Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-30

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -30

நளன் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான். அதுவரை இடையில் குறுக்கிடாமல் இருந்த ஆரோக்கியராஜ் பேசத் துவங்கினார்.

" ரோகிணி எல்லாத்தையும் சொன்னா.. பழசெல்லாம் மறந்துட்டு அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா ரொம்ப சந்தோஷம். ஒரு அண்ணனா இருந்தும் என்னால அவ வாழ்க்கைக்கு எதுவும் செய்ய முடியலயேனு ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா என் கடமையையும் சேர்த்து நீ செஞ்சிட்ட.. உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குப்பா..." அவர் கண்களில் ஜலம் ஊறியது.

இந்த கதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மகேஸ்வரி ஆச்சர்யமானார். அவருக்கு இந்த சங்கமம் பொறுக்கவில்லை.

"என்னது.. ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்களா..? இத்தனை வருஷத்துக்கு பிறகு.. இந்த வயசுல எதுக்கு...." கழுத்தை வெட்டிக்கொண்டு பேசினார்.

"போதும் மகேஸ்! நீ அதிகமா பேசுற... இரண்டு பேர் ஒன்னா சேருவதற்கு வயசு ஒரு விஷயமே இல்ல... இப்ப நான் இல்லனா நீ என்ன பண்ணுவ...? இந்த வயசுல தான் துணை தேவை. ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரனையா ஆதரவாக இருக்கவும் வேணும். அதை புரிஞ்சிக்க..." என்றார் காட்டமாகவே.

மகேஸ்வரி மீண்டும் கழுத்தை வெட்டிக்கொண்டு நகர ஆரம்பித்த போது நளன் இடைமறித்தான்.

"அம்மா! ஒரு ரெண்டு நிமிஷம் இப்படி உட்காருங்க.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்...."என்றான். அவன் குரலில் இருந்த தோரணை மகேஸ்வரியை அச்சுறுத்தியது.

தயக்கமாய் அமர்ந்தார் தாயார்.

"அம்மா! நான் நேரா விஷயத்துக்கே வாரேன்.. நான் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறிங்களா அம்மா...?"

மகேஸ்வரி மௌனமாய் இருந்தார்.

"சொல்லுங்கம்மா... நான் சந்தோஷமா வாழனுமா இல்லையா... ?"

"ஆ.. மாப்பா..."

"அப்ப ஏன்ம்மா என்னையும், ஸ்வப்னாவையும் பிரிக்க பார்க்கிறிங்க...?"

" நானா..? நான் என்ன செஞ்சேன்..?" அப்பாவியாய் கேட்டார்.

" தாரா சொன்னா.. நீங்கதானே அவளை இங்க வரவச்சிங்க... அவ மனசை ஏன்ம்மா கலைச்சு விட்டிங்க...." கோபமாக கேட்டான்.

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத மகேஸ்வரி பயத்தில் உறைந்துப்போனார். என்ன சொல்லி சமாளிப்பது என்று தடுமாறினார்.

நளனையும் ஸ்வப்னாவையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று திட்டம் நீட்டிக்கொண்டு இருந்த போதுதான் தரங்கிணி மலேசியாவில் இருந்து அழைப்பெடுத்தாள். உடனே வத்தி வைக்க ஆரம்பித்தார் மகேஸ்வரி. மகேஸ்வரிக்கு தரங்கிணியை தன் வீட்டு மருமகளா ஆக்கி ஊரெல்லாம் பிதற்றிக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட கால கனா. அதுவுமில்லாமல் தன்னுடைய பிறந்த வீட்டு சொந்தம் விட்டுப் போக கூடாது என்று விரும்பினார். அதனால் தரங்கிணியை பகடை காயாக பயன்படுத்தி நளன்- ஸ்வப்னாவை பிரிக்க திட்டம் தீட்டினார். அதெல்லாம் தவிடு பொடியாகியதை கண்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டு இருந்தார். போதாக்குறைக்கு சஞ்சனா வந்து தரங்ககணியை கையோடு அழைத்துக்கொண்டு போனதும் திட்டம் சரியத்தொடங்கியதை ஏற்றுக்கொண்டு தவித்தார்.

"நினைச்சேன்.. என்னடா வராத உன் அண்ணன் பொண்ணு வந்திருக்காளேனு.. அவ வந்ததுல இருந்தே இந்த வீட்ல ஒரே சங்கடம் தான்... இதெல்லாம் உன் வேலை தானா?" என்றார் ஆரோக்கியராஜ்.

"இல்லைங்க.. அது வந்து..." என்று அப்போதும் மறுத்தார் மகேஸ்வரி.

"அம்மா... உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புத்தான். அதுக்காக உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. வேணும்னா கால்லயாவது விழுறேன்.. அதுக்காக எங்களை தண்டிச்சிடாதிங்கம்மா... எங்க ரெண்டு பேராலயும் ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்க முடியாதும்மா... " கையெடுத்து கும்பிட்டு அவன் மகேஸ்வரியை வணங்கினான். அவன் குரலில் அழுகை வெளிப்பட்டது.

அவனது அந்த செய்கையில் மகேஸ்வரி தடுமாறிப்போனார். மகனை இத்தனை தூரம் காயப்படுத்தி விட்டோம் என்று அப்போது தான் அவர் உணர்ந்தார்.

"தம்பி....." மகேஸ்வரி தடுமாறினார்.

' ஐயோ என் புள்ளையை இத்தனை தூரம் கஷ்டப்படுத்திட்டேனா... ஏன் இப்படில்லாம் நடந்துக்கிட்டேன்.. ஸ்வ்ப்னா மேல ஏன் இத்தனை வெறுப்பை கொட்டினேன்.... ' என்று எண்ணி கலங்கினார்.

"என்னை மன்னிச்சுடுப்பா... எங்க நீ என்னை விட்டு போயிடுவியோங்கிற பயம் தான்... இத்தனை நாளா என் கைக்குள்ள இருந்த பையன் இன்னைக்கு இன்னொரு கைக்குள்ள இருக்கத தாங்கிக்க முடியலப்பா... அதான்..." என்று அவரும் அழுதார்.

அங்கு ஒரு உணர்ச்சிமயமான சம்பவம் நடந்துக்கொண்டிருந்தது.

" ஏன்ம்மா அப்படில்லாம் நினைக்கிறிங்க.. நீங்க என் அம்மா.. எனக்கு உயிர் கொடுத்தவங்க... உங்க மேல இருக்க அன்பு என்னைக்கும் குறையாதும்மா.. நீங்க ஸ்வப்னாவை என்ன செஞ்சாலும், அவ என்கிட்ட எதுவுமே சொன்னதில்ல... அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்மா.. அவளுக்கு சர்ப்போட் பண்ணி பேசுறேனு நினைக்காதிங்க. இதுதான் உண்மை..."

அவனது பதிலில் மகேஸ்வரி உண்மையை உணர்ந்தார். தன்னை நினைத்தே அவருக்கு கோபம் வந்தது. அவருக்கு ஏனோ ஆரம்பத்தில் இருந்தே ஸ்வப்னாவை பிடித்ததில்லை. அவள் குறை சொல்ல முடியாத அளவில் நடந்து கொண்டாலும் தான் ஏன் வெறுப்பை கொட்டுகிறோம் என மகேஸ்வரி சிந்திக்கலானார். எது எப்படியோ இனி அவளை நோகடிக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்வப்னா வந்துவிட்டாள். மூவரும் சட்டென அமைதியானார்கள்.

"என்ன ஸ்வப்னா! அதுக்குள்ள வந்துட்ட...?"என்றார் ஆரோக்கியராஜ்.

" என்னாச்சு ஸ்வப்னா..?" நளன் பதறினான்.

" ஒன்னுமில்ல.. லேசா தலைவலி. அதான் நானும் வந்துட்டேன்.. ஆபிஸ் போகலையா நளா..?"

" இல்ல...எனக்கும் தலைவலி.. இப்ப சரியா போச்சு.." என்றான்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்ட ஆரோக்கியராஜ் " உண்மைக்கும் தலைவலியா மருமகளே..?" என்றார்.

"இல்லை மாமா.. ஆமா மாமா.. அது வந்து..."என்று தடுமாறினாள்.

நளன் ராத்திரியே தலைவலி என்று சொன்னானே.. காலையிலும் அசந்து தூங்கினானே.. எப்படியும் வேலைக்கு போயிருக்க மாட்டான் என்று கணித்து என்று அவளும் லீவ் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். அத்தோடு இன்னொரு காரணமும் இருந்தது.

மகேஸ்வரி அழுத முகத்துடன் இருக்கவும் அவரைப் பார்த்து கொஞ்சம் யோசித்தாள். எதுக்கு வம்பு.. ஏதாவது கேட்டால் பிரச்சினை வரும் என்று எதுவும் பேசாமல் படியேறினாள்.

"ஸ்வப்னா! ஒரு நிமிஷம்...." என்றார் மகேஸ்வரி. அவள் அதிர்ச்சியாய் திரும்பினாள்.

"என்னை மன்னிச்சுடும்மா... உனக்கு நிறையவே தொல்லை தந்துட்டேன்..." தரையை நோக்கி பேசினார்.

உடனே ஸ்வப்னாவுக்கு புரிந்து போனது. நளன் ஏதோ வகுப்பு எடுத்திருக்கிறான்.

"என்ன அத்தை.. நீங்க ஏதேதோ சொல்லிக்கிட்டு... நான் அது எதையும் மனசுல வச்சுக்கிறது இல்ல.." என்று தரைக்கு பதில் சொன்னாள். அப்படியே நகர்ந்தும் விட்டாள். என்ன நிகழ்ந்தது என்று அவளுக்கு முழுவதுமாக எதுவும் புரியவில்லை.

சிறிது நேரம் கழித்தே நளன் அறைக்கு வந்தான்.

"நளா.. என்ன நடக்குது இங்க...?" என்றாள்.

"ம்... அதெல்லாம் ஒன்னும் இல்ல... உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன்."

"என்ன அது..?" என்றாள் ஆவலாய்.

"நாம திரும்ப நம்ம வீட்டுக்கே போகப் போறோம்..."

அவள் அதிர்ச்சியானாள்.

"என்ன நளா... இது.. டேய் நான் அங்க இருந்து உன்னை இங்க கூட்டிக்கிட்டு வாரதுக்காக எத்தனை கஷ்டப்பட்டேன். நீ எப்படி.. இரு.. இரு.. அத்தைக்கிட்ட ஏதாச்சும் சொன்னியா? அதான் என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டாங்களா... ஏன்டா...." கோபப்பட்டாள்.

"ஐயோ.. பொண்டாட்டி! அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. நான் அம்மாகிட்ட சில விஷயங்கள் பேசினது உண்மைத் தான். ஆனா அதுக்கும் நாம வீடு மாறி போறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. அது வேற பிரச்சனை..."

"வேற பிரச்சனையா..? ஆமா. அன்னைக்கு சஞ்சு வந்திருந்தா இல்ல.. அவளை வர சொன்னது என்னமோ நான் தான்..."

"எதுக்கு...?"

"ம்... அந்த தாராவை தூக்கிக்கிட்டு போறதுக்கு.... அப்புறம்.."

"அதான் தெரியுமே.. இன்னும் ஏதாச்சும் இப்படி பண்ணி வச்சிருக்கியா?"

அப்பாவியாய் குறுக்கும் நெடுக்குமாய் தலையாட்டினான்.

" அதென்ன அப்புறம் என்று இழுத்த..? "

" அது வந்து.." என்று சொல்ல ஆரம்பித்தான் நளன்.
 
Last edited:

" அது வந்து.." என்று சொல்ல ஆர்ம்பித்தான் நளன்.
Nirmala vandhachu ???
 
Top