Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி! -25

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -25

" இது ஸ்வப்னா.. என்னோட மனைவி..!" என்று அறிமுகம் செய்து வைத்தான் நளன்.

"ஓ.. அத்தை சொன்னாங்க... அவசர கல்யாணம்.. அந்த ஸ்வப்னா... இவ தானே.." என்ற அவள் பதிலில் ஸ்வப்னா கொஞ்சம் அடிப்பட்டுப் போனாள். ஆனால் அவள் கணவன் காப்பாற்றினான். அவளை தன்னோடு அணைத்தான். அந்த அணைப்பில் ஒரு இறுக்கம் இருந்தது. நெருக்கம் தெறித்தது.

"இவ என்னோட உயிர்....." அந்த பதிலில் ஓர் ஆழம் இருந்தது. அதில் அவளது அடிப்பட்ட காயத்திற்கு மருந்து தடவப்பட்டது போலிருந்தது.

தாரா அவன் பதிலை ரசித்ததாய் தெரியவில்லை. மாறாய் உள்ளுக்குள் வன்மமாய் நினைத்தாள் ' உன் உயிரை உன்கிட்ட இருந்து பிரிக்கிறேன் அத்தான்..!'

"நீ மலேஷியால இருந்து எப்ப வந்த.. ? அத்தை மாமா எங்க..? " என்றான் நளன்.

" அப்பாவும், அம்மாவும் வரல அத்தான்.. நான் மட்டும் தான் வந்தேன்.. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் அத்தைக்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்..." என்று கண்ணடித்தாள். அதை ஸ்வப்னா வெகுவாய் வெறுத்தாள்.

'ஹூம்.. இருக்க தலைவலி போதாதுனு இது வேற..' என்று மனதுக்குள் நினைத்தாள். நளன் அவளை தன் பிடியிலேயே வைத்தருந்தான்.

"சரி.. அப்புறம் பார்க்கலாம்..."என்று தரங்கினியை அனுப்ப முயற்சித்தான்.

"ஏன் விரட்டுறிங்க அத்தான்.... ஓ.. உங்க வைஃப் ஏதாச்சும் சொல்வாங்களா...? அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. நீங்க வாங்க..." என்று அவன் கைபிடித்து அவனை உள்ளே அழைத்துச் செல்ல முற்பட்டாள்.

வேறு வழியின்றி அவனும் அவளோடு தொடர்ந்தான். ஸ்வப்னா தன்னை அவனிடத்திலிருந்து விடுவித்துக்கொண்டு நகர்ந்தாள். அவள் குளித்துவிட்டு கீழே வரும் போது, ஹாலில் டீவி ஓடிக்கொண்டிருக்க, நளனின் அருகில் அமர்ந்து அவள் மலேஷிய கதைகளை அளந்துக்கொண்டிருந்தாள். கூடவே அருகில் அவள் அருமை மாமியார். இதில் எதுவும் கலந்துக்கொள்ளாமல் ஆரோக்கியராஜ் செய்தியில் மூழ்கியிருந்தார்.

ஸ்வப்னா நேராக கிச்சனுக்குச் சென்றாள். நான்கு நாட்களாக அவளில்லாமல் சமையலறை சண்டையறையாக மாறியிருந்தது. நிறைய பொருட்கள் இடம் மாறியிருந்தன. பாத்திரங்கள் அப்படியே சிங்க்கில் கிடந்தன. இரவு சமையலுக்கான அறிகுறியே இல்லாமல் சமையல் மேடை விரிச்சென்று இருந்தது. ஸ்வப்னா ஏப்ரனை எடுத்து மாட்டிக்கொண்டு முதலில் பாத்திரங்களை தேய்க்கத் துவங்கினாள். அந்த சத்தம் கேட்டு மகேஸ்வரி வந்தார்.

"தாரா... நான் வெஜ் தான் விரும்பி சாப்பிடுவா.. அதனால் ஏதாச்சும் நல்லதா சமை.. " என்று மொட்டையாக சொல்லிவிட்டுச் சென்று பேச்சில் கலந்துக்கொண்டார்.

ஸ்வப்னா ஃபிர்ட்ஜை திறந்துப் பார்த்தாள். சிக்கன் இருந்தது. அதை குருமா செய்து நாண் போட்டாள். ஆனால் தாரா அதையும் குறை சொன்னாள்.

"ஆ...ஊ.. இவ்ளோ ஹாட்டாவா சாப்பிடுவிங்க... "என்று இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்தாள்.

"நாளையில் இருந்து காரம் குறைச்சு போடு ஸ்வப்னா..." என்று வேலைக்காரிக்கு கட்டளையிடுவது போல் மகேஸ்வரி சொல்லி வைத்தார்.

அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்க, ஸ்வப்னா கிச்சனை சுத்தம் செய்துக்கொண்டிருந்தாள். அவர்களோடு சாப்பாட்டில் கலந்துக்கொள்ளவில்லை. உணவருந்தி முடித்ததும் அனைவரும் வெளியே கார்டனில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஸ்வப்னா தனியாக கொறித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகையாய் வந்தது. அம்மா வீட்டிலிருந்து ஆசைக் கணவனுக்காய் ஓடி வந்தால், இங்கு ஒரு தொல்லை வந்து சேர்ந்திருக்கிறதே என்று தோன்றியது. தினமும் நளனோடு அமர்ந்து உணவருந்திவிட்டுப் பழகிவிட்டு இப்போது தனியாக உணவருந்த அவளுக்கு பிடிக்கவேயில்லை. தட்டை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

"ஹேய் பொண்டாட்டி.. என்ன அதுக்குள்ள எழும்பிட்ட...?" என்றவாறு நளன் வந்தான். அந்த தரங்கிணியின் அலட்டல் கதைகளில் இருந்து சிரம்ப்பட்டு தப்பித்து வந்திருந்தான்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை.

"நீ சாப்பிடு... "என்று உணவு பறிமாறினான்.

"நளா.... காரம் அதிகமா..."

"அப்படில்லாம் ஒன்னும் இல்ல.. வழக்கம் போலத்தான் இருந்திச்சு. "

"நான் இன்னைக்கு குறைச்சுத் தான் போட்டேன் நளா.."என்ற அவள் குரலில் கொஞ்சம் அழுகை கலந்திருந்தது.

"ஹேய்.. லூசு.. இதுக்கு ஏன் இப்படி முகத்தை சோகமா வச்சிக்கிற.... " என்றவன் அவள் ஒழுங்காக சாப்பிடாமல் பித்தலாட்டம் செய்வது கண்டு தட்டைப் பிடுங்கி தானே அவளுக்கு ஊட்டினான்.

அவனது செய்கையில் அவள் மனம் குளிர்ந்தாள். அவள் சமையலறையின் மிகுதி வேலைகளை முடிக்கும் வரையில் கூடவே இருந்தான். உதவி செய்தான். அதுமட்டுமின்றி அவளை நோண்டிக்கொண்டு.அவர்கள் மட்டுமே தனியாய் இருப்பதாய் நினைத்து நளன் சில்மிஷம் செய்து கொண்டு இருந்தான். ஆனால் அதை அந்த கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தன.

பாத்திரங்களை கழுவி வைக்கையில் அவன் அவள் கழுத்தை கடித்திருந்தான்.

"நளா..."என்று நெளிந்தாள் அவள்.

"என்னடீ....?" என்ற அவன் உதடுகள் அவளை அடுத்து எங்கு முத்தமிடலாம்? இல்லை கடிக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தது.

"உங்க.. தாரா..இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பா....?"

அந்தக் கேள்வியில் அவன் அதிர்ச்சியுற்று சிரித்தான்.

"இப்ப எதுக்கு சிரிச்சு என்னை மூட் அவுட் ஆக்குற..."என்று எரிந்து விழுந்தாள்.

"இல்ல... அவ வந்த உடனேயே நானும் மனசுக்குள்ள இந்தக்கேள்வியைத் தான் கேட்டுப் பார்த்தேன். அதை நினைச்சு தான் சிரிச்சேன்..."என்றான்.

இருவரும் அவளின் வருகையை தொல்லையாய் நினைப்பதை நினைத்து சிரித்து சிரித்து பேசியவாறு தூங்கிப் போனார்கள்.

தரங்கிணி உறங்காமல் பயங்கரமான திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தாள்.
 
Nirmala vandhachu ???
 
Top