Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-29

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -29

நளன் கண்விழித்த போது ஸ்வப்னா அருகில் இல்லை. சிரமப்பட்டு கண்களைத் திறந்தான். காலைக் கதிரவன் தன் முகத்தை அறைக்குள் காட்டத் தொடங்கியிருந்தான். அருகில் ஸ்வப்னா இல்லாவிட்டாலும் அறை முழுக்க அவளது வாசனை நிரம்பியிருப்பதைப் போல இருந்தது அவனுக்கு. அவளை நினைத்துக் கொண்டு இருக்கையிலேயே
" குட் மார்னிங் புருஷா....." என்றவாறு ஸ்வப்னா கதவை திறந்து கொண்டு வந்தாள்.

"கு...ட்.. மார்...னி..ங்..." என்று கொட்டாவியோடு பதில் சொன்னான். ஒரு பறக்கும் முத்தத்தை உதடு குவித்து தந்து அவளை சிதறடித்தான்.

"சண்டேனா நல்லா தூங்குவியே.. எழும்புடா.. அதிசயமா உன் தங்கச்சி வந்திருக்கா....."

" என்ன அவசரம்.. கொஞ்சம் பக்கத்துல வாயேன்.. "

" எதுக்கு..?"

"எதுக்கா? இது என்ன கேள்வி.. நான் எதுக்கு கூப்பிடுறேனு உனக்கு தெரியாதா..?"

"தெரியாதே.." என்றாள் அவள்.

" நடிக்காதடி.. உனக்கு நடிப்பு வரல.." என்று எழும்பி அவளை இழுத்து கட்டிலில் சாய்த்தான்.

"டேய்.. அழுக்கு மூட்டை.. என்னை விடுடா.. "

" முடியாது ஸ்வப்பு.."

" கத்துவேன்.." என்று பயம் காட்டினாள்.

"நீ கத்தினால் நான் வாயை பொத்துவேன்.." அவன் எதை குறிப்பிட்டான் என அவளுக்கு புரிந்தது.

" அப்போ உன் தாராவை இழுத்துட்டு வந்து விட்டுடுவேன். அவ பேசியே சாகடிச்சிடுவா.."

ஸ்வப்னா அப்படி சொன்ன போது நளனின் முகம் உடனடி மாறுதலுக்கு உட்பட்டு சுருங்கியதை ஸ்வப்னா அவதானித்தாள்.

" என்னாச்சு நளா..?"

" ஒன்னுமில்ல.. குளிச்சிட்டு வாரேன்.." பதில் பேசாது அவன் போவதை யோசனையோடு பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்வப்னா.

அவனிடம் பொறுமையாக கேட்கலாம் என்று அறையை ஒழுங்கு செய்து விட்டு கீழே சென்று சஞ்சனாவோடு பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தாள்.

நளன் குளித்துவிட்டு வந்தான். ஹாலில் பேச்சு சத்தம் இருந்தது.

சஞ்சனா கணவன் ஆதித்தனோடு வந்திருந்தாள்.

"அண்ணா! எப்படி இருக்க...? என்ன அண்ணா.. கொஞ்சம் குண்டாகி இருக்க.. அண்ணியோட சமையல் எத்தனை கிலோவை ஏத்தியிருக்கு...? " என தங்கையாய் வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

" சும்மா போடி... எங்க உன் வீட்டுக்காரர்?"

"அதோ.. அப்பா கூட பேசிக்கிட்டு இருக்கார்..."

" சரி நான் பேசிட்டு வாரேன்.." என்று நகர்ந்து அவர்களோடு பேச்சில் கலந்து கொண்டான்.

"சரி வாங்க.. எல்லோரும் சாப்பிடலாம்...."என்று ஸ்வப்னா வந்து அழைத்தாள்.

அனைவரும் உணவருந்த அமர்ந்தார்கள். இட்லி பூப்பூவாய் இருந்தது.

"அண்ணி! இட்லி மல்லிப்பூ மாதிரி இருக்கு..." என்றாள் சஞ்சனா.

"அப்ப எடுத்து தலையில வைச்சிக்கோயேன் ..."என்று நளன் காலை வார ஆகித்தனும் சிரிக்க, தங்கை முறைத்தாள்.

"சரி.. சரி.. முறைக்காத..." என்ற நளன் ஸ்வப்னாவையும் விடாபிடியாய் இருத்தி சாப்பிட வைத்தான்.

சாப்பாடு மேஜையே கலகலப்பாக இருந்ததில் அனைவரும் தரங்கிணியை மறந்திருந்தனர். ஆனால் சஞ்சனா மறக்கவில்லை.

"அம்மா..! தாரா... எங்க..?" என்று சஞ்சனா கேட்கவும், தரங்கிணி கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது. அவளுடைய குட்டையான பாவாடையும், டைட்டான டீ சேர்ட்டும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனால் அவளது முகமே ஒருமாதிரியாய் இருந்தது.

"அட.. தாரா..." என்று சென்று அவள் கைகளை பிடித்துக்கொண்டாள் சஞ்சனா. சம்பிரதாய விசாரிப்புகள் முடிய அவளையும் சஞ்சனா உணவருந்த அமர வைத்தாள்.

தரங்கிணி வேண்டா வெறுப்பாக உணவை கொறித்ததை ஸ்வப்னா அவதானித்தாள். மகேஸ்வரி மட்டும் அவளை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டு இருந்தார்.

அவள் அமர்ந்த உடனே நளன் எழுந்து சென்றதை கவனித்து நளனை ஒருமாதிரியாய் பார்த்தாள் ஸ்வப்னா.

" போதும்.. பசிக்கல.. நீங்க எல்லோரும் சாப்பிடுங்க.." என்று மாப்பிள்ளை இருக்கவும் பொதுவாய் ஒரு பதிலை தந்துவிட்டு கை கழுவிவிட்டு வெளியே சென்றான்.

'என்னமோ இடிக்குதே...' என்று மண்டையை தட்டினாள் ஸ்வப்னா.

சஞ்சனா அன்று முழுவதும் இருந்தாள். மதிய உணவை ஸ்வப்னா அசத்தலாகவே சமைத்திருந்தாள். அன்றைய பொழுது பேச்சும் சிரிப்புமாக கலகலப்பாக கலந்தது. அதில் அவர்கள் மறந்தும் தரங்கிணியை சேர்த்துக்கொள்ள தயங்கவில்லை. ஆனால் அவள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நளனை நெருங்க முயற்சித்தாள். இது யாருக்கும் வித்தியாசமாக தெரியாவிட்டாலும் நளனுக்கும் அந்த இன்னொரு கண்களுக்கும் மட்டும் தெளிவாய் தெரிந்தது.

சஞ்சனா மாலையில் போகும் போது தரங்கிணியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அவளோடு செல்ல மாட்டேன் என்று மறுத்த தரங்கிணியை சஞ்சனா எப்படியோ சம்மதிக்க வைத்தாள். மகேஸ்வரி தான் கொஞ்சம் தடுத்துப் பார்த்தார்.

"நீங்க சும்மா இருங்கம்மா.. அவ இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே இருப்பா.. ஒரு ஒருவாரம் என்கூட இருக்கட்டும். உங்க அண்ணன் பொண்ணை நான் ஒன்னும் கடத்திட்டுப் போய் விற்க மாட்டேன்..."என்று பதில் சொன்னாள் சஞ்சனா.

மகேஸ்வரி கொஞ்சம் தடுமாறி பின்னர் வேறுவழியின்றி சம்மதித்தார்.

இரவு தோட்டத்தில் அமர்ந்து நிலவை ரசித்துக்கொண்டு இருந்தான் நளன். ஸ்வப்னா வந்து அருகில் அமர்ந்தாள்.

" அழகா இருக்குல நிலா..?" என்று சொன்னாள் ஸ்வப்னா.

"ம்.. ஆனா உன் அளவுக்கு இல்ல.." என்றான்.

" டேய்.. இதெல்லாம் ஓவர் டா.." என்றாள் சிரிப்பினூடே அவள்.

" நிஜமாத்தான் சொல்றேன்.. அந்த நிலா தேய்ந்து போய் காணாமல் போய் மறுபடியும் வரும்.. ஆனா இந்த நிலா ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி..!" என்று சொல்லிஅவள் காதோரம் ஒரு முத்தம் வைத்தான்.

அவனது பதிலில் அவள் சிலிர்த்தாள்.

" லவ் யூ டா.." என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

" லவ் யூ பொண்டாட்டி...!" என்று தலைகோதலின் மிகுதியாக அவள் நெற்றியில் முத்தமிட்டு இன்னும் காதலை கடத்தினான்.

சிறிது நேர அமைதியின் பின் அவள் பேசினாள்.

"நளா....." என்று அவன் காதைக் கடித்தாள் ஸ்வப்னா.

" என்ன தங்கம்?"

"இது உன் வேலை தானே....?"

"எது?"என்று தெரியாதது போல் கேட்டான்.

"தெரியாத மாதிரி கேட்காத... உங்க தாராவை சஞ்சனா வீட்டுக்கு பார்சல் பண்ணியது..."

"இல்லைனு சொன்னா நம்பவா போற.. ஆமா அது எப்படி எல்லாத்தையும் கண்டுப்பிடிக்குற...?" என்றான்.

உண்மையில் அன்று இரவு தாரா அப்படி நடந்து கொண்ட பிறகு சஞ்சனாவுக்கு கால் செய்து முழு விபரத்தையும் சொன்னவன் அவளை எப்படியாவது அழைத்துக்கொண்டு போய் விட சொல்லி சஞ்சனாவிடம் கேட்டுக் கொண்டான். அது படிதான் அடுத்த நாளே வந்து குதித்த சஞ்சனா கையோடு அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள்.

" சொல்லு.. இதெல்லாம் உன் வேலை தானே..?" என்றாள்.

" ம்.. அவ இங்க இருக்கது உனக்கு பிடிக்கல தானே..?" என்றான்.

"ம்..ம்.. நீ எப்படி என் மனசுல இருக்கதையெல்லாம் கண்டுபிடிச்சு பண்றியோ.." என்றாள்.

" அதெல்லாம் அப்படித்தான்.." என்றான்.

" நளா.. ! அம்மா எல்லாம் சொன்னாங்க... அப்பாவை பார்த்து நீ தான் பேசினதா.. அதனால் தான் அவங்க மறுபடியும் சேர்ந்தாங்க நளா.." என்று ஒப்புவித்தாள்.

"சொல்லிட்டாங்களா... உங்க அப்பாவை சொல்ல வேணாம்னு சொன்னேன். உங்க குடும்பத்துக்கே ரகசியத்தை காப்பாதுற பழக்கம் இல்லையா..."என்று பொய்யாய் திட்டினான்.

அவனை கட்டிக்கொண்டு அழுதாள் அவள்.

"இப்ப ஏன் அழுற..."

"ஏன்டா.. எதுக்கு என்னை இப்படி லவ் பண்ணி கொல்லுற...? நான் என்னத்தை செஞ்சிட்டேனு என் மேல இப்படி உயிரையே வச்சிருக்க....?" விசும்பலூடே கேட்டாள்.

" தெரியலடி... ஒன்னு மட்டும் உண்மை. ஐ லவ் யூ...." என்று அவளை அணைத்தான்.

அவன் மீது சாய்ந்து போதும் மட்டும் அழுதாள். அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தான் நளன்.

"இப்படியே எவ்வளவு நேரம் ராஜாத்தி அழுக போறிங்க...?"

" போடா.." என சிணுங்கினாள். அவனை கட்டிப்பிடித்து முத்தமழையில் குளிக்க வைத்தாள்.

அன்றைய இரவு அழகான இரவாய் இருந்தது.

~~~~~

காலை வேளைக்கு உரிய பரபரப்பு வீட்டில் இருந்தது. ஸ்வப்னா அன்று சீக்கிரமாக செல்ல வேண்டும் என்று கிளம்பியிருந்தாள். சற்று நேரம் கழித்தே கீழே வந்தான் நளன்.

"நளா.. இன்னைக்கு நீ வேலைக்கு கிளம்பலயா? " ஆச்சர்யமானார் ஆரோகியராஜ்.

"இல்லப்பா... கொஞ்சம் தலைவலியா இருக்கு.. அதோட சில விஷயங்களைப் பற்றி பேசவும் வேணும். அதான் ஒரு ஹாஃப் டேய்ல போகலாம்னு....."

"சரிப்பா.. சாப்பிட்டு மாத்திரை ஏதாச்சும் போட்டுக்க.. நானும் உன்கிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசனும்.ஸ்வப்னா கிளம்பிட்டா இல்ல..."

"ஆமாம்ப்பா.. அப்பா.. உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.." என்று எதிரில் அமர்ந்தான் மகன். அப்பாவும் மகனும் அப்படி என்ன பேசுகிறார்கள் என்று தலையை எட்டிப் பார்த்தார் மகேஸ்வரி.
 
Nirmala vandhachu ???
 
Top