Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-1

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -1

நளன் தன் வாட்சை நான்காவது தடவையாகப் பார்த்தான். அது மணி ஆறு முப்பது என்று சொல்லி கண்சிமிட்டியது. கடற்கரையில் தெரிந்த கூட்டத்துள் தன் லேசர் கண்களை ஓடவிட்டு அவளைத் தேடினான்.

அவள் தூரத்தில் வந்துக்கொண்டிருந்தாள்.

"ஸாரிடா... லேட் ஆச்சு...."

"ஹேய்.. முதல்ல இந்த 'டா' போடுறத நிறுத்து. அக்கம் பக்கத்தில் உள்ளவங்க ஒரு மாதிரி பாக்குறாங்க...."

"முடியாது.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்.... நான் என்ன இன்னைக்கு நேற்றா இப்படி கூப்பிடுறேன்.. எத்தனை வருஷமா...." என விரல்களால் கணக்குப் பண்ணிணாள்.

"பதினேழு..பதினெட்டு வருஷம்.. இருக்கும்ல....."

"அதெல்லாம் இருக்கட்டும் ஏன்டியம்மா லேட்டு.. எத்தனை மணிக்கு வாரேனு சொன்னிங்க..... உன் வாட்ச்ல இப்பத்தான் ஐந்தரை மணியோ..."

" நளா... ஸாரிப்பா.... டிராப்பிக்ல மாட்டிக்கிட்டேன்.. இல்லாட்டி நான் சொன்ன டைம்க்கு வராம இருப்பேனா...."

அவளை முறைத்துப் பார்த்தான் அவன்.

"நீ என்னைக்காவது சொன்ன டைம்க்கு வந்துருக்கியா...? பொதுவா பசங்க தான் லேட்டா வருவாங்க. இங்க எல்லாம் தலைகீழா இருக்கு... " என தலையிலடித்துக் கொண்டான்.

"ஹேய்.. நளா.. நீ தலையிலடிச்சுக்கிறது கூட அழகு தான்டா...." என அவன் கன்னத்தைப் பிடித்து கிள்ளினாள்.

"ஹேய்.. கையை எடு.. இது பப்ளிக் ப்ளேஸ்.. நாலு பேர் பார்ப்பாங்க..."

"பார்த்தா பார்க்கட்டும்.. நான் என்ன அவங்களையா கிள்ளிப் பார்த்தேன்... என் செல்லக்குட்டியை இல்ல கிள்ளிப் பார்த்தேன்.."

"ஐயோ.. நீ எப்பவுமே இப்படித்தானா.. இல்ல இப்பத் தான் இப்படியா.....?"

"ஹா..ஹா.. ஹா.. என்னடா எதுவுமே தெரியாத மாதிரி கேக்குற.. நம்ம சின்ன வயசுல இருந்து ஒன்னா தானே வளர்ந்தோம்.. என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா..."

"உன்னைப் பற்றி தெரியும் ஸ்வப்னா! ஆனா.. நம்ம எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சமோ அப்ப இருந்து நீ எனக்கு வேற மாதிரி தெரியுற......"

"ஏன் நளா.. பிடிக்கலயா.....?"

"ஐயோ.. பிடிச்சிருக்கு ராட்சசியே... ஆனா என் காதலியா அதிகபடியாத் தான் அடாவடி பண்ற...."

"நான் என்ன பண்ணினேன்.... கிள்ளினதா...."

"இல்ல.. அதுக்கும் மேல..."

"நான் ஒன்னுமே பண்ணலயேடா...."

"இங்க இல்லடி.. என் கனவுல....." என்று கண் சிமிட்டினான்.

"அடப்பாவி! நல்லா பேச கத்துக்கிட்ட நளா....." என்று அவன் தோள்பட்டையில் செல்லமாய் ஒரு குத்து விட்டாள்.

"சரி... நேரமாச்சு.. நீ கிளம்பு. அப்புறம் என் அருமை அத்தை பொண்ணை காணோம்னு தேட ஆரம்பிச்சுடுவாங்க....."

"அதுக்குள்ளயா? நளா! நான் போகனுமா...?" என இழுத்தாள்.

"என்ன நீ.. இங்கயே உட்கார்ந்து சுண்டல் விக்கப் போறியா..."

"ஹேய் லூசு.... உன்ன விட்டுட்டு போகப் பிடிக்கலடா...." ஸ்வப்னா.

"எனக்கும் உன் கூடவே இருக்கத்தான் ஆசை. ஆனா, வீட்டுக்குப் போயாகனும். இப்பவே ஏன் லேட்டா வாரேனு அம்மா குடைய ஆரம்பிச்சிட்டாங்க...."

"ஆண்டவா... உங்க அம்மாக்கு வேற வேலையே இல்லையா....? உன்ன தேடிக்கிட்டு இருக்கது தான் வேலையா...? "

"ஸ்வப்னா.. அம்மாக்கு நான்னா ரொம்ப இஷ்டம். உனக்கு தெரியும் தானே...."

"அப்ப... உனக்கு யார் மேல இஷ்டம்.. ?" அவள் குறிப்பிட்டதொரு பதிலை எதிர்ப்பார்த்தே அந்த கேள்வியை கேட்டாள்.

"உன் மேலத் தான்..."

"ஹூம்.. இதே கேள்வியை உங்க அம்மா கேட்டிருந்தா.. அவங்களைத் தான் பிடிக்கும்னு சொல்லியிருப்ப.... போடா....."

'ஆண்டவா.. எல்லாத்தையும் கண்டுப்பிடிச்சுடுறா.....'

"சரி.. சரி.. அதை விடு. ஆயிரம் தான் இருந்தாலும் அது என் அத்தை. அம்மா புள்ளயாவே இருக்காத... என்னையும் அப்பப்போ கொஞ்சம் கவனி.... நான் கிளம்புறேன்...."

"என்னடா.. கோவிச்சிக்கிட்டியா..... உண்மைக்கும் நீ என் உலகம்டா..... அம்மாவை பிடிக்கும்னாலும் நீ எனக்கு வேற லெவல் ஸ்பெஷல்டா.... இல்லனா இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னை லவ் பண்ணுவேனா....." என்றான் நளன்.

"சரி.. ஏதாச்சும் பேசியே நீ சமாளிச்சிடுவ... நீ கிளம்பு.. நாளைக்குப் பார்க்கலாம்.. பாய்.." என சொல்லிவிட்டு அவள் கிளம்பத் தொடங்கினாள்.

அவளை அவன் கூர்ந்துப் பார்த்தான்.

ஸ்வப்னா. ஐந்து புள்ளி இரண்டங்குலம். சுண்டினால் சிவந்து போகுமளவிற்கு நல்ல நிறம். கிறுகிறுக்க வைக்கும் கண்கள், கூரான நாசி, இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புது ஆரஞ்சு சுளைகளாய் இதழ்கள், அவள் தோளில் அலைபுரண்டு கிடந்த கருங்கூந்தல், மெல்லிய நீண்ட கைகளும், துறுதுறு கால்களும் அவள் ஒரிடத்தில் நிற்கவே மாட்டாள் என்று சொல்லாமல் சொல்லியது. சிரித்தால் அதள பாதாளத்தில் விழுந்துப் போகுமளவிற்கு கட்டிப்போடும் அவள் கன்னக்குழி. பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று சொல்லுமளவிற்கு அழகு அவளிடத்தே கொட்டிக்கிடந்தது.

அவன் அவளை அளந்த பார்வையில் அவள் உடம்பு சூடாகியது. வெட்கம் பிடுங்கித் தின்றது. அவனை தவிர்த்து விட்டு ஓட்டமாய் நடையைக் கட்டினாள்.

அவன் சிரித்துக்கொண்டே எழும்பி தன் பைக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். அவன் மனசு முழுதும் அவள் வியாபித்திருந்தாள்.

" என்னப்பா.. இன்னைக்கும் லேட்டு... சரி சாப்பிட வா...." என்றபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தார் மகேஸ்வரி.

'இன்னைக்கு என்ன சொல்லலாம்' என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஆரோக்கியராஜ் வந்தார்.

"அவனுக்கு எதாவது வேலை இருக்கும்.. சும்மா அவனை ஆயிரம் கேள்வி கேட்காத.. நீ போப்பா..." என்று அவனை விடுவித்தார் அவன் அப்பா.

நளன் மௌனமாய் படியேறினான். குளித்துவிட்டு சாப்பிட்டான்.

"தம்பி! ஒன்னு கேட்கட்டுமா...?"என்று ரகசியமாய் கேட்டார் ஆரோக்கியராஜ்.

"என்னப்பா.....?"

"நீ யாரையாவது லவ் பண்றியாப்பா....?"

அவனுக்கு புரையேறியது. சாப்பாடு தொண்டைக்குள்ளேயே மாட்டிக்கொண்டு இம்சை செய்தது.

" என்னாச்சு... ?" என்றபடி வந்த மகேஸ்வரி அவனுக்கு தண்ணீர் கொடுத்து அவன் தலையை தட்டிக்கொடுத்தார்.

"சாப்பிடும் போது ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பிங்களே....." கணவரை கடிந்துக்கொண்டார்.

"இல்ல மகேஸ்.. அது வந்து நான் என்ன கேட்டேனா.... "என்று ஏதோ சொல்ல வந்து மகனின் முகத்தைப் பார்த்து வாயை மூடிக்கொண்டார்.

அவன் அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு மாடியேறி ஓடினான்.

"என்னாச்சு இந்தப் பையனுக்கு....?" என்று மகேஸ்வரி வாய்விட்டே கணவரைக் கேட்டார்.

"ஒன்னுமில்லம்மா.. ஒரு கடி ஜோக் சொன்னேன்... அத கேட்டுட்டு ஓடுறான்."

"அப்படியென்ன சொன்னிங்க...?"

"அது உனக்குப் புரியாது..."என்று சாப்பிடுவதில் மும்முரமானார். கணவரை வழமைப்போல் முறைத்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார் மகேஸ்வரி. 'கணவர் கடி ஜோக் சொல்லவில்லை. ஏதோ வில்லங்கமாய் சொல்லியிருக்கிறார்.. ' என்று மட்டும் அவர் பத்தினிக்குத் தெரிந்தது.

' அப்பா ஏன் இப்படிக் கேட்டார்...? நம்ம விஷயம் தெரிஞ்சுப் போச்சோ.... ஐயோ..! இப்ப என்ன பண்றது... ஸ்வப்னாக்கு போன் பண்ணி கேட்போமா...? அவ என்னத்தை சொல்லப் போறா.. கூலா இருனு சொல்லப் போறா... வீட்ல நான் பண்ற காரியம் தெரிஞ்சா.. என்னாகும்...? நளா எப்படிடா சமாளிக்கப்போற.... ' என்று எண்ணிக்கொண்டே படுக்கையில் விழுந்தான். ஆனால் அவன் கண் முன்னே வந்து அவன் தேவதை அவனை கிச்சுகிச்சு மூட்டினாள். சுகமான அவஸ்தையோடு தூங்கிப் போனான். அடுத்த நாள் வெடிக்கப்போகும் பிரச்சனை தெரியாமல்.
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
 
Top