Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா..!-17

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -17

" என்னது? உடம்புக்கு சரியில்லாமல் மித்ரா ஆபிஸ் வராமவிட்டுட்டாளா? அதிசயம் ஆனால் உண்மை..." என்று சொன்ன மதனுக்கு இருதயமே அடைத்தது. மைல்ட் ஹார்ட் அட்டாக் வரும் போல இருந்தது.

" ஆமா.. இப்பதான் தீபக் சார் சொன்னாரு.. சும்மா அவளை போன் பண்ணி தொந்தரவு செய்ய வேணாமாம்.. அவ எப்பயாவது இப்படி உடம்பு சரியில்லாமல் போனாதான் லீவு எடுப்பாளாம்.." அவளது பக்கத்து இருக்கை ஆனந்தி சொல்ல மதன் தலையில் கை வைத்தான்.

" இந்த தீபக் மெஹராவுக்கு மித்ரா மேல ஒரு தனி அன்புதான்.. அதுல கொஞ்சமாவது என்மேல் அந்த ஆளுக்கு இருக்கா.. " வெகுவாக குறைப்பட்டான்.

" அதுக்கு நீ பொண்ணா பொறந்துருக்கனும்.. அதுவும் மித்ரா மாதிரி தீயா வேலை செய்யனும்.." என்று சொல்லி சிரித்தாள் ஆனந்தி.

" ஐயோ.. அவ வராட்டி என் வேலை டபுளா ஆகுமே..." கவலைப்பட்டான் மதன்.

" வாங்குற சம்பளத்துக்கு இன்னைக்காவது வேலை செய்.."

" நான் அப்பவே யோசிச்சேன். மித்ராக்கு உடம்பு சரியில்லைன்னு.." மதன் தான் முதல் நாள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை சொல்லிக்கொண்டு இருந்தான்.

" இல்லேயே.. நல்லாத்தானே இருந்தா.. " ஆனந்தியும் தலையை சொறிய, "அதில்ல ஆனந்தி .. மித்ராவோட போக்கே சரி இல்லை. அவ முகத்துல ஒரு சிரிப்பு வந்துடுச்சு..எனக்கு தெரிஞ்சு.."

" யாரையாவது லவ் பண்றாளோ.." ஆனந்தி சட்டென சொன்னாள்.

" அப்படித்தான் இருக்கும்..." ஆபிஸில் அவளைப் பற்றி கதை பேசப்பட்டுக்கொண்டு இருப்பது தெரியாமல் நவிலனது வீட்டு கேட் முன் நின்றாள் நாயகி.

காலையிலேயே தலைக்கு குளித்திருப்பாள் போல. காற்றில் பறந்த அவளது கோசத்தோடு கலந்த தென்றல் காற்று அவளது கூந்தல் வாசனையில் சற்று தோற்றுத்தான் போனது.

அன்று செக்யூரிட்டி தாத்தா புன்னகையோடு திறந்து விட்டார். கூடவே வரவேற்கும் விதமாக ஒரு தலையசைப்பு வேறு. எதிர்கால சின்ன முதலாளியம்மா என்று தெரியாமலேயே அந்த வரவேற்பை அவளுக்கு அளித்தார்.

மித்ரா தன்னுடைய ஹீல்ஸ்ஸை ஒரு ஓரமாக வைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள். ஹாலில் யாரையும் காணவில்லை.

" ம்மா.." அழைத்தாள். எந்த பதிலுமில்லை. சமையலறையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது. பூனை நடை போட்டு அங்கு போனாள்.

" ஆன்ட்டி.."

" அடடே... மித்ராவா..? வாம்மா.."

"இன்னைக்கு ஃபீவர் எப்படி இருக்கு...?" குடும்ப டாக்டர் போல விசாரித்தாள்.

" கொஞ்சம் பரவாயில்லம்மா.."

"என்ன பண்றிங்க ஆன்ட்டி...?"

" வேலைக்கு வாற பொண்ணு வரலம்மா.. அதான் ஏதாவது லைட்டா சமையல் பண்ணலாம்னு வந்தேன்.."

" இருங்க நான் பண்றேன்.."

" உனக்கு எதுக்கும்மா சிரமம்?"

" அதெல்லாம் எதுவும் இல்ல.. தள்ளுங்க.. ஆமா என்ன செய்யனும்..?"

அவள் ஆர்வமாய் கேட்க மறுக்க இயலாது சந்தோஷமாக அடுப்படியை அவளுக்கு கொடுத்தார் ரோகிணி. நேரம் பதினென்று தான் ஆகத்தொடங்கி இருந்தது. முதலில் அவருக்கு ஒரு சூப் வைத்துக்கொடுப்போம் என காய்கறிகளை நறுக்கத்தொடங்கினாள்.

ரோகிணி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

" என்ன ஆன்ட்டி அப்படி பார்க்கிறிங்க..? இவ சமைச்சு சாப்பிட்டு நமக்கு ஏதாவது ஆகிடுமோனு பயப்படுறிங்களா?"

" இல்லம்மா... சும்மா ஒரு பேச்சுக்கு தான் நாளைக்கு வாரேனு சொன்னனு நினைச்சேன். ஆனா நிஜமாலும் வந்துட்டியே..."

"சுகமில்லாம இருக்கிங்க. அதான் வந்துட்டு போகலாம்னு நினைச்சேன். வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டனா ஆன்ட்டி..?"

"அப்படில்லாம் இல்லம்மா.... நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.."

"நீ வேலைக்கு போகலையாம்மா.."

" இல்ல ஆன்ட்டி.. லீவு இன்னைக்கு.."

" ஏன்ம்மா..?"

" சும்மாதான் ஆன்ட்டி.. ரெண்டு நாள் லீவு எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்னு தோனுச்சு.. அதான்.." அதற்கு மேல் சொல்ல முடியாது தவித்தாள். ஆனால் ரோகிணி அவளைப் புரிந்து கொண்டார். இவளுக்கும் மனசு சரியில்லை போல. ஏதோ இந்த இளசுகளுக்குள் நடந்திருக்கிறது என்று அவரது அனுபவம் வாய்ந்த மூளை யோசித்தது.

"நேற்று வேலை செஞ்ச பொண்ணு ஏன் வரல ஆன்ட்டி?"

"அந்த பொண்ணா.. காவேரி. அவங்க பாட்டிக்கு உடம்புக்கு முடியலனு ஊருக்கு போயிருக்கா.. வர நாலு நாள் ஆகுமா இருக்கும்"

"ஓ.. அப்படியா.."

மித்ராவின் வெஜிடபிள் சூப் வித்தியாசமான சுவையாய் இருக்க கசப்பாய் இருந்த அவர் நாக்குக்கு அது பயங்கர டேஸ்ட்டாக இருந்தது.

" நீ நல்லா சமைப்பியா மித்ரா..?"

" ஏதோ சுமாரா சமைப்பேன்ம்மா.. சாப்பிடுறவங்க உயிருக்கு உத்தரவாதம் அளிக்கலாம். அவ்வளவு தான்.." என்று சொல்ல அங்கு சிரிப்பலை நிலவியது.

அவரோடு பேசிக்கொண்டிருப்பது மித்ராவுக்கும் பிடித்திருந்தது. பேச்சுவாக்கில் நவிலனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று மெதுவாக கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். இது தெரியாமல் பேச ஒரு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் ரோகிணியும் மகனைப் பற்றி எடுத்துவிட்டார். இது போதாததற்கு அவனுடைய சின்ன வயது ஃபோட்டோக்களை வேறு காட்டி கதை சொல்ல ஆரம்பித்திருந்தார். நேரமாகிக்கொண்டே சென்றது. அப்படியே அவருக்கு இரவு உணவையும் அவளே செய்து கொடுத்துவிட்டு கிளம்பும் போது வாசலில் கேட் திறந்து கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஸ்ரீநிவாசன் மலேஷியாவில் இருந்து திரும்பி வந்துவிட்டார்.

நாலு நாளில் திரும்பி வருவதாகச் சொல்லி சென்ற அவரும் மனைவி உடல்நலக்குறைவாக இருப்பது தெரிந்து பார்த்த வேலை போதும் என்று ஓடோடி வந்துவிட்டார். வீட்டுக்குள் நுழைந்தவர் ரோகிணியை அழைத்துக் கொண்டே வந்தார்.

" ரோகிணி.. ரோகிணி..." மனைவியோடு மித்ரா இருக்கவும் சட்டென மிடுக்கு தோற்றத்துக்கு மாறினார்.

" அட மித்ரா.. நீயாம்மா.. எப்படியிருக்க.. நேற்று நீ வந்ததா ரோகிணி சொன்னா."
மித்ரா சிரித்து வைத்தாள்.

"என்னங்க.. இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னிங்க.. அதுக்குள்ள வந்து நிற்கிறிங்க.. காலையில பேசும் போது கூட சொல்லலயே.." ரோகிணியும் கணவனது திடீர் வருகைக்கு ஆச்சர்யத்தை வெளிப்படுத்தவும், அங்கு பெரியவர்களுக்கிடையில் ஒரு அழகான மௌனமான பாஷையில் காதல் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதைக் கண்ட மித்ரா, அதற்கு மேல் அங்கு இருப்பது அவர்களுக்கு இடைஞ்சல் என்று எண்ணி கிளம்பலானாள்.

" சரி ஆன்ட்டி.. நான் கிளம்புறேன். நேரமாச்சு.."

" நீ எங்க மித்ரா அதுக்குள்ள ஓடுற.. இருந்து சாப்பிட்டு போ.." ரோகிணி அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.

" இனி நான் எதுக்கு ஆன்ட்டி.. அதான் அங்கிள் வந்துட்டாரே.. " என்று வேடிக்கையாக சொல்ல இப்போது ஸ்ரீநிவாசனும் சிரித்தார்.

" இரும்மா.. இருந்து சாப்பிட்டு போ.." அவரும் தன் பங்குக்கு அழைக்க அவள் மறுக்க முடியாது இருந்தாள்.

அவளே இரவு உணவை மேஜைக்கு எடுத்து வைத்து தன்னுடைய அப்பா அம்மாவிற்கு பறிமாறுவது போல பறிமாறி அவர்களோடு இணைந்து உண்ணத் தொடங்கினாள். திடீரென அவளுக்கு தாய் தந்தையின் நினைவு வந்தது. மதுபாலா உயிரோடு இருந்தவரை அவர்கள் வீட்டில் எல்லாரும் இரவு உணவை ஒன்றாகத் தான் அமர்ந்து உண்ணுவார்கள். சரியாக எட்டு மணிக்கு யாவரும் ஆஜராக வேண்டும் என்பது ஐராவதத்தின் கட்டளை. அதை மீறுவோர் பத்து தோப்புக்கரணம் போட வேண்டும். அந்த நினைவுகளில் மூழ்கினாள் மித்ரா. அவளுடைய சிந்தனையை கலைத்தார் ரோகிணி.

" என்னாச்சும்மா..?"

" அப்பா அம்மா ஞாபகம் வந்துடுச்சு.." என்று சொல்லி விட்டு சாப்பாட்டு தட்டைப் பார்த்தாள். பெரியவர்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் தங்களுக்கிடையில் பார்த்துக்கொள்ள அவளே தன் கதையை எடுத்துவிட்டாள். அவள் சொல்லி முடித்ததும் ரோகிணி எழுந்து வந்து ஆதரவாய் அவள் தலையை தடவிக் கொடுக்க அவள் அவரது இடுப்போடு சேர்ந்து சாய்ந்துக்கொண்டு அழுதாள். அவள் அழுகை அடங்கும் வரை காத்திருந்த பெரியவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

" அப்பா அம்மாகிட்ட என்னடா வீம்பு.. இந்த உலகத்துலயே நம்ம நல்லா இருக்கனும்னு முதல்ல நினைக்கிறவங்க பெற்றவங்களாத்தான் இருப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் மற்றவங்க.. பாவம்டா அவங்க.. கொஞ்சம் விட்டுக்கொடுத்து தான் போயேன். வாழ்க்கை அழகாகும்.." என்று ஆதரவாய் ரோகிணி சொல்ல எதுவோ மண்டைக்குள் உறைத்தது போல இருந்தது அவளுக்கு. சமீபமாக போகும் இடமெல்லாம் இலவசமாக அட்வைஸ் கிடைத்ததில் சங்கமித்ரா கொஞ்சம் தெளிவாகிக்கொண்டு தான் வந்தாள்.

" போதும் ரோகிணி.. அவளை விட்டுடு.. பாவம்.. நீ சாப்பிடும்மா.. இவ இப்படித்தான் யாராவது கிடைச்சா போதும். உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவா.. நீ ஏதாவது சொல்லப் போய் தான் நவிலன் யூ எஸ் போயிட்டானா..? எப்ப வருவானாம்..?" என்று அவர் பேச்சை மாற்ற மித்ரா சட்டென தகவலை சேகரித்துக்கொள்ள அலர்ட் ஆனாள்.

" எனக்கென்ன தெரியும். போன் பண்ணினா எடுத்தா தானே.. அவனா வரட்டும்.." என்று அந்த தாயும் கொஞ்சம் சலித்துக்கொண்டார்.

" பின்னே போனவன் ஒரு போனாவது செய்ய வேண்டாமா? சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தால் என்ன அர்த்தம்? வீட்டுக்கு போன் செய்து இரண்டு வார்த்தை பேச என்னவாம்? அப்படி என்ன கஷ்டம் அவனுக்கு? " தாயாய் அவர் கொட்டிக் தள்ளினார்.

அங்கு ஒரு விவாதமே இடம்பெற்றுக் கொண்டு இருக்க அதற்கு காரணமே தான் தான் என்று சொல்ல முடியாது தவித்த மித்ராவுக்கு புரைக்கு ஏறியது.

அவன் தான்.. இல்லை.. இவர்கள் திட்டுவதற்கு காரணம் தான் தானே.. அதனால் தான் புரைக்கு ஏறுகிறது என்று புரிந்து தடுமாறினாள் மித்ரா.

" யாரோ மித்ராவை நினைக்கிறாங்க.." என்று ஸ்ரீநிவாசன் சொல்ல, " திட்டுனா தானே புரை ஏறும் .." என்று மித்ரா சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.

" அப்படியா.. அப்ப உன்னை யாரோ திட்டுறாங்கம்மா.." என்று அவர் சிரிக்க, "இருக்கும்.. நேரமாச்சுனு வீட்ல அத்தை திட்டுவாங்களா இருக்கும்.. நான் கிளம்புறேன் அங்கிள், நாளைக்கு வாரேன் ஆன்ட்டி.." என்று புறப்பட்டாள்.

அன்றும் நவிலன் எப்போது வருவான் என்பது பற்றி எதுவும் தெரிய வராததால் சோகத்துடனே வீடு திரும்பினாள்.

அவள் கிளம்பியதும் அந்த வீடே சட்டென புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது. திடீரென வீட்டுக்குள் ஒரு அமைதி வந்தது. ஆனால் அந்த அமைதி ரோகிணிக்கும் பிடிக்கவில்லை. ஸ்ரீநிவாசனுக்கும் பிடிக்கவில்லை.

"இந்த பொண்ண பற்றி என்ன நினைக்கிற ரோகிணி...?"

"ஏன் இப்படி கேட்கிறிங்க...? நல்ல பொண்ணுங்க அவ... நேற்று அவதான் என்னை டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போய் மருந்து எடுத்து கொடுத்தா. இதோ இன்னைக்கு கூட வந்து முழுநாளும் கூட இருந்து.. சமைச்சு கொடுத்து.. பார்த்திங்க தானே நீங்க.."

" நான் அதை கேட்கல..அவ நல்ல பொண்ணுணு எனக்கும் தெரியும்.... உண்மைக்கும் அவ உன்னைப் பார்க்கத்தான் வந்தாளா? என்றார்.

" ஆமா.." பெருமிதமாய் சொன்னார் ரோகிணி.

'அவ வந்ததுக்கு காரணம் நீ சுகமில்லாம இருக்கது மட்டும் இல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு....' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

"என்னங்க..? என்ன யோசனை?"

"ஒன்னுமில்ல... அப்ப நவிலன் போன் பண்ணவேயில்ல...?"

"இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிக்கிட்டு இருந்தேன். உங்களுக்கு பேசினானா..?"

அதற்கு பதில் சொல்லாமல் ஸ்ரீநிவாசன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். செல்போனுடன் கார்டனுக்குள் நடந்தார்.

மகனுக்கு அழைப்பெடுக்க செல்போன் திரையில் தந்தையைப் பார்த்ததும் எடுத்து 'ஹலோ' வுக்கு வேலை வைத்தான்.

" நவிலா! என்ன சரக்கு அடிக்கிறாய்..?"

" ப்பா...." என்று அவன் அலறினான்.

" டேய் நடிக்காத .. சொல்லு..."

" ஸ்காட்ச்.." தயங்கியப்படி சொன்னான்.

" நீ ஃப்ளைட் பிடிச்சி போய் குடிச்சி கிழிச்சது போதும். நாளைக்கு நைட் நீ இங்க இருக்கனும்.." சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் போனை கட் செய்தார்.

அவருக்குத் தெரியும் அடுத்தநாள் என்ன நடக்கப்போகிறது என்று.

படுக்கையில் விழுந்த சங்கமித்ராவுக்கு நவிலனைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

' ஹேய் நவிலா...!' சொல்லிப் பார்த்தாள்.

' எப்படா வருவ... ?' குரலில் போதை இருந்தது.

' டா.. போடுறேனே.. ஸாரிப்பா..' இப்போது குழைவு இருந்தது.

நல்ல வேளையாக மனதுக்குள் சொன்னாள். இல்லேயென்றால் அடுத்த அறையில் இருந்த அத்தைக்கு கேட்டிருக்கக்கூடும். மங்களா தேவி இவள் தூக்கத்தில் ஏதோ உளறுகிறாள் என்று எழும்பி வந்திருக்ககூடும்.

கடைசியாக நவிலன் கோபப்பட்டபோது அவன் தன்னை ஒருமையில் அழைத்ததை நினைத்து அவளது கன்னங்கள் சிவந்தன.

' உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ப்பா.. ஸாரி... ' அந்த வார்த்தைகளோடே தூங்கிப் போனாள்.

'உன் கண்களில் தொடங்கிய
என் காதல்
என் கண்ணீரில் தொடர்கிறது..'
என்று யாரோ ஒரு கவிஞன் எழுதிய வார்த்தைகள் நவிலனுக்கு பொருத்தமாக இருக்க அவன் அடுத்த நாள் வருவதற்கான ஆயத்தங்களில் இறங்கினான்.

ஆட்டம் தொடரும் ❤️?
 
Nice, nice, nice.
Interesting dear.
Sangida, puthiya parimaanam nalla irruku,enna ellavarum avalukku mandayila prachanai ya? nu kelkum...
Amma maathram alla appa vum sharp.
Liquor adikaan vendi abroad poyo??? athu than namada thesathilum kittum allo mandaya.
Eppadi kaatha pidichu thookittar parthaya?? Appada...
 
Thank you for your lovely review Leenu ❤️
 
ஆட்டம் தொடரும் ❤?
Very nice ?
 
Top