Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்....!!! - 13

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 13 :

மகாபலிபுரத்தில் இருந்த அந்த பீச் கெஸ்ட் ஹவுசின் மாடியறையில் அமைந்திருந்த பால்கனியில் நின்றபடி கடலையே வெறித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.

மன அமைதிக்காகவும்....ஓய்வு எடுப்பதற்காகவும் அவன் அடிக்கடி வரும் இடம் இதுதான்.சில நேரங்களில் அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்து களைப்படையும் போது...ஓய்வு எடுப்பதற்காக கிளம்பி இங்கே வந்து விடுவான்.இரண்டு நாட்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் தனிமையில் கழித்து விட்டு....கடலில் வேண்டுமளவிற்கு நீந்தி விட்டுத் திரும்பும் போது மனது புத்துணர்ச்சியாக இருக்கும்.

மார்புக்கு குறுக்கே இரண்டு கைகளையும் கட்டியபடி பொங்கி வரும் கடலலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் முழுக்க நித்திலாதான் நிறைந்திருந்தாள்.முகம் கசங்க....கண்ணீரை அடக்கியபடி இருந்த அவளது தோற்றம்தான் மனதில் வந்து வந்து போனது.

'ஏண்டி...!இப்படி உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தற....?நீயென் உயிர் டி...!நீ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே இல்ல....என்னால எப்படி உன்னை விட்டுத் தர முடியும்...?நீ வேண்டாம்ன்னு சொன்னாலும் என்னால உன்னை விட்டு விலகிப் போக முடியாது டி....என்னைப் புரிஞ்சுக்க...!'என்று அவன் மனதிற்குள் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.

ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் இறுதியில் விறைப்பாய் நிமிர்ந்தான்....'யெஸ்....நான்
எடுத்த முடிவு சரியானதுதான்....பிடிவாதத்தால மட்டும்தான் உன்னை என்கிட்ட இழுக்க முடியும்...என் காதல் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு....!அது கண்டிப்பா உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்ந்திடும்....!',என்ற எண்ணம் அவனுள் உறுதியாய் எழுந்தது.

நித்திலாவின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை....பேயறைந்தபடி நடந்து வந்தவளைப் பார்த்த சுமித்ரா,"என்னாச்சு நித்தி....?ஏன் முகம் டல்லா இருக்கு....?",என்று அக்கறையாக விசாரிக்க,

அவளைப் பார்த்து மலங்க மலங்க விழித்தவள்,"அ...அது தலைவலியா இருக்கு....அதுதான்...",என்று சமாளித்தாள்.

"ஓ...வெயில்ல அலைஞ்சிட்டு வந்ததல்ல....அதனாலேயே இருக்கும்...டேப்லெட் போடறயா....?",

"இல்ல....அதெல்லாம் வேண்டாம்....!நான் என் டேபிளுக்கு போறேன்....",என்றபடி ஆதித்யனின் அறைக்குள் வந்துவிட்டாள்.

அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் இனம் புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மைதான்....!அவள் மனதில் அவளை ஊருக்கு அனுப்பும் போது....அவள் பெரியம்மாவிடம்....தனது தந்தை கூறிய 'என் மகளின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு...' என்ற வார்த்தைதான் ஒலித்துக கொண்டிருந்தது.

'இல்லை....இதை வளர விடக் கூடாது....நாளைக்கு அவர்கிட்ட பேசி இந்த விஷயத்தை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்....!' என்று முடிவெடுத்தாள்.

அவள் விரலில் அவன் அணிவித்த மோதிரம் அவளைப் பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தது.பிடிவாதத்தினால் இருவரும் தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றிருக்க....காதலோ....தனது பிடிவாதத்தைக் காட்ட வேண்டிய நேரம் தொடங்கி விட்டது என்று எண்ணி....அவர்களைப் பார்த்து சிரித்தது....!

அன்று மாலை தன் தாயிடம் பேசும் போது கூட....நித்திலா ஆதித்யனைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.படிக்கும் காலங்களில் யாரேனும் அவளிடம் காதலை சொல்லியிருந்தால்...அதை விளையாட்டாக வந்து தாயிடம் பகிர்ந்திருக்கிறாள்.ஆனால்...ஆதித்யன் விஷயத்தை அவள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.அவள் தாயிடம் அதைப் பற்றி கூற விடாமல் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.

எதையோ யோசித்தபடியே இருந்த நித்திலாவைப் பார்த்த நந்தினியும்...தன் பங்குக்கு விசாரித்தாள்.அவள் 'தலைவலி' என்று முணுமுணுக்கவும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

............................................................................................................................

காலை....வெகு உற்சாகமாக தனது அறைக்குள் நுழைந்த ஆதித்யனை வெறுமையான நித்திலாவின் முகமே வரவேற்றது.எப்பொழுதும் புன்னகையுடன் தன்னை எதிர்கொள்பவள் இன்று அமைதியாக இருக்கவும்....அவனே வலியச் சென்று,"குட் மார்னிங் நிலா....!", என்றான்.

அவனது 'நிலா' என்ற அழைப்பில் முகத்தைச் சுளித்தவள்,"என் பெயர் நித்திலா...!", என்றாள் அழுத்தமாக.

அசால்ட்டாக தோளைக் குலுக்கியவன்,"அது மத்தவங்களுக்கு.....ஆனால்...எனக்கு நீ 'நிலா' தான் பேபி.... !",என்றான்.
"ப்ச்....இப்படி எல்லாம் என்னைக் கூப்பிடாதீங்க சார்...!"

"நீயும் என்னை இப்படி 'சார்....சார்...!'ன்னு கூப்பிடாத....",

"உங்களுக்கும் எனக்கும் இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப்....ஒரு எம்ப்ளாயர் அண்ட் எம்ப்ளாய்க்கு இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப்தான்....ஸோ....நான் 'சார்'னுதான் கூப்பிடுவேன்....!"

'அப்படியா...!' என்பது போல் தனது புருவத்தை உயர்த்தியவன்,"அப்ப சரி....!நான் உன்னை என் மனைவியாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்....என் பொண்டாட்டியை நான் செல்லமா 'பேபி....!நிலா...!டார்லிங்....!' அப்படின்னுதான் கூப்பிடுவேன்....",என்றவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டான்.

கோபத்தில் முகம் சிவந்தவள்...ஒரு லெட்டரை எடுத்துக் கொண்டு ஆதித்யனின் முன் சென்று நீட்டினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன்....அந்த லெட்டரை கையில் வாங்காமலேயே,"என்ன இது...?",என்க,

"என் ராஜினாமா லெட்டர்....!நான் இந்த வேலையை ரிசைன் பண்றேன்....",என்றபடி அந்த லெட்டரை அவன் டேபிளின் மீது வைத்தாள்.

அவள் முகத்தையே சிறிது நேரம் அழுத்தமாகப் பார்த்தவன்,"நினைச்சேன் டி....!நீ இந்த மாதிரி கிறுக்குத்தனமா ஏதாச்சும் பண்ணுவேன்னு நினைச்சேன்....அது மாதிரியே பண்ணியிருக்க...!இதெல்லாம் தெரிஞ்சுதான் நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன்....",என்றபடி ஒரு ஃபைலைத் தூக்கி அவள் முன்பு போட்டான்.

இப்போது,"என்ன இது....?",என்று கேட்பது அவளின் முறையாயிற்று.

"ம்...படிச்சுப் பாரு தெரியும்...!",என்றவன் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதைப் படித்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.அது அவளுடைய வேலைக்கான ஒப்பந்தம்.அவள் அந்த அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் கட்டாயமாக வேலை செய்தாக வேண்டும்.தவிறினால்....அவள் மீது நடவடிக்கை எடுக்க....ஆதித்யனுக்கு உரிமை உண்டு.

அவள் வேலைக்கு சேர்ந்த அன்றே...ஆதித்யன் இந்த ஒப்பந்தத்தில் அவளிடம் கையெழுத்து வாங்கிவிட்டான்.அப்பொழுது பெரிதாகத் தெரியாத விஷயம்....இப்பொழுது அவளுக்கே பிரச்சனையாக வந்திருந்தது.

அதிர்ச்சியடைந்து நின்றிருந்தவளைப் பார்த்தவன்,"என்ன...ஃபைலை பார்த்திட்டயா...?இப்ப போய் உன் வேலையைப் பார்க்கிறயா....?" கேலியாக வினவியவன்,அவளுடைய ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கிழித்துப் போட்டான்.

"இல்ல....இதை நான் ஒத்துக்க மாட்டேன்....!நாளையில் இருந்து நான் வேலைக்கு வர மாட்டேன்....",பிடிவாதம் பிடித்தவளைக் கூர்மையாக நோக்கியவன்,

"அவ்வளவு பயமா....?",என்க,

"எ...என்ன பயம்...?",

"எங்கே நீ...இங்கேயே இருந்தா உன் மனச நான் மாத்திடுவேனோங்கிற பயத்துலதான உன் ஊருக்கு ஓடற...?",அவனது உதட்டோரங்கள் ஏளனமாய் வளைந்தன.

"சேச்சே....!எனக்கு ஓண்ணும் பயமில்லை...என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!",என்றாள் உறுதியாக.

"அப்படின்னா....இங்கேயே இருக்க வேண்டியதுதான....?",அவன் அவளை மடக்கி விட...அவள் குழப்பத்துடன் முழித்தாள்.

அவள் யோசிப்பதைக் கண்டவன்,"உனக்குப் பயம்...!எங்கே இவன்கிட்ட மயங்கிடுவோமோன்னு உனக்குப் பயம்....",அவன் மேலும் ஏற்றிவிட,அவள் பெண் புலியாய் சிலிர்த்தாள்.

"ஆமா....இவரு பெரிய மன்மதன்...!நான் அப்படியே இவரு அழகுல மயக்கம் போட்டு விழறேன்....!ரெண்டு வருஷம் இல்ல...இன்னும் நாலு வருஷம் ஆனாலும்...அது நடக்காது....!"

"நாலு வருஷம் வேண்டியதில்லைம்மா....எனக்கு ஒரு வருஷம் போதும்...உன்னை மயக்கறதுக்கு...!"

"ஒரு வருஷம் என்ன...?இன்னும் ரெண்டு வருஷம் உங்க அக்ரிமெண்ட் படி...இங்கேயே தான் வொர்க் பண்ணப் போறேன்....என்ன நடக்குதுன்னு பார்த்திடலாம்...?",அவள் தன்மானத்தை சீண்டி விட்டு....அவனுக்குத் தேவையானப் பதிலை அவள் வாயாலேயே சொல்ல வைத்து விட்டான்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி,"அப்புறம் என்ன பேபி....?போ!போய் வேலையைப் பாரு....!",என்றவன் அடுக்கி வைத்திருந்த ஃபைலை பார்க்க ஆரம்பித்தான்.

கோபத்துடன் தனது இருக்கைக்குத் திரும்பியவள் அதே கோபத்துடன் வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தாள்.என்னதான் அவன் அவளைக் காதலித்தாலும்...வேலை என்று வரும் போது அவன் ஒரு பக்கா தொழிலதிபனாகத்தான் இருந்தான்.

இடையிடையே கிடைத்த இடைவெளியில் அவளை சீண்டிக் கொண்டிருந்தானே ஒழிய...வேலை விஷயமாக பேசும் போது...அவளைக் காதலனாக ஒரு பார்வைக் கூடப் பார்த்தானில்லை.

எனவே...அவனுடன் வேலை செய்வது அவளுக்கு எளிதாகத்தான் இருந்தது.அவன் சீண்டும் போதுதான் அவளுக்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது.

மதிய உணவு இடைவேளை நெருங்கவும்,தனது சிஸ்டமை ஆஃப் செய்தவள்...கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் போனாள்.

"சாப்பிடப் போறயா பேபி...?",அவன் குரல் ஒலிக்கவும்,

"இல்ல...விளையாடப் போறேன்....!",என்றாள் நக்கலாக.

"அப்படின்னா சரி....நானும் உன்கூட விளையாட வர்றேன்...!",என்று அவனும் கேலியாக கூறியபடி எழவும்,

"இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்....?நான் சாப்பிடப் போறேன்....அட்லீஸ்ட் சாப்பிடும் போதாவது....என்னை நிம்மதியா இருக்க விடுங்க...!",அவள் படபடவென்று பொரிந்து தள்ளவும்,இவன் முகம் வாடியது.

"சரி...போ...!",என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.அவள் சென்ற வழியையே பார்த்தவனுக்கு மனதில் வலித்தது.'என் கூட இருக்கறது உனக்கு அவ்வளவு கஷ்டமாவா இருக்கு...?உன் விருப்பத்துக்கு எதிரா நான் நடக்கும் போது...உனக்கு வலிக்கறதை விட ஆயிரம் மடங்கு அதிகமா....எனக்குத்தாண்டி வலிக்குது...!', என்று மனதிற்குள் அரற்றியவன் அதற்கு மேல் வேலை செய்யப் பிடிக்காமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

இங்கு நித்திலாவோ...உணவை சாப்பிடாமல் கைகளால் அளைந்து கொண்டு இருந்தாள்.இவள் சுள்ளென்று எரிந்து விழவும்....அவன் முகம் வாடியதைக் கண்டவளுக்கு மனதிற்கு வருத்தமாக இருந்தது.

கோபம்...கம்பீரம்...கர்வம் போன்ற உணர்வுகளை மட்டுமே அவன் முகத்தில் பார்த்துப் பழகியவளுக்கு.....அவன் கண்களில் தெரிந்த அடிபட்ட வலி அவளுக்கு வேதனையைத் தந்தது.இன்னொரு மனமோ,'அவனுக்கு நல்லா வேணும்...!' என்று கறுவிக் கொண்டிருந்தது.

இதை எதையும் அறியாமல்...தான் கொண்டு வந்திருந்த உருளைக் கிழங்கு வறுவலை நித்திலாவின் தட்டில் வைத்தபடி...அவளைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான் பாலா.அவள் "எனக்கு வேண்டாம்...!", என்று மறுத்தும் கேளாமல் தொடர்ந்து வற்புறுத்தியவனைப் பார்த்தவள்,"அதுதான் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்ல....?",என்று கத்தி விட்டாள்.

திகைத்துப் போய் தன்னைப் பார்த்தவனைக் கண்டவளுக்குத் தன் தவறு புரிந்தது.அதற்குள் சுமித்ராவும்,"எதுக்கு டி இப்படி கத்தற...?மெதுவா சொல்ல முடியாதா...?", என்று கண்டிக்கவும்,

குற்ற உணர்ச்சி பெருக பாலாவைப் பார்த்தவள்,"சாரி பாலா...!நான் ஏதோ நினைப்புல...உன்னைப் பேசிட்டேன்...சாரி...!",என்று மன்னிப்பு வேண்டினாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த பாலா,"இட்ஸ் ஒகே நித்தி....!நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல....",என்றான் மெல்லிய குரலில்.

"அதுதான....எருமை மாட்டுக்கெல்லாம் கோபம் வராது....!",நித்திலா கிண்டல் செய்யவும் சூழ்நிலை இலகுவானது.

"நித்தி அண்ட் சுமித்ரா....!நாம அன்னைக்கு ரெஸ்ட்டாரண்டுக்கு போகலாம்ன்னு பிளான் போட்டு இருந்தோம்ல....?அது கூட கேன்சல் ஆகிடுச்சே....வர்ற திங்கக்கிழமை போய் அடுத்த திங்கள் அங்க போலாமா....?",ஆர்வத்துடன் பாலா கேட்க,

"ஏன் அடுத்த திங்கக்கிழமை....?அப்போ என்ன ஸ்பெஷல்....?",நித்திலா வினவ,

"அன்னைக்கு ஐயா பிறந்தநாளாக்கும்....!",என்று பாலா தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான்.

"ஹை....சூப்பர்...!அப்ப அது உன்னுடைய ட்ரீட்....நானும் சுமியும் செலவு பண்ண வேண்டியதில்ல....என்ன சுமி போகலாமா...?",நித்திலாவும் சந்தோஷத்துடன் கேட்க,

"நான் அந்த மண்டே லீவ்ப்பா....!நீங்க ரெண்டு பேரும் போயிடு வாங்க....!",என்று சுமித்ரா கூறிவிட,பாலாவின் முகம் மலர்ந்தது.'நித்தி கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு நல்ல சான்ஸ்....', என்று அவன் மனம் துள்ளியது.

'நாம் மட்டும் தனியாக செல்ல வேண்டுமா...?' என்று நித்திலாவிற்கு தயக்கமாக இருந்தாலும்,'பாவம்...அன்னைக்கு அவனுடைய பிறந்தநாள் வேற...ஸோ..போய்ட்டு வருவோம்....!', என்று முடிவெடுத்தாள்.

அவள் எடுத்த முடிவின் பலனாக....அவள் ஆதித்யனின் இன்னொரு முகத்தைப் பார்க்கப் போகிறாள் என்பதை அவள் அப்போது அறியவில்லை....!அவன் நினைத்ததை அடைய....எந்த எல்லைக்கும் செல்லுவான்...என்பதை அவனுடைய அந்த இன்னொரு முகம் அவளுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது...!!

மதிய உணவு நேரம் முடிந்து வெகு நேரமாகியும் ஆதித்யனைக் காணவில்லை.அடிக்கடி அறையின் வாசலையேப் பார்த்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள் நித்திலா.

மதியம் மூன்று மணியளவில் அலுவலகத்திற்கு வந்த ஆதித்யனின் முகம் சோர்ந்து தெரிந்தது.அவளிடம் எதுவும் பேசாமல் வந்து தன் இருக்கையில் அமர்ந்தவன் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.இருவரும் வேலை நிமித்தமாக மட்டுமே பேசிக் கொண்டனர்.

மாலையானதும் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள்,கதவு வரை சென்றதும் ஒருநிமிடம்
நின்று அவன் முகத்தை எறிட்டுப் பார்க்க....அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அழுத்தமாக அளவிட்ட அவனது விழிகளோடு ஒரு நொடி தனது விழிகளைக் கலந்தவள்....மறு கணமே வெளியேறிவிட்டாள்.

அவளுடைய செயலில் தனது பின்னந்தலையை தட்டியபடி சிரித்துக் கொண்டான் ஆதித்யன்.மலர்ந்த புன்னைகையுடன் ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தவனை கௌதமின் வருகை தடைப் போட்டது.

வந்தவன் எதுவும் பேசாமல்...ஆதித்யன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவனையே குறுகுறுவென பார்க்க ஆரம்பித்தான்.
"என்னடா புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிற...?",

"நீதான் பழைய ஆதித்யனாக இல்லையே....புது ஆதித்யனா மாறிட்ட போல....?",

"சும்மா ஏதாவது உளறாதேடா...",என்று ஆதித்யன் நழுவப் பார்க்க,

"நான் உளரறேனா...?",கெளதம் கேலியாக உதட்டை மடித்தபடி கேட்க,

"பின்ன இல்லையா....?சரி...என்கிட்ட மாற்றம் தெரியற அளவுக்கு நீ என்னத்த கண்ட....?",ஆதித்யன் வினவ,

"நிறைய இருக்கு....!முதல் விஷயம் இது...!",என்றபடி நித்திலாவிற்காகப் போடப்பட்டிருந்த மேசையை சுட்டிக் காட்டியவன்,"நார்மலா நீ பொண்ணுககிட்ட வழியற ரகம் கிடையாது...ஏன்...?பொண்ணுக வந்து பேசினாக் கூட நின்னு பேசற ஆள் நீ இல்ல....அப்படிப்பட்டவன்,உன் ரூம்லயே ஒரு பொண்ணக் கூட்டிட்டு வந்து உட்கார வைச்சிருக்கிற அப்படின்னா....எனக்கு ஏதோ இடிக்குதே....!",அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி தன் தாடையைத் தடவினான் கெளதம்.

"டேய்....!நான் என் செக்ரெட்டரியத்தான்டா என் ரூம்ல உட்கார வைச்சிருக்கிறேன்....அவ என் பக்கத்திலேயே இருந்தா....வேலை செய்யறதுக்கு எனக்கு ஈசியா இருக்கும்..."

"அப்படியா டா ராஜா....?அப்ப இவ்வளவு நாள் லீலான்னு ஒரு பொண்ணு உன்கிட்ட செக்ரெட்டரியா வொர்க் பண்ணுனாங்களே....?அவங்கள எங்க உட்கார வைச்சிருந்த...?",என்று இழுத்தவனைப் பார்த்து 'இவன் நம்மள தோண்டித் துருவாம விட மாட்டான் போல இருக்கே....!' என்று மனதிற்குள் நினைத்தபடி அவனைப் பார்த்து முறைத்தவன்,


"நித்திலாவுக்கும் லீலாவுக்கும் வித்தியாசம் இல்லையா டா....?நித்திலா ஃப்ரஷ் கேண்டிடேட்....பட்...லீலாக்கு ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ் இருந்துச்சு....அதனால....லீலாவ கூடவே உட்கார வைச்சுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்ல....!போதுமா....?",என்று சமாளித்தான்.

"சரிப்பா....!அந்த மேட்டர விடு....எப்பவுமே நீ சைட்க்குப் போகும் போது....என்னைத்தானக் கூட்டிட்டுப் போவ....பட்....நேத்து நீ நித்திலாவைக் கூட்டிட்டுப் போனதா கேள்விப் பட்டேனே.....?",அவன் சந்தேகமாய் வினவ,ஆதித்யன் கொலைவெறியானான்.

"அப்பா....!கௌதமா....!உனக்கு என்னதான்டா பிரச்சனை....?உன்னைக் கூட்டிட்டுப் போகாம...நித்திலாவைக் கூட்டிட்டுப் போய்ட்டேன்னு அவ மேல பொறாமைப் படறியா....?",

"ச்சீ....!உனக்காகப் பொறாமைப் பட்டு என்ன பண்ணட்டும்....?எனக்காகன்னு ஒருத்தி வருவா பாரு....அவ மேலதான் பொஸஸிவ்...லவ் எல்லாம்....!",கண்களில் கனவு மிதக்க கூறியவனைப் பார்த்தவன்,

"அப்படி ஒருத்தி வந்துட்டா போல இருக்கே....?",நண்பனை ஆழப் பார்வை பார்த்தபடி ஆதித்யன் வினவ,

திடுக்கிட்டு நிமிர்ந்த கெளதம்,"என்னடா உளறிக்கிட்டு இருக்க....?",என்றான் பதட்டக் குரலில்.அவனது முகத்தில் சுமித்ராவின் முகம் மின்னி மறைந்தது.

நண்பனின் பதட்டத்தைக் கவனித்தபடியே,"உளறலடா...உண்மையைச் சொல்றேன்....!ஒரு வாரத்துக்கு முன்னாடி எதேச்சையா....சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தேனா...அதுல...ஒரு லைவ் லவ் ஷோ ஓடிக்கிட்டு இருந்துச்சு....!தெரியுமா....?",ஒன்றும் அறியாதவனைப் போல் ஆதித்யன் கேட்க,

"என்ன லவ் ஷோவா....?",என்று முழித்தவனுக்குப் பிறகுதான் ஞாபகம் வந்தது...அன்று பைல் ரூமில் நடந்ததைத்தான் ஆதித்யன் கூறுகிறான் என்று....!

முக்கியமான ஃபைல்கள் அடுக்கப்பட்டிருப்பதால் அந்த அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.அதுவும் கௌதமின் அறையில் கேமரா இல்லை...அந்த ரூமில் மட்டும்தான் இருக்கும்....அதைப் பார்த்து விட்டுத்தான் ஆதித்யன் அவனைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா....?ட்ரீம்க்கு போய்ட்டயா....?பதிலைக் காணோம்....?",

"ட்ரீமும் இல்ல...லவ்வும் இல்ல....!அவ கீழே விழ போனா...நான் பிடிச்சு நிறுத்தினேன்....அவ்வளவுதான்....!",கெளதம் சமாளிக்க,

"கீழே விழ போனதுனால ஹெல்ப் பண்ணுன சரி....ஆனால்...அதுக்கு அப்புறமும்...அந்தப் பொண்ண விடாம குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தயே....அது ஏன் டா....?",அறியாப் பிள்ளை போல் வேண்டுமென்றே இமைகளைக் கொட்டியபடி ஆதித்யன் வினவ,

கெளதம் தடுமாறினான்.'என்னவென்று சொல்லுவான்....?அவளை கிஸ் பண்றதுக்காகத்தான் அவளை நெருங்கினேன்னா சொல்ல முடியும்....கிராதகா....!நேரம் பார்த்து பழி வாங்குறான்...!',மனதிற்குள் அவனை அற்சித்தவன்,வெளியே,

"ஏதேதோ பேசி டாபிக்கை மாத்தாத....இங்கே என்ன நடக்குதுன்னு சொல்லு....?",என்று கெளதம் அவனை திசை திருப்ப,

வாய் விட்டுச் சிரித்தவன்,"அங்கே என்ன நடக்குதோ....அதுதான் இங்கேயும் நடக்குது....!",என்க,

"அங்கே எதுவும் நடக்கல...",கெளதம் வேகமாக பதில் சொல்ல,

"அப்ப...இங்கேயும் ஒன்னும் நடக்கல....!",என்று அமைதியாக சொன்னான் ஆதித்யன்.

நண்பனைப் பார்த்து முறைத்தவன்,"கல்லுளிமங்கா....!இருடா...கூடிய சீக்கிரமே கண்டு பிடிக்கறேன்....!",என்று கறுவியபடியே எழுந்து சென்றுவிட்டான்.

"ஆல் தி பெஸ்ட்...!",என்ற ஆதித்யனின் சிரிப்பு அவனைத் தொடர்ந்தது.
அகம் தொட வருவான்...!!!
 
Deputy

Well-known member
Member
Aadhiku ithe velaya pochu..eppo parthalum nithi kuttiya seendi vitte avan ninaichatha niraivethikiran...ennamma samalikiran gowthamkitta....naan already intha story a sahaptham la follow panitu than iruken...again one more time rewind panuren nila dear....
 
Top