Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-23

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -23

இரவு அவளுக்கு அழைப்பெடுத்தான் அவன்.

"ஹலோ பொண்டாட்டி..."

"நளா.. ஐ மிஸ் யூ..."

"ஹேய்! போன் பண்ணினா ஹலோ தானே சொல்வாங்க.. நீ என்ன மிஸ் யூ சொல்ற...?"

"உனக்கு கிண்டலா இருக்கா..? நான் இல்லாம ஜாலியா இருப்பியே...? "என்றாள் அவள்.

"ம்.. கொஞ்சம் ஜாலியாத் தான் இருக்கு......." என்று வம்பு இழுத்தான்.

"வந்தேனா அடிப்பேன் உன்னை..."

"நீ வாரதுக்குள்ள இதெல்லாம் மறந்துடுவ... சரி அத்தைக்கிட்ட பேசினியா?"

"இல்லப்பா.. நாளைக்கு கோவிலுக்குப் போகலாம்னு இருக்கேன்... அப்ப பேசுறேன்."

"ஓகே.."

" நளா நான் இங்க இருக்கதுக்கு அத்தை ஒன்னும் சொல்லலயே...." மாமிமாரைப் பற்றிய பயத்தில் கேட்டாள்.

"என்ன சொல்ல இருக்கு. நீ உங்க அம்மா வீட்டுக்குத் தானே போயிருக்க..."

" இல்லப்பா.. வேலையெல்லாம் பண்ணனும்...."

"அதெல்லாம் தானா நடக்கும். நீ நிம்மதியா இருந்துட்டு வா.. ஓகே.." என்ற நளன் அம்மாவுக்கு உதவிக்கொண்டு இருந்தது ஸ்வப்னாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.

"ஓகே..." என்றாள்.

"வேற என்ன....?" நளன்.

"வேற.. தெரியல....."

"அப்ப தூங்கு..."

"அதுக்குள்ளயேவா...." அவள் சுருதி இறங்கியது.

"ஆமா... உனக்கு ஸ்கூல் ஹாலிடே.. ஆனா எனக்கு இல்லையே ..." என்றான்.

"ஆமா இல்ல.."

"ஆமாவா இல்லையா...?"

"ஆமா மட்டும் தான். இவரு பெரிய விஜய். அவர் டயலாக்கை சொல்ல வந்துட்டார்..."என்று திட்டினாள்.

"சரி சரி. நான் ஏதாச்சும் டயலாக் சொன்ன மட்டும் உனக்குப் பொறுக்காதே.... தூங்கட்டா செல்லம்...."

"போ போய் தூங்கு. உன் கனவுல பேய் வரட்டும்."

"அடிப்பாவி புருஷனுக்கு இப்படியா சாபம் கொடுப்ப..."

அந்தப்பக்கம் அவள் அழகாய் சிரித்தாள்.

"குட் நைட் மாமா!"

" ஹேய்...." அவன் கூவினான்.

"இது என்னடி புதுசா.....?" என்றான்.

"சும்மா.. கூப்பிடனும்னு தோனுச்சு....."என்று அவள் செல்போனில் வெட்கப்பட்டாள்.

"அச்சோ... இப்ப பார்த்து நான் பக்கத்துல இல்லையே..." என நொந்துக்கொண்டான்.

"சரி சார் தூங்குங்க... குட் நைட்..."

"அடியேய் ஒரு கிஸ் தா..."

சத்தம் மட்டும் தான் வந்தது. அதுவே அவனுக்கு கிறக்கத்தை உண்டு பண்ணியது. நிம்மதியாய் உறங்கினான். அவளும் சந்தோஷமாய் கரடி பொம்மையை நசுக்கிக்கொண்டு தூங்கிப்போனாள்.

~~~~

கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துவிட்டு ரோகிணியைத் தேடினாள் ஸ்வப்னா. அவர் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். ஸ்வப்னா இதுவரை தன் தாயை அப்படி பார்த்ததே இல்லை.

தனி ஒரு ஆளாக ஒரு பள்ளியின் ஆசிரியையாக, கம்பீரமும் மிடுக்குமாக வளைய வந்த தன் தாய் இதுவரை எந்த பிரச்சனைக்கும் உடைந்து போய் பார்த்ததில்லை. வயது ஐம்பதை நெருங்கினாலும் மனதிலும், தோற்றத்திலும் இளமையாகத் தான் இருந்தார். அவரை நெருங்கி அமர்ந்தாள் மகள்.

"ம்.. சொல்லுங்க அம்மா...."

"என்ன சொல்ல...?"

"அதான் எதையோ மனசுல வைச்சிக்கிட்டு சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிக்கிறிங்களே.... அதைத் தான்... சில விஷயங்களை சொன்னா பாரம் குறையும் அம்மா.. என்கிட்ட சொல்லக்கூடாத விஷயம் எதுவுமா...?" என்றாள் ஸ்வப்னா.

"அட அப்படில்லாம் உன்கிட்ட சொல்லக்கூடாதுனு ஒன்னும் இல்லம்மா..."

"அப்ப என்னம்மா தயக்கம்...?"

"அது வந்து....." என அவர் இழுக்க, அவரே சொல்லத்துவங்கட்டும் என மகள் காத்திருந்தாள்.

"நான் அவரைப் பார்த்தேன்...."

"எவரை? " என்றாள் ஸ்வப்னா சற்றும் யோசிக்காமல்.

"அதான்... உன்.. அ...அப்பாவை...."

ஸ்வப்னா திகைப்பில் தான் விழுந்துப் போனாள்.

அவள் அறிந்து அவளது எட்டாவது வயதில் கடைசியும், முதலுமாய் தன் தந்தையைப் பற்றிக்கேட்டது. அதுவும் பாடசாலையில் பெற்றோர் ஒன்றுகூடலின் பின் 'உன் அப்பா வரவில்லையா...' என்ற ஆசிரியரின் கேள்விக்கு அழுதுகொண்டே ஸ்வப்னா விளக்கம் கேட்டப்போது தந்தைப் பற்றி அறிந்து கொண்டது தான்.

"அம்மா. ஏன் அப்பா வரலனு எல்லாரும் கேட்குறாங்க...? அப்பா எங்கம்மா.. ? அப்பா வர மாட்டாரா?"

"இதப் பாரு ஸ்வப்னா. உன்கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன். இப்ப ஓரளவுக்கு உனக்கு விபரம் புரியுது இல்ல.. அதானால நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ.. நானும் உங்க அப்பாவும் பிரிஞ்சிட்டோம். இதை பக்குவமா நீ பெரியவளானதும் சொல்றேன். இப்போதைக்கு என்னால இதைத்தான் சொல்லமுடியும்.. கேள்வி கேட்குறவங்களுக்கு அப்பா எங்க கூட இல்லனு மட்டும் சொல்லு. அது போதும். மேற்கொண்டு யாராவது ஏதாச்சும் கேட்டால் அம்மாகிட்ட கேளுங்கனு சொல்லு.. என்ன...." என்றார் ரோகிணி.

அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இல்லை என்ற உண்மை அவளுக்கு உறைத்ததும், அவள் அதன் பின் பெரியவளாகியும் தாயிடம் ஒரு வார்த்தைக் கூட அதைப் பற்றிக் கேட்கவில்லை. அது தன் தாயை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கும் என்று மட்டும் உணர்ந்திருந்தாள். ஒரு தடவை ரோகிணியே அதுபற்றி கேட்டும் மறுத்துவிட்டாள்.

"ஸ்வப்னா! இப்ப நீ சின்ன பொண்ணு இல்ல.. எல்லாம் புரியும்... அதனால உனக்கு உங்க அப்பாவைப் பார்க்கனும், பேசனும்னு ஏதாச்சும் இருந்தா சொல்லு. அதுக்கு நான் எந்த மறுப்பும் சொல்ல மாட்டேன்.."

"எனக்குத் தான் நீங்க இருக்கிங்களே அம்மா! அது போதும்..." என்று தாயை கட்டிக்கொண்டாள்.

இன்று தன் தாயே அது பற்றி சொல்லவும் கொஞ்சம் அதிர்ச்சியாகித் தான் போனாள். மேற்கொண்டு பேசத்தெரியாமல் மௌனம் காத்தாள். அதனால் ரோகிணியே பேசத்தொடங்கினார்.

"ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைப் பார்க்க வந்திருந்தார்..."

"எங்க....?"

"நம்ம வீட்டுக்கு...." ரோகிணி.

"வீட்டுக்கா...?" என்றதோடு தாயை பேச அனுமதித்தாள்.

"ம்.... " என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

"அம்மா.. என்னாச்சு? எதுக்கு வந்தாராம்...?"

"ஸ்வப்னா, உனக்கு உங்க அப்பாவை பார்க்கனும்னு தோனினதே இல்லையா?" என்ற அவர் குரலில் கேள்விக்குறி தொக்கி நின்றது.

நீண்டதொரு மௌனத்தின் பின் அவள் பேசினாள், "இருந்திருக்கு அம்மா.. அப்பாவை நினைவு தெரிஞ்சு நான் பார்த்ததே இல்லை.அவர் முகம் கூட தெரியாது. பார்க்கனும்னு நிறைய தடவை யோசிச்சுப் பார்ப்பேன். ஆனா உங்ககிட்ட கேட்க தயக்கம்...."

"என்ன தயக்கம் ஸ்வப்னா... உனக்கு அந்த உரிமை இருக்குனு நான் சொல்லியிருக்கேன் தானே.. அப்புறம் ஏன்ம்மா இத்தனை வருஷத்துல ஒருதடவை கூட உங்க அப்பா பற்றி கேட்கவேயில்லை...?" என்றார் ரோகிணி.

"சரி அது இருக்கட்டும் அம்மா! இப்ப எதுக்கு அவர்...?" சாமர்த்தியாய் அப்பா என்று சொல்வதை தவிர்த்தாள்.

ரோகிணி பேசுவதற்கே தயங்கினார். பேச வேண்டியதையும் பேசினார். ஸ்வப்னா அதற்கு பதிலும் சொன்னாள். கையோடு கிளம்பினாள். தன் கண்ணனைத் தேடி. அங்கும் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்.
 
Nirmala vandhachu ???
 
Top