Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 7

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்.

அத்தியாயம் 7

காரணமின்றி இந்த உலகில் எதுவும் நடப்பதில்லை; நடக்கும் ஒவ்வொன்றின் பின்பும் ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

கோவிலில் இருந்து வீடு திரும்பிய கனலியின் மனதில் இருந்தது ஒரே ஒரு கேள்விதான், 'எதற்காக தன் அண்ணனின் திடீர் விஜயம்'

நிச்சயமாக தாயின் மீதும், தங்கையின் மீதும் உள்ள பாசத்திற்காக அண்ணன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இங்கு வந்து இருக்க மாட்டான்.

ஏதோ ஒரு உறுதியான காரணம் இருக்கிறது என்பது அவளுக்கு நிச்சயம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இரவு உணவு தயார் செய்யும் வேலையில் தன்னை இணைத்துக் கொண்டாள்.

சமைத்த உணவை டைனிங் டேபிளின் மீது எடுத்து வைத்து குளித்து விட்டு வெளியில் வர தன் தாய் அண்ணன் அண்ணியுடன் உணவருந்தி கொண்டு இருந்தார்.

பிள்ளைகளை பார்க்க அவர்களோ டிவியில் மூழ்கி இருந்தனர். மூவரையும் அழைத்து உணவு கொடுத்து உறங்க வைத்ததும் பின்பே தன் உணவை கையிலெடுத்த கனலியின் காதுகளில் மற்றவர்களின் உரையாடல் வந்து சேர்ந்தது.

"அம்மா பூஜாக்கும் எனக்கும் இங்க இருக்கிற பெரிய கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு."

இதை கேட்டதும் கனலி மனது "பூனைக்குட்டி வெளிய வந்திடுச்சு." என்று கவுண்டர் காெடுத்தது.

"ஒரே கம்பெனியிலா உங்க ரெண்டு பேருக்கும் வேலை கிடைச்சிருக்கு."

"இல்லம்மா வேற வேற கம்பெனிதான்."

"அப்படின்னா இனிமே ரெண்டு பேரும் அம்மா கூட தான் இருக்க போறீங்களா." என ஆர்வமாக திலகவதி கேட்க, பூஜா

"எங்களுக்கும் உங்க கூடவே இருக்கணும்னு ஆசையாதான் இருக்கு, அதுக்கு மத்தவங்க ஒத்துக்க வா போறாங்க." என்று பார்வையை கனலி மீது வைத்துக்கொண்டு கூற, அதன் உள்ளர்த்தம் கனலிக்கு நன்கு தெரியும் இருந்தும் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள். ஆனால் அவள் மனது

'வில்லங்கம் வீடுதேடி குடும்பமா வரும்பொழுதே நாம உஷாரா இருந்திருக்கனும், எப்பவும் இன்ஸ்டால்மெண்டல கஷ்டத்தை கொடுக்கிற கடவுள், இந்த தடவை காேல்சேல்ல மொத்தமா தந்துட்டாரா.'

மகளின் மனது புரியாத திலகவதி

"இதுல ஒத்துக்காம போறதுக்கு என்ன இருக்கு. நானும் கனலியும் இவ்வளவு நாளும் பிள்ளைகளை வச்சிக்கிட்டு தனியா இருந்தோம். இப்போ வீட்டுக்கு ஆம்பளை துணையா என் புள்ளை வந்து இருக்கபாேறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷதான்."

திலகவதி தன் மகன் குடும்பம் தங்களுடன் தங்கப்பாேவதை நினைத்து குதுகலிக்க, அவனாே

"எங்களால எங்கம்மா சந்தோஷமா இருக்க முடியுது, கடன் எங்கள் கழுத்தை நெறிக்குது. கடனை அடைக்க வழியில்லாமல் நானும் என் பொண்டாட்டியும் வேலைக்கு போக வேண்டிய தான் இருக்குது.
பிள்ளையை கூட்டிக்கிட்டு வந்தா செலவு அதிகமா வரும்னு பயந்து தருண் குட்டியை எங்க மாமனார் வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்.
இது எல்லாம் உங்க மகளுக்கு கொஞ்சமாவது புரியுதா. பிள்ளை பெத்தா தான அவங்கள பிரிஞ்சு இருக்கிற வலி தெரியும்."

கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் எல்லாம் தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், அதற்கு முழு காரணமும் கனலி மட்டுமே என்பது போல் பேசி வைக்க பொறுத்து பார்த்த கனலி இனி தன் மௌனம் சரிவராது என்று உணர்ந்து தன் அண்ணனிடம் வந்து நின்றாள்.

"எது சொல்றதா இருந்தாலும் நேரடியா என்ன பாத்து சொல்லு. அதை விட்டுட்டு இந்த ஜட பேச்சு எல்லாம் என்கிட்ட வச்சுக்காத.
என்னமோ என்னால மட்டும் நீ கஷ்டப்படுற மாதிரி பேசிக்கிட்டு இருக்காத."

தன் உக்கிரமாக நிற்கும் தங்கையை தன்னால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த கார்த்திக் தன் மனைவி பூஜாவை பார்க்க, பூஜா தன் மாமியாரிடம்

"பாத்தீங்களா அத்தை இந்த வீட்டுல என் புருஷனுக்கு என்ன மரியாதை இருக்கு. அவர் எவ்வளவோ சொன்னாரு இங்க வந்தா அவருக்கு மரியாதை இருக்காதுன்னு. நான் தான் கேட்கல, குடும்பத்தில பிரச்சனை வந்தாலும் நாம தனியா போறது நல்லது இல்ல அப்படின்னு சொல்லி அவரை இங்க கூட்டிட்டு வந்தேன்.
வந்ததுக்கு உங்க பொண்ணு நல்ல மரியாதை கொடுக்கிறார்." என்று கண்ணை கசக்க அதை தாங்க முடியாத திலகவதி

"கனலி கொஞ்சம் அமைதியா இரு. இப்ப எதுக்காக குரலை உசத்தி பேசிகிட்டு இருக்க. முதல்ல நீ பேசினதுக்கு அண்ணன் கிட்ட மன்னிப்பு கேளு."

"நான் எதுக்காக மன்னிப்பு கேட்கணும் நான் என்ன தப்பு பண்ணினேன்."

"அண்ணன் கிட்ட இப்படி பேசுறது தப்பு இல்லையா."

"ஒரு அண்ணன் கிட்ட தங்கச்சி குரலை உசத்தி பேசுனது தப்புதான். ஆனால் இவன் கிட்ட நான் பேசுறது தப்பு இல்ல."

"கனலி அவன் இவன்னு பேசாத அவன் உன்னுடைய அண்ணன்."

"அண்ணனா??? இவனா ஒரு அண்ணனா இவன் எனக்காக இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கான். சுயநலமா வாழுற இவனை நான் எதுக்காக அண்ணனா நினைக்கணும்."

"அவனுக்கு செய்யணும்னு ஆசை இருக்கு ஆனா அவன் கிட்ட அதுக்கு வசதி இல்லையே. அதற்காக அவனை நீ குற்றம் சொல்லலாமா."

"அம்மா இதோட நிறுத்திட்டு உள்ள பாே, உனக்கு உன்னுடைய பிள்ளையை பத்தி தெரியல அதனாலதான் நீ இப்படி பேசிக்கிட்டு இருக்கிற."

தன் தாயை சமாளித்து உள்ளே அனுப்ப நினைக்க, அவரே அதே இடத்தை விட்டு அசையாமல் நிற்க கனலி அண்ணன் அண்ணியிடம் வந்து நின்று,

"கடன் இருக்கு கடன் இருக்குன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறியே எதனால கடன் வந்துச்சுன்னு?"

எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று பயந்த கார்த்திக் அவசரமாக தன் தாயிடம்

"அம்மா விடுங்க அவ பேசினா பேசிட்டு போகட்டும். இந்த உலகத்துல பணம் தான் முக்கியம், அந்தப் பணம் என்கிட்ட இல்ல அப்படி இல்லாதப்போ எனக்கு எப்படி மதிப்பு இருக்கும்."

தன் அண்ணனை பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்று சிரித்த கனலி

"என்ன உன்ன பத்தி நான் அம்மாகிட்ட சொல்லக்கூடாது, சொன்னாலும் அம்மா அதை நம்பக்கூடாதுன்னு தான இப்படி பேசுற. இன்னைக்கு நான் பேச தான் போறேன்." எனக்கூறிவிட்டு தன் தாயிடம் திரும்பி

"அம்மா நம்ம வீட்டில கார்த்திக்கு மட்டும் தான் அப்பா செலவு பண்ணி படிக்க வச்சாரு.
கமலி படிக்கவே இல்ல.

நான் பாத ஆபிரஹாம் உதவியால மட்டும் தான் படிச்சேன்.
அப்படி இருக்கும் பொழுது இவனுக்கு எப்படி கடன் வந்துச்சு.
எங்களை இவன் படிக்க வைக்கல, கமலி கல்யாணமும் அப்பா தான் நடத்தி வச்சாரு. அப்பா போனதுக்கு அப்புறமா ஊரில இருக்கிற கடனுக்கும் நான் தான் வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன்.

அப்படி இருக்கும் பொழுது இவனுக்கு எங்க கடன் வந்துச்சு. முன்ன வேலைபார்த்த கம்பெனியில 40 ஆயிரம் சம்பளம் வாங்கினான். ஆனால் இதுவரைக்கும் இந்த வீட்டுக்கு இன்னு ஒரு ரூபா குடுத்து இருப்பானா. நான் ஏதாவது கேட்டேனா நானும் பிரச்சனை பண்ண கூடாதுன்னு பொறுமையா போயிட்டு இருக்கேன்.

தேவையில்லாமல் என்னை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். அமைதியா இருந்தா இனியன் வந்ததுக்கு அப்புறம் சொத்தை சரிசமமா பிரித்து கொடுத்துட்டு போயிடுவேன்.
இல்ல அப்பா கிட்ட கடன் காெடுத்தவங்களை எல்லாம் இனி கடனை இவன் கிட்ட வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போயிடுவேன்.

அது மட்டும் இல்ல சொத்திலிருந்து சல்லி பைசா கூட இவனுக்கு கிடைக்கவிடாமல் என்னால பண்ண முடியும்."

கனலி பேச்சில் வாயடைத்து நின்ற அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்த கனலி திரும்பிப்பார்த்து

"அம்மா மேல இருக்கிற பாசத்தினால் நீ இங்க வந்து தங்கிறதா அவங்க நெனச்சா அதை நானும் நம்புவேன்னு நீ எதிர்பார்க்காதே.
சென்னையில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினா நிறைய செலவாகும், பணத்தை மிச்சம் பிடிக்க தான் நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து தங்கி இருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரியுது.
தொடர்ந்து நீங்க இதே வீட்டுல இருக்கணும் என்று நினைச்சா பாதி வாடகை பணமும் வீட்டு செலவில் உங்களுக்கு எவ்வளவு வருமோ அதையும் என்கிட்ட தந்துவிடனும்.
அப்படி தரலைன்னா அடுத்த நிமிஷம் உங்களுடைய பொருளெல்லாம் தெருவில் தான் கிடைக்கும். இந்த கனலி சொன்னா சொன்னதைச் செய்வா." என எச்சரி விட்டு எச்சரித்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் சென்ற பின்பும் நின்ற இடத்தில் அசையாமல் கார்த்திக் பூஜா நிற்க அவர்களை அழைத்த திலகவதி,

"கார்த்திக் கனலி பேசினதை மனசுல வச்சுக்காதா, அவ ஏதோ கோபத்துல அப்படி பேசுற. எல்லாத்துக்கும் காரணம் அந்த தினகரனும் அவனுடைய பொண்டாட்டியும் தான். நான் அவகிட்ட பக்குவமா பேசுறேன்."

கனலி இவ்வளவு கூறிய பின்பும் திலகவதி தன் மகனுக்கு சாதகமாகப் பேச அதை கவனித்த பூஜா மனதுக்குள்

'எங்களையாடி திட்டிட்டு போற, இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு நீ அனுபவிப்ப, இந்த பூஜாவை நீ ரொம்ப சாதாரணமா நெனச்சிட்ட கூடிய சீக்கிரம் உன்னை எல்லாரும் முன்னாடியும் அவமானப்பட வைக்கல என்னுடைய பெயரில் பூஜா இல்ல."

அடுத்தநாள் காலை வழக்கம்போல கனலி தன் பிள்ளைகளை பள்ளியில் விட அழைத்துச்செல்ல தன் தாயின் கையை பிடித்து நடந்த தீபா

"அம்மா அனாதை அப்படினா என்னமா?" மகளின் கேள்வியில் திடுக்குற்று திரும்பிய கனலி

"எதுக்காக இப்படி ஒரு கேள்வியை கேட்ட தீபா." என்று கேட்ட கனலியிடம் ரூபா,

"இன்னைக்கு காலையில நீங்க குளிக்க போனதுக்கு அப்புறம் நான் நானும் ரூபாவும் ஹார்லிக்ஸ் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோமா, அதை பார்த்த அத்தை அனாதைகளுக்கு ஹார்லிக்ஸ் கேக்குதாேன்னு சொன்னாங்க."

அவர்கள் கேட்ட வார்த்தைக்கான அர்த்தம் இருவருக்கும் புரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் ஒன்பது வயது இந்திரஜித் ஓரளவு அதன் அர்த்தத்தை புரிந்து வைத்திருந்தான்.

ஆறுமாத குழந்தைகளாக இருந்த தீபா ரூபா இருவரும் தன்னை தாயாக நினைத்த பொழுது, அவர்களின் அண்ணனான இந்திரஜித் ஐந்து வயது.

அவனிற்கு தான் அவனின் சொந்த தாய் அல்ல என்பது நன்கு தெரியும். இருந்தும் சில தினங்களிலேயே அவன் தன்னை தாயாக ஏற்றுக் கொண்டான்.

தான் அவனின் தாய் அல்ல என்ற உண்மை அறிந்ததால் என்னவோ எப்பொழுதும் தனக்கு எந்த துன்பமும் தரக்கூடாது என்று பொறுப்புடன் நடந்து கொள்வான்.

அதேபோன்று தன் தங்கைகளையும் கவனித்துக் கொள்வான். பிள்ளைகள் இருவரும் தன் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த கனலி என் சாெ ல்வது என்று தெ ரயால் நிற்க, இந்திரஜித் அவர்களின் முன்பு மண்டியிட்டு இருவரையும் பார்த்து

"அவங்களுக்கு உங்கள பிடிக்கல அதனால தான் அப்படி பேசுறாங்க. இனி அவங்க எது சொன்னாலும் நீங்க கண்டுக்காதீங்க.
யாருக்கு இந்த உலகத்தில அன்பு கிடைக்கலையா அவங்கதான் அனாதை. நமக்கு அன்பு காட்ட அம்மா இருக்காங்க, அவங்களுக்கு அன்பு காட்ட நாம மூணு பேரும் இருக்காேம்."

நிலைமையை சுலபமாக கையாண்ட இந்திரஜித்தை பார்த்த கனலி பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்ப,

"இன்னைக்கு பாதி நேரந்தான ஸ்கூல் இருக்கும், மதியம் நம்ம எல்லாரும் அவுட்டிங் போகலாம் ஓகேவா." என்று கூறி பிள்ளைகளின் கவனத்தை வேறு புறம் திருப்பினாள்

_________________________________________________________________

"அப்பா நம்ம பீச் போகலாம் பா."

"அபி இவ்வளவு நே ரம் சுத்தினதுல அப்பா டயடா இருக்கேன். அதுவுமில்லாம இப்போ பீச் ரொம்ப கூட்டமா இருக்கும்." என்று அபி சமாளிக்க நினைக்க, எப்பொழுதும் அவனுக்கு எதிராகவே செயல்படும் கிருபா இம்முறை தன் தம்பியுடன் இணைந்துகொண்டு

"விஷ்வா ப்ளீஸ் நாம பீச்சுக்கு போகலாம்."

தன் இருபுறமும் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சும் பிள்ளைகளை கனிவுடன் பார்த்த விஷ்வா, இதற்கு மேல் தன்னால் மறுக்க இயலாது என்பதை உணர்த்து

"ஓகே போகலாம் ஜஸ்ட் ஹாஃப் அன் ஹவர் மட்டும்தான் அங்க இருக்கணும் ஓகே."

இந்த அளவு தன் அப்பா இறங்கி வந்ததே சந்தோஷம் என்று நினைத்த இருவரும்

"ஓகே டன்."

கிருபா அபி இருவரும் கடல் மண்ணில் விளையாடிக்கொண்டிருக்க அவர்கள் இருவரையும் தன் கண் பார்வையில் வைத்துக்கொண்டு அந்த ஆழ் கடலை ரசித்துக்கொண்டிருந்தான். கடலைப் பார்த்த அடுத்த நொடி அவன் மனது

'இந்த கடலுக்குள்ள என்ன இருக்கிறதுன்னு கூட கண்டுபிடித்து விடலாம், ஆனால் உன்னுடைய மனசுக்குள்ள என்ன இருக்குன்னு என்னால இப்ப வரைக்கும் கண்டுபிடிக்க முடியல.' என்று
தன் இயலாமையை நினைத்து கொண்டிருக்க அப்பொழுது தன் மீது மோதிய சிறுவனால் நடப்பிற்கு வந்தான்.

"சாரி அங்கிள், என் பாப்பா கூட ஓடிப்பிடித்து விளையாடும் போது தெரியாமல் வந்து உங்க மேல மாேதிட்டேன்." என்று மன்னிப்பு கேட்க வேகமாக அவ்விடம் வந்த கிருபா அச்சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தாள்.

இவை அனைத்தும் சில வினாடிகளில் நடந்து முடிந்துவிட விஷ்வா கிருபாவை பார்த்து

"ஸ்வீட்டி எதுக்காக இப்போ அந்த பையன அடிச்ச மன்னிப்பு கேளு." என்று கோபமாக கூற, கிருபா தன்னிடம் கோபமாக பேசும் தன் தந்தையை நோக்கி

"இப்போ எதுக்காக நீ என்கிட்ட கோபமா பேசுற."

"நீ அடிச்சது தப்பு, சாே சே சாரி டூ கிம்."

"நான் அவனை அடிச்சது தப்புன்னா அவன் என் பிங்கி ய மிதிச்சது தப்பு."

அப்பாெழுது தான் விஷ்வா குனிந்து பார்க்க, சிறிது நேரத்திற்கு முன் தான் வாங்கி தந்த பிங் நிற ட்டெடி மீது அந்த சிறுவனின் கால் இருந்தது.

'ச்ப்' என்ற சத்தத்தில் விஷ்வா நிமிர்ந்து பார்க்க, அங்கு கிருபா கண்ணத்தில் கை வைத்து நிற்க அவள் எதிரில் ஸ்கூல் யூனிஃபாமில் நின்ற சிறுமி

"என் அண்ணனையா அடிச்ச பிச்சிடுவேன்." என்று மிரட்ட,

நடப்பதை எல்லாம் தூரத்திலிருந்தே பார்த்தபடி ஓடி வந்த கனலி,

"தீபா......"

தன் அம்மா தங்கள் அருகில் வந்ததை பார்த்த தீபா தனக்கு தங்களுக்கு துணைக்கு ஆள் கிடைத்து விட்ட நிம்மதியில்"அம்மா இந்த பொண்ணு நம்ம அண்ணன் அடிச்சுட்டா."

"அதுக்கு நீ திரும்ப அடிப்பியா, இதுதான் நான் உனக்கு சொல்லி கொடுத்ததா."

தன் இரட்டை தாய் திட்டுவது பொறுக்கமுடியாத ரூபா

"எங்க அண்ணனை யாராவது அடிச்சா அப்படித்தான் திரும்ப அடிப்போம்." ரூபாவின் பேச்சில் கோபமுற்ற கிருபா

"அடிப்பியா எங்க அடி பார்ப்போம்." என்று வேகமாக ரூபா அருகில் வர விஷ்வா கிருபாவை பிடித்து நிறுத்தினான்.

கனலி சண்டைக்குத் தயாராக நின்ற ரூபா தீபா இருவரையும் தன் இரு கைகளில் பிடித்துக்கொண்டு விஷ்வாவை பார்த்து

"சாரி விஜி என் குழந்தைகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்." எனக்கூறிவிட்டு பிள்ளைகளுடன் அங்கிருந்து புறப்பட, இந்திரஜித் அந்த இடத்தைவிட்டு அசையாமல் நின்றான்.

இந்திரஜித் அந்த இடத்தைவிட்டு அசையாமல் இருப்பதை பார்த்து கனலி

"இந்திரா வா போகலாம்." என்றழைக்க, அவனோ தன் தங்கையிடம் வந்து அவள் கையில் இருந்த பிங்க் நிற ட்டெடியை வாங்கி கிருபா அருகில் வைத்துவிட்டு

"உன்னுடைய பொம்மைய நான் மிதிச்சிருக்க கூடாது சாரி." என்று கூறிவிட்டு தன் அம்மாவின் அருகில் செல்ல, அவனை தடுத்த விஷ்வா,

"சாரி இந்திரா ஸ்வீட்டிக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அப்புறம் இந்த பொம்மையை நீயே வச்சுக்க நான் அவளுக்கு வேற வாங்கி கொடுக்கிறேன்."

தன்னைப் பிடித்திருந்த விஷ்வாவின் கையை மெதுவாக விலக்கிய இந்திரா

"தப்பு பண்ணவங்க தான் அதை சரி பண்ணனும்னு அம்மா சொல்லுவாங்க, நான்தான் பொம்மைய மிதிச்சிட்டேன், அதனால அது அழுக்கு ஆயிட்டு. இந்த பொம்மை இப்பதான் நாங்க வாங்கினது புதுசுதான்." எனக்கூறிவிட்டு தன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டு

"வாங்க போகலாம் மா." என கூற நால்வரும் அவ்விடம் விட்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் வேறு எதுவும் பேசாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வர அதுவரை அமைதியாக இருந்த கிருபா

"நீ எதுக்காக அந்தப் பையன் கிட்ட மன்னிப்பு கேட்ட அவன் தான் தப்பு பண்ணுனான்."

"இந்திரஜித் பண்ணது தப்பன்னா நீ அவன அடிச்சதும் தப்புதான்." என விஷ்வா கூறிய அடுத்த நாெடி

"அவன் அம்மா அவனை இந்திரா என்று தான கூப்பிட்டாங்க நீ இந்திரஜித்னு சாெல்ற, உனக்கு எப்படி அவன் முழு பெயர் தெரியும், அவன் பெயர் எதுக்கு உன் பெயர் மாதிரி இருக்கு.
அவன் அம்மா எதுக்காக உன்ன விஜின்னு சாென்னாங்க, உனக்கு அவங்கள தெரியுமா?
உனக்குதான் யாரும் உன்ன விஜின்னு கூப்பிட்ட பிடிக்காதே அப்புறம் எதுக்காக அவங்க உன்ன விஜின்னு கூப்பிட்டாங்க. நான் கூட உன்ன விஜின்னு கூப்பிட்டது இல்ல, அப்படின்னா உனக்கு என்ன விட அவங்க ரெம்ப க்ளாேஸ் தான."

"ஸ்வீட்டி நீ எப்பவும் இந்த விஷ்வாக்கு க்ளாேஸ் தான்."

"இப்பாே கூட நீ அவங்க உனக்கு க்ளாேஸ் இல்லன்னு சாெல்லல. என்னுடைய மத்த கேள்விக்கும் பதில் இல்ல."

தன் முன் சரமாரியாக கேள்வி கனைகளை தாெடுத்தவண்ணம் நின்ற மகளை பார்த்து விஷ்வாவிற்கு ஒரு நிமிடம் தான் நிற்பது கனலி முன்பாே என்று தாேன்றியது.

"ஸ்வீட்டி உன் கேள்விக்கான எல்லா பதிலும் என்கிட்ட இருக்கு. நீ பாெறுமையா கேட்ட எல்லா பதிலை யும் சாெல்றேன்." என தன்னிலை விளக்கம் கூற தயாராக, கிருபாலி சாென்று சாேபாவில் அமர்ந்துகாெண்டு

"ம்ம்ம் சாெல்லு." என கூற, அவள் ஒவ்வாெரு செயலும் அவனுக்கு கனலியையா நினைவுட்டியது. கனலி நினைவு வந்ததும் உதட்டில் தாேன்றிய புன்னகையுடன்,

"ஸ்வீட்டி அவங்கள எனக்கு ரெம்ப வருஷத்துக்கு முன்ன இருந்தே தெரியும்."

"உன் கூட படிச்சவங்களா?"

"நாே ஒரு ஹாலி டேக்கு பெங்களுர் வரும்பாேது மீட் பண்ணேன். ஐ நாே கனலி பாஸ்ட் 10 இயர்ஸ். சாே அந்த பையன் பெயர் தெரியும், அவன் பெயர் ஏன் என் பெயர் மாதிரி இருக்குன்னு அவனுக்கு பெயர் வச்சவங்க கிட்டதான் கேட்கனும்.
காெஞ்ச நாளா அவங்க கூட எனக்கு கான்டெக்கட் இல்ல, ரெம்ப நாளுக்கு அப்புறமா இப்பாே தான் மீட் பண்றாேம். சாே ஒரு எக்சைட்மெண்ட்ல என்ன விஜின்னு கூப்பிடிருப்பாங்க."நான் இந்திரா கிட்ட மன்னிப்பு கேட்டது தப்பு உன்மேலன்கிற காரணத்தால் மட்டும்தான்."

"நான் என்ன தப்பு பண்ணினேன் அந்த பையன் என்ன தப்பு பண்ணன். அவன் என் ட்டெடியை மிதிச்சான் அது தப்பு தானே."

"ஸ்வீட்டி தெரிஞ்சு பண்ணாதான் அது தப்பு, அந்த பையன் தெரியாம தான் மிதிச்சான் சாே அது தப்பு இல்ல.
ஆனா நீ தெரிஞ்சுதான் அந்த பையன அடிச்ச, சோ நீதான் தப்பு பண்ணி இருக்க அத புரிஞ்சிக்க."

"அப்பாே அந்த பொண்ணு என்ன அடிச்சா தானே அது தப்பு இல்லையா."

"அபியை யாராவது அடிச்சா நீ சும்மா இருப்பியா."

"அது எப்படி என் தம்பி அடிச்ச நான் சும்மா இருப்பேன்."

"அதுமாதிரிதான் நீ அவளுடைய அண்ணனை அடிச்ச பதிலுக்கு அவளும் உன்னை அடிச்சிருக்கா. என்ன இருந்தாலும் அவ அடிச்சது தப்புதான், அதுக்காக அவங்க அம்மா மன்னிப்பு கேட்டாங்க தானே.
அதே மாதிரி நீ பண்ணுன தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டேன், தட்ஸ் ஆல் இந்த பிரச்சினையை இதோட விடு."

தந்தை எவ்வளவு சமாதானம் கூறினாலும் அதை ஏற்க மறுத்த கிருபா தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றது அபி தன் தந்தையிடம்

"இதுக்குத்தான் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்கன்னு நான் சொன்னேன் கேட்டீங்களா, இப்போ அனுபவிங்க."

"டேய் பாெடியா என்ன பாத்தா உனக்கு நக்கலா இருக்கா." என்று கேட்க அவனோ சற்றும் தாமதிக்காமல்

"ஆமா." பதிலளிக்க

"எல்லாம் என் நேரம் பெரிய பெரிய ஃஸ்னஸ் பண்ற எல்லாரும் என் முன்னாடி பேசவே யோசிக்கிறாங்க. ஆனா ஒருத்தி என்ன நிற்கவைத்து கேள்வி கேட்டுட்டு போறா, இன்னொருத்தன் அதை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கான்."

"எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தானே அனுபவிங்க." என்று மேலும் தன் தந்தையை கிண்டல் செய்ய, அவனே அடிப்பதுபோல் பாவனை செய்து விஷ்வா துரத்த அவனோ தன் தந்தையின் கைகளில் சிக்காமல் ஓடி மறைந்தான்.

________________________________________________________


"அம்மா நீ எதுக்கு மா அங்க இருந்து என்ன கூட்டிக்கிட்டு வந்த, இருக்கிற கோபத்தில அவள இன்னும் ஒரு அடி அடிச்சிருப்பேன்."

"தீபா தேவையில்லாமல் கோபப்படக் கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்." என்று கனலி அதட்ட அதைப் பொறுக்க முடியாத ரூபா

"அவ நம்ம அண்ணன் அடிச்சி இருக்காம்மா, அவளை எப்படி சும்மா விட முடியும்."

"தீபா ரூபா உங்களை விட பெரியவர்களை அவ இவன்னு பேசக்கூடாது, மரியாதை கொடுத்து பேசி பழகுங்கள்.
அந்தப் பொண்ணு பண்ணது தப்புதான் அதுக்கு அவங்க அப்பா மன்னிப்பு கேட்டங்கதானே, பிரச்சனைய பெருசு பண்ணாம விடு.
நாளைக்கு எல்லாரும் ஐஸ்கிரீம் பார்லர் போகலாம் சரியா சீக்கிரம் தூங்குங்க."

பெண் பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட விழித்திருந்த இந்திராவின் அருகில் வந்த கனலி

"என் மேல உனக்கு கோபமா." என்று இந்திராவிடம் கேட்க அவனோ

"நான் எதுக்காக மா உங்க மேல கோபப்படனும்."

"அந்த இடத்துல நான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசால, அதனால உனக்கு என் மேல கோபம் இல்லையா." என்று கேட்டேன் தாயை அணைத்து கொண்ட இந்திரா

"தெரியாமல் செய்தாலும் நாம் பண்ணது தப்பு, என் மேல தப்பு இருக்கும்பொழுது நீங்க எப்படி எனக்காக பேச முடியும்.
நீங்க பேசாம இருந்ததுக்கு வேற ஏதாவது காரணம் இருந்தாலும் இருக்கும். எனக்கு அதனால உங்க மேல கோபம் இல்லம்மா.
அதுமட்டுமில்லாமல் அந்த அங்கிள் என்கிட்ட மன்னிப்பு கேட்டங்களே." என்று கூறிய இந்திரஜித் அணைத்துக் கொண்ட கனலி

"எதுக்குடா எப்பவும் என்ன பத்தி மட்டுமே நீ நினைக்கிற, உனக்கு கோபம் வந்தா கோபப்படு. தயவு செஞ்சு எனக்காக நீ யோசிச்சு உன்னை கஷ்டப்படுத்திக்காத சரியா."

"எங்களுக்காக நீங்க யோசிக்கும்போது உங்களுக்காக நான் யோசிக்கக் கூடாதா." என்று கூறிய இந்திராவின் முகத்தை கனலி பார்க்க அவனோ

"சீக்கிரம் படிச்சு பெரிய வேலைக்கு போவேன், உங்களுக்கு நிறைய வாங்கி தருவேன், அதுக்கப்புறம் நீங்க வேலைக்குப் போக வேண்டாம். கஷ்டப்படாமல் வீட்டுல சந்தோஷமா இருக்கலாம்." என்று கூறிய இந்தியாவின் நெற்றியில் முத்தமிட்ட கனலி

"இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் எனக்கு அது போதும்." என்றே வெ ளியில் கூற மனதுக்குள்

"என் விஜி மாதிரி அக்கறை காட்ட நீ இருக்கும் பாேது வேற என்ன வேணும்."



நினைவு நிஜமாகுமா
 
Last edited:
பெரிசுக தான் பாக்கும்போது முறைக்குதுகனு பாத்தா வாண்டுக கைய நீட்டுதே....ஷப்பா....
 

Advertisement

Top