Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா -24

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -24


' மொத்தமாக சாப்பிட வேண்டும் உன்னை..! '


நவிலன் அப்படி நினைத்தபோது அது அறிந்தோ என்னவோ அவள் நிமிர்ந்து பார்த்தாள். புருமுயர்த்தி ' என்ன?' என்று கேட்டாள்.

'புருவமுயர்த்தி வாள் வீசுகிறாய் என்னை வீழ்த்த...!'


அவன் அடுத்து யோசித்தான்.


சங்கமித்ரா ஐஸ்க்ரீமை சுவைத்துக் கொண்டு இருந்தாள். அவள் உதட்டோரம் ஒட்டியிருந்த ஐஸ்க்ரீமை துடைக்க ஆசைப்பட்டான் நாயகன். அவனது ஸ்டைலில். ஆனால் ஒரேயடியாக அவளை ஆக்கிரமிக்காமல் அமைதி காக்க விரும்பினான். அதனால் அவளது உதட்டை சுட்டிக்காட்டினான்.


மறுபடியும் வாள் வீசினாள் அவள்.


" உதட்டோரம்.. ஐஸ்கிரீம்.." நிறுத்தினான்.


வெட்கத்தோடு துடைத்துவிட்டு சிரித்தாள்.


' ம்ம்.. ஒரு ஸ்டோபர்ரிப்பெண் ஸ்டோபர்ரி ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாள்.. ஐயோ.. ஐயோ.. அரையடி தூரத்தில் ஐஸ்கிரீமாய் இருக்காளே..' அவன் மனம் ஏங்கியது. அவனுக்கு வேண்டியதெல்லாம் அவள் கைபிடித்து அவள் சொல்லுப்போகும் ஒரு 'லவ் யூ' வை கேட்கவேண்டும் என்பது தான்.


மாலை மங்கும் நேரமாதலால் சாப்பிட்டபின் அவர்கள் காதல் தளமான கடற்கரையை தேர்ந்தெடுத்து அங்கு நகர்ந்தார்கள்.


கடற்கரை மணலில் அமர்ந்ததுமே அவள் "ஐஸ்கிரீம்" என்றாள்.


அவள் சாப்பாட்டு விஷயத்தில் பயங்கரமாய் இருப்பது கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. சிவகார்த்திகேயனின் மெரீனா படம் ஞாபகத்துக்கு வந்தது. அதில் ஓவியாவின் அலப்பறைகள் ஞாபகத்துக்கு வந்தன.


ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அவள் சாப்பிடும் அழகைத்தான் ரசித்துக்கொண்டு இருந்தான் இப்போது.


'அடுத்து என்ன?' என்பது போல அவன் அவளைப் பார்க்க, அவள் உடனே அவன் தோள் சாய்ந்து அவன் கைகளை தன் கைகளோடு கோர்த்துக்கொண்டாள்.


அவளது திடீர் தாக்குதலை எதிர்கொள்ள தெரியாமல் அவன் தடுமாறினான். அவனுடைய உள்ளங்கை வியர்த்தது.


" எதுக்கு இப்போ கை வியர்க்குது நவிலன்.." உள்ளங்கையில் ரேகைகள் மீது ரேகை வரைந்தாள்.


" டென்ஷன்.." டென்ஷனோடே சொன்னான்.


" என்ன டென்ஷன்..?"


" பக்கத்துல நீ இருக்கியே.. அந்த டென்ஷன்.."


" அப்போ நான் போயிடட்டுமா..?" என்றாள்.


" ஹேய்.. கொல்லுவேன்.. " என்றான் அவன்.


அவள் டெலிபோன் மணிப்போல் சிரித்தாள். அவனுடைய கண்களைப் பார்த்த போது ஏதேதோ பேசத் தோன்றியது அவளது நாவிற்கு. இருப்பினும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அந்த வார்த்தைகளைத் தான் அவள் உதிர்த்தாள்.


" ஐ லவ் யூ நவிலன்..."


" என்ன.. என்ன.. திரும்பச் சொல்லு.."


" எத்தனை தடவை சொல்ல சொல்விங்க .." சிணுங்கினாள்.


" என் ஆயிசுக்கும் நீ சொல்ற லவ் யூ வை கேட்கனும் மித்ரா ... எப்பவும் என் கூடவே இருப்பியா..?"


" இதென்ன கேள்வி நவிலன்.. என்னுடைய எல்லாமும் நீங்கதான்.. உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்கிட்டதுக்காக மன்னிப்பு கேட்கிறேன். "


" தேவதைகள் மன்னிப்பு கேட்க கூடாது.." என்று அவள் இதழ் மூடினான். இதழ்களால் இதழ் மூடத்தான் அவனுக்கும் ஆசை. ஆனால் அவள் ஆடுவாள் காளியாட்டம்.


" தேவதையா? நானா?" சந்தேகம் வெளியிட்டாள்.


" ம்... தேவதைகளின் தேவதை நீ.."


" இதை தேவதைகளின் தேவதை கேட்டா கவலைப்படுவா.."


" பொறாமைப்படுவாள்.."


" ஐயோ நவி... இதென்ன இப்படியெல்லாம் பேசுறிங்க.. எனக்கு என்னமோ பண்ணுது.." கைகளால் கண்களை மறைத்தாள். அவளது மாம்பழ கன்னங்கள் கனிந்தன.


அவளுடைய அந்த அழகான வெட்கத்தை அவன் பருகினான். அப்படியே தீராத அவள் பேரழகை தனக்குள் பதுக்கினான்.


" அப்படி பார்க்காதிங்க நவி..." அவன் இப்போது அவளுக்கு' நவி' யாக சுருங்கி நெருங்கியிருந்தான்.


" பார்ப்பேன்.. நீ எனக்காவள்.. நான் பார்க்காம யாரு பார்ப்பா..?"


" சரி.. பாருங்க.. ஆனா சுற்றி இருக்கவங்க நம்மளை பார்ப்பாங்க.. அதுவும் ஞாபகத்தில் இருக்கட்டும்.."


" அது யாருக்கு தேவை..? " அவன் சொல்லிட்டு அவளை நெருங்கி அமர்ந்தான்.


" சரி சொல்லு.. எப்போ இருந்து என் மேல காதல் வந்திச்சாம்..?"


அவள் என்னவென்று சொல்வாள். அவனை முதன் முதலில் பார்த்து ரசித்த போது என்றா? அவனோடு நெருங்கி பழக ஆரம்பித்த போது என்றா? அவனுடைய சின்ன சின்ன அன்பை அனுபவித்த போது என்றா? அவன் வீட்டில் அவளுக்கு அவன் அளித்த முக்கியத்துவத்தை அனுபவித்த போது என்றா? அல்லது அவன் அவளை தவிர்த்தபோதுதான் என்று சொல்வாளா? பதில் சொல்ல தெரியாது தடுமாறினாள்.


" சரியா சொல்ல தெரியல நவி.. ஆனா நீங்க யூ எஸ் போனப்போ உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். அதுக்கு பெயர் தான் காதல்னு பிறகு தான் புரிஞ்சிச்சு. நீங்க என்னை அவாய்ட் பண்ணப்போ வலிச்சிச்சு.. ராத்திரியெல்லாம் உட்கார்ந்து அழுதுருக்கேன்... தேம்பி தேம்பி அழுதுருக்கேன். நான் உங்களை தவிர்த்தப்போ நீங்க எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருப்பிங்கனு புரிஞ்சிச்சு.. ஸாரி நவி.." அவளது கண்கள் கசிய ஆரம்பித்தன.


" ஹேய்.. இப்ப எதுக்கு நீர்த்தேக்கத்தை திறந்து விடுற.. " வேடிக்கையாக பேசி அவளது கண்களை துடைத்தான். அவன் தொட்டதும் அவளுக்கு அடித்தது ஷாக்.


" லவ் யூ நவி.." என்று அவன் கைக்கு அழுத்தம் கொடுத்தாள்.


" நவி.. அழகாத்தான் இருக்கு..." என்று அவளைப் போல சொல்லிப் பார்த்தான். அதற்கு லேசாய் அவன் மீது அடி போட்டாள்.


" எல்லாமே கனவு மாதிரி இருக்கு மித்ரா.. நாம ஆக்ஸிடென்ட்ல மோதிக்கிட்டது.. நீ கத்தினது.. மன்னிப்பு கேட்டது.. சந்தியா ஃபங்ஷன்ல மீட் பண்ணினது.. நண்பர்களானது.. நான் லவ்வை சொன்னது.. நீ முடியாதுனு சொன்னது.. என்னை ஏங்க விட்டது.. நான் உன்னை தவிக்கவிட்டது.. இதோ.. இப்ப நீ என் கைப்பிடிக்குள்ள இருக்க.. "


" நம்ம லவ் ஸ்டோரி அழகா இருக்கு இல்ல.. " என்றாள்.


" ஆமா.. நம்ம கதை வில்லன் இல்லாத கதை.. " என்றான்.


" அடடா.. அப்போ நம்ம கதைல வில்லன் வர மாட்டாரா?" குறும்பாய் கேட்டாள்.


" ம்ஹூம்.. வாய்ப்பே இல்லை.. எத்தனை காலம் தான் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க ஒரு வில்லனோ வில்லியோனு வழக்கமான கதையை படிப்பாங்க வாசகர்கள். கொஞ்சம் இயல்பாக மனதுக்குள் இதமாக படிக்கட்டுமே நம்ம கதையை.. காதலை சொல்ல முதலே நாம மோதியாச்சு.. இனி கல்யாணத்துக்கு அப்புறம் வேற இடத்தில் மோத வேண்டியது தான் பாக்கி.." என்ற போதே அவள் அவனை இடித்தாள். அவன் பேச்சை கத்தரிக்காள். கெட்டிக்காரி.


" நம்ம கதைக்கு வில்லன் இருக்காரு நவி.."


" யாரு..?"


" ஹிட்லர்.." என்றாள்.


அந்த நேரம் வீட்டில் ஐராவதம் மித்ராவின் ஜாதகத்தை எடுத்து ஐயர் சொன்ன குருபலன் எவ்வளவு நாட்களுக்கு இருக்கின்றது என பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் ஒருபக்கம் இருக்கட்டும்.


" சரி சொல்லு மித்ரா. உன்னோட கனவுகள் என்ன?"


அந்த கேள்விக்கு அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள் மித்ரா. இதுவரை அவளுடைய கனவுகள் என்னவென்று யாருமே கேட்டதில்லை. அவளும் யாரிடமும் சொன்னதில்லை.


" ஹேய். நீ ராத்திரி காணுற கனவை கேட்கல.. உனக்குனு ஒரு ஆசை இருக்கும்ல.. அதை கேட்டேன்.."


" லவ் யூ நவி.. இதுவரை யாரும் என்னோட கனவுகள் என்னனு கேட்டதில்லை.."


" அதுக்கு தான் இனி நான் இருக்ககேனே.. சொல்லு.."


" சொந்தமா ஒரு ஆட் ஏஜென்சி ஆரம்பிக்கனும். பெருசா ஒரு போர்ட் வைக்கனும்.. மது பெயர்ல..." என்றாள். அக்காவின் ஞாபகம் வந்து போனது.


" நிச்சயம் ஒருநாள் உன் கனவு நிறைவேறும்.." அவன் நினைத்தால் அடுத்த நாளே அவள் விரும்பிய கம்பெனியை ஆரம்பித்து அவளை ராணியாய் நியமிக்க முடியும். ஆனால் அவள் அதை விரும்ப மாட்டாள். அவளுடைய உழைப்பில் அவள் மேலெழும்பவே விரும்புவாள். அதற்கு தானும் அவளை ஆதரிக்க வேண்டும் என்று அப்போதே கங்கணம் கட்டிக் கொண்டான்.


" உங்க கனவுகள் என்ன நவி?"


" ஒரு பின்தங்கிய கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்க ஒரு ஹாஸ்பிடல் கட்டி எல்லா தேவைகளையும் செய்து கொடுக்கனும் மித்ரா.. அவ்ளோ தான்.."


" என்ன..?" என்று அதிசயத்தாள் அவள்.


" என்ன.. அப்படி பார்க்கிற.. நினைச்சா அப்பாவோட காசுல நாளைக்கே பண்ணலாம். ஆனா நான் உழைச்சு.. என்னோட காசுல தான் அதை செய்யனும்.. உன்னைப் போலவே.. எப்படியோ தலை நரைச்சு வயசானாலும் செய்திடுவேன்.. ஹேய் நான் கிழவனானா அழகா இருப்பேனோ என்னமோ.." என்று கலகலப்பாக்க முயற்சித்தான்.


" உங்க கனவுல என்னையும் இணைச்சிக்கிறிங்களா நவி.. சேர்ந்தே நிறைவேற்றுவோம்.."


அவள் பதிலில் அவன் குளிர்ந்தான். ஒரு கணம் கண்களை இறுக மூடி திறந்தான். ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.


" நீ தேவதை மித்ரா..!"


" ஐயோ.." வெட்கத்தின் ரேகையை படர விட்டாள்.


" இந்த மாலை மங்கும் மயக்கமான பொழுதுல நீ வெட்கப்படுறப்போ ஜொலிக்கிற மித்ரா. "


" ஐயோ. நவி.. போதும்.. முடியல.."


" எனக்கும் தான் முடியல.. " பெருமூச்சு விட்டான்.


" வீட்டுக்கு போகலாமா நவி.. நேரமாச்சு.."


" போகணுமா ...?" அவன் கேட்ட தொனியில் அவன் மடியிலேயே அமர்ந்து கொண்டாள் என்ன என்று ஒரு கணம் யோசித்து கற்பனை செய்து பார்த்து கன்னம் சிவந்தாள் நாயகி.


" பின்ன வீட்ல தேட மாட்டாங்களா நவி.."


" தேடுவாங்க தான்.. தேவதை என்றால் தேடுவாங்க தான்.."


" ஐயோ. நவி.. இதென்ன எப்ப பார்த்தாலும் தேவதை தேவதைனு சொல்லிக்கிட்டு . எனக்கு ஒரு மாதிரி இருக்கு.."


" உண்மையை திரும்பத் திரும்ப சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை தேவதையே.."


" மறுபடியுமா..?"


" சரி.. நான் கிளம்புறேன்.." அவள் எழுந்த போது அவள் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டான். அவளோ நெளிந்தாள். அதை ரசித்தவன் " சரி வா.. உன்னை வீட்ல விடுறேன்.."


" ஐயையோ.." என்று கத்தினாள்.


" என்னாச்சு?"


" என்னோட ஸ்கூட்டி.. ஆபிஸ் வாசல்ல அநாதையா கிடக்கும்.."


" இப்பதான் ஞாபகம் வந்திச்சோ.. " என்று சொல்லிய நவிலன் சத்தமாக சிரிக்க அருகில் இருந்த ஓரிருவர் திரும்பிப்பார்க்க மித்ரா அவனை முறைத்தாள்.


" சரி சரி. முறைக்காத.. வா.. கிளம்பலாம்.."


காரில் போகும் போது தான் மித்ரா அவனைப் பார்த்து அந்த கேள்வியை கேட்டாள்.


" அடிக்கடி எனக்குத் தெரியாம எங்க வீட்டுக்கு வந்துட்டு போனிங்களே.. ஏன்?"


" யாரு உனக்கு தெரியாம வந்தது..? நான் வந்தப்போ நீ வீட்ல இல்ல.. அவ்வளவு தான்.."


" ஓ.. அப்படியோ.." அவன் அழகாக சமாளித்த விதம் கண்டு உள்ளுக்குள் சிரித்தாள். வண்டி ஓட்டிக்கொண்டு இருந்த அவனைப் பார்த்து கொண்டே வந்தாள். அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் அவன் பார்வையை திருப்பாமல் பாதையில் தன் கண்களை பதிந்திருந்தான்.


' டேய்.. டேய். நான் உன்னை பார்க்கிறேனு தெரியுது தானே.. நான் பார்க்கிறதை நீ பார்க்கிற தானே.. அதை ரசிக்கிற தானே..கள்ளன்..!' என்று அவனை காதலோடு மனசுக்குள் சங்ஹாரம் செய்தாள் மித்ரா.


மித்ரா சிரித்துக்கொண்டே பார்வையை ஜன்னலுக்கு வெளியே ஓடவிட்ட போது, அவன் அவளைப் பார்த்தான். அவளை அள்ளிகுடிக்க வேண்டும் போல எழுந்த ஆவலை அடக்க வெகு சிரமப்பட்டான்.


வெளியே பார்க்கும் போது காற்றுக்கு ஆடிய அவள் ஜிமிக்கி உரசிய அந்த கழுத்து மச்சத்தில் ஒரு முத்தமிட்டால் என்ன என்று யோசித்து, காரின் வேகத்தை சற்று குறைத்து அதை செயல்படுத்திவிட்டான்.


வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு , உடம்பெல்லாம் சிலிர்த்தது. அந்த திடீர் முத்தத்தில் தன்னை இழந்தாள். அந்த நொடிநேர போதையில் மூழ்கி முத்தெடுத்த அவனோடு அவளும் இணைந்துக்கொண்டாள். வண்டி ஒரு ஓரமாய் நின்றிருந்தது. அந்த இருள் சூழ்ந்த வேளையில் நடமாட்டம் இல்லாத சாலையில் ஒரு சினிமா ஓட தயாரானது.


நவிலன் இன்னும் கொஞ்சம் முன்னேறினான். அவனுடைய கைகள் அவள் இடைநோக்கி படை எடுத்தன. ஏசி குளிரையும் தாண்டி அவன் கைகள் கதகதப்பாக இருந்தன. அவள் உடம்போ சில்லிட்டு இருக்க ஐம்பது கிலோ ஐஸ்கிரீமாய் இருந்தாள் அவள்.


கழுத்திலிருந்து மேலேறிய அவன் இதழ்கள் அவளது காதோரம் சென்று தன் விளையாட்டை ஆரம்பித்தன. அவளோ நடுங்கினாள்.


" மித்ரா..."


' ஓ... என்ன குரல் இது...' என்று கிறங்கி யோசித்தவள் "ம்..." என்றாள்.


" லவ் யூ டீ.."


அவள் பதில் எதுவும் சொல்லாமல் அவன் கண்களுக்குள் கதிர்வீச்சு வீசினாள்.


தாமதிக்காமல் அவள் இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் நவிலன். மறுப்பேதும் காட்டாமல் அவனோடு லயித்திருந்த மித்ரா சொர்க்கத்தில் மஞ்சத்தில் இருந்தாள். அவள் கன்னங்களை தாங்கிப் பிடித்திருந்த அவனுடைய உள்ளங்கையில் அனல் நீர் பட்டதும் சட்டென சுதாரித்து விலகி அவள் முகம் நோக்கினான்.


" என்னாச்சு மித்ரா.. ஸாரி. ஏதோ... அவசரத்துல..."


அவள் பதில் பேசாது அவனை கட்டிக்கொண்டாள்.


" சந்தோஷத்துல அழுதேன்ப்பா..."


அவளை ஆதரவாய் அணைத்தவன் நெற்றியில் முத்தமிட்டான். மூக்கின் நுனியில் முத்தமிட்டான்.


" வா.. போகலாம்.."


அவளை வீட்டில் இறக்கிவிட்ட போது "வீட்டுக்கு வாங்களேன் நவி..." என்று அழைப்பு விடுத்தாள்.


" நேரமாச்சு.. இனி அடிக்கடி வர வேண்டி இருக்கும்.. வருவேன்.." என்று சொல்லி விட்டு கண் அடித்துவிட்டு கிளம்பினான்.


மித்ரா ரொம்பவும் சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையை கண்டதும் அப்படியே பியூஸ் இறங்கிய பல்பு போல சுருதி இறங்கி தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள். கதவை மூடிக்கொண்டாள். கதவுக்கு பின்னால் அவள் போட்ட ஆட்டம் யாருக்கு தெரியப்போகிறது.


மித்ரா அப்போதே ஒரு முடிவு எடுத்தாள். தன்னுடைய காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லிவிட வேண்டும். அவர்களுடைய அனுமதியுடன் தான் தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும். மதுபாலா செய்த தவறு போல எந்த தவறும் செய்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். விடிந்தால் அப்பா அம்மாவோடு பேச வேண்டும் என்று முடிவு கட்டிக்கொண்டாள்.


என்னது? மித்ரா அப்பாவோடு பேசப்போகிறாளா? அதிர்ச்சியா? ஆமாம். பேசப்போகிறாள்.


ஆட்டம் தொடரும் ❤️?

















 
Nice romantic epi.
Oru vazhiya love u solliyachu, missions completed.
Villan vera venum???hospital um,sooniyamum seri sontha kasila than vachukiveengale pinnae entha.
Kalyanam katti ya pinnae, devathai rakhchasi aagiduva.... nee wait pannu avasara pattu aananthathil dam open pannarathu.
 
Nice romantic epi.
Oru vazhiya love u solliyachu, missions completed.
Villan vera venum???hospital um,sooniyamum seri sontha kasila than vachukiveengale pinnae entha.
Kalyanam katti ya pinnae, devathai rakhchasi aagiduva.... nee wait pannu avasara pattu aananthathil dam open pannarathu.
Thank you for your lovely review Leenu ❤️
 
Top