Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 2 (1)

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 2 (1)


சென்னை மாநகரம் அதற்குரிய காலை நேர பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்க , கனலியும் வேகமாக தன் அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

"இந்திரா பாப்பா ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துக்காே. ஸ்கூல இருந்து வர வழியில ஏதாவது சாப்பிட கேட்டா உன்கிட்ட இருக்கிற காசுக்கு வாங்கி கொடுக்க கூடாது. அதே மாதிரி ரோடு கிராஸ் பண்ணும்போது கவனமா கிராஸ் பண்ணனும்." முதல் நாள் புதிய அலுவலகத்திற்கு வேலகை்கு செல்லும் பரபரப்பில் காலையில் கூறியதையே கனலி மீண்டும் கூற இந்திரஜித் பாெறுமையுடன்

"ஓகே மா எத்தனை தடவைதான் இதையே சொல்லிக்கிட்டே இருப்பீங்க. நீங்க தான் இன்னைக்கு புது கம்பெனிக்கு புதுசா வேலைக்கு போறீங்க, நான் அந்த ஸ்கூல்ல தான் அஞ்சு வருஷமா படிச்சிக்கிட்டு இருக்கிறேன். சாே பயப்படாம பாேய்டு வாங்க, நான் பாப்பாவ பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்துருவேன்."என பொறுப்பாக பேசும் இந்திரஜித்தை பார்த்து எப்பொழுதும்போல் கனலின் மனம் பெருமை பட்டது.

தன் வாழ்வில் தன்னை புரிந்து கொள்ளாது காயப்படுத்தும் உறவுகளே அதிகமா பார்த்த கனலி, இந்தச் சிறு வயதிலேயே தன்னை புரிந்து கொண்டு நடக்கும் இந்திரஜித்தும், இந்திரஜித்தை பார்த்து நடக்கும் இரட்டையர்களான தீபா ரூபாவும் வாழ்விற்கு வசந்தத்தை அளிக்க வந்த தென்றலாகவே கருதினாள்.

தன் துன்ப காலத்தில் இவர்கள் மூவரும் இல்லையென்றால் கனலி என்னவாகி இருப்பாளோ அவளை அறியவில்லை. இன்று கனலி உயிர்ப்புடன் இருப்பதற்கு முக்கிய காரணம் பிள்ளைகள் மூவரும் தான் என்றால் அது மிகையல்ல. பாலைவனமாய் மாறிய அவள் வாழ்க்கையில் சோலையாய் மாற்றியது மாற்றியதும் இவர்கள் தானே.

"அம்மா என்ன யாேசனை உங்களுக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகுது. இப்போ நீங்க கிளம்பினால் தான் சரியான நேரத்துக்கு போக முடியும்." மகனின் குரலில் தன்னை மீட்டுக் கொண்ட கனலி, பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்.

விகே குரூப் ஆப் கம்பெனி மிகப்பெரிய அளவில் பெயரைத் தாங்கிய அந்த கட்டிடத்திற்குள் நுழையும் பொழுதே கனலி உடலில் ஏதோ புதுவித மாற்றம் நடைபெறுவதாக உணர்ந்தாள்.

நேர்முகத் தேர்விற்கு வரும்பொழுதும் இதே போன்ற ஒரு உணர்வு கனலி ஏற்படுவதை உணர்ந்தாள். அப்பொழுது புதிதாக வருவதால் ஏற்படும் உணர்வு என்று நினைத்த கனலி மீண்டும் அதே உணர்வு ஏற்படும்பொழுது சற்றே சிந்திக்க ஆரம்பித்தாள்.

எனக்கு எதுக்காக இப்படி ஒரு உணர்வு ஏற்படுது, ஒருவேளை ஏதோ எனக்கு நெருக்கமான ஒன்று இங்க கிடைக்கப் போகிறதா என் உள் மனசு எனக்கு சொல்ற மாதிரியே இருக்கு.

'விஜி உனக்கு ஒன்னு தெரியுமா நான் ஃபர்ஸ்ட் டைம் உன்னை மீட் பண்ணும் போதும் என்னோட உள்ளுணர்வு இதே மாதிரி தான் சொன்னுச்சு, இன்னைக்கும் அதே மாதிரியான ஒரு உணர்வு எனக்குள்ள வருது.

திரும்பவும் நம்முடைய வாழ்க்கை முதல்ல இருந்து ஆரம்பிச்சா எவ்வளவு நல்லா இருக்கும். என்னோட தப்பா எல்லாம் நான் சரி பண்ணிக்க எனக்கு கடவுள் ஒரு வாய்ப்பு தருவாரா.'

மனம் ஒரு புறம் சிந்தித்துக் கொண்டிருக்க கால்கள் அலுவலத்தில் அலுவலகத்தின் உள்ளே நடந்து சென்றது. தன்னுடைய பணி நியமன உத்தரவை காண்பித்துவிட்டு உள்ளே வந்த கனலி வரவேற்ற ராம்

"வெல்கம் மிஸஸ் கனலி, சாரி மிஸஸ் கனலி உங்கள மண்டே தான் வேலையிலே ஜாயின் பண்ண சொல்லி இருந்தேன். பட் பாஸ் உங்கள உடனடியா ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க. சோ ஐ don't have any other choice" ஜெனரல் மேனேஜர் ராமின் குரலில் தன் நினைவுகளை கலைத்து விடுத்து நிகழ்காலத்திற்கு வந்த கனலி

"இஸ் இட் ஓகே சார். வேலையில ஜாயின் பண்ணனும்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் அது இன்னைக்கு இருந்தா என்ன, மண்டேவா இருந்தா என்ன. எல்லாமே ஒன்னுதான்."

"தேங்க் யூ மிஸஸ் கனலி, அப்புறமா பாஸ் முக்கியமான வேலையா பெங்களூர் போயிருக்காங்க அதனால இப்போதைக்கு உங்களால பாஸ மீட் பண்ண முடியாது. இப்போதைக்கு நீங்க என்ன வேலை பாக்கனும்னு என்னுடைய செக்ரட்டரி மிஸ் விமலா உங்களுக்கு சொல்லுவாங்க. தென் உங்களுக்கு எதாவது டவ்ட் இருந்த யூ கேன் கால் மீ அட் எனி டைம்.

"ஓகே சார்."

"அப்புறம் மிஸஸ் கனலி If you don't have any other problem then just call me Ram.

"Okey ராம் but you should call me kanali."

~~~~~~~~~~~~~~~~

மதியம் வரை கம்பெனி அடிப்படை வேலைகளை பற்றி ஒரளவு தெரிந்துகாெண்ட கனலி கணினியிலிருந்து தலையை நிமிர்த்தி தன் கை கடிகாரத்தை பார்க்க அது ஒரு மணி என காட்டியது. அதே நேரம் கனலியை அழைத்த விமலா

"ஹாய் கனலி மேடம் this is a time for lunch வாங்க சாப்பிட்டு வந்து கம்யூட்டற சைட் அடிக்கலாம்." இயல்பாகப் பேசும் விமலாவை பார்த்து மென்னகை இந்த புரிந்த கனலி

"ஒரு நிமிஷம் நான் கம்யூட்டரை ஆஃப் பண்ணிடு வரேன். அப்புறம் நீயும் என்ன கனலின்னே கூப்பிடலாம்."

"ஓகே. கனலி நீங்க இங்க வேலைக்கு புதுச வந்திருக்கிறதால நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு."

"அதான் வேலைய பத்தி சாென்னிங்களே, அத தவிர வேற என்ன தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு."

"பஸ்ட் நம்ம பாஸ், சரியான சாமியார். பாெண்ணுங்கனாலே சுத்தமா பிடிக்கது. ஆள் பாக்க அழக இருந்தாலும் மத்தவங்கள மதிக்க தெரியாது."

"எத வச்சு அப்படி சாெல்றீங்க."

"ஆஃபிஸ் ஸ்டாப்ஸ் விஷ் பண்ணா கூட பதிலுக்கு விஷ் பண்ண மாட்டாரு. பக்கத்தில யாருகிட்டையாவது சிரிச்சு பேசுறத பாத்திட்ட கடிச்சு காெதறிடுவாரு. அதுவும் நம்ம வேலையில ஒரு சின்ன தப்பு இருந்தாலும் வேலையை விட்டு எடுக்குறதுக்கு கொஞ்சம் கூட தயங்க மாட்டார் எனக்கு உங்கள நினைச்சாதான் பாவமா இருக்கு."

"என்ன நினைச்சா பாவமா இருக்கா எதனால.!"

"ம்ம்ம் பாஸ் யாரையும் அதிகமா நம்ப மாட்டரு. ராம் மட்டும் தான் அதுக்கு விதி விலக்கு. ராம்க்கு முக்கியமான வேலைய காெடுத்து வேற ஏதாவது பிராஞ்சுக்கு அனுப்பிட்டா, அசிஸ்டன் மேனேஜர் தான் எல்லா வேலைய பத்தியும் ரிப்பாேட் பண்ணனும், அவரு கேக்கிற கேள்விக்கு பதிலும் சாெல்லனும்."

"இதுல பாவப்பட என்ன இருக்கு, வழக்கமா எல்லா கம்பெனி லேயும் நடக்கிறது தானே."

"அவரு கேக்கின்ற கேள்விக்கு பதில் சாெல்ல முடியாம நிறைய பேர் வேலைய விட்டு ஓடிட்டாங்க, பார்ப்போம் நீங்க எப்படி, எவ்வளவு வேகத்தில ஓட பாேறீங்கன்னு?"

"நான் நிச்சயம் ஓட மாட்டேன். அது மட்டும் இல்லாம நீங்க சாென்னத கேட்ட பின்னடி இங்க வேலை பாக்க எனக்கு ஆசை அதிகமா இருக்கு." தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்காமல் முகத்தில் காட்டிய விமலா

"நான் சொன்னதை கேட்டதுக்கு அப்புறம் பயம் வராம வேலை பார்க்க ஆசை அதிகமா இருக்கா!"

"எஸ். நான் இதுக்கு முன்னாடி வேலை பாத்த இடத்தில பெண்களுக்கு இருந்த பிரச்சனை இங்க இருக்கதுன்னு உங்க பேச்சில இருந்து தெரிஞ்சுகிட்டேன். அந்த மாதிரி பிரச்சனை இல்லாமல் இருந்தாலே நம்ம வேலைய நம்மளால நிம்மதியா பார்க்க முடியும்.

என் வேலைய நான் சரியா செய்யும் பாேது யாருக்காவும் பயப்பட அவசியம் இல்ல. சோ நான் உங்க பாஸ்... சாரி சாரி நம்ம பாஸ்க்கு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

அது மட்டும் இல்லாமா இங்க நான் வாங்கக்கூடிய சம்பளம் நான் எதிர்பார்த்தத விட அதிகம். இப்போ என்னுடைய குடும்பம் இருக்கிற சூழ்நிலையில இந்த சம்பளம் என்னுடைய குடும்பத்திற்கு நிச்சயம் தேவை. அதனால என்னால இந்த வேலையை விட்டுட்டு போட முடியாது"

பேசியபடி சாப்பிட்டு முடித்து கனலி தன் இருக்கைக்கு வர, சிறிது நேரத்தில் அங்கே வந்த விமலா

"கனலி உங்க பர்ஸ்னல் டீடைல்ஸ் எல்லாம் ஒரளவு நான் ஆஃபிஸ் ஃபைல்ல ஸ்டாேர் பண்ணிடேன். பட் அதுல உங்க காலேஜ் நேம் அண்ட் ஹஸ்பண்ட் நேம் இல்ல. சாென்ன நான் அத முடிச்சிட்டு, என் அடுத்த வேலையை பாக்க வசதியா இருக்கும்." விமலாவை பார்த்து சில வினாடி தயங்கிய கனலி தன்னை சமாளித்துக்காெண்டு,

"நான் படிச்சது ##### காலேஜ் சென்னை, அண்ட் நான் சிங்கிள் மதர்"

அதுவரை தோழமையுடனும், மரியாதையுடனும் பார்த்த விமலாவின் விழிகளில் நொடியில் தோன்றி மறைந்த மாற்றம் கனலி கண்களுக்கு தப்பவில்லை.

தன்னிடம் நட்புடன் பேசிய பலரும் தான் ஒரு சிங்கிள் மதர் என்ற வார்த்தையிலேயே தன்னை கீழாக பார்ப்பதை பலமுறை உணர்ந்த கனலி இப்பொழுது விமலாவின் பார்வை மாற்றத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சமுதாயத்தில் பிள்ளைகளுடன் தனித்து வாழும் ஆண்களை இறக்கத்துடன் பெருமையுடனும் பார்க்கும் மக்கள், அதே ஒரு பெண் பிள்ளைகளுடன் தனித்து வாழும் பொழுது அவளை கீழாகவே பார்க்கின்றது. மேலும் அவளின் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாகிறது.

அதனாலேயே கனலி பெரும்பாலும் யாருடனும் நட்பு பாராட்டுவது இல்லை. கனலி தனிமையை சிலர் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைக்க, அதற்காகவே கனலி தன் வாழ்வை நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் கற்பூரம் ஆக மாற்றிக் கொண்டாள்.

வேலை செய்யும் இடத்தில் சிங்கிள் மதர் என்ற வார்த்தையே பலநேரம் கனலிக்கு பிரச்சனையை தர, தான் வேலை செய்யும் இடத்தை பலமுறை மாற்ற வேண்டியதாகவும் ஆயிற்று. இங்கும் அதுபோல பிரச்சனை வந்தால் தன் வேலையை விட்டுவிட வேண்டும் என்றே நினைத்தாள்.

வேலையை விட வேண்டும் என முடிவெடுத்த அடுத்த நாெடி பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசை, அண்ணன் படிப்பிற்காக தந்தை வாங்கிய கடன், வீட்டு செலவு என அனைத்தும் நினைவு வர தலையை பிடித்துக்காெண்டு அமர்ந்துவிட்டாள்.

'இல்ல என்னால இந்த வேலையை விட முடியாது. அது என்ன காரணமா இருந்தாலும் என்னால இந்த வேலையை விட முடியாது.'

மகளின் நிலையை உணர்ந்த திலகவதி கனலி எப்படியாவது ஒரு திருமணம் செய்துவிடவேண்டும் என்று நினைக்க,

"நீங்க மட்டும் எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுனா, நான் என் பிள்ளைகளை கூப்பிட்டுக்கிட்டு கண்காணாத இடத்துக்கு போயிடுறேன்." என்ற கனலியின் தீர்க்கமான வார்த்தைகள் தடுத்துவிட்டன.

தன் செல்ல மகளின் வாழ்க்கை கண்முன்னே கேள்விக்குறியாக இருந்த போதிலும், கண்காணாத இடத்திற்கு அனுப்புவதற்காக அவளை தன் வயிற்றில் சுமந்தேன், என்பதை நினைத்து தன் மகள் கண்முன் இருந்தால் போதுமென தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

எனினும் என்றாவது ஒருநாள் தன் மகளின் வாழ்க்கை வாழ்க்கையில் வசந்தம் வராதா என காத்துக் கொண்டிருந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"சார் நாங்க யாருக்கும் எங்க ஸ்கூல்ல இப்படி இடையில சீட் கொடுக்க மாட்டோம். பட் எங்க ஸ்கூல் சேர்மன் பிரண்ட் ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டதால தான் இங்கே சீட் கொடுத்திருக்கின்றோம். அதுக்கு ஏத்த மாதிரி உங்க பிள்ளைங்க நடந்துக்கணும்."

"Sure mam they won't cause any problem."

"ஓகே மிஸ்டர் விஷ்வா ஆபிஸ் ரூம்ல குடுக்குற ஃபார்ம ஃபில்லப் பண்ணி கொடுத்துடுங்க. நாளையிலிருந்து அவங்கள கிளாஸ் கண்டினியூ பண்ணட்டும்."

"தேங்க்யூ மேம்."

பள்ளி அலுவலகத்தில் கொடுத்த கேட்ட விபரங்களை விஸ்வஜித் கூறிக் கொண்டு வர அலுவலக பணியாளர்
சார் உங்க வைஃப் பெயரை இன்னும் சொல்லல." மனைவியின் பெயரை கேட்டதும் விஸ்வஜித் நிமிடமும் தயங்காமல்

"மை வைஃப் நேம் இஸ் கனலி." என்று கூற

"ஓகே சார் நீங்க ஸ்கூல் பீஸ் கட்டிட்டு இப்போ கிளம்பலாம். நாளையிலிருந்து ஸ்கூலுக்கு உங்களுடைய சில்ட்ரன்ஸ் வரும்போது யூனிபார்ம்ல வரணும். புக்ஸ் நோட்ஸ் எல்லாம் நாங்கள் தந்திடுவாேம்."

பள்ளியில் வேலைகளை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த விஷ்வாவின் மனம்

'அவளுக்குத்தான் என்னோட வாழ்க்கையில இடம் இல்லன்னு முடிவு பண்ணிட்டேனே. அப்புறம் எதுக்காக மனைவி பேரு கேட்கும்போது அவளுடைய பெயரை சொன்னேன். இன்னும் நான் அவளை காதலிக்கிறேனா?

நோ நோ என்ன விட்டுட்டு போனவளே நான் எதுக்காக காதலிக்கப் போறேன். திரும்ப ஒருவேளை அவ என் வாழ்க்கையில் வருவாளா?

விஷ்வா நம்ம வாழ்க்கையில எத்தனையோ பெற தினமும் சந்திக்கிறாேம். அந்த கூட்டத்துல ஒருத்திதான் இனிமேல் கனலி, அவளுக்கு உன்னோட வாழ்க்கையில எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஒருவேளை அவளை நீ நேரில் பார்த்தாலும், எந்தவிதத்திலும் நீ அவளுக்காக ரியாக்ட் பண்ணக்கூடாது. சி இஸ் ஜெஸ்ட் எ பாசிங் கிளவுட்.

அவ உன்னோட கடந்தகால மட்டும்தான். இப்பாே அவ உன் நிகழ்காலத்திலும் இல்ல, எதிர்காலத்திலும் இல்லை இருக்கப் போறதும் இல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
Last edited:
Top