Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-22

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -22

ஆரோக்கியராஜ் தன்னுடைய பாங்க் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒரு வாரமாயிற்று. அவர் வீட்டில் இருப்பதால் ஸ்வப்னாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. மகேஸ்வரியை சமாளிக்க இலகுவாய் இருந்தது.

அவள் அவளது அம்மா வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டாள். அங்கு சென்றால் கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று யோசித்தாள். அது தெரிந்ததும் நளன் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டான்.

"ஏன் ராஜா முகம் அந்தப்பக்கம் திரும்பிக்கிச்சா....? தைலம் தடவட்டா..?" என்று சீண்டினாள்.

"அடிப்பேன் உன்னை... என்னை விட்டுட்டு போக மாட்டேனு சொன்ன தானே.. இப்ப எங்க கிளம்பிட்ட...?"

"ஹேய்! அம்மா பாவம்ப்பா.. நாம அங்க இருக்கப்ப சரி என்னைப் பார்க்க வருவாங்க. இங்க அத்தைக்கு பயந்தே வர பயப்படுறாங்க. வந்தாலும் ஏதாச்சும் வெல்கம்மா கிடைக்கப் போகுது...? இந்த ரெண்டு மாசத்துல ஒரு தடவைத் தான் அங்க போயிட்டு வந்தேன். நான் ஒரு டூ டேய்ஸ் இருந்துட்டு வாரேன் கண்ணா!"

"நானும் வரட்டா..." ஆர்வம் மேலிட கேட்டான்.

"ம்...ம்.. உங்க அம்மாகிட்ட நான் அடிவாங்கவா....?" என்றாள் ஸ்வப்னா.

"ஏன் என்னத்த சொல்ல இருக்கு.. நான் ஏன் அவங்களுக்கு பயப்படனும்..? என் மாமியார் வீட்டுக்குப் போக நான் யாரைக் கேட்கனும்..."என்று சொல்லிவிட்டு ஸ்வப்னா தடுத்தும் கேட்காமல் அவளோடு கிளம்பிவிட்டான்.

காலிங் பெல் ஒலித்து நெடுநேரம் ஆகிய பின்பே கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து போன முகத்துடன் கதவைத் திறந்தார் ரோகிணி.

"அம்மா! "என ஆவலாய் அவரை அணைத்தவள், அவரது உடம்பு கொதிக்கவே பதறிப்போனாள்.

"என்னாச்சும்மா.. ஏன் இவ்வளவு காய்ச்சலா இருக்கு...? போன்ல பேசுறப்பக்கூட ஒன்றும் சொல்லலயே.. மெடிசின் எடுத்தாச்சா...?" ஸ்வப்னா பதறினாள்.

"முதல்ல உள்ள வாங்க... வாப்பா நளன். வீட்ல எல்லாரும் சௌக்கியமா?" என்ற அவர் குரலில் எதுவோ இருந்தது.

"அது இருக்கட்டும் அத்தை. காய்ச்சல் அதிகமா இருக்கு போல இருக்கே.. வாங்க.. ஒரு டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்...."

"இல்லப்பா... மருந்து எடுத்தேன்....."

ஸ்வப்னா ரோகிணி காய்ச்சல் என்றதை மறைத்தது க்காக கடிந்துக்கொண்டு அம்மாவுக்கு உணவு செய்து கொடுத்தாள்.

"ஒரு போன் பண்ணி சொல்லலாம் தானே... நான் என்ன வரவா மாட்டேன்.. ஏன்ம்மா இப்படில்லாம் பண்றிங்க....?"

அவர் ஒன்றும் பேசாமல் இருந்தார். அவரது முகத்தில் எதுவோ ஒரு குழப்பம் அப்பிக்கிடந்தது. அதை இளையவர்கள் இருவரும் கவனித்தனர். இரவு உணவின் பின் ரோகிணியை அவர் அறையில் விட்டுவிட்டு, குடிக்க வேண்டிய மருந்துகளை எடுத்து கொடுத்து குடிக்க வைத்துவிட்டு வந்தாள் ஸ்வப்னா. இப்போது அவள் முகம் குழப்பத்தில் இருந்தது.

"அத்தை தூங்கிட்டாங்களா ஸ்வப்னா..."

"ம்..." தலையாட்டினாள்.

"இப்ப நீ எதுக்கு டென்சனா இருக்க.. அவங்களுக்கு சரியாகிடும். இல்லனா மார்னிங் வேற ஒரு டாக்டர்க்கிட்ட காட்டலாம். ஓகே.."

"அது இல்ல நளா.. அம்மாக்கு ஏதோ பிரச்சனை போல.. அவங்க இப்படி சோர்ந்து போய் நான் பார்த்ததே இல்ல... அவங்க மனசுல எதையோ வச்சி குழம்பிக்கிட்டு இருக்காங்க. அதான் ஒரே யோசனையா இருக்கு..."

"நீ ஏதாச்சும் கேட்டுப் பார்த்தியா?"

" இல்ல, நாளைக்கு கேட்டுப் பார்கிறேன்..." என்று சொல்லிவிட்டு அலாரம் வைத்தாள்.

"இப்ப எதுக்கு அலாரம் வைக்கிற...? காலையிலயே எழும்பி என்னத்த பண்ணப் போற...?"

"ஆமா இல்ல.. நான் அங்க இருக்க ஞாபகத்துல....." என்று சிரித்தாள்.

"இப்படி வந்து என் பக்கத்துல உட்காரேன்....."

"ஏன் நளா..."

"வா! உன் கூட கொஞ்சம் பேசனும்...."

"ம்.. சொல்லு கண்ணா!"

"அம்மா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறாங்களா ஸ்வப்னா...?"

இந்தக் கேள்வியில் அவள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள். இருந்தாலும் சமாளித்தாள்.

"என்ன கேள்வி இது.? எனக்கென்ன கஷ்டம்...?" என்று மாமியாரை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

"இல்ல.. நீ என்கிட்ட சொல்ல மாட்டிக்கிற... நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டுத் தான் இருக்கேன்.. உனக்கு வேலை அதிகமா இருக்கு. கொஞ்சம் உன்னை நீயே கண்ணாடியில் பார். என் ஸ்வப்னா கிச்சு கிச்சுனு இருப்பா.. இப்ப பாரு.. ஒரு மாதிரி டல்லா இருக்கா...."

"அப்படில்லாம் ஒன்னும் இல்ல.. நீயா சும்மா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காத.. நான் எந்த வேலையையும் கஷ்டமாவே நினைக்கல.. ஆனா உன் கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ண கிடைக்க மாட்டிக்குதோனு தான் கொஞ்சம் கவலையா இருக்கு, ஐ மிஸ் யூ நளா...." என்று அவன் தோள்களில் சாய்ந்தாள்.

"ஐ டூ மிஸ் யூ டி....."என்று அவளை இறுக்கமாக அணைத்து ஆறுதல் படுத்தினான். அவனுடைய கைக்குள் அவள் சொர்க்கமாய் உணர்ந்தாள். அந்த நிம்மதியிலேயே உறங்கத்தொடங்கினாள்.

அந்த இரண்டு நாட்களும் மூவருக்கும் நல்ல மாற்றமாக இருந்தது. ஸ்வப்னா பழையபடி துறுதுறுவென இயங்கத்தொடங்கினாள். நளனுக்கும் உற்சாகமான மனநிலை இருந்தது. ரோகிணியின் உடல்நலம் நல்லபடியாக முன்னேறியது. ஆனால் அவர் முகம் எதையோ நினைத்து சஞ்சலத்தில் இருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஞாயிறு மாலை நளன் மட்டும் கிளம்பினான்.

" நீ இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வா ஸ்வப்னா. நீ சொன்ன மாதிரி அத்தை ஏதோ யோசனையில் தான் இருக்காங்க.. அது என்னனு தெரிஞ்சு சரி செய்யப் பாரு. எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுப் போ... மனசு விட்டு பேசினாலும் பேசுவாங்க..."

"ம்.. சரி... நீ சமாளிச்சுக்குவியா நளா....?"

"ஐ கென் டார்லிங்.. நீ ரிலாக்ஸா இரு.. ஓகே.. பாய் பொண்டாட்டி..." என்று அவள் முகத்தை முத்தங்களால் குளிக்கச்செய்து விட்டு கிளம்பினான். இப்போதெல்லாம் அவன் மிகவும் பக்குவத்துடன் பேசுவதைக் கேட்டு அவள் சந்தோஷித்தாள்.

ஸ்வப்னாவுக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தது. அவளுக்கு பிடித்தது போல இரண்டு நாட்கள் சுதந்திரமாக இருக்கலாம். ஒருபுறம் அழுகையாய் இருந்தது. திருமணமான இந்த ஒன்பது மாதங்களில் முதல் தடவையாக அவனைப் பிரிந்திருக்கிறாள்.

ரோகிணியின் குழப்பம் அவளை அலைக்கழித்தது. அம்மாவிடம் பேச முடிவெடுத்தாள்.
 
Nirmala vandhachu ???
 
Top