Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் இறுதி பகுதி

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்



ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தண தந்தண தந்தண தந்தண தந்தானன்னானன்னானே

தந்தண தந்தண தந்தண தந்தண தந்தானன்னானன்னானே

மண்டபத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்த அந்த ஒலி பெருக்கி இது கல்யாண வீடு என்பதை அனைவருக்கும் பறைசாற்ற, மண்டபத்திற்கு உள்ளே அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் கவிஜித் கீதாஞ்சலி இருவரின் திருமணத்திற்காக பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தனர்.

மண்டபத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி அதன் இசையை நிறுத்திவிட நாதஸ்வர வித்வான்கள் தங்கள் இசை மழையை ஆரம்பித்து இருந்தனர்.

நேரம் கடந்து கொண்டே இருக்க தன் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த கவிஜித் மந்திரம் கூறிக் கொண்டிருக்கும் ஐயரைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தான்.

அவன் முறைப்பை எல்லாம் கண்டும் காணாததுபோல் பார்த்துக்கொண்டே அந்த ஐய்யர் தனது மந்திரம் கூறும் பணியை செவ்வனே செய்து கொண்டே இருந்தார்.

அவர் தன்னை கவனித்தும் அதை கண்டுகாெள்ளாமல் தாெடர்ந்து மந்திரம் கூறுவதை பார்த்த கவிஜித் வெளிப்படையாகவே அவரை முறைக்க ஆரம்பித்தான். அவரோ

"மாப்பிள்ளை என்ன பாக்காம கவனமா மந்திரத்தை சொல்லுங்காே." என்று கண்டிக்க, அவனோ மணப்பெண் அறையை நோக்கி ஒரு பார்வையை செலுத்தி விட்டு வேண்டாவெறுப்பாக மந்திரத்தை சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவன் பார்வை செல்லும் திசையை பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு பின்னே நின்ற, கிருபா 12 வயது செல்லமகள் சாகித்யா

"மாமா நீங்க என்னதான் ஆயிரம் முறை அத்தை ரூமை பார்த்தாலும் அவங்க வர வேண்டிய நேரத்துல தான் வருவாங்கன்னு அம்மா சாெல்ல சாென்னாங்க." என்று கிண்டலடிக்க அவளைப் பார்த்து சிரித்த கவி

"குட்டி உங்க அம்மா கிட்ட அத்தையை சீக்கிரம் கூட்டிக்கிட்டு வர சொல்லு, அத்தை வர லேட்டாயிடுச்சு உன்னை இழுத்து பிடித்து உட்கார வைத்து தாலி கட்டுவேன் ஜாக்கிரதை." என்று சாகித்யாவை மிரட்ட அவள் அங்கிருந்து பறந்துவிட்டாள்.

தன் தமக்கைகளான கிருபாலி தீபாலி ரூபாலி மற்றும் அண்ணன் மனைவிகளான விஷாலி மைதிலி புடை சூழ நடுவில் அழகு தேவதையாக நடந்து வந்த கீதாஞ்சலியை பார்த்து கண் இமைக்கவும் மறந்தான்.

தன் அருகில் வந்து கீதாஞ்சலி அமர்ந்த அடுத்த நொடி

"யூ லுக்கிங் காட்ஜியட்ஸ்.." என்று அவள் அழகை பாராட்ட, அவளோ அதை நான் கண்டு கொள்ளவில்லை என்றும் பாவனையுடன் அமர்ந்திருந்தாள்.

'ஒருவேளை நான் கூறியது கேட்கவில்லையாே....!' என்ற சந்தேகத்தில் கீதா கைகளில் தன் கையால் ஒரு அழுத்தம் காெடுத்து கவி மீண்டும் கூற, கீதா

"பெயருக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க நினைச்சவங்க, என்ன பாெய்யா பாராட்டி எதுவும் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை." என்று கூறிவிட்டு யார் கவனத்தையும் கவராமல் தன் கைளை விலக்கிக்காெண்டு சாதாரணமாக தன் முகத்தை வைத்துக்காெண்டாள்.

கவிஜித் கொலைவெறியுடன் தமக்கைகளின் புறம் பார்வையை திருப்ப தமக்கைகள் மூவரும்
'இதற்கு நாங்கள் காரணமல்ல.' என்பது போல் சைகை காட்டிவிட்டு அண்ணிகள் இருவரை நோக்கி தங்கள் கைகளை நீட்ட, அவர்களும்

'அனுபவி ராஜா அனுபவி.' என்பதுபோல கூறிவிட்டு இல்லாத வேலைகளை கவனிக்கும் சாக்கில் மெதுவாக இறங்கி சென்று தம் கணவர்களின் அருகில் நின்று கொண்டனர்.

கவி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு 'இனி என்ன செய்வது....!" என்பது போல அமர்ந்திருக்க அவனருகில் வந்த கிருபா கணவன் சர்வஜித்

"இப்படித்தான் எங்களுக்கும் இருந்துச்சு...!
உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்குன்னா வந்தா தக்காளி சட்னியா...!" என்று கூறிவிட்டு வேகமாக தன் மனைவியின் அருகில் நின்று கொண்டான்.

கீதாஞ்சலி கோபத்திற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல. பெண் பார்க்க வந்த இடத்தில் கவி கீதாஞ்சலியை பிடித்திருப்பதாக உடனே கூறிவிட, மகிழ்ச்சி வானத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த கீதாவிடம் கவி அண்ணன் மனைவிகளான விஷாலி மைதிலி இருவரும் சென்று

"உன் பெயர் 'லி'ன்னு முடியிரதால, உன் பெயருக்காகவே கவி உன்னை பிடிச்சுருக்குன்னு சாெல்லிட்டான்." என்று வெடி ஒன்றை கொளுத்திப் போட்டுவிட்டு சென்றனர்.

காதல் மன்னனான விஷ்வா பிள்ளைகள் ஐவருக்கும் ஏனோ கல்லூரி காலத்திலும் சரி அதன் பின்வந்த நாட்களிலும் பெரிதாக எந்த நாட்டமும் இருந்தது இல்லை.

வேறுவழியில்லாமல் இவர்களுக்கு நாம்தான் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கடமையை விஷ்வா கனலி இருவரும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

தெரிந்தவர்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அந்த சம்பந்தங்கள் எல்லாம் அலசி ஆராய்ந்து விட்டு, டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் விசாரித்து அதில் சில மணமகன் புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் கிருபாவிடம் விஷ்வா வந்து தந்தன்.

கிருபா மேலேட்டமாக பார்த்துவிட்டு தந்தையிடம் வேறேதுவும் கேட்காமல் சர்வஜித்தை பிடித்திருப்பதாக திருமணத்திற்கு சம்மதம் கூறினார்.

பலமுறை கனலி தன் மகளிடம் திருமணத்தில் உனக்கு சம்மதமா? மாப்பிள்ளையை உனக்கு பிடித்திருகிறதா? என்று கேட்க தாயை சமளிக்கவே 'ஜித்' என்று மாப்பிள்ளை பெயர் முடிவதால் பிடித்திருப்பதாக கூறி சமாளித்தாள்.

உண்மையான காரணத்தை தன் கனவரை தவிர யாரிடமும் கிருபா கூறவில்லை.

யாருக்கும் அஞ்சாதா, லஞ்சம் வாங்காத நேர்மையான அசிஸ்டன் கமிஸ்னர் சர்வஜித் IPS பார்க்க நேரும் பாெழுதெல்லாம் தன் தாேழிகளுடன் சேர்ந்து சைட்டித்திருக்கின்றாள்.

கிருபாவிற்கு சர்வஜித் பற்றி அனைத்தும் தெரியும் என்பதாலே தந்தையிடம் எதுவும் கேட்கவில்லை.

14 வயது கவிஜித் இருவருக்கும் இடையே பெயரை வைத்து நாரயனர் வேலை பார்த்து வைக்க, கிருபா தாயிடம் கூறிய பெயர் காரணத்தையும், தான் சைட்டடித்தது பற்றியும் மறைக்காமல் தன் கணவரிடம் கூறவும் செய்தாள்.


கிட்டத்தட்ட கிருபா நிலையிலேயே மற்றவர்களும் நேர்ந்தது.

க்ரிமினல் லாயர் ரூபாலிக்கு படிக்கும் காலத்திலே மாலையிட்டது விஸ்வா தாெழில் நண்பர் அரவிந்த் மகன் ஃபேமஸ் ஸ்பைன் சர்ஜன் சுஜித்.

தந்தை டெக்டைல்ஸ்சை படிப்பு முடிந்து நான்கு வருடம் திறம்பட நடத்திய தீபாலியை ஒருதலையாக காதலித்து மூன்று வருடம் பாேராடி விஸ்வா உதவியுடன் கரம்பிடித்தது, சென்னையிலே சிறந்த ஆடிட்டர் மகேந்திரஜித்.

பாெறுப்பின் சிகரமாக அடுத்த விஸ்வாஜித்தாக செயல்படும் இந்திரஜித் MBA தாய் தந்தையின் கட்டாயத்தால் தந்தை தாெழிலின் தலைமை பதவியை ஏற்றதுடன் தனது பங்காக விளம்பர கம்பெனி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திவந்தான்.

கனலி தனது தாேழி பத்மா மகள் விஷாலி பாெறுப்பையும் தன் மூத்த மகனிடம் ஒப்படைக்க, இந்திரா தற்பாெழுது தந்தை வழி(மனைவியை காதலிப்பது) பின்பற்றும் மகனாகினான்.

நான் மாெறட்டு சிங்கிள் என்று கெத்து காட்டிய கட்டிடக்கலை வல்லுனன் அபராஜித்தை ஆனந்த் தனது மகள் மைதிலிக்கு கட்டி வைத்து, தன் நண்பனுடன் நட்பை உறுதிபடுத்திக்காெண்டான்.

அனைவர் திருமணமும் அடுத்தடுத்த வருடங்களில் நடந்து முடிந்தது. அனைத்து ஜாேடிகளிடமும் பெயரை வைத்து கவிஜித் தன் கை வரிசையை காட்ட சரியான சந்தர்பத்திற்காக அனைவரும் காத்திருந்தானர்

இவர்களில் எல்லாம் கொஞ்சம் மாறுபட்டவனாக கவிஜித் தான் படித்த கல்லூரியில் தனக்கு ஜூனியராக வந்து சேர்ந்த கீதாஞ்சலியை கொஞ்சமே கொஞ்சம் காதலிக்கவும் செய்தான்.

கீதாஞ்சலி படிப்பு முடியும் வரை அவளை தொந்தரவு செய்யாமல் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தான்.

ஆனால் அதை பெற்றோரிடம் எவ்வாறு எடுத்து சொல்வது என்று தெரியாமல் கவி காத்துக் கொண்டிருக்க அவனுக்கு எந்த வேலையும் வைக்காமல் கனலி விஷ்வா இருவரும் கீதாஞ்சலியை பெண் கேட்டுச் சென்றனர்.

இதை எதையும் அறியாத கீதாவிற்கு தன் கல்லூரியில் பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தாலும் பெண்களிடம் வரம்பு மீறாத கவிஜித்தை கீதாஞ்சலிக்கு பிடிக்கவே செய்யும்.

அப்படிப்பட்டவன் தன்னை.... தன் பெயருக்காக மட்டுமே திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதை நினைத்து கோபத்தில் இருந்தாள்.

திருமாங்கல்யத்தை தன் கையில் தந்து மணப்பெண் கழுத்தில் அறிவிக்கும்படி ஐயர் கூற, அதுவரை ஐயரை முறைத்துக் கொண்டு இருந்த கவி புன்னகையுடன் அதை பெற்று தன் காதலியின் கழுத்தில் அணிவித்தான்.

தன் கழுத்தில் விழுந்த தாலியை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த கீதாஞ்சலி தன் கணவனை மட்டும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவள் தன்னை கவனிக்காததால் ஏமாற்றம் அடைந்த கவி அவள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பொழுது அவள் காEpilogu

"ஏய் தேவையில்லாம அண்ணிகள் பேச்சைக் கேட்டு இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருந்தன்னு வை, எல்லோரும் முன்னாடியும் கட்டிப்புடிச்சு லிப் டு லிப் கிஸ் அடிச்சு நான் உன்னை காதலிக்கிறேன்னு நிருபிச்சுடுவேன்..
எப்படி உனக்கு ஓகேவா..." என்று கேட்டு வைக்க

அவன் கூறியதன் அர்த்தம் உணர்ந்து கீதா அதிர்ச்சியுடன் தன் கணவனை பார்க்க அவனோ தன் கண்களை சிமிட்டி மாயக் கண்ணனின் மந்திரப்புன்னகை ஒன்றை பரிசாக வழங்கினான்.

திருமணத்தின் ஒவ்வொரு சடங்குகளாக நடந்து முடிந்ததும் மணமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆயத்தமாகினர்.

குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்ள போட்டோகிராபர் அழைக்க நடுநாயகமாக போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில் கனலி விஸ்வஜித் தம்பதியர் (இருபதில் ஆரம்பித்தாேம் இன்னுமும் முடியலயே என்னாேட லவ் ஸ்டாேரி தான்' என்று இன்றும் காதல் குறையாத காதலர்களாக இருப்பவர்கள்) அமர்ந்துகொண்டனர்.

விஷ்வா வலதுபுறம் கிருபா தனது கணவன் சர்வஜித் மற்றும் தங்கள் பிள்ளைகளான 12 வயது சாகித்யா, 9 வயது சத்யதேவ் இருவருடன் நின்று காெண்டாள்.

அவர்களை அடுத்து ரூபா தன் கணவனான சுஜித் மற்றும் பிள்ளைகளான 8 வயது இரட்டையர்களான சொரூபா சுசித்ரா இருவரையும் தங்களுக்கு முன் நிறுத்திக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.

கனலிக்கு பக்கத்தில் இந்திரா தனது மனைவி விஷாலியுடன் கையில் தங்களது ஒரு வயது மகள் வைஷ்ணவியை வைத்துக்கொண்டு தனது 6 வயது மகன் வைஷாகன்னுடன் நின்று கொண்டு இருந்தான்.

இவர்களை அடுத்து அபராஜித் தன் மனைவி மைதிலியுடனும் தங்களது 4வயது மகன் யுவராஜனுடன் நின்றுகொண்டு இருந்தான்.

விஷ்வாவிற்கு பின்புறம் 8மாத கர்ப்பிணியாக தீபாலி தன் கணவன் மகேந்திராஜித்துடன் நின்றுகொண்டிருக்க, கனலி பின்புறம் கவிஜித் தன் புது மனைவி கீதாஞ்சலியுடன் நின்று கொண்டான்.

புன்னகையுடன் மேடையில் நின்று கொண்டிருந்த இருந்த அனைவரையும் புகைப்படக்கருவி அழகாக உள்வாங்கி கொண்டது.

அனைவரின் முகத்தில் இருக்கும் புன்னகையே விஷ்வா கனலி இருவரும் சிறந்த பெற்றோர்கள் என்பதற்கு சாட்சியாக மற்றவர்களுக்கு அமைந்தது.

நாம் நமக்கான நியாய தர்மத்துடன் வாழும் பாேது வாழ்க்கை தெளிந்த நீராேடையில் செல்லும் ஓடமாக செல்லும்.


ஹலோ பிரண்ட்ஸ்

இதுவரைக்கும் என்னுடைய கதையை படித்து அதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கதையை முழுவதும் படித்து பார்த்த பின்பு அதில் இருக்கும் நிறை குறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன்.

அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது செசிலி வியாகப்பன்
 
Last edited:

Advertisement

Top