Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்….அத்தியாயம் 4

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
மருத்துவ மனையில் கட்டிலில் படுத்திருந்தாள் ராதா. பக்கத்தில் அகிலா , சாந்தா மாமி இன்னும் சில வயதான பெண்மணிகள். சற்று தள்ளி ஆனந்த் நின்றிருந்தான். ஒரு பாட்டிலிருந்து மருந்தும் குளுகோசும் கலந்த நீர் அவள் உடலில் சொட்டுச் சொட்டாக ஏறிக் கொண்டிருந்தது. கைகளிலும் நரம்புகள் வழியாக சில ஊசிகளைப் போட்டாள் ஒரு நர்ஸ்.

கண்ணீர் பெருக இவைகளைப் பார்த்தபடி இருந்தாள் அகிலா.

டாக்டர் உள்ளே நுழைய அவரைச் சூழ்ந்து கொண்டனர் அனைவரும்.

"இப்ப எங்கம்மாவுக்கு எப்படி இருக்கு டாக்டர்?"

"நீ அவங்க மகளா? பாத்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்க? ஆனா எப்படி பாத்துக்கணும்னு தெரியலியே?"

"என்ன ஆச்சி டாக்டர்?"

"இதுக்கு முன்னாடி ஒரு தடவை கூட இவங்களுக்கு இப்படி வந்திருக்கா?"

"ஆமா! ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஸ்கூல்ல இப்படித்தான் மயங்கி விழுந்துட்டாங்க! அப்புறம் நார்மலாத்தான் இருந்தாங்க"

"உங்கம்மாவுக்கு ரத்தக் கொதிப்பு ரொம்ப அதிகமா இருக்கு. அவங்க உணர்ச்சி வசப்படறதால மூளைக்குப் போற ரத்த அளவு ரொம்ப அதிகமாகி அழுத்தம் தாங்காம ரத்தக் குழாய்கள் வெடிக்கிற நிலைமைக்கு போயிட்டது. இப்படியே விட்டா என்ன ஆகும் தெரியுமா?"

"சொல்லுங்க டாக்டர்?" குரல் நடுங்கக் கேட்டாள் அகிலா.

"பக்க வாதம் வரலாம் , இல்லை ரத்தக் குழாய் வெடிச்சி உசிரே போகலாம். இந்தத் தடவை நீங்க சரியான நேரத்துக்குக் கொண்டு வந்தீங்க! இல்லைன்னா என்ன ஆயிருக்குமோ?"

படபடவென துடித்த இதயத்தைக் கட்டுப்படுத்தியபடி பேசாமல் பார்த்தாள் அகிலா.

"எப்ப இவங்களை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்? இவங்களுக்கு எப்ப நினைவு வரும்?"

"இன்னும் கொஞ்ச நேரத்துல நினைவு வந்துடும். ரெண்டு நாள்ல அழைச்சுக்கிட்டுப் போயிடலாம். ஆனா ரொம்ப ஜாக்கிரதையாப் பாத்துக்கணும். சின்ன அதிர்ச்சி கூட ஆகாது இவங்களுக்கு. உணர்ச்சி வசப்படறா மாதிரி எதுவும் சொல்லாதீங்க!"

"அப்படியே செய்யறேன் டாக்டர்! எத்தனை நாளைக்கு மருந்து மாத்திரை குடுக்கணும்?"

"எப்படியும் பதினஞ்சு நாளைக்கு எழுதித்தரேன். அப்புறம் ஒரு டெஸ்டுக்கு வாங்க! நார்மலாயிடிச்சின்னா ஒண்ணும் தேவையில்ல" என்று சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.

இப்போது பெண்மணிகள் அகிலாவைச் சூழ்ந்து கொண்டனர்.

"என்னடி இது? நேத்து காலையில கூட உங்கம்மா எங்கூட பேசிக்கிட்டு இருந்தாங்களே? திடீர்னு என்ன ஆச்சு? ஏன் இப்படி மயக்கமா விழுந்தாங்க?"

என்ன சொல்லுவாள் அவள்? பரிதாபமாக ஆனந்தின் முகத்தைப் பார்த்தாள்.

சாந்தா மாமி குறுக்கிட்டு "உடம்புக்கு எதுக்கு வரதுன்னு யாருக்குத் தெரியும்? என்னவோ அனுபவிக்க வேண்டிய வேளை வந்துடுத்து. அவளைப் போயி ஏன் வந்துது எதுக்கு வந்துதுன்னா அவ என்ன சொல்லுவா பாவம் சின்னப் பொண்ணு!" என்றாள் ஆதரவாக.

"அழாதே! அகிலா! நாங்க இருக்கோம். உன்னை அப்படி விட்டுற மாட்டோம். நீ இங்க தங்க வேண்டாம். உங்க ஆத்துக்குப் போயிடு. நான் கூட இருந்து கவனிச்சிக்கறேன். நாளைக்கு நீ வேலைக்குப் போயிடு. அது ரொம்பவும் முக்கியம். " என்றாள் பத்மா மாமி.

"சரி மாமி! அம்மாவுக்கு நினைவு வந்தப்புறம் பேசிட்டுக் கிளம்பிடறேன்." என்றாள்.

அவளைத் தனியாக அழைத்தான் ஆனந்த்.

"கையில காசு இருக்கா? இல்லை வேணுமா? இந்த மருந்தெல்லாம் வாங்கச் சொல்லி டாக்டர் எழுதிக் குடுத்திருக்காரு. நான் போயி வாங்கிட்டு வந்துடுறேன். நீ ஆண்ட்டியை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ! அவங்க கண்ணு தொறக்கும் போது நான் இருந்தா டென்ஷன் ஆகிடுவாங்க! அதனால் நான் இனி இங்க வரல. அதான் சாந்தா மாமியும் , பத்மா மாமியும் இருக்காங்களே பாத்துப்பாங்க" என்றான்.

அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. முகம் இறுகி உணர்ச்சியற்ற ஜடம் போல இருந்தான். அகிலாவால் அவன் கண்களைப் பார்த்துப் பேச முடியவில்லை. எங்கே அழுது விடுவோமோ என்று உணர்ச்சிகளை இறுகப் பிடித்தபடி வெறுமே தலையாட்டினாள்.

அதற்கு மேல் அங்கு வேலை இல்லை என்பதை உணர்ந்து வெளியேறினான் ஆனந்த்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ராதாவுக்கு நினைவு வந்து விட்டது. மெதுவாகக் கண்களைத் திறந்தாள். தன்னைச் சுற்றி இருந்தவர்களை அடையாளம் காண சற்று நேரம் பிடித்தது.

"அகிலா! என்னை மன்னிச்சுக்கம்மா! உன்னை ரொம்ப பயமுறுத்திட்டேன். இப்ப எனக்கு நல்லா ஆயிடிச்சி" என்றாள் அகிலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

"நன்னாச் சொன்னே போ! அவளை மட்டுமா பயமுறுத்தினே? எங்க எல்லாரையும் ஒரு கலக்குக் கலக்கிட்டியே! ஏதுடா! அகிலா சின்னவளாச்சே அவ எப்படி எல்லாத்தையும் சமாளிப்பாங்கற நெனப்பு வேண்டமோ ஒருத்திக்கு?" என்றாள் சாந்தா மாமி.

"மாமி! தயவு செஞ்சு எங்கம்மாவைத் திட்டாதீங்க! அவங்களே இப்பத்தான் உயிருக்குப் போராடி மீண்டு வந்திருக்காங்க!"

"அதுக்காகத்தான் சொல்றேன்! நாம எல்லாம் பொம்பளைகளாப் பொறந்தவா. மனசுல தைரியமும் , தன்னம்பிக்கையும் தான் ரொம்ப முக்கியம். அதை விட்டுட்டு எதுக்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு இப்படிக் கத்தினா யாருக்கு நஷ்டம்? சொல்லு?"

"எனக்குப் புரியுது மாமி! ஆனா என்னால என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியல்லியே?"

"முடியணும் ராதா ! கண்டிப்பா முடியணும்! உனக்காக இல்லாட்டாலும் பாவம் உன்னையே நம்பி இருக்காளே இந்தக் குழந்தைக்காகவாவது நீ மனசை அடக்கணும். புரிஞ்சதா?"

"நேக்கு ஒண்ணு தோணறது! ராதா கடந்த காலத்துல நடந்த எதையோ மனசுல வெச்சுண்டு தான் இப்படிக் கெடந்து அவஸ்தைப் படறான்னு நெனைக்கிறேன் ! அப்படி இருந்தா உன் மனசுல உறுத்திண்டு இருக்கறதை ரொம்ப நெருக்கமானவா கிட்ட சொல்லிடு! அதனால மனசு பாரமும் கொறையும் , கொதிப்பும் அடங்கும்" என்றாள் பத்மா மாமி.

எல்லாவற்றையும் கேட்டபடி பேசாமல் படுத்திருந்தாள் ராதா. அவள் மனதில் பல போராட்டங்கள்.

வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்கள் ராதாவை. இந்த மூன்று நாட்களில் ஒரு முறை கூட ஆனந்த் வந்து அவளைப் பார்க்கவில்லை. அகிலாவுடன் பேசக்கூட முயற்சி செய்யவில்லை. ஆனால் அகிலாவால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

" ஆனந்தை எங்கேம்மா காணோம்? ஏன் அவன் உங்கம்மாவைப் பாக்க வரல்ல?"

பத்மா மாமி கேட்கவும் திக்கென அதிர்ந்தாள் அகிலா.

"அது ஒண்ணு மாமி ! வேலை இருந்திருக்கும் அதான் பாக்க வரலை போல இருக்கு!" என்று சமாளித்தாள். மாமி போய் விட்டாள்.

"அம்மா! இப்ப உனக்கு உடம்பு எப்படி இருக்கு?" இதமாகக் கேட்டாள் அகிலா.

"நல்ல இருக்குடி கண்ணு! ஆனா மனசு தான் சரியில்ல!"

"அம்மா ! பிளீஸ் ! ஏம்மா மனசு சரியில்ல? நான் உன் மனசு வேதனைப் படும்படி நடக்க மாட்டேன்ம்மா! இது சத்தியம்! எனக்கு நீ தான் ரொம்ப முக்கியம்! உன் மனசை நோக அடிச்சிட்டு நான் சுகம்மா வாழ நினைக்க மாட்டேன்மா" என்றாள் அகிலா அம்மாவின் கைகளைப் பிடித்தபடி.

"எனக்கு மட்டும் உன் மனசை நோகடிக்கணும்னு ஆசையா அகிலா? நீ நல்லா வாழணும்கறது என் ஆசை , கனவு லட்சியம் எல்லாம். அது உனக்குப் புரிஞ்சா சரி"

"எதையாவது நெனச்சி மனசைப் போட்டு குழப்பிக்காதே! இந்தா இந்த மாத்திரையச் சாப்பிடு! நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடு. அப்பத்தான் நல்லது" என்றவள் மாத்திரையை விழுங்க வைத்தாள்.

சற்று நேரத்தில் அம்மா நன்றாக உறங்கத் தொடங்கி விட்டாள். அதை உறுதிப்படுத்திக் கொண்டு ஆனந்தை தேடி இல்லத்தை நோக்கி நடந்தாள்.

மல்லிகைப் பந்தல் பக்கத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சிந்தனை வசப்பட்டவனாக உட்கார்ந்திருந்தான் ஆனந்த். அவனைப் பார்த்ததும் அவளது இதயம் துள்ளியது. நிஜம் அவளைச் சுட்டது.

"வா அகிலா! இப்ப உங்க அம்மாவுக்கு பரவயில்லையா?"

"உம்! மருந்து குடுத்தேன்! இப்பத்தான் தூங்கறாங்க! "

என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக இருந்தனர் இருவரும்.

"அகிலா ! அன்னிக்கு ஏன் உங்கம்மா அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுக் கத்துனாங்க? உனக்கு ஏதாவது தெரியுமா?"

"ஒண்ணும் தெரியலியே ஆனந்த்! என்னை முத முதல்ல அன்னிக்குத்தான் எங்கம்மா அடிச்சாங்க தெரியுமா? சின்ன வயசுலருந்து அவங்க என்னைக் கொஞ்சி இருக்காங்களே தவிர கோபப்பட்டதோ அடிச்சதோ கிடையாது!"

"ஐ ஆம் சாரி அகிலா! நீ அடி வாங்க நானே காரணமாயிட்டேன். உன்னை என் கூடச் சேர்த்து பார்த்ததும் தான் அவங்க ஆத்திரப்பட்டாங்க! அதுவும் நீ நம்ம காதலைச் சொன்னதும் தான் அவங்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி விழுந்தாங்க!"

"ஆமாம் ! ஆனந்த்! எனக்கும் அப்படித்தான் தோணிச்சி! இது விஷயமாப் பேசறதுக்குத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன்!"

"சொல்லும்மா ! நான் என்ன செய்யணும்?"

"ஆனந்த்! சின்ன வயசுலருந்து எனக்கு எல்லாமாக இருந்து வளத்தவங்க எங்கம்மா! என்னோட நன்மை தவிர அவங்களுக்கு வேற ஒண்ணும் தெரியாது! அவங்களை இழக்க எனக்கு மனசு இல்ல"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும் சொல்லு!"

"நம்ம காதல் அவங்களுக்குப் பிடிக்கல்ல ஆனந்த்! அதனால நீங்க என்னை மறக்கணும்! நாம காதலிச்சதை மறக்கணும்"

"இதை ஒரு வகையில நான் எதிர்பார்த்தேன் இருந்தாலும் நீ இவ்வளவு சுலபமா முடிவெடுப்பேன்னு நான் நெனக்கல்ல! நீ சொல்லிட்ட என் மனசு என்ன பாடுபடும்னு யோசிச்சியா நீ?"

"யோசிக்காம இல்ல! நீங்க நினைக்கறா மாதிரி நான் சுலபமாவும் முடிவு எடுக்கல்ல! என் மனசைக் கல்லாக்கிட்டு தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். "

"வேற வழியே இல்லியா அகிலா? " பரிதாபமாக் கேட்ட ஆனந்தை கண்களில் நீர் பொங்க ஏறிட்டாள் அவள்.

"உங்க நிலைமை எனக்குப் புரியுது ! ஆனா என் நிலைமையையும் நீங்க புரிஞ்சிக்கோங்க ஆனந்த்! டாக்டர் எங்கம்மாவுக்கு எந்த விதமான அதிர்ச்சியையும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. அதோட அவங்களை உணர்ச்சி வசப்பட விடக் கூடாதுன்னு எச்சரிச்சிருக்காரு. இந்த நிலையில நான் எங்கம்மா கிட்ட எப்படி உங்களைப் பத்தி சொல்ல முடியும்?"

"இப்ப சொல்ல வேண்டாம்! அவங்க உடம்பு நல்லா ஆனப்புறம் சொல்லலாமே? அதுக்கு ரெண்டு வருஷம் ஆனாலும் நான் காத்திருக்கத் தயார்."

"நாம காத்திருக்கலாம் ஆனந்த்! ஆனா எங்கம்மா நாளைக்கே நீ ஆனந்தைக் காதலிக்கறியான்னு கேட்டா என்ன பதில் சொல்ல? அவங்க மனசு நோகாம நடந்துக்கறேன்னு அவங்களுக்கு சத்தியம் செஞ்சிருக்கேன் நான்"

மீண்டும் மௌனம் அவர்களைச் சூழ்ந்தது.

"இப்ப என்ன சொல்ல வர? இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னா? இந்த ஜென்மத்துல நம்ம கல்யாணம் நடக்காதுன்னா என்ன சொல்ல வர அகிலா?"

அவன் கேட்ட கேள்வியில் குலுங்கிப் போனாள் அவள்.

"எனக்கு ஒண்ணும் தெரியாது ஆனந்த். எனக்கு எங்கம்மா வேணும். அவ்ள தான்"

அவளை நெருங்கி வந்தான் அவன். மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

"அகிலா! சின்னக் குழந்தையிலருந்து அம்மாவோட அன்புக்காகவும் , அரவணைப்புக்காகவும் ஏங்கினவன் நான். உனக்கு அது கிடைக்க விடாம செஞ்சிடுவேனா? என்னால உன்னை மறக்கவே முடியாது . இதுல கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல. என்னிக்குமே என் மனசுல நீ மட்டும் தான் இருப்ப! ஆனா உனக்காக உன் மேல உள்ள காதலை நான் தியாகம் செய்யத் தயாரா இருக்கேன். இனி நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா அதுக்குன்னு என்னை விரோதி மாதிரி நடத்தாதே என்னால அதைத் தாங்க முடியாது"

பேசிக் கொண்டே போனவன் குரல் அடைக்க கொஞ்சம் நிறுத்தினான். அகிலா ஏதோ சொல்ல வர அவளைக் கையமர்த்தி மீண்டும் தொடர்ந்தான்.

"நான் என்னிக்குமே உன்னோட நல்ல நண்பன். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்னைத் தயங்காமக் கேக்கலாம். சரியா?" என்றான்.

கேவியபடி அவனுக்கு தலையசைத்து சம்மதம் சொன்னாள். இருவரும் வேறு வேறு திசையில் நடக்க ஆரம்பித்தனர்.
 
Nirmala vandhachu ???
 
Top