Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-24

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -24

வாசலில் வந்து நின்றாள் ஸ்வப்னா.

"என்னடி.. நாளைக்குத் தான் வருவேனு சொன்ன...? அதுக்குள்ள வந்துட்ட..."என்ற நளனின் கேள்வியை காதிலே போட்டுக்கொள்ளாமல் அவனை இறுக்க கட்டிப்பிடித்து அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டாள். அவன் குழப்பமானான். இதமாய் அவள் தலையை தடவிக்கொடுத்த்தான். அந்த கோலத்தில் அம்மா பார்த்துவிட கூடாதே என்று தோட்டத்துக்கு அழைத்துப் போனான்.

"என்னாச்சுடா...?" என்று கனிவாய் கேட்கவும் செய்தான்.

"நளா..... அது வந்து...." என தடுமாறியவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து அவளை கொஞ்சம் ஆசுவாசப்ப்டுத்தினான்.

"இப்ப சொல்லு ஸ்வப்னா.. என்னாச்சு?"

"நளா... எங்க எங்க.. என்னோட அப்....... பா...... அப்பா....... " மேற்கொண்டு பேசத்தெரியாமல் குரலடைத்துப் போய் நின்றாள். பின்னர் சுதாகரித்து தான் சொல்ல வந்ததை ஒன்றுவிடாமல் சொன்னாள்.

ஸ்வப்னாவின் தந்தை ரகுவரன் மீண்டும் ரோகிணியுடன் சேர்ந்து வாழ தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு கேட்டதையும், ஸ்வப்னாவை பார்க்க விருப்பப்பட்டதையும், அந்த தாக்குதலில் தன் தாய் குழம்பிய குட்டையாய் கிடைப்தையும் சொன்னாள்.

"இதுக்கு நீ என்ன சொன்ன ஸ்வப்னா....?" நளன்.

"நான் இதுல என்ன சொல்ல இருக்கு. அம்மாவோட முடிவு எதுவா இருந்தாலும் அதுல எனக்கு சம்மதம்னு சொல்விட்டு வந்துட்டேன். உண்மையை சொல்லனும்னா எனக்கு சந்தோஷம் தான் நளா... நானும் உன்னோட வந்தபிறகு அம்மா தனி ஆளாகிட்டாங்களேனு ரொம்ப ஃபீல் பண்ணுவேன். அப்..பா.. மறுபடியும் அம்மா கூட ஒன்னா இருக்கதுல எனக்கும் சந்தோஷம்.... ஆனா... என்னால் அவரை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்க முடியாது நளா.. இப்படி திடீரென்று வந்தா எல்லாம் சரியாகிடுமா? சொல்லு.. நீ என்ன சொல்ற நளா...?"

"இது நல்ல விஷயம் தான் ஸ்வப்னா... அவங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்தாலும் அவங்க மனசுக்குள்ள காதல் இருந்திருக்கு.. அதனால் தான் திரும்ப ஒன்று சேர்வதைப் பற்றி நினைச்சிருக்காங்க... இதுல நம்ம என்ன சொல்ல இருக்கு. அத்தை என்ன சொன்னாங்க..?"

"அம்மா.. முடிவெடுக்கத் தெரியாம இருக்காங்க... இத்தனை வருஷமா இல்லாதவர் திடீர்னு வந்து வா ஒன்னா வாழலாம்னு கேட்டா அவங்களுக்கு எப்படிப்பட்ட மனநிலை இருக்கும்னு யோசிச்சுப் பாரு.... அவங்க ஏன் பிரிஞ்சாங்கனும் சொன்னாங்க....."

நளன் அவளை பேசவிட்டு விட்டு மௌனமாக இருந்தான்.

"அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணித் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... நான் பிறக்க முன்னாடி அம்மா வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு வயசானதும் அம்மா திரும்பவும் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்காங்க. அங்க ஆரம்பிச்சதாம் பிரச்சனை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவோ, பேசிக்கவோ நேரமில்லாமல் அவங்களுக்குள்ள இருந்த அன்பு குறைஞ்சு போயிடுச்சாம். தினம் தினம் சண்டை தானாம். அப்பா அவங்க வீட்டு ஆட்கள் சொல்றதை கேட்டுக்கிட்டு அம்மாவை... விட்டு பிரிஞ்சு போயிட்டாராம். இப்படிலாம் கூட நடக்குமா நளா.. இதுக்கு போய் பிரியப் போறாங்க.... இதெல்லாம் ஒரு காரணமா? எனக்கு ஒன்னும் புரியல...." என்றாள்.

"இது காலாகாலமா நடந்துக்கிட்டு வார விஷயம் தானே.. பொண்டாட்டி வேலைக்குப் போனா எங்க தங்களையும் வீட்டையும் ஒழுங்கா கவனிச்சுக்க மாட்டாங்களோனு ஆம்பிள்ளைகளுக்கு ஒரு பயம் வரும். அது கோபமா மாறும். அப்புறம் இல்லாத பிரச்சனையெல்லாம் வரும். அவங்களுக்குள்ள எப்படிப் பட்ட மனஸ்தாபமோ.. அதையெல்லாம் மறந்துட்டு அவங்க ஒரு புது வாழ்க்கையை வாழத்தொடங்குறது சந்தோஷம் தானே ஸ்வப்னா.... அதுக்கு நாம் ஏன் தடை சொல்லனும்?"

"ம்.... அம்மாவோட முடிவு எதுனாலும் எனக்கு சம்மதம்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... உனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லையே...."

"எனக்கென்னடா பிரச்சனை இருக்கப் போகுது... ?"

"இல்லப்பா.. இப்ப நீ எங்க வீட்டு மாப்பிள்ளையாச்சே..."

"ஹா..ஹா..ஹா... அது இப்ப தான் ஞாபகம் வந்திச்சோ.... ஸ்வப்னா! நீ இந்த நேரத்துல அத்தையை விட்டுட்டு வந்துருக்க கூடாது...."

"இல்லடா.. நான் இருக்கவும் அம்மா என்னைப் பார்த்து சங்கடப்படுற மாதிரி இருந்திச்சு.. என்னால் அவங்க முடிவெடுக்க தயங்குற மாதிரி இருந்திச்சு. இது அவங்க வாழ்க்கை. அவங்க தான் வாழனும்.. அவங்க தான் முடிவெடுக்கனும்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்... அதோட...."

"அதோட...?" என்று கேள்வி தொடுத்தான்.

"உன்னைப் பார்க்கனும் போல இருந்திச்சிடா..." என்று அவன் கன்னத்தில் தன் ரப்பர் ஸ்டாம்பை பதித்தாள்.

அதை அவன் ரசித்தான்.

"ஸ்வப்னா! ஒன்னு கேட்கட்டா.....?"

"ம்....."

"நிஜமாவே உனக்கு உங்க அப்பாவைப் பார்க்கனும்னு தோணினதே இல்லையா?"

"இல்லடா.. இத்தனை நாள் அம்மா எல்லாமுமாக எனக்கு இருந்தாங்க. ஒரு அப்பா இல்லாத குறையை தீர்த்து என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. அதுக்கு பிறகு என்னைக்கு உன்னை காதலிக்கத் தொடங்கினேனோ அப்போ இருந்து எனக்கு எல்லாமுமாக நீ தான் இருக்க புருஷா..." என்று அவனை அணைத்துக்கொண்டாள்.

அந்த பதிலில் அவன் ஒருகணம் சந்தோஷக்கடலில் சிக்கித் தவித்து மீண்டெழுந்து அவளை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பு இருவருக்கும் தேவையாய் இருந்தது. அதைக் கலைப்பதற்காவே ஒரு குரல் அழைத்தது.

"நள்ளு அத்தான்......" என்ற பெண்ணின் குரலில் ஸ்வப்னா தான் அதிக அதிர்ச்சிக்குப் போனாள். அந்த குரலுக்குரியவள் ஏற்படுத்தப்போகும் விபரீதம் புரியாமல் நளனும் விழித்தான்.

அவள் தன் ஹீல்ஸ் கால்களால் டொக்கு டொக்கு என்று நடந்து வந்தாள்.

ஸ்வப்னா நளனின் அருகில் நின்றுக்கொண்டு இருக்கவே, வேகமாய் வந்து நளனின் கைகளை கட்டிக்கொண்டாள் தாரா எனும் தரங்கினி.

"எப்படி இருக்கிங்க அத்தான்...? உங்களைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு...? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா...? உங்க கூட நிறைய பேசனும் அத்தான்.. நிறைய இடத்துக்கு போகனும். கூட்டிக்கிட்டு போவிங்க தானே.... அப்புறம் உங்களுக்காக உங்களுக்கு பிடிச்ச திங்கஸ எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கேன்.. அப்புறம் அம்மா உங்களை தேவா மாமா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போக சொன்னாங்க.. வேற.. " மூச்சு விடாமல் பேசினாள்.

ஸ்வப்னாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. தான் அருகில் இருப்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவன் அவளோடு பேசிக்கொண்டிருப்பதை கோபக்கணலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். போதாக்குறைக்கு அவள் நளனின் கைகளை பிடித்திருந்தது வேறு ஸ்வப்னாவின் கண்களில் தீப்பிழம்பு உருவாக காரணமாக அமைந்தது.

அதோடு நளனை அவள் 'நள்ளு அத்தான்..' என கொஞ்சலாய் அழைத்தது ஸ்வப்னாவின் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்தது.

நளனோ கொஞ்சம் திகைப்பில் அசந்துப் போய் இருந்தான்.

"இது... " என்று ஸ்வப்னாவைப் பார்த்து இழுத்தான். யாரை முதலில் யாருக்கு அறிமுகம் செய்து வைப்பது யோசித்தான்.

' என்னடா பொண்டாட்டியை இன்ட்ரோ தர இத்தனை தூரம் யோசிக்கிற...' என்று ஸ்வப்னா அவனை இன்னும் முறைத்து வைத்தாள்.

அந்த தரங்கினியும் அதையே தான் யோசித்திருக்க வேண்டும்.
 
Nirmala vandhachu ???
 
Top