Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-13

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -13

"ஐயோ.. என் புள்ள இப்படி செஞ்சிட்டான்..நான் என்ன என்னவெல்லாம் கனவு கண்டு வச்சிருந்தேன் தெரியுமா..? அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான். உன் புள்ளை கல்யாணத்தை பார்க்க உனக்கு கொடுத்து வைக்காதும்மானு.. அப்ப நான் அதை பெருசா எடுத்துக்காததுக்கு எனக்கு தேவை தான்.." மூக்கை உறிஞ்சிக்கொண்டே டெலிபோனில் யாரிடமோ புலம்பலாக பேசிக்கொண்டு இருந்தார் மகேஸ்வரி.

நளன் இப்படி செய்ததில் அவருக்கு எக்கச்சக்கமான கோபம். அதுவும் ஸ்வப்னாவை முன்பிருந்தே மகேஸ்வரிக்கு பெரிதாய் பிடிக்காது. பட்டும் படாமல் தான் பேசி அனுப்புவார். அவர்கள் இருவரும் காதலித்தார்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்ததனால் மகேஸ்வரியால் சந்தேகம் கொள்ளவே முடியவில்லை. இப்போது இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தார்.

அதுவும் நளன் இப்படி அவள் தான் முக்கியம் என அவளோடு கிளம்பிச் போனதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாய் சும்மாவா இருக்கும்? கண்டதையும் பேசி மகேஸ்வரியின் கோபத்துக்கு தூபம் இட்டார்கள். அவற்றையெல்லாம் கேட்கும் போது முகத்தில் அனல் பறக்க ஸ்வப்னா மீது வஞ்சத்தை வளர்த்துக்கொண்டார் மகேஸ்வரி.

இது எதுவுமே தெரியாமல் அங்கு ஜாலியாக வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார்கள் நளனும் ஸ்வப்னாவும்.

குட் மார்னிங் ஹஸ்பண்ட்... இன்னும் தூக்கமா.... " என்று குளித்துவிட்டு அப்போது உதித்த பூவாய் நின்றுக்கொண்டிருந்தாள் ஸ்வப்னா.

அவன் இமைகளை திறக்க கஷ்டப்பட்டு, ஒருவழியாய் திறந்து அவளை ருசித்தான்.
அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டான். அவள் மடியில் படுத்துக்கொண்டான்.

"ஒரு காபி தரலாம் தானே...."

"சாருக்குத் தான் பெட் காபி குடிக்கிற பழக்கம் இல்லையே.... இது என்ன புதுப் பழக்கம்.." என ஆச்சர்யத்தாள்.

"இல்லடி.. வழக்கமா மூவிஸ்ல எல்லாம் இப்படித் தானே பொண்டாட்டி குளிச்சிட்டு வந்து ஹஸ்பண்டை பெட் காபியோட எழுப்புவாங்க.. அது உன் கையில மிஸ் ஆகுதே.. அதான் சும்மா கேட்டேன்.."

"ஹூம்.. ஆசைத் தான்.. எழும்புங்க சார். வேலைக்குப் போக வேண்டாமா...?" என்று அவன் தலை கோதினாள்.

"நான் ஒரு வாரத்துக்கு லீவு ராஜாத்தி.... நீயும் லீவு போடுற... "

"எதுக்கு ராஜா...?"

"என்ன கேள்வி இது? நமக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்குவோம். வீட்டை கொஞ்சம் ஒழுங்கு பண்ணுவோம். தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்குவோம்.. எங்கயாச்சும் ஜாலியா ஊர் சுத்திட்டு வருவோம்.. வேற ..." என்று அவள் முகத்தைப் பார்த்தான்.

"ஹூம்.. நல்ல ஐடியா தான்.. சரி லீவு போட்டுட்டா போச்சு. சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க சார்..." என்றாள்.

"ஹேய்.. வெய்ட்... நானும் பார்க்கிறேன்.. என்ன நீ.. எப்ப உன் கழுத்தில தாலி கட்டினேனோ அப்ப இருந்து என்னை 'டா' போட்டு கூப்பிட மாட்டிக்கிற... எப்போதாவது தான் கூப்பிடுற.. "

அவள் எங்கேயோ பார்த்தாள்.

"ஹலோ மேடம்.. உங்ககிட்டத் தான் பேசிக்கிட்டு இருக்கேன்.." என்று எழும்பி அமர்ந்தான்.

"யாரோ கல்யாணத்துக்குப் பிறகு 'டா' போடக்கூடாதுனு சொன்னாங்க..."

"ஐயோ... லூசுப்பொண்ணு... அது மத்தவங்க முன்னாடி கூப்பிடாதனு தான் சொன்னேன்.. தனியா இருக்கப்ப கூப்பிடலாம் தங்கம்..."

"அப்படியோ...." என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு சின்ன முத்தம் ஒன்றை வைத்தாள்.

"இது குட்மார்னிங் கிஸ்ஸா....,?" என்றான் அவள் கணவன்.

"ஆமா.. அதுக்கும் சார்ஜ் உண்டு" என்று சொல்லிவிட்டு அவனைத் தள்ளிவிட்டு விட்டு எழுந்து போனாள்.

"குளிச்சிட்டு வாங்கங்க... சாப்பிடலாம்..."

"ஐயோ.. ஸ்வப்பு.. கேவலமா இருக்கு. ஒழுங்கா நளானு கூப்பிடு...." என்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான்.

அவள் வெவ்வே காட்டிவிட்டு ஓடிப் போனாள்.

இருவரும் வீட்டை ஒழுங்கு செய்தனர். வாங்க வேண்டிய பொருட்களை குறித்துக்கொண்டு, ஷாப்பிங் சென்றனர். தங்கள் செலவுகளுக்கு ஏற்ப பட்ஜெட் போட்டனர். நிறைய இடங்களுக்கு ஜோடியாகச் சென்றனர். நிறைய பாப்கார்னும், ஐஸ்கிறீமையும் உள்ளே தள்ளினர். விருந்துக்கு அழைத்த நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கலந்துக்கொண்டனர், ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீட்டிலேயே நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு விருந்தளித்தனர். அந்த ஒருவாரமும் இருவருக்கும் இனிமையாய் நகர்ந்தது.

"நளா.. லன்ச் பேக் பண்ணிட்டேன். சுமாரா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணுக்கோ... வேலை முடிந்து அரக்கப்பறக்க பொண்டாட்டியை பார்க்க வராம, மெதுவா டிரைவ் பண்ணிக்கிட்டு வா... ஓகே..."

"சரிடி பொண்டாட்டி....." என்றான் அவளை சைட் அடித்துக்கொண்டே.

"என்ன பார்வை..?" என்றாள் அவள் சேலையை சரி செய்துக்கொண்டே.

"இல்ல... சேலை தான் உள்ளதுலயே செக்ஸியான டிரஸ் இல்ல..." என்றான். அவள் முறைத்தாள்.

"ஏன்...?" என்றாள் இதழ் திறந்து.

"இல்ல.. ஒன்னுமில்ல... "

"என்னடா.. சொல்லித்தொலை.. இல்லாட்டி எனக்கு தலை வெடிச்சிடும்." என்றாள்.

"நீயே ஒருதரம் உன்னை கண்ணாடியில பாரேன், உனக்கே உன்னை சைட் அடிக்கத் தோன்றும்.. அப்படியே அந்த இடுப்ப..."

"கொல்லுவேன் உன்னை.. ஒழுங்கா கிளம்பு... நான் வீட்ட பூட்டிட்டு ஸ்கூலுக்கு போகனும்.."

"சரி.. சரி.. கூல் பேபி. அத்தானுக்கு பாய் கிஸ் குடு பார்ப்போம்." என்று கன்னத்தை காட்டினான்.

அவள் சிரித்துக்கொண்டே அவன் கேட்டதை தந்துவிட்டு, அவளுக்கான கோட்டாவை வாங்கிக்கொண்டு அவனை வழியனுப்பினாள்.

அவளுக்கு அது வித்தியாசமாக இருந்தது. இதுவரை நண்பனாக இருந்தவன் இன்று கணவன். அவள் கூடவே முழுநேரமும் இருக்கப் போகிறான். கணவனின் தேவைகளை கவனித்து அவனை வேலைக்கு அனுப்புவது புது அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள். அவளும் வேலைக்கு கிளம்பினாள்.

இருவருக்கும் அன்று வேலையே ஓடவில்லை. அவள் சீக்கிரமாய் வீடு திரும்பியிருந்தாள்.

"ஸாரிடா.. இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சி.. ஒருவாரமா போகல இல்லையா.. சோ.. கொஞ்சம் கூட வர்க்..." என்று காரணம் சொன்னான்.

"உன்னைத் தான் அடிச்சிபிடிச்சி வர வேண்டாம்னு சொன்னேனே..." என இடுப்பில் கை வைத்து முறைத்து விட்டுச் சொன்னாள்.

"அது என்னவோ முடியலடி.." என அருகில் வந்தான்.

"முதல்ல ப்ரெஷ் ஆகிட்டு வா.. சாப்பிடலாம்."

இரவு உணவு முடிந்த கையோடு அவள் கிச்சனை சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.

"என்ன பார்வை?." என்றாள்.

"இல்ல.. உன்னை சின்ன பொண்ணுல இருந்து எனக்குத் தெரியும்.. அப்புறம் அடாவடி ஸ்வப்னாவா தெரியும். இப்ப இந்த ஹவுஸ் வைப் ஸ்வப்னா வித்தயாசமா இருக்கா.. அதான் சும்மா பார்த்தேன்.."

"நீ சும்மா பார்க்க மாட்டியே..." என சந்தேகித்தாள்.

'தெரிஞ்சா சரி...' என மனதுக்குள் நினைத்தான். அதுபுரிந்துத் தான் என்னவோ அவன் அருகில் வந்து அமர்ந்தாள். டீவியில் 'அலைபாயுதே' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குள் காதல் மழை தூறத்தொடங்கியது.

அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து கண்களை டீவியில் ஓடவிட்டான். அவள் பார்ப்பதை பார்த்ததும் கையை எடுத்தான்.

அவள் சிரித்துவிட்டு அவனுக்குள் ஒடுங்கிக்கொண்டாள். அதற்கு மேலும் அனுமதித்தாள்.

அவன் அவள் இதழ் தொடங்கி அடுத்த அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கொண்டிருந்தான். அவளோ மெய்மறந்து அவனில் கரைந்துப் போயிருந்தாள். அவர்களுக்குள் ஓர் அழகிய காதல் ஆட்டம் ஆரம்பமாகியது. அந்த இரவு அவர்களால் மறக்கமுடியாத இரவாய் மாறிக்கொண்டிருந்தது. அவர்கள் தம்பதிகளாய் அடுத்த அத்தியாயத்துக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தனர்.
 
Nirmala vandhachu ???
Nice antha innum oru character mama ponnu taane ma
 
Top