Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 3

Advertisement

niranjana subramani

Well-known member
Member
3.

கதிர் சொன்ன அனைத்து விஷயங்களையும் வீட்டு தோட்டத்தில் அமர்ந்து ஹர்ஷா யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த கிருஷ்ணஸ்வாமி “என்ன ஹர்ஷா தீவிரமான யோசனையில
இருக்க?”
என வினவ ,

“ இல்லப்பா ஒரு கேஸ் விஷயமா யோசிச்சுட்டு இருந்தேன்”

“ ஓ !சரி காலையில நான் கேட்டதுக்கு என்ன முடிவு பண்ணிருக்க?”

“ அப்பா அதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லணும்” என ஹர்ஷா கூற ,

“ என்ன ஹர்ஷா?”

“ இன்னைக்கு மாலையில கதிர்ன்னு ஒருத்தர சந்திச்சேன்” என அனைத்து
விவரங்களையும் கூறினான் .

அதை கேட்டு கொண்டிருந்த கிருஷ்ணஸ்வாமி “சரி இப்போ நீ என்ன செய்ய போற?” என வினவ

“ அது இந்த கேஸை என்னோட சொந்த முயற்சியில கண்டுபிடிக்கப்போறேன். இதுல நான் வெற்றி அடைஞ்சுட்டேனா நீங்க சொன்ன மாதிரி நானே பிரைவேட் டிடெக்ட்டிவ் சொந்தமா ஆரம்பிக்கறேன்.

இல்ல தோல்வின்னா நான் இப்போ செய்றமாதிரி தொடர்ந்து வேலைய கத்துக்குறேன்”
என திடமான குரலில் தன் முடிவை ஹர்ஷா கூறினான்.

“ சரி ஹர்ஷா உன் முடிவை நான் ஏத்துக்குறேன்.
எந்த ஒரு மனிதன் தன்னுடைய திறமையை தானே சுய பரிசோதனை செய்றானோ நிச்சயம் வாழ்க்கையின் முன்னேற்றத்தை நோக்கி போறான்னு அர்த்தம். நீ வெற்றி அடைய என்னோட வாழ்த்துகள் ஹர்ஷா”

“ தேங்க்ஸ் ப்பா.”

“ சரிடா எப்போ ஆரம்பிக்க போற உன்னோட விசாரணையை?.”

“ நான் அரங்கநாதபுரத்துக்கு நாளைக்கு இரவு கிளம்புறதா இருக்கேன்ப்பா. ஒரு பத்துநாள் அங்க இருந்து வனிதா பற்றி , அப்புறம் அந்த ரத்தக்கறை பற்றி கண்டுபிடிக்கலாம்னு இருக்கேன்பா”.

“ சரி உன்னோட உதவிக்கு?”

“ கிச்சாவ கூட்டிட்டுபோலாம்னு இருக்கேன்ப்பா”.

“ யாரு?........”

“ அதான்ப்பா கிஷோர்.”

“ உன்கூட காலேஜ்ல படிச்சானே அவனா?”

“ அவன்தான்ப்பா. இப்போ நம்ம வக்கீல் கருணாகரன் அங்கிள்கிட்ட ஜூனியரா இருக்கான்ப்பா.

“ ஓ! சரி ஹர்ஷா. அப்புறம் பத்துநாளைக்கு நீ உன் நண்பர்களோட சுற்றுலா போறதா உன் அம்மாகிட்ட சொல்லிடலாம் என்ன?”

“ சரிப்பா”

“ சரி ஹர்ஷா கூடிய விரைவில் முடிக்கப்பாரு.இப்போ நேரமாச்சு போய் தூங்குப்பா” என கூறி விட்டு உறங்க சென்றுவிட்டார்.

அதன் பின் ஹர்ஷா கிஷோர்க்கு போன் செய்தான்.

“ ஹலோ கிச்சா”.

“ டேய் ஹர்ஷா சொல்லுடா. என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?”

“ அது ஒன்னும் இல்லடா ஒரு கேஸ் விஷயமா ஒரு ஊருக்கு போய் அங்க ஒரு பத்துநாள் இருந்து இன்வெஸ்டிகடே பண்ணப்போறேன். நீயும் வரியாடா?”.

“ டேய் வரேன்டா”.

“ நெஜமாவா நான் கூட நீ ஒத்துக்கமாட்டன்னு நினைச்சேன்”.

“ ஏண்டா?”

“ இல்ல உங்க அப்பா என்ன சொல்லுவார்ன்னு தான்டா”

“ அது எல்லாம் நான் பார்த்துக்கிறேன். எத்தனை மணிக்கு நாளைக்கு போகணும் அதை மட்டும் சொல்லு?”.

“ சரிடா நாளைக்கு இரவு 10 மணிக்கு பேருந்துடா”.

“ஓகே டா நாளைக்கு சந்திக்கலாம்
பை”.

“பை
டா”.

மறுநாள் இரவு ஹர்ஷா ராதையை சமாளித்துவிட்டும்: கிஷோர் அவன் அப்பா நாகராஜனையும் சமாளித்துவிட்டு அரங்கநாதபுரத்தை நோக்கி புறப்பட்டனர்.

பேருந்தின் பின் இருக்கையில் ஹர்ஷாவும் கிஷோரும் அமர்ந்தார்கள்.

“ டேய் எப்படிடா உங்க அப்பாவ சமாளிச்ச?”என ஹர்ஷா வினவ

“ அதுவா ஒரு கேஸ் விஷயமா கருணாகரன் சார் என்ன மதுரைக்கு அனுப்புறதா சொன்னே”

“ அப்போ கருணாகரன் அங்கிள் கிட்ட?”

“அவர்க்கிட்ட உண்மைய சொன்னே அவர் ஓகே ன்னு சொல்லிட்டார்”

“ஓ……”

“சரி நீ சொல்லு எந்த ஊருக்கு போறோம் என்ன கேஸ்?”
என கிஷோர் வினவ,

“அரங்கநாதபுரம் என்ற ஊருக்கு போறோம். அங்க ஒரு பொண்ண காணோம்டா அந்த பொண்ணு இறந்திருக்கலாமோன்னு ஒரு சந்தேகம்” என அனைத்து விவரங்களையும் கூறிக்கொண்டிருக்கும் போது,

நடத்துனர் வந்து, “எந்த ஊருக்கு போகணும்” என கேட்க,

“ மாணகிரியூர்க்கு ரெண்டு டிக்கெட்” என கூறி ஹர்ஷா டிக்கெட் எடுத்தான். நடத்துனர் சென்ற பின்,

“ டேய் அரங்கநாதபுரம்ன்னு சொன்ன இப்போ எதோ ஊருக்கு டிக்கெட் எடுக்குற?”
என கிஷோர் சந்தேகத்துடன் கேட்டான்.

“ மச்சி இந்த பஸ் காலையில 4 மணிக்கு மாணகிரியூர்க்கு போயிடும்டா.
அங்க இருந்து இன்னொரு டவுன் பஸ் பிடுச்சு போகனும்டா அரங்கநாதபுரத்துக்கு”.

“அந்த பஸ் எத்தனை மணிக்குடா?”

“ அங்க காலையில 5 மணிக்கு. ஒரு 5.30 மணிக்கு எல்லாம் அரங்கநாதபுரத்துக்கு போயிரலான்டா.
அப்புறம் இன்னொன்னு தெரியுமா?.......”என ஹர்ஷா புன்சிரிப்புடன் வினவ,

“ என்னடா?.......”

“ அந்த அரங்கநாதபுரத்துல இருந்து வெளியூருக்கு போகணும்னா மாலையில
5.30 க்குத்தான் பஸ் தெரியுமா?”
என ஹர்ஷா கூற,

“அடேய்!!!... என்னடா சொல்ற?... காலையில அந்த ஊருக்கு போனா சாயங்காலம் தான் திரும்ப வரலாமா???” என கிஷோர் அதிர்ச்சியுடன் வினவ

“ ஆமா அதுவும் இப்போ ஒருவருஷமா தானாம்………. அந்த ஊரு பண்ணையார் கஷ்டப்பட்டு ஏற்பாடுபண்ணிருக்கார்”.

“அப்போ வெளியூருக்கு போகணும்னா என்னடா பண்ணுவாங்க?” என கிஷோர் கேட்க

“ அதிகபட்சம் சைக்கிள், இல்லைனா மாட்டுவண்டில மாணாகிரியூர்க்கு வந்து அங்க இருந்துதான் எல்லாரும் வெளியூருக்கு போறாங்க. அதுமட்டும் இல்லாம அரங்கநாதபுரத்துல ஹாஸ்பிட்டலும் கிடையாது.

எல்லாமே கை மருத்துவம்தான். பக்கத்துல இருக்குற காட்டுல இருந்து மூலிகை எடுத்து வந்து சித்த மருத்துவம் பார்த்துக்குறாங்க.

ரொம்ப முடியாத பட்சத்துக்கு வெளியூருக்க்கு போய் மருத்துவம் பார்ப்பாங்களாம்”
என தனக்கு தெரிந்த தகவல்களை ஹர்ஷா சொல்லி முடித்தான்.

“ இது எல்லாம் எப்படிடா தெரியும்?”.

“ ஏன்டா தெரியாத ஒரு ஊருக்கு போறதா இருந்தா கொஞ்சமாவது அந்த இடம் பத்தி தெரிஞ்சுக்கணும். இப்படியா உன்னை மாதிரி எந்த ஊரு பேருன்னு தெரியாமக்கூட கிளம்பிவரது”
என ஹர்ஷா கிண்டலுடன் கூறினான்

“ ஏன்டா சொல்லமாட்ட. நண்பன் கேட்குறானேன்னு நாகுகிட்ட பொய்யெல்லாம் சொல்லி வந்தா…….. இவரு ஒரு பட்டிக்காடு கிராமத்துக்கு கூட்டிட்டு போவாராம்.

இதுல நாங்க பேரு கேட்கலைன்னு கிண்டலு……..” என சலிப்புடன் கூறினான் கிஷோர்.

“ அது யாருடா நாகு?.....”

“ ஹ்ம்ம்ம் its my daddy mr.
நாகராஜன்” என கொட்டாவியுடன் கூறிவிட்டு கிஷோர் உறங்க ஆரம்பித்தான்

ஹர்ஷாவும் சிரிப்புடன் உறங்க போகும்போது திடீரென கிஷோர், “டேய் அப்புறம் எப்படி கதிர் IT ல வேலை பார்க்கிறார்?”
என கேட்டான்.

“ கதிரோட அம்மா கதிருக்கு 9 வயசா இருக்கும்போது உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க. அப்புறம் அவரோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டார்.

அதோட கதிரோட தாய்மாமா ஏழுமலை அவனை தன்னோட ஈரோட்டுக்கு கூட்டிட்டுப்போய்ட்டார். அங்கயே படிச்சுட்டு இப்போ கோயம்புத்தூர்ல IT கம்பெனில வேலைபார்க்குறான்”
என ஹர்ஷா கூறினான்.

“அப்போ எப்படிடா வனிதாவை சந்திச்சார்?”
என மறுபடியும் கிஷோர் கேள்வி கேட்க.

“ஒவ்வொரு வருஷம் ஊரு திருவிழாவுக்கும் வருவாராம். அப்படி நாலு வருசத்துக்கு முன்னாடி வந்தப்போ வனிதாவை பார்த்துருக்கார். அப்புறம் என்ன ஒரே காதல் தான்.”

“ ஓ!!! அப்போ ஏழுமலைக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”

“ டேய் அவருக்கு கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்குடா”.

“ அப்போ கதிர் காதலிச்ச விஷயம் ஏழுமலைக்கு தெரியுமா?”

“ தெரியும். கதிரும் வனிதாவும் ஓடி போறதா முடிவு பண்ணுனதுக்கு அப்புறம் இவர்கிட்டதான் உதவி கேட்டுருக்கான். முதல கோவப்பட்டாராம் அப்புறம்
ஒத்து கிட்டாராம்.

அப்புறம் இன்னொன்னு கதிர் வனிதாவை ஒற்றை கால் மண்டபத்திற்கு வர சொன்னதுல இருந்து கோயம்பத்தூர் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ண ஏற்பாடு செஞ்சவரைக்கும் ஏழுமலைக்கு தெரியும்.

அவரும் இவனுக்கு உதவி செஞ்சுருக்காரு. ஆனா வனிதா காணாம போன விஷயத்தை கதிர் ஏழுமலையிட்ட சொல்லல”
என ஹர்ஷா சொல்லி முடித்தான்.

“ ஏன் சொல்லல?” கிஷோர் கேட்க,

“ வனிதாவுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாம கதிர் யாருக்கு சொல்ல விரும்பலையாம். அதனால தான் பிரைவேட் டிடெக்ட்டிவ் மூலம் கண்டுபிடிக்க முயற்சி செய்றார்”

“ அப்புறம்” என மீண்டும் கிஷோர் ஆரம்பிக்கும் போது,

“ டேய் இது எல்லாம் எப்படிடா உனக்கு தெரியும்?
அதானே கேட்க போற இரு அதையும் நானே சொல்லிடுறேன். ஒருத்தர் கேஸ் குடுக்கவந்தா அவரை பத்தின தகவல்களும் அவர் சொன்ன புகாரும் உண்மையான்னு முதல நாம தெரிஞ்சுக்கணும்.

அதனால எப்போ இந்த கேஸ் நான் இன்வெஸ்ட்டிகேட் பண்ணறதா முடிவு
பண்ணினேனோ; அப்பவே என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்குற நண்பரவச்சு எல்லா தகவல்களையும் முடிஞ்சவரைக்கும் சேகரிச்சுட்டேன்” என கூறி முடித்தான் ஹர்ஷா.

“ நான் அதை கேட்க வரலடா” என கிஷோர் கூற,

“ பின்ன என்னடா” என சலிப்புடன் கேட்டான் ஹர்ஷா.

இல்ல கொக்கு தலையில வெண்ணையை வச்சு பிடிச்ச கதையால இருக்கு” என கிஷோர் கூற,

“ என்னடா சொல்ற” என புரியாமல் கேட்டான் ஹர்ஷா.

“ இல்லடா கொக்கு தலையில வெண்ணையை வச்சு வெயில்ல நிக்க வச்சா வெண்ணை உருகி கொக்கு கண்ண மறைச்சுடுமா.

அப்புறம் ரொம்ப சுலபமா கொக்க பிடிச்சுரலாம்”
என கிஷோர் கூறி கொண்டிருக்கும்போது இடைமறித்த ஹர்ஷா,

“ ஏண்டா அதான் கொக்க பிடிச்சாச்சே அப்புறம் எதுக்கு இந்த வெண்ணை எல்லாம் வைக்கணும்” என கடுப்புடன் ஹர்ஷா கேட்க,

“ ஹ்ம்ம் அப்படித் தான் இப்போ நீயும் பண்ற” என கிஷோர் கூற

“ டேய் எனக்கு நீ என்ன சொல்லுறன்னு சத்தியமா புரியல…..
இப்போ நான் என்னசெய்றேன்???”

“ இல்லடா வனிதா இறந்துருக்கபட்சத்துல கொலைகாரன் ஏழுமலையா இருக்கலாம். அவரை போய் முதல விசாரிக்காம, இந்த பட்டிக்காட்டுக்கு ஏன்டா பத்துநாள் தங்கி இருக்கணும்?” என கிஷோர் கேட்க

“ எதைவைத்து கொலைகாரன் ஏழுமலைன்னு சொல்ற. காரணம் என்ன?” என கடுப்புடன் ஹர்ஷா கேட்டான்.

“அப்படி கேளு ஏழுமலையோட பொண்ண கதிருக்கு கொடுக்க நினைச்சுருக்கலாம்; இன்னொன்னு கதிரோட காதல் விஷயம் தெரிஞ்ச ஒரே ஆளு ஏழுமலைமட்டும் தான்.

அதனாலே கதிரும் வனிதாவும் எப்பவும் சந்திக்கிறதா சொன்னியே அது என்ன
இடம் ?

“ ஒற்றை கால் மண்டபம்”

“ ஆ……. அந்த இடமும் ஏழுமலைக்கு தெரியும்.
அப்போ அந்த இடத்துக்கு ஏழுமலை முன்னாடியே போய் காத்திருந்து, வனிதாவை கொன்னுருக்கலாம் இல்லையா?என கிஷோர் வினவினான்”





வினாவிற்கான விடை !!!!!!………….
 
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனாதேவி சுப்பிரமணி டியர்
 
Last edited:
....சூப்பர் எனக்கு ஏழுமலை மேல ஒரு சந்தேகம்.... வனிதா கல்யாணம் பண்ண வரவே இல்ல வீட்டுளையும் இல்ல இன்னுமா வனிதா என்ன ஆனா அப்படினு கதிர் கிட்ட கேக்கமா இருக்கார்...
 
Top