Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 3

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 3


தன் இடத்திற்கு வந்து அமர்ந்த கனலி உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தாள். என் வாழ்வின் லட்சியமே சொந்தமாக ஒரு சாப்ட்வேர் கம்பெனியை பெங்களூர் தொடங்குவதுதான் என்று கூறியவனை, இன்று எதிர்பாராதவிதமாக அவனை பல வருடங்களுக்குப் பின் சென்னையில் சந்தித்து ஓர் அதிர்ச்சி; அதைவிட பெரிய அதிர்ச்சி அவன் தனக்கு முதலாளி.

இன்று தன்னை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவன், ஒருகாலத்தில் தான் விஜி என்று ஒரு முறை அழைத்ததும் ஓடி வந்து அவளது கைகளை பற்றிக் கொண்டும், பற்றிய கைகளை விடாமலேயே அவளுடன் எப்பொழுதும் புன்னகை நிறைந்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தவன்.

விஸ்வஜித் முன்பு எதையும் காட்டிக்கொள்ளாமல் வந்தாலும் கனலின் மனது வெகுவாக சோர்வடைந்து கண்கலங்க அமர்ந்திருந்தாள.

கனலியின் மனது தாங்கள் முதல் முறை சந்தித்த நாளை திருப்பி பார்த்தது காெண்டிருந்தது.

அதேநேரம் விஸ்வஜித்தும் பத்து வருடங்களுக்கு முன்பு தன் வாழ்வில் தென்றலாய் தீண்டி சென்றவளின் நினைவில் மூழ்கி இருந்தான்.

பத்து வருடங்களுக்கு முன்பு
விஸ்வஜித் அமெரிக்காவில் புகழ்பெற்ற உலகத்தரம் வாய்ந்த கல்லூரி ஒன்றில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.
அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நியூ இயரை முன்னிட்டு கிடைத்த விடுமுறையில் தன் புதிய நண்பன் ஆனந்துடன் பெங்களூர் வந்திறங்கினான்.

பெங்களூர் வந்திறங்கிய சில மணி நேரத்திலேயே ஆனந்தை ஓய்வு கூட எடுக்க விடாமல் ஊர் சுற்றிப் பார்க்க அழைத்து வந்திருந்தான்.

விஸ்வஜித் ஒரு கலா ரசிகன் சின்னஞ்சிறு விஷயங்களிலும் அழகையும், அதன் தனித்துவத்தையும் ஆராய்ந்து பார்ப்பவன். அப்படியே மதியம் உணவருந்த சென்ற இடத்திலும் அங்கிருந்த அமைப்பையும் அங்கு வந்து செல்லும் அழகான பெண்களையும் ரசித்துக்கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் நிச்சயம் தவறான எந்த நோக்கமும். இல்லை அழகான ஒரு பூவை எவ்வாறு ரசித்துப் பார்ப்போமா அதை ரசிப்புத்தன்மை மட்டுமே அவன் பார்வையில் இருந்தது. இதை எல்லாம் கடுப்புடன் பார்த்துக் காெண்டு இருந்த ஆனந்த்

"டேய் மச்சி ஏன்டா இப்படி என்ன படுத்தி எடுக்கிற. அமெரிக்காவில நாம பார்க்காத பிகரா, என்னமோ இங்க மட்டும் தான் உலக அழகி எல்லா இருக்கிற மாதிரி இப்படி பார்த்துகிட்டு இருக்கிற." என ஆனந்த் புலம்ப

"உனக்கு இதெல்லாம் புரியாது மச்சான். என்னதான் அந்த நாட்டு வெள்ளைக்காரிகள் அழகா இருந்தாலும், நம்ம ஊரு பொண்ணுங்க தனிதான் மச்சான்." என நண்பனிடம் கூறிவிட்டு தன் சைட்டடிக்கும் வேலையை தாெடர

"நீ சொல்றத என்னால ஒத்துக்கவே முடியாது. ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் பாவாடை சட்டை, தாவணி, சேலை கட்டிக்கிட்டு தலை நிறைய பூவோடும் மஞ்சள் பூசி மங்களகரமாய் இருந்தாங்கன்னு என் அப்பத்தா சாெல்லிருக்காங்க.

"நோ மச்சான் நம்ம பொண்ணுங்களோட நடை உடை பாவனை வேணும்னா காலத்துக்கு தகுந்த மாதிரி மாறியிருக்கலாம், ஆனால் அவர்களுடைய அடிப்படை குணம் என்னைக்கும் மாறாது."
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் அருகில் இருந்த டேபிலில் ஒரு இளம் பெண் எதையோ ஒன்றை மும்முரமாக தேடிக்கொண்டிருக்க அப்பொழுது இவர்கள் இருவரும் தமிழில் பேசுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் கண்கள் கலங்கி இருந்தது, நீண்ட நேரமாக அவள் தேடுவதையும் கண்கலங்கி நிற்பதையும் பார்த்த விஸ்வஜித் அவள் அருகில் சென்று

"ஹாய் பியூட்டி எனி ப்ராப்ளம், மே ஐ ஹல்ப் யூ." என்று கேட்க மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். அந்த இளம் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிவர,

"என்னுடைய பர்ஸ காணோம். நான் என் பிரெண்ட் கூட சாப்பிட வந்தேன், இன்னைக்கு நான் தான் பில் பே பண்ணனும். அவளுக்கு முக்கியமான போன் வரையும் எழுந்து போயிட்டா. அவ போனதுக்கு அப்புறம் தான் பார்த்தேன் என்னுடைய பர்ஸ காணோம். அதுல தான் என்னுடைய ஃபோன் பணம் எல்லாம் இருக்கு." எனக்கூற

அவள் கலங்கிய கண்களில் விஸ்வஜித் எதைக் கண்டானாே பார்த்த அந்த ஒரு நொடியில் அவன் மனம் அவள் புறம் சாயத் தொடங்கியது.

அவளின் கண்ணீர் ஏனாே விஸ்வஜித்தை வெகுவாக பாதித்தது. அவள் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை துடைக்க எழுந்த கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு,

"ஓகே ஓகே அழாதே எவ்வளவுன்னு சொல்லு நான் தரேன்." என்று விஸ்வஜித் கூறி தன் பர்ஸை எடுக்க அந்தப் பெண்ணோ

"இல்ல வேண்டாம் தெரியாதவங்க ஏதாவது கொடுத்து நான் அதை வாங்கினா பாதர் திட்டுவாங்க." எனக்கூற அவளின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு பேச்சில் தன்னைத் தொலைத்தவன்

"நீ ஒன்னும் என்கிட்ட எதுவும் வாங்க போறது இல்ல நான் பணத்தை பேரர் கிட்ட குடுக்க போறேன், நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது நீ என்கிட்ட அதை திரும்பக் கொடு." என கூறிவிட்டு
அந்தப் பெண் அமர்ந்திருந்த டேபிளில் இருந்த பில்லை பார்த்து அதற்குரிய பணத்தையும் டிப்ஸ் தொகையையும் வைத்துவிட்டு தன் அருகில் இருந்த இளம் பெண்ணை தேட அவள் அங்கிருந்து மாயமாய் மறைந்திருந்தாள்.

சுற்றிலும் தன் மனம் கவர்ந்தவளை தேட அவளோ அங்கு இருந்ததற்காக சுவடு இல்லை. எனவே நேராக தன் நண்பனிடம் சென்று

"ஆனந்த் என் பக்கத்துல நின்னு பேசிக்கிட்டு இருந்த பொண்ண பாத்தியா?" என கேட்க, ஆனந்தாே விடுமுறை நாளில் உறங்க விடாத தன் நண்பனை முறைத்து பார்த்து,

"நானே நானே லீவு நாளில் கூட என்ன ரெஸ்ட் எடுக்க விடாம இப்படி என்னையும் இழுத்துக்கிட்டு நீ சுத்திக்கிட்டு இருக்கிற கடுப்புல இருக்கேன். இதுல பொண்ண பாத்தியா பண்ணை பாத்தியான்னு கேட்ட கடுப்பாயிருவேன்."

தன் நண்பனிடம் தனக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்காத விஸ்வஜித் அந்த ஹோட்டல் முழுவதையும் ஒரு முறை தேடிப் பார்த்துவிட்டு சென்றான்.

அவன் தன்னை தேடுவதை ஒளிந்திருந்து பார்த்த இளம்பெண் (கனலி) சிரித்துக் கொண்டு நின்றாள்.

விஸ்வஜித் ஆனந்த் இருவரும் வெளியேறியதும் தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த கனலியை 'ஹேய்' என்ற சத்தத்துடன் அவளின் நட்பு வட்டாரங்கள் சூழ்ந்துகொண்ட தன் நண்பர்களிடம்

"சொன்ன மாதிரி பெட்ல நான் ஜெயிச்சுட்டே, அவங்களை நம்ம பில் பணத்தை கட்ட வைச்சிட்டேன். சோ பணத்தை எடுங்க." என தன் நண்பர்கள் கூட்டத்திடம் கேட்க,

"வழக்கம் போல இந்த தடவையும் நீதான் ஜெயிச்சு இருக்க, இனிமேல் இதுதான் லாஸ்ட் நான் உன்கிட்ட பெட் கட்டுவது." என மாஹித் கூறிக்காெண்டே பெட் தாெகையை தர, அவன் தலையில் தட்டிய கனலி

"டேய் மங்கூஸ் மண்டையா போன தடவையும் நீ இதை தான் சொன்ன." என்று தன் நண்பனின் காலை வார

"கனலி எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ, அந்த ஆள் உன்னை தேடி பாத்துட்டு போறாரு. தெரியாம அவர்கிட்ட நீ மாட்டிக்கிட்ட உனக்கு தான் பிரச்சனை." தீபிகா கூற அவளிடம்

"தீபு don't வொரி அந்த ரெண்டு பசங்களும் ஜஸ்ட் லீவ் காக தான் பெங்களூர் வந்திருக்காங்க. மே பி 1 ஆர் 2 வீக்ஸ்ல அவங்க இங்க இருந்து போயிடுவாங்க. அவங்களால நமக்கு என்ன பிரச்சினை வரப்போகுது." என கனலி வருத்தப்படும் தோழியை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து நண்பர்களுடன் வெளியேறினாள்.

வாழ்க்கையில் அனைத்தையும் விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளும் கனலி அந்த ஹோட்டலில் நடந்த விஷயத்தையும் விஸ்வஜித்தையும் அத்துடன் மறந்துவிட்டாள்.

ஆனால் விஸ்வஜித் கனலியை மறக்கவில்லை. அனைத்துப் பெண்களையும் ஒரு ரசிக்கும் பார்வையுடன் கடந்துபோகும் விஸ்வஜித்தால் கனலி அவ்வாறு கடந்து செல்ல முடியவில்லை.

என்னதான் விஸ்வஜித் பெண்களை சைட் அடித்தாலும் அவர்களுடன் நெருங்கி பழக மாட்டான். தானாக சென்று பேசவும் மாட்டான். பெண்களாக நெருங்கி வந்தாலும் சில வார்த்தை பேச்சுடன் கடந்துவிடுவான்.

ஒரு வேளை கனலியும் அங்கிருந்து மறையாமல் பேசியிருந்தால் நடந்த அனைத்தையும் விளையாட்டாக எடுத்துக்காெண்டு அவளையும் கடந்திருப்பானாே என்னவாே.

பார்த்த சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் நினைவு தன் மனதை பாதித்தது விஸ்வஜித்திற்கு ஆச்சரியமே. விஸ்வஜித் வாழ்வில் இதுவரை அவன் நினைத்தது மட்டுமே நடந்து வந்தது, சில சமயம் அவன் நினைப்பதற்கு முன்பே அவன் பெற்றோர்கள் அவனுக்கு சிலவற்றை நடத்தி தந்திருக்கின்றனர்.

அப்படிப்பட்டவனின் நினைவை மொத்தமாக ஆக்கிரமித்த ஒருத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்தது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஸ்வஜித் நினைத்ததை சாதிக்கும் ரகம் என்பது ஆனந்திற்கு தெரியும்.

ஆனால் அதற்காக அவன் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை இதுவரை அவனுக்கு வந்தது இல்லை. இதுவே அவன் வாழ்வில் முதல் முறை, அவன் வெற்றி பெற செய்யும் செயல்களை கண்டு ஆனந்த் 'தன் நண்பனா இவன்!' என்பதுபோல் வியந்து நின்றான்.

கனலி மீது அவனிற்கு இருந்த நினைவின் தாக்கம் அடுத்த 18 மணி நேரத்தில் விஸ்வஜித்தை கனலி முன்பு நிறுத்தியது.

நினைவு நிஜமாகுமா

பெரிய எப்பி காெடுக்க முடியாததற்கு சாரி ஃரெ ண்ட்ஸ். படிச்சு பார்த்துட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க. உங்களுடைய ஒவ்வொரு கமெண்ட் அண்ட் லைக் எனக்கு ரொம்ப முக்கியம்.
எந்த அளவுக்கு உங்களுடைய கமெண்ட் எனக்கு கிடைக்கிறதோ அந்த அளவு விரைவாகவும் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் நெக்ஸ்ட் அப்டேட் நான் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
ஐ அம் வெயிட்டிங்
 
Last edited:
Top