Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-21

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -21

மகேஸ்வரி கதவைத் திறந்து கொண்டு வந்த போது, இருவரும் திகைத்துப் போய் பின்வாங்க, "தம்பி! என்னைக் கொஞ்சம் கோவில்ல இறக்கிவிட்டுடுப்பா...." என்றார் தாய்.

அவன் ஒரு கணம் யோசித்தான். பைக்கில் ஒருவரைத் தானே அமர வைக்க முடியும். என்ன செய்வது? தன் காரை அவனது புது வீட்டில்,விட்டிருந்தான். அது பத்து நிமிட தூரம் தான். ஆனாலும் இப்போது இங்கிருந்து போய் மீண்டும் காரைக்கொண்டு வந்து இருவரையும் பிக் செய்து அம்மாவை ஒரு கோவிலிலும், ஸ்வப்னாவின் ஃபேவரைட் கோவிலில் அவளையும் டிராப் செய்துவிட்டு, அவன் வேலைக்கு செல்லும் முன் அவனது சீட்டு கிழிந்தாலும் கிழியலாம். நெடுநாட்களின் பின் வேலைக்குச் செல்கையில் ஸ்வப்னாவை டிராப் செய்ய கிடைத்த வாய்ப்பு நழுவுவதில் அவனுக்கு சங்கடமாகியது. இந்த வீட்டிலிருந்து அவளது ஸ்கூல் கொஞ்சம் தூரம்.

"என்னப்பா.. வேற ஏதாச்சும் வேலை இருக்கா? நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போறிங்களா?" என்றார் மகேஸ்வரி.

அவன் சொல்லத்துவங்கும் முன் ஸ்வப்னா அவன் நிலையை புரிந்துக்கொண்டு அவன் கைகளை மாமியாருக்குத் தெரியாமல் அழுத்தினாள். அவனும் அதை புரிந்துக் கொண்டவனாய் தலையசைத்தான்.

" இல்ல...ம்மா....." என்றான்.

"அப்ப என்னை இறக்கிவிட்டிரு...."என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் மகேஸ்வரி.

அப்போதுதான் இத்தனை நேரம் கதவை சரியாய் தாளிடாமல் காதல் செய்து கொண்டு இருந்ததற்காய் இருவரும் நொந்துக்கொண்டனர். அவர்கள் தனியே இருக்கும் போது இவ்வாறு கதவெல்லாம் ஒரு தடையாகவே இருந்திருக்கவில்லை. இப்போது நிலைமை மாறியது.

"நீ எப்படிடா போவ...?" என்று நளன் சோகமாய்க் கேட்டான்.

" ஹூம்.. என் எக்ஸ் பாய் ப்ரெண்ட் யாரையாவது வரச்சொல்லிப் போவேன்..." என்று சிரிக்காமல் சொன்னாள்.

"ஸாரிடி.. அம்மாகிட்ட எப்படி இதெல்லாம் சொல்றதுனு...."

"இட்ஸ் ஓகே ... எனக்கு புரியும் புருஷா.. சாப்பிட்டு நீங்க கிளம்புங்க. நான் ஈவ்னிங் போய்க்கிறேன்." என்று அவள் கிளம்பினாள்.

நளன் மகேஸ்வரியை கோவிலில் இறக்கிவிட்டு சோகமாக ஆபிஸ் சென்றான்.

அந்த சம்பவம் போலவே அடுத்தடுத்து நளனுடன் ஸ்வப்னா காலையில் ஒன்றாக கிளம்பினால் எப்படியாவது அதைத் தடுக்கும் வகையில் மகேஸ்வரிக்கு பயணம் அமைந்து விடும். முதலில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்வப்னா பின்னர் மகேஸ்வரி திட்டமிட்டு இதை செய்து வருவது புரிந்து அவர் முன் அவனோடு பைக்கில் செல்வதை தவிர்த்துக்கொண்டாள்.

"ஐயோ... எனக்கு இடுப்பெல்லாம் வலிக்குதே.....!" என அடுத்தொரு நாளில் படுத்துக்கொண்டார் மகேஸ்வரி.

"நீங்க ரெஸ்டா இருங்க அத்தை! நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..." என்று அவள் சொல்வதற்காகவே காத்திருந்தது போல அனைத்து வேலைகளையும் அவள் தலையில் கட்டத்தொடங்கினார்.

"அந்த துணியெல்லாம் கொஞ்சம் துவைச்சுப் போட்டிரும்மா... வாஷிங் மெஷின்ல போடுறது ஒழுங்கா கழுவாத மாதிரி இருக்கு..."

"சரிங்கத்தை....." அவள் மறுபேச்சே பேசாமல் சொல்வதைச் செய்தாள்.

அவள் சமையலறைக்குள் புகுந்தது அடுப்பை பற்ற வைத்ததும் வந்து அருகில் நின்றுக்கொள்வார் மாமியார்.

"என்ன.. என்ன.. சமைக்கிற....? கத்தரிகாயா? இது எனக்கு ஒத்துக்காது..."

"உங்களுக்கு வேற காய் போட்டு சமைக்கிறேன் அத்தை!"

"எதுக்கு ரெண்டு சமையல்..? சரி பரவாயில்ல.. நான் ரசத்தோட சாப்பிட்டுக்கிறேன்...." என்று பாவமாய் சொல்வார்.

அவளுக்கு பதறிப்போகும். கடைசியில் வீட்டில் யாருக்குமே பிடிக்காத ஒரு காய்கறி சமையல் செய்யப்பட்டு மேஜை மீது அநாதையாகக் கிடக்கும்.

"நான் அப்பவே சொன்னேன் தானே.... ஒரு முருங்கைக்காய் போதும்னு..... இப்ப சாம்பார் நிறைய இருக்கு...." என்ற முணுமுணுப்பைக் கேட்க நேரிடும்.

'ஒரு முருங்கைக்காய்.... எத்தனைப் பேருக்கு போதும்...? 'என மனதிற்குள் நினைத்தவளுக்கு எதேதோ நினைவு வந்து சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள்.

அடுத்து "இன்னைக்கு காரம் அதிகம், இது கொஞ்சம் வேக வைத்திருக்கனும்.., இந்த காயை முழுசா வேக வைக்க கூடாது. அதுல இருக்க சத்து எல்லாம் போயிடும்.. என்னது வீட்லயே பரோட்டா செய்யப் போறியா...? அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதும்மா..." போகப் போக இதுபோன்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டாள். ஆனால் மறந்தும் நளனிடம் இது பற்றி மூச்சு விடவில்லை. ஆனால் அவன் கண்டுபிடித்து விட்டான்.

"உன் சமையலால அடுப்பு மட்டும் புகையாம வேற எங்கேயோவும் புகையுது போல...."

அவள் சிரித்தாள்.

"அடியேய்! உனக்கு கொஞ்சம் கூட கோபமே வரலயா..?"

"நோ பேபி!"

"எப்படி இப்படி சாமியார் ஆன.. அங்க இருக்கப்ப நான் கொஞ்சம் ஏதாச்சும் சொன்னாலும் முறைப்ப... கத்தியெல்லாம் தூக்கிக்கிட்டு வருவ...."

"அது அங்க.. இது இங்க...." என்று வியாக்கியானம் பேசினாள்.

"நீ ரொம்ப சேன்ஜ் ஆகிட்ட ஸ்வப்பு...."

"நளா.. இந்த ஸ்வப்புனு கூப்பிடுறத நிறுத்தேன். நீ இப்படி கூப்பிட மாமா அதைப் பார்த்து 'அதென்னம்மா சோப்பா...' அப்படினு கேட்கிறார்.

அவன் சிரித்தான்.

"சரி! வா தூங்கலாம்...."

"ஐயா தூங்க விட்டா சரிதான்...."

அதைக் கேட்டு அவன் சிரித்துக்கொண்டே அவளை இழுத்து கவிழ்த்தான்.

அவள் மனதுக்குள் மகேஸ்வரியின் அட்டூழியங்களை தாங்க இன்னும் பயிற்சி எடுத்துக்கொண்டே அவனோடு கலந்தாள்.
 
Nirmala vandhachu ???
 
Top