Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-26

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -26

"என்னப்பா.. வேலைக்கு கிளம்பிட்டியா?" என்றபடி மூக்குக் கண்ணாடியை துடைத்தபடியே ஆரோக்கியராஜ் எதிர்பட்டார்.

"ஆமாம்ப்பா.... ஸ்வப்னா நீ ரெடியா... " என உள்ளே குரல் கொடுத்தான் நளன். ஸ்வப்னா அரக்கப்பறக்க டிபன் பாக்ஸை லன்ச் பாக்கில் திணித்துக்கொண்டே ஓடி வந்தாள்.

இருவரும் ஒன்றாக கிளம்புவதை மாடியில் இருந்து இறங்கி வந்த தரங்கிணி கவனித்தாள். அவளுக்கு எரிச்சல் வந்தது. இவர்களை எப்படி பிரிக்கலாம் என இரவு முழுவதும் திட்டம் நீட்டிக்கொண்டு இருந்ததில் தூங்காமல் அவள் கண்கள் சிவந்து போய் இருந்தன.

இந்த இடத்திலாவது தரங்கிணி பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.

தரங்கிணி. அவளுக்கும் ஸ்வப்னாவின் வயது தான். மகேஸ்வரியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகள். குடும்பத்தோடு மலேஷியாவில் வசிக்கும் அவள் அதிசயமாய் இம்முறை இங்கு வந்திருக்கிறாள். அவளுக்கு முன்பிருந்தே நளன் மீது ஒரு கண். சின்ன வயதில் இருந்தே விடுமுறைக்கு வந்தால் அவனை தொற்றிக்கொண்டு திரிவாள். அவள் ஒரு லூசு கேஸ் என்று உணர்ந்த நளன் அவளை தன் அருகிலும் ஸ்வப்னாவின் அருகிலும் அண்ட விட்டது இல்லை. ஸ்வப்னாவும் எப்போதோ பார்த்து ' ஹாய்' சொன்னது தான். அவளை எல்லோரும் மறந்தே விட்டு இருந்தார்கள். இப்போது திடீரென குதித்திருக்கிறாள்.

தொடர்புகள் குறைந்திருந்தாலும் எப்படியாவது அவனை அடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவள் தலையில் இடி விழுந்ததாய் வந்து சேர்ந்தது 'நளன்- ஸ்வ்ப்னா' திருமணம். உடனே கிளம்ப முடியாத நிலையில் அவளது வேலைகள் இருக்கவே, தன் பயணத்தை தள்ளிப்போட்டு, ஒருவழியாய் இப்போது வந்து சேர்ந்திருக்கிறாள். ஸ்வப்னாவை அவனிடத்திலிருந்து பிரிக்கும் திட்டத்தோடு. அவர்கள் காதலை ஆண்டவனாலும் பிரிக்க முடியாது என்பது தெரியாமல்.

ஸ்வப்னாவிற்கு தரங்கிணியால் வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை. ஆனால் தான் இல்லாவிட்டால் இன்னும் என்னென்னவெல்லாமோ நடக்கும் என்று எண்ணி வேண்டா வெறுப்பாக கிளம்பினாள்.

வழக்கம் போல் வீட்டு வேலைகளை கவனித்தாள் ஸ்வப்னா. மாமனாருக்கு காபி போட்டு கொடுத்தாள். கடைத் தெரு வரை சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தாள். நேரம் அப்போதும் நான்கைத் தான் தொட்டிருந்தது. அதனால் தன் தாய் வீட்டிற்கு கிளம்பினாள்.

கதவைத் திறந்த ரோகிணியின் முகம் இன்று சற்று தெளிவாய் இருந்தது.

"அம்மா... சூடா ஒரு காபி...."என்று ஆர்டர் போட்டாள். கால்களை தூக்கி சோஃபாவில் போட்டுக்கொண்டாள். ரிமோட்டை கையிலெடுத்து அதை துவம்சம் செய்து எல்லா சானல்களையும் கொலை செய்தாள். அம்மா வீட்டில் தான் அவள் இயல்பாய் இருப்பதாய் உணர்ந்தாள்.

" என்ன ஸ்வப்னா.... இன்னைக்கும் வந்திருக்க....?"

"ஏன்ம்மா.. வரக்கூடாதா?"

"அட அதுக்கில்ல... " என்று தடுமாறினார் ரோகிணி.

அம்மாவிடம் தரங்கிணியின் வருகையை ஒப்புவித்தாள். உள்ளுக்குள் பொருமினாள். பின் தடாலடியாக அந்த கேள்வியை சம்பந்தமில்லாமல் கேட்டாள்.

"அம்மா.. என்ன முடிவெடுத்து இருக்கிங்க..."

அவள் எதை கேட்கிறாள் என அறிந்து ரோகிணி தடுமாறினார்.

"நான் அப்பாவை பார்க்கனுமே அம்மா..." என்றபடி காபியை உறிஞ்சினாள்.

" எ..ன்ன...?" ரோகிணி.

"என்னம்மா.. எதுக்கு இவ்வளவு ஷாக். நான் பார்க்கலாம் தானே...." என்றாள்.

" அது... ம்..."

" அப்ப.. அவரை எங்க பார்க்கிறது...? எப்படி கன்டாக்ட் பண்றது..." அவளது கேள்வி இயல்பாகவே இருந்தது.

மகள் சீரியஸாய்த் தான் கேட்கிறாள் என்று தெரிந்ததும் ரோகிணி பதில் சொல்லத்தெரியாமல் அப்படியே நின்றார்.

"அது.. வந்து... "

"சரி... அப்பாகிட்ட பேசிட்டு சொல்லுங்க. நாளைக்கே... "என்று கட்டளையிட்டாள். கடிகாரத்தைப் பார்த்தாள்.

"நேரமாச்சும்மா... புகுந்தவீட்டு கடமை அழைக்குது. நான் கிளம்புறேன்.. இல்லனா என் மாமியார் சீரியல் மாமியார் மாதிரி ஆகிடுவாங்க.. "என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

அவள் போனதும் ரோகிணி யோசனையில் ஆழ்ந்தார்.

கணவரை என்னவென்று தொடர்பு கொண்டு பேசுவது என்று மலைப்பாய் அமர்ந்தார். ஸ்வப்னா விளையாட்டுப் பெண் இல்லை. அவள் தீவிரமாய் தான் கேட்கிறாள் என்று புரிந்து போயிற்று. ஆனாலும் தன்னை விட்டுச் சென்ற கணவரோடு வழிய சென்று பேசுவதில் தயக்கம் எட்டிப்பார்த்தது. இருந்தாலும் அதை தூக்கிப் போட்டுவிட்டு ரகுவரன் தந்துவிட்டுப் போன போன் நம்பரை எடுத்து டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போயிற்று.

~~~~

ஸ்வப்னா தன் அறைக்குள் நுழையும் போது அங்கு தரங்கிணி நின்றுக் கொண்டு அவளுடைய புத்தக அலுமாரியை அலசிக்கொண்டிருந்தாள். தவறு பிரட்டி தள்ளிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த மாத்திரத்தில் ஸ்வப்னாவின் கொம்புகள் முளைக்கத் தொடங்கின.

அறையை வெறுமனே சாத்திச் சென்றிருந்தது நினைவுக்கு வர அவளை.. அந்த தரங்கிணியை அழைத்தாள்.

"இங்க என்ன பண்றிங்க...?"

ஸ்வப்னாவை எதிர்பார்க்காத தரங்கிணி கொஞ்சம் அதிர்ச்சியுற்றிருக்க வேண்டும்.

"ஓ.. ஸ்வ்ப்னா.. ஏதாச்சும் புக்ஸ் இருக்குமானு பார்க்க வந்தேன்.' நள்ளு' அத்தான் நிறைய புக்ஸ் வச்சிருப்பாரே...." என்று அந்த 'நள்ளு' வில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள்.

ஸ்வப்னாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. அவளது அறைக்கு அனுமதியின்றி வந்ததே தவறு. அடுத்து அவளது புத்தக அலுமாரியில் கை வைத்தது இரண்டாவது தவறு. இதில் ' நள்ளு அத்தான்னாம்.. நள்ளு அத்தான்..' . இது மூன்றாவது தவறு.

"இதெல்லாம் என்னோட கலெக்ஷன்ஸ். இதை யாரும் தொடுறதை நான் விரும்ப மாட்டேன். குறிப்பா நான் இல்லாதப்ப என்னோட ரூமுக்குள்ள யாரும் வாரதை நான் கண்டிப்பா விரும்ப மாட்டேன். சோ..." என்று வாசல் பக்கமாய் கையைக் காட்டினாள் ஸ்வப்னா. அந்த செய்கையில் ஒரு கோபம் இருந்தது.

"இது என் நள்ளு அத்தானோட ரூம்கிறதால தான் வந்தேன்..." என்றாள் அவளும்.

"அது.. அப்போ.. இப்போ இது எங்களோட ப்ரைவேட் ரூம். சோ.. யாருக்கும் அனுமதி இல்ல...." கறாராகவே பதில் சொன்னாள் ஸ்வப்னா.

அந்த சூடான பதிலில் கொஞ்சம் அடிப்பட்டுப் போன தரங்கிணி அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் சென்றதும் கொஞ்சம் குளிர்ந்தாள் ஸ்வப்னா. தரங்கிணி தமக்குள் மிகப்பெரும் தொல்லையாக இருப்பதை உணர்ந்தாள். அவள் தரங்கிணி மீது காட்டிய கோபம் ஸ்வ்ப்னாவின் மீது மகேஸ்வரி என்ற அம்பின் மூலம் எதிரொலித்தது.

"என்னமோ நளனோட ரூமுக்குள்ள தாராவை போக வேண்டாம்னு சொன்னியாமே.. அதை சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு...?" என்றார் காரமாய், மகேஸ்வரி.

ஸ்வப்னா அமைதியாக இருக்க பின்புறமிருந்து பதில் வந்தது.

"என்னோட மனைவிங்கற உரிமை இருக்கு..."

நளன் கொஞ்சம் கோபமாகவே நன்றுக்கொண்டிருந்தான். அவனை எதிர்பார்க்காத மகேஸ்வரி கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.

இதுவரை மகனுக்கு தெரியாமல் ஸ்வப்னாவை குத்திக் கிளறிக்கொண்டு வந்தார். அது மகனுக்கு தெரிந்துவிடக்கூடாதே என்ற பயம் வேறு இருந்தது அவர்க்கு. தெரிந்தால் என்ன செய்வான் என்றும் தெரிந்து இருந்தது.

"அது.. இல்லப்பா.. தாரா நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு. உன் ரூமுக்கு புக்ஸ் எடுக்க போனாளாம். அதை பார்த்துட்டு ஸ்வப்னா உள்ள வர வேணாம்னு சொன்னாளாம். அதான் கேட்டுக்கிட்டு இருந்தேன். ." என்று குளறினார்.

"அதான் நீங்களே சொன்னிங்களே.. அவ இந்த வீட்டுக்கு கெஸ்டா வந்த பொண்ணு. ஸ்வப்னா இந்த வீட்டுப் பொண்ணு. அது ஞாபகம் இருக்கட்டும். இன்னொரு விஷயம் அம்மா.. எங்க ரூமுக்குள்ள யாரும் வருவதை நாங்க விரும்ப மாட்டோம். ஸ்வப்னா சொன்னதுல எந்த தப்பும் இல்ல... " என்றவன் லன்ச்ஞ் பாக்கை வைத்துவிட்டு ஸ்வப்னாவை கண்ணாலேயே மேலே வரும்படி அழைப்பு விடுத்தான். அவளும் அது புரிந்தவளாய் அவன் பின்னேயே சென்றாள்.

இவை அனைத்தும் டீவியில் கண்ணைப் பதித்துக்கொண்டு, காதை இவர்கள் பேச்சில் நுழைத்துக்கொண்டிருந்த தரங்கிணியின் காதுகளிலும் கேட்டது.

அவள் அறைக்குள் வந்ததும் அவளே எதிர்பார்க்காத விதமாய் அவளை கட்டியணைத்தான் நளன்.

"என்னடா... இது..."என்று அவள் திக்கித்திணற முத்தமிட்டான். சற்றுமுன்பு கீழே கோபமாய் பேசிவிட்டு வந்தவன் இப்போது எதுவுமே நடக்காதது போல் அவளை கொஞ்சுவது கண்டு திகைத்தாள்.

"என்னாச்சு நளா...?"

"சும்மா.. உன்னை கொஞ்சனும் போல இருந்திச்சு. அதான்...." என்று அவள் கன்னத்தை வருடினான்.

"இல்ல.. கீழ.... என்ன நடந்துச்சுனு அத்தைக்கிட்ட அப்படி கோபமா பேசுன..?"

"இல்லடி.. உன்னை யாராச்சும் ஏதாச்சும் சொன்னா என்னை என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியல..." என்றான்.

அவணை செல்லமாய் முறைத்தாள்.

" என்ன நடந்திச்சுனு முழுசா தெரியுமா உனக்கு?" என்று கணவனைப் பார்த்து கேட்டாள்.

" எது நடந்திருந்தாலும் உன் மேல தப்பு இருந்திருக்காது கண்மணி.." என்றான்.

" அவ்வளவு நம்பிக்கையாடா என் மேல்..?" என்று அவன் கண்களை பார்த்து கேட்டாள்.

" ம்.. ஏகத்துக்கும்..." என்று அவளை நெருங்கினான்.

" அழுக்கா ஒரு முத்தம் தாயேன்.." என்று அவனது உதடுகளை தொட்டுக் காட்டினான்.

" ஐய.. முடியாது போ.." என்று அவனை தள்ளிவிட்டாள். டவலை எடுத்து அவன் மீது வீசிவிட்டு " சரி ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. காபி போடட்டுமா..."

"சரி.. பொண்டாட்டி.." என்று அவள் நாடியை பிடித்து கொஞ்சினான்.

"என்ன... சார் இன்னைக்கு ஓவரா கொஞ்சுறிங்க....?"

"எல்லாம் காரியம் ஆகனும்னு தான்... " என்று கண்ணடித்தவன் நோக்கத்தைப் புரிந்துக்கொண்டு அவனை பொய்யாய் அடிப்பது போல கை ஓங்கிவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.

அமைதியாக காபி போட்டுவிட்டு நகரும் போது,
"இன்னைக்கு காரம் குறைவா சமை..." என்று மொட்டையாய் சொன்னார் மகேஸ்வரி.

"இல்லைங்க அத்தை. உங்க 'தாரா'வுக்கு ஏத்த மாதிரி எனக்கு சமைக்கத் தெரியல. அதுனால நீங்களே பண்ணிடுங்க." அந்த 'தாரா'வில் அவளும் ஒரு அழுத்தம் கொடுத்தாள். நகர்ந்காள்.

அன்று இரவு உணவை மகேஸ்வரி சமைக்க, மிக சிரமப்பட்டு அதை விழுங்கும் தரங்கிணியை எண்ணி உள்ளுக்குள் நகைத்த நளனுக்கு புரை ஏற, ஸ்வப்னா அவன் தலையை தட்ட, ஆரோக்கியராஜ் அவனுக்கு தண்ணீர் கொடுக்க அங்கு அவர்கள் மூவருக்கு மட்டும் சிலபல அர்த்தம் புரிந்தது.

இரவு படுக்கும் போது ஆரோக்கியராஜ் தன் மனைவியைப் பார்த்து கேட்டார்.

"உன் அண்ணன் பொண்ணு எப்ப கிளம்ப போறா..?"

"ஏன். அவ இருக்கதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் ஆள் ஆளுக்கு அவளை விரட்டுறிங்க..."

"இன்னும் யாரும் விரட்டல.. அந்த நிலமைக்கு கொண்டு வந்துவிடாம இருந்தா சரி..." என்றார் ஆரோக்கியராஜ்.

"என்ன பேசுறிங்க..." என்று குதித்தார் மகேஸ்வரி.

" அவளால வீணா இந்த வீட்ல பிரச்சனை வரப்போகுதுனு மட்டும் புரியுது..."

"பேசாம தூங்குங்க..." என்று திரும்பிப் படுத்துக்கொண்டார் மகேஸ்வரி.

உண்மையில் அதுதான் நடந்துக் கொண்டு இருந்தது.

Nirmala vandhachu ???
 
Top