Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 8

Advertisement

niranjana subramani

Well-known member
Member
8.

“ நிலவரசனா!!!!…… எப்படி???” என எதோ ஹர்ஷா கேட்க வரையில்

“ தம்பி எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ போங்க” என கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார் ஆதிலிங்க மூர்த்தி.

' என்னது வனிதாவை சந்திச்சு பேசமுடியல, நிலவரசனை பத்தியும் தெரிஞ்சுக்க
முடியல’ என எண்ணிக்கொண்டு ஹர்ஷா கீழ் இறங்கி சென்றான்.

தன்னறைக்குள் நுழைந்த ஆதிலிங்க மூர்த்தி 'என்னோட பிடிவாதத்தால ஒரு உயிர் போயி, என் மகனோட நிலைமையும் இப்பிடி ஆகிடுச்சே.

ஒருவேளை நான் மட்டும் கொஞ்சம்விட்டு கொடுத்துருந்தா என் மகனும் மயிலரசியும் நல்லா இருந்துருப்பாங்ளோ.

ஆனா ஒரு தகப்பனா என்னோட ஆசை ஒன்னும் தப்பு இல்லையே’ என தன்போக்கில் எண்ணிக்கொண்டிருக்கும்போது அதனை தடை செய்யும் விதமாக “ ஐயா” என்ற மாரியின் அழைப்பு இருந்தது.

“ என்ன மாரி அரசன் தூங்கிட்டானா???” என அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த மாரியிடம் ஆதிலிங்க மூர்த்தி வினவ

“ இல்லீங்கய்யா. அந்த சிவப்பு கலரு டப்பாவுல இருக்குற மாவ கொஞ்சூண்டு பாலுல கலந்து குடுத்தேனுங்க அப்பிடி இருந்தும் அரைதூக்கத்துல மயிலு மயிலுன்னு புலம்பிட்டு இருக்காருங்கய்யா”

“ ஓ!!!” என ஆதிலிங்க மூர்த்தி
மீண்டும் எதோ சிந்தனை வயப்பட,

“ ஐயா” மீண்டும் மாரி அழைத்தான்.

“ என்ன மாரி நீ இன்னும் போகலையா???”

“ அது வந்து நா ஒன்னும் உங்கட்ட கேட்கணுங்கய்யா”

“ கேளு மாரி.
ஆனா நடுராத்திரில வீட்டுக்குள்ள புகுந்தும் நான் ஏன் இன்னும் அந்த பசங்கள துரத்தாம்ம இருக்கேன்னு கேட்காத அது உனக்கு தேவை இல்லாத விஷயம்” என கண்களில் கண்டனத்துடன் ஆதிலிங்க மூர்த்தி கூற

‘ இதுக்கு மேல என்னத்த கேட்க’ என எண்ணிக்கொண்டு,
“ அதுவந்து பால் கொண்டுவரட்டுமா ஐயா????”

“ இல்ல வேணாம் நீ போ”

“ சரிங்கய்யா” என கூறிவிட்டு மாரி சென்றுவிட ஆதிலிங்க மூர்த்தியும் பழைய நினைவுகளோடு உறங்க ஆயத்தமானார்.

மாடியில் இருந்து கீழிறங்கி படிக்கட்டுக்கு அருகில் தூங்கிகொண்டிருந்த கிஷோரை தட்டி எழுப்பி தோட்டத்து வீட்டிற்கு அழைத்து சென்றான் ஹர்ஷா.

“ டேய் மச்சி என்னடா போனவுடன் திரும்ப வந்துட்ட??. வனிதாவை பார்த்தியா பேசினியா??. நாம எப்போ ஊருக்கு போறோம்?? என கிஷோர் கேள்வி மேல் கேள்வி கேட்க

ஹர்ஷா அமைதியாக எதோ சிந்தனையில் இருந்தான்.

அதனை கண்டு கிஷோர் ஹர்ஷாவின் காதில் “டேய்!!” என கத்த

" டேய்!! எரும!!! என்னடா எதுக்கு கத்துற??”

" பின்ன என்ன?? நான் எவ்வளவு நேரமா கேட்டுட்டு இருக்கேன் நீ ஒன்னும் சொல்லாம இருக்க”

" அதுக்கு முன்னாடி நீ ஒன்னு சொல்லு. நீ எதை பத்தியும் கவலைபடமா தூங்கிட்டு இருக்க யாருகிட்டையாவது மாட்டிருந்தா என்ன பண்ணிருப்ப??”

“ இல்ல மச்சி லேசா கண்ணை மூடி பார்ப்போமேன்னு மூடுனே தூங்கிட்டேன் போல.. ஹி… ஹி… ஹி….” என அசடு வழிய கிஷோர் சிரிக்க

"நீ எல்லாம் இருக்கியே…” என ஹர்ஷா எதோ சொல்லி திட்ட வரையில்

" மச்சி என்னை அப்புறம் திட்டிக்கலாம். முதல்ல வனிதா என்ன சொன்னா?? நாம எப்போ ஊருக்கு கிளம்புறோம்???”
என கிஷோர் ஹர்ஷாவை இடையிட்டு வினவ

" நான் எங்கடா வனிதாவை பார்த்தேன் அவுங்க அப்பா ஆதிலிங்க மூர்த்தியைல பார்த்துட்டுவறேன்”

“ என்னது??? பண்ணையாரையா???....... எதுக்குடா அவரை பார்த்த????”

" ஹ்ம்ம் ஆசைப்பாரு பண்ணையாரை பார்க்கணும்ன்னு……… போடாங்க…….. நான் வனிதாவை பார்க்க போனா பண்ணையார்ட்ட மாட்டிகிட்டேன்”

" எப்படிடா?????”
என கிஷோர் வினவ

ஹர்ஷா பண்ணையார் வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான்.

" என்னது??? நிலவரசனா?? அவன் யாருடா ???”

" பண்ணையாரோட பையனாம். எப்படி இந்த மாதிரி மனநிலை சரி இல்லாமல் போயிருக்கும். இந்த மயிலரசி எப்படி செத்துருக்கும்ன்னு
ஒரே யோசனையா இருக்கு.”

" என்னடா வனிதாவை பத்தி தெரிஞ்சுக்க இந்த ஊருக்கு வந்தா மயிலரசி நிலவரசன்னு தேவை இல்லாதவங்களை பத்தி நீ தெரிஞ்சுக்க முயற்சி பண்ற”
என கிஷோர் சலிப்புடன் கூற

" இல்லடா……”

" நீ எதுவும் சொல்ல வேணாம் நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.
பண்ணையாரு உன்னை ஒன்னும் சொல்லன்னு சொல்றியே ஏன்??? ஒருவேளை நம்மள பத்தி தெரிஞ்சுருக்குமோ??” என கிஷோர் கேட்க

" இருக்கலாம்”

" எப்படி சொல்ற ஹர்ஷா????”

" நல்ல யோசிச்சுப்பாரு ஒரு ஊரு தலைவர்
நாம கோவில் பத்தி ஆராய்ச்சி கட்டுரை எழுத வந்துருக்கோம்ன்னு சொல்றோம் அதை பத்தி ஒரு விவரமும் கேட்காம அப்பிடியே நம்பி நம்மள இங்க தங்க வச்சுட்டாரு அதுல இருந்தே எனக்கு சந்தேகம்தான்”

" இப்போ என்ன மச்சி பண்றது????”

" நாளைக்கு வனிதாகிட்ட பேசிப்பார்ப்போம் முடியலைன்னா நேரடியா பண்ணையார்கிட்ட பேசலாம்”

" சரி மச்சி தூங்கலாமா???”
என கிஷோர் கொட்டாவியுடன் வினவ

" ஹ்ம்ம் தூங்கலாம்டா” என ஹர்ஷா கூறி உறங்க சென்றனர்.

காலையில் ஹர்ஷா வேலைக்காரன் வேலு கொண்டுவந்து கொடுத்த காபியை அருந்திக்கொண்டே ஜன்னல் வழியே காலைப்பொழுதை ரசித்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது தோட்டத்தில் இருந்த மாமரத்தின் கீழ் ஒரு பெண் நின்று கொண்டு கைபேசேயில் யாருடனோ உரையாடி கொண்டிருந்தாள்.

எதார்த்தமாக அந்த பெண்ணை கண்ட ஹர்ஷா ‘பார்க்க வனிதா போல இருக்கே’ என எண்ணி கொண்டு தன கைபேசியில் இருந்த வனிதாவின் போட்டோவை எடுத்து பார்த்தான்.

மரத்தின் கீழ் நிற்கும் பெண் வனிதாதான் என உறுதி செய்து வனிதாவிடம் பேசுவதற்கு அவளை நோக்கி சென்றான்.

வனிதாவை ஹர்ஷா நெருங்கையில்,

" எனக்கு உங்கள கல்யாணம் செய்துக்குறதுல எந்த பிரச்சனையும் இல்ல சரத் புருஞ்சுக்கோங்க” என வனிதா பேசுவதை கேட்டு ஹர்ஷா மரத்தின் பின் நின்று வனிதாவின் உரையாடலை கவனிக்க தொடங்கினான்.

" ஆமா சரத் எங்க அப்பா உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தல. என்னோட சம்மதத்தோடதான் இந்த கல்யாணம் நடக்குது”

" …………………………… …………………….. ………..”

" ஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்க எனக்கு ரொம்ப முக்கியமானவங்க. அவங்களோட சம்மதமும் இந்த கல்யாணத்துக்கு வேணும்னு நினைக்குறேன். இதுல தப்பு என்ன இருக்கு சரத்”

" ……………………. ……………… ………………….”

" அவுங்க சம்மதிக்காட்டி என்ன பண்றதுன்னு ஏன் இப்போவே எதிர்மறையா யோசிக்கிறீங்க. முதல்ல நான் போய் இங்க இருக்குற நிலைமையை சொல்லி புரிய வைக்க பார்க்குறேன்”

“ …….. ……………………… ……………”

“ ஆமா நான் இன்னைக்கு சாயங்காலம் 5 மணிபோல மாணாகிரியூர்க்கு போறேன். அங்க இருக்குற ஹாஸ்பிட்டல்ல தான் அவுங்கள சேர்த்துருக்காங்க “

“ ………………… ………………… …………………..”

" என்னது அப்பாவுக்கு தெரியுமாவா???? நல்ல கதையை கெடுத்தீங்க நான் கல்யாணத்துக்கு சில பொருள் வாங்கணும்ன்னு பொய் சொல்லித்தான் போறேன் “

"………………. ………………… ………………”

" ஹ்ம்ம் பார்த்துட்டு உங்களுக்கு போன் செய்றேன். சரிங்க தோட்டத்துக்கு வந்து ரொம்ப நேரமாச்சு . அப்பா தேட போறாங்க நான் அப்புறம் பேசுறேன். வச்சுரவா???”

" ……..”

" ஹ்ம்ம் பை”

என வனிதா கூறிவிட்டு தன் வீட்டை நோக்கி சென்றாள்.

அதனை மரத்தின் பின்னிருந்து கண்ட ஹர்ஷா யோசனையுடன் தோட்டத்து வீட்டை நோக்கி செல்ல திரும்ப எண்ணுகையில்,

" என்னடா மச்சி இந்த பொண்ணு பேசுறதவச்சு பார்த்தா கதிர விரும்பல போல.”

" நீ எப்போ வந்த கிச்சா???”

" நீ வரும்போதே உன் பின்னாடியே வந்துட்டேன். இப்போ அது முக்கியம் இல்ல. இந்த பொண்ணு பேசுறத வச்சு பார்த்தா கதிர் பொய் சொன்ன மாதிரில இருக்கு.”

" ஹ்ம்ம் ஆமா. அது மட்டும் இல்ல ஹாஸ்பிட்டல்ல இருக்குற அந்த முக்கியமான நபர் யாரா இருக்கும். அதுவும் பண்ணையாருக்கு தெரியாம சந்திக்க நினைக்குற அளவுக்கு”

“ ஆமாம்டா. இப்போ என்ன செய்றது ஹர்ஷா??”

“ என்ன பண்றதுன்னா. நாமளும் வனிதாவை பின்தொடர்ந்து அந்த ஹாஸ்பிட்டலுக்கு போயி என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டியதுதான்”
என ஹர்ஷா கூறினான்.





அந்த முக்கியமான நபர் யாராக இருக்கும்??????...................

கதிர் கூறியது பொய்யா???????...................

































 
Top