Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடிகார முட்கள்...

Advertisement

Visha bala

Well-known member
Member
"வணக்கம் சார்..உங்களோடதுதான் இருக்கறதுலயே பெஸ்ட் இன்ஸ்டிடியுட் னு இங்க கூட்டிட்டு சேர்த்து இருக்கேன் ..நல்லா பார்த்துப்பீங்க இல்ல?"



"சார் நாங்க எங்க குழந்தை மாதிரி பார்த்துக்கறோம் சார்..கவலை படாதீங்க.."



"ஏதாவது பிரச்சனை நா வீட்டுக்கு கால் பண்ணுங்க..நீங்க ஹாஸ்பிடல் ல வச்சு பார்த்துக்கோங்க எனக்கு பில் அனுப்புங்க. நான் பார்த்துக்கறேன் "..



"கண்டிப்பா சார்.."நாங்க நல்லா பார்த்துப்போம்.. நீங்க கவலை படாம போயிட்டு வாங்க...

நீ வா ஆகாஷ் போலாம்" ....



ஆகாஷ்..மாதவனின் எட்டு வயது மகன்..அவனை புகழ் பெற்ற (விடுதியுடன் கூடிய)பள்ளியில் சேர்த்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து கொண்டிருந்தான் மாதவன்..



""ஏங்க ஆகாஷ் ரொம்ப சின்ன பையன்..அவன் இப்போவே ஹாஸ்டல் ல சேர்க்கணுமா"?கனிகா..மாதாவின் மனைவி..



"இங்க பாரு கனி..என் செட் ல எல்லாரும் அவங்க பசங்கள ஆறு வயசுல இருந்தே ஹாஸ்டல் ல சேர்த்துட்டாங்க..நான் உனக்காகத் தான் இன்னு ரெண்டு வருஷம் டைம் எடுத்துக்கிட்டேன் இப்பவும் வந்து நை நை னு சொல்லாத.."



"அது மட்டும் இல்லாம நம்ம லைப் க்கு குழந்தைங்க எல்லாம் சொசைட்டிக்காக தான்..நாம மாசத்துல பாதி நாள் வெளிநாட்டுல தான் இருக்கோம்..இதுல எப்படி குழந்தைய வச்சு சமாளிக்கறது...என்ன பொறுத்தவரைக்கும் நிறைய பணம் சம்பாதிக்கணும்..நல்லா வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும்..நீயும் அதே மாறி தான் னு நினச்சு தான் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..ஆனா இப்போ வேற மாதிரி தெரியுது.."என்று கடுப்புடன் கூறினான் மாதவ்..



"அது இல்ல மாதவ்..அவன் ரொம்ப சின்ன பையனா இருக்கான் அதான் நான் கேட்டேன்..விடுங்க..நீங்க என்மேல கோபப்படாதீங்க "கனி..



ஹாஸ்டலில் மிகவும் பயந்து போய் இருந்தான் ஆகாஷ்..இவ்வளவு நாள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவன் இங்கு தனித்து விடப்பட்டதும் மிக பயந்து போய் இருந்தான்..



அங்க இருந்த ஒரு பணியாள் ஆகாஷிடம் வந்து.."ஆகாஷ் நீ வந்ததுல இருந்து சாப்பிடவே இல்ல..வா சாப்பிட்டு வரலாம்"..என அழைத்தார்..



"இல்ல எனக்கு என் அம்மா வேணும்..நான் காணாம போய்ட்டேன்..அவங்கள நான் எப்படியாவது பார்க்கணும்..என்ன அங்க கூட்டிட்டு போய் விட்ருங்க ப்ளீஸ்.."என பயந்து கொண்டே கண்ணீருடன் கூறினான்..



"இல்ல டா மா..நீ தொலைஞ்சு லாம் போகல..நீ ஹாஸ்டல் க்கு வந்துருக்க.."



"ஹாஸ்டல் நா என்ன"ஆகாஷ் .



"ஹாஸ்டல் னா ..நீ இங்க இருந்து ஸ்கூல் போக போற..இங்க இருந்து தான் நீ படிக்க போற.."பணியாள்.



"இல்ல..இல்ல... நா இங்க இருக்கல..என்ன வள்ளி மா கிட்டயாவது கூட்டிட்டு போங்க.."ஆகாஷ்.



"அது யாரு வள்ளி மா?"பணியாள்.



"அவங்க தான் அம்மா ஆபிஸ் போனதுக்கு அப்பறம் என்ன பார்த்துப்பாங்க..நான் வீட்டுக்கு போகணும்..என்ன கூட்டிட்டு போங்க...."எனக்கூறி அழ ஆரம்பித்தான்..



"அவன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அந்த பணியாள்,ஹாஸ்டல் வார்டனை அழைக்கச்சென்றார்..



உடனே அங்கு வந்தார் வார்டன் தேவ்..

ஆகாஷிடம் வந்த தேவ்.."ஆகாஷ் இங்க பாரு பா ,நீ நல்லா படிக்கணும் னு தான் உன் அப்பா இங்க கூட்டிட்டு வந்து விட்ருக்காங்க..இங்க உனக்கு நிறையா பிரண்ட்ஸ் கிடைப்பாங்க..நல்லா விளையாடலாம்..நல்லா படிக்கலாம்..சரியா.."தேவ்..



"அதெல்லாம் இல்ல எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்" என அடம் பிடித்தான் ஆகாஷ் ..



"ஏன் ஆகாஷ் உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா??"தேவ்..



"எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு"..ஆகாஷ்



"எதுக்கு பயம்?இங்க உன்ன மாதிரி எவ்ளோ பேர் இருக்காங்க..ஹேய் அருண் இங்க வா..



பாரு ஆகாஷ் இது அருண்..இவன் இங்க போன வருஷமே வந்துட்டான்..அவனும் இங்க வரும்போது உன்ன மாதிரி தான் ரொம்ப அழுதான்..ஆனா இப்போ அவனுக்கு அவன் வீட்டை விட இங்க தான் ரொம்ப பிடிச்சுருக்காம்..இல்ல அருண்?"தேவ்..



"ஆமா சார் எங்க வீட்டுக்கு போனா யாரும் இருக்க மாட்டாங்க..தனியாவே தான் உக்காந்துட்டு டிவி பார்த்துட்டு இருக்கணும்..ஆனா இங்க நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க..அதுமட்டு இல்லாம எனக்கு ரொம்ப பிடுச்ச தேவ் சார் இருக்காங்க.."எனக்கூறி தேவ் ஐ கட்டிக்கொண்டான் அருண்.



"இங்க வரப்போ முதல்ல எல்லாருக்கும் பயமாத்தான் இருக்கும்..இவ்ளோ ஏன் எனக்கே ஆரம்பத்துல இங்க வந்து தனியா இருக்க பயமா தான் இருந்துச்சு தெரியுமா??"தேவ்..



" உங்களுக்கே பயமா இருந்துச்சா தேவ் சார்"என ஆச்சர்யத்துடன் அருண் வினவினான்..



"ஆமா அருண்..நானும் உங்கள மாதிரி இங்க தனியா தான் வந்தேன்..ஆனா இங்க வந்ததுக்கு அப்பறம் உங்கள மாதிரி நிறைய குட்டி பசங்க இருந்தாங்களா அதனால எனக்கு இருந்த பயம் எல்லாம் போய்..ரொம்ப ஜாலியா இருக்க ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா?"என சின்ன குழந்தைகளுக்கு கதை சொல்லும் பாவத்துடன் தேவ் சொல்ல..ஆகாஷுக்கும் சற்று மனம் சமாதானமாகி விட்டது..



ஆகாஷின் முகபாவத்தை வைத்தே அவனது மன ஓட்டத்தை கணித்த தேவ்.."சரி ஆகாஷ் க்கு சாப்பட்றதுக்கு என்ன பிடிக்கும்?என்ன சாக்லேட் பிடிக்கும்"என வினவினான்..



சாக்லேட் என்றவுடன் எல்லா குழந்தைகளைப்போலவே மகிழ்ந்து போன ஆகாஷும் தனக்கு விருப்பமான சாக்லேட் ஐ கூறிட ..அதைக் கொடுத்தான் தேவ்..



உடனே ஆகாஷுக்கு தேவ்,அருண் இருவரும் நட்பாகி விட்டனர்..

ஆகாஷை அருணுடன் சாப்பிட அனுப்பினான் தேவ்..



இதுபோலவே ஒவ்வொரு நாளும் கழிய அங்கிருந்த அனைத்து குழந்தைகளையும் தன் குழந்தைகளாக,,தன்னுடைய தோழர்களாக ஏற்றுக்கொண்ட தேவ் ஐ ஆகாஷிற்கு ரொம்பவும் பிடித்து விட்டது..



அந்த வருட விடுமுறைக்கு தான் தன் வீட்டிற்கு சென்றான் ஆகாஷ்..அதற்கிடையில் பள்ளி விடுமுறையில் அவ்வப்போது கனிகா வந்து ஆகாஷை பார்த்து சென்றாள் ..



வீட்டிற்கு வந்த ஆகாஷை அவன் அம்மா.."வா ஆகாஷ்..ஹாஸ்டல் லா எப்படி இருக்கு..இப்ப ஒரு மாசம் லீவ் தானா?சொல்லு உனக்கு இந்த ஒரு மாசத்துல என்னெனலாம் வேணுமோ கேளு நா வாங்கி தரேன்" என்றாள் ..



"எனக்கு ஏதும் வேணாம்..எனக்கு தான் நீங்க எல்லாமே வாங்கி தந்து இருக்கீங்களே..நான் ரூம் க்கு போறேன் "எனக்கூறி விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான் ஆகாஷ்..



"அன்று இரவு சாப்பிட வந்த மாதவ்..இதென்ன இவன எதுக்கு இப்போ கூட்டிட்டு வந்த "என ஆகாஷை பார்த்து கேட்டான்..



"என்னங்க நீங்க அவன் ஆனுவல் லீவ் க்கு வந்துருக்கான்..அது கூட மறந்துடுச்சா??"கனிகா



"ஹோ ஆனுவல் லீவா..சரி சரி..இன்னும் ரெண்டு நாள் ல நாம டோக்கியோ போகணும்..இவனுக்கு வேற நாம விசா வாங்கலயே..என்ன செய்லாம்..பேசாம நம்ம வள்ளியம்மா கிட்ட சொல்லி இவன வீட்டுலயே விட்டுட்டு போய்டலாமா?"மாதவன்..



"என்ன சொல்றீங்க நீங்க?அவனை இவ்ளோ சின்ன வயசுல ஹாஸ்டல் ல விட சொன்னீங்க உங்க பிடிவாதத்துனால நானும் அதுக்கு சம்மதிச்சேன்..அவனோட லீவ் க்கு கூட வந்து பார்கல..அவன் பிறந்தநாள் அடுத்த வாரம்..ஆனா நீங்க அத கூட நினைக்கல..ஒரு வருஷத்துக்கு அப்பறம் இப்போதான் வீட்டுக்கு வந்துருக்கான்..அத கூட யோசிக்காம அவன தனியா விட்டுட்டு போலாம் னு சொல்றீங்க?"கனிகா..



"என்ன கனி..இது எவ்ளோ பெரிய பிசினஸ்..எவ்ளோ பெரிய மீட்டிங்..இதுக்கு எப்படி நாம போகாம இருக்கறது.. நீயும் தான இதுல பார்ட்னர்..உனக்கு இதோட முக்கியத்துவம் தெரியாதா?"மாதவன்..



"நான் தான் இந்த வாரம் ஆகாஷ் வருவான் னு சொன்னேன் இல்லங்க..அப்பறம் யாரு உங்கள இந்த வாரம் மீட்டிங் ஏற்பாடு பண்ண சொன்னது??உங்களுக்கு தான் எதுக்கு முக்கியத்துவம் தரணும் னு தெரில.."கனிகா..



"என்ன டி இவ்ளோ நாள் பையன பிரிஞ்சு இருந்த பாசமா?திடிர்னு ரொம்ப பாசமா பேசற.."மாதவன்..



"ஆமா இவ்ளோ நாள் எனக்கு புரியல என் பையன் என்கூட இல்லாத இந்த நாட்கள் தான் என் பையனோட அருமை எனக்கு புரிஞ்சுது..அடுத்த வருஷத்துல இருந்து நான் அவனை ஹாஸ்டல் க்கு அனுப்ப போறதில்ல..அதே மாதிரி இந்த டோக்கியோ மீட்டிங் க்கும் நான் வரபோறது இல்ல.."கனிகா..



"ஹேய் என்ன நீ கடைசி நேரத்துல இப்படி சொல்ற?இப்போல்லாம் அந்த மீட்டிங் அ கான்செல் பண்ண முடியாது..நீ வந்து தான் ஆகணும்.."மாதவன்..



"எனக்காக யாரும் எந்த மீட்டிங் கும் கான்செல் செய்ய வேணாம்..வேணும் நா இந்த மாசமும் நான் ஹாஸ்டல் லேயே இருந்துக்கறேன்..நீங்க உங்க வேலைய பாருங்க.."என்று கூறி அவன் அறைக்குச்சென்று விட்டான் ஆகாஷ்..



"பார்த்தீங்களா அவன் எப்படி மாறிட்டான் இந்த ஒரு வருஷத்துலயே அவனுக்கு நம்ம மேல இருந்த பாசம் போய்டுச்சு..எல்லாம் என் தப்பு..புருஷனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும் னு நான் என் புள்ளய விட்டுட்டேன்..பணம் காசு தான் முக்கியமா போச்சு உங்களுக்கு..எது எப்படி இருந்தாலும் நான் என் பையன விட்டுட்டு வரமாட்டேன்.."கனிகா..



"சரி வராத..நானே பார்த்துக்கறேன்..இனிமே என்கிட்டே நீ எதையும் எதிர் பார்க்காத..சை என் வாழ்க்கைல நான் பிளான் பண்ணின எதுவுமே நடக்க மாட்டேங்குது.."எனக் கோபமாக கூறி சென்று விட்டான்..



"மறுநாள் காலையில் ஆகாஷிடம் வந்த கனிகா.."ஆகாஷ் அடுத்த வாரம் உன் பிறந்தநாள் வருது இல்ல..வா நாம ஷாப்பிங் போலாம்..உனக்கு என்ன எல்லாம் வேணுமோ அது எல்லாம் வாங்கி தரேன் அம்மா..வா கிளம்பு..





"எனக்கு எந்த கிப்ட் ம் வேணாம்..நீங்க கிளம்புங்க.."ஆகாஷ்..



"இல்ல மா அம்மா பண்ணிந்து தப்பு தான்..அப்பா உன்ன ஹாஸ்டல் ல சேர்க்கறேன்னு சொன்னப்போ நன் அதுக்கு சரினு சொல்லிருக்க கூடாது..அம்மா வ மன்னிச்சுடு டா ப்ளீஸ்.."கனிகா..



"இல்ல நீங்க பண்ணினதுலயே நல்ல விஷயம் என்ன ஹாஸ்டல் ல சேர்த்தது தான் ..அங்க தான் எனக்கு நானா இருக்க முடியுது..சொல்லப்போனா அங்க தான் எனக்கு சூரியனே உதிக்கற மாதிரி இருக்கு..இங்க ஒரே இருட்டா..யாரும் இல்லாம காட்டுக்குள்ள இருக்கற மாதிரி இருக்கு..



அதனால ப்ளீஸ் என்ன மறுபடியும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடாதீங்க..இந்த ஒரு மாசம் அங்க ஹாஸ்டல்ல லீவ்..அதனால தான் நான் இப்போ வீட்டுக்கு வந்ததே.."ஆகாஷ்..



"இல்ல ஆகாஷ்..உங்க அப்பா பேச்சு கேட்டு தான் உன்ன ஹாஸ்டல் ல சேர்த்து விட்டேன் டா..அம்மா வ புருஞ்சுக்கோ மா ப்ளீஸ்.."



"என்ன ஹாஸ்டல் ல சேர்த்தது மட்டும் இல்ல..அதுக்கு முன்னாடி இருந்து கூட நீங்க என்ன வள்ளி மா கிட்ட தான விட்டு வளர்த்தீங்க..இப்போ இந்த ஒரு வருஷம் என்ன ஹாஸ்டல் ல விட்டதும் என் மேல பாசம் வந்துடுச்சு..பரவால்ல இப்போவாது உங்களுக்கு என் மேல பாசம் வந்துச்சு னு நான் சந்தோஷப்பட்டுக்கறேன்..



ஆனா நான் இனிமேல் ஹாஸ்டல் ல தான் இருப்பேன்..என்ன வற்புறுத்தாதீங்க.."ஆகாஷ்..



"நீ ஹாஸ்டல் க்கு போனதுக்கு அப்பறம் என்ன அம்மா னு கூட கூப்படறது இல்ல..எனக்கு இதுவும் தெரியும் தான்..



நீ என்ன புருஞ்சுப்ப ஆகாஷ்..நீ இப்போ என் மேல ரொம்ப கோவமா இருக்க..நீ சின்ன பையன் பெருசானதும் என்னோட சூழ்நிலை உனக்கு புரியும் னு நினைக்கறேன்..அதுவரைக்கும் அம்மா காத்திருக்கறேன் சரியா..?



நீ வரலனாலும் உனக்கு உன்னோட பர்த்டே கிபிட் வரும்..இந்த வருஷம் உன்னோட பர்த்டே உன்னால மறக்க முடியாததா இருக்கும் பாரு.."கனிகா..



இவ்வாறு கூறிவிட்டு மனதில் வருத்தத்துடன் மகனுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க தனது காரை எடுத்துக்கொண்டு கடைக்கு கிளம்பினாள்..



ஆனால் அந்த வருட பிறந்தநாள் பரிசாக ஆகாஷுக்கு கிடைத்தது அவன் அம்மாவின் மரணம் தான்..



ஆம்..அவனுக்கு பரிசு வாங்க சென்றவள் உயிருடன் திரும்ப வில்லை..



ஆனால் தாயின் மரணம் கூட ஆகாஷை அவ்வளவு பாதிக்க வில்லை..அவன் தந்தையையும் கூட..



மாதவனுக்கு எப்பொழுதும் போல் வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும்..பணம் சம்பாதித்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்..



ஆகாஷ் மறுபடியும் ஹாஸ்டல் வசமே வந்தான்..அவன் அந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்கவும் கற்றுக்கொண்டான்..



அவனுக்கு வழிகாட்டியாக தேவ் என்றும் உறுதுணையாக இருந்தார்..



காலமும் சுழன்றது..



சில வருடங்கள் கழித்து ...



"உங்களோட இன்ஸ்டிடியூட் தான் ரொம்ப புகழ்பெற்றது..பாதுகாப்பானது னு கேள்விப்பட்டேன் சார்..



பத்திரமா பார்த்துக்குவீங்க இல்ல.."ஆகாஷ்..



"கவலைப்படாதீங்க சார் நாங்க குழந்தை மாதிரி பார்த்துக்கறோம்"...



"ஏதாவது பிரச்சனை னா எனக்கு கால் பண்ணுங்க..இல்ல டாக்டர் அ கூட்டிட்டு வந்து பார்த்துக்கோங்க..பணம் நா அனுப்பிடறேன் .."ஆகாஷ்..



என்று தன் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு திரும்பி பார்க்காமல் வந்தான் ஆகாஷ்..





-------------------------------------------------$$$$$$$$$$$$$$$$$$$$$$$$---------------------------------------------------
 

Attachments

  • fi.jpg
    fi.jpg
    48.6 KB · Views: 0
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சரியாய் இருக்கு
கண்டிப்பா..இப்போ நிறைய பெற்றோர்கள் இப்படித்தான் இருக்காங்க..ஆனா கடைசி காலத்துல மட்டும் பசங்க நம்மள பார்த்துக்கனும்னு எதிர் பார்க்கறாங்க..
 
Top