Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 1 (2)

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கனலி வெளியேறிய சிறுது நேரத்தில் அலுவலகத்திற்குள் கம்பீரமான வேக நடையுடன் வந்தான் விஸ்வஜித். அதுவரை மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்களும், தங்கள் பார்வையை வேறுபுறம் திருப்பி கவனத்தை அலையவிட்டு கொண்டிருந்தவர்களும், விஸ்வஜித்தின் கம்பீரமான காலடி சத்தம் கேட்டு வேலை செய்யும் பாவனையில் தங்கள் தலைகளை கம்ப்யூட்டர் திரையில் ஆழ்த்திக் கொண்டனர்.

விஷ்வஜித் 32 வயது, ஆறடியையும் தாண்டிய உயரம், உடற்பயிற்சியின் காரணமாக தேவையற்ற சதை பிடிப்பின்றி கட்டுக்காேப்பான உடல் பாேர் வீரனை பாேன்றிருக்க, பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வருபவன், கனவில் மட்டுமே. நிஜத்தில் பெண்களை பாெருத்த வரை விஸ்வஜித் துர்வாச முனிவர்.

சிரிக்க மறந்த உதடும், இறுகிய முகமும், அனைவரையும் எடை பாேடும் பார்வையுமாக வலம் வரும் விஸ்வாஜித், தன் முகமூடி இன்றி பேசும் நபர் இருவர் மட்டுமே.

விஷ்வஜித்தின் அந்த முக மூடியின் பின் இருக்கும் விஸ்வாவை அறிந்தவன் ஆனந்த் மட்டுமே. ஆனந்த் விஷ்வாவின் உயிர் நண்பன். இருவரும் எம்பிஏ வெளிநாட்டில் ஒன்றாக படித்தவர்கள்.

ஒரே நாடு ஒரே மொழி என்பதே முதலில் பொதுவான விஷயமாக இருக்க, பின்னாளில் இருவரின் ரசனையும் ஒன்றுபட நட்பும் இருவரின் நட்பும் வலிமையடைந்து.

விஸ்வஜித் படிப்பு முடிந்ததும் தன் தந்தையின் தொழிலை கையில் எடுத்துக்கொள்ள, ஆனந்திற்கு சென்னையில் தனக்காக காத்திருந்த குமார் எக்ஸ்பாேட் அண்ட் இம்போட் கம்பெனியின் தலைமை பதவியை ஏற்றான்.

விஸ்வஜித் கடுமையையும் பொருட்படுத்தாமல் மயக்க பார்வையுடன் அவன் முன் வந்து விழும் பெண்களும் ஏராளம். அப்படி விழும் பெண்களை தன் பார்வையால் விலக்கிக்கொண்டு அங்கிருந்து விலகி விடுவான். அதனாலேயே பெரும்பாலான பெண்கள்

"சரியான சிடுமூஞ்சி சாமியார், என்ன போல ஒருத்தி ஒருத்தி சைட் அடிச்சா பதிலுக்கு சிரிக்காம கூட போறான்." என பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள, சிலரோ

"சிடுமூஞ்சி சாமியாரா இருந்தா என்ன, எப்படி இருந்தாலும் வாட் எ ஹேண்ட்சம்." என கண்களில் மயக்கத்தை தேக்கிவைத்து பேசுபவர்களும் உண்டு.

ஆனால் இது எதுவும் விஸ்வஜித் கண்டு கொள்வதும் கிடையாது, அதனால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற ரீதியிலேயே நடந்து கொள்வான்.

அலுவலகத்தில் உள்ளே கம்பீரமாக நடந்துவந்த விஸ்வஜித்திற்கு அனைவரும் மதிய வணக்கம் தெரிவிக்க, அனைவரின் மதிய வணக்கத்தை போனால் போகின்றது என்ற நினைப்புடன் ஒரு சிறு ஒருதலை அசைப்புடன் ஏற்றுக்கொண்டு, மேனேஜிங் டைரக்டர் விஸ்வஜித் எம்பிஏ என பெயர் பொறித்த அறைக்குள் வந்து அமர்ந்தான்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக்காற்றை அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற்றி தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டனர். உள்ளே வந்து அமர்ந்த அடுத்த நொடி ஜெனரல் மேனேஜர் ராமை உள்ளே வர,

"குட் ஆப்டர் நுன் சார்."

"ம்ம் ராம் அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்டுக்கு ஆள் செலக்ட் பண்ணிட்டீங்களா?"

"செலக்ட் பண்ணிட்டான் சார், அவங்க டீடைல்ஸ் இதுல இருக்கு, Monday join பண்ண சாெல்லிருக்கேன் சார்."

"ராம் நாளைக்கே அவங்கள போஸ்டிங் ஜாயின்ட் சொல்லுங்க, அப்புறம் அந்த ஜிஎஸ் கம்பெனி காண்ட்ராக்ட் என்னாச்சு."

"ஓகே சார் அவங்களுக்கு இன்ஃபர்ம் பண்றேன். அப்புறம் ஜிஎஸ் காண்ட்ராக்ட் கண்டிப்பா நமக்கு தான் கிடைக்கும்."

"அந்த குப்தா கம்பெனி விஷயம் நல்லபடியா முடிஞ்சிருச்சா."

"நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் செஞ்சாச்சு சார்."

"சரி ஓகே நீங்க போகலாம்."

வேலையில் தன்னை மூழ்கடித்து கொண்டிருந்த விஸ்வஜித் போன் இசைக்க, அதன் பிரத்தியேக ஒளியிலேயே அழைப்பது யார் என்பதை உணர்ந்ததும் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து, உதட்டில் மென்னகை தோன்றியது.

"ஹாய் ஸ்வீட்டி என்ன திடீர்னு கால் பண்ணியிருக்க."

"விஷ்வா எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு." குரலில் இருந்த ஏக்கத்தை புரிந்துகொண்ட விஸ்வஜித்

"எனக்கும்தான் டியர் உன்ன பாக்கணும் போல இருக்கு."

"பாக்கணும் பாேல இருந்தா நீ ஏன் என்னை பார்க்க வராம சென்னையிலேயே இருக்க, பெங்களுர் வர வேண்டியதுதான. ஐ மிஸ் யூ சோ மச்."

"ஸ்வீட்டி நீ அங்க சந்தோஷமா இருந்தா தானே உன்னோட விஷ்வா இங்க ஒழுங்கா வேலை பார்க்க முடியும்."

"எனக்கு அது எல்லாம் தெரியாது, விஷ்வா நீ இனி இன்னைக்கு நைட் டின்னர் என் கூட சாப்பிட வர." தனக்கு இருக்கும் வேலைகளை நினைத்து பார்த்தவன்

"அது எப்படி முடியும் ஸ்வீட்டி."


"அதான் அந்த தடியன் ராம் இருக்கிறான் தானே, அவன் ஆபீஸ் பார்த்துக்குவான் நீ இங்க வா. நீ வரலைன்னா நான் சாப்பிட மாட்டேன்."

தான் வரவில்லை என்றால் தன் ஸ்வீட்டி சொன்னதை செய்வாள் என்பதை உணர்ந்து கொண்டவன்

"ஓகே ஸ்வீட்டி நான் இவ்னிங் ப்ளைட்ல வரேன்."

"சரி நீ டின்னர் சாப்பிட வர்றது இருக்கட்டும், இப்ப நீ சாப்பிட்டியா."

"சாப்பிடணும் ஸ்வீட்டி, அபி சாப்பிட்டான."

"பிள்ளைங்க மேல அக்கறை இருக்கவங்க நேர்ல வரனும். இப்பாே ஒழுங்கா போய் சாப்பிடு."

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மணி மூன்று ஆகி இருப்பதை உணர்ந்த விஸ்வஜித் உணவருந்த சொல்ல, அப்பொழுது தன்னைக் காண வந்த நண்பனையும் அழைத்துச் சென்று உணவருந்திக் கொண்டிருந்த விஸ்வஜித் இருக்கு புரை ஏற, அருகிலிருந்த ஆனந்த்

"என்னடா விஷ்வா உன்னை யாரோ நினைக்கிறாங்க போல." நண்பனின் கேள்விக்கு பதில் கூறாத விஷ்வா மனதுக்குள்

'நீ என்ன ஞாபகம் வச்சிருக்கியா, என்ன பத்தி நினைச்சு பார்த்தியா கனல். நோ அதுக்கெல்லாம் உனக்கு எங்க நேரம் இருக்கு பாேகுது.'

"என்னடா ஆச்சு நான் கேட்டு இருக்கிறேன் நீ எதுவும் பதில் சொல்லாமல் இருக்கிற."

"ஒன்னும் இல்லடா." நண்பன் தன் வீட்டார் நினவைில் இருப்பதாக நினைத்த ஆனந்த்

"மனசு உன் ஸ்வீட்டி கிட்டயும், அபி குட்டி கிட்டையும் பாேயிட்டா."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஸ்வீட்டி போன் பண்ணுனா I think she miss me, அதான் என்ன பண்ணனும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன்."

"இதுல யோசிக்க என்ன இருக்கு ஸ்வீட்டி, அபி இரண்டு பேரையும் இங்க சென்னை கூட்டிட்டு வந்திடு."

"கூட்டிக்கிட்டு வரலாம் பட்."

"என்னடா பட். அவங்க வந்த உன்னால நினைச்ச நேரம் வேலை பாக்க முடியாது, உன் இஷ்டபடி இருக்க முடியது, உன் பழைய காதலி......" மேற்காெண்டு ஆனந்த்தை பேசவிடாமல்

"சரி நாளைக்கே கூட்டிகிட்டு வரேன்." என கூறி விட்டு எழுந்து காெள்ள, ஆனந்த்

"விஷ்வா இத்தனை வருசம் ஆனா பிறகும் கூட கனலிய நீ இன்னும் மறக்கலயாடா."

நண்பனின் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்த விஷ்வா, அடுத்த நாெடி தன்னை சமாளித்துக் காெண்டு

"ஆனந்த் ப்ளீஸ் அவள பத்தி நீ என்கிட்ட பேச வேண்டாமே, என்னால அவள மட்டும் இல்ல அவ எனக்கு பண்ண எதையும் மறக்க முடியாது. ."

"இந்த காேபம் தான் உங்கள பிரிச்சிட்டு. அன்னைக்கு நீயாவது காெஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். சரி நடந்தத யாராலயும் மாத்த முடியாது. இத்தன வருஷம் ஆன பிறகவது நீ கனலிய மன்னிக்க கூடாதா?"

"மன்னிப்பா அவளையா never. But I have to thank for her because அவ எனக்கு பண்ணத மறக்க முடியாம நான் எடுத்த முடிவால தான் எனக்கு என் ஸ்வீட்டி கிடைச்ச, Abi sweety both make my life happy. For that I have to thank her."

"சரி நீ மன்னிக்க வேண்டாம், மறக்க முயற்ச்சி பண்ணு."

"ம்ம்ம்."

"விஸ்வா நீ கனலிய மன்னிக்காத வரை உன்னால மறக்க முடியாது. மறக்கத வரை இந்த வாழ்க்கையை உன்னால நிம்மதியா வாழ முடியாது."

"நீ சாெல்றது உண்மை தான். கண்ணுக்கு முன்னாடி அமிர்தமா இருக்கிற வாழ்க்கையை நிம்மதியா அனுபவிக்க முடியாம, அந்த கனலி நியாபகம் விஷமா என்ன சித்திரவத பண்ணுது. இத பத்தி பேச வேண்டாமே."

"சரி கனலி பத்தி பேசல. அம்மா அப்பா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச சாென்னாங்க, அத பத்தி பேசலாம்."

"நீ எத பத்தி பேச பாேறனு எனக்கு தெரியும். அம்மா மேல அவங்க தம்பி சுந்தர்க்கு ஏன் திடீர்னு பாசம் வந்துச்சுன்னு அவங்களுக்கு வேணும்ன புரியாம இருக்கலாம். உனக்குமா புரியல. அந்த சுந்தர் கால சுத்தின நச்சு பாம்பு மாதிரி. காெஞ்சம் இடம் காெடுத்தாலும் நம்மல அழிச்சிட்டுதான் மறு வேலை பார்ப்பான்."

"விஷ்வா நீ முடிவு எடுத்திட்டு பேசாத. அது எல்லா விஷயத்திலும் சரியா இருக்காது. அவங்களுக்கு இன்னாெரு வாய்ப்பு காெடு, இந்த வயசான காலத்தில தன் மக பிள்ளைங்களை பாக்க கூடாதுன்னு சாெல்ற உரிமை உனக்கு கிடையாது."

"நான் எடுக்கின்ற முடிவு ஒருவேளை தப்பா போனாலும் அதைப் பத்தின கவலை உனக்கு வேண்டாம், அத சரி பண்ண எனக்கு தெரியும். அண்ட் ஒன் மாேர் திங் அவங்க என் பிள்ளைங்கள். சுந்தர் பேர பிள்ளைகள் இல்ல. ஆறு மணிக்கு எனக்கு பிளைட் இருக்கு. நான் பெங்களூர் கிளம்புறேன், வந்ததுக்கு அப்புறம் நான் உன்ன பார்க்கிறேன்."

மாலை பிளைட்டில் பயணித்துக்கொண்டிருந்த விஷ்வஜிதின் நினைவுகள் மட்டும் கனலியை சுற்றியே வந்தது.
'மறக்க முடியலடி, தினமும் கண் முழிக்கும் பாேதும் உன் நியாபகம் மட்டும்தான். நீ ஏன் என் வாழ்க்கையில வந்த, ஏதுக்கு என் வாழ்க்கைய இப்படி ஆக்கிட்ட. இனி நீ என் கண்ணுல படவே கூடாது.

என் முன்னாடி நீ வந்தா உன்ன.....

நோ இனி நான் உன்ன பத்தி நினைக்க மாட்டேன். என்னோட வாழ்க்கையில மட்டும் இல்ல, என் ஞாபகத்திலேயும் உனக்கு இடம் இருக்கக் கூடாது.'

பெங்களூர் அடையும்வரை விஸ்வஜித் மனம் ஒரு போர்க்களம் போலத்தான் இருந்தது. நிகழ்கால வாழ்க்கையுடனும், தன்னை துரத்தும் கனலி நினைவுகளுடனும் அவன் போராடிக் கொண்டிருந்தான்.

இதுவரை அவன் தொழில் மட்டுமே அவன் வாழ்வில் இருக்கும் போராட்டத்தை பிறர் அறியாமல் காக்கும் கவசமாக இருந்து வருகிறது.

தொழில் என்று வந்து விட்டால் அவன் மனதின் போராட்டங்களும் சஞ்சலங்களும் ஓடி விடுகின்றன. அதுதான் விஷ்வஜிதின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றது.

பெங்களூர் ஏர்போர்ட் வந்தடைந்ததும் அவனுக்காக காத்திருந்த காரில் ஏறி பயணிக்க, அந்த கார் ஏசியின் குளுமை கூட அவன் மனதில் வெப்பத்தை தணிக்கவில்லை.

கார் பிளேயரிலிருந்து வந்த இசை ஏதோ அவனுக்கானது போலவே உணர்ந்தான். கண்களை மூடி பின் இருக்கையில் தலை சாய்த்து காெண்டு தன் மனத்தினை சமப்படுத்த முயற்சித்தான்.


கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே... என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே... என் கண்ணீரே…
மழையாய் அன்று, பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று, கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே

இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனா
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் நுழைப்பேனா
செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ
கீறினாயே

தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே

பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே

யாரை இனி சந்திக்கக்கூடாது என விஸ்வஜித் நினைத்தானாே அவளை விரைவில் சந்திக்கப் போவதையும், எதை விட்டு ஓட நினைத்தார்களாே அதை நாேக்கி தங்கள் வாழ்வு நகர்வதையும், இனி இருவரும் ஒரே இடத்தில் இருக்கப் போவதையும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

இருவரும் அறிந்திருந்தால்......?

நினைவு நிஜமாகுமா?
 
Last edited:
Top