Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 25 (B) (PRE FINAL)

Advertisement

niranjana subramani

Well-known member
Member


நாட்கள் வேகமாக செல்ல, செல்லியனூருக்கு கிளம்பிச்சென்று மூன்றாவது நாள் மாலை அரங்கநாதபுரத்திற்கு திரும்பினர் ஹர்ஷாவும் கிஷோரும்.

இரவு உணவை முடித்து விட்டு ஹர்ஷாவும் கிஷோரும் தோட்டத்து வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“ இப்போ என்ன செய்றது ஹர்ஷா. இன்றைக்கு DNA RESULT வந்ததுலயும். செல்லியனூர் போய்ட்டு வந்ததுலயும் குழப்பம் அதிகம் தான் ஆகிடுக்கு இப்போ.”

“ ம்ப்ச்…. நானும் அதைத்தான் யோசிக்குறேன். நாளைக்கு விசித்ராவுக்கும் சரத்துக்கும் நிச்சயம் வேற இன்னும் உண்மையான குற்றவாளியா கண்டுபிடிக்க முடியாம குழப்பத்தோடதான் இருக்கோம். ஹ்ம்ம்….” என ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கையில்

“ என்ன சார் குழப்பம்???” என விசித்ரா தோட்டத்து வீட்டினுள் நுழைந்தாள்.

“ வாங்க விசித்ரா. நாளைக்கு உங்களுக்கு நிச்சயம். இந்நேரத்துல தூங்காம இங்க வந்துருக்கீங்க” என கிஷோர் கேட்க

“ இல்ல சார் அப்பா சொன்னாங்க நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்கன்னு. அதான் குற்றவாளிய கண்டுபிடிச்சுட்டீங்களான்னு கேட்க வந்தேன்” என கூற

“ எங்க குழப்பம் தான் அதிகம் ஆகிடுக்கு”

“ ஏன் சார்??. என்ன ஆச்சு??.”

“ எங்களுக்கு ஒத்தைக்காலு மண்டபத்துல கிடைச்ச ரத்தக்கறை தில்லைநாயகியோடதுன்னு DNA TEST மூலம் தெரிஞ்சுடுச்சு” என கிஷோர் கூற

“ அச்சச்சோ அப்போ தில்லைநாயகிக்கும் எதுவும் ஆபத்து நடந்துருக்குமா???. அதை வேற கண்டுபிடிக்கணுமா??. யாரு செஞ்சுருப்பா???” என விசித்ரா கேள்விகளை கேட்க

“ அதான் தெரியலையே” என கிஷோர் சலிக்க

“ சரி அப்போ செல்லியனூருக்கு போனீங்களே என்ன ஆச்சு??. எதாவது உபயோகமான தகவல் கிடைச்சுச்சா??” என விசித்ரா கேட்க

“ எங்க….. அங்க போனதுல இருந்து குழப்பம் தான்” என ஹர்ஷா கூற

“ குழப்பமா!!!”

“ ஹ்ம்ம்… ஆமா..” என பேசிக்கொண்டிருந்த ஹர்ஷாவிற்கு போன் வர,

“ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டிருங்க. நான் இதோ வரேன்” என கூறிவிட்டு போனின் அழைப்பை ஏற்று ஹர்ஷா வெளியே செல்ல

“ என்ன குழப்பம் கிஷோர் சார்??” என விசித்ரா வினவ

“ ஹ்ம்ம் என்ன சொல்றது. செல்லியனூர்ல பரம்பரை பரம்பரையா சித்த மருத்துவம் பார்குறவங்க தான் தில்லைநாயகி குடும்பம். ஆறுமுகம் ராசாத்தி தம்பதிக்கு ரெண்டு பிள்ளைங்க மூத்தவன் தில்லைராஜன் ரெண்டாவது பொண்ணு தில்லைநாயகி.

ஆறுமுகம் சித்த மருத்துவம் பார்குறதுல நல்ல கைராசியானவரு. அதனால அவருக்கு செல்லியனூருல நல்ல செல்வாக்கு. ஆனா தில்லைராஜனுக்கு மருத்துவம் பார்க்குறதுல அவ்வளவு பிடிப்பு இல்ல. அதோட அவருக்கு மருத்துவம் வரவும் இல்ல.

சரின்னு அவருக்கு அதே ஊருல நெல் மண்டி வச்சு குடுத்துருக்காரு ஆறுமுகம். அதே நேரம் தன்னோட தங்கச்சி மகள் சுந்தரியை மகனுக்கு கல்யாணம் பண்ணிவச்சுட்டாரு.

ஆறுமுகத்துக்கு தில்லைநாயகி தான் செல்ல பிள்ளை ஏன்னா அவுங்க பரம்பரை தொழிலான சித்த மருத்துவத்தை முறைப்படி கத்துக்கிட்டாங்க. அவுங்க ஆறுமுகத்தை விட நல்ல திறமைசாலி. தன் மகளுக்கும் தன் தங்கச்சி மகன் அதாவது சுந்தரியோட அண்ணன் சந்திரசேகருக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காரு.

ஆனா அதுக்குள்ள செல்லியனூருக்கு தொழில் சம்மந்தமா நிலம் வாங்க வந்த துரைராஜ் கிட்ட காதல் வயப்பட்டு கல்யாணத்தன்னைக்கு வீட்டைவிட்டு வந்து துரைராஜை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.

இதனால மொத்தக்குடும்பமும் தில்லைநாயகியை ஒதிக்கு வச்சுட்டாங்க.உட்சபட்சமா ஆறுமுகத்தோட குடும்பத்துக்கும் அவரு தங்கச்சி குடும்பத்துக்கும் சண்டை வந்ததுல சுந்தரியும் தாய்வீட்டை பகைச்சுக்கவேண்டியதா போச்சு.

இதுல மயிலரசிக்கு 5 வயசு இருக்குறப்போ துரைராஜ்க்கு வேற ஒரு குடும்பம் இருக்குற விஷயம் தெரிஞ்சு தில்லைநாயகி ரெண்டாவது பொண்டாட்டின்றத தாங்கிக்க முடியாம ஊரைவிட்டு இங்க வந்துட்டாங்க.

மகளோட வாழ்க்கை கண்ணுமுன்னாடியே பாழாபோனதுல கொஞ்ச நாளுல ஆறுமுகம் இறந்துட்டாரு. அதுக்கு அப்புறமும் யாரும் தில்லைநாயகிய தேடலை சுந்தரி தேடவிடலைன்னு சொல்றாங்க.

ஏன்னா சுந்தரி தாய்வீடு இல்லாம இருக்க தில்லைநாயகிதானே காரணம்னு தேடவிடல. அதோட கொஞ்ச வருசத்துல ராசாத்தியும் இறந்தவுடன். அதுக்கு அடுத்த வருஷமே தில்லைராஜன் தொழிலும் நஷ்டமாக அவுங்க குடும்பமா வேற ஊருக்கு போய்ட்டங்களா” என கிஷோர் செல்லியனூரில் தாங்கள் சேகரிச்ச தகவலை கூறிமுடிக்க

“ சரி இதுல நமக்கு தேவையான தகவல் இல்ல. ஆனா குழப்புற அளவுக்கு என்ன இருக்கு” என புரியாமல் விசித்ரா கேட்க

“ இருக்கு விசித்ரா” என கூறிக்கொண்டு ஹர்ஷா வீட்டினுள் நுழைந்தான்.

“ என்ன அது???”

“ அந்த தில்லைராஜன் சுந்தரி தம்பதிக்கு ஒரு பையன் இருக்கான்”

“ சரி”

“ அவன் பெயர் அரசன்”

“ என்ன???”

“ ஹ்ம்ம் அரசன் தான். இப்போ எங்க சந்தேகமே மயிலரசி இறந்த ஒத்தைக்காலு மண்டபத்துல இருக்கு அரசன் இவனா அப்படின்றதுதான். ஆனா இதுல இன்னொரு சந்தேகம் என்னனா மயிலரசி இறப்புக்கு அரசன் தான் காரணம்னா எதுக்குகொல்லனும்???..

வனிதாவை யாரு எதுக்கு கொல்ல பார்க்குறாங்க??. அதான் தெரியல. இதுல தில்லைராஜன் குடும்பம் எங்க இருக்குன்னு வேற தெரியல” என ஹர்ஷா கூறிமுடிக்க

“ இதுல இவ்வளவு இருக்கா!!!!” என சற்றே அதிர்ச்சி ஆன விசித்ரா

“ இப்போ என்ன சார் செய்றது??”

“ பார்ப்போம் ஏதாவது
தடயம் கிடைக்கும். இப்போ நீங்க போங்க நாளைக்கு நிச்சயம் இருக்குல”

“ ஹ்ம்ம் சரி சார் நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு விசித்ரா கிளம்பிய பின் கிஷோர்,

“ ஹர்ஷா இப்போவே மணி 10.30. வாடா தூங்கலாம்”
என கூற

“ நீ போ கிச்சா கொஞ்ச நேரத்துல வரேன்” என கூறிவிட்டு வாசலில் அமர்ந்து யோசனையில் இருந்தான்.

சரி என கிஷோரும் உறங்க சென்ற பின் வாசலில் அமர்ந்த ஹர்ஷா நீண்ட நேர யோசனையுடன் அமர்ந்த நிலையிலையே உறங்கிவிட்டான்.

ஒரு மணி 11.45 போல தண்ணீர் குடிக்க எழுந்த கிஷோர் அருகில் ஹர்ஷா இல்லாததை கண்டு எழுந்து தேடி வர அங்கு வாசலில் அமர்ந்து உறங்குவதை கண்டு ஹர்ஷாவின் அருகில் வந்தான்.

" ஹர்ஷா,... ஹர்ஷா...." என தோள் தட்டி கிஷோர் எழுப்ப

உறக்கத்தில் இருந்து எழுந்த ஹர்ஷா கண்களை கசக்கிகொண்டே “ என்னடா….” என
சலிப்புடன் கேட்டான்.

“ நான் கேட்கணும்ண்டா என்னன்னு இங்க எதுக்கு இப்படி உட்கார்ந்துகிட்டு தூங்குற??. எதாவது வேண்டுதலா???” என கடுப்ப்புடன் கூற

“ ஏன்டா???. ம்ப்ச்… ஒரே யோசனையா இருந்துச்சு. அதான்” என ஹர்ஷா கூற

“ என்னடா???. என்ன யோசனை???. ஏன் ஒரு மாதிரி இருக்க??” என கிஷோர் அக்கறையாக கேட்க

“ கிச்சா நாம விசித்ராவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்துச்சுல”

“ ஆமா”

“ அது யாரு தெரியுமா??”

“ யாரு???”

“ பாண்டியனோட பையன் சேகரன்”

“ பாண்டியானா!!!???”

“ டேய் செல்லியனூர்ல நமக்கு தில்லைநாயகி குடும்பத்தை பத்தி சொன்னாருல”

“ ஆமா… ஆமா…. அந்த ஆறுமுகத்தோட பங்காளி”

“ ஹ்ம்ம். அவரோட பையன் தான் சேகரன்”

“ சரி என்ன சொன்னாரு சேகரன்???”

“ பாண்டியன் சொன்னாருலடா. என் பையன் சேகருக்கு ஒரு வேளை தில்லைராஜன் குடும்பம் எங்க இருக்கும்ன்னு தெரிஞ்சுருக்கும். அதனால நம்பர் கொடுங்க வெளி ஊருக்கு போயிருக்க என் பையன் வந்தவுடன் பேச சொல்றேன்னு “

“ ஆமா. அப்போ சொல்லிட்டாரா தில்லைராஜன் குடும்பம் எங்க இருக்குன்னு” என பரபரப்பாக கிஷோர் கேட்க

“ ஹ்ம்ம் சொல்லிட்டாரு. மாணகிரியூருல” என ஹர்ஷா சொல்ல

“ என்னது!!!!???...” என அதிர்ந்து விழித்தான் கிஷோர்

“ ஹ்ம்ம். ஆமாடா மாணகிரியூர்தான். அதோட அந்த அரசனோட பெயர் வேற சொன்னாருடா”

“ என்ன பெயருடா???”

“ அது…..” என ஹர்ஷா கூறவருகையில்

“ டேய் மச்சி!!!!... அங்க பாருடா!!!....” என அதிர்ந்து கத்தினான் கிஷோர்.

“ என்னடா???” என கிஷோர் காட்டிய திசையில் பார்த்த ஹர்ஷாவும் அதிர்ந்து நின்றான்.

அங்கு ஆதிலிங்க மூர்த்தியின் வீட்டின் மாடி அறையில் விடிவெள்ளி வெளிச்சத்தில் ஒரு நிழல் உருவத்தை மற்றொரு நிழல் உருவம் தாக்க எதோ ஒரு பொருளை கொண்டு செல்வதை பார்த்தான்.

“ மச்சி இப்போ என்ன செய்றது??” என கிஷோர் கேட்டுக்கொண்டு ஹர்ஷாவை காண,

அவன் வேகமாக ஆதிலிங்க மூர்த்தியின் வீட்டிற்கு சென்றான். ஏற்கனவே வனிதாவை காண ஆதிலிங்க மூர்த்தியின் வீட்டிற்கு சென்றதால் அந்த வழியாக சென்று அந்த நிழல் உருவங்கள் பார்த்த அறையை மாடியில் கண்டுபிடித்தான்.

உள்ளே செல்ல சுலபமாக அறை ஏற்கனவே திறந்து இருந்ததால். அந்த அறையில் வேகமாக சென்று பார்க்க,

“ எத்தனை தடவடி உன்னைய கொல்ல பார்க்குறது. ஆனா பரவா இல்ல. இன்னைக்கு என் கையால சாகணும்ன்னுதான் விஷத்துல இருந்து தப்புச்சுருக்க” என கோவமாக கத்திக்கொண்டு அங்கு விசித்ராவை அந்த உருவம் கழுத்தை பிடித்து நெறிக்கிக்கொண்டு இருந்தது.

அந்த உருவத்தின் குரல் கேட்டு “ இவனா” என ஹர்ஷா சற்றே அதிர்ந்தான்.

ஏற்கனவே சேகரன் கூறிய பெயரை வைத்து ஒருவர்மேல் சந்தேகம் கொண்ட ஹர்ஷாவிற்கு அந்த உருவத்தின் குரல் மூலம் அந்த சந்தேகம் உறுதியானது.

அடுத்து துரிதமாக அந்த உருவத்தை பிடித்து கீழே தள்ள அதேநேரம் பக்கத்தில் இருந்த மேஜையை தள்ளி விசித்ரா மயங்கி விழவும் விசித்ராவை காப்பாற்ற ஹர்ஷா
அந்த உருவத்தை பின் தொடரும் எண்ணத்தை கைவிட்டு,

“ விசித்ரா” என சற்றே உரக்க அழைத்து வேகமாக அவளை தூக்க சென்றான்.

அதேநேரம் சத்தம் கேட்டு ஆதிலிங்கமூர்த்தி மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள் என அனைவரும் அந்த அறைக்கு விரைந்தனர். கிஷோரும் அங்கு வந்து சேர்ந்தான்.

உடனடியாக விசித்ராவை தூக்கி கீழே நடுக்கூடத்திற்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தனர். அதன் பலனாக ஒரு இருபது நிமிடங்களில் விசித்ரா கண் விழித்தாள். அதனை கண்டு ,

“ நல்ல வேளைமா உனக்கு ஒன்னும் ஆகல. இப்போ உனக்கு ஒன்னும் இல்லையே??.நாம மருத்துவமைக்கு போவோமாமா??” என ஆதிலிங்க மூர்த்தி விசித்ராவிடம் பதட்டத்துடன் வினவ

“ இல்லப்பா நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்ல” என தன் கழுத்தை தடவிக்கொண்டே விசித்ரா சொல்ல

“ விசித்ரா கழுத்துல வலி இருக்கா??” என ஹர்ஷா கேட்டான்

“ இல்ல சார் கொஞ்சம்தான் வலிக்குது. அதான் அவன் கழுத்தை பிடிக்கும் போதே நீங்க வந்துட்டிங்களே” என விசித்ரா கூற

“ ஏன்மா என்னாச்சு??. இந்த கிஷோர் தம்பி வேற யாரோ உன்னைய கொல்ல பார்த்தாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. நான் பதட்டத்துல கவனிக்கல” என ஆதிலிங்க மூர்த்தி கூறிக்கொண்டிருக்கையில் வீட்டினுள் நுழைந்தனர் சதாசிவமும் சரத்தும்.

“ இவுங்க எப்படி இந்நேரத்துல இங்க??” என கிஷோர் சதாசிவம் மற்றும் சரத்தை பார்த்துக்கொண்டு கேட்க

“ நான் தான் தம்பி போன் போட்டு சொன்னேன் இப்போ நடந்ததை சொல்லி நாளைக்கு நிச்சயம் வேணாம்ன்னு. அதான் பார்க்க வந்துருக்காங்க போல” என ஆதிலிங்க மூர்த்தி கூற

“ ஓ!!” என கிஷோர் ஹர்ஷாவை காண, ஹர்ஷாவின் பார்வை ஒருவரை மட்டுமே நோக்கி கொண்டிருந்தது.

‘ யாரை இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறான்’ என கிஷோர் ஹர்ஷாவின் பார்வையின் திசையை பார்த்து அங்கு இருந்தவரை,

‘ என்ன இவனை முன்ன பின்ன பார்க்காத மாதிரி இந்த ஹர்ஷா பார்த்துகிட்டு இருக்கான்’ என மனதில் கிஷோர் எண்ணிக்கொண்டிருக்கையில்,
சதாசிவம் குரலில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்டான்.

“ என்னமா நடந்துச்சு??” என சதாசிவமும் விசித்ராவிடம் கேட்க

“ இல்ல எனக்கு தூக்கம் வரலைன்னு மொட்டை மாடிக்கு போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு 11.30 மணிபோல என் அறைக்கு வந்தேன். அறைக்கு வந்த கொஞ்ச நேரத்துல திடீர்ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு.

என்னன்னு பார்த்தா யாரோ மூஞ்சில துணியை கட்டி முகத்தை மறைச்சுக்கிட்டு பெரிய கட்டையை வைத்து அடிக்க வந்தாங்க. அதுல இருந்து நான் தப்புச்சு வெளிய வரதுக்குள்ள என் கழுத்தை பிடிச்சு நெறிக்க ஆரம்பிச்சுட்டான்.

எதோ சொல்லிக்கிட்டு இருந்தான் பயத்துலையும் பதட்டத்துலயும் என்னால கவனிக்க முடியல அதுக்குள்ள ஹர்ஷா சாரும் வந்து அவனை தள்ளிவிட்டார் அதுவரை தான் எனக்கு நினைவு இருக்கு”
விசித்ரா கூறி முடிக்க

“ நம்ம வீட்டுக்குள்ள புகுந்து உன்னைய கொல்ல பார்த்துருக்கான்னா என்ன தைரியம். ஆனா எதுக்கு உன்னைய கொல்ல பார்க்கணும்”என ஆதிலிங்க மூர்த்தி கேட்க

“ அது எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம். இப்போ பிள்ளைக்கு குடிக்க ஏதாவது குடுடா. பிள்ளை ரொம்ப சோர்ந்துருக்கு” என சதாசிவம் ஆதிலிங்க மூர்த்தியிடம் கூற

“ ஆமாடா இதோ சொல்றேன்” என ஆதிலிங்க மூர்த்தி அங்கு கூடி நின்றுகொண்டிருந்த வேலைக்காரர்களை பார்த்து எதோ கூற வருகையில்,

அதுவரை அமைதியாக இருந்த ஹர்ஷா “ சார் நான் கொண்டு வர சொல்றேன் இருங்க” என இத்தனை நேரம் தான் பார்த்துக்கொண்டிருந்தவரை நோக்கி சென்ற ஹர்ஷா

“ அரசன் குடிக்க எல்லார்க்கும் எதாவது கொண்டுவாங்க” என கூற

“ சரி” என தலையசைப்புடன் அந்த நபர் சமையல் அறையை நோக்கி இரண்டடி வைத்தவர் அதிர்வுடன் திரும்பி ஹர்ஷாவை காண

“ இவன் பெயர் அரசன் இல்லையே தம்பி” என ஆதிலிங்க மூர்த்தி ஹர்ஷாவிடம் கூற

“ இவன் அரசனா!!!!!” என கிஷோரும் விசித்ராவும் அதிர்ச்சியுடன் அந்த நபரை நோக்கினர்.


அந்த நபர் யார்????....


இறுதி அத்தியாயத்தில் பார்ப்போம்



( SORRY FOR THE DELAY FRIENDS AND THANKS FOR COMMENTS &LIKES:love::love:)

 
தில்லை நாயகன் மகன் தான் இவனா... எதுக்கு இப்படி எல்லாம் நடக்குது
 
யாரா இருக்கும் அந்த அரசன்.....இப்டி சஸ்பென்ஸ் வைக்ககூடாதுபா...சீக்கிரம் ஃபைனல் எபியைக் குடுங்க
 
Top