Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 9

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew


அத்தியாயம் 9 :


ஆதித்யா குரூப் ஆப் கம்பெனீஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்


வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க,நித்திலாவும் லீலாவும் தங்களுக்குள் வேலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"ஹப்பா.....!போதும் நித்தி.....!நீ டவுட் கேட்டு கேட்டு என் மூளை சூடாகிடுச்சு......வா....!சில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு வருவோம்....",என்று லீலா அழைக்க,

"ம்ம்....போலாம் க்கா...!",என்றபடி எழுந்தவள்,சுமித்ராவைப் பார்த்து,"நீயும் வா சுமி....!கேன்டீன் போயிட்டு வரலாம்....",என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

மூவரும் தங்களுக்குத் தேவையான ஜூஸை வாங்கிக் கொண்டு வந்து டேபிளில் அமர்ந்தனர்.லீலாதான் ஆரம்பித்தாள்,

"நித்தி....!இப்ப உனக்கு அல்மோஸ்ட் எல்லா வேலையும் தெரிஞ்சிடுச்சில்ல....ஒரு செக்ரெட்டரிக்கு என்னென்ன வொர்க் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கிட்டல்ல....?",என்று கேள்வி எழுப்ப,

"ம்ம்....அதுதான் எல்லாமே எனக்குக் கத்துக் கொடுத்திருக்கீங்களே....?தன் ஜூஸை உறுஞ்சிக் கொண்டே பதிலளித்தாள் நித்திலா.

"குட்...!நித்தி...!நான் ரிலீவ் ஆகலாம்னு ஒரு ஐடியால இருக்கேன்....உனக்கும் என் ஹெல்ப் இனித் தேவைப்படாது...",என்க,

கையில் வைத்திருந்த ஜூஸ் கிளாஸை மேசையில் வைத்தவள்,"என்னக்கா சொல்றீங்க...?நான் ஜாயின் பண்ணினப்ப மூணு மாசம் கழிச்சுத்தான் ரிலீவ் ஆகறன்னு சொன்னீங்க....?அப்படிப் பார்த்தால் இன்னும் இரண்டு மாசம் இருக்கே....?",என்று பதட்டத்துடன் கேட்டாள்.சுமித்ராவும் நித்திலா கூறியதை ஆமோதிப்பதைப் போல லீலாவைப் பார்க்க,

"அந்த பிளான்லதான் இருந்தேன் நித்தி....!பட்....இப்ப குடும்ப சூழ்நிலை...நான் ரிசைன் பண்ணிதான் ஆகணும்...நம்ம M.D கிட்ட இன்னைக்கு பேசலாம்னு இருக்கேன்...."

"நீங்க போய்ட்டா நான் எப்படித் தனியா சமாளிப்பேன்...?",என்று தயங்கியவளை,

"கமான் நித்தி ...!நான் இல்லாமலும் உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்...இப்போ நீ ஒரு பெர்ஃபக்ட் செக்ரெட்டரி....!",என்று ஏதேதோ கூறி அவளை சமாதானப்படுத்தினாள்.

அவளுடைய சமாதானத்தில் சிறிது மனம் தெளிந்தவள்,"ஒகே அக்கா....!உங்க குடும்பத்தையும்
பார்த்துதானே ஆகணும்...இன்னும் எவ்ளோ நாள் ஆபிஸ் வருவீங்க....?",என மேற்கொண்டு விசாரித்தாள்.

"ஒரு டூ டேஸ்தான் வருவேன்னு நினைக்கிறேன்.....ஆதி சார்கிட்ட பேசிட்டுதான் முடிவெடுக்க முடியும்....",

"எனிவே....வீ வில் மிஸ் யூ அக்கா...!",என சுமித்ரா கூற,

"நானும்தான் சுமி....உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்....",என்று வருத்தமாகக் கூறினாள் லீலா.

மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தங்கள் இடத்திற்கு திரும்பினர்.மதிய உணவு இடைவேளையின் போது,லீலா ரிசைன் செய்யப் போகும் விஷயம் பாலாவிடம் பகிரப்பட்ட...அவனும் தன் பங்கிற்கு தனது வருத்தத்தை தெரிவித்தான்.

இடைவேளைக்குப் பிறகு மூவரும் தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க,"நான் போய் ஆதி சார்கிட்ட பேசிட்டு வர்றேன்....",என்றபடி லீலா எழுந்து சென்றாள்.

சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தவள்,"கேர்ள்ஸ்....!நம்ம சார் ஒகே சொல்லிட்டாரு....இன்னும் ரெண்டு நாள்தான் ஆபீஸுக்கு வருவேன்..",என்ற தகவலைப் பகிர,

"அப்பாடா....!டூ டேஸ்க்கு பிறகு லீலாக்காவோட தொல்லை இருக்காது....",என்று நித்திலா கிண்டலடிக்க,அதன்பிறகு நேரம் கலகலப்பாக சென்றது.

நித்திலா தன் சந்தேகங்களை லீலாவிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்வதிலேயே அடுத்த இரண்டு நாட்களும் கழிந்தது.

நித்திலா,சுமித்ரா,பாலா மற்றும் லீலா நால்வரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அன்றுதான் அந்த அலுவலகத்தில் லீலாவிற்கான கடைசி நாள்.

இவ்வளவு நாட்கள் அனைவரும் ஒன்றாகப் பழகியதால்...அந்தக் கூட்டிலிருந்து ஒருவரைப் பிரிவது என்பது அனைவருக்குமே சிறிது வருத்தத்தைக் கொடுத்தது.

"ஹே....என்னப்பா....?எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க...?பிரிஞ்சு போனா என்ன....?அதுதான் நம்ம எல்லார்க்கிட்டேயும் மொபைல் இருக்கே....நாம நாலு பேரும் எப்பவும் கான்டாக்ட்லேயே இருப்போம்....",லீலாதான் மற்ற மூவரையும் தேற்றினாள்.

"என்ன இருந்தாலும்....நாங்க மூணு பேரும் உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவோம்க்கா....!" ,என்று பாலா வருத்தத்துடன் கூற,மற்ற மூவரும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தனர்.

பிறகு சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு,"ஆனாலும் நித்தி...!உனக்கே இது நல்லாயிருக்கா....?மூணு மாசம் கழிச்சு ரிலீவ் ஆகறேன்னு சொன்னவங்கள....நீ உன் டவுட்டை கேட்டுக் கேட்டு...ஒரு மாசத்துலேயே ஓட வைச்சுட்டாயே...?",என்று பாலா கிண்டலடிக்க,

அவனைப் பார்த்து முறைத்த நித்திலா...அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்ட,சரியாக அந்த நேரம் பார்த்து....ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த ஆதித்யன் இவர்களைக் கவனித்து விட்டான்.

பார்த்த வேகத்தில் சுறு சுறுவென்று கோபம் ஏற,'இவன்கிட்ட இவளுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு....?அதுவும் இவ்வளவு க்ளோஸா....'என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தவனை....அவனது மொபைல் ஒலி கலைக்க...அவளை முறைத்தபடியே போனைக் காதுக்குக் கொடுத்த்தபடி வெளியேறிவிட்டான்.

அன்று மாலை...சில பல அணைப்புகளுடனும்....மிஸ் யூக்களுடனும் லீலாவை ஆபிசில் இருந்த அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா மூவரும் இவர்களது நினைவாக ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

......................................................................................

லீலா கிளம்பி விட்டதால்....அடுத்த நாளில் இருந்து நித்திலாவிற்கு நேரம் சரியாக இருந்தது.இதுவரை இருவர் இணைந்து பார்த்து வந்த வேலைகளை,இனி இவள் ஒருத்தியே கவனிக்க வேண்டும் என்பதால் வேலைப்பளு அதிகரித்திருந்தது.ஆதித்யனுக்கோ நிமிடத்திற்கு ஐந்து முறை நித்திலா தேவைப்பட்டாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,'இந்த பைல் எங்கே....?அந்த லெட்டர் ரெடி பண்ணிக் கொண்டு வா....',என நிமிடத்திற்கு ஒரு முறை நித்திலாவை அழைத்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.

ஆதித்யனின் அறைக்கும்....தனது டேபிளுக்கும் நடந்து நடந்தே நித்திலாதான் ஒருவழி ஆகியிருந்தாள்.

அன்றும் அப்படிதான்....ஆதித்யனின் அறையிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்த சுமித்ரா,"நித்தி....!இப்படி அலையறதுக்குப் பேசாம நீ அவரோட ரூம்லயே குடியிருந்துக்கலாம்....",என்க,

"சரியா சொன்ன சுமி...!நடந்து நடந்து எனக்குதான் கால் வலிக்குது...",பொத்தென்று தனது சேரில் அமர்ந்தவளைப் பார்த்து,

"சரி....இப்போ எதுக்கு கூப்பிட்டாராம்....?",என்று சுமித்ரா நமட்டு சிரிப்புடன் கேட்க,

"ஏதோ முக்கியமான மெயில் வந்திருக்காம்...அதுக்கு ரிப்ளை பண்ணச் சொன்னாங்க...!",

"இதை போன்லேயே சொல்லியிருக்கலாமே....இதுக்காக உன்னை நேர்ல கூப்பிடணுமா...?",ஒரு மாதிரியாகத் தன்னைப் பார்த்த தோழியிடம்,

"ஏய்...எருமை...!இப்ப எதுக்கு என்னை இப்படி பார்க்கிற...?அந்த மெயில பத்தி டிஸ்கஸ் பண்ணணும்ல...?அதை போன்லயா பண்ண முடியும்....?அதுக்குத்தான் நேர்ல கூப்பிட்டாரு...இப்ப நீ உன் வேலையைப் பாரு...!கூடவே....என்னையும் என் வேலையைப் பார்க்க விடு...!",என்று படபடத்தாள்.

இப்போதைக்குத் தோழியிடம் எதையோ கூறி சமாளித்து விட்டாலும்....நித்திலாவிற்குமே நெஞ்சம் படபடக்கத்தான் செய்தது.'இப்படி அடிக்கடி கூப்பிட்டுக்கிட்டே இருந்தா....ஆபிஸ்ல இருக்கறவங்க என்ன நினைச்சுக்குவாங்க...?இன்னைக்கு சுமி சந்தேகப்பட்ட படி...நாளைக்கு வேற யாராவது சந்தேகப்பட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...?'என்ற கேள்வி மனதினுள் எழுந்தது.

'அதிலேயும் இப்போவெல்லாம் ஆதி சாரோட பார்வையே சரியில்ல...என்னவோ...உரிமை இருக்கிற பொருளைப் பார்க்கிற மாதிரி பார்த்து வைக்கிறாரு...!',என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

உண்மைதான்...!இப்பொழுதெல்லாம் நித்திலாவைப் பார்க்கும் ஆதித்யனின் பார்வை மாறியிருந்தது.அவன்...அவளை விழுங்கி விடுவதைப் போலத்தான் பார்த்து வைத்தான்....!

ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவள்,இறுதியில்,'இல்ல...!அப்படி எல்லாம் இருக்காது...நாமதான் ஏதோ பைத்தியம் மாதிரி நினைச்சுக்கிட்டு இருக்கோம்...!',என்று தலையை உலுக்கிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.

அன்று மாலை...வேலை முடிந்துக் கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவளை...ஆதித்யன் தனது அறைக்கு அழைத்தான்.

"சார்....கூப்பிட்டிங்களா...?",என்றபடி வந்தவளை எப்பொழுதும் போல் அப்பொழுதும் ரசித்தவன்,

"யெஸ் நித்திலா....!உன் டேபிளை என் ரூமுக்கே ஷிஃப்ட் பண்ணச் சொல்லிட்டேன்....நாளையில் இருந்து நீ என் கேபினிலேயே வொர்க் பண்ணலாம்...!"

"வாட்...?நோ சார்...!நான் எப்பவும் போலேயே இருந்துக்கிறேன்....ப்ளீஸ் சார்...",என்று அவசர அவசரமாக மறுத்தாள்.

அவளை அழுத்தமாக நிமிர்ந்து பார்த்தவன்,"நோ நித்திலா...!எவ்வளவு நாள்தான் என் கேபினுக்கும்...உன் டேபிளுக்கும் அலைஞ்சுக்கிட்டு இருப்ப...?நீ இங்கேயே வொர்க் பண்றதுதான் சரி...!",என்றான் முடிவாக.

"சார்...ப்ளீஸ்...!எனக்கு நான் அங்க வொர்க் பண்றதுதான் வசதி...",என்று மறுக்க,

அவனோ,"பட்...எனக்கு நீ இங்கே வொர்க் பண்றதுதான் வசதி...!",என்றான் அசால்ட்டாக.

அப்பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாமல்,"சார்...ப்ளீஸ்...",என்று தயங்கியவளை நோக்கி அழுத்தமான பார்வையை வீசியவன்,"நித்திலா...!நாளையில் இருந்து நீ இங்க...என் கேபினிலேயேதான் வொர்க் பண்ணப் போற...!அவ்வளவுதான்....!இதுக்கு மேல எதிர்த்துப் பேசி உன் டைமோட...என் டைமையும் வேஸ்ட் பண்ணாத....!",தெளிவாக உரைத்தவன் அவளைக் கண்டு கொள்ளாது தன் வேலையில் ஆழ்ந்தான்.


அவனுடைய பிடிவாதமானப் பார்வையும்....அதை விட அழுத்தமானக் குரலும்,'இனி தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்....',என்பதை அவளுக்கு வலியுறுத்த....அமைதியாக,வேறு வழியில்லாமல்,"சரி...!",என்று முணுமுணுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.

ஆதித்யனின் இதழோரம் ஒரு குறுஞ்சிரிப்பு வந்தமர்ந்தது....

'இப்படித்தான் பேபி...உன்னையும் என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்துருவேன்.....!,உனக்கு விருப்பம் இருக்கோ....இல்லையோ...!'என்று அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.அகம் தொட வருவான்...!!!
 
Advertisement

Advertisement

Contest Episodes

Top