Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-22

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -22

அந்த வீட்டு வாசற்கதவு அவளுக்காக எப்போதும் திறக்கப்பட்டே இருந்தது அவள் செய்த அதிஷ்டம். அந்த அழகான குடும்பத்தில் அவளும் ஒரு அங்கமாகப் போவது தெரிந்து அந்த வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களெல்லாம் அவளை தலையசைத்து வரவேற்றன. மரங்களில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்த கிளிகள் கூட்டம் ' நம்மை விட அழகான கிளி ஒன்று வந்துள்ளதே' என்ற பொறாமையில் தவித்தன.


சங்கமித்ரா கழற்றிவிட இன்று அவனது ஷூக்கள் இருக்கவில்லை. அவன் வீட்டில் இல்லையோ என்ற தவிப்பில் தான் உள்ளே நுழைந்தாள்.


"ஹாய் ஆன்ட்டி..."


"வாம்மா... என்ன ரொம்ப நாள் ஆளையே காணோம். எங்களை மறந்துட்டியா..?" ரோகிணி அவளை சீண்ட ஆரம்பித்தார்.


"அதெல்லாம் இல்ல ஆன்ட்டி.. வழக்கம் போல வேலைதான். அதான் இப்ப வந்துட்டனே...."


"எப்படியாச்சும் சமாளிச்சிடுவியே... சரி வா.. உட்காரு.. சாப்பிடலாம்...உனக்கு பிடிச்ச இட்லி.." கட்டளைகள் பிறப்பித்தார்.


" ஹை இட்லி .."


" ஹை இட்லி இல்ல.. இட்லி.."


" என்னம்மா.. என்னை ஃபுல்லா கலாய்க்கிற மூட்ல இருக்கிங்க இன்னைக்கு?"


" அப்படியா தெரியுது.. இந்த நவிலன் கூட சேர்ந்து பேசி பேசி இதெல்லாம் வந்துடுது.." சொல்லிவிட்டு அவளை கூர்ந்து பார்த்தார் ரோகிணி. அவளோ முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் சாதாரணமாக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டாள். ஆனால் அப்படிச் சொன்னவள் கண்கள் சல்லடை போட்டு வீட்டை அலசின. வரும் போதே நவிலனின் கறுப்பு காரை வெளியே கண்டாள். நம் நாயகி அவ்வளவு மக்கு இல்லை.


"அங்கிள் இல்லையா ஆன்ட்டி..."


"அவர் இப்பதான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முதல் தான் கிளம்பி போனார்ம்மா.. நீ ஒரு பத்து நிமிஷத்துக்கு முதல்ல வந்துருந்தா பார்த்திருக்கலாம்."


" அவரை மட்டும் தான் பார்த்து பேசவே முடியறது இல்ல.."


" என்ன பண்ணம்மா.. கேட்டா பிசினஸ் அது இதுன்னு அப்பாவும் புள்ளையும் கதை சொல்வாங்க. நான் ஒருத்தி வீட்ல தனியா பேச துணையின்றி இருக்கது எங்க புரியப் போகுது அவங்களுக்கு.. இதுக்குதான் இந்த நவிலனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம்னு பார்க்கிறேன்... யாராவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லும் மா.." ரோகிணி பேசப் பேச அவளுக்கு தொண்டைக்குள் இட்லி இறங்காமல் தவித்தது.


' ஐயோ ஆன்ட்டி.. அவசரப்பட்டு எவளையாவது கொண்டு வந்து நிறுத்தி இவதான் என் மருமகள் னு சொல்லிடாதிங்க.. அது எனக்கான இடம்..' என்று சொல்லிப்பார்த்தாள். மனதுக்குள் தான்.


" இட்லி பிடிக்கும்ங்கறதுக்காக இப்படியா அடைக்க அடைக்க சாப்பிடுவ.. தண்ணீர் குடி.." என்று டம்ளரை நகர்த்தி வைத்தார்.


எடுத்து மடக் மடக்கென்று குடித்துக்கொண்டு தன்னை சரி படுத்திக் கொண்டாள். அந்த பேச்சை அங்கேயே கத்தரிக்க விரும்பினாள்.


" இது என்ன சட்னி ஆன்ட்டி.. நல்லா இருக்கே.."


" அதுவா வேர்க்கடலை சட்னி. அங்கிளுக்கு பிடிக்கும்.. இந்த வீட்ல ஒவ்வொருத்தருக்கும் பிடிச்ச மாதிரி வகை வகையா சமைக்கனும்ம்மா.. வரப்போற என் மருமகள் பாவம்.." ரோகிணி பேசிப் பேசி அந்த டாபிக்கிற்கே வருவது மித்ராவுக்கு அழுகையை மூட்டியது.


ரோகிணி மௌனமாய் சிரித்துக்கொண்டார். இப்போதே மாமியார் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தார்.


" உன்னை மாதிரி நல்லா சமைக்கிற பொண்ணா இருந்தா நல்லம்.."


' அந்த பொண்ணே நீயா இருந்தா நல்லம்னு சொல்லுங்கம்மா..' அவள் மனசு பதில் சொன்னது. 'நீ முதலில் அவனிடம் காதலையே சொல்லவில்லை மித்ரா!' என்று மண்டைக்குள் உறைத்தது.


" ஆன்ட்டி நவிலன் போயிட்டாரா?"


" அவனா.. எங்க வீட்ல இருக்கான் ஒழுங்கா.." ரோகிணி பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரது செல்போன் அலற அதை நோக்கிப் போனார் ரோகிணி.


"ஓ..."என்று சப்தம் வராமல் இழுத்தாள்.


' நவிலன்.... எங்க போயிட்டிங்க.. என் கூட ஆடுற இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவே இல்லையா? நான் என்னோட லவ்வை உங்ககிட்ட சொல்லனும்.. என் மனசை உங்களுக்கு புரிய வைக்கனும்.. ' என்று அதுவரை மனசுக்குள் நினைத்துக்கொண்டு இருந்தவள், "ச்சே.. இன்னைக்கும் உங்களை பார்க்க முடியாதா...?" என்று கடைசி வசனத்தை மட்டும் வாய்க்குள் சற்று சத்தமாக முணுமுணுத்தாள்.


"என்னம்மா சொன்ன...?" அந்த போன் காலை அதற்குள் கத்தரித்து விட்டு வந்த ரோகிணிக்கு அது தெளிவாக கேட்டிருந்தது.


"அது..அது.. சொல்லவந்ததை விட்டுட்டு என்னமோ பேசிக்கிட்டு இருக்கேன். அம்மா இன்னைக்கு அவங்களோட ஃப்ரெண்ட் மகளுக்கு சமைச்சு எடுத்துட்டு போனாங்க. அதுக்காக குலாப் ஜாமுன் செஞ்சாங்க. நவிலன் அன்னைக்கு விரும்பி சாப்பிட்டாரேனு அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் வந்தேன்." என்று ஒரு டிபன் பாக்ஸை எடுத்து மேஜையில் வைத்தாள்.


பாமா தன்னுடைய தோழியின் மகளின் வளைகாப்புக்கு ஐராவதத்தை தனியே விட்டுவிட்டு செல்ல முடியாது என்று செல்லவில்லை. கோபித்துக்கொண்ட அந்த தோழியை சமாளிக்க இனிப்பாக குலாப் ஜாமுன் செய்து எடுத்துக்கொண்டு போயிருந்தார். அன்று வருண் வீட்டில் இருந்ததால் ஐராவதத்துக்கு உதவியாக இருந்தான்.


" அப்படியா..? அன்னைக்கு எல்லாமே நல்லா இருந்திச்சு.. முக்கியமா நண்டு வறுவல் நல்லா இருந்திச்சிம்மா...." என்று வருங்கால சம்மந்திக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வந்தார் ரோகிணி.


சாப்பிட்ட தட்டுளை கழுவிவிட்டு மேஜையை சுத்தம் செய்துகொண்டே தயங்கித் தயங்கி கேட்டாள்.


"நவிலன் எங்க போயிருக்கார்?"


"அவன் எங்கயும் போகலை... வீட்லதான் இருக்கான்..."


"ஓ.. அப்படியா..." அவளையும் அறியாமல் நவிலனின் 'ஓ' இப்போது அவளை தொற்றிக்கொண்டது. அவன் 'ஓ..' சொல்லும் போது அது ஒருவித ஸ்டைலாக இருக்கும். சில்லென்ற ஐஸ்கிரீமை தின்னும் போது அது தொண்டையில் இறங்கும் போது ஏற்படுமே ஒரு உணர்வு. அப்படி இருக்கும்.


"அவன் ஸ்டடி ரூம்ல இருப்பான்... போய் பாரும்மா.. மேல போயிட்டு .."


" ரைட்ல திரும்பனும்.. அதானே.." அன்று ஒருதரம் வந்தபோது மனதிற்குள் குறித்துக்கொண்டதை ஞாபகப்படுத்தி சொன்னாள்.


" ம்.. பரவாயில்லயே.. வீடு முழுக்க தெரிஞ்சிருக்கு.. போய் பாரு.." என்று மித்ராவுக்கு வழிவிட்டார் ரோகிணி.


அவள் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது. அதை கவனித்த ரோகிணி சத்தம் வராமல் சிரித்துக்கொண்டார்.


படிகளில் மெதுவாய் ஏறி வலதுபுறம் இருந்த அறை வாசலில் நின்று " ஓ.... வாவ்......" என்று உற்சாகத்துடன் கூவினாள்.


அவள் குரலில் பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை கீழே நழுவவிட்டுவிட்டு அவன் விழித்தான். மித்ராவின் ஸ்கூட்டி சத்தம் கேட்கவும் படிகளில் ஏறி ஓடிவந்தவன் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவனது ஆபிஸ் அறை அதுதான். ஆனால் அது ஒரு மினி லைப்ரரி. சுவரின் நான்கு பக்கமும் நெருக்கமாக அடிக்கப்பட்டிருந்த ராக்கைகளில் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்கள் சூழ தான் அவன் மேஜை. ஒரு ஓரமாக ஒரு சாய்வு நாற்காலி. எதிர் மூளையில் பெரிய ஜன்னல்களை ஒட்டி இரட்டை சோஃபா. அந்த ஜன்னல்களை திறந்து விட்டால் வெளிச்சம் வந்து சேர, தென்றல் காற்று வருடிச்செல்வது நிச்சயம்.


அவள் அவனை கண்டுகொள்ளவேயில்லை.சுவர் முழுவதும் ஷெல்ப்களில் அடுக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை மேயத்தொடங்கினாள்.


வரிசைப் படி அத்தனை அழகாய் நேர்த்தியாய் அவை அடுக்கப்பட்டிருந்தன. பெரிய எழுத்தாளர்களின் நூல்கள் தொட்டு, புது வெளியீடுகள் வரை இருந்தன. அவள் காதலுடன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.


"உனக்கு புக்ஸ்னா பிடிக்குமா மித்ரா...?" என்று அருகில் வந்து அவள் காதுக்குள் கேட்டான். மிக நெருக்கத்தில் அந்த உஷ்ணகாற்றை அனுபவித்தவள், அந்த நெருக்கமான தாக்குதலில் மிரண்டு வேகமாய் திரும்பி அவன் மீதே மோதிக்கொண்டாள். அவள் கீழே விழாமல் தன் கைகளால் சுற்றி அவளைப் பிடித்துக்கொண்டான் நவிலன். ஹீரோவுக்கேயுரிய செயல் அல்லவா அது.


அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அழகாய்த் தான் இருந்தது. அதிர்ச்சியில் விரிந்த அவளது கண்களுக்கு இன்று சற்று அதிகமாக மையிட்டிருக்க வேண்டும். அவள் இமைகள் படபடத்து பட்டாம்பூச்சியை ஞாபகப்படுத்தின. வலது கன்னத்தில் புதிதாய் பிறந்திருந்த முகப்பருவையும் தாண்டி அந்த கன்னங்கள் சிவக்கத்தொடங்கின. அவள் இதயம் வேகமாய் அடித்துகொண்டது அவனுக்கு கேட்டிருக்க வேண்டும். எச்சில் விழுங்க சிரமப்பட்டாள். மெதுவாய் அவளை விடுவித்தான்.


என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் கண்களும் உருண்டன. அவனுக்கு சிரிப்பாய் வந்தது.


"உனக்கு புக்ஸ்னா பிடிக்குமானு கேட்டேன்..." மீண்டும் கேள்வியை ஞாபகப்படுத்தினான்.


உடனே அவள் சகஜமானாள்.


"ம்... ரொம்ப பிடிக்கும். புக்ஸ்னா எனக்கு உயிர். இவ்ளோ புக்ஸ்.... இதெல்லாம் யாரோடையது...?" என்று மிட்டாயைக் கண்ட குழந்தை போல கேட்டாள். அவளது கைகள் வருடிக்கொடுத்த ஒவ்வொரு புத்தகத்தையும் அவன் ஆசையோடு வருடி வருடி படித்திருக்கிறான். அந்த புத்தகங்கள் இந்நேரம் எத்தனை சுகத்தை சுகிக்கும் என்று நினைத்து அவன் பொறாமைப்பட்டான்.


"இதெல்லாம் என்னோட கலெக்சன் தான். அம்மாவும் வாசிப்பாங்க. அப்பாவும் எப்பவாவது நேரம் கிடைக்கும் போது வாசிப்பார். நான் டைம் இருக்கப்ப கண்டிப்பா ஏதாச்சும் வாசிப்பேன்..."


"ஓ..." அவள் இத்தனை புத்தகங்களை கண்ட வியப்பிலிருந்து இன்னும் வெளி வந்திருக்கவில்லை.


"நீ எப்படி...?" அவன் அவளுக்கு நெருக்கமாகவே நின்று கொண்டு இருந்தான்.


"ம்.. என்ன...?" என்றாள். அப்படிக் கேட்ட போது அவளது புருவங்கள் உயர்ந்து கீழிறங்கியது வண்ண வானவிலை நினைவுப்படுத்தியது.


"புக்ஸ் விஷயத்தில் நீ எப்படினு கேட்டேன்..."


"ஓ... அதுவா.. சாப்பாடு இல்லாம கூட இருப்பேன். ஆனா புக்ஸ் இல்லாம இருக்கவே மாட்டேன். இந்த மாதிரி ஒரு லைப்ரரியை என்னோட ட்ரீம் ஹவுஸ்ல வைக்கனும்... அதுவும் என்னோட பெரிய கனவுகள்ல ஒன்று.. ஐ லவ் புக்ஸ்... பேசாம இங்கயே இருந்திடலாம்னு தோணுது." என்று குதித்துக்கொண்டு குழந்தையாய் பேசினாள்.


அவனுக்கு அந்த பதில் பிடித்திருந்தது. 'இவளை இப்படியே இங்கேயே வைத்துக்கொண்டால் என்ன...?' என்று திட்டம் தீட்டினான்.


"உனக்கு வேணும்ங்கிற புக்ஸை எடுத்து வாசி. வேணும்னா வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போ..."


"நிஜமாவா..? " மான் குட்டியின் மருண்ட விழிகளை ஞாபகம் செய்தன அவள் விழிகள்.


"ம்ம்... அதான் சொல்றேன்ல.. எடுத்துக்க..."


சந்தோஷமாக பிடித்த புத்தகங்கள் ஐந்தை பொறுக்கி எடுத்தாள். பக்கத்தில் இருந்த நோட்புக்கில் அவற்றின் பெயர்களை குறித்து வைத்துவிட்டு அவனைப் பார்த்தாள்.


'இது எதுக்கு...' என்பது போல் அவளைப் பார்த்தாள்.


" இந்த புக்ஸ் எல்லாம் எங்கனு யாரும் தேடக்கூடாது இல்ல.. அதுக்குத் தான்... "


"ஓ..."என்று இழுத்தான். 'யாரும் தேடக்கூடாதாம்..' அந்த ' யாரோ' அவன் தான் என்று அவள் வாயால் சொல்ல அப்படி ஒரு தயக்கமாம். ஆனால் அவன் சொன்ன அந்த ' ஓ..' அவளுக்கு பிடித்திருந்தது.


"மித்ரா!" அவன் மேற்கொண்டு புத்தகங்களை பார்வையிட்ட போது அவளது பின்புறம் இருந்து குனிந்து அவளது காதுக்குள் அழைத்தான்.


"ம்..." அவள் நல்ல மனநிலையில் இருந்தாள்.


"வா! இன்னொரு இடம் இருக்கு. உனக்கு காட்டுறேன்..."


திரும்பினாள். இந்த தடவை மோதலை தவிர்த்துக்கொண்டாள். "எங்க..? " என்றாள்.


"கேள்வி கேட்காம வா.. நான் ஒன்னும் உன்னை கடிச்சி சாப்பிட மாட்டேன்..." அப்படி சொல்லும் போதே அவன் அவளை கடித்துத் தின்பது போல கற்பனை செய்தாள். அவளுக்கு சிரிப்பு வந்தது. ஓசையின்றி இதழ் விரித்தாள்.


புத்தகங்களை அணைத்துக்கொண்டு மௌனமாய் பின் தொடர்ந்தாள். அவள் மார்போடு அழுந்திக்கொண்டு வந்த அந்த புத்தகங்களாக தான் இருந்திருக்க கூடாதா என்று அவன் ஏங்கிக்கொண்டே அவளை மொட்டை மாடிக்கு கூட்டிகொண்டு போனான். அதை பார்த்து அவள் அடுத்த 'வாவ்..'சொன்னாள். அன்றைய தினம் அது இரண்டாவது ' வாவ்' .


மாடியில் கிரீன் ஹவுஸ் செய்து வைத்திருக்கப்பட்டிருந்தது. ஏராளமான சிகப்பு ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அவள் கண்களாலேயே அவற்றை பருகினாள்.


"எவ்வளவு அழகா இருக்கு.. இத்தனை ரோஜாக்களா... ரொம்ப அழகா இருக்கு நவிலன்...ஐ லவ் ரெட் ரோசஸ்.." என்று ஆசையாக அவை ஒவ்வொன்றாக தடவிப்பார்த்தாள். அவனுக்குள் அவளது கன்னத்தை தடவ வேண்டும் என்று எழுந்த ஆவலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.


"ரொம்ப சூப்பரா இருக்கு. உங்க வீடே ஒரு மேஜிக் மாதிரி இருக்கு... ஒரு அன்பான அம்மா, ஃப்ரெண்டிலியான அப்பா, கடல் மாதிரி ஒரு லைப்ரரி, அழகான இந்த ரோஜாக்கள்.. இது யாரோட வேலை..?" அவனை தவிர்த்துவிட்டு அத்தனையையும் சொன்னதை அவன் நினைத்து சிரித்தான். ஆனால் அவள் சந்தோஷத்தை அவன் ரசித்தான்.

"என்னோட வேலை தான்.. எனக்கு ரொம்ப பிடிச்சவங்ளுக்கு ரெட் ரோஸ் பிடிக்கும். அதுனால எனக்கும் பிடிக்கும்.. "என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.


அவள் கண்களில் சிரிப்பு மின்னிட்டது.


"ஓ.. அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் உங்களுக்கும் பிடிக்குமோ..." என்றாள்.


"ம்..."


" ம்ம்.. அவங்க ரொம்ப லக்கி பர்சன்...." அவளுக்கு அது யாரென்று தெரியாதாம்.


'அது நீதானடி...' என்று நினைத்தான்.


"வேற என்னவெல்லாம் பிடிக்கும் அவங்களுக்கு.." மித்ரா.


"இப்பத்தான் ஒவ்வொன்னா தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன். போகப் போக தெரிஞ்சிக்க வேண்டியது தான்...." என்றான்.


"அவங்களுக்கு எல்லாத்தையும் விட உங்களைத் தான் ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா..."


முதலில் இதை சரியாக புரிந்துக்கொள்ளாதவன், பின்னர் புரிந்து சந்தோஷத்துடன் திரும்பும் போது அவள் அங்கிருக்கவில்லை. பூனை போல் நகரத்தொடங்கியிருந்தாள். ஓடிச்சென்று அவள் கைகளைப் பிடித்தான். தன்புறம் திருப்பி அவள் தோள்களை இறுக்கமாய் பற்றினான்.


"எ..என்ன சொன்ன நீ.. எனக்கு பிடிச்சவங்களுக்கு.. ரொம்ப பிடிச்சது நானா...? யு மீன்.. எனக்கு பிடிச்சது யாருனு தெரியுமா உனக்கு..."


தெரியும் என்று மேலும் கீழுமாய் தலையாட்டினாள். அப்போது ஆடிய அவளது ஜிமிக்கி காதை முத்தமிட பரபரத்தன அவனது உதடுகள்.


"அப்போ.... "என்று பரபரத்தான்.


அவள் நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அது பல சேதி சொன்னது அவனுக்கு. சிவந்த இதழ்கள் புன்முறுவல் பூத்தன.


அவள் எதுவும் யோசிக்காமல் ஏதோ ஓர் தைரியத்தில் எம்பி அவன் கன்னத்தில் முத்தமொன்றை பதித்துவிட்டு, " ஐ லவ் யூ நவிலன்!" என்று சொல்லி விட்டு அவன் அதிர்ச்சியில் இருந்து வெளிவரும் முன்னர் ஓடியே போய்விட்டாள்.


நவிலன் அப்பா சீக்கிரமாக வர சொன்னதையும் மறந்துவிட்டு லவ் லோகத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.


ஆட்டம் தொடரும்..❤?
 
Last edited:
Nice epi dear.
Yedi,idili enna pakkathu continent la irrunthu import ah pannuranga??? Normal food.
Rohini eppadi check vachu corner panni irruku, engakitaye va??? Mamiyarakkum. podi,podi....
Enn aalu illaya nu kelkum guts irruka???athu vittu uncle irruku tha,aattu kutty irruku tha nu kelku thu, manasukula pattimandram nadathittu irruku thu maanguni.
Library, rose garden ellam vachu oruvazhiya proposal nadanthuduchu.... theyvame...... avanonu rachichu.
Irrunthalum kushi la kadamai ya maranthu allo monae, appa pavam wait seyum allo.
 
Nice epi dear.
Yedi,idili enna pakkathu continent la irrunthu import ah pannuranga??? Normal food.
Rohini eppadi check vachu corner panni irruku, engakitaye va??? Mamiyarakkum. podi,podi....
Enn aalu illaya nu kelkum guts irruka???athu vittu uncle irruku tha,aattu kutty irruku tha nu kelku thu, manasukula pattimandram nadathittu irruku thu maanguni.
Library, rose garden ellam vachu oruvazhiya proposal nadanthuduchu.... theyvame...... avanonu rachichu.
Irrunthalum kushi la kadamai ya maranthu allo monae, appa pavam wait seyum allo.
Thank you for your lovely review Leenu ❤️.
இட்லி is my favourite. So என் எல்லா கதையிலும் இட்லிக்கு இடம் உண்டு.?
 
Top