Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-23

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -23

நாள் முழுக்க பித்து பிடித்தவனாய் நடமாடிக்கொண்டு இருந்தான் நவிலன்.

" சார்..! இதுல கையெழுத்து தப்பா போட்டிருக்கிங்க.." என்றவாறு அந்த சிகப்பு ஃபைலை நீட்டினாள் அவனது செக்கரட்ரி வனிதா. உடனே அவளுக்கு வயது இருபத்தைந்தாக இருக்கும். அவளுக்கு பாஸ் மீது கண்கள் என்று கணக்கு போடக்கூடாது. இப்படியான இன்னல்களை தவிர்க்கவே அந்த முப்பத்தெட்டு வயது வனிதாவை நியமித்தான். கணவனை இழந்த பெண். இரண்டு பெண் குழந்தைகள். அந்த ஒரு காரணத்துக்காகவே ரெஸ்யூம் பார்த்ததும் வனிதாவை மனதுக்குள் குறித்து வைத்துக் கொண்டான் அவன். சரி அந்த வனிதா கதையை விடுவோம். ஹீரோவின் கதைக்கு வருவோம்.

" ஓ... தப்பா போட்டுட்டனா?" வாங்கி பார்த்தவன் அதிர்ந்தான். அப்படியொரு பெருந்தவறு. அவனுடைய கையெழுத்துக்குப் பதிலாக மித்ரா என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தான். நல்லவேளையாக அதை பார்த்தது வனிதா. வேறு யாராவது பார்த்திருந்தால் அவனது மானம் கொடியாக பறந்திருக்கும்.

" ஓ... ஏதோ வேற ஞாபகத்தில்.." வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள் சிக்கித் தவித்தன. மித்ரா அங்கு வந்து போனதும் அவனோடு அமர்ந்து உணவு உண்டதும் ஆபிஸில் காட்டுத் தீயாய் பரவியிருந்தது. காதலில் இது சகஜம் என்று அறிந்த வனிதா பாஸை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

வனிதா நகர்ந்ததும் தலையில் அடித்துக்கொண்டான் நவிலன்.

அவனுக்கு மித்ரா தன் கன்னத்தில் முத்தமிட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. அவள் முத்தமிட்ட அந்த நொடி அவன் இந்த உலகத்திலேயே இருக்கவில்லை. சொர்க்கலோகத்தில் மித்ராவின் கைபிடித்து டூயட் பாடிக்கொண்டு இருந்தான். பாடிய பின் அவளை தூக்கி சுழற்றினான். அவள் வெட்கத்துடன் கைகளை கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் ஓடிவிட்ட பிறகும் அவன் சிலையென அங்கேயே தான் நின்று கொண்டு இருந்தான். அவள் தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டது உணர்ந்து நிலைகொள்ளாமல் தவித்தான். உடனே அவள் தன் கைப்பிடிக்குள் வேண்டும் என்று தோன்றியது. அவள் மூக்கோடு மூக்குரசி நெற்றி தேய்த்து தன் காதலை கடத்த வேண்டும் என்று மனம் பரிதவித்தது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு கீழே ஓடிவந்தபோது மித்ரா பறந்திருந்தாள்.

" என்னடா.. என்னாச்சு.. ஏன் இப்படி ஓடி வாற.. அவ ஏன்டா ஓடோடி போனா? எதாவது செஞ்சிட்டியா?" ரோகிணி தன் பங்குக்கு பதறி கேட்க, வெட்கத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை ஒருகையால் கோதினான். தலையை குனிந்து சிரித்தவாறே காரை கிளப்பிக்கொண்டு ஆபிஸ் போய் விட்டான்.

போகும் போது சும்மா இருப்பானா? அவளுக்கு அழைப்பெடுத்தான்.

" மித்ரா..!"

அந்தப்பக்கம் வெட்கம் கலந்த அவள் குரல் தேனாய் இனித்தது. எத்தனை தேனீக்களின் உதவியோடு இனிப்பாக உருவாகிய குரலோ அது.

" நவிலன்..!" ரோஜாப்பூ பேசினால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது அவள் அவனது பெயரைச் சொன்னபோது.

" நிஜமாத்தான் சொன்னியா?"

" என்னது..? நான் என்ன சொன்னேன்.." பதில் கேள்வி கேட்டாள். அவளது சீண்டல் ஆரம்பித்தது.

" லவ் யூ சொன்னியே.."

" நான் எப்ப சொன்னேன். " அவனோடு விளையாடினான்.

" என்னடீ.. விளையாடுறியா.." அவன் டீ போட்டு பேசியது அவளுக்கு ஐஸ்கிரீம் மழையில் நனைந்து கொண்டு இருந்தது போல் இருந்தது. யோசிக்காமல் சொன்னாள்.

" ஐ லவ் யூ நவிலன்...!"

வண்டியை ப்ரேக் அடித்தான். அவள் ஒரேயடியாக இப்படியான ஷாக் ட்ரீட்மெண்ட் தருவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

" என்ன சொன்ன.. என்ன சொன்ன.. நிஜமாத்தான் சொல்றியா..?" பரபரத்தான்.

" மறுபடியும் நேர்ல வந்து சொல்லடுமா நவிலன்..?" அவள் குரலில் இருந்த காதலை அவன் உணர்ந்தான்.

" சொல்வியா. ? எனக்கு உன் கண்ணைப் பார்க்கனும்.. உன் கையை பிடிக்கனும்.. உன் உதட்டோரம் முத்தமிடனும்.." காதல் தாபத்தை வார்த்தைகளில் கொட்டினான் நவிலன்.

அந்தப்பக்கம் அவளோ கால்விரல்களால் சிமெட்டு தரையில் கோலமிட்டுக் கொண்டு இருந்தாள்.

" ஒழுங்கா ஆபிஸ் போய் வேலையை செய்ங்க. ஈவினிங் மீட் பண்ணலாம்.." தேவி கட்டளையிட்டாள்.

" நான் ஆபிஸ் போகனுமா மித்ரா.." அப்பா அவசரமாய் வரச்சொன்னதை மறந்துவிட்டு பேசினான்.

" ம். போய்த்தான் ஆகனும்..வேலையையும் கொஞ்சம் கவனிக்கனும் நவிலன்.."

" உன்ன கவனிப்பதை விட வேற வேலை உண்டா கண்மணி.."

அவன் இப்படி பேசப்பேச அவளுக்குமே உடம்பும் மனசும் நிலைகொள்ளாமல் தவித்தது.

" என்ன மித்ரா.. எதுவுமே பேச மாட்டிக்கிற.."

" இப்படி பேசினா எப்படி பதில் பேசுறதாம்.." வெட்கத்தில் அவளது முகம் சிவந்திருக்க வேண்டும்.

" இன்னும் இன்னும் பேசனும் மித்ரா.. இப்பவே உன்னைப் பார்க்கனும் போல இருக்கு.."

" எனக்கும்தான்.. " என்றாள்.

" வரட்டுமா..?"

" நோ.."

" ஏன்டீ.." அவன் குரலில் இருந்த தாபம் அவளை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

" உங்க அப்பா தேடுவார்.. வேலையை முடிச்சிட்டு போன் பண்ணுங்க.. வாரேன்.."

" உத்தரவு தேவி.."

அந்தப்பக்கம் அவள் சிரித்து சில்லறைகளை சிதறவிட்டாள்.

தேவியின் உத்தரவுபடியே அவன் ஆபிஸ் வந்தான். அவனால் வேலையில் ஒட்டவே முடியவில்லை. மாற்றி மாற்றி பெயரைச் சொல்லி கூப்பிட்டான். தப்பாய் கையெழுத்திட்டான். ஆறிப்போன காபியை குடித்தான். அப்பாவின் அறைக்கு பதிலாக அடுத்த அறைக்கு போனான். இப்படி அவன் அவனாகவே இல்லை. இதை தந்தையும் கவனித்திருக்க வேண்டும்.

அவனுடைய அறைக்கு வந்தார். ஏனெனில் அந்த சிவப்பு ஃபைலை அவர் ஏற்கனவே பார்த்திருந்தார். அவரிடம் இருந்து தான் வனிதாவின் கைகளுக்கு சென்றது.

அவனோ தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து கண்ணாடியூடாக தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தான். என்னென்னவோ கனவுகள் வந்து அவனை ஆட்கொண்டன. புதுசாய் வெட்கப்பட்டான். ஆண்கள் வெட்கப்பட்டால் அது ஒரு தனி அழகு. அதை பார்க்கும் அதிஷ்டம் அப்போது அவளுக்கு இருக்கவில்லை.

" நவிலா..!" வாசனின் அழைப்புக்கு பதில் இல்லை.

" மகனே..!"

பதிலில்லை. அவன் முதுகில் ஒரு அடி வைத்தார் தந்தை. திடுக்கிட்டு திரும்பினான்.

" எந்த உலகத்துல இருக்க கண்ணா..!"

பதட்டத்தில் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

" ப்பா... " நாக்கு குளறியது.

" என்னப்பா.. நான் வந்தது கூட தெரியாம என்ன யோசனை..?"

" அதெல்லாம் எதுவும் இல்லப்பா.."

" ஏதோ பேய் அடிச்சவன் போல இருக்க.. ஆர் யூ ஓக்கே?"

" ஆ.. ஆ.. ஐ ஆம் ஓக்கே ப்பா.."

" உடம்புக்கு ஏதாவதா?" தந்தை விடாமல் கேட்டார்.

' இல்லப்பா.. மனசுக்குத்தான்..' என்று மனதோடு நினைத்தான்.

தந்தைக்கு என்ன புரிந்ததோ." நீ வீட்டுக்கு கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்.."

" அப்பா.. அந்த லன்ச்க்கு போக சொன்னிங்களே.."

" நான் போய்க்கிறேன். என்னோட வேலைகள் முடிஞ்சிருச்சு.."

" இல்லப்பா.. நான் லன்ச்க்கு போறேன்.."

" நான்தான் சொல்றேன்ல.. கிளம்பு.."

' டேய்..! அப்பாவே கிளம்ப சொல்லிட்டார். எஸ்கேப் ஆகிருடா நவிலா..' என்று மைண்ட் வாய்ஸ் சொல்ல அங்கிருந்து கிளம்பினான். அவன் நேராக வீட்டுக்கா போகப்போகாறான்.? இல்லை என்று ஊருக்கே தெரியும்.

அவனது வண்டி நேராக ' விக்டரி ஆட் ஏஜென்சி ' வாசலில் போய் நின்று மூச்சுவிட்டது. காரிலிருந்தவாறே அவளுக்கு அழைப்பெடுத்தான்.

" மித்ரா..! பிஸியா இருக்கியா?"

பார்த்துகொண்டு இருந்த புது விளம்பரத்துக்கான வேலையை மதனின் தலையில் கட்ட நொடிப்பொழுதில் முடிவு செய்தாள்.

" இல்ல நவிலன்.."

" ஒரு அரைநாள் விடுப்போடு வர முடியுமா உன்னால??" தயங்கி தயங்கி கேட்டான்.

" இதோ.." யோசிக்காமல் சொன்னாள். தீபக் மெஹராவிடம் லீவு கேட்டாள்.

" என்னம்மா .. அடிக்கடி லீவு எடுக்கிற.. அப்படிப்பட்ட ஆள் இல்லையே நீ.." அவர் சந்தேகம் கேட்டார்.

' அப்ப லவ் பண்ணல சார்..' என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் கேட்ட விடுப்பு கிடைத்தது. அவசர அவசரமாக படியிறங்கி வர யோசித்து லிஃப்ட்டில் நுழைந்து கிரவுண்ட் ஃப்ளோர்க்கு வந்தாள். வாசலுக்கு வந்து அவனை தேடினாள். அவன் காருக்குள் இருந்தான். அவளைக் கண்டதும் இறங்கி வந்து அவளை கண்களாலேயே குடித்தான்.

அவள் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். காரின் கதவை திறந்து " ஏறு மித்ரா.." அன்போடு சொன்னான். இயந்திரம் போல அவன் சொன்னபடி ஏறினான். கீழே தொங்கிய அவளின் புடவை தலைப்பை எடுத்து அவளிடமே பத்திரப்படுத்தினான். அந்த சின்ன செயல் அவளுக்கு பிடித்திருந்தது.

அவனுக்கு வாய்ப்பு தராமல் அவளே சீட் பெல்ட்டை போட்டுக்கொள்ள, தன்னுடைய சீட் பெல்ட்டை போட்டு வண்டியை கிளப்பினான். அவனோடு எத்தனையோ தரம் வண்டியில் வந்திருந்தாலும் அன்று அவளுக்குள் ஒருவித பதட்டம் தொற்றிக்கொண்டது.

அவனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒரு இடம் வேண்டும். அதுவும் தனிமையில் அவளோடு பேச ஒரு இடம் வேண்டும். அவளை எங்கு கூட்டிக்கொண்டு போவது என்று தெரியாமல் அவளிடமே கேட்டான்.

" எங்க போகலாம் மித்ரா .!"

அவளோ " பசிக்குது நவிலன்" என்றாள்.

'எனக்கும் தான் டீ.. பசிக்குது.. '

'அரையடி தூரத்தில் ஐஸ்கிரீமாய் நீயிருந்தும் பட்டினியாய் நான்..!' வைரவரிகள் நினைவுக்கு வந்தது.

அவளின் பசி தீர்க்க அவளை அங்கு கூட்டிச் சென்றான். அது கொஞ்சம் உயர்ரக உணவகம். மெனு கார்டை பார்த்தாலே பசி பறந்துவிடும்.

" இங்கேயா..?" என்றாள் அவள்.

"எனக்கு பிடித்த இடம்.." தயங்கியபடியே சொன்னான். அவனுக்குத் தெரியும் அவள் மிகவும் எளிமையை விரும்புபவள். ரோட்டுக்கடை தேநீரை ரசித்து குடிப்பவள். முதல் நாளே தன்னுடைய விருப்பத்தை அவள் மீது திணிக்கிறோமோ என்ற எண்ணம் உதயமானது அவனுக்குள். உடனே வண்டியை ஸ்டாட் செய்தான்.

"என்னாச்சு?"

" வேற எங்கயாவது போகலாம் மித்ரா.."

" ஏன்.."

" காரணம் எதுவுமில்லை.." என்று அவன் சொன்னாலும் அவள் ஊகித்தாள்.

" இங்கேயே சாப்பிடலாம் நவிலன்.." ஸ்டியரிங் மீதிருந்த அவனது கைமீது தன் கையை வைத்தாள் ப்ளாக் டெவில்.

அவன் அடங்கினான்.

அந்த மேஜையில் அவர்கள் எதிரும் புதிருமாக அமர்ந்து இருந்தார்கள்.
அன்று அவள் கறுப்பு சேலை. சின்னதாய் இரண்டு ஜிமிக்கிகள். மெல்லிசாய் ஒரு தங்கச்சங்கிலி. ஒரு கையில் வாட்ச். மறுகையில் ஒரு ஒற்றை வளையல். லூஸ் ஹேரில் விட்டிருந்ததால் கூந்தலை ஒதுக்க வேண்டியிருந்தது. அவளது உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஆராய ஆரம்பித்தான் நவிலன்.

பிறை நெற்றியில் லேசான வியர்வை மழை ஆரம்பித்து ஏசி குளிரில் உடனே அடங்க ஆரம்பித்திருந்தது. அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி மின்னலடித்தது. அந்த செவ்விதழ்கள் ரோஜா இதழ்களை யாரே திருடி வைத்தது போல இருந்தது. அப்போது தான் அவன் கவனித்தான். அவளது கழுத்தில் காதுக்கு கீழே ஒரு மச்சம். அந்த ஜிமிக்கி உரச ஏதுவாய் ஒரு மச்சம். ஆண்டவன் வைத்த திருஷ்டிப்பொட்டு. உடனே அவன் சிந்தனை எங்கெங்கோ ஓடியது. அந்த மச்சத்தில் இதழ் பதித்து.. அதை கடிவாளமிட்டு நிறுத்தினான். அப்படியே கீழறங்க அவனுக்கு பயமாய் இருந்தது. அவள் கண்டுகொண்டால் காளியாட்டம் ஆடுவாள். அது நினைவுக்கு வந்ததும் நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான். அதிர்ந்தான்.

அவளும் அவனைத் தான் அளவெடுத்துக்கொண்டு இருந்தாள். அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பருகிக்கொண்டு இருந்தாள். இருவரும் கட்டுக்கடங்காத காதலில் தவித்தனர். அவர்களை மீட்டெடுக்க இடையூறாக ஆர்டர் எடுக்க வந்துவிட , " நீயே ஆர்டர் பண்ணு மித்ரா!" என்று வாய்ப்பளித்தான்.

"நானா?" என்றவளுக்கு 'ஆம்' என்று தலையசைத்தான்.

அவனது மனது அறிந்தவள், ஆர்டர் செய்த ஐட்டங்களைப் பார்த்த போது அதிர்ந்தான். அவை அத்தனையும் அவனுக்கு பிடித்தவை. ரோகிணி மூலம் அவள் கேட்டு அறிந்தவை. அவன் குளிர்ந்தான்.

இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளாவிட்டாலும் அவர்களது கண்கள் ஆயிரமாயிரம் கதைகள் பேசின. மேஜை மீது இருந்த அவளது விரல்களின் நுனியை தொட்டான்.

" ஸ்.. ஆ..." என்றான்.

" என்னாச்சு?"பதறினாள்.

" ஷாக் அடிக்குது.." அவன் சொல்ல லேசாய் அவன் கைமீது அடி வைத்தாள்.

" இப்படி பேசினா நீ அடிப்பியா இருந்தா இன்னும் கொஞ்சம் பேசுவேன்.." என்று அவன் சொன்னபோது கன்னங்கள் சிவக்க கீழே குனிந்தாள்.

" மித்ரா...!"

" ம்.."

" லவ் யூ.."

" நானும்.." என்றாள்.

" லவ் யூ சொன்னா பதிலுக்கு லவ் யூ சொல்லனும்.." என்றான்.

" அதுக்கு இது இடம் இல்ல நவிலன்.." என்று தாங்கள் பொது இடத்தில் இருப்பதை ஞாபகம் செய்தாள்.

" தப்புதான் தேவதையே.. சாப்பிட்டதும் உன்னை கடத்திக்கொண்டு போகப்போகிறேன்.." என்றான்.

அவள் தலை குனிந்தாள். அதற்கு மேலும் அவளை வெட்கப்பட வைத்து சாகடிக்க விரும்பாமல் அமைதி காத்தான் அவன். அவர்களுக்கான உணவு வந்துவிடவே சாப்பிட ஆரம்பித்தார்கள். அவனே அவளுக்கு பறிமாறியது அவளுக்கு பிடித்திருந்தது. அவனுடைய சின்ன சின்ன செயல்களிலும் ஒளிந்து இருந்த அக்கறையை அவள் கண்கூடாக பார்த்து ரசித்தாள்.

அதிகம் பேசவேயில்லை இருவரும். ஏனென்றால் அவர்கள் பேச வேண்டிய பேச்சு இன்னும் இன்னும் இருந்தது. ஆனால் அந்த நேரம் அதே இடத்துக்கு வந்த அந்த நபரின் கண்கள் அவர்கள் இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்ட பாஷையை அவதானித்தன. அது வேறு யாரும் இல்லை. அது...


ஆட்டம் தொடரும் ❤️?

 
Nice epi dear.
Yedo monae, randu perum azhaga parugungo,allama chopsticks kondu thundu podungo, aana athu ellam veetilo,veru engo irrunthu seyanum athu vittu thanna maranthu car la travel pannuthu,sudden break poduthu, ellam seri alla matrayavar uyir avaravarukku mukkiyam allo.
 
Hero,heroin paarvai kondu ,opponent ah azhaga varunichu ezhuthu moolam vera level ah unaravaikireengo.very nice explanation( varnanai super. nalla oru feel kondu varuthu. Nice, nice. ) aana continuity la konjam miss aaguthu. For example last epi proposal la mudicheengo aana intha epi office la aarambam aaguthu adutha paragraph la antha proposal oda second part(feelings)continue aaguthu.
This is series so entha point la epi mudiyutho athey point la next epi start aagumpol continuity miss illathu script clear ah ,smooth ah pogum.
Ithu audio visual series allalo, so script crystal clear ah irrukum pol romba suvarasiyam ah irrukum.
It's just my suggestion. If I disappointed you sorry for my comments.
 
Hero,heroin paarvai kondu ,opponent ah azhaga varunichu ezhuthu moolam vera level ah unaravaikireengo.very nice explanation( varnanai super. nalla oru feel kondu varuthu. Nice, nice. ) aana continuity la konjam miss aaguthu. For example last epi proposal la mudicheengo aana intha epi office la aarambam aaguthu adutha paragraph la antha proposal oda second part(feelings)continue aaguthu.
This is series so entha point la epi mudiyutho athey point la next epi start aagumpol continuity miss illathu script clear ah ,smooth ah pogum.
Ithu audio visual series allalo, so script crystal clear ah irrukum pol romba suvarasiyam ah irrukum.
It's just my suggestion. If I disappointed you sorry for my comments.
Thank you for your suggestion Leenu. ஆனால் எழுத்துச் சுதந்திரம் னு ஒன்று இருக்கு. என்னோட ஸ்டைல் தான் என் எழுத்துக்கு அழகுனு நம்புறவ நான் . கதையின் தொடர்ச்சி எங்கு ஆரம்பிக்கிறது என்பது முக்கியமில்லை. எப்படி கதை நகர்கிறது என்பதே முக்கியம். I' ll try my best. Anyway thanks.?
 
Last edited:
Top