் பின்தொடர்ந்தாள் நித்திலா.

"இன்னைக்கு காலையிலதான் மணல்,செங்கல்...ஜல்லி எல்லாம் வந்துச்சு சார்....இறக்கிட்டு இருக்காங்க...",

"ஹ்ம்ம்....சீக்கிரம் வொர்க்க முடிக்கப் பாருங்க மூர்த்தி....!இன்னும் மூணு மாசத்துல இந்தப் ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் பண்ணனும்....ஞாபகம் இருக்கு இல்லையா....?",

"கண்டிப்பா சார்....முடிச்சிடலாம்....!அல்மோஸ்ட் எல்லா வொர்க்கும் கம்ப்ளீட் ஆகிடுச்சு....இன்னும் கொஞ்சம்தான் இருக்கு....வாங்க மேலே போய் பார்க்கலாம்....!",என்று அவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் செல்லும் வழியில் 15 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்க,அதைக் கவனித்த ஆதித்யனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

மேனேஜரிடம் திரும்பியவன்,"என்ன மூர்த்தி இது...?சின்ன பசங்கள வேலைக்கு எடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்குது....தெரியுமில்ல...?",என்று அதட்டியவன் அந்த சிறுவனை அழைத்தான்.

"நீ எதுக்குப்பா இங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்க...?படிக்கப் போகலையா...?",என்று கேட்க,

அந்த சிறுவனோ,"மேனேஜர் சார்தான் வேலைக்கு எடுத்தாரு சார்....எங்க அம்மாவும் இங்கேதான் வேலை செய்யறாங்க....ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா கொடுக்கறேன்னு சொல்லவும்...என் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு வர சொல்லிட்டாங்க....",கல்வியின் அருமை தெரியாமல் அப்பாவியாகக் கூறினான்.

மேனேஜரைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்,"என்ன தைரியமிருந்தா என் இடத்திலேயே....இப்படி ஒரு வேலையைப் பார்த்திருப்பீங்க....இது இல்லீகல்ன்னு தெரியாது...?இன்னும் எத்தனைப் பேரை இப்படி வேலைக்கு எடுத்திருக்கீங்க....?இப்பவே எல்லாப் பசங்களையும் வேலையை விட்டு அனுப்புங்க அண்ட் நீங்களும் உங்க ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துட்டுக் கிளம்புங்க....",அவன் கத்திய கத்தலில் வேலை செய்பவர்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.

முதன் முதலாக அவனை இப்படியொரு கோபத்தில் பார்த்த நித்திலாவும் அரண்டு போய் நின்றுவிட்டாள்.

"சார்...சாரி சார்....!சின்னப் பசங்களை வேலைக்கு எடுத்தா கூலி குறைவா கொடுக்கலாம்ன்னுதான் சேர்த்துக்கிட்டேன்....அதுவும் இல்லாம இவங்க பேரெண்ட்சும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க....",அவரை மேலும் பேச விடாமல் கை நீட்டித் தடுத்தவன்,

"போதும் நிறுத்துங்க....!யாரை ஏமாத்தப் பார்க்கறீங்க....?சம்பளம் கொடுக்கறது என் வேலை...அதை பத்தி நான்தான் கவலைப்படணும்....சின்னப் பசங்களை வேலைக்கு எடுத்தா அதன் மூலமா....நீங்க ஒரு கமிஷன் அடிக்கலாம்ன்னு பிளான் போட்டு இருக்கீங்க...",தாடை இறுகியிருக்க...கோபத்தில் அவன் கண்கள் சிவந்திருந்தது.

"சாரி சார்...!பொண்ணுக்கு மேரேஜ் வைச்சிருக்கேன் சார்....இப்ப போய் வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க சார்...இனி இப்படி ஒரு தப்பை பண்ண மாட்டேன்...."தன் வயதுக்கு மீறி கெஞ்சிக் கொண்டிருந்தவரைப் பார்த்த நித்திலாவிற்கு பாவமாக இருந்தது.

"ஐ டோன்ட் நீட் எனி மோர் எக்ஸ்ப்ளனேஷன்ஸ்....ஆபிஸ்க்கு வந்து உங்க செட்டில்மெண்ட்டை வாங்கிட்டுக் கிளம்புங்க...",சற்றும் மனம் இளகாமல் அவரைப் பார்த்துக் கத்தியவன்,
சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து,"எல்லாரும் போய் வேலையைப் பாருங்க....",என்று ஒரு அதட்டல் போட அனைவரும் துண்டைக் காணோம்...துணியைக் காணோம் என்று ஓடி விட்டனர்.மேஸ்திரியை அழைத்து,இன்று மட்டும் அனைத்தையும் மேற்பார்வை செய்யும்படி கூறியவன்....நாளையே ஒரு புது மேனேஜரை அப்பாய்ண்ட் பண்ணுவதாகக் கூறி அனுப்பி வைத்தான்.

நித்திலாவைத் திரும்பிப் பார்த்துத் தன் பின்னால் வருமாறு கண்ணசைத்துவிட்டு....மேல் தளத்திற்கு செல்லும் படிகளில் ஏறத் தொடங்கினான்.இன்னும் கோபம் குறையாமல் தன் முன்னால் சென்றவனைப் பார்த்தவள்,"சார்....!அவரு பாவம்....ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டாரு....அதுக்காக....வேலையை விட்டுத் தூக்கியிருக்க வேண்டாம்...",என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.

விசுக்கென்று திரும்பியவன்,"என்ன சொன்ன....?தெரியாம தப்பு பண்ணிட்டாரா....?அந்த ஆளு பண்ணினதுக்குப் பேரு தப்பு இல்ல...நம்பிக்கைத் துரோகம்....!அந்த ஆள நம்பித்தானே இந்த வேலையை அவரு கையில கொடுத்தேன்...?",அவளையே கூர்மையாகப் பார்த்தபடி கேட்டவனைக் கண்டு....பயத்தில் கையைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

அவளது செய்கையில் அவன் மனம் சிறிது அமைதியடைந்தது."இங்க பாரு நித்திலா....!பிசினஸ்ல இப்படித்தான் கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டியதாக இருக்கும்....அதும் இல்லாம....எனக்குப் பொய் சொல்றதும்....நம்பிக்கைத் துரோகமும் சுத்தமா பிடிக்காது....!இப்படி தப்பு பண்றவங்களுக்கு எல்லாம் பாவம் பார்த்துட்டு இருந்தா....நம்ம கதி அதோகதிதான்...!",என்று பொறுமையாக எடுத்துக் கூறியவன்,

"சரி...வா!நாம மேலே போகலாம்...!",என்றபடி அவளை அழைத்துக் கொண்டு மேல்தளத்திற்குச் சென்றான்.கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டு மேஸ்த்திரியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சுற்றிலும் கைப்பிடிச் சுவர் இன்னும் கட்டாமல் இருக்க....ஓரத்தில் நின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.மேஸ்த்திரியிடம் பேசிக் கொண்டே திரும்பியவன்,சுவரின் ஓரத்தில் நின்றபடி கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து விட்டான்.

"ஏய்...நித்திலா...!அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...?இன்னும் கைப்பிடிச் சுவர் கட்டல....கீழே எல்லாம் எட்டிபி பார்க்காத...!",என்று நின்ற இடத்திலிருந்தே அதட்டினான்.அவன் கூறியதைக் கேட்டவள் சற்று உள்ளே தள்ளி நின்று கொண்டாள்.

அவன் இங்கிருந்தபடியே படபடத்ததைக் கண்டா மேஸ்திரி புன்னகைத்தவாறே,"என்ன சார்...!நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா....?நீங்க என்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாலும்...அவங்க பாதுகாப்பா நிற்கிறாங்களான்னு பார்க்கறதுலதான உங்க கவனம் முழுசும் இருக்கு....",என்று கேட்க,

அதற்கு எந்தப் பதிலையும் கூறாது...சிறு புன்னகையை மட்டும் சிந்தியவன்...திரும்பி,"வா...நித்திலா!கிளம்பலாம்...!",என்று சற்று தள்ளி நின்றிருந்தவளை அழைத்தான்.

இன்னும் இரண்டு இடங்களில் இதே போல் கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்க...இருவரும் அங்கே சென்று பார்த்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew


கார் அந்த உயர்ரக நட்சத்திர ஹோட்டலின் முன் நின்றது.தன் சீட் பெல்ட்டை விடுவித்துக் கொண்டே,"இறங்கு....!",என்றான்.

"எங்கே சார்....?",அந்த ஹோட்டலையே ஆச்சரியமாகப் பார்த்தபடி கேட்டாள்.

"மணி ரெண்டாச்சு....சாப்பிட வேண்டாமா...?"

"இல்ல...என் லன்ச் ஆபிஸ்ல இருக்கு...நான் அங்க போயே சாப்பிட்டுக்கிறேன்....!"

"இனி ஆபிஸ்க்கு போய் சாப்பிடறதுன்னா லேட் ஆகிடும்....இங்கேயே லன்ச்ச முடிச்சிட்டுக் கிளம்பலாம்....இறங்கு!",

"இல்ல....நான் வரல....நீங்க போய் சாப்பிட்டு வாங்க...நான் இங்கேயே வெயிட் பண்றேன்...!",அவள் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்க,அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

"ப்ச்....இப்ப என்னதான் பிரச்சனை உனக்கு...?என்னை நம்பி நீ வரலாம்....நான் ஒன்னும் உன்னை கடிச்சு முழுங்கிட மாட்டேன்...என் மேல இவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்....!",என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

"ஐயோ...!நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க சார்....உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல...எங்க சித்தி ஊரும் இதுதான்...உங்களோட என்னைப் பார்த்தா...தப்பா நினைச்சுக்குவாங்களோன்னுதான் நான் மறுத்தேன்....!",அவசரமாக அவனுக்கு விளக்கம் கூறினாள் நித்திலா.

"ஸோ வாட்....?",என்று தோளைக் குலுக்கியவன்,குழப்பம் தெளியாத அவன் முகத்தைக் கண்டு...ஒரு சீறலான மூச்சுடன்,"இங்க பாரு நித்திலா....!நீ என் செக்ரெட்டரி...!என் கூட மீட்டிங்க்கு வர வேண்டி இருக்கும்....பிசினெஸ் டின்னெர்க்கு வர வேண்டியிருக்கும்....இவ்வளவு ஏன்...சம் டைம்ஸ்...என் கூட வெளியூருக்கு வர வேண்டியிருக்கும்...இதுல....என் கூட சேர்ந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னால் என்ன அர்த்தம்....?",முடிந்த அளவு பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

அவளோ...அவன் பொறுமையை சோதிக்கும் விதமாக,"என்னது....?வெளியூரா....?வெளியூர்க்கெல்லாம் நான் வர மாட்டேன்....!",என்று தலையை ஆட்டி மறுக்க,

ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்து....பறக்க இருந்த பொறுமையை இழுத்துப் பிடித்தவன்,"சரிம்மா தாயே....!அதை அப்ப பார்த்துக்கலாம்...இப்ப கீழே இறங்கி வர்றியா....?",என்று கேட்க,

"ம்ம்....",என்று அரைகுறையாய் தலையசைத்தபடி இறங்கியவளைப் பார்த்தவனின் மனதிற்குள்,'கடவுளே....!கூட சேர்ந்து சாப்பிட வைக்கிறதுக்கே நாக்கு வரள கத்த வேண்டியதா இருக்கு....இதுல,நான் எப்ப இவகிட்ட காதல சொல்லி...கல்யாணம் பண்ணி....குடும்பம் நடத்தப் போறேனோ தெரியல.....?',என்று பெருமூச்சுவிட்டான்.

உள்ளே இருவர் மட்டும் அமருமாறு ஒரு தனி கேபின் இவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.மெல்லிய விளக்கொளியில்.....இனிமையான இசை கசிய....சூழல் மிக ரம்மியமாக இருந்தது.சுற்றிலும் ரசித்தபடி வந்தவளை....தங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்த கேபினுக்கு அழைத்துச் சென்றான்.

நடுவே உணவு மேசை போட்டிருக்க...எதிரெதிரே சோபாக்கள் போடப்பட்டிருந்தன.போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு புறம் சென்று அமர்ந்தவள்....எதேச்சையாக நிமிர்ந்து ஆதித்யனைப் பார்க்க....அவன் அவள்புறம்தான் வந்து கொண்டிருந்தான்.

'எங்கே அவன் வந்து தன்னருகில் அமர்ந்து விடுவானோ....?' என்ற பயத்தில்....சுவர் ஓரமாக இருந்த அவளது கைப்பையை அவசர அவசரமாக எடுத்து....அவளுக்கு மறுபுறம் வைத்துக் கொண்டாள்.

'பார்டா....!இது இருந்தா நான் வந்து உன் பக்கத்தில உட்கார மாட்டேனா பேபி....?' என்று மனதிற்குள் நினைத்தவன் அவள் அருகில் வந்து அமர்ந்ததோடல்லாமல்.....இருவருக்கும் இடையில் இருந்த கைப்பையை தூக்கி தனக்கு மறுபுறம் வைத்துக் கொண்டான்.

"பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு....?",என்று அவள் கைப்பையை சுட்டிக் காட்டியபடி புருவத்தை உயர்த்தியவனைப் பார்த்து அசடு வழிய சிரித்தாள்.

"ஒகே....என்ன சாப்படறேன்னு சொல்லு....?",என்று அவள் பக்கம் மெனுகார்டை தள்ள,

"இல்ல....நீங்களே ஆர்டர் பண்ணுங்க...!",என்றபடி திரும்பவும் அவன் பக்கமே தள்ளி விட்டாள்.

"ஷ்...நித்திலா...!ஒவ்வொரு முறையும் உனக்குப் பாடம் நடத்திட்டே இருக்கணுமா....?அப்போத்தான் நான் சொல்றதைக் கேட்பியா...?",ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில் எதைக் கண்டாளோ....அருகில் நின்றிருந்த பேரரிடம் தனக்குப் பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்தாள்.அவனும் தனக்குப் பிடித்தத்தைச் சொல்ல....பேரர் அதைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து நகன்றார்.

ஆதித்யனுடன் ஒரே அறையில் வேலை செய்தாலும்....அவனை இவ்வளவு அருகில் பார்ப்பது இதுதான் முதல் முறை....!அவனிடமிருந்து வரும் ஆஃப்டர் ஷேவ் லோஷனின் நறுமணமும்....அவனுக்கே உரிய பிரத்யேக வாசனையும்...அவளை என்னவோ செய்தது.

'இவன் எதிர்ல இருக்கற சோபாவில போய் உட்கார்ந்தால்தான் என்ன....?' என்று மனதிற்குள் பல்லைக் கடித்துக் கொண்டாள்.அவனை விட்டு சற்று நகர்ந்து சுவர் ஓரமாக தள்ளி அமர்ந்து கொண்டாள்.அவனும்....அவளிடம் எதையோ பேசியபடியே தள்ளி அமர்ந்து....இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்துக் கொண்டான்.அதற்கு மேல் நகர்ந்து உட்கார முடியாமல்...நித்திலாவை சுவர் தடுக்க....வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்து விட்டாள்.

இருவருக்கும் இடையில் எந்தப் பேச்சு வார்தையுமின்றி மௌனமாகக் கழிந்தது.ஆதித்யனும் எதையோ யோசித்தபடி அமைதியாக இருந்தான்.அதற்குள்....அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் வர....இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

இடையில் எதையோக் கேட்பதற்காக ஆதித்யனின் முகத்தைப் பார்த்தவள்....அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கவும்...அதைக் கேட்காமல் விட்டுவிட்டாள்.

இருவரும் சாப்பிட்டு முடிக்கவும்....பேரரை அழைத்து பில்லை செட்டில் செய்தவன்..அனைத்தையும் எடுத்துப் போகச் சொன்னான்.அதன் பிறகும்,அவன் கிளம்பாமல் அமர்ந்தே இருக்கவும்....நித்திலா "சார்...போகலாமா....?",என்றாள் மெதுவாக.

"ஹ்ம்ம்...போகலாம்...போகலாம்...!அதுக்கு முன்னாடி நான் உன்கிட்டப் பேசணும்...!",என்றான் ஆழ்ந்த குரலில்.

"என்ன சார்...?",என்று கேட்டவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவன்...அவள் வலது கரத்தை..தன் இரு கைகளுக்கும் இடையில் சிறை வைத்தபடி,"நீயும் நானும் கல்யாணம் பணிக்கலாமா நிலா...?",என்று மென்குரலில் கேட்டான்.

அவன் கேட்டதில் அதிர்ச்சியடைந்தவன்,"எ...என்ன...?",என்றபடி தன் கைகளை அவன் பிடியிலிருந்து உருவிக் கொள்ள முயல....அவள் கையை விடாமல் இறுகப் பற்றியவன்,

"எனக்கு சினிமா டயலாக் எல்லாம் பேசத் தெரியாது...என் மனசில தோணறதை சொல்றேன்...!எனக்கு நீ வேணும்....!என் வாழ்க்கை முழுக்க...என் விரல் பிடிச்சு என் கூட நடக்க...நீ வேணும்...!கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்...யாரவது என்கிட்டே வந்து...'நீ ஒரு பொண்ணு மேல பைத்தியமா இருக்கப் போறேன்னு' சொல்லியிருந்தா நான் நம்பியிருக்க மாட்டேன்....ஆனால்...உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு....!சரி...சொல்லு!நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்...?",இம்மியளவும் அவள் விழிகளை விட்டுத் தன் பார்வையை அகற்றாமல்...அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தபடி ஆழ்ந்த குரலில் அவன் வினவ,

அவன் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டிருந்தவளாய்....இமைக்கவும் மறந்து அவனைப் பார்த்திருந்தால் நித்திலா.சிறு முறுவலுடன் அவள் கையை விடுவித்தவன்....தான் மறைத்து வைத்திருந்த நகைப் பெட்டியை எடுத்தான்.

அதற்குள் அழகிய மோதிரம் ஒன்று....இரு மயில்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும்படியும்...அதன் தோகையிலும்...கண்களிலும் வைரங்கள் பொடிக் கற்களையும்...ஒளி வீசும்படியும் வடிவமைக்கப்பட்டிருந்தது...!

அவளது வலது கையை மெல்லப் பற்றியவன்...அவளது விரலில் அந்த மோதிரத்தை அணிவிக்க முயல....சட்டென்று தன் நிலையை உணர்ந்தவள்...அவனிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டாள்.

"எனக்கு இதெல்லாம் பிடிக்காது சார்...!வழியை விடுங்க...நான் போகணும்...!",என்றபடி எழுந்தவளைப் பார்த்தவன்,

"உட்கார் நித்திலா...!நான் உன்கிட்ட பேச வேண்டியது இருக்கு...",அழுத்தமாகக் கூறினான்.

அதற்கும் அசையாமல் அப்படியே நின்றிருந்தவளைப் பார்த்தவன்,"அப்படியே நிற்கறதுன்னா...நின்னுக்கிட்டே இரு...!எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல....நான் பேசி முடிக்கற வரைக்கும்....ரெண்டு பேரும் இங்கிருந்து போக முடியாது...!",அசால்ட்டாகக் கூறியவன் கால்களை நீட்டி சௌகரியமாக அமர்ந்து கொண்டான்.

வேறு வழியில்லாமல் அமர்ந்தவள்...ஒரு முடிவோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"இங்கே பாருங்க சார்...!எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வர காதல் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல....அதுவும் இல்லாம....நான் என் பேரண்ட்ஸ் பார்த்து வைக்கிற பையனை மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்....!",

"எல்லாம் சரிதான்...!நான் உன்கிட்ட என் காதலை சொல்றதுக்கு முன்னாடி வரைக்கும்....நீ அந்த கொள்கையோடு இருந்த ஒகே....பட்....நான்தான் இப்ப என் லவ்வ சொல்லிட்டேனே...!அதையும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாம்ல...?",அவன் தன்மையாகவே கேட்டான்.

அவள்தான் முகத்தில் அடித்த மாதிரி,"எல்லாம் யோசிச்சுப் பார்த்துட்டேன்...எனக்குப் பிடிக்கல...!",என்றாள் பட்டென்று.

"எது பிடிக்கல...?என்னையா...?காதலையா....?",அவள் விழிகளுக்குள் ஊடுருவியபடி ஆழ்ந்த குரலில் வினவினான்.

அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தவள்...அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கூறமால்,"இனிமேல் இந்த எண்ணத்தோட என் கூட பழகாதீங்க சார்...!",என்றாள்.

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.....?ஏன்...வாய் வார்த்தையாகக் கூட என்னைப் பிடிக்கலைன்னு சொல்ல முடியலையா....?",சிறு புன்னகையுடன் கேட்டவனை ஆழ்ந்து நோக்கியவள்,

"இப்ப உங்களுக்கு என்ன வேணும் சார்...?உங்களைப் பிடிக்கல்லைன்னு சொல்லணும்....அவ்வளவுதான...?சரி....சொல்றேன்...கேட்டுக்கோங்க...!எனக்கு உங்களைப் பிடிக்கல....போதுமா...?",அழுத்தந் திருத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

அவள் கூறியதைக் கேட்டவனின் முகம் கடும் பாறையாய் இறுகியது....அவன் தன் கை முஷ்டியை இறுக மூடியதில்....நரம்புகள் தெறித்து விழும்படி புடைத்துக் கொண்டிருந்தன...!ஒரு கணம் கண்களை அழுந்த மூடித் திறந்தவன் அவளைப் பார்த்து,

"நான் இதுவரைக்கும் தோல்வியை சந்திச்சதே இல்ல....நான் தொட்டதெல்லாம் வெற்றிதான்....!",அவன் மேலும் என்ன கூறியிருப்பானோ....அதற்குள் இவள் இடையில் புகுந்து,

"அது பிஸ்னஸ்லயா இருக்கலாம்....!பட்....இது என்னுடைய வாழ்க்கை...!",என்றாள் உக்கிரமாக.

"எப்ப நான் உன்னை லவ் பண்ண ஆரம்பித்தேனோ....அப்பவே அது என் வாழ்க்கையா மாறிடுச்சு....!என் வாழ்க்கையில எந்த முடிவையும் நான் மட்டும்தான் எடுப்பேன்.....!",

"என் வாழ்க்கையில முடிவு எடுக்கும் உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல.....",

"நீ யாருக்கும் கொடுக்க வேண்டாம்....!அந்த உரிமையை நானே எடுத்துக்கிட்டேன்...!",அசால்ட்டாகக் கூறியவனைப் பார்த்தவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.

வந்த ஆத்திரத்தில்,"நான்தான் உங்களைப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல....?",என்று கத்தினாள்.

ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவள் முகத்தையேப் பார்த்தவன்,"பிடிக்கலைன்னாலும் பரவாயில்ல.....!என்னைப் பிடிக்கற மாதிரி உன் மனச மாத்திக்கோ.....!",என்றான் அசைட்டையாக.

"நான் எதுக்கு மாத்திக்கணும்....?நான் மாத்திக்க மாட்டேன்...!",

"நீ மாத்திக்கலைன்னா...நான் உன்னை மாத்திக்க வைப்பேன்....!",நம்பிக்கையுடன் கூறியவளைப் பார்த்துப் பல்லைக் கடித்தவள்,

"அதையும் பார்க்கலாம்...!",என்று சவால் விட்டாள்.

"வீணா என்கிட்ட சவால் விடாத...கண்டிப்பா நீ தோத்து போய்டுவ....!"

"அதையும் பார்க்கத்தானே போறேன்....!",என்று கத்தியபடி முகம் திருப்பிக் கொண்டாள்.

"ஒகே பேபி...!எதுக்கு இப்படி கத்தற....?நான் எவ்வளவு மெதுவா உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...ம்..?",என்று பேசிக்கொண்டே...அவள் கைகளை எடுத்து...தான் வாங்கி வந்திருந்த மோதிரத்தை அணிவித்து விட்டான்.
"ஏய்...!என்ன பண்றீங்க...?",என்றபடி மோதிரத்தை கழட்டப் போனவளைத் தடுத்தவன்,அது எந்த விரலுக்கும் பொருந்துமாறு....அட்ஜஸ்ட் பண்ணும்படி வடிவமைக்கப்பட்டிருக்க...அவள் விரலைக் கவ்விப் பிடிக்கும் படி நன்றாக அழுத்தி விட்டான்.

அதைக் கழட்ட முயன்று தோற்றவள்,"எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க...?",என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

"நீ இப்படி முரண்டு பிடிச்சா நான் என்ன பண்ணட்டும் பேபி....?உனக்காக நான் வாங்கிட்டு வந்த முதல் கிஃப்ட்.....அதுதான்....இப்படிக் கட்டாயப்படுத்தி போட்டு விட்டேன்...!",என்றபடி எழுந்து முன்னே நடந்தான்.

ஒன்றும் பேசாமல் அவனைப் பின்தொடர்ந்தாள் அவள்.

காரில் போகும் போது அந்த மோதிரத்தைக் கழட்ட முயற்சி செய்து கொண்டே வந்தவளைப் பார்த்தவன்,"உன்னால அதைக் கழட்ட முடியாது பேபி....!ரொம்ப டைட்டா இருக்கும்....தேவையில்லாம ட்ரை பண்ணாத...!",என்றான்.

இயலாமையில் அவளுக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.அதை அவன் அறியாமல் இருக்க....முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.அலுவலகத்தில் அவளை இறக்கி விட்டவன்....காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.அவனுக்கும் தனிமை தேவைப்பட்டது...!
தொழிலில் பல முடிவுகளை முரட்டுத்தனமாக எடுத்த அந்த தொழிலதிபன்....காதலிலும் அதே முரட்டுத்தனத்தைக் கடை பிடித்தான்....!காதல்...மிக மிக மென்மையானது...!எப்படி ஒரு பூ சூரியனைக் கண்டதும் ஒவ்வொரு மடலாக அவிழ்ந்து....மலர்ந்து மணம் பரப்புகிறதோ....அதைப் போல....காதலும்....தன்னவனைப் பார்த்ததும்....மெதுவாக...மிக மெதுவாக மலர்ந்து....சுகந்தத்தை அள்ளித் தெளிக்க வேண்டும்...!!

ஆனால்....சில சமயங்களில் காதலில் காட்டப்படும் வன்மையும் அழகுதான்....!

இந்தக் காதல் தீவிரவாதியின் காதல்....அந்த மென்மையானப் பெண்ணவளை....ஈர்த்து தனக்குள் அடக்குமா....?அகம் தொட வருவான்....!!!
 
Banumathi jayaraman

Well-known member
Member


அடப்பாவி ஆதித்யா
இப்படி அடாவடியா லவ்வை சொல்லிட்டானே
ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு, நிலா டியர்
 
Banumathi jayaraman

Well-known member
Member


இப்போ நித்திலா என்ன முடிவு எடுப்பாள்?
அந்த பாலா வேற ஒரு பக்கம் லவ் சொல்ல காத்திருக்கிறான்
நல்லவேளையா ஆதித்யா முந்திக்கிட்டு லவ்வை சொல்லிட்டான்
 
Advertisement

Advertisement

Contest Episodes

Top