Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

Nice ending..... Naan romba romba ethirpaarthu padicha story ithu..... Romba romba niraivaana story.. Contest la neenga than 1st story a complete panni irukeenga athuku oru periya congrats.... Kumaran n bola manasula epovum nipaanga sis.... Enna than uravukal othungi ponaalum naama anba mattum vithaicha athu oru naal anbukku kattupadum.... Ennoda sunna vayasula epadi than joint family a irunthom.. Enga veetla periyavanga onna than irunthaanga but pasangaloda generation othu varala. Ippo orutharku oruthar pesikirathuku kooda yosikiraanga. Pasanga enna solluvaanganu payapaduraanga.... Anyway oru naal maarum nu naanga wait panrom... Ennoda family a neraya miss pannuna oru feel... Once again a big congratulations sis.... ?????
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 
நிறைவான அருமையான உணர்வு பூர்வமான கதை..எப்போதும் எங்க சப்போர்ட் இருக்கு கதை ஆசிரியரே ! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
ரொம்ப ரொம்ப அருமையான ஒரு குடும்ப கதை!!... இந்த காலத்துல இப்படி ஒரு கூட்டு குடும்பம் சாத்தியமா???... கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் சாத்தியமாக்கிட்டாங்க!! பெரியவங்க மல்லுக்கு நிக்கும் போதும் சின்ன பசங்க ஒற்றுமையா நின்னுது ரொம்ப ரொம்ப பிடிச்சது!!!.. அதுவும் சகோதர, சகோதரிகளா மட்டும் இல்லாம மாமா மகளா, அத்தை மகனா, மாமா மகனா ஒருத்தொருக்கொருத்தர் தோள் கொடுத்து நண்பனா, சகோதரனா நின்ன சின்ன விஷயமும் ரொம்ப அழகுதான்!!... நமக்கு ஒருத்தவங்க கெட்டது செய்தாலும் உறவுன்னு வரும்போது அவங்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுற அந்த அந்த மனசு பெரிய விஷயம் தான்!!... எல்லா உறவுகளும், பாசமும் ரொம்ப இயல்பா தான் இருந்தது!!!... எங்கேயும் குறையும் இல்ல!. மிகையும் இல்லை!.. சில அத்தியாயங்களில் கதை ரொம்ப மெதுவா போற மாதிரியும், அதுக்கடுத்த சில அத்தியாயங்களில் கதை வேகமாக போற மாதிரியும் இருந்தது!!... ஒரே விஷயத்தை ரெண்டு நபருடைய பக்கத்தில் இருந்தும் சொல்லி, ரெண்டு பேரோட உணர்வுகளையும் ரொம்ப யதார்த்தமா இருந்தது!!... புரிஞ்சுக்கவும் முடிஞ்சது!!... தன் மகனுக்காக வாழ்க்கையையே அர்பனிச்சு, எந்த இடத்துலயும் அவனை விட்டுக்கொடுக்காத அப்பாவை அவ்வளவு பிடித்தது!!!...

என் காதலை நான் சொல்லிட்டேன், இப்போ உன் காதலுக்காக நீ போராடி என்கிட்ட வா அப்படின்னு இருந்த அந்த வைராக்கிய குணம் ரொம்ப பிடிச்சது!!!...

குடும்பத்துக்காக சம்மதம் சொல்ல யோசிச்சாலும், மனசுக்குள்ள முடிவு எடுத்ததற்கு அப்புறம் அதே குடும்பத்துக்காக கூட விட்டு தர முடியாமல் தவிச்ச தவிப்பும், விட்டு தரவே கூடாதுன்னு எடுத்த உறுதியான முடிவும் ரொம்ப பிடிச்சது????

பெத்த அப்பா எதிர்த்து நின்ன போதும், ஒரு சகோதரனா எப்பவும், எங்கேயும் கூடவே நின்ன குணாவை ரொம்ப ரொம்ப பிடிச்சது?

கொஞ்ச இடத்துல மட்டும் வந்தாலும் ஒரு தோழியாய் ஹேமாவை ரொம்ப பிடிச்சது!!.. அவளும் அந்த கடைசி விசேஷத்துக்கு வீட்டுக்கு வந்து இருக்கலாம்?!!... அவளை மிஸ் பண்ண ஃபீல் கடைசி அத்தியாயங்களில்!!...

ஒருத்தனுக்காக குடும்ப மொத்தமும் தவிச்சு நின்னதும், அவனோட ஆசையை நிறைவேற்றி வைக்க எடுத்த முயற்சியில் அவ்வளவு பிடித்தது அந்த குடும்பத்தை!!...

மனசுக்கு இதமான ஒரு அழகான குடும்பமும், ஆழமான காதலும் உள்ள கதை!!!... ரொம்ப பிடிச்சது!!.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே?
 
Top