Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் 27

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 27

"தாய்மாமாவை வரச்சொல்லுங்க...." என்று பெரியவர் ஒருவர் அழைக்க பட்டு வேட்டி சட்டையில் கம்பிரமாக வந்தமர்ந்தான் கார்த்திக்.

சம்மணமிட்டு அமர்ந்து இருந்த கார்த்திக் மடியில் தனது மகன் கவிஜித்தை வைத்துவிட்டு கனலி புன்னகைக்க, கார்த்திக்கும் புன்னகையுடன் தனது மருமகனை வாங்கி தன் மடியில் வசதியாக அமர வைத்துக் கொண்டான்.

மனைவி முகத்தில் இருக்கும் வாடாத புன்னகையை கண்ட விஸ்வா நினைவு தனது மகன் பிறந்த தினத்தில் இருந்து நடத்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தது. மருத்துவமனையில் செவிலி பெண்

"சார் உங்களுக்கு பையன் பிறந்திருக்கிறான்." என்று கூறி துணியில் சுற்றிய குட்டி மலராய் இருந்த மகனின் ஸ்பரிசத்தில் இந்த உலகத்தை வென்றதை போல உணர்ந்தான்.

சுகப்பிரசவமாக கவிஜித் பிறந்ததனால் அடுத்த மூன்று தினங்களில் தாய் மகன் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் பெயர் வைக்கும் விழாவை விமரிசையாக இரு வீட்டாரும் ஏற்பாடு செய்திருக்க அந்நாளில் 'என்ன பெயரை குழந்தைக்கு வைப்பது' என்பது மிகப்பெரிய பிரச்சனையாக வந்து சேர்ந்தது.

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்களைக் கூற அதில் என்ன பெயரை குழந்தைக்கு வைப்பது என்று விஸ்வாவிற்கு தன் மண்டையை உடைத்துக் கொள்ளாத குறைதான். இதில் கிருபா

"விஸ்வா நாம ஏன் தம்பிக்கு கபாலின்னு பேரு வைக்கக்கூடாது." என்று தன் கருத்தை கூறினாள்.

'கபாலி' என்ற பெயரில் ஒரு நிமிடம் ஜர்காகிய விஸ்வஜித்

"எதுக்கு ஸ்வீட்டி உனக்கு இந்த பெயர் வைக்கணும்னு தோணுச்சு." என்று பாவம் போல முகத்தை வைத்துக்காெண்டு கேட்க, தந்தையின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் தொட்டிலில் தன் கையை காலை உதைத்து சிரித்துக் கொண்டு இருந்தான் புதிதாக அந்த வீட்டின் வீட்டின் இளவரசன் பதவியை ஏற்றவன்.

"விஸ்வா அம்மாவோட பேரு 'க' ல ஆரம்பிக்குது, எங்க மூணு பேரோட பெயரும் 'பாலி'ன்னு முடியுது சாே தம்பிக்கு 'கபாலி'ன்னு பெயர் வைக்கலாம்." என்று தன் புத்திசாலிதனத்தை நிரூபிக்க, அவள் 'லி' சங்க உறுப்பினர்களான தீபா ரூபா இருவரும் கிருபா முடிவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவர்கள் 'லி' சங்க கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 'ஜித்' சங்க தலைவன் இந்திரா

"அது எப்படி அந்த பேரு வைக்கலாம், நம்ம வீட்டுல இருக்கிற எல்லா பசங்களுக்கும் 'ஜித்' அப்படின்னு தானே பேரும் முடியுது. அதனால கபாலின்னு பெயர் வைக்க முடியாது." என்று தன் கருத்தை முன்வைக்க, அவன் சங்க கொள்கை பரப்புச் செயலாளர் அபராஜித் இந்திராவிற்கு தன் ஆதரவை வழங்கினான்.

இரு குழுவினரும் சண்டையிட்டு ஓய்ந்து ஒருவழியாக சேர்ந்து 'ஜித்' என்று முடியும் பெயரை பட்டியலிட்டு கூற, அதிலிருந்து எந்த பெயர் என்று முடிவு முடிவுசெய்யும் இறுதிகட்ட அதிகாரம் கனலியிடம் கொடுக்கப்பட்டது.

பிள்ளைகளும், வீட்டு உறுப்பினர்களும் தேர்வு செய்த ஒவ்வொரு பெயர்களையாக கனலி பார்த்துக்கொண்டே வர
சுஜித்.....
மகேந்திரஜித்....
சர்வஜித்......
பிரபுஜித்.....
கமல்ஜித்....
சூர்யஜித்....
கவிஜித்.....
அஜித்
அதிலிருந்து அனைத்து பெயர்களும் மிகவும் அருமையானதாகவே இருந்தது.

தெளிவான முடிவெடுக்க தெரியாமல் கனலி குழம்பிக் கொண்டு இருக்க அவள் பின் வந்து அவள் காதருகே குனிந்து விஸ்வா

"கனல் பேபி எதற்காக இவ்வளவு யோசிக்கிற, இதுல இருக்கிற ஒரு பெயரை இப்போ நம்ம பையனுக்கு வைக்கலாம், அப்புறமா உனக்கு எத்தனை பேரு புடிச்சிருக்காே அதை செலக்ட் பண்ணி வை, அத்தனை குழந்தைகள் பெற்று அவங்களுக்கு அத வைக்கலாம்." என்று கூற அவனை முறைத்துப் பார்த்த கனலி கண் பார்வையை மீண்டும் பெயர் எழுதிய காகிதத்தை நோக்கி திருப்பினாள்.

"கவிஜித்" என்ற பெயருக்கு தனது வாக்கு அளித்து அதை வெற்றியாளர் என்று கனலி அறிவிக்க, அது வரை அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரஞ்ஜித் தனது வயதையும் மறந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

"எல்லாரும் பார்த்தீர்களா கடைசி என்னுடைய மருமகள் நான் செலக்ட் பண்ண பெயர்தான் ஒகே பண்ணியிருக்கா. இதுக்கு தான் எப்பவும் வீட்ல பெரியவங்க பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும்னு சொல்றது." என்று தன் சட்டை காலரை உயர்த்தி பெருமைப்பட்டுக் கொள்ள, பூரணி அவர் செய்கையை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார்.

"சின்ன பிள்ளை மாதிரி குதிக்காமல் அமைதியான ஒரு இடத்தில் இருங்க." என்று மனைவி அதட்ட அதில் தன்னுணர்வு பெற்ற ரஞ்ஜித் அசடு வழிய அமைதியாக அமர்ந்து கொண்டார்.

எதற்காக கனலி இந்தப் பெயரை தேர்வு செய்தால் என்று அனைவரும் கேட்க கனலி தான் நினைத்த உண்மையான காரணத்தை கூறாமல், தானும் புத்திசாலி என்று மற்றவர்களுக்கு நிரூபிக்க நினைத்து

"கிருபா தீபா ரூபா ஆசைப்பட்ட மாதிரி பையனுடைய பெயரு 'க'ல ஆரம்பிக்கணும். இந்திரா அபி விருப்பப்படி 'ஜித்'ல முடியனும். விஸ்வா மனசு கஷ்டபடாம இருக்க 'வி' இருக்கனும். அதனால் இந்தப் பெயர் என்ன செலக்ட் பண்ணினேன்."

கனலி பதிலை உண்மை என்று அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், விஸ்வாவிற்கு மட்டும் அதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே தோன்றியது. தனிமையில் இதைப்பற்றி அவளிடம் விஸ்வா கேட்க கனலி

"இல்ல விஜி....
நான் எப்பவுமே உன்னை எப்படி கூப்பிடுவேன்."

'இதுவா நான் கேட்ட கேள்விக்கு பதில்?' என்பது போல் பார்த்த விஸ்வா

"விஸ்வஜித்'ன்னு கம்பீரமா இருக்கற என்னோட பெயரை ஏதோ பெண் குழந்தையைக் கூப்பிடுற மாதிரி விஜி விஜி கூப்பிட்டுக்கிட்டு இருக்க."

"யூ ஆர் கரெக்ட் விஜி...
அதேமாதிரி நம்ம பசங்களையும் இந்திரஜித்தை இந்திரா என்றும், அபராஜித்தை அபி என்றும் கூப்பிடுவேன்.

அப்படி இருக்கும் பொழுது அந்த லிஸ்ட்ல இருந்த எந்தப் பெயரை வைத்தாலும் என்னுடைய டேம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு ஒத்துவராது.

இதுவே கவிஜித் பெயரை சுருக்கமா 'கவி'ன்னு கூப்பிடலாம், அழகா இருக்குல்ல." என்று தன் விளையாட்டுத் தனத்தை பிள்ளையின் பெயரிலும் கனலி நிருபித்தாள்.

தாெட்டிலில் உறங்கும் மகனை பார்த்துவிட்டு கனலியை கொலைவெறியுடன் பார்க்க முயற்சி செய்து, அது முடியாமல் விஸ்வா புன்னகையுடன் அவளை அணைத்துக்கொண்டான்.

ஒன்பது மாதக்குழந்தையான கவிஜித் தன் வாயில் புதிதாக முளைத்திருந்த ஒற்றை பல்லை காட்டி சிரிக்க, மருமகனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கார்த்திக் தன் மருமகனின் நெற்றியில் முத்தமிட்டான்.

கவி தன்னை முத்தமிட்ட மாமனின் கன்னத்தை கடித்து வைக்க பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடன் அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

பூஜா மட்டும் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லாமல் நின்று கொண்டு இருந்தாள்.

பிறந்ததிலிருந்தே தங்கையின் மீது சிறிது பொறாமை கொண்டவனாக கார்த்திக் வளர்ந்தாலும், என்றும் தங்கையின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

திருமணத்திற்குப் பின்பு சில நேரம் கனலி மீது கார்த்திக்கிற்கு இரக்கமும் பாசமும் ஏற்படுவது போல தோன்றினாலும் அதை பூஜா முளையிலேயே கிள்ளிவிடும் வேலையை சிறப்பாக செய்து வந்தாள்.

தகுதி இல்லாத ஒருவனை பூஜா காத்திக்கை ஏமாற்றி, கனலிக்கு தேர்ந்தெடுத்தாலும், கடைசியில் கனலி தப்பித்துவிட்டாள்.

இருந்தும் அதில் தன் பங்கு எதுவும் இல்லை என்பதை என்று தன் கணவனையும் மாமியாரையும் நம்ப வைத்தாள்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் கனலி மீது கணவனுக்கும் மாமியாருக்கும் நம்பிக்கை வராதபடி பார்த்துக் கொண்டாள். கனலி பெயரில் இருந்த சொத்துக்களே பூஜா திட்டங்கள் அனைத்தும் அவளுக்கு சாதகமாக முடிய உறுதுணையாக இருந்தது.

ஆனால் கனலி எப்பொழுது தன் தாயின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் சொத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டாளே அப்பொழுதே கார்த்திக்கிற்கு தங்கையின் மீது அதுவரை இருந்த மனக்கசப்பு மறைய ஆரம்பித்தது.

இருந்தும் தன் மனதில் தோன்றிய மாற்றத்தை மற்றவர்களிடம் காண்பிக்காமல் இருந்ந்துகொண்டான்.

இது எதுவும் அறியாத பூஜா அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் கனலி பற்றி தன் கணவனிடம் புகார் கூற ஆரம்பித்தாள்.

முன்பெல்லாம் மனைவி கனலியை பற்றி புகார் கூறும் பொழுது அதை எல்லாம் உண்மை என்று நம்பும் கார்த்திக், தற்பொழுது அவை எந்த அளவிற்கு உண்மையானதாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

கனலி வளைப்பூட்டல் விழாவிற்கு என அனைவரும் குடும்பமாக சென்றிருக்க பூஜாவின் கண்கள் கனலியிடமிருந்து ஒரு நொடியும் நகரவில்லை.

தங்கச் சரிகை சேலை பளபளக்க, உடல்முழுதும் வைரம் மின்ன தாய்மையின் அழகோடு இருந்த கனலி பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவள் மனதில் காரணமே இல்லாமல் வன்மம் அதிகரிக்க ஆரம்பித்தது.

நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த பூஜா கனலி உடைமாற்றி வருவதற்கான தன் அறைக்கு செல்ல, அவள் பின்னே சென்ற பூஜை அவள் வரும் வழியில் எண்ணையை ஊற்றி வைத்தாள்.

இதை கவனித்த கார்த்திக் மனைவி செயலில் அதிர்ந்துபாேனான். கார்பினி பெண்ணின் மீது இத்தகைய வன்மம் மனைவிக்கு இருப்பதை அறிந்த அடுத்த நாெடி கார்த்திக் மனதில் பூஜா பல படி இறங்கிப்பாேனாள்.

கார்த்திக் தன் தங்கைக்கு அடிபடாமல் காப்பாற்றினான். வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்பு பூஜாவை கார்த்திக் கவனித்த கவனிப்பில் இனி ஜென்மத்திற்கும் கனலியை எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பு அடியோடு மறைந்து விட்டது.

ஒவ்வொருமுறை கனலி வசதியோடும் மகிழ்ச்சியுடனும் வாழும் வாழ்க்கையை பார்க்கும் பொழுது எல்லாம் அவள் பொறாமை குணம் தலைவிரித்து ஆடவே செய்தது.

"கிரிதர் நீ இப்போ போய் கனலி கிட்ட இருக்கிற உன்னுடைய குழந்தைகளை கேட்டா அது எல்லா விதத்திலயும் உனக்கு நல்லா தான் முடியும்."

"நீ சொல்றது எப்படி நான் நம்ப...!"

"இங்க பார் ஒன்னு குழந்தைங்க உன் கிட்ட வந்தா அவங்க பேர்ல இருக்கிற சொத்து உனக்கு கிடைக்கும்.

ஒரு வேளை கனலியும் விஸ்வாவும் குழந்தைகளை தர மறுத்தா அவர்கிட்ட ஒரு பெரிய அமௌன்ட் வாங்கிக்க." என்று கிரிதரன் பண ஆசையை தூண்டி விட்டாள்.

ஆனால் அவள் திட்டத்தின்படி ஏதாவது நடந்ததா என்று மூன்று மாதங்களாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கிரிதரன் எண்ணை தொடர்பு கொள்ள நினைத்தாலும் அதுவும் முடியவில்லை.

கவிஜித் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் தலையை இதுவரை அலங்கரித்துக் கொண்டிருந்த முடியை இறக்க ஆரம்பித்தனர்.

குழந்தைக்கு மாெட்டையிட்டு முடித்ததும் கனலி அவனைத் தூக்கிச் சென்று குளிக்க வைத்து, அவனுக்காகவே சிறப்பாக தைக்கப்பட்டிருந்த பட்டு வேஷ்டி சட்டையை அணிவிக்க, அந்தக் குட்டி சிறுவன் தாயின் மடியில் இருந்து இறங்கி தன் தமக்கையும் மடியில் சென்று அமர்ந்து கொண்டான்.

இந்திரஜித் கையில் சந்தன கிண்ணத்துடன் வர, அபி தன் தம்பியை பிடித்துக்காெள்ள, அதிலிருந்த சந்தனத்தை எடுத்து ரூபா தீபா இருவரும் தன் தம்பியின் முடியில்லாத மொட்டைத் தலையில் தடவ ஆரம்பித்தனர்.

சந்தனத்தின் குளிர்ச்சியில் தலையை ஆட்டிய கவிஜித் அண்ணன் கையிலிருந்த சந்தனக் கிண்ணத்தில் கையை விட்டு அதில் இருந்த சந்தனத்தை எடுத்து தன் தமக்கைகள் அண்ணன்கள் மீது பூச ஆரம்பித்தான்.

பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருக்க அந்த அழகான தருணத்தை விஷ்வா தனது ஹேண்டி கேம்மில் சிறை பிடித்துக் கொண்டிருந்தான்.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கனலி தன் கணவனை காதலுடன் பார்த்து வைத்தாள்.

தன் காதல் ஒன்றிற்காக தான் செய்தவற்றை எல்லாம் ்பொறுத்துக் கொண்டு அவன் தனக்காக இதுநாள்வரை செய்த ஒவ்வொரு செயல்களையும் நினைத்துப் பார்த்த கனலி, வழக்கம் போல 'தான் அவன் காதலுக்கு தகுந்தவள்தானா....!' என்ற எண்ணம் வரவே செய்தது.

தன் கையில் இருந்த வக்கீல் நோட்டீசை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கனலி தன் ஆரம்பகட்ட அதிர்ச்சியிலிருந்து உடனே தன்னை மீட்டுக் கொண்டு தன் அலைபேசியை எடுத்தாள்.

தன் அலைபேசியில் இருந்து கிரிதரனை அழைக்க, அழைப்பை ஏற்றதும் கிரிதரன்

"என்ன கனலி நான் அனுப்புன நோட்டீஸ் உனக்கு கிடைச்சுதா....!"

"உனக்கு என்ன வேணும்...!
எதுக்காக தேவையில்லாத பிரச்சனை பண்ற.." என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க,

"என்னோட குழந்தைகளை நான் கேக்கிறது உனக்கு பிரச்சனை பண்ற மாதிரியா தெரியுது....
நீ என்னோட குழந்தைகள் என்கிட்ட கொடுத்தா நான் எதுக்காக பிரச்சனை பண்ண போறேன்....!" என்று அலட்சியமாகவே கிரிதரன் பதில் வந்தது.

கிரிதரன் எதற்காக இப்படி ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பான் என்பதை புரிந்து காெள்ள கனலிக்கு பெரிதாக யாேசிக்க வேண்டிய அவசியம் இல்லை...
பணம்.......
பணம்.......
பணம் மட்டுமே...

"உனக்கு இப்போ என்ன வேண்டும் அதை மட்டும் சொல்லு..."

கனலி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்ததே நல்லது என்பது போன சிரித்த கிரிதரன்

"நான் என்ன பெருசா கேட்க போறேன் ஜஸ்ட் ஒரு 30 லட்சம் கொடு. அப்படி உனக்கு கொடுக்க விருப்பம் இல்லனா என்னுடைய 3 குழந்தைகளை என்கிட்ட அனுப்பி விடு."

தன்னிடம் ஏதோ ஒரு பொருளை கொடுத்து வைத்திருப்பது போலவும்.... அதற்கான விலையை அவன் நிர்ணயிப்பது போலவும் பேச அதைக் கேட்டுக் கொண்டிருந்த கனலிக்கு கட்டுக்கடங்காமல் கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்தது.

இருக்கும் கோபத்தில் தன் எதிரில் மட்டும் கிரிதரன் இருந்திருந்தல் அவனுக்கு கனலி கைகளால் மரணம் நிச்சயம்.

கோபத்தில் தன் தொலைபேசியை அணைத்து வைத்தவள் சிறிதுநேரம் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைந்தவள் பின் ஒரு முடிவுடன் நேராக தனது கணவன் அறைக்கு சென்றாள்.

கனிலியை அந்த நேரத்தில் எதிர் பார்க்காத விஸ்வா

"ஹாய் கனல் பேபி இப்பதான நாம ஆபீஸ்க்கு வந்தோம். கொஞ்ச நேரம் கூட என்ன பாக்காம உன்னால இருக்க முடியலையா..." என்று அருகில் வந்து காதல் வசனம் பேச தயாராக கனலி எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த காகிதத்தை அவன் முன் நீட்டினாள்.

தான் பேசிய வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு கனலியிடம் இல்லை என்பதிலேயே ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட விஸ்வா, கனலி தன் முன் நீட்டிய காகிதத்தை படிக்க ஆரம்பித்தான்.

அதை படிக்க ஆரம்பிக்கும் முன் இருந்த மனநிலை அதை படித்த பின்பு அப்படியே மாறிவிட்டது. வக்கீல் நோட்டீஸ் படித்து முடித்ததும் அதை மடித்து தன் டேபிள் மீது வைத்துவிட்டு

"கனல் நீ வாெரி பண்ணிக்காத இந்த விஷயத்த நான் டீல் பண்ணிக்கிறேன்." என்று மட்டும் கூற கனலி அவன் வார்த்தையை நம்பினாள்.

அவள் நம்பிக்கையை உண்மையாக்க அடுத்த மூன்று தினங்களில் கிரிதரன் கனலியை நேரில் சந்தித்து, பிள்ளைகள் இனி கனலி பொறுப்பு என்பதை எழுத்துபூர்வமாக எழுதி கனலியிடம் தந்து விட்டு சென்றான்.

"எப்படி விஜி...!" என்று நடப்பதை நம்ப முடியாத தன் ஆச்சரியத்தை கேள்வியாகக் கேட்க விஸ்வா

"சில விஷயம் ஏன் எப்படி எதனால் நடந்ததுன்னு ஆராய்ச்சி பண்ண கூடாது, அதை அனுபவிச்சா மட்டும் போதும்." என்று தன் விளக்கத்தை அதோடு நிறுத்திக் கொண்டான். கனலியும் மேற்கொண்டு அதை பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

பிள்ளைகளின் அழைப்பில் தன் நினைவுகளிலிருந்து மீண்டு வந்த கனலி கணவனுடன் இணைந்து பிள்ளைகளுடன் விளையாட ஆரம்பித்தாள்.

ஏனோ இந்த மகிழ்ச்சி மட்டும் தனக்கு நிலைத்திருந்தால் போதும் என்ற நினைப்பு மட்டுமே கனலி மனதில் இருந்தது.

உன் நினைவு நிஜமாகும் என்று காேவில் மணி இடைவிடாது ஒலித்தது.

♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪

ஹாய் ப்ரெண்ட்ஸ்
கண்களின் நினைவு நிஜமாக உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்க விருப்பபடி பாய்ஸ் மூணு கேள்ஸ் மூணு கணக்கை டேலி பண்ணிடேன்.
பெயர் காெடுத்த உதவிய பெருமக்கள் அனைவருக்கும் நன்றி.
இப்பாேதைக்கு கவிஜித் பெயர் மட்டும் யூஸ் பண்ணிருக்கேன். இன்னும் சில பெயர் நெக்ஸ்ட் எப்பிலாக்ல யூஸ் பண்ணிருக்கேன்.

முடிஞ்சா எப்பிலாக் நைட் காெடுக்குறேன் ஆர் மார்னிங்.
 
Last edited:
கார்த்திக் கொஞ்சூண்டு நல்லவனாயிட்டானே
கர்ப்பிணித் தங்கையை எண்ணெயில் வழுக்கி விழாமல் காப்பாற்றி பொண்டாட்டி பூஜாவுக்கும் நல்லா செமத்தியா பூஜை கொடுத்திட்டான்
ஹா ஹா ஹா
பூஜான்னு பேர் வைச்சுக்கிட்டு சாக்கடை புத்தியுடன் இருக்கும் பூஜாவின் பேச்சைக் கேட்டு கனலிக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்த கிரிதர் மாமனுக்கு நல்ல மசாஜ் கிடைத்ததோ?
தான் வளர்க்க துப்பில்லாமல் தன்னோட மூணு பிள்ளைகளுக்கும் முப்பது லட்சம் கேட்ட பெரிய மாப்பிள்ளைக்கு சின்ன மாப்பிள்ளை நல்லா வைச்சு செஞ்சாரோ?
இன்னிக்கு நைட்டே எபிலாக் கொடுங்கப்பா
 
Last edited:
கார்த்திக் கொஞ்சூண்டு நல்லவனாயிட்டானே
கர்ப்பிணித் தங்கையை எண்ணெயில் வழுக்கி விழாமல் காப்பாற்றி பொண்டாட்டி பூஜாவுக்கும் நல்லா செமத்தியா பூஜை கொடுத்திட்டான்
ஹா ஹா ஹா
பூஜான்னு பேர் வைச்சுக்கிட்டு சாக்கடை புத்தியுடன் இருக்கும் பூஜாவின் பேச்சைக் கேட்டு கனலிக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்த கிரிதர் மாமனுக்கு நல்ல மசாஜ் கிடைத்ததோ?
தான் வளர்க்க துப்பில்லாமல் தன்னோட மூணு பிள்ளைகளுக்கும் முப்பது லட்சம் கேட்ட பெரிய மாப்பிள்ளைக்கு சின்ன மாப்பிள்ளை நல்லா வைச்சு செஞ்சாரோ?
இன்னிக்கு நைட்டே எபிலாக் கொடுங்கப்பா
பூஜாக்கு டேஸ் காெடுக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்பட்டதால் அதை நிறை வேற்றியுள்ளேன்.
பணப்பேய்களுக்கு வே ப்பிலையால் மந்திரிச்சா தான் சரிபட்டு வருவாங்க.
 
Top