Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-31

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -31( இறுதி அத்தியாயம்)

"சரி.. விஷயத்துக்கு வாரேன். சஞ்சுவோட வீட்டுக்காரர் செஞ்சுக்கிட்டு இருந்த பிசினஸ் கொஞ்சம் ஃளாப் ஆகிருச்சு போல. ரொம்ப சிரமத்துல இருக்காங்களாம். அவர் எதுவும் சொல்லல.. ஏன் சஞ்சுவே சொல்லலனா பாரேன்... அப்பாவா தெரிஞ்சிக்கிட்டாராம்.. அதனால் இந்த வீட்டை விற்று சஞ்சுவுக்கு ஒரு பங்கை கொடுக்கலாம். அது அவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு அப்பா யோசிக்கிறார்... கஷ்டமான நேரத்துல நம்ம உதவி செய்யலனா நம்ம இருந்து என்ன அர்த்தம் சொல்லு....நீ என்ன சொல்ற..?" என்று நீளமாய் பேசி முடித்தான்.

"ஒரு பங்கு இல்ல.. உன் பங்கையும் சேர்த்து கொடுக்க சொல். எனக்கு உன்னை மட்டும் கொடுக்கச் சொல். அது போதும்.." என்றாள் ஸ்வப்னா.

"இதையே தான் நானும் சொன்னேன். என் மனசு என்ன யோசிக்குமோ அதையே நீ பேசுற...." மனைவி தன்னை மட்டும் கேட்டது அவனுக்கு பூரிப்பாக இருந்தது. அவளை அடைந்ததுக்காக அந்த நிமிடம் பெருமிதம் கொண்டான்.

"நளா.. அப்ப அடுத்து என்ன செய்ய போறோம்..? "

" ம்.. தனியா போக போறோம்.." என்றான் அவன். அவள் அந்த பதிலில் குழம்பினாள்.

" நம்ம எல்லோரும் ஒன்னா தானே இருக்க போறோம்..?"

"அதுதான் இல்லை... அதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. அதை எப்படி சரி பண்றதுனு தான் தெரியல..." என்று தயங்கினான்.

"என்ன சொல்ற...?" என்று புரியாமல் விழித்தாள்.

"இல்லடா.. நம்ம ரெண்டு பேரையும் மட்டும் அங்க.. நம்ம வீட்ல போய் இருக்க சொல்றாங்க...."

"என்ன பேசுற... அத்தை மாமா நம்ம கூட இல்லாம எங்க இருப்பாங்க...?" என்று கோபப்பட்டாள்.

"நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்.. ஆனா அப்பா கேட்கவே மாட்டிக்கிறார். ஊர்ல இருக்க நம்ம பழைய வீட்ல போய் இருக்க முடிவுபண்ணிட்டார்... என்னால் முடியல... நீயே போய் பேசு..."

வேகவேகமாய் கீழேச் செல்லத்துவங்கிய ஸ்வப்னா நிதானமாய் நின்றாள்.

"மாமாகிட்ட நான் நைட் பேசிக்கிறேன். நளா.. உன்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லனும்..."

"என்னடா...?" நளன்.

"ஒன்று.. நான் வேலையை விடப் போறேன்..."

"எதுக்குடி...?"

"அது... அது.. வந்து..." தயங்கினாள். வெட்கப்பட்டாள்.

"பார்ர்ரா.. ஸ்வப்னாக்கு வெட்கம் எல்லாம் வருது.... எதுக்கு இப்ப சம்பந்தமில்லாமல் இந்த வெட்கம்..? அட சொல்லு செல்லம்.."

"அது.. வந்து... அந்த ரெண்டாவது விஷயம்... ஒரு குட்டி ஸ்வ்ப்னாவோ.. குட்டி நளனோ வர ரெடிடா..." என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

"அடக்கள்ளி! இதை இத்தனை லேட்டாவா சொல்றது....?" என சந்தோஷத்தில் அவளை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டான்.

பள்ளியில் அவள் மயங்கி விழவும் தான் அவளுக்கு யோசனை வந்தது. அவளுக்கு நாட்கள் தள்ளிப்போய் இருந்தன. உடனே அருகில் இருந்த லேப்பில் டெஸ்ட் செய்து கொண்டு வீட்டுக்கு அடித்துப் பிடித்து வந்தது இதற்குத்தான்.

"ரொம்ப சந்தோஷம் ஸ்வப்னா..." அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை. அவளை அணைத்தவாறே நின்று கொண்டு இருந்தான்.

"பையன் வேணுமா? பொண்ணு வேணுமா உனக்கு..?" என்றாள்.

"பொண்ணு தான். உன்னைப் போலவே.. குறும்பாய்... " என்று கண்ணடித்தான்.

"சரி தான்.. இப்ப உன் தலைவலி போயிடுக்குமே...." என்று சிரித்தாள்.

"போயிடுச்சு கண்ணம்மா.. " என்று அவளைத் தூக்கி சுழற்றினான்.

"விடுடா.. " என்று வெட்கத்தோடு கத்தினாள்.

~~~~~

நளன்- ஸ்வப்னாவோடு ஆரோக்கியராஜும், மகேஸ்வரியும் ஒன்றாய் இருக்க, எதிரே ரகுவரனும், ரோகிணியும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர்.

"சஞ்சுவும் இருந்திருக்கலாம்.. நல்லா இருந்திருக்கும்..." என்று ஸ்வப்னா குறைப்பட்டாள்.

"ம்.. ஆனா அவதான் ஆதித்தனை விட்டுட்டு வரவே மாட்டிக்கிறாளே..." என்று நளன் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

உணவுக்குப் பின் மகளை தனியே அழைத்தார் ரோகிணி.

" என்னாச்சு அண்ணிக்கு? என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு, எதையும் மனசுல வச்சிக்க வேண்டாம்னு சொன்னாங்க. அது இருக்கட்டும். என்ன சொல்லி உன் மாமியாரை உன் கூட உங்க வீட்ல இருக்க வைக்க சம்மதிச்ச...? அண்ணா எல்லாத்தையும் சொன்னார்...."

"அதுவா.. அம்மா.. உங்ககிட்ட் முன்னாடியே சொல்லியிருக்கனும். ஆனா இரண்டு நாளா வீட்டில் நடந்த சில குழப்பத்துல சொல்ல முடியாம போயிடுச்சு.. நீங்க .. நீங்க.. பாட்டி ஆகப்போறிங்க... "என்று சொல்லிவிட்டு அம்மாவின் மீது சாய்ந்துக்கொண்டாள்.

"அடிப்பாவி! அம்மாகிட்ட கூட சொல்லல.." என்று பொய்யாய் கோபித்துக்கொண்டார்.

"இல்லம்மா.. இன்னைக்கு டின்னருக்கு வருவிங்க தானே.. அப்ப நேர்ல பார்த்து சொல்லலாம்னு...."

"சரிடா.. சந்தோஷம். கவனமா இரு என்ன..."

"சரிம்மா.. இதை சொல்லித்தான் அவங்களை எங்க கூடவே இருக்க வைக்க சம்மதிச்சேன். இப்ப மாமியாரும் ஹாப்பி.. நானும் ஹாப்பி...."

"சந்தோஷமா இரும்மா.." என்று ரோகிணியும் வாழ்த்தினார்.

அந்த சந்தோஷமான செய்தி கேட்டு மகளை பூரிப்புடன் பார்த்தார் ரகுவரன்.

" ரொம்ப சந்தோஷம் ஸ்வப்னா.. தங்கம் போல உனக்கு புருஷன் கிடைச்சிருக்கான்.. நான் செய்யாததையும் சேர்த்து செய்றான்.. ரெண்டு பேரும் சீறும் சிறப்புமாக வாழனும்.." என்று மனமார தந்தையாய் வாழ்த்தினார். அவர் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள் நாயகி.

பால்கனியில் இருவரும் அந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார்கள்.

"ஸ்வபனா... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ..." என்றான் நளன். ஸ்வப்னா அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.

"தெரியும். அதுதான் உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே..." என்று அவன் கையில் குத்தினாள்.

"எனக்கு எல்லா சந்தோஷமும் கிடைச்சிடுச்சி.. அதுவும் உன்னால..."

"நான் ஒன்னுமே பண்ணலயே.. நீ தான் எனக்காக நிறைய பண்ணியிருக்க நளா...."

"சரி! ரெண்டு பேரும் ஏதோ பண்ணியிருக்கோம் தான்.. அப்ப நம்ம ஸ்டோரியோட என்டிங் தான் என்ன..?" நளன்.

"ம்..காதல் அழிவதில்லை...." என்று பாடினாள்.

"நீ சொல்றது சரி தான். காதல்ங்கிறது ரெண்டு பேர் மனசும் ஒன்னு சேர்ர சமாச்சாரம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நீ ரெண்டு குடும்பம் ஒன்னு சேர்ரதுனு புரியவச்சி என்னை எங்க அம்மா கூட சேர்த்த பாரு.. நீ ஏஜ்சல்டீ.. அப்ப புரிஞ்சது... அன்பு எல்லார் மீதும் எல்லையில்லாம இருக்கனும்னு... நீ எனக்கு கிடைச்சதுக்கு நான் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேன் ஸ்வப்பு...."

"அதே மாதிரி நீ என் மேல வச்சிருந்த லவ்வும் ஸ்பெஷல் நளா.. எங்கப்பப்பாவை பார்த்துட்டு நீ பாட்டுக்கு போயிருக்கலாம். ஆனா முயற்சி செஞ்சு அவங்க சேர காரணமா இருந்திருக்க.. சஞ்சுவோட ப்ராப்ளம் தீர நீயும் காரணமா இருந்திருக்க... அத்தையோட எனக்காக பேசி சமாதானம் பண்ணியிருக்க... அதையெல்லாம் விட நீ என் மேல உயிரையே வைச்சிருக்க... இது.. இந்த சந்தோஷம் போதும்டா எனக்கு... இப்ப இன்னொரு சந்தோஷமும் தந்திருக்க... " என்று தன் வயிற்றை தொட்டுப்பார்த்தாள். பூரித்துப் போனாள்.

அவனும் வந்து அவள் வயிற்றில் கை வைத்தான்.

"என் செல்லம்... நீங்க அம்மா மாதிரி நல்ல புள்ளையா இருக்கனும். என்ன..." என்று குழந்தைக்கு முத்தமிட்டான். தப்பு தப்பு அவள் வயிற்றில் முத்தமிட்டான்.

" ஒரு வழியா அந்த தாராவை பேக் பண்ணி அனுப்பிட்ட.. மறுபடியும் வர மாட்டாளே.. நான் ரொம்ப பயந்தேன் நளா.. அவளால நமக்குள்ள பிரிவு வந்துடும்னு.." என்று சொன்னாள் ஸ்வப்னா.

" லூசா நீ.. நம்மளை யாரலும் பிரிக்க முடியாது. அவளை சஞ்சனா இன்னேரம் மலேசியா ஃப்ளைட்டில் ஏற்றி விட்டிருப்பாள். அவ வரவே மாட்டா.. கவலை படாதே.." என்றான் நளன்.

" நளா.. ஏனோ தெரியல உன் மேல காதல் கூடிக்கிட்டே போகுது.. அடுத்த ஜென்மத்துலயும் உனக்கு நான் தான் பொண்டாட்டி..."

"மறுபடியுமா.." என அவன் போலியாய் நடிக்க, அவன் மீது எதை எடுத்து வீசிலாம் என பொய்யாய் தேடினாள். அவன் எழும்பி ஓடப்பார்த்தான். பின் அருகில் வரச்சொல்லி அணைத்தாள்.

"ஐ லவ் யூ கண்ணா! " என்றாள் காதலுடன்.

"நீ என் தேவதைடி..." என்றான்.

"நீயும் எனக்கு தேவதை தான்.." என்றாள்.

"யு மீன் ஆண் தேவதை..?"

" ம்... தேவதை என்பது ஆணுமல்ல.. பெண்ணுமல்ல.. அது தாங்கத் தெரிந்த நிலம்.. இப்படி யாரோ ஒரு கவிஞன் எங்கயோ கிறுக்கி வச்சிருந்தான். யார்க்கிட்ட அன்பு இருக்கோ அவங்க எல்லாரும் தேவதை தான். அது ஆணாவும் இருக்கலாம். பொண்ணாவும் இருக்கலாம். நீ எனக்கு தேவதை... என் செல்ல தேவதை. இது நம்ம தேவதை..."என்று வயிற்றைக் காட்டினாள்.

அவனும் சந்தோஷத்தில் அவனை இறுக்க அணைத்து தன் காதலை வெளிப்படுத்தினான். அவர்கள் வாழ்வில் அடுத்த அத்தயாயம் ஆரம்பமாயிற்று.

காதல். இரு மனங்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல... இரு குடும்பம்.. உறவுகள்.. உண்மைகள்.. பொறுப்புக்கள்.. கடமைகள் சம்பந்தப்பட்டது. அதை உணர்ந்த ஜோடிகள் வாழ்விலும் ஜெயிக்கின்றனர். இவர்களைப் போல. இவர்கள் வாழ்விலும் வசந்தம் வீசட்டும். காதல் அழிவதில்லை.

இந்த காதல் பௌர்ணமியும் மறையப் போவதில்லை.

~முற்றும்~
 
Last edited:

Nirmala vandhachu ???
 
Top