Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 6

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 6

இரவு தாமதமாக வீடு திரும்பிய விஸ்வஜித் வீட்டிற்குள் வர அங்கு தனக்காக காத்திருந்த பெற்றோரை பார்த்ததும் அவர்கள் எதற்காக காத்திருக்கின்றார்கள் என்பதை நினைத்து, அவர்களை கண்டுகொள்ளாமல் மாடிப்படி ஏற முயற்சிக்க, அவன் தந்தை ரஞ்சித்

"விஸ்வா நாங்க ரெண்டுபேரும் உன்கிட்ட பேசுவதற்காக மட்டும்தான் இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறோம்." தந்தையின் குரலில் நின்ற இடத்தில் இருந்து திரும்பி பார்த்த விஷ்வா

"நான் உங்கள காத்துகிட்டு இருக்க சொல்லலையே. நீங்க உங்க வேலைய பாருங்க அதே மாதிரி என்னை என்னுடைய வேலையை பார்க்க விடுங்க." மகனின் பேச்சில் சலிப்படைந்த விஸ்வாவின் தாயார் பூரணி

"எல்லோரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு வேலை பாக்குறதுக்கு இது ஒன்னும் ஆபீஸ் இல்லை, இது குடும்பம் விஷ்வா இங்க ஒருத்தர் மத்தவங்களுக்காக சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும்." என்ற தன் தாயின் அருகில் வந்து அவரின் முகத்தில் ஒரு நிமிடம் தன் பார்வையை நிலைக்க விட்டு

"எஸ் மாம் நீங்க சொல்றது சரிதான் குடும்பம்னு வரும்பொழுது ஒருத்தர் மத்தவங்களுக்காக சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும். நானும் செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன் அப்பாவுக்கு அவருடைய பிசினஸ் முக்கியம், அவருக்காக அவருடைய நஷ்டத்தில மூழ்க இருந்த பிசினஸை நான் நல்லா பாத்துக்கிட்டு இருக்குறேன்.
அவர் இருக்கும் பொழுது கிடைத்த லாபத்தை விட பத்து மடங்கு அதிகமா காெடுத்துக்கிட்டு இருக்கிறேன். இதுக்கு மேலயும் ஏதாவது தேவைனா சொல்ல சொல்லுங்க செஞ்சு கொடுக்கிறேன்.
அதே மாதிரி இந்த சொசைட்டியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதுக்காக நீங்க எவ்வளவாே செலவு பண்றீங்க, அது உங்கள் விருப்பம் அதுல நான் தலையிட போறது இல்ல. அதே மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய வாழ்க்கையில் தலையிட எந்த அதிகாரமும் கிடையாது."

"விஷ்வா நாங்க உன்னுடைய அப்பா அம்மா அதை ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு."

"நல்லா ஞாபகம் இருக்கு உங்களுடைய கவுரவத்த காப்பாத்த பிரஜித்க்கு தகுதியே இல்லாத ஒருத்திய கல்யாணம் பண்ணி வச்சீங்களே, அது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.
அவளால அவன் அனுபவித்த மன உளைச்சல் எனக்கு ஞாபகம் இருக்கு.
அவனுடைய மரணம் எனக்கு ஞாபகம் இருக்கு.
இப்போ அவனுடைய குழந்தைகள் ரெண்டு பேரும் அம்மா பாசம் இல்லாம இருக்குறது எனக்கு ஞாபகம் இருக்கு.
உங்களுடைய கௌரவத்தை காப்பாற்ற என்னுடைய வாழ்க்கையும் பணயம் வைக்க நீங்கள் முடிவு பண்ணதும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
நீங்க ஒன்ன நல்ல ஞாபகம் வச்சிக்கோங்க என்னுடைய அனுமதி இல்லாம என்னுடைய வாழ்க்கையில் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கணும்னு நெனச்சா விளைவுகள் பயங்கரமாயிருக்கும்.
உங்க விருப்பம் தான் முக்கியம்னு நினைச்ச அதை சந்திக்க நீங்க ரெண்டு பேரும் தயாரா இருந்துக்குங்க." என பெற்றோர்கள் இருவரையும் எச்சரித்துவிட்டு மேலே தன் அறைக்கு செல்ல திரும்பியவனின் கால்கள் அருகில் இருந்த அறையை நோக்கி முன்னேறியது கதவைத்திறந்து.

உள்ளே சென்ற விஸ்வஜித் அங்கு உறங்காமல் அமைதியாக அமர்ந்திருந்த பிள்ளைகள் இருவரையும் பார்த்ததும் அதுவரை மனதில் இருந்த அனைத்து கோபங்களும் மறைந்தது.

கட்டிலில் இருந்த அண்ணனின் இரண்டு குழந்தைகளையும் மாறி மாறி பார்த்த விஸ்வா மனதுக்குள்

'இந்த உலகம் ரொம்ப மோசமானது, யார் யாரோ பண்ண தப்புக்கு அதற்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தங்க தண்டனை அனுபவிக்க வேண்டிய தான் இருக்கு. உங்கள் இரண்டு பேரையும் நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். யூ போத் ஆர் இவரிதிங் இன் மை லைஃப்' என மனதுக்குள் பேசிக்கொண்டிருக்க அவன் அருகில் வந்த கிருபாலி

"விஷ்வா எதுக்காக இவ்வளவு லேட்டா வர, நான் உனக்காக ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா." என கேட்ட தன் அண்ணனின் எட்டு வயது மகளின் அருகில் சென்று

"சாரி ஸ்வீட்டி கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு அதான் வர லேட்டாயிடுச்சு இனி சீக்கிரமா வர முயற்சி பண்றேன்."

இவர்களின் பேச்சு இடை புகுந்த ஐந்து வயது அபராஜித் கட்டிலில் அமர்ந்திருந்த விஷ்வாவின் முதுகில் சாய்ந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு

"அப்பா அக்கா ரொம்ப சேட்ட பண்றா நீங்க அவளை திட்டவே இல்லை." தன்னை பற்றி குறை கூறுவதை விரும்பாத கிருபா

"நான் என்னடா பண்ணினேன்."

"பாருங்கப்பா எப்பவுமே எல்லாரையும் மரியாதை இல்லாம பேசுற. நான் எப்படி உங்கள அப்பான்னு கூப்பிட்ட இவ மட்டும் உங்கள பேர் சொல்லி கூப்பிடுற திஸ் இஸ் நாட் எ குட் மேனர்ஸ்." என அபி தன் அக்காவை குறைகூற, விஷ்வாவின் மனதோ

'டேய் அபி உனக்கு எங்க தெரியப் போகுது என்னோட ஸ்வீட்டி என்ன மரியாதை இல்லாம பேசும் பொழுது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்குது. என் மனசுக்கு புடிச்ச பொண்ணு ஒருத்தி இதுவரைக்கும் எனக்கு மரியாதை கொடுத்தது இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனக்கு புடிச்ச ஸ்வீட்டி எப்படி எனக்கு மரியாதை கொடுத்து பேசுவா.' என நினைத்துக்கொண்டு மகனிடம்

"சரி இனிமேல் அப்படி சொல்லாமல் பார்த்துக்கலாம். இப்போ ரெண்டு பேரும் தூங்குங்க நாளைக்கு சாட்டர்டே ஆஃப் டே மட்டும்தானே ஸ்கூல், சாே நாம அவுட்டிங் போகலாம் ஓகேவா." என்று கேட்க

சந்தோஷத்தில் துள்ளி குதித்த இரு பிள்ளைகளையும் சமாளித்து உறங்க வைக்க முயற்சி செய்ய ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்த கிருபாலி

"விஷ்வா நீ சாப்டியா?" எனக்கேட்க

"சாப்பிட்டேன்." என்று பதிலளிக்க

"நீ பொய் சொல்ற, நீ சாப்பிடல தானே நீ போய் சாப்பிடு, நாங்க தூங்கிடுவோம்." என்று கூறிய குழந்தைகள் இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு கீழே வர,

தன் பெற்றோருடன் அமர்ந்திருந்த தன் மாமா சுந்தரை பார்த்ததும்

'இந்த ஆளு இங்கதான் இருக்காரா, இனி வீட்டுல பிரச்சனைக்கு பஞ்சமிருக்காது. நீ சாப்பிட்ட மாதிரிதான் விஸ்வா.' என மனதுக்குள் பேசிக் கொண்டு தன் அறைக்கு சென்று உடையை கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்.

கட்டிலில் விழுந்த அடுத்த நொடி அவனின் வசந்த கால நினைவுகள் அவன் முன் அணிவகுத்து நின்றது.

_________________________________________________________________

அன்று......

தன் காலடியில் மண்டியிட்டு காதலை கூறியவனை பார்த்து கனலி வாயடைத்து நின்றது ஒரு சில நிமிடங்களே. நடப்பதை கிரகித்துக்காெண்ட அடுத்த நாெடி தன் வழக்கமான குறும்புப் புன்னகையுடன்

"சாரி மிஸ்டர்... ஐ எம் நாட் இம்ரெஸ்ட், பெட்ரர் லக் நெக்ஸ்ட் டைம்."

கனலியின் கண்களின் மாெழியால் கவரப்பட்டவனுக்கு அவள் வாய் மாெழி செய்தி ஒரளவு எதிர் பார்த்ததுவே. அவளின் கண்களின் வழியே மனதை படிக்க முயற்ச்சி செய்த விஸ்வஜித்திற்கு கிடைத்தது குறும்பு புன்னகை மட்டுமே. அவள் புன்னகை முகத்தை பார்த்தபடி எழுந்து நின்றவன்

"ஓகே நான் ஒத்துகிறேன் என்னால உன்ன இம்ரெஸ் பண்ண முடியல. எனக்கான பாெண்ண பத்தி சாென்ன நீயே அவள எப்படி இம்ரெஸ் பண்றதுன்னும் சாெல்லிடு." அவனது கேள்விக்கு பதில் யாேசிப்பது பாேல பாவனை செய்துவிட்டு

"அது ரெம்ப கஷ்டம் பாஸ். யூ காண்ட்." என கூற, அவனாே அவள் அருகில் நெருங்க அவளாே பின் நகர்ந்தாள்.

அந்த மிகப்பெரிய மரத்தில் மாேதி நின்றவளின் இருபுறமும் கைகளால் சிறை செய்தவன் அவள் முகம் நாேக்கி குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் படி ஆழ்ந்த குரலில்,

"ஐ கேன், ஐ வில்."

இருவருக்கும் இடையில் இடைவெளி என்பது விரலளவு மட்டுமே. விஸ்வஜித் கைகளை வைத்திருப்பது மரத்தின் மீதே, ஆனால் பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு விஸ்வா கனலிக்கு முத்தமிடுவது பாேன்ற தாேற்றத்தையே காெடுக்கும்.

தனக்கு வெகு அருகில் நின்றவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த கனலி அவன் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டு போனாள். அந்த நொடி அவள் உலகத்தில் வேறு எதுவும் இல்லை. இருந்தது எல்லாம் தன் எதிரில் கண்களில் காதலை தேக்கி நிற்கும் விஸ்வஜித் மட்டுமே.

தங்களுக்கான உலகில் தனித்து நின்ற இருவரையும் சுய உணர்வுக்கு அழைத்து வந்தது பாதர் ஆபிரகாம் குரலே,

"கனலி..." ஆபிரகாம் குரலில் கனலியை விட்டு விலகி நின்று விஸ்வஜித்தை யாரென்று பார்க்க, கனலியோ தவறு செய்த குழந்தையை போல் நின்றுகொண்டிருந்தாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்த பாதர் ஆபிரகாம் கனலியை பார்த்து கண் ஜாடை காட்ட கனலி அந்த இடத்தைவிட்டு விரைவாக சென்று விட்டான்.

தன்னை விட்டு விலகி செல்லும் கனலியை பார்த்துக்காெண்டிருந்தவன் முன் வந்து நின்ற ஆபிரஹாம் தன் பார்வையால் விஸ்வஜித்தை எடைபோட, அவனாே அவரது பார்வைக்கு எதிர் பார்வை பார்த்தபடி அசையாமல் நின்றான்.

இருவரும் தங்கள் மௌனத்தில் இருக்க அதை முதலில் உடைத்து எறிந்த ஃபாதர் ஆபிரகாம்,

"நீங்களும் இங்கே இருந்து சீக்கிரம் போயிட்டா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்."

"எதுக்காக நான் போகணும்."

விஸ்வஜித் குரலில் இருந்த உறுதி தான் யாருக்கும் அடிபணிந்து செல்பவன் இல்லை என்பதை உணர்த்த, அந்த வயது முதிர்ந்த துறவியாே வரவழைத்துக்காெண்ட கடுமையுடன்,

"இங்க இருக்கிற அனாதை ஆசிரமத்தில் எண்ணிக்கை அதிகமகிறதில எனக்கு விருப்பம் இல்லை."

விஷ்வா அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகாெண்டதும்

"வாட் யூ நீ மீன் பாதர், எனக்கு கனலி ஏமாற்றனும்னு எந்த எண்ணமும் இல்லை. ஐ லவ் கனலி. நான் எதுக்காக இங்க இருந்து போகணும். என்னால பாேக முடியாது பாதர்."

மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாத அவ்விடத்தை விட்டு செல்ல முயற்சிக்க அவர் முன் வந்து வழிமறித்த விஸ்வஜித்,

"பாதர் என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல."

"உங்க கேள்விக்கான பதில நான் சொல்லிட்டா இங்க இருந்து போயிடுவீங்களா?" என கூறிய பாதரை பார்த்து ஒரு பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியேற்றிய விஸ்வஜித்,

"உங்களுடைய பதில் நியாயமானதாக இருந்தால் இங்க இருந்து போயிடுவேன். ஆனால் கனலியை விட்டு எப்பவும் போகமாட்டேன். ஐ வாண்ட் ஹேர் இன் மை லைஃப் பார்எவர்." என விஸ்வஜித் கூற அவன் பதில் ஏளனமான புன்னகை ஒன்று பாதர் ஆபிரகாமின் உதட்டில் வந்து மறைந்தது.

ஒரு நொடி என்றாலும் அது விஷ்வாவின் கண்களில் இருந்து தப்பவில்லை.

"இந்த விஷ்வாவிற்கு பொய் செல்ல வேண்டிய எந்த அவசியமும் கிடையாது பாதர்."

"அப்படியா.!" என்று ஆச்சரியம் போல் கேட்ட பாதர் ஆபிரகாம்

"என்னோட வாங்க." என விஷ்வாவை அழைத்துச்சென்ற இடம் ஆலயத்தை ஒட்டினாற்போல் இருந்த மதில் சுவரை அடுத்திருந்த கருணை இல்லத்திற்கே.

ஒன்றும் பேசாமல் இல்லம் முழுவதையும் சுற்றி காட்டிய பின்பு மீண்டும் பழைய இடத்திற்கு அழைத்து வந்த ஆபிரகாம் அமைதியாக அந்த சிமெண்டால் ஆன இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

அமைதியாக அமர்ந்து இருந்த அவர் முன்பு வந்து நின்ற விஷ்வா எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும் அது அவர் வாயிலிருந்து வரட்டும் என்று அமைதியாக காத்திருந்தான். நீண்ட மவுனத்திற்கு பின்பு பாதர் ஆபிரகாம் தன் முன் நின்ற விஷ்வாவை நிமிர்ந்து பார்த்து

"இந்த கருணை இல்லத்தில் 173 குழந்தைகள் இருக்காங்க. யாரும் ஒத்துகளைனாலும் இங்க இருக்கிற பாதி குழந்தைகள் உங்களை மாதிரி ஒருத்தருடைய உண்மையான காதலுக்கு பிறந்தவர்களா தான் இருப்பாங்க."

மறுப்பு கூறவந்த விஸ்வாவை கையமர்த்தி தடுத்த ஃபாதர் தொடர்ந்து

"இல்லன்னு உங்களால மறுக்க முடியாது. இப்படி ஒரு நிலைமை கனலிக்கு வந்துட்டா, அதை என்னால தாங்க முடியாது. உலக வாழ்க்கையிலே விருப்பமில்லாமல் தான் நான் இந்த துறவற வாழ்க்கைக்கு வந்தேன்.
ஆனால் என்னைக்கு இந்த கையால கனலியை முதல்முதலா நான் தூக்கினேனாே அப்போ இருந்து இப்போ வரைக்கும் கனலி என்னுடைய குழந்தையா தான் நான் பார்க்கிறேன்.
அப்படி இருக்கும் பொழுது அவளுடைய வாழ்க்கையில் எந்த தப்பும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்."

"பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா ஃபாதர். இப்போ நான் உங்ககிட்ட பேசலாமா." என கூறிய விஷ்வாவை நிமிர்ந்து பார்த்த பாதர் முகத்தில் இருந்தது

'என்ன சொல்லிவிட போகின்றாய்.' என்ற உணர்வே

"நீங்க சொல்றது உண்மைதான் இங்கு இருக்கிற நிறைய குழந்தைகள் கடமையை சரியா செய்யாத காதலர்களுக்கு பிறந்தவர்களா இருக்கலாம். நானும் அவங்கள ஒருத்தனா இருப்பேன்னு நீங்கள் எப்படி முடிவு பண்ணலாம்.
கனலி உங்கள் பொண்ணு மாதிரின்னு சொன்னீங்க. அதுக்காக உங்க பொண்ணு காலம் முழுக்க உங்க கூடவே வச்சிருக்க போறீங்க.
அவளுக்கு வாழ்க்கையில ஒரு துணை தேவை அது ஏன் நானா இருக்கக்கூடாது."

"ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான், கண்டிப்பா கனலி வாழ்க்கையில என்னை தவிர வேற ஒரு ஒரு துணை தேவை. ஆனால் அந்த துணை இந்த வயசுல கனலிக்கு தேவையில்லை.
தேவைப்படும் பொழுது சொல்லி அனுப்புறேன் அப்போ உனக்கு கனலி மேல காதல் இருந்தா வா. உன் கூடவே கனலியை அனுப்புறேன்." என்று கூறிய அந்த முதியவரின் குரலில் விஷ்வா என்ன உணர்ந்தானாே மேற்கொண்டு எதுவும் அவருடன் வாதிட முயலவில்லை.

"நான் கனலி எந்த விதத்திலும் இனி தொந்தரவு பண்ண போறது இல்ல. உங்களுடைய வார்த்தையை நம்பி நான் இப்போ இங்க இருந்து போறேன். ஆனால் திரும்ப வருவேன், எனக்குன்னு ஒரு அடையாளத்துடன் வருவேன்.
அப்பவும் என்னுடைய காதல் கனலிக்காக மட்டுமே இருக்கும்."

"அப்படி இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்."

"என் மேல நம்பிக்கை வந்த இப்போ நாம ரெண்டு பேரும் பேசினதை கனலில் கிட்ட சொல்லுங்க. உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப நீங்க என்ன கூப்பிடலாம்." என்று

தன்னுடைய சொந்த அலைபேசி எண், ஈமெயில் ஐடி, வீட்டு முகவரி என அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி, அதை கனலிக்காக வாங்கிய அந்த சிறுநகை பெட்டியினுள் வைத்து பாதர் ஆபிரஹாம் கையில் தந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

விஸ்வா அங்கிருந்து சென்றதும் தன் அறைக்கு வந்த பாதர் ஆப்ரஹாம் விஸ்வஜித் தந்து விட்டு சென்ற பெட்டியை தன் அறையில் வலது பக்கத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட சிலுவை மரத்தின் அடியில் வைத்தார்.

"நான் இதுவரைக்கும் எனக்காக எதுவும் வேண்டியது. இப்போ நான் உங்ககிட்ட கேட்க போறது ஒருவிதத்தில் எனக்கான வேண்டுதல் தான். கனலி வாழ்க்கை சந்தோஷமா இருக்க எது சரியோ அத அவளுக்கு கொடுங்க." என்று வேண்டி விட்டு தன் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

_________________________________________________________________

அதேநேரம் ஹாஸ்டல் அறையில் அதன் நீள அகலத்தை தன் நடையினால் பலமுறை அளந்து கொண்டிருந்த கனலி

"எவ்வளவு தைரியம் இருந்தா இந்த கனலிய பாத்து லவ் பண்றதா சொல்லியிருப்பான். ஏதோ அழகா இருக்கிற பொண்ணுங்களை பார்த்தா சைட் அடிக்கிற ரகம்னு நினைச்சா இவன் லவ் பண்றானாமே, அதுவும் இந்த கனலியை.

இவன் காதலிக்கிறேன் அப்படின்னு சொன்னா நான் உடனே 'சரி நானும் உங்களை காதலிக்கிறேன்' சொல்லுவேன்னு நினைச்சானா." என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.

கனலி விஸ்வஜித் தன் அருகில் நெருங்கி நின்ற நிமிடங்களை நினைத்ததும் ஒரு மெல்லிய அதிர்வு அவள் உடலில் தோன்றி மறைந்தது.

"ராஸ்கல் எப்படி என்கிட்ட அப்படி நடந்துக்கலாம், என்ன பார்த்தா எப்படி தெரியுதாம் அவனுக்கு. இன்னொரு தடவ அவன் என் முன்னாடி வரட்டும் அப்ப கவனிச்சிக்கிறேன்.

ஐயோ.... அபி வேற அவன் கூட நான் பேசுறது பார்த்துட்டாரு. ஒருவேளை நாம இவனை ஏமாத்துனத அபி கிட்ட சொல்லிடுவனா? சொன்னா அபி ரொம்ப கோபப்படுவாரே, என்ன பண்ணலாம்,
பாத்துக்கலாம் எத்தனை அப்பாடக்கரா சமாளித்த உனக்கு இந்த ரெண்டு பசங்கள சமாளிக்க முடியாதா." என்று

தன் போக்கில் தன் எண்ண ஓட்டத்தை செலுத்திக் கொண்டிருந்த கனலில் நடந்த செயலின் தீவிரத்தை உணரவில்லை. விஸ்வஜித் தன் காதலை கனலி முன் கூறியது அவளைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டாக மட்டுமே தோன்றியது.

மீண்டும் ஒரு முறை அவனை சந்தித்தாலும் விளையாட்டாகவே அதையும் கடந்து இருப்பாள். அதனால்தான் என்னவோ பாதர் ஆபிரகாம் வணங்கிய இயேசு இவர்களின் சந்திப்பு பல மாதங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

_________________________________________________________________

தன் அனைத்து பொருட்களையும் பெட்டியில் எடுத்து அடுக்கி கொண்டிருந்த நண்பனின் அருகில் வந்த ஆனந்த்

"இப்போ எதுக்காக உடனே இங்கிருந்து கிளம்பனும்னு நீ சொல்லிக்கிட்டு இருக்க விஸ்வா."

பெட்டியில் பொருட்களை அடுக்கி நிறுத்திய அடுக்குவதை நிறுத்திய விஸ்வஜித் தன் அறையை ஒட்டியிருந்த பால்கனிக்கு சென்று தூரத்தில் தெரிந்த இருளை வெறித்துப் பார்த்தவண்ணம் நின்றான்.

"மச்சான் ஆர் யூ ஆல்ரைட் எனிதிங் சீரியஸ்."

"நத்திங் டா."

"உன்னை எனக்கு இந்த ஆறு மாசமா மட்டும்தான் தெரியும் இருந்தாலும் உன்னுடைய ஆக்டிவிட்டீஸ் ஓரளவுக்கு என்னால கெஸ் பண்ண முடியும், அப்படி இருக்கும் பொழுது ஏதோ இருக்கிறதால மட்டும்தான் நீ இங்க இருந்து கிளம்ப சொல்லிக்கிட்டு இருக்க."

காலையில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் நண்பனிடம் கூறிவிட்டு

"இதனால தான் நான் இங்க இருந்து புறப்பட்டு போகணும்னு முடிவு பண்ணியிருக்கேன்." எனக்கூறிய விஷ்வாவை அதிர்ச்சியுடன் பார்த்த ஆனந்த்

"மச்சான் உனக்கே இது நியாயமா இருக்கா, நேத்து பார்த்த பாெண்ணுக்கிட்ட காலையில காதல் சொல்லி அடுத்த ஒரு மணி நேரத்துல இப்படி பிரேக்கப் பண்ணது மட்டுமில்லாமல் மொத்தமா பேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கிற."

"டேய் நான் எப்போ பிரேக்கப் பண்ணதா சொன்னேன், என்னுடைய காதலுக்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்து இருக்கேன் அவ்வளவுதான்."

"புரியிற மாதிரி சொல்லி தொலைடா மண்ட காயுது."

"நான் ப்ரொபோஸ் பண்ணும் போது கனலி முகத்துல குறும்புத்தனம் மட்டும்தான் இருந்துச்சு. ஷீ இஸ் நாட் மெச்சூர் அதனால இந்த பிரேக் எங்களுக்கு ரொம்ப அவசியமானது."

"அவகிட்ட ப்ராெபாேஸ் பண்றதுக்கு முன்னாடி அவ இன்னும் வளரணும்னு உனக்கு தெரியலையா.

"நான் என்ன பண்ண ஆனந்த் இன்னைக்கு காலையில கனலி கிட்ட பேசற வரைக்கும் அவகிட்ட காதலை சொல்லணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை.
ஜஸ்ட் ஃபர்ஸ்ட் டைம் என்ன ஏமாத்தின பொண்ண பார்க்கணும் பேசணும் அப்படிங்கிற ஒரு ஈர்ப்பு மட்டும்தான் எனக்கு உள்ள இருந்துச்சு.
பட் அவ கிட்ட பேசின அந்த இருபது நிமிஷம் எனக்கு புரிய வைத்தது 'ஷீ இஸ் தி ஒன் ஃபார் மீ ன்னு.'
எனக்கு அப்படி ஒரு தாட் வந்த அடுத்த நிமிஷம் அவகிட்ட என்னுடைய காதலை சொல்லிட்டேன்."

"எப்படிடா அடுத்த நிமிஷமே உன்னால சொல்ல முடிஞ்சிடுச்சு." என ஆச்சர்யமாக ஆனந்த் கேட்க

"பிறகு நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற, காதல மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு என்ன கஷ்டப்படுத்தி கிட்டு, அதை கனலி கிட்ட காட்டாமல் மறைக்க சாெல்லுறியா.
நல்லா பேசி பழகி அதுக்கு அப்புறமா சந்தர்பத்தை உருவாக்கி காதலை சொல்ல காத்திருக்க என்னால முடியாது.
இதுவரைக்கும் என் மனசுக்கு என்ன தோணுதோ அத நான் உடனே செஞ்சுதான் எனக்கு பழக்கம்.
அவள பார்க்கணும்னு தோணுச்சு பார்த்தேன்.
பேசணும்னு தோணுச்சு பேசினேன்.
என் மனசுக்குள்ள காதல் வந்துருச்சுன்னு தோணுச்சு அவகிட்ட என்னோட காதலை சொன்னேன்."

"ஓகே விஷ்வா இதுவரைக்கும் எல்லாம் சரிதான் அப்புறம் எதுக்காக இங்கேயிருந்து எதுக்காக போகணும். அந்த பாதர் உன்கிட்ட பேசினதுக்காகவா."

"நிச்சயமா இல்ல, என்ன யாருக்கும் ப்ரூவ் பண்ணனும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை. இது நான் எனக்காக மட்டும் எடுத்த முடிவு. பாக்கலாம் என்னுடைய படிப்பு முடியிற வரைக்கும் நான் என்னுடைய முடிவில் உறுதியாக நிற்கின்றேனா;
நான் சொன்ன காதலுக்கு கனலி கிட்ட ஏதாவது ரியாக்சன் இருக்கான்னு."

_________________________________________________________________

அன்று நடந்த சம்பவம் சம்பந்தப்பட்ட மூவரின் மனதிலும் நிலையாய் பதிந்து போயிற்று. வாழ்வில் எல்லாவற்றையும் எளிதில் அடைந்த விஷ்வாவிற்கு இந்த இடைப்பட்ட காலம் நிச்சயம் போராட்டமே.

எல்லாவற்றையும் விளையாட்டாகவே கடந்த கனலிக்கு ஏனோ விஸ்வஜித் நினைவு ஒவ்வொரு நாளும் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தது.

தன்னிடம் காதலை கூறியவன் தன்னை எதற்காக மீண்டும் சந்திக்க வரவில்லை என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே சுற்றித் திரிந்தாள்.

நாள் செல்லச் செல்ல ஆபிரகாம் தான் எடுத்த முடிவு சரிதானா கனலிக்கு அந்த விஸ்வஜித் சரியான தேர்வா என்ற எண்ணம் மட்டுமே அவர் மனதை ஆக்கிரமித்தது.

நினைவுகளுடன் மட்டுமே பயணித்த இம்மூவரின் வாழ்வில் நிஜத்தில் என்ன நடக்குமோ!

நினைவு நிஜமாகுமா.......
 
Last edited:
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 6

இரவு தாமதமாக வீடு திரும்பிய விஸ்வஜித் வீட்டிற்குள் வர அங்கு தனக்காக காத்திருந்த பெற்றோரை பார்த்ததும் அவர்கள் எதற்காக காத்திருக்கின்றார்கள் என்பதை நினைத்து, அவர்களை கண்டுகொள்ளாமல் மாடிப்படி ஏற முயற்சிக்க, அவன் தந்தை ரஞ்சித்

"விஸ்வா நாங்க ரெண்டுபேரும் உன்கிட்ட பேசுவதற்காக மட்டும்தான் இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறோம்." தந்தையின் குரலில் நின்ற இடத்தில் இருந்து திரும்பி பார்த்த விஷ்வா

"நான் உங்கள காத்துகிட்டு இருக்க சொல்லலையே. நீங்க உங்க வேலைய பாருங்க அதே மாதிரி என்னை என்னுடைய வேலையை பார்க்க விடுங்க." மகனின் பேச்சில் சலிப்படைந்த விஸ்வாவின் தாயார் பூரணி

"எல்லோரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு வேலை பாக்குறதுக்கு இது ஒன்னும் ஆபீஸ் இல்லை, இது குடும்பம் விஷ்வா இங்க ஒருத்தரும் மத்தவங்களுக்காக சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும்." என்ற தன் தாயின் அருகில் வந்து அவரின் முகத்தில் ஒரு நிமிடம் தன் பார்வையை நிலைக்க விட்டு

"எஸ் மாம் நீங்க சொல்றது சரிதான் குடும்பம்னு வரும்பொழுது ஒருத்தர் மத்தவங்களுக்காக சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும். நானும் செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன் அப்பாவுக்கு அவருடைய பிசினஸ் முக்கியம், அவருக்காக அவருடைய நஷ்டத்தில மூழ்க இருந்த பிசினஸை நான் நல்லா பாத்துக்கிட்டு இருக்குறேன்.
அவர் இருக்கும் பொழுது கிடைத்த லாபத்தை விட பத்து மடங்கு அதிகமா காெடுத்துக்கிட்டு இருக்கிறேன். இதுக்கு மேலயும் ஏதாவது தேவைனா சொல்ல சொல்லுங்க செஞ்சு கொடுக்கிறேன்.
அதே மாதிரி இந்த சொசைட்டியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதுக்காக நீங்க எவ்வளவாே செலவு பண்றீங்க, அது உங்கள் விருப்பம் அதுல நான் தலையிட போறது இல்ல. அதே மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய வாழ்க்கையில் தலையிட எந்த அதிகாரமும் கிடையாது."

"விஷ்வா நாங்க உன்னுடைய அப்பா அம்மா அதை ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு."

"நல்லா ஞாபகம் இருக்கு உங்களுடைய கவுரவத்த காப்பாத்த பிரஜித்க்கு தகுதியே இல்லாத ஒருத்திய கல்யாணம் பண்ணி வச்சீங்களே, அது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.
அவளால அவன் அனுபவித்த மன உளைச்சல் எனக்கு ஞாபகம் இருக்கு.
அவனுடைய மரணம் எனக்கு ஞாபகம் இருக்கு.
இப்போ அவனுடைய குழந்தைகள் ரெண்டு பேரும் அம்மா பாசம் இல்லாம இருக்குறது எனக்கு ஞாபகம் இருக்கு.
உங்களுடைய கௌரவத்தை காப்பாற்ற என்னுடைய வாழ்க்கையும் பணயம் வைக்க நீங்கள் முடிவு பண்ணதும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
நீங்க ஒன்ன நல்ல ஞாபகம் வச்சிக்கோங்க என்னுடைய அனுமதி இல்லாம என்னுடைய வாழ்க்கையில் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கணும்னு நெனச்சா விளைவுகள் பயங்கரமாயிருக்கும்.
உங்க விருப்பம் தான் முக்கியம்னு நினைச்ச அதை சந்திக்க நீங்க ரெண்டு பேரும் தயாரா இருந்துக்குங்க." என பெற்றோர்கள் இருவரையும் எச்சரித்துவிட்டு மேலே தன் அறைக்கு செல்ல திரும்பியவனின் கால்கள் அருகில் இருந்த அறையை நோக்கி முன்னேறியது கதவைத்திறந்து.

உள்ளே சென்ற விஸ்வஜித் அங்கு உறங்காமல் அமைதியாக அமர்ந்திருந்த பிள்ளைகள் இருவரையும் பார்த்ததும் அதுவரை மனதில் இருந்த அனைத்து கோபங்களும் மறைந்தது.

கட்டிலில் இருந்த அண்ணனின் இரண்டு குழந்தைகளையும் மாறி மாறி பார்த்த விஸ்வா மனதுக்குள்

'இந்த உலகம் ரொம்ப மோசமானது, யார் யாரோ பண்ண தப்புக்கு அதற்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தங்க தண்டனை அனுபவிக்க வேண்டிய தான் இருக்கு. உங்கள் இரண்டு பேரையும் நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். யூ போத் ஆர் இவரிதிங் இன் மி லைஃப்' என மனதுக்குள் பேசிக்கொண்டிருக்க அவன் அருகில் வந்த கிருபாலி

"விஷ்வா எதுக்காக இவ்வளவு லேட்டா வர, நான் உனக்காக ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா." என கேட்ட தன் அண்ணனின் எட்டு வயது மகளின் அருகில் சென்று

"சாரி ஸ்வீட்டி கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு அதான் வர லேட்டாயிடுச்சு இனி சீக்கிரமா வர முயற்சி பண்றேன்."

இவர்களின் பேச்சு இடை புகுந்த ஐந்து வயது அபராஜித் கட்டிலில் அமர்ந்திருந்த விஷ்வாவின் முதுகில் சாய்ந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு

"அப்பா அக்கா ரொம்ப சேட்ட பண்றா நீங்க அவளை திட்டவே இல்லை." தன்னை பற்றி குறை கூறுவதை விரும்பாத கிருபா

"நான் என்னடா பண்ணினேன்."

"பாருங்கப்பா எப்பவுமே எல்லாரையும் மரியாதை இல்லாம பேசுற. நான் எப்படி உங்கள அப்பான்னு கூப்பிட்ட இவ மட்டும் உங்கள பேர் சொல்லி கூப்பிடுற திஸ் இஸ் நாட் ஏன் குட் மேனர்ஸ்." என அபி தன் அக்காவை குறைகூற, விஷ்வாவின் மனதோ

'டேய் அபி உனக்கு எங்க தெரியப் போகுது என்னோட ஸ்வீட்டி என்ன மரியாதை இல்லாம பேசும் பொழுது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்குது. என் மனசுக்கு புடிச்ச பொண்ணு ஒருத்தி இதுவரைக்கும் எனக்கு மரியாதை கொடுத்தது இல்லை. அப்படி இருக்கும் பொண்ணு ஒருத்தி இதுவரைக்கும் எனக்கு மரியாதை கொடுத்தது இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனக்கு புடிச்ச ஸ்வீட்டி எப்படி எனக்கு மரியாதை கொடுத்து பேசுவா.' என நினைத்துக்கொண்டு மகனிடம்

"சரி இனிமேல் அப்படி சொல்லாமல் பார்த்துக்கலாம். இப்போ ரெண்டு பேரும் தூங்குங்க நாளைக்கு சாட்டர்டே ஆஃப் டே மட்டும்தானே ஸ்கூல், சாே நாம அவுட்டிங் போகலாம் ஓகேவா." என்று கேட்க

சந்தோஷத்தில் துள்ளி குறித்த இரு பிள்ளைகளையும் சமாளித்து உறங்க வைக்க முயற்சி செய்ய ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்த கிருபாலி

"விஷ்வா நீ சாப்டியா?" எனக்கேட்க

"சாப்பிட்டேன்." என்று பதிலளிக்க

"நீ பொய் சொல்ற, நீ சாப்பிடல தானே நீ போய் சாப்பிடு, நாங்க தூங்கிடுவோம்." என்று கூறிய குழந்தைகள் இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு கீழே வர,

தன் பெற்றோருடன் அமர்ந்திருந்த தன் மாமா சுந்தரை பார்த்ததும்

'இந்த ஆளு இங்கதான் இருக்காரா, இனி வீட்டுல பிரச்சனைக்கு பஞ்சமிருக்காது. நீ சாப்பிட்ட மாதிரிதான் விஸ்வா.' என மனதுக்குள் பேசிக் கொண்டு தன் அறைக்கு சென்று உடையை கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்.

கட்டிலில் விழுந்த அடுத்த நொடி அவனின் வசந்த கால நினைவுகள் அவன் முன் அணிவகுத்து நின்றது.

_________________________________________________________________

அன்று......

தன் காலடியில் மண்டியிட்டு காதலை கூறியவனை பார்த்து கனலி வாயடைத்து நின்றது ஒரு சில நிமிடங்களே. நடப்பதை கிரகித்துக்காெண்ட அடுத்த நாெடி தன் வழக்கமான குறும்புப் புன்னகையுடன்

"சாரி மிஸ்டர்... ஐ எம் நாட் இம்ரெஸ்ட், பெட்ரர் லக் நெக்ஸ்ட் டைம்."

கனலியின் கண்களின் மாெழியால் கவரப்பட்டவனுக்கு அவள் வாய் மாெழி செய்தி ஒரளவு எதிர் பார்த்ததுவே. அவளின் கண்களின் வழியே மனதை படிக்க முயற்ச்சி செய்த விஸ்வஜித்திற்கு கிடைத்தது குறும்பு புன்னகை மட்டுமே. அவள் புன்னகை முகத்தை பார்த்தபடி எழுந்து நின்றவன்

"ஓகே நான் ஒத்துகிறேன் என்னால உன்ன இம்ரெஸ் பண்ண முடியல. எனக்கான பாெண்ண பத்தி சாென்ன நீயே அவள எப்படி இம்ரெஸ் பண்றதுன்னும் சாெல்லிடு." அவனது கேள்விக்கு பதில் யாேசிப்பது பாேல பாவனை செய்துவிட்டு

"அது ரெம்ப கஷ்டம் பாஸ். யூ காண்ட்." என கூற, அவனாே அவள் அருகில் நெருங்க அவளாே பின் நகர்ந்தாள்.

அந்த மிகப்பெரிய மரத்தில் மாேதி நின்றவளின் இருபுறமும் கைகளால் சிறை செய்தவன் அவள் முகம் நாேக்கி குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் படி அழ்ந்த குரலில்,

"ஐ கேன், ஐ வில்."

இருவருக்கும் இடையில் இடைவெளி என்பது விரலளவு மட்டுமே. விஸ்வஜித் கைகளை வைத்திருப்பது மரத்தின் மீதே, ஆனால் பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு விஸ்வா கனலிக்கு முத்தமிடுவது பாேன்ற தாேற்றத்தையே காெடுக்கும்.

தனக்கு வெகு அருகில் நின்றவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த கனலி அவன் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டு போனாள். அந்த நொடி அவள் உலகத்தில் வேறு எதுவும் இல்லை. இருந்தது எல்லாம் தன் எதிரில் கண்களில் காதலை தேக்கி நிற்கும் விஸ்வஜித் மட்டுமே.

தங்களுக்கான உலகில் தனித்து நின்ற இருவரையும் சுய உணர்வுக்கு அழைத்து வந்தது பாதர் ஆபிரகாம் குரலே,

"கனலி..." ஆபிரகாம் குரலில் கனலியை விட்டு விலகி நின்று விஸ்வஜித் யாரென்று பார்க்க, கனலியோ தவறு செய்த குழந்தையை போல் நின்றுகொண்டிருந்தாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்த பாதர் ஆபிரகாம் கனலியை பார்த்து கண் ஜாடை காட்ட கனலி அந்த இடத்தைவிட்டு விரைவாக சென்று விட்டான்.

தன்னை விட்டு விலகி செல்லும் கனலியை பார்த்துக்காெண்டிருந்தவன் முன் வந்து நின்ற ஆபிரஹாம் தன் பார்வையால் விஸ்வஜித்தை எடைபோட, அவனாே அவரது பார்வைக்கு எதிர் பார்வை பார்த்தபடி அசையாமல் நின்றான்.

இருவரும் தங்கள் மௌனத்தில் இருக்க அதை முதலில் உடைத்து எறிந்த ஃபாதர் ஆபிரகாம்,

"நீங்களும் இங்கே இருந்து சீக்கிரம் போயிட்டா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்."

"எதுக்காக நான் போகணும்."

விஸ்வஜித் குரலில் இருந்த உறுதி தான் யாருக்கும் அடிபணிந்து செல்பவன் இல்லை என்பதை உணர்த்த, அந்த வயது முதிர்ந்த துறவியாே வரவழைத்துக்காெண்ட கடுமையுடன்,

"இங்க இருக்கிற அனாதை ஆசிரமத்தில் எண்ணிக்கை அதிகமகிறதில எனக்கு விருப்பம் இல்லை."

விஷ்வா அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகாெண்டதும்

"வாட் யூ நீ மீன் பாதர், எனக்கு கனலி ஏமாற்றனும்னு எந்த எண்ணமும் இல்லை. ஐ லவ் கனலி. நான் எதுக்காக இங்க இருந்து போகணும். என்னால பாேக முடியாது பாதர்."

மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாத அவ்விடத்தை விட்டு செல்ல முயற்சிக்க அவர் முன் வந்து வழிமறித்த விஸ்வஜித்,

"பாதர் என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல."

"உங்க கேள்விக்கான பதில நான் சொல்லிட்டா இங்க இருந்து போயிடுவீங்களா?" என கூறிய பாதரை பார்த்து ஒரு பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியேற்றிய விஸ்வஜித்,

"உங்களுடைய பதில் நியாயமானதாக இருந்தால் இங்க இருந்து போயிடுவேன். ஆனால் கனலியை விட்டு எப்பவும் போகமாட்டேன். ஐ வாண்ட் ஹேர் இன் மை லைஃப் பார்எவர்." என விஸ்வஜித் கூற அவன் பதில் ஏளனமான புன்னகை ஒன்று பாதர் ஆபிரகாமின் உதட்டில் வந்து மறைந்தது.

ஒரு நொடி என்றாலும் அது விஷ்வாவின் கண்களில் இருந்து தப்பவில்லை.

"இந்த விஷ்வாவிற்கு பொய் செல்ல வேண்டிய எந்த அவசியமும் கிடையாது பாதர்."

"அப்படியா.!" என்று ஆச்சரியம் போல் கேட்ட பாதர் ஆபிரகாம்

"என்னோட வாங்க." என விஷ்வாவை அழைத்துச்சென்ற இடம் ஆலயத்தை ஒட்டினாற்போல் இருந்த மதில் சுவரை அடுத்திருந்த கருணை இல்லத்திற்கே.

ஒன்றும் பேசாமல் இல்லம் முழுவதையும் சுற்றி காட்டிய பின்பு மீண்டும் பழைய இடத்திற்கு அழைத்து வந்த ஆபிரகாம் அமைதியாக அந்த சிமெண்டால் ஆன இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

அமைதியாக அமர்ந்து இருந்த அவர் முன்பு வந்து நின்ற விஷ்வா எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும் அது அவர் வாயிலிருந்து வரட்டும் என்று அமைதியாக காத்திருந்தான். நீண்ட மவுனத்திற்கு பின்பு பாதர் ஆபிரகாம் தன் முன் நின்ற விஷ்வாவை நிமிர்ந்து பார்த்து

"இந்த கருணை இல்லத்தில் 173 குழந்தைகள் இருக்காங்க. யாரும் ஒத்துகளைனாலும் இங்க இருக்கிற பாதி குழந்தைகள் உங்களை மாதிரி ஒருத்தருடைய உண்மையான காதலுக்கு பிறந்தவர்களா தான் இருப்பாங்க."

மறுப்பு கூறவந்த விஸ்வாவை கையமர்த்தி தடுத்த ஃபாதர் தொடர்ந்து

"இல்லன்னு உங்களால மறுக்க முடியாது. இப்படி ஒரு நிலைமை கனலிக்கு வந்துட்டா, அதை என்னால தாங்க முடியாது. உலக வாழ்க்கையிலே விருப்பமில்லாமல் தான் நான் இந்த துறவற வாழ்க்கைக்கு வந்தேன்.
ஆனால் என்னைக்கு இந்த கையால கனலியை முதல்முதலா நான் தூக்கினேனாே அப்போ இருந்து இப்போ வரைக்கும் கனலி என்னுடைய குழந்தையா தான் நான் பார்க்கிறேன்.
அப்படி இருக்கும் பொழுது அவளுடைய வாழ்க்கையில் எந்த தப்பும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்."

"பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா ஃபாதர். இப்போ நான் உங்ககிட்ட பேசலாமா." என கூறிய விஷ்வாவை நிமிர்ந்து பார்த்த பாதர் முகத்தில் இருந்தது

'என்ன சொல்லிவிட போகின்றாய்.' என்ற உணர்வே

"நீங்க சொல்றது உண்மைதான் இங்கு இருக்கிற நிறைய குழந்தைகள் கடமையை சரியா செய்யாத காதலர்களுக்கு பிறந்தவர்களா இருக்கலாம். நானும் அவங்கள ஒருத்தனா இருப்பேன்னு நீங்கள் எப்படி முடிவு பண்ணலாம்.
கனலி உங்கள் பொண்ணு மாதிரின்னு சொன்னீங்க. அதுக்காக உங்க பொண்ணு காலம் முழுக்க உங்க கூடவே வச்சிருக்க போறீங்க.
அவளுக்கு வாழ்க்கையில ஒரு துணை தேவை அது ஏன் நானா இருக்கக்கூடாது."

"ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான், கண்டிப்பா கனலி வாழ்க்கையில என்னை தவிர வேற ஒரு ஒரு துணை தேவை. ஆனால் அந்த துணை இந்த வயசுல கனலிக்கு தேவையில்லை.
தேவைப்படும் பொழுது சொல்லி அனுப்புறேன் அப்போ உனக்கு கனலி மேல காதல் இருந்தா வா. உன் கூடவே கனலியை அனுப்புறேன்." என்று கூறிய அந்த முதியவரின் குரலில் விஷ்வா என்ன உணர்ந்தானாே மேற்கொண்டு எதுவும் அவருடன் வாதிட முயலவில்லை.

"நான் கனலி எந்த விதத்திலும் இனி தொந்தரவு பண்ண போறது இல்ல. உங்களுடைய வார்த்தையை நம்பி நான் இப்போ இங்க இருந்து போறேன். ஆனால் திரும்ப வருவேன், எனக்குன்னு ஒரு அடையாளத்துடன் வருவேன்.
அப்பவும் என்னுடைய காதல் கனலிக்காக மட்டுமே இருக்கும்."

"அப்படி இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்."

"என் மேல நம்பிக்கை வந்த இப்போ நாம ரெண்டு பேரும் பேசினதை கனலில் கிட்ட சொல்லுங்க. உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப நீங்க என்ன கூப்பிடலாம்." என்று

தன்னுடைய சொந்த அலைபேசி எண், ஈமெயில் ஐடி, வீட்டு முகவரி என அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி, அதை கனலிக்காக வாங்கிய அந்த சிறுநகை பெட்டியினுள் வைத்து பாதர் ஆபிரஹாம் கையில் தந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

விஸ்வா அங்கிருந்து சென்றதும் தன் அறைக்கு வந்த பாதர் ஆப்ரஹாம் விஸ்வஜித் தந்து விட்டு சென்ற பெட்டியை தன் அறையில் வலது பக்கத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட சிலுவை மரத்தின் அடியில் வைத்தார்.

"நான் இதுவரைக்கும் எனக்காக எதுவும் வேண்டியது. இப்போ நான் உங்ககிட்ட கேட்க போறது ஒருவிதத்தில் எனக்கான வேண்டுதல் தான். கனலி வாழ்க்கை சந்தோஷமா இருக்க எது சரியோ அத அவளுக்கு கொடுங்க." என்று வேண்டி விட்டு தன் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

_________________________________________________________________

அதேநேரம் ஹாஸ்டல் அறையில் அதன் நீள அகலத்தை தன் நடையினால் பலமுறை அளந்து கொண்டிருந்த கனலி

"எவ்வளவு தைரியம் இருந்தா இந்த கனலிய பாத்து லவ் பண்றதா சொல்லியிருப்பான். ஏதோ அழகா இருக்கிற பொண்ணுங்களை பார்த்தா சைட் அடிக்கிற ரகம்னு நினைச்சா இவன் லவ் பண்றானாமே, அதுவும் இந்த கனலியை.

இவன் காதலிக்கிறேன் அப்படின்னு சொன்னா நான் உடனே 'சரி நானும் உங்களை காதலிக்கிறேன்' சொல்லுவேன்னு நினைச்சானா." என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.

கனலி விஸ்வஜித் தன் அருகில் நெருங்கி நின்ற நிமிடங்களை நினைத்ததும் ஒரு மெல்லிய அதிர்வு அவள் உடலில் தோன்றி மறைந்தது.

"ராஸ்கல் எப்படி என்கிட்ட அப்படி நடந்துக்கலாம், என்ன பார்த்தா எப்படி தெரியுதாம் அவனுக்கு. இன்னொரு தடவ அவன் என் முன்னாடி வரட்டும் அப்ப கவனிச்சிக்கிறேன்.

ஐயோ.... அபி வேற அவன் கூட நான் பேசுறது பார்த்துட்டாரு. ஒருவேளை நாம இவனை ஏமாத்துனத அபி கிட்ட சொல்லிடுவனா? சொன்னா அபி ரொம்ப கோபப்படுவாரே, என்ன பண்ணலாம்,
பாத்துக்கலாம் எத்தனை அப்பாடக்கரா சமாளித்து உனக்கு இந்த ரெண்டு பசங்கள சமாளிக்க முடியாதா." என்று

தன் போக்கில் தன் எண்ண ஓட்டத்தை செலுத்திக் கொண்டிருந்த கனலில் நடந்த செயலின் தீவிரத்தை உணரவில்லை. விஸ்வஜித் தன் காதலை கனலி முன் கூறியது அவளைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டாக மட்டுமே தோன்றியது.

மீண்டும் ஒரு முறை அவனை சந்தித்தாலும் விளையாட்டாகவே அதையும் கடந்து இருப்பாள். அதனால்தான் என்னவோ பாதர் ஆபிரகாம் வணங்கிய இயேசு இவர்களின் சந்திப்பு பல மாதங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

_________________________________________________________________

தன் அனைத்து பொருட்களையும் பெட்டியில் எடுத்து அடுக்கி கொண்டிருந்த நண்பனின் அருகில் வந்த ஆனந்த்

"இப்போ எதுக்காக உடனே இங்கிருந்து கிளம்பனும்னு நீ சொல்லிக்கிட்டு இருக்க விஸ்வா."

பெட்டியில் பொருட்களை அடுக்கி நிறுத்திய அடுக்குவதை நிறுத்திய விஸ்வஜித் தன் அறையை ஒட்டியிருந்த பால்கனிக்கு சென்று தூரத்தில் தெரிந்த இருளை வெறித்துப் பார்த்தவண்ணம் நின்றான்.

"மச்சான் ஆர் யூ ஆல்ரைட் எனிதிங் சீரியஸ்."

"நத்திங் டா."

"உன்னை எனக்கு இந்த ஆறு மாசமா மட்டும்தான் தெரியும் இருந்தாலும் உன்னுடைய ஆக்டிவிட்டீஸ் ஓரளவுக்கு என்னால கெஸ் பண்ண முடியும், அப்படி இருக்கும் பொழுது ஏதோ இருக்கிறதால மட்டும்தான் நீ இங்க இருந்து கிளம்ப சொல்லிக்கிட்டு இருக்க."

காலையில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் நண்பனிடம் கூறிவிட்டு

"இதனால தான் நான் இங்க இருந்து புறப்பட்டு போகணும்னு முடிவு பண்ணியிருக்கேன்." எனக்கூறிய விஷ்வாவை அதிர்ச்சியுடன் பார்த்த ஆனந்த்

"மச்சான் உனக்கே இது நியாயமா இருக்கா, நேத்து பார்த்த பாெ ண்ணுக்கிட்ட காலையில காதல் சொல்லி அடுத்த ஒரு மணி நேரத்துல இப்படி பிரேக்கப் பண்ணது மட்டுமில்லாமல் மொத்தமா பேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கிற."

"டேய் நான் எப்போ பிரேக்கப் பண்ணதா சொன்னேன், என்னுடைய காதலுக்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்து இருக்கேன் அவ்வளவுதான்."

"புரியிற மாதிரி சொல்லி தொலைடா மண்ட காயுது."

"நான் ப்ரொபோஸ் பண்ணும் போது கனலி முகத்துல குறும்புத்தனம் மட்டும்தான் இருந்துச்சு. ஷீ இஸ் நாட் மெச்சூர் அதனால இந்த பிரேக் எங்களுக்கு ரொம்ப அவசியமானது."

"அவகிட்ட ப்ராெபாேஸ் பண்றதுக்கு முன்னாடி அவ இன்னும் வளரணும்னு உனக்கு தெரியலையா.

"நான் என்ன பண்ண ஆனந்த் இன்னைக்கு காலையில கனலி கிட்ட பேசற வரைக்கும் அவகிட்ட காதலை சொல்லணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை.
ஜஸ்ட் ஃபர்ஸ்ட் டைம் என்ன ஏமாத்தின பொண்ண பார்க்கணும் பேசணும் அப்படிங்கிற ஒரு ஈர்ப்பு மட்டும்தான் எனக்கு உள்ள இருந்துச்சு.
பட் அவ கிட்ட பேசின அந்த இருபது நிமிஷம் எனக்கு புரிய வைத்தது 'ஷீ இஸ் தி ஒன் ஃபார் மீ னு.'
எனக்கு அப்படி ஒரு தாட் வந்த அடுத்த நிமிஷம் அவகிட்ட என்னுடைய காதலை சொல்லிட்டேன்."

"எப்படிடா அடுத்த நிமிஷமே உன்னால சொல்ல முடிஞ்சிடுச்சு." என ஆச்சர்யமாக ஆனந்த் கேட்க

"பிறகு நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற, காதல மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு என்ன கஷ்டப்படுத்தி கிட்டு, அதை கனலி கிட்ட காட்டாமல் மறைக்க சாெல்லுறியா.
நல்லா பேசி பழகி அதுக்கு அப்புறமா சந்தர்பத்தை உருவாக்கி காதலை சொல்ல காத்திருக்க என்னால முடியாது.
இதுவரைக்கும் என் மனசுக்கு என்ன தோணுதோ அத நான் உடனே செஞ்சுதான் எனக்கு பழக்கம்.
அவள பார்க்கணும்னு தோணுச்சு பார்த்தேன்.
பேசணும்னு தோணுச்சு பேசினேன்.
என் மனசுக்குள்ள காதல் வந்துருச்சுன்னு தோணுச்சு அவகிட்ட என்னோட காதலை சொன்னேன்."

"ஓகே விஷ்வா இதுவரைக்கும் எல்லாம் சரிதான் அப்புறம் எதுக்காக இங்கேயிருந்து எதுக்காக போகணும். அந்த பாதர் உன்கிட்ட பேசினதுக்காகவா."

"நிச்சயமா இல்ல, என்ன யாருக்கும் ப்ரூவ் பண்ணனும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை. இது நான் எனக்காக மட்டும் எடுத்த முடிவு. பாக்கலாம் என்னுடைய படிப்பு முடியிற வரைக்கும் நான் என்னுடைய முடிவில் உறுதியாக நிற்கின்றேனா;
நான் சொன்ன காதலுக்கு கனலி கிட்ட ஏதாவது ரியாக்சன் இருக்கான்னு."

_________________________________________________________________

அன்று நடந்த சம்பவம் சம்பந்தப்பட்ட மூவரின் மனதிலும் நிலையாய் பதிந்து போயிற்று. வாழ்வில் எல்லாவற்றையும் எளிதில் அடைந்த விஷ்வாவிற்கு இந்த இடைப்பட்ட காலம் நிச்சயம் போராட்டமே.

எல்லாவற்றையும் விளையாட்டாகவே கடந்த கனலிக்கு ஏனோ விஸ்வஜித் நினைவு ஒவ்வொரு நாளும் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தது.

தன்னிடம் காதலை கூறியதன் தன்னை எதற்காக மீண்டும் சந்திக்க வரவில்லை என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே சுற்றித் திரிந்தாள்.

நாள் செல்லச் செல்ல ஆபிரகாம் தான் எடுத்த முடிவு சரிதானா கனலி அந்த விஸ்வஜித் சரியான தேர்வா என்ற எண்ணம் மட்டுமே அவர் மனதை ஆக்கிரமித்தது.

நினைவுகளுடன் மட்டுமே பயணித்த இம்மூவரின் வாழ்வில் நிஜத்தில் என்ன நடக்குமோ!

நினைவு நிஜமாகுமா.......
Hi friends
Morning ud kuduthuruken
Read and post your comments
 
ஆமா ஒரு டவூட்டு...கனலிக்கு இப்ப இருக்கிற அம்மா அண்ணன் அக்கா குழந்தைங்கலாம் எங்க இருந்து வந்தாங்க....

அப்ப கனலி விஜியோட காதலை அக்செப்ட் பன்னதுக்கப்றம் தான் இந்த குடும்பம் தெரிஞ்சிதா...இவங்களுக்காக அவனை விட்டுட்டு வந்திட்டாளா
 
Thank for your comment Viji
 
ஆமா ஒரு டவூட்டு...கனலிக்கு இப்ப இருக்கிற அம்மா அண்ணன் அக்கா குழந்தைங்கலாம் எங்க இருந்து வந்தாங்க....

அப்ப கனலி விஜியோட காதலை அக்செப்ட் பன்னதுக்கப்றம் தான் இந்த குடும்பம் தெரிஞ்சிதா...இவங்களுக்காக அவனை விட்டுட்டு வந்திட்டாளா
Read Ep 4
Unka question Ku answer irukku
 
Top