Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 5

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 5

இன்று.......

கனலி விஸ்வஜித் சந்தித்து பின் பத்து நாட்களும் சாதரணமாக சென்றது. கனலி புயலை எதிர் பார்த்த காத்திருக்க அங்காே அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அதற்கு காரணம் முடிந்த வரை விஸ்வா கனலியை தவிர்த்ததே. கனலியை பற்றிய அவன் இந்த நாள்களில் சேகரித்த தகவல் அவனை யாேசிக்க வைத்தது. தெளிவான முடிவெடுத்த பின் கனலியை எதிர்காெள்ள வேண்டும் என் தீர்மானித்தான்.

"மே ஐ கம் இன் பாஸ்."

தீபக் குரல் கேட்டதும் தன் நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு விஸ்வஜித் நிமிர்ந்து அமர்ந்தான்.

"எஸ் கம் இன்." என்றான் தனது வழக்கமான கம்பீர குரலில். உள்ளே வந்த அவளது பர்சனல் செகரட்டரி தீபக் மேஜையின் மீது ஒரு ப்பைலை வைத்து

"பாஸ் நீங்க கேட்ட ஃபைல் பெங்களூர் ஆபீஸ்ல இருந்து இப்ப தான் வந்துச்சு, நீங்க படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணிட்டா இத அனுப்பிடலாம்."

விகே குரூப் ஆஃப் கம்பெனி தலைமையகம் முன்பு "ஆர்கே" என்ற பெயரில் பெங்களூரில் இருந்து வந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் விஸ்வஜித் சென்னையை தலைமையகமாக மாற்றி பல்வேறு தொழில்களையும் தொடங்கியிருந்தான்.

தன் தந்தை தொடங்கிய கன்ஸ்ட்ரக்ஷன், டெக்டைல்ஸ், கிரானைட் மார்பிள் தொழிலை திறம்பட நடத்தினாலும், அதோடு சேர்த்து தனக்குப் பிடித்த சாஃப்ட்வேர் கம்பெனியையும் இன்னும் பல தொழில்களையும் திறன்பட நடத்திக் கொண்டு வருகின்றான்.

ப்பைலை படித்துப் பார்த்து கையெழுத்திட்ட விஸ்வஜித் தீபக்கிடம் அதை நீட்டி

"தீபக் புதுசா சேர்ந்து இருக்கிற அசிஸ்டன்ட் மேனேஜரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்."

"பாஸ் அது வந்து அவங்க ஒரு ஹாஃப் அண்ட் ஹவர் முன்னைய கிளம்பிட்டாங்க."

"வாட் ஹொவ் டேர் ஷீ இஸ். யாரு அவங்களுக்கு பர்மிஷன் கொடுத்தது."

"பாஸ் நீங்க பிஸியா இருந்ததால என்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு உங்களுக்கு மெய்ல் தான் போனாங்க."

"நாளைக்கு வந்தவுடனே அவங்கள என்ன மீட் பண்ண சொல்லுங்க."

"ஓகே பாஸ்." என்று மிகுந்த மரியாதையுடன் கூறிவிட்டு ஓசைப்படாமல் அங்கிருந்து வெளியேறினான்.

"திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு. அன்னைக்கு சொல்லாம பெங்களூரை விட்டு ஓடின. இன்னைக்கு என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணாம வேலையிலிருந்து ஓடி இருக்கியா. என்கிட்ட இருந்து எவ்வளவு தூரம் ஓடுவன்னு நானும் பாக்குறேன்."

________________________________________________________________

அலுவலகத்திலிருந்து வீடு வந்த கனலி தனக்காக வாசலில் காத்திருந்த தாயைப் பார்த்து

"அம்மா நான் உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் ஆபீஸ்ல வேலையா இருக்கும் பொழுது போன் பண்ணி தொந்தரவு பண்ணாதன்னு. இப்பத்தான் நான் அந்த ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்து இருக்கேன் இப்படி அடிக்கடி பர்மிசன் கேட்டா என்ன பத்தி அங்க இருக்குறவங்க என்ன நினைப்பாங்க." என்று தாயிடம் கேட்டாலும் கனலில் மனம் மட்டும்

"விஜி கண்டிப்பா ராம் கிட்ட மட்டும் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்ததுல செம கோவத்துல இருப்பான். ஏற்கனவே என் மேல கோவமா இருக்குறவங்க கிட்ட இதுக்கும் சேர்த்து நான்தான் வாங்கி கட்டிக்க வேண்டியதா இருக்கும், இதெல்லாம் இந்த அம்மாவுக்கு எங்க புரிய போகுது."

"எனக்கு வேண்டுதல் பாரு உன்ன வேலை நேரத்துல தொந்தரவு பண்ணனும்னு."

"தொந்தரவு பண்ண உனக்கு எந்த எண்ணமும் இல்லன்னா எதுக்காக என்ன உடனே வீட்டுக்கு வரச் சொன்னேன்."

"மாப்பிள்ளை வந்திருக்காரு உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு தான் போகணும்னு சொல்லி ரொம்ப நேரமா காத்து இருக்காரு." என்று கூறிய தாயை முறைத்துப் பார்த்த கனலி

"இன்னும் ஒரு தடவை உன் வாயில இருந்து மாப்பிள்ளை அப்படிங்கிற வார்த்தை வந்துச்சு நான் மனுசியா இருக்கமாட்டேன் பாத்துக்காே. நீ பசங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிகிட்டு பார்க்ல இரு நான் சாென்னதும் வந்தா பாேதும்."

"அப்பாவ பி்ள்ளைங்களை பாக்க விடமா செய்யுறது பாவம் டி."

"அம்மா பாவம் புண்ணியம் பத்தி பேசி என்ன காேவப்படுத்தாம சாென்னத மட்டும் செய்." எனக்கூறிவிட்டு வீட்டிற்குள் வர அங்கு

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கிரிதரனை கண்டதும் எழுந்த கோபத்தை மனதுக்குள் அடக்கி கொண்டு சமையலறைக்குள் சென்று தண்ணீரை குடித்து தன்னையும் தன் மனதையும் சமம் செய்தாள்.

சமையலறையில் இருந்து கனலி வெளி வருவதற்காக காத்திருந்த கிரிதரன் கனலி வந்ததும்

"நான் கேட்டது என்னாச்சு, எனக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சிட்ட நான் எதுக்காக இங்க அடிக்கடி வந்து உன்னை தொந்தரவு பண்ண போறேன்."

அனைத்தும் கனலில் காதுகளில் விழுந்தாலும் எதுவும் கேட்காதது போல் கிரிதரன் எதிரிலிருந்த ஒரு ஆள் அமரும் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் செயலில் கிரிதரன் கோபமுற்று

"கனலில் நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதே, நான் சொன்னா அதை சொன்னபடி செஞ்சு காட்டுவேன்."

"அப்படியா." என எள்ளல் நிறைந்த குரலில் கேட்ட கனலி தொடர்ந்து
"முடிஞ்சா உன்னால் ஆனத செஞ்சு பாரு ஐ டோன்ட் கேர்."

"அவங்க மூணு பேரும் என்னோட குழந்தைங்க என்னோட குழந்தைகளே எப்படி என் கிட்ட கொண்டு வர்றதுன்னு எனக்கு நல்ல தெரியும்."

"தெரிஞ்சா எதுக்கு மிஸ்டர் அடிக்கடி இங்க வரீங்க."

"என்னடி ரொம்ப திமிரா பேசுற என்ன தான் அவங்க மூணு பேரும் உன்ன வார்த்தைக்கு வார்த்தை அம்மான்னு கூப்பிட்டாலும் நீ அவங்களுக்கு அம்மா இல்ல சித்திதான்."

சித்தி என்ற வார்த்தை மனதை காயப்படுத்தினாலும் அதை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்

"அது என்னுடைய பிரச்சனை அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என் அக்கா செத்துப்போன அன்னைக்கே உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிற சொந்தமும் முடிஞ்சு போச்சு.

தேவையில்லாம பிள்ளைங்க மேல பாசம் இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம். அதை உங்க மாமியார் நம்பலாம் ஆனா நான் நம்ப மாட்டேன்."

"நீ நம்ப வேண்டாம் உன்னை நம்ப வைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. நீ நினைக்கிறது சரிதான் எனக்கு பிள்ளைகள் மேல எந்த பாசமும் இல்ல, எனக்குத் தேவையானது பணம் மட்டும்தான்.

எனக்கு ஒரு பத்து லட்சம் கொடுத்துட்ட எனக்கும் இந்த குழந்தைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் எழுதி கொடுத்துட்டு போயிடுவேன்."

"10 லட்சம் இல்ல பத்து பைசா கூட உனக்கு என்னால தர முடியாது."

"தேவையில்லாமல் என்கிட்ட வெச்சுகாதே, நான் கேட்கிற பணத்தை நீ தரல கோர்ட்ல கேஸ் போட்டு என்னுடைய பிள்ளைகளை உங்கிட்ட இருந்து பிரிக்க முடியும். அப்பாே உன்னால என்ன பண்ண முடியும்."

"காேட் கேஸ்னா நான் பயந்திடுவேனா, நீ கேஸ் பாேட்டா, நானும் கேஸ் பாேடுவேன். என்ன பாக்கற என் அக்கா ஒன்னும் இயற்கையா சாகல அவ சாவுல எனக்கு சந்தேகம் இருக்குன்னு சாென்னா பாேது நீ காலி." கடலின் வார்த்தைகளை கேட்ட கிரிதரன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கனலியை தீ பார்வை பார்த்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.

கனலி சகாேதரி கமலியின் மரணம் இயற்கையானது அல்ல தற்காெலையே, அதற்கு காரணமும் கிரிதரனே. பின் எப்படி பேசுவான். வரதட்சணை பணம், கமலி நகை எல்லாம் குடி சூதாட்டத்தில் மறைய, அடுத்த கட்டமாக கமலியை பிறந்த வீட்டில் பணம் வாங்கி வர துன்புறுத்த ஆரம்பித்தான். அனைத்தையும் வெளியில் கூறாமல் பிள்ளைகளுக்காக சகித்துக்காெண்ட கமலி இறுதியாக கிரிதரன் செய்ய நினைத்ததை தாங்கிக்காெள்ள முடியாமல் தற்காெலை செய்து காெண்டாள்.

கமலி தான் இறப்பதற்கு முன்பு நடந்த அனைத்தையும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தன் தங்கைக்கு தெரியப்படுத்தி இருந்தாள். தான் புகார் அளித்தால் கிரிதரன் சிறை செல்வது நிச்சயமே, ஆனால் தன்னை தவிர அனைவரும் கிரிதரன் நம்புவதே கனலியை மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம்.

மேலும் வழக்கு என ஒன்று ஆரம்பித்துவிட்டால் அதில் பிள்ளைகளின் வாழ்வும் வீணாகும் என்ற காரணத்திற்காகவே கனலி அந்த முயற்சியை கைவிட்டாள்.

தன் தமக்கையை நினைத்து கலங்கி கொண்டிருந்த கனலியை இவ்வுலகிற்கு கொண்டுவந்தது வாசலில் இருந்த அழைப்பு மணி ஓசயைே. தன் முகத்தை சீராக்கி கொண்டு கதவை திறக்க அங்கு நின்றதோ கனலி பாசம் மிகுந்த(?) அண்ணன் கார்த்திக், அவன் மனைவி பூஜா

தன் அண்ணனின் வரவை எதிர்பார்க்காத ஒருநிமிடம் ஆச்சரியப்பட்டாள். மேற்கொண்டு எதுவும் பேசாமல் வழிவிட தன் பொருள்களுடன் உள்ளே வந்த கார்த்திக் கிரிதரன் அமர்ந்திருந்த இடத்தில் பூஜா அமர, கனலி மனது ஒரு நிமிடம் பழைய கனலியாக மாறி

'இப்பதான் ஒரு பிரச்சனை வீட்டைவிட்டு போச்சு, அதுக்குள்ளேயும் இன்னொரு பிரச்சனை வந்து இறங்கிட்டு. கடவுளே உனக்கு என் மேல கொஞ்சம் கூட இரக்கமே வரலையா.' என கடவுளை வறுத்து எடுக்க, அமர்ந்து இருந்த கார்த்திக் மனைவி பூஜா தன் கனவனை பார்த்து,

"வீட்டுக்கு வந்தவர்களை வான்னு கூப்பிட கூட உங்க தங்கச்சிக்கு மனசு இல்லை பாேல" என கூற, அந்த பாசம் மிகுந்த(?) அண்ணனாே,

"அது எப்படி இருக்கும் கூட பிறந்தவனுக்கு எதையும் கொடுக்காமல் சொத்து மொத்தத்தையும் சுருட்ட நினைக்கிற நீ எப்படி கூப்பிடுவ." அண்ணன் குற்றச்சாட்டில் சிலிர்த்து எழுந்த கனலி

"யாரு யாருக்கு சொத்தை கொடுக்காமல் மொத்தமா சுருட்ட நினைக்கிறாங்கன்னு உனக்கு நல்லா தெரியும். அது நான் உனக்கு ஞாபகப்படுத்தவும் எந்த அவசியமும் இல்லை." என கூற,

"இந்த திமிர் தான் உன்னை இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கு. இப்படியே இருந்தா கூடிய சீக்கிரம் நீயும் உருப்படாமல் நடுத்தெருவில் நிற்க போற."

"கவலைப்படாதே அப்படி நான் நடுதெருவில் நின்னாலும் உன்கிட்ட வந்து கையேந்தி நிற்க மாட்டேன்."

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திலகவதி பிள்ளைகளுடன் வீட்டுக்குள் வர, நீண்ட நாட்களுக்கு பின் தன் மகனை பார்த்த ஆனந்தத்தில்

"கண்ணா எப்படி இருக்க? உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு, இந்த அம்மா ஞாபகமே உனக்கு இல்லையா. பூஜாமா உனக்கு கூட என்கிட்ட பேச நேரமில்லையா? தருன் குட்டி எங்கமா?"

அதுவரை தன் கனவனின் தங்கையிடம் காட்டிய முகத்தை மறைத்து கனிவாக மாற்றிக்கொண்டு

"எனக்கு எப்பவும் உங்க ஞாபகம் மட்டும் தான் அத்தை, நாங்க என்ன பண்ண ஏற்கனவே எங்களுக்கு இருக்கிற கடன் கழுத்தை நெறிக்குது, ஊர்ல இருக்கிற சொத்த வித்தா கெடைக்கிற பணத்துல கடனை எல்லாம் அடைத்து விட்டு ஒரு வீடு வாங்கலாம்னு நினைச்சா முடியுதா. வீடு வாங்கிட்ட உங்களயும் எங்க கூட வைச்சுகலாம். எங்க நாம நினைச்சது நடக்குது சிலரு தானும் வாழாமல் மத்தவங்களையும் வாழவிடாமல் செய்யும் போது நான் என்ன செய்ய முடியும்."

மருமகளின் வருத்தம் நிறைந்த பேச்சில் வழக்கம்போல மனமிரங்கிய திலகவதி

"கனலி கார்த்திக்கும் பூஜாவும் எவ்வளவு கஷ்டத்துல இருந்தா இவ்வளவு வருத்தப்பட்டு பேசுவா, நீதான் அண்ணன் சொல்ற மாதிரி கையெழுத்து போட்டு கொடுத்தா என்ன."

தாயின் அறியாமையை நினைத்து தலையிலடித்துக் கொண்ட கனலி பிள்ளைகளை உள்ளே அனுப்பிவிட்டு திலகவதியிடம்,

"அம்மா சாெத்து என் பெயரில் இருந்தாலும் இது ஒன்னும் நமக்கு மட்டும் சொந்தமான சொத்து கிடையாது. இந்த சொத்துல நமக்கு எந்த அளவு உரிமை இருக்காே அதே அளவு சித்தப்பா குடும்பத்துக்கும் இருக்கு."

தினகரன் பேச்சை எடுத்ததும் தாயின் கோபத்தை தூண்டிவிடும் நோக்கத்துடன் கார்த்திக்
"சொத்த உரிமை கொண்டாட அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு, அப்பா உயிரோடு இருந்தவரை அவருடைய உழைப்பை அட்டை பூச்சி மாதிரி உறிஞ்சவங்க தானே அவங்க குடும்பம்.
அப்படி இருக்கும் பொழுது அவங்களுக்கு எப்படி சொத்தை கொடுக்க முடியும்."

கார்த்திக் எண்ணம் பொய்க்காமல் திலகவதி சென்று அடைந்தது.

"கார்த்திக் சொல்றது சரிதானே பக்கவாதம் வந்துருச்சுன்னு உன் சித்தப்பா வீட்டில படுத்துக்கிட்டதும் உன் அப்பாதான் அவங்க பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் உழைத்து கொட்டினார். இப்பாே நீயும் அதை தான செய்யுற. அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு எப்படி செத்த கொடுக்க முடியும்."

"அம்மா அப்பா ஒன்னும் சும்மா அவங்க குடும்பத்துக்கு செலவு செய்யலை. சித்தப்பா அவருடைய சொத்து முழுசும் அப்பா பெயருக்கு மாற்றி கொடுத்துட்டாரு. சித்தப்பா எழுதிவைச்ச சாெத்து மதிப்பு இப்பாே 50,00,000. அதில ஒரு 10,00,000 கூட நானும் அப்பா அவங்களுக்கு கொடுக்கல.
அதுவுமில்லாம சித்தி வேலை பார்த்துதான் அவங்க பிள்ளைங்களை வளர்தாங்க, எங்க உதவி இல்லாட்டி கூட வாந்திருப்பாங்க." என கூறிய கனலிடம்

"இப்போ என்ன பண்றதா முடிவு பண்ணி இருக்க." கேட்ட அண்ணியிடம்

"இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு ஏற்கனவே நான் சொன்னதுதான் அப்பா சாெத்துல உங்களுடைய பங்கு மட்டும் உங்களுக்கு வந்து சேரும். சித்தப்பா சாெத்துல பங்கு யாழினி இனியன்க்கு மட்டும் தான்.
என்னுடைய பங்கும் கமலி பங்கும் குழந்தைகளுக்கு. இதுதான் என்னுடைய முடிவு." தங்கை முடிவால் தன் கற்பனை காேட்டை தவிடுபாெடியாவதை தாங்கிக்காெள்ள முடியாத கார்த்திக்,

"அப்பா சாெத்த உன் பெயரில் எழுதி வைச்ச திமிரில பேசுதியா. நீ எப்படி அந்த சொத்தை வித்து அவங்களுக்கு கொடுக்கிறேன் நானும் பாக்குறேன்."

"தாராளமா பாரு அது உன்னுடைய விருப்பம்."

அங்கிருந்து தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வந்த கனலி சாமி தரிசனம் முடிந்ததும் பிள்ளைகளை விளையாட விட்டு விட்டு அவர்களை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் ஆரவாரம் உணர்ந்து நிமிர்ந்து பார்க்க அவளின் சிறுவயது தோழி பத்மா நின்றுகொண்டிருந்தாள். தோழியை பார்த்த மகிழ்ச்சியில்

"பத்மா நான் இங்க ஒன்னு எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இருக்க? உன்னுடைய குழந்தையை எங்கே?" மூச்சு விடாமல் பேசும் கனலியை பார்த்து புன்னகைத்த பத்மா

"நீ மாறவே இல்ல கனலி. ஸ்கூல் படிக்கும்போது எப்படி பேசுனியாே இப்பவும் அதே மாதிரி பேசுற மத்தவங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல்.
நான் நல்லா இருக்கேன். என்னுடைய பையன் அங்க என்னோட மாமியார் கிட்ட இருக்கிறான். நாங்க இங்க சென்னை வந்து ஆறு மாசம் ஆகப்போகுது. இங்கதான் பக்கத்துல தான் எங்க வீடு இருக்கு."

"ரொம்ப பக்கத்துல இருந்தும் இதுவரைக்கும் நாம பாத்துக்க இல்ல."

"அதான் இப்போ பாத்துட்டாேமே. இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம். சரி நீ எப்படி இருக்க அங்க விளையாடிக்கிட்டு இருக்கிறது உங்க அக்கா கமலி குழந்தைதானே. அம்மா எப்படி இருக்காங்க?"

"நல்லா இருக்காங்க."

கனலி முகத்திலிருந்த வருத்தத்தை பார்த்து தன் மாமியாரை குழந்தையுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,

"ஏதாவது பிரச்சனையா கனல் நீ வருத்தத்தில் இருக்கிற மாதிரி இருக்கு."

"என் வாழ்க்கையில பிரச்சனைக்கா பஞ்சம். எப்படியாவது பிரச்சனை என்னைத்தேடி ஒன்னு மாத்தி ஒன்னு வந்துக்கிட்டே தான் இருக்கு. ஒரு பிரச்சனையை நான் சமாளித்து அனுப்பினா அதுக்குப் பின்னாடியே இன்னொன்னு வந்து நிக்குது."

"உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா என்கிட்ட சொல்லு. எனக்கு உன்னால உதவி பண்ண முடியாட்டியும் உன்னுடைய மன பாரத்தை என்கிட்ட இறக்கி வைத்த மாதிரி இருக்குமே."

தனது தோழி கேட்டதும் அதுவரை தன் மனதில் அழுத்திய பாரம் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு வைத்த கனலி

"எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலடி கமலி புருஷன் 10 லட்சம் தரலைன்னா குழந்தைகளை அவரு கூட கூட்டிட்டு போயிருவேன் மிரட்டிக்கிட்டு இருக்காரு.
இன்னொரு பக்கம் என்னுடைய அண்ணன் கார்த்திக் பத்திரத்தில் கையெழுத்து போடு சொத்து முழுசும் நான் வித்து வாங்காத கடனை அடைக்க அம்மா மூலமா எனக்கு பிரஷர் கொடுத்துக்கிட்டு இருக்கான்.
யாழினிக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னும் அவளுக்கு நான் கொடுக்கிறதா சொன்ன நகை பணம் எதுவும் கொடுக்கல. ஏதோ பிரகாஷ் வீட்டுல உள்ளவங்க நல்லவங்களா இருக்கும் போயி அதைப்பற்றி எதுவும் கேட்கல. அதை எப்படி கொடுக்க எனக்கு இன்னும் தெரியல.
இனியன் படிச்சு முடிக்க இன்னும் நாலு மாதம் இருக்கு அதுவரைக்கும் எப்படியாவது பிரச்சனையை சமாளிச்ச போதும்."

"எல்லாம் சரி டி உன் வாழ்க்கை."

"எனக்கு வாழ்க்கையா? அப்படி ஒன்னு இருந்தா தான அத பத்தி யாேசிக்க முடியும்."

"விஷ்வஜித் கிட்ட உண்மையை சாென்னா பாேதும் உன் பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும்."

"என்ன சாெல்லி உதவி கேட்க முடியும் குடும்பம் தான் முக்கியம்னு உன் கிட்ட சாெல்லாம ஓடி வந்துட்டேன். இப்பாே என் குடும்பத்துல பிரச்சனை நீ வந்து சரி

பண்ணுன்னு எப்படி கேட்க முடியும்."

சிறிது நேரம் பேசிவிட்டு தன் பிள்ளைகளுடன் செல்லும் கனலியை பார்த்துக்காெண்டிருந்த பத்மா

"சீக்கிரம் உனக்கான வாழ்க்கை உனக்கு கிடைக்கும் கனலி. அதுக்கு என்னால முடிந்த உதவியை பண்ணுவேன்."

நினைவு நிஜமாகுமா?


ப்ரெண்ட்ஸ் கனலி கிட்ட இருக்கிற குழந்தைகள் பத்தி உங்களுக்கு இருந்த டவுட் க்ளியர் பண்ணிடேன்.
நெ க்ஸ்ட் எப்பி வியாழக்கிழமை.
அதுவரை உங்கள் கருத்துக்களை படித்துக்காெண்டு இருக்க விரும்பும் எனது ஆசையை நிறை வேற்றுங்கள்.
ஐ எம் வெட்டிங் பாஃர் யுவர் கமெனட்ஸ் அண்ட் லைக்.
சைலண்ட் ரீடர்ஸ் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் நானும் அவலுடன் உங்கள் விருப்பத்திற்கு எற்ப எப்பியை விரைவில் தந்து ஈஸ்டர்க்கு முன் கதையை முடித்து விடவேன்.
 
Last edited:

Advertisement

Top