Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 2 (2)

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 2 (2)


விகே குரூப் ஆஃப் கம்பெனியில் வேலை கிடைத்ததையே நம்பமுடியாமல் ஆச்சரியப்பட்ட கனலி, இன்றுடன் இந்த ஆறு மாடி கட்டிடத்தில் அமையப் பெற்றிருந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி போனது.

இங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில் சில நாள்கள் ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பது போல் தான் இருந்தது. இதற்கு முன் வேலை செய்த இடத்தில் சூப்பர்வைசராக தான் இருந்தாள், ஆனால் இப்பொழுது இவ்வளவு பெரிய அலுவலகத்தில் அதுவும் அவள் உயர்நிலையில் இருப்பவள்.

தனது கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பையும் அதற்கான அதிகாரத்தையும் சரிவர புரிந்து கொண்டு செயல்படுவதற்கே கனலிக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. அதன்பிறகு இயல்பாகவே கனலிக்கு இருக்கும் திறமை அவளை அந்த வேலையுடன் ஒன்றிப் போக செய்தது.

இங்கு வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளமும் வாங்கியாயிற்று. ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட எம்டியை அவள் கண்ணால் கூட பார்த்ததில்லை. பிறரின் விஷயத்தில் என்று தலையிடும் குணம் சிறிதும் இல்லாததால் என்னவோ எம்டி என் பெயரையும் இதுவரை யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.

எம்டி அறையினுள் இதுவரை செல்லும் சந்தர்ப்பம் அமையாததால் அங்கு விஸ்வஜித் எம்பிஏ என பெயர் தாங்கிய பெயர் பலகையை காண நேரவில்லை.
ஒருவேளை பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாளாே?

காலையில் தாமதமாகவே கிளம்பிய கனலி சென்னையின் வழக்கமான பிரச்சனையான சாலை நெருக்கடியில் மாட்டிக் கொள்ள தாமதமாகவே அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அலுவலக நேரம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்களே இருக்க வேகமாக லிப்ட் உள்ளே நுழைந்தாள், உள்ளே நுழைந்ததும் தான் ஓடி வந்ததில் கலைந்த முடியை சரி செய்ய அப்பொழுது உள்ளே நுழைந்த ஆறடிக்கு மேலான உயரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாத தோடு திரும்பியும் பார்க்கவில்லை.

ஆனால் அந்த உருவம் கருப்பு நிறத்தில் மஞ்சள் நிற பூக்களை தெளித்தது பாேன்றிருந்த சேலையில் பின் இருபதிலும், முதல் முதலில் தான் அவளின் கல்லூரி காலத்தில் பார்த்த அதே அழகாேடு இருக்கும் கனலி கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு ஆறடிக்கு மேலான உயரத்தில் கம்பீரமாக இருக்கும் விஸ்வஜித் ஒரு பார்வைக்காக பலரும் ஏங்கி நிற்க, அவனது பார்வையோ இவள் ஒருத்தியை மட்டும் பின்தொடர்ந்தது.

அவளின் காதலுக்காக அனைத்தையும் செய்துகொடுத்த தயாராகவே இருந்தான். ஆனால் பதிலுக்கு அவள் கொடுத்தது வலிகள் மட்டுமே. இவள் அவனது வாழ்வின் மொத்த நிம்மதியை பறித்துக்கொண்டு அவனை விட்டு விலகிச் சென்று விட்டாள்.

இத்தனை வருடங்களில் அவளை மறக்கவும் முடியாமல், தன் கண்முன் இருக்கும் வாழ்க்கையை வாழவும் முடியாமல் அவன் தினம் தினம் உள்ளுக்குள் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

கனலி தன்னை சரி செய்து காெண்டு நிமிர்ந்து பார்க்கும் நேரம் லிப்டின் கதவு திறந்தது. அவள் பணி புரியும் தளமும் வந்துவிட அதன்பின் வேறு எதையும் கவனிக்காமல் தன் இடம் நோக்கி நகர்ந்து விட்டாள். ஆனால் விஸ்வஜித் நிலைதான் அடிபட்ட வேங்கை போலிருந்தது.

கனலி தன் இடத்திற்கு வந்து தன்னை ஆசுவாசப்படித்திக்காெண்டு வேலையை கவணிக்க, என்றும் இன்நேரம் கலகலப்பாக இருக்கும் அலுவலகம் திடீரென அமைதியாகி விட்டது போல உணர்ந்தாள்.


தன் வேலையில் கவனத்தை திரும்பிய நேரம் தன்னை கடந்து சென்ற நபரை கவனிக்காமல் விட்டுவிட்டாள். ஆனால் அந்த உருவம் தன்னை சில நொடிகளில் அடையாளம் கண்டு கொண்டதை அவள் உணரவில்லை.

அலுவலகத்தில் உள்ள அமைதிக்கு காரணம் தெரியாத போதும் அதைப் பற்றி யோசிக்காமல் நேற்று விட்டுச்சென்ற வேலைகளை தொடர, அதில் ஏற்பட்ட சிறு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ராமின் அறைக்குள் சென்றாள்.

ராம் அறைக்கு உள்ளே அலுவலகத்தின் அமைதிக்கு நேர் மாறாக பரபரப்புடன் இருக்கும் ராமை பார்த்து குழப்பம் அடைந்தாலும்

"ராம் எனக்கு இந்த பைலில் கொஞ்சம் சந்தேகம் இருக்கு மூனு வருசத்திற்கு முன்னாடி ஃபைல்."

"ப்ளீஸ் கனலி கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியுமா. நம்ம பாஸ் இப்பதான் ஆபீஸ் குள்ள வந்திருக்காரு. இன்னும் ஒன்றிரண்டு மினிட்ஸ்ல என்ன கூப்பிடுவாரு. அவர் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு வர 10 டூ 20 மினிட்ஸ் ஆயிடும். அதுக்கப்புறம் வந்து உங்கள டவுட் கிளியர் பண்றேன்."

"இட்ஸ் ஓகே ராம் யூ கேரியான்."

"கனலி எதுக்கும் கொஞ்சம் ரெடியா இருந்துக்கோங்க. மே பீ நம்ம பாஸ் விஸ்வஜித் உங்கள பார்க்கிறதுக்காக கூப்பிடலாம்." என ராம் கனலிடம் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, விஷ்வா அழைக்க

"நான் சொன்னேன்ல, என்ன வர சொல்லி இருக்காரு நான் போயிட்டு வரேன்." என கூறிவிட்டு சென்றுவிட கனலி

'ஒரு ஒருவேளை ராம் சொல்ற எம்டி விஸ்வஜித் என்னோட விஜியா இருக்குமா. விஜியா இருந்தா நான் என்ன பண்ண.'

மனம் அதன் பாேக்கில் கற்பனை செய்ய தன் இடத்திற்கு வந்த கனலி எதுவும் செய்ய தாேன்றாமல் அமர்ந்து விட்டாள்.

________________________________________________________

விஷ்வாவின் அறைக்கதவை திறந்து உள்ளே வந்த ராமிடம்

"என்ன ராம் நான் இல்லாத இந்த ஒரு மாசத்தில எதுவும் பிரச்சினை இல்லாம போச்சு தானே."

"எஸ் சார், நோ ப்ராப்ளம்."

"ஓகே தென் நம்மளுடைய மும்பை பிராஞ்சுக்கு ஒரு விசிட் போயிட்டு வந்துடுங்க. ரிப்போர்ட் எனக்கு இன்னும் ஒரு பத்து நாளுக்குள் என்னோட கை கிடைக்கணும்."

"ஓகே சார் கண்டிபா கிடகை்கும்."

"நாளைக்கு நீங்க கிளம்ப வேண்டியதா இருக்கும் பாத்துக்காேங்க. அப்புறம் ராம் நீங்க இல்லாத நேரத்துல என்ன எல்லாம் பண்ணனும் உங்க அசிஸ்டன் மேரேஜ் கிட்ட சொல்லிட்டு போயிருங்க."

"சார் புதுசா வந்திருக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் கனலி வெரி ஸ்மார்ட். வந்து ஒரு மாதத்திலே.அவர்களுடைய திறமையைப் பற்றி நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன்.

அவங்கள நான் இப்போ வர சொல்றேன், நீங்களும் ஒரு தடவை உங்கள மீட் பண்ணிட்டா தட் வில் பீ பெட்டர்."

கனலி என்ற பெயரைக் கேட்டதும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விஸ்வஜித் அமைதியாகிவிட, அதைப் புரிந்து கொள்ளாத ராம் கனலியை அழைத்து வருமாறு பியூன் சொல்லி அனுப்பினான்.

சில நிமிடம் கட்டுப்பாடின்றி அலைந்த தன் கற்பனை குதிரையை கடிவாளமிட்டு தடுத்த கனலி

'விஜி எதுக்காக சென்னை வரனும். அவரு இப்பாே பெங்களுர்ல இருப்பாங்க.' என மனதை சமாதானப்படுத்திக்காெண்டு, ராமிடம் தன் கேட்க வேண்டிய சந்தேகம் தவிர மற்ற வேலைகளில் மூழ்கிவிட்டாள்.

தன் அலுவலில் மூழ்கிய அவளின் அருகே ஆரவாரம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே நின்ற பியூன் "மேடம் உங்கள சார் வர சொன்னாங்க."

"ராம் சாரா வரச் சொன்னாங்க."

"இல்ல மேம் எம்டி சார் உங்கள பாக்கனும்மா, ராம் வரச் சொன்னாங்க."

எம்டியை சந்திக்க ராம் அழைப்பதாக பியூன் வந்து கூறியதும், நகர மறுத்த கால்களையும் கடந்த காலத்தில் சிக்கித்தவித்த மனதையும் ஒருவழியாக கட்டுப்படுத்தி, எம்டி என் அறையை நோக்கி சென்றாள்.

ஒரு மனது உள்ளே இருப்பவன் எம்டி விஸ்வஜித் ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மறுமனது உள்ளே இருப்பவன் கனலியின் விஜியாக இருக்க வேண்டுமென்றும் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தது.

எது வந்தாலும் இனி சந்தித்து தான் ஆக வேண்டும் என்று தன் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத்திறந்து உள்ளே வந்தாள்.

கதவு திறக்கும் ஓசையில் விஸ்வஜித் நிமிர்ந்து பார்க்க, உள்ளே வந்த கனலியும் விஷ்வஜிதின் முகத்தையே பார்த்தாள்.

தன் விஜி தானா...!
தன்னுடைய பல வருட காத்திருப்பு நிஜமாகி விட்டது என்பதில் எந்த அளவு கனலி மகிழ்ந்தாலும், அதே அளவு இனி என்ன நடக்குமோ என்றும் கவலை கொண்டாள்.

கனலியின் மனநிலைக்கு சற்றும் குறையாத நிலையிலேயே விஸ்வஜித் மன நிலையும் இருந்தது.

அவளே தானா என்ற விஸ்வஜித் எதிர்பார்ப்பு உண்மையாகிவிட்டதில் அவனுக்கு சந்தோஷம் வரவில்லை. அதற்கு பதிலாக கட்டுக்கடங்காத கோபம் தான் வந்தது.

'பாவி அங்கே என் காதலை கொன்று புதைத்துவிட்டு என் வாழ்க்கையை விட்டு ஓடி தலைமறைவாகி வந்துட்டு இப்போ என்னோட கம்பெனியிலேயே வேலைக்கு இருக்கியா'.

கனலி விஜியாக இருக்குமாே என்று எதிர் பார்த்து வந்தாலும் அவளின் பார்வை முதலில் அதிர்ச்சியையும் பின்பு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த, விஸ்வஜித்தாே ஒரு அறிமுகம் இல்லாத வரை பார்க்கும் பார்வை ஒன்றே கனலியையை நோக்கி செலுத்த, அந்த பார்வையில் கனலி அடிபட்டு போனாள். கனலி உள்ளே வந்ததும் ராம்

"சார் ஷி இஸ் அவர் நியூ அசிஸ்டன்ட் மேனேஜர் மிஸஸ் கனலி, வெரி டேலண்டெட்."

"ஹலோ மிஸ் கமலி வெல்கம் டு அவர் கம்பெனி. என்னோட கம்பெனியில நீங்கள் தொடர்ந்து வேலை பார்க்கணும்னா சின்சியாரிட்டி, அண்ட் டெடிகேஷன் இரண்டு இருக்கணும்"

தன்னை பார்த்தவுடன் கோபப்படுவான், திட்டுவான் என எதிர்பார்த்திருக்க, இப்படி தன்னை அறிமுகமில்லா நபரிடம் பேசுவது பாேல பேசுவது கனலிக்கு கோபத்தை வரவழைத்தாலும், தன்னிடம் விஜி இந்த அளவேனும் பேசுவது மனதிற்கு இதம் தர, அதை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முழு தைரியத்தை திரட்டிக் கொண்டு,

"கண்டிப்பா சார் என்னுடைய சின்சியாரிட்டி அண்ட் டெடிகேஷன் இந்த கம்பெனிக்கு இருக்கும்."

தான் தவறு செய்யாத பாேதும் தன்னை விட்டு விலகிச் சென்ற ஒருத்தி தன்முன் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் தைரியத்துடனும், திமிருடன் பேசுவதை கண்ட விஸ்வஜித் மனதிற்குள் எரிமலையே வெடித்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,

"சின்சியாரிட்டி அண்ட் டெடிகேஷன் இப்போ இருந்தா மட்டும் போதாது எப்பவும் இருக்கணும். முக்கியமான பொறுப்பை உங்ககிட்ட கொடுக்கும்போது அதை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிட விடக்கூடாது."

விஸ்வஜித் எதைக் குறிப்பிட்டு பேசுகின்றான் என்பது கனலி நன்கு அறிந்த போதும், அதைக் கண்டுகொள்ளாமல் விஸ்வஜித் விழிகளை நேராக பார்த்து,

"நோ சார் என்னோட வேலையை நான் சரியா செய்வேன்." எனக் கூற அருகிலிருந்த ராம்

"சார் நீங்க 100% கனலி நம்பலாம்." ராம் வார்த்தைகள் வார்த்தைகளை காதுகளில் வாங்கிக்கொள்ளாமல் கனலியை பார்த்தபடி

"எனக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் தாவி பழக்கம் கிடையாது. அதே மாதிரி என்ன சுத்தி இருக்கிறவங்களும், என் கிட்ட வேலை பாக்கிறவங்களும் இருக்கணும்." என கூறும் பொழுது கனலி உடலில் ஏற்பட்ட சிறு அதிர்வு அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

அந்த அதிர்வு... கனலி மனதில் இன்னும் தன்னால் தன் வார்த்தைகளால் ஏற்படும் தாக்கம் இருக்கின்றது என்றுதானே அர்த்தம்.
அதனால்தானே தன்னுடைய சிறு குத்தல் பேச்சு அவளை பாதிக்கின்றது என்று நினைத்த விஷ்வாவின் மனதில் ஒரு சிறு சாரல் தோன்றி மறைந்தது. அடுத்த நொடி அப்படியே என் மேல பாசம் இருக்கிறவ எதுக்காக என்ன விட்டுட்டு வந்தா.

விட்டுட்டு வந்த நீ ஒன்னும் இப்போ வசதியா வாழ மாதிரி தெரியலையே. எதுக்காக என்ன கஷ்டப்படுத்திட்டு வந்து இப்படி நீயும் கஷ்டப்படுற. என மனது நினதை்தாலும், வாய் வார்த்தை மட்டும்

"ஓகே மிஸ் கமலி யூ மே கோ நவ்."

"தேங்க்யூ சார்." என்று வெளியேற திரும்பிய கனலி விஸ்வஜித் புறம் திரும்பி

"சார் ஒன் மினிட்."

"வாட் யூ வாண்ட் நீங்க போய் உங்க வேலைய பாக்கலாம்." விஸ்வஜித்தை பார்த்த நாெடி முதல் கனலி மனதின் கட்டுபாடுகள் அனைத்தும் தகர்ந்து, சற்று திமிருடனே

"என்னோட வேலையை பார்க்க எனக்கு நல்லா தெரியும் சார். அதை யாரு என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை."

கனலி திமிரான பேச்சை மனதுக்குள் ரசித்தாலும், அதை முகத்தில் காட்டிக்காெள்ளாமல்

"அப்புறம் எதுக்காக நீங்க இன்னும் இங்க நின்னு கிட்டு இருக்கீங்க."

"ஓரே ஒரு காரணத்திற்காக மட்டும்தான் நான் இங்க நிக்கிறேன்."

"சீக்கிரம் சொல்லிட்டு நீங்க போகலாம் மிஸஸ் கமலி."

"என்னுடைய பெயர் கனலி நாட் கமலி. என்னுடைய பெயரை யாராவது தப்பா சொன்னா எனக்கு அது பிடிக்காது. ஐ டேண்ட் லைக் இட், அட் தி சேம் டைம் ஐ காண்ட் டாலர்ரேட் இட் எனி மோர்." என கூறி விட்டு வெளியேறிவிட, நடப்பதை எல்லாம் கவனித்த ராம் மனதுக்குள்

'இங்க என்னடா நடக்குது நியூ ஸ்டாப் யாரையாவது நாம அறிமுகப்படுத்தினா அப்படியானு மட்டும் கேக்குற நம்ம பாஸ், இன்னைக்கு இந்த கனலிக்கிட்ட இவ்வளவு பேசுறாரு.

வந்த நாள்ல இருந்து வார்த்தையை எண்ணி எண்ணி பேசுற கனலி நம்ம பாஸ் கிட்ட இப்படி பட்டுனு பேசுது.' என தன் போக்கில் எண்ணிக் கொண்டிருக்க விஷ்வா

"நீங்களும் போயி உங்க வேலை பார்க்கலாம் உங்களுக்கு மட்டும் தனியா சொல்லனுமா." என கனலி மீதிருந்த காேபத்தை ராமிடம் காட்ட

"ஓகே பாஸ் சார், சாரி பாஸ் சார். இப்பவே இப்பவே போறேன்." என உளறிக்கொட்டி விட்டு வெளியேறினான்.

இருவரும் வெளியேறியதும் தன் தலைக்கு கையைவைத்து அமர்ந்த விஸ்வஜித்

'இதுவரைக்கும் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாய் இருந்தது கிடையாது, ஆனால் இப்போ நான் நம்புறேன். பத்தியா நான் எந்த முயற்சியும் பண்ணம உன்னை என் கண்ணு முன்னாடி கொண்டுவந்து நிப்பாட்டி இருக்காரு.

என்ன வேணான்னு சொல்லிட்டு போன நீ இப்போ என்னோட கம்பெனியில எனக்கு கீழ வேலை பார்க்க வேண்டிய நிலைமை வந்துவிட்டுருக்கு, இதுதான் விதி போல.

இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையை விதியும், நீயும் தீர்மானிச்சீஞ்க, இனிமேல் என்னுடைய வாழ்க்கையை மட்டும் இல்ல, உன்னுடைய வாழ்க்கையையும் சேர்த்து நான்தான் தீர்மானிக்க போறேன்.

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா

சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா



நினைவு நிஜமாகுமா
 
Last edited:
எங்க இருந்துமா தலைப்புகளை இப்டி எடுக்றீங்க...சூப்பர் டைட்டில்....

அவன்கிட்டையும் குழந்தை இருக்கு இவக்கிட்டையும் குழந்தைங்க இருக்கு அதெல்லாம் யாரோட புள்ளைங்க....எவ்ளோ சஸ்பென்ஸோட கதைய ஆரம்பிச்சிருக்கீங்க....
 
Top