Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 23

Advertisement

niranjana subramani

Well-known member
Member
23.

சதாசிவம் கூறியதை கேட்ட பின் ஹார்ஷாவின் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்ட ஆதிலிங்க மூர்த்தி ,

“ தம்பி இன்னைக்கே நீங்க ரொம்ப யோசிச்சு உங்கள கஷ்டப்படுத்திக்க வேணாம். இப்போவே மணி 4 விடிய போகுது. ராத்திரி முழுக்க யாரும் தூங்க வேற இல்ல.

அதனால நீங்க ரெண்டு பேரும், அப்புறம் விசித்ரா நீயும் வீட்டுக்கு இப்போ கிளம்புங்க. மத்ததை காலையில பேசிக்கலாம்.” என கூற

“ இல்ல சார் எனக்கு வனிதா கிட்ட கொஞ்சம் கேட்க வேண்டியது இருக்கு” என ஹர்ஷா கூற

“ எதுனாலும் காலையில
ஒரு எட்டு மணி போல வாங்க. அப்போ கேட்டுக்கலாம். எப்படியும் வனிதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சுருப்பாங்க.

அதனால வீட்டுக்கு போய் நல்லா தூங்கி எழுந்துட்டு குளிச்சுட்டு” என ஆதிலிங்க மூர்த்தி கூறிக்கொண்டிருக்கையில்

“ அப்படியே சாப்பிட்டு வரோம் சார்” என கிஷோர் இடைபுகுந்து கூற

“ ஆமாம் தம்பி சாப்பிட்டு நல்லா தயாராகி வாங்க அதுக்குள்ள வனிதாவும் எழுந்து கொஞ்சம் தெளிஞ்சுருப்பா” என ஆதிலிங்க மூர்த்தி கூற

“ சரி சார் காலையில வரோம். அப்புறம் வனிதாவோட டைரியை குடுக்குறீங்களா சார்” என ஹர்ஷா கேட்க

“ அது சதாசிவத்துக்கிட்ட இருக்கு. சதா வனிதாவோட டைரி எங்க???” என ஆதிலிங்க மூர்த்தி சதாசிவத்திடம் கேட்க

“ அது எதுக்கு இப்போ???” என எரிச்சலை மறைத்து சதாசிவம் கேட்க

“ அந்த டைரி இருந்தா. இன்னும் கொஞ்சம் தெளிவா யோசிக்கவோ இல்ல எதாவது ஒரு தடயமோ கிடைக்கலாம் சார்” என ஹர்ஷா கூற

உடனே சதாசிவம் எதோ கூற வருகையில்,

“ அதான் கேட்குறாங்கள்ல அந்த டைரிய கொடு” என ஆதிலிங்க மூர்த்தி சதாசிவத்திடம் கூற

உடனே தன் காரில் இருந்த வனிதாவின் டைரியை எடுத்து ஹர்ஷாவிடம் கொடுத்தார் சதாசிவம்.

“ ஏன் மச்சி இந்த டைரியை வச்சு தான் இவரு பிளாஷ் பேக் சொன்னாரு. ஆனா டைரியை குடுக்க யோசிப்பாராம் என்னா கொடுமைடா !!!!” என கிஷோர் சலிக்க

“ சும்மா இரு கிச்சா” என கூறிவிட்டு ஹர்ஷா ஆதிலிங்க மூர்த்தியிடம்,

“ சார் உங்க கிட்ட ஒரு ரெண்டு கேள்வியை கேட்டுட்டு நாங்க அரங்கநாதபுரத்திற்கு கிளம்புறோம்”

“ சரி கேளுங்க தம்பி”

“ சார் மயிலரசிகிட்ட நீங்க நிலவரசனுக்கும் அவுங்களுக்கும் கல்யாணம் பண்ணிவைக்குறதாக நம்பிக்கையாத்தானே பேசுனீங்க. ஆனா மயிலரசி எதுனால செத்தாங்கன்னு உங்களால அனுமானிக்க முடியுதா????”

“ இல்ல தம்பி இன்னமும் என்னால புரிஞ்சுக்க முடியாத விஷயம் நான் அன்றைக்கு மயிலரசிகிட்ட கடைசியா பேசுனப்போ அந்த பொண்ணு முகத்துல அவ்வளவு சந்தோஷம்.

அப்புறம் எதுனால தற்கொலை பண்ணிருக்கும்ன்னு ஒன்னும் புரியல.” என ஆதிலிங்க மூர்த்தி
குழப்பத்துடன் கூற

“ உங்களுக்கு இப்போ மாதிரி மயிலரசி இறந்தப்போ அது கொலையா இல்ல தற்கொலையான்னு சந்தேகம் வரலையா சார்???” என ஹர்ஷா வினவினான்.

“ எனக்கு மயிலரசி இறந்தப்போ சந்தேகம் இருந்துச்சு தம்பி. ஆனா வனிதா சொன்னதை வச்சு மயிலரசி அம்மா எதுவும் பிரச்சனையை பண்ணிருப்பாங்களோ. அதனால அந்த பொண்ணு தற்கொலை பண்ணிடுச்சுன்னு நான் நினைச்சேன்.

அதோட நிலவரசன் நான்
தான் தற்கொலைக்கு தூண்டிவிட்டேன்னு சொன்னது, அப்புறம் அவன் மனநிலை பாதிக்கப்பட்டதுன்னு என்னோட பிரச்சனைகளிலேயே இந்த விஷயத்தை பத்தி நான் அவ்வளவு யோசிக்கல.

அதோட இப்போவும் நான் உங்கள விசாரிக்க சொல்றதுக்கு காரணம் மயிலரசி இறப்பு தற்கொலையா இருந்தாலும் சரி கொலையா இருந்தாலும் சரி. நான் இதுல சம்பந்தம் படலன்னு என் பிள்ளைகளுக்கு நிரூபிக்கணும். அதனாலதான் உங்ககிட்ட இதை உதவியா கேட்குறேன்” என ஆதிலிங்க மூர்த்தி சோர்வான குரலில் கூறி முடித்தார்.

“ ஓ!!! சரி சார். நான் இதை பத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கரம் விசாரிச்சு உண்மைய கண்டுபிடிக்குறேன். நாம காலையில சந்திக்கலாம். இப்போ கிளப்புறோம் சார்” என ஹர்ஷா கூறி,

ஆதிலிங்கமூர்த்தியிடம் இருந்து ஹர்சாவும் கிஷோரும் விடைபெற்று தாங்கள் வந்த வண்டியிலையே கிளம்பினர். அவர்களை அடுத்து விசித்ராவும் காரில் கிளம்பி சென்றாள்.

அவர்கள் கிளம்பி சென்ற பின் சோர்வாக அமர்ந்திருந்த ஆதிலிங்க மூர்த்தியிடம்,

“ ஆதி இது எதுக்கு தேவை இல்லாத வேலை. கல்யாண வேலையே அதிகமா இருக்கு” என ஹர்சாவும் கிஷோரும் இங்கு அரங்கநாதபுரத்தில் இருப்பது பிடிக்காததால் எரிச்சலுடன் சதாசிவம் கூற

“ இல்ல சதா அந்த மயிலரசி பொண்ணு அரசனை எவ்வளவு உயிருக்கு உயிரா விரும்பி இருக்கும். இன்னைக்கு அந்த பொண்ணு இறந்ததுக்கு உண்மையான காரணம் தெரியாம இருக்கோம்.

அந்த பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்குறதுக்கு நான் வாக்குறுதி குடுத்தும் இறந்துருக்குன்னா. நிச்சயம் எதோ முக்கியமான காரணம் இருக்கும் அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்குறேன் சதா. இனி இதை பத்தி என்கிட்டே பேசாத” என கூறி கண்களை மூடிக்கொண்டார்.

சதாசிவமும் வேறு எதுவும் கூறாது அமைதியாக ஆதிலிங்க மூர்த்தியின் அருகில் அமர்ந்துகொண்டார்.

அரங்கநாதபுரத்தில் தோட்டத்து வீட்டில் யோசனையுடன் படுத்திருந்த ஹர்ஷாவின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த கிஷோர் திடீரென,

“ ஏன் மச்சி எனக்கு ஒரு சந்தேகம்???” கத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.

கிஷோர் கத்துனதில் தன் யோசனை தடைபட்ட எரிச்சலில்,

“ ஏன்டா இப்படி கத்துற???. இவ்வளவு நேரம் தூங்காம என்ன செய்யுற???” என ஹர்ஷா வினவ

“ மச்சி எங்கடா தூக்கம் வருது. தூங்குனா யாரு கொலை பண்ணிருப்பான் ஒரே கேள்விதான் வருது”

“ அதுசரி…. சொல்லு இப்போ உனக்கு என்ன சந்தேகம்???”

“ இல்ல நாம முதல்ல அந்த ஒத்த காலு மண்டபத்திற்கு போனோம்ல அப்போ ஒரு லூசு கிழவி…”

“ ம்ப்ச்…. சொர்ணம் பாட்டி”

“ சரி… சரி… அந்த கிழவி யோகாம்பிகையோட அக்காவா???”

“ அப்படிதான் நினைக்குறேன். ஆதிலிங்க மூர்த்தி மேல இருக்க கோவத்துல இன்னும் அவர்தான் தன்னோட தங்கச்சி யோகாம்பிகையை கொன்னுட்டதா சொல்லிக்கிட்டு இருக்காங்க போல “

“ ஏன் மச்சி மயிலரசி இறப்பு கொலைன்னு நினைக்குறியா இல்ல தற்கொலைன்னு நினைக்குறியா???” என கிஷோர் ஹர்ஷாவிடம் கேட்க

“ நான் நினைக்குறது இருக்கட்டும். நீ என்ன நினைக்குற இது கொலையா இல்ல தற்கொலையா???”

“ என் மனசுக்கு மயிலரசி இறப்பு ஏன் தற்கொலையா இருக்க கூடாதுன்னு தோணுது” என கிஷோர் கூற

“ எதைவச்சு சொல்ற கிச்சா???”

“ இல்லடா மயிலரசியை அவ அம்மா நிலவரசனுக்கு கல்யாணம் செஞ்சு குடுக்க சம்மதிக்கல இல்ல. அதோட என்னதான் ஆதிலிங்க மூர்த்தி கல்யாணதுக்கு ஒத்துக்கிட்டாலும் அவுங்க அம்மா சம்மதம் இல்லாம எப்படி கல்யாணம் பண்ண முடியும்.

ஒருவேளை மறுபடியும் அம்மா பொண்ணு ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்துருக்கலாம். அதுல மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணிருக்கலாம். கடைசியா அரசன் அரசின்னு தன்னோட காதலன் பெயரையும் அவளோட பெயரையும் அங்க ஒத்தைக்காலு மண்டபத்துல கிறுக்கிவச்சுட்டு செத்துருக்கலாம்” என கிஷோர் தன யூகத்தை கூற,

“ ஓ!!!” என ஹர்ஷா எதுவும் கூறாது அமைதியாக இருக்க

“ என்ன மச்சி???. ஒன்னும் சொல்லமாட்டேங்குற”

“ இல்ல கிச்சா தொண்ணுதொன்பது சதவீதம் மயிலரசி இறப்பு கொலையாதான் இருக்கும்”

“ எதைவச்சு சொல்ற ஹர்ஷா???”

“ முதல் காரணம் நீ சொன்ன மாதிரி அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டையில மயிலரசி தற்கொலை செய்து இருந்தாள்ன்னா. நிச்சயம் முதல் நாள் அதாவது சரத் வந்து தில்லைநாயகிட்ட வந்து பேசிட்டுப்போனப்புறம் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை வந்துச்சுல அன்றைக்கே தற்கொலை செய்து இருக்கலாம்.

ஏன்னா அன்றைக்குதான் தில்லைநாயககி ஊரைவிட்டு போகணும் கல்யாணம் பண்ணகூடாதுன்னு பிரச்சனை பண்ணிருக்காங்க.

ஆனா ஆதிலிங்க மூர்த்தி பேசிட்டு போன அப்புறம் மயிலரசிக்கு நிச்சயம் அவளோட காதல் கல்யாணம் நடந்துடும்ன்னு நம்பிக்கை வந்திருக்கும் .அப்படி இருக்குறப்போ தற்கொலை பண்ணிருக்க வாய்ப்பு குறைவு”

“ சரி”

“ அடுத்து ரெண்டாவது இதோ இந்த வனிதாவின் டைரில முதல் பக்கத்தை பாரு” என சதாசிவம் கொடுத்த வனிதாவின் டைரியை ஹர்ஷா கிஷோரிடம் கட்டினான்.

அந்த டைரியின் முதல் பக்கத்தில் இருந்த போட்டோவை பார்த்த கிஷோர்,

“ டேய் மச்சி இதுல என்னடா ஒரு போட்டோ இருக்கு. அதுல வனிதாவும் கூட யாரோ ஒரு பொண்ணும் இருக்குது”

“ யாரோ இல்ல கீழே பெயர் போட்டுருக்கு பாரு”

“ ஆமாடா வனிதா மயிலரசின்னு…….” என கூறிக்கொண்டிருந்தவன் திடீரென சத்தமாக,

“ மச்சி இந்த போட்டோல வனிதா பக்கத்துல இருக்கறதுதான் மயிலரசியா????”

“ ஆமாம்டா மயிலரசிதான்.”

“ சரி இதுல என்ன இருக்கு???” என கிஷோர் குழப்பத்தோடு வினவ

“ இந்த போட்டோவை நல்ல பாரு”

“ ஏன்டா???”

“ அதுல வனிதாவோட தோற்பட்டைவரைதான் மயிலரசியின் உயரம்”

“ சரி அதை வச்சு எப்படி இதை கொலைன்னு சொல்ற???”

“ ஒற்றை கால் மண்டபத்துல அரசன் அரசின்னு கிறுக்கிருக்குள்ள”

“ ஆமாம் அந்த பெரிய தூணுல”

“ ஹ்ம்ம் ஆமாம் அந்த தூணுல இருக்க கிறுக்கல் என்னோட இல்ல உன்னோட உயரத்துல இருக்குறவங்களாலதான் எழுதமுடியும். ஆனா வனிதாவே நம்மளவிட உயரம் குறைவு அப்படி இருக்குறப்போ வனிதாவைவிட உயரம் குறைவா இருக்குற மயிலரசினால நிச்சயம் அதை எழுதி இருக்க முடியாது.

அதே மாதிரி தற்கொலைன்றது நம்ம வாழ்க்கையில் ஒரு நொடில யோசிக்காம உணர்ச்சிவசப்பட்டு எடுக்குற முடிவு. அப்போ போய் மயிலரசி சாகுறதுக்கு முன்னாடி ஒரு உயரமான ஒரு பொருள் மேலை ஏறி அரசன் அரசின்னு எழுதிக்கிட்டு இருந்திருக்கமாட்டள்.

இது கொலையா இருக்குற பட்சத்துல அந்த கொலையாளிதான் எழுதிருக்கனும். ஆனா எதுக்கு அப்படி எழுதுனான்னு தான் தெரியல.

அதோட எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு. அதை பத்தி வனிதாகிட்ட பேசிட்டே என்னால இது கொலையா இல்ல தற்கொலையான்னு உறுதியா சொல்லமுடியும்”

“ என்ன சந்தேகம் ஹர்ஷா???”

“ அதை நாளைக்கு வனிதாகிட்ட கேட்கும்போது கவனிச்சுக்கோ. இப்போ தூங்கலாம் வா”

“ மச்சி மயிலரசி இறப்பை பத்தி சொன்ன.
ஆனால் வனிதாவை கொல்ல பார்த்தது யாருன்னு உனக்கு யாருமேலையாவது சந்தேகம் இருக்கா???. இதை எப்படி, எங்க, யாருகிட்ட இருந்து விசாரிக்குறது????”

“ நீ அரங்கநாதபுரத்துக்கு வருவதற்கு முன்னாடி ஒருவேளை வனிதா இறந்திருந்தா கதிரோட மாமா ஏழுமலைதான் கொலை பண்ணிருப்பாருன்னு சொன்ன. இப்போ உனக்கு அவரு மேல சந்தேகம் இல்லையா கிச்சா???” என சற்றே சிரிப்புடன் ஹர்ஷா வினவ

“ ஏழுமலை மேல இப்போ எனக்கு சந்தேகம் இல்ல மச்சி”

“ ஏன்டா???”

“ இல்ல ஏழுமலை ஆதிலிங்க மூர்த்தியை பழிவாங்கணும்ன்னு நினைச்சுருந்தா வனிதா வீட்டை விட்டு ஓடிவந்தபிறகு கொன்னுருப்பாரு. இப்படி வீட்டுக்குள்ளையே விஷம் வச்சு கொல்ல முயற்சி பண்ணிருக்க மாட்டாரு.

அதோட எனக்கு அந்த வேலைக்கார பொண்ணு வள்ளி மேலதான் சந்தேகம்”

“ நீ சொல்றது எல்லாம் சரிதான். எனக்கும் அந்த வள்ளி மேலையும் சரத் மேலையும்தான் சந்தேகம்”

“ ஆமாம் மச்சி சரத் ஒருவேளை வனிதாவை ஒருதலையா காதலிச்சுட்டு வனிதா கிடைக்கலன்னு வள்ளி மூலம் கொல்ல முயற்சி பண்ணிருக்கலாம்”

“ சரத் வனிதாவை காதலிச்சுருக்க வாய்ப்பு இல்லை கிச்சா”

“ எதைவச்சு அப்பிடி சொல்ற????”

“ வனிதாவை சரத் காதலிச்சு இருந்தா. நிச்சயம் உடனடியா விசித்ராவை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டு இருந்துருக்கமாட்டான்.
எதோ ஒரு வகையில சரத் இந்த ஆதிலிங்க மூர்த்தி குடும்பத்தோட தொடர்புல இருக்க நினைச்சுருந்துருக்கான். ஆனா என்ன காரணம்ன்றதை அவன்தான் சொல்லணும்’

“ அப்போ அவனையும் நாம விசாரிக்கணுமா???”

“ ஆமா நாளைக்கே சரத் கிட்டயும் நாம பேசணும். இப்போ தூங்கலாம்டா”

“ எங்க கண்ணைமூடுனாலே எனக்கு யாரு கொலை பண்ணிருப்பான்னு ஒரே கேள்விதான் வருது” என கிஷோர் புலம்பிக்கொண்டே ஹர்ஷாவை காண அவன் தன் படுக்கையில் படுத்து கண்களை மூடி உறங்க ஆயத்தமானான்.

அதனை கண்ட கிஷோர் “ ஹ்ம்ஹீம்…………. இவன் நிம்மதியா தூங்குறான். ஆனா இந்த சதாசிவத்துக்கிட்ட கடந்த காலத்தை கேட்டத்துல இருந்து கொலையாளி ஏழுமலையா, கதிரா, மஞ்சரியா, சரத்தா இல்ல சதாசிவமான்னு யோசிச்சு யோசிச்சு மண்டைய பிச்சுக்குறேன்” என புலம்பிக்கொண்டே கிஷோரும் உறங்க ஆரம்பித்தான்.



ஹர்ஷாவின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்குமான விடை??????.....................
 
கொலையாளி யாருன்னு கிஷோர் மட்டுமா மண்டையைப் பிச்சுக்கிறான்?
நாங்களும்தான்ப்பா
சதாசிவத்துக்கு ஏன் இவ்வளவு எரிச்சல் வருது?
ஆனால் இன்னிக்கு ரொம்பவே சின்ன அப்டேட்டா இருக்கே
 
Last edited:
Top