Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-28

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -28

தரங்கிணி நளனை அப்படி கூப்பிட்ட போது ஸ்வப்னாவுக்கு கற்பனையில் கொம்பு முளைத்தது. 'நள்ளுவாம்.. நள்ளு...'

"எங்க கிளம்பிட்டிங்க...?" என்று குழைந்தவாறே கேட்டாள் தரங்கிணி. அப்போது அந்த இடத்துக்கு வந்து விட்டார் வில்லி மகேஸ்வரி.

அவளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் நளன் வாயை திறந்து பேசினான். காரணம் அம்மாவும் அடுத்து அதே கேள்வியைத் தான் கேட்க போகிறார் என அவனுக்கும் தெரியும்.

" டின்னருக்கு...."

" அப்ப அவளையும் கூட்டிக்கிட்டுப் போயேன் நளா.. வந்ததுல இருந்து வீட்லயே தானே இருக்கா..." மகேஸ்வரி.

நளனுக்கும் எரிச்சல் வந்தது. அவளை தவிர்த்துவிட்டு செல்லமுடியாமல் தடுமாறினான். அந்த நிலைமையை ஸ்வப்னா உணர்ந்தாள்.

"வரட்டும் நளா..." என்று அவனிடம் ஸ்வப்னா சொல்ல, அடுத்த இருபது நிமிடத்தில் அவர்களோடு உடம்பை இறுக்கிப் பிடித்த ஒரு கவுனில் அடித்துப்பிடித்துக்கொண்டு கிளம்பினாள் தரங்கிணி.

அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல். பிடிவாதமாய் அங்கு போக வேண்டும் என்று அடம் செய்து வந்திருந்தாள் தரங்கிணி.

நளனின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். நளனோ பரிதாபமாய் மனைவியைப் பார்த்தான். ஸ்வப்னா அதை கண்டுக்கொள்ளாமல் உணவை ஆர்டர் செய்துக்கொண்டிருந்தாள். ஏனெனில் தரங்கிணி வம்பு செய்யத்தான் கூடவே வந்தாள் என்று அறிந்திருந்தாள் ஸ்வப்னா.

தரங்கிணி வாய் ஓயாமல் பேசினாள். கூடுதலாக தன்னைப் பற்றிய சுயவிளம்பரமாகவே அது இருந்தது. நளனின் காதுகளில் இரத்தம் வராத குறை. உணவோடு அவள் கொஞ்சமாய் சோமபானத்தையும் எடுத்தாள். நளனையும் வற்புறுத்தினாள்.

"எடுங்க அத்தான். இப்பலாம் டிரிங்ஸ் எடுக்கறது தான் கல்ச்சர். நீங்க ஏன் இப்படி சாமியாரா இருக்கிங்க.. ஓ.. வைஃப் திட்டுவாங்களா.. அதுக்குத் தான் என்னை கல்யாணம் பண்ணியிருக்கனும் என்று சொல்றது..." என்று சொல்லிவைத்தாள். ஸ்வப்னா ஒன்றும் பேசாமல் அவளை வெறித்தாள்.

"ஒரு கால் பேசிட்டு வந்திடுறேன்..." என்று எழுந்துச் சென்ற நளன் மறுபடியும் வந்து ஸ்வப்னாவின் அருகில் இருந்துக் கொண்டான்.

மேஜைக்கு அடியில் அவள் கையைப் பிடித்து சமாதானம் செய்தான்.

அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தரங்கிணியின் நெஞ்சு கொதித்தது.

ஒருவழியாய் அவர்கள் கிளம்பும் போது தரங்கிணி அரை போதையில் இருந்தாள். அவளை தாங்கிப்பிடித்து அழைத்துச் சென்றார்கள் நளனும் ஸ்வப்னாவும். கதவைத் திறந்த ஆரோக்கியராஜுக்கு கொஞ்சம் புரிந்தாற்போல் இருந்தது. அவள் சிங்கப்பூரில் இதெல்லாம் தினமும் செய்யும் கூத்துகள் என்று அவர் அறிந்திருந்தார்.

அவளை அறையில் விட்டுவிட்டு திரும்பும் போது, "நளா! இவ என்ன இப்படி தண்ணி அடிக்கிறா...." என்றாள் ஸ்வப்னா.

"அது தான் ஃபாரின் கல்ச்சர். நம்ம யாருங்கறதை மறந்துட்டு அந்த கல்ச்சர்க்கு அடிக்ட் ஆகிடுறாங்க.. சரி.. விடு.. எனக்கு சூடா ஒரு கப் பால் கொண்டு வாயேன்.." என்றான்.

ஸ்வப்னா கீழே செல்ல, அந்த இடைவெளியில் அவன் அறைக்குள் அரை மயக்கத்தில் தரங்கிணி நுழைந்தாள். அவள் நடையில் லேசான தள்ளாட்டம் இருந்தது. சத்தமின்றி வந்து கர்போட்டில் டீசேட்டை எடுத்துக் கொண்டிருந்த நளனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தாள்.

அந்த அணைப்பின் வித்தியாசம் உணர்ந்தவன், வேகமாய் திரும்பி அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான். அதில் அவள் கொஞ்சம் தெளிந்தாள்.

"என்ன பண்ற..." என்று உறுமினான்.

"அத்தான்.. ஏன் கோபப்படுறிங்க.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ..."

"வாயை மூடு..." என்று உறுமினான்.

"எனக்கு கல்யாணம் ஆச்சுங்கறது உனக்கு நினைவு இருக்கா? நான் ஸ்வப்னா ஒருத்திக்கு தான் சொந்தம்... போ போய் ஒழுங்கா தூங்கு..."

"இல்லை அத்தான்... எனக்கு நீங்க வேணும். அந்த ஸ்வப்னா தான் டிஸ்டபன்ஸா இருக்கா.. அத்தை சொன்ன மாதிரி அவளை துரத்திட்டு..." அடுத்த அறை விழுந்தது அவள் கன்னத்தில். அதை சற்றும் எதிர்பார்க்காத தரங்கிணியின் கண்களில் கண்ணீர் உருண்டோடியது.

"இப்படி அழுது மாய்மாலம் பண்ணினா நான் மனசு இறங்கிடுவேனு கனவு காணாத... என் மனசுல ஸ்வ்ப்னா ஒருத்திக்கு தான் இடம் உண்டு.. அது எத்தனை ஜென்மமானாலும்.... அடுத்த அறை வாங்குறதுக்குள்ள ஒழுங்கா கிளம்பு..."

அவள் அழுது கொண்டே வெளியேறினாள். இது எதுவுமே தெரியாத ஸ்வப்னா அப்போது தான் உள்ளே நுழைந்தாள்.

" இவ எதுக்கு இங்க வந்தா? ஏன் அழுதுக்கிட்டுப் போறா..."

" அது ஒன்னுமில்லை. அவங்க அப்பா அம்மா ஞாபகம் வந்திடுச்சாம்...." என்று அவன் சொல்வதை அப்படியே நம்பினாள் ஸ்வப்னா.

" ஏன் நளா ஒரு மாதிரி இருக்க...?"

"ஒன்னுமில்லடா..." என்றவன் தரங்கிணி சொன்ன வார்த்தையை நினைவுபடுத்திப் பார்த்தான்.

'அத்தை சொன்ன மாதிரி....' இதன் அர்த்தம் என்ன? அம்மா சொல்லித்தான் இவள் வந்தாளா? அம்மாவுக்கு ஏன் இப்படியொரு எண்ணம். ஏன் என்னை புரிஞ்சிக்கவே மாட்டிக்கிறாங்க... ஸ்வப்னா இத்தனை தூரம் இறங்கிப்போயும் அவங்க ஏன் அப்படி இருக்காங்க...? குழப்பத்துடன் தன் மார்பின் மீது உறங்கும் ஸ்வப்னாவை பார்த்தான். அசந்து உறங்கும் போதும் அவனை நிலைதடுமாறச் செய்தாள்.

"நான் ஏண்டி உன்னை இத்தனைதூரம் லவ் பண்றேன்.. எனக்குத் தெரியலயே... " என்று மெதுவாய் சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளை அணைத்துக்கொண்டு தூங்கிப்போனான்.
 
Nirmala vandhachu ???
 
Top