Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா! -28

Advertisement

பா.ரியா

New member
Member


அத்தியாயம் -28

"என்ன .. அவ உங்களை தூது அனுப்பினாளா?" பாமா கேட்ட முதல் கேள்வியிலேயே அதிர்ந்தார் மங்களா.

" அதெல்லாம் இல்லையே.." உண்மையை மறைக்கும் வித்தை அறியாத மங்களாவின் கண்கள் திருதிருவென விழித்தன.

" அண்ணனும் தங்கையும் ரூம்ல பேசிக்கிட்டு இருந்ததை நானும் கேட்டேன்.. அவ அனுப்பினதா சொன்னிங்க தானே.." தன் நார்த்தனாரை விடாமல் பிடி பிடித்தார் பாமா.

" அவ பாவம் அண்ணி.. நீங்க ஏன் முரண்டு பிடிக்கிறிங்க..? அண்ணன் எல்லாத்தையும் சொன்ன பிறகும் உங்களுக்கு அவங்க குடும்பம் மேல நம்பிக்கை வரலயா..?"

" நம்பிக்கை இல்லாம இல்ல மங்களா.. அவங்களும் நல்ல மாதிரியா தான் பழகுறாங்க. இவ வாயும் சும்மா இருக்காது. போற இடத்துல ஒழுங்கா இருக்கனும்ல.. அதான் என்னோட பெரிய பயமே.. அவங்களோ பெரிய இடம்.."

" என்ன அண்ணி நீங்க.. பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசிக்கிட்டு இருக்கிங்க.. மித்ரா படிச்ச பொண்ணு. நிதானமா நடந்துக்குற பக்குவம் உள்ள பொண்ணு. நீங்க இன்னும் அவளை சின்ன பொண்ணாவே நினைச்சிக்கிட்டு இருக்கிங்க.."

" ஏதோ எல்லோரும் ஒன்னு சேர்ந்துக்கிட்டிங்க.. நடக்குறது நடக்கட்டும்.. அவ சந்தோஷமா இருந்தா போதும்.."

" அப்ப உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம். அப்படித்தானே...?" குரலில் ஆர்வம் தொனிக்க கேட்டார் மங்களா.

" சம்மதம்.." வாய் திறந்து சொன்ன பாமாவை ஆதரவாய் அணைத்துக்கொண்டார் மங்களா.

பாமா ஒருவழியாய் தன் சம்மதத்தை தெரிவித்தது அறைக்குள் அந்த சம்பாஷனையை கேட்டுக்கொண்டு இருந்த ஐராவதத்தின் காதில் தேனை ஊற்றியது போல இருந்தது.


வீட்டின் பின்புறம் இருந்த மைதானத்தில் வாலிபால் விளையாடிக்கொண்டு இருந்த வாலிபர்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சங்கமித்ரா சேத்தன் பகத்தின் 'ரெவல்யூஷன் 2020' நாவலின் இருநூற்றி நாற்பத்து இரண்டாவது பக்கத்தை திருப்பினாள்.


அவள் தலையை நிமிர்த்தினாள். அவள் முகம் என்னை நம்பிக்கையோடு பார்த்தது.
நான் அவள் தலையைக் கோதினேன். " நீ என்னை எப்படிப் பார்த்துக்கொள்வாய்; அதற்கு ஏங்குகிறேன்" என்றாள்.
எங்கள் முகங்கள் மிக நெருக்கமாக இருந்தன. சுவாசம் விடும் இடைவெளிதான். அவ்வளவு நெருக்கம் என்னைத் திகைக்க வைத்தது. என்னால் பேச முடியவில்லை.
" நான் கஷ்டப்படும் சமயத்தில் எனக்குப் பேச யாருமே இல்லை. நன்றி." என்றாள்.
கங்கையின் சாரல் எங்கள் மீது தெளித்தது. என் முகத்தை முன்னே செலுத்தும் கட்டாயத்தில் இருந்தேன்.என் உதடுகள் அவள் உதடுகளை ..


அடுத்த வரியை படிக்கவிடாமல் பாமா அறைக்குள் நுழைந்தார்.

மித்ரா தன் கற்பனைகளுக்கு குறுக்காய் வந்த அம்மாவை சொல்லமுடியாத கோபத்தில் முறைக்க ஆரம்பித்து
" தொல்லை பண்ணிட்டேனா மித்ரா.." என்ற பாமாவின் கேள்வியில் சட்டென அடங்கினாள்.

" இல்லம்மா.." புன்னகைத்தாள்.
வந்து மகளின் கட்டிலில் அமர்ந்தார் தாய்.

" என்னம்மா..? என்ன பேசனும்?" தாயின் நோக்கம் அறிந்து கேட்டாள் மித்ரா.

" நவிலன்கிட்ட சொல்லி நேரம் இருக்கும் போது அவங்க வீட்டு ஆட்களை வரச்சொல்லு.. மேற்கொண்டு பேசலாம்.."

" ம்மா.. நெஜமாத்தான் சொல்றிங்களா??" கண்களை அகல விரித்து ஆச்சர்யப்பட்டாள் மித்ரா.

" ம்.. ஆமா.. எல்லாருக்கும் விருப்பம். நான் மட்டும் குறுக்கே நிற்க முடியாதே.."

" என்னம்மா. அப்ப உங்களுக்கு விருப்பம் இல்லையா?"

" அப்படியெல்லாம் இல்ல மித்ரா.. ஏதோ ஒரு தயக்கம். அவ்வளவு தான். நீ போற இடத்துலே ஒழுங்கா நடந்துக்க.. உனக்கு எதுனாலும் நாங்க இருக்கோம்.. சரியா?"

" ம்மா.. நவிலன் வீட்ல எனக்கு ஏதோ பயங்கரமா கொடுமை நடக்க போற மாதிரி பேசுறிங்க.. சிரிப்பு தான் வருது.."

" ச்சீ.. சும்மா கூட அப்படி சொல்லாத. இது பெத்த மனசு. பலவாறும் யோசிக்கும். எந்த காரணத்துக்காகவும் உன்னை இழந்துட கூடாதுங்கற பயம்தான்.."

" உங்க பயம் அநாவசியமானது. அப்படியே எது நடந்தாலும் என்னால் சமாளிக்க முடியும்மா.. அதுக்கான தைரியமும் தன்னம்பிக்கையும் என்கிட்ட இருக்கு. பக்குவமா நடந்துக்குவேன்.. உங்க பெயரை காப்பாற்றுவேன். " மகள் தைரியமாக பேச பேச பாமாவின் முகமும் இன்னமும் தெளிவடையாமல் இருந்தது.

" ம்மா.. காதலர்களுக்கு ரெண்டே ரெண்டு விஷயத்துல மட்டும் தான் எதிர்ப்பு வரும். ஒன்று அந்தஸ்து. ரெண்டாவது ஜாதி. என் விஷயத்துல ரெண்டுமே எனக்கு எதிர்ப்பாதான் இருக்கு. இது எதுவுமே பொருட்படுத்தாம தான் நானும் நவிலனும் காதலிக்க ஆரம்பிச்சோம். கல்யாணத்துக்கு பிறகு இது ரெண்டுல ஏதோ ஒரு விஷயம் கொஞ்சம் அடிப்பட்டா தான் மற்றது அங்கே பிரச்சனையா மலரும். அது வாய் தகராறா ஆரம்பிச்சு.. சண்டையா மாறும். ஆனா நாங்க ரெண்டு பேரும் அப்படிப்பட்டவங்க இல்லம்மா.. நவிலனை எனக்கு பார்த்ததும் பிடிச்சிருச்சுனு பொய் செல்ல மாட்டேன். இந்த ஆம்பளைங்களே பொல்லாதவங்கனு நம்பிக்கிட்டு இருந்த என் மனசுல ஒரு ஆண் எப்படி இருப்பான் என்ற நம்பிக்கை விதையை விதைத்து உறுதுணையாக இருந்தவர் நவிலன். அவரோட குணங்கள் ரொம்பவும் உயர்ந்ததும்மா.. நாங்க நினைச்சா யாரோட விருப்பமும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட முடியும். ஆனா அது எங்க விருப்பம் இல்ல.. உங்க எல்லோரோட ஆசிர்வாதமும் வேணும். இது கூட நவிலனோட விருப்பம் தான். 'யாரும் வேண்டாம்.. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் நவி' னு சொன்னப்போ என்ன சொன்னார் தெரியுமா? ' 'இத்தனை நாள் நம்மளை வளர்த்து ஆளாக்கிய பெத்தவங்க மனசை நோகடிச்சிட்டு ஆரம்பிக்கிற வாழ்க்கை நல்லபடியா இருக்காது மித்ரா. அவங்க சம்மதததோட தான் நம்ம கல்யாணம் நடக்கனும். அதுக்காக எத்தனை வருஷமானாலும் காத்திருப்போம்னு ' சொன்னார். இதுல இருந்தே அவரு மனசு தெரியலையாம்மா.. " அவள் பேசி முடிக்க வருங்கால மருமகன் மீது ஒரு நம்பிக்கை பிறந்தது பாமாவுக்கு .
ஆதரவாய் மகளின் கைமீது தன் கையை வைத்து சொன்னார்.

" நீ சரியான ஆளைத்தான் தெரிவு செய்திருக்க.."

" நான் உங்களை மாதிரி இல்லம்மா.." என்று சொல்லிவிட்டு லேசாய் சிரித்தாள் மித்ரா.

" ரெண்டு போட்டேனா.. அப்பா பாவம் மித்ரா.. அவரு கூட பேசினா என்னவாம்.. அவரு தான் தன்னோடு தப்பை உணர்ந்துட்டாரே.." கணவருக்காக மகளிடம் பரிந்து பேசும் தாயின் கண்கள் அவளுக்கு சொல்ல முடியாத பலவற்றை கடத்தின.

" ம்ம்.. பேசலாம்.." என்று சொன்னவளுக்கு எப்படி தந்தையுடனான பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் பேசியே ஆகவேண்டிய நிலை அவளுக்கு வரும் என்று அவளே எதிர்ப்பார்க்கவில்லை.

அன்று காலையில் பிரதோஷம் என்ற காரணத்தால் பாமா காலையிலேயே கோவிலுக்கு போயிவிட வருண் படுக்கையில் சுருண்டு விராட் கோஹ்லியை கனவில் கண்டுகொண்டு இருந்தான்.

தன்னுடைய அறையில் இருந்து வாக்கிங் ஸ்டிக் உதவியோடு வந்த ஐராவதம் அருகில் இருந்த சோஃபாவில் இடித்து, நிலை தடுமாறி கீழே விழப் போனார். நல்லவேளையாக காபியை ஊற்றிக்கொண்டு கிச்சனில் இருந்து வெளியே வந்த மித்ரா அதைக் கண்டாள். கண்டதும் காபியை தவறவிட்டு பதறி ஓடியவள் தந்தை கீழே விழாமல் தாங்கிக்கொண்டாள்.

"என்னப்பா நீங்க.. ஏதாவது வேணும்னா கூப்பிடலாம் தானே.. நாங்க எதுக்கு இருக்கோம். கீழ விழுந்து அடி பட்டா என்ன ஆகும்.. அடி எதுவும் படலயே..." பதட்டத்துடன் அவரது கால் கை என ஆராய்ந்தாள்.

அங்கு ஒரு நிமிடம் அமைதி நிலவியது. அப்பாவை நிமிர்ந்து பார்க்க, அவர் மகளை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டு இருந்தார். சங்கடமாக உணர்ந்த மித்ரா "இப்படி உட்காருங்கப்பா.." என்று அவரை அமர வைத்து ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை அமைதிப்படுத்தினாள். உண்மையில் அந்த தண்ணீர் அவளுக்குத்தான் தேவையாய் இருந்தது.

" அப்பா மேல கோவம் போச்சா மித்ரா.." குரல் தழுதழுக்க அவர் கேட்டபோது, தொண்டை அடைக்க அவரைப் பார்த்த மித்ராவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. சட்டென அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவர் மடியில் தலை சாய்த்து விசும்ப ஆரம்பித்தாள்.

துயரம் தாளாது ஐராவதமும் கண் கலங்கினார். இருவரும் அழுது ஓயட்டும் என்று கடிகாரம் சற்று தாமதமாய் சுழன்றது போல இருந்தது.

ஆதரவாய் தன் தலையை தடவிக்கொடுத்த மித்ராவுக்கு சின்ன வயதில் மதுபாலாவோடு அப்பாவின் மடியில் யார் அமர்வது என்று சண்டை போட்ட ஞாபகங்கள் வந்து போயின.

" என்னை மன்னிச்சிடுங்கப்பா.. உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..." தவறை உணர்ந்து கேட்ட மன்னிப்பு அது.

" நீதாம்மா என்னை மன்னிக்கனும். என்னுடைய வரட்டு கௌரவத்தாலும் பிடிவாதத்தாலும் இழக்ககூடாததை இழந்துட்டோம். அதுக்கு முழுக்காரணமும் நான்தான்.."

" இல்லப்பா.. எங்க மேலயும் தப்பு உண்டு. உங்க மேல நீங்க முழு பலியையும் போட்டுக்கிறது நியாயமே இல்ல.. என்னையும் மன்னிச்சிடுங்கப்பா.. நான் தான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் உங்க எல்லாரையும்.." அதற்கு மேல் பேச முடியாது தவித்தாள் அவள்.

" சரி அழாதே மித்ரா. என் மகள் பழையபடி எனக்கு கிடைச்சிட்டா அது.. போதும்.. அப்பாக்கு இப்ப ரொம்ப சந்தோஷம்.." அவர் குரல் தழுதழுக்க பேசியபடி அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.
அவள் மீண்டும் அவர் மடியில் சாய்ந்து கொண்டாள். அம்மாவின் மடியில் தலை சாய்த்து விசும்புவதை காட்டிலும் அப்பாவின் மடியில் தலை சாய்த்து விசும்புவது மகள்களுக்கு வரம்.
அந்த நிமிடங்கள் இருவருக்கும் இடையில் இருந்த எல்லா கோப தாபங்களையும் தூர விரட்டிய நிமிடங்கள்.

படுக்கையில் இருந்து கண்களை திறக்க முடியாமல் அரைகுறையாக திறந்து கண்களை கசக்கிக்கொண்டு வந்த வருண் அந்தக் காட்சியைப் பார்த்து பேயடித்தவன் போல நின்று விட்டான். கண்களை அகல விரித்து இமை கொட்டினான்.
' எப்புட்றா..' என்று மீண்டும் மீண்டும் அவன் மண்டைக்குள் ஓடியது.

" ஸ்ப்பா... வெளிய போயிட்டு வாறதுக்குள்ள ..." என்றவாறு உள்ளே நுழைந்த பாமா இரண்டு விடயங்களைப் பார்த்து கோபப்பட்டார்.

" எதுக்குடா பல்லு தேய்க்காம அப்படியே சிலை மாதிரி நிற்கிற.. மணி என்னாச்சு பாரு.. இங்க யாரு காபியை கொட்டினா..?"

இரண்டுக்கும் ஒரே பதிலாய் கைகாட்டினான் வருண்.

அங்கு அழுது அழுது துவண்டிந்த மித்ரா அப்பாவின் மடியில் கண் மூடி சாய்ந்திருக்க ஐராவதம் கண்மூடியவாறு மகளின் தலையில் கை வைத்து அவளது மழலை கால குறும்புகளை நினைவுக்கு கொண்டு வந்து மென் புன்னகையொன்றை பரவ விட்டுக்கொண்டு இருந்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்த பாமா " நான் கும்பிட்ட சாமி கைவிடல.." என்று அத்தனை க்ரெடிட்டையும் இறைவனுக்கு அள்ளி அபிஷேகம் செய்தார்.

அந்த அழகான காட்சியை செல்போனில் படம் பிடித்த வருண் நவிலனுக்கு அனுப்பி வைத்தான்.
அதைப் பார்த்த நவிலனுக்கு சந்தோஷம் தாள முடியவில்லை. அம்மாவிடம் சென்று " ம்மா.. உங்க மருமகளை எப்போ வரவேற்கப் போறிங்க?" என்று ஆரம்பித்தான்.

ஏதோ சந்தோஷ செய்தி என்று உணர்ந்த ரோகிணிக்கு அந்த புகைப்படத்தை காட்டினான். அவரும் மனம் மகிழ்ந்தார்.

அந்த வாரத்தின் இறுதி நாளில் சங்கமித்ராவை பெண் பார்க்கச் செல்ல நவிலனின் குடும்பம் ஆயத்தமானது.

ஆட்டம் தொடரும் ❤️?

 
Top