Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள் அத்தியாயம் 5.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
நாட்கள் மிக மெல்ல நகர்வதாகத் தோன்றியது அகிலாவுக்கு. முன்பு பள்ளிக்குக் கிளம்பும் போதும் சரி , லீவு நாட்களிலும் சரி எப்போதும் உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஏதோ வாழ வேண்டுமே என்ற கட்டாயத்துக்காக வாழ்பவள் போல தோன்றியது. ராதாவுக்கும் உடல் நிலை படிப்படியாகத் தேறியது.

வீடு வீடு விட்டால் பள்ளி , பின்னர் பி எட்டுக்கான படிப்பு என்று நேரம் ஒதுக்கி வைத்து வைட்டாள் அகிலா. அதில் ஆனந்துக்கு இடம் கொடுக்கவில்லை. எப்போதாவது ஆனந்தைப் பார்த்தால் ஒரு சிறு புன்னகை அவ்வளவு தான். அவன் மட்டும் என்ன? முன்பு ஞாயிற்றுக் கிழமையானால் அகிலாவின் வீடே கதி என்று இருப்பவன் இப்போது அங்கு எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கிப் போய் விட்டான். காதல் ஒரு ஆறாத காயமாக அவன் நெஞ்சில் தங்கி விட்டது.

ஒரு நாள் பள்ளி விட்டு வரும் வழியில் ஒரு பெரிய கார் இவளை உரசியபடி வந்து நின்றது. அதிலிருந்து தோரணையாக இறங்கியது ...அவளால் கண்களை நம்ப முடியவில்லை. அவளது அப்பா நாகராஜனே தான். புகைப்ப்படத்தில் பார்த்தது போலவே இருந்தார். இறங்கியவர் அகிலாவை நோக்கி வந்தார்.

"அம்மா! அகிலா என்னைத் தெரியுதாம்மா?" என்றார்.

வெறுமே தலையசைத்தாள் அவள்.

"கார்ல ஏறும்மா! உன் கூட நிறையப் பேச வேண்டியிருக்கு! அரை மணியில கொண்டு வந்து விட்டுடறேன்" என்று அவளைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிக் கொண்டு ஒரு கோயிலில் சென்று நிறுத்தினார். கூட்டமில்லாத அந்தக் கோயிலில் இவளை அமர வைத்தவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

"என்ன ஆச்சு? எதுக்கு அழறீங்க? பிளீஸ் கொஞ்சம் சொல்லிட்டு அழுங்க! எனக்கு பயமா இருக்கு!" என்றாள்.

கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார் நாகராஜன்.

"அகிலா! என்னை மன்னிச்சிடும்மா! ஒரு அப்பாவா நான் என் கடமையைச் செய்ததே இல்ல! உன்னையும் உங்கம்மாவையும் நிர்க்கதியா விட்டுட்டு ஓடினவன் நான். அப்ப எனக்கு வாழ்க்கையில பெரிய பணக்காரனாகணும்னு வெறி இருந்தது. அதுக்கு நீயும் உங்கம்மாவும் முட்டுக் கட்டையா இருப்பீங்கன்னு நான் சொல்லாமக் கொள்ளாம ஓடிட்டேன்."

"ஓஹோ! இப்பத்தான் அது தப்புன்னு ஞானோதயம் பொறந்துதாக்கும்? எங்கம்மா என்னை வளக்க எத்தனை கஷ்டப்பட்டிருப்பாங்க? இந்த சமூகம் அவங்களை என்ன பேச்சு பேசியிருக்கும்? "

"ஒப்புக்கறேன்! நான் செஞ்சது தப்புத்தான். நான் இல்லேன்னு சொல்லல்ல! ஆனா இப்ப மனசு திருந்தி வந்திருக்கேன். ஒரு குடும்பமா வாழணும்ங்கிறது என் ஆசை. நீ ஏதோ ஒரு பள்ளியில வேலை செய்யிறியாம். உனக்கு ஏன் இந்தத் தலையெழுத்து? நம்ம வீட்டுல நீ ராணி மாதிரி இருக்க வேண்டியவ"

"பள்ளியில ஆசிரியைங்கறது ஒரு கௌரவமான வேலை தான். அதைப் பத்திக்குறை சொல்லாதீங்க! இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"

"ஒரு தடவை ஒரே ஒரு தடவை உங்கம்மாவைப் பாக்கணும் அகிலா எனக்கு. அவளுக்குப் பெரிய மனசு என்னை மன்னிச்சி ஏத்துப்பா. உங்களுக்காகவே நான் பெரிய வீடு பாத்துருக்கேன். நாமேல்லாரும் அங்க இருக்கலாம்"

"இதப்பாருங்க! அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாம இருந்து இப்பத்தான் சரியாயிருக்காங்க! நீங்க பாட்டுக்க வந்து..உங்களைப் பாத்த அதிர்ச்சியில அவங்க திரும்ப மயங்கி விழுந்துட்டாங்கன்னா அவங்களை பிழைக்க வைக்கிறது கஷ்டம். "

"என்னை என்ன செய்யச் சொல்ற? நாம சேர்ந்து இருக்கவே முடியாதா?"

"எனக்கு உங்க மேல பாசமும் கிடையாது , அதே நேரம் வெறுப்பும் இல்ல! ஆனா உங்க மனைவியை பாக்கக் கூடாதுன்னு சொல்ற அதிகாரம் எனக்கு இல்ல! ஒருவேளை உங்களைப் பாத்தா அம்மா உடம்பு சரியாகலாம். அதுக்காகவாவது நான் உங்களை அம்மாகிட்டக் கூட்டிக்கிட்டுப் போறேன்"

"எப்ப?"

"அவசரப்படாதீங்க! மெதுவா உங்களைப் பத்தி எடுத்துச் சொல்லி அவங்க மனசைத் தயார் பண்ணிட்டு தான் உங்களைக் கூப்பிடணும். ஒடனே நாங்க உங்க கூட வந்துடுவோம்னு நினைக்காதீங்க! அது அம்மா முடிவு பண்ண வேண்டியது."

"சரிம்மா! எனக்கு ராதாவைப் பாத்தாப் போதும்" என்றவர் பேச்சை முடித்துக் கொண்டு காரில் அவளை இறக்கி விட்டார். அவள் இறங்குவதை ஆனந்த் பார்த்தான். அவன் கண்களில் கேள்விக்குறி , ஆச்சர்யக் குறி எல்லாம் இருந்தன.

வீட்டை அடைந்தாள் அகிலா. அம்மாவோடு சாந்தா மாமியும் இருந்தாள்.

"என்னடி அகிலா? கார்ல வந்து இறங்கற? யாரு அது? உன் மாணவியோட அப்பாவா?"

சட்டென்று மாமி அப்படிக் கேட்டதில் தடுமாறிப் போனாள் அவள். என்ன பதில் சொல்ல? அம்மாவிடம் சொல்ல தயராகாத நிலையில் இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.

"கார்லயா வந்த? யார் கூட?"

"அது வந்தும்மா.. வந்து .."

"என்ன மென்னு முழுங்கற? " என்றாள் அம்மா. குரல் உயர்ந்தது.

"அம்மா பிளீஸ் நீங்க டென்ஷனாகாதீங்க! உங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போயிடும்."

"அப்ப யார் கூட வந்தேன்னு சொல்லு"

"அம்மா வந்தது எங்கப்பா தான். நான் இன்னிக்கு பள்ளி விட்டு வரும் போது என்னை வழியில பாத்துட்டு கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி மன்னிப்புக் கேட்டாரு. உன்னையும் பாக்கணுமாம்" என்றாள் பட்டென்று.

அம்மா தளர்ந்து போய் உட்கார்ந்தாள். அவள் முகம் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

"அந்த மனுஷன் எதுக்கு இப்ப வரான்? இப்பத்தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். அது பொறுக்கலியா?" என்று தனக்குள் சொல்லிக் கொள்வது போல மெதுவாக முனகினாள்.

"அகிலா! உங்கப்பாவா வந்தது? இத்தனை நாள் எங்க போயிருந்தாராம்? இப்ப என்ன திடீர்னு பாசம்?"

"எனக்கு எதுவுமே தெரியாது மாமி! அவரை சின்ன வயசுல எப்பவோ பாத்த ஞாபகம். அம்மா கூட அவரு நிக்கறா மாதிரி ஒரு ஃபோட்டோ உண்டு எங்க வீட்டுல அதை வெச்சி தான் அவரு எங்கப்பான்னே நான் கண்டு பிடிச்சேன்"

"என்ன சொன்னாரு?"

"நான் செஞ்சதெல்லாம் தப்பு? உன்னையும் அம்மாவையும் விட்டுட்டு ஓடினேன். அப்ப எனக்கு பணம் தான் பெரிசாத் தெரிஞ்சது. ஆனா இப்ப உங்க அருமை தெரிஞ்சி போச்சி அதனால என்னை மன்னிச்சி ஏத்துக்குங்கன்னு சொன்னாரு மாமி"

"நீ என்ன சொல்ற ராதா?" என்றாள் மாமி.

பேச்சற்று உட்கார்ந்திருந்தாள் அவள்.

"என்னடி என்னவோ மாதிரி இருக்க? திரும்பவும் ரத்தக் கொதிப்பு ஜாஸ்தியாயிடுத்தா? ஐயையோ! ராதா ராதா.." என்று கத்தினாள்.

"சும்மாருங்க மாமி! எனக்கு ஒண்ணும் ஆகல்ல! இந்த மனுசன் எதுக்கு அடி போடறாருன்னு தெரியலியே?"

"ஏன் அவரு உண்மையிலேயே நல்லவரா மாறி இருக்கலாம் இல்ல? " என்றாள் அகிலா.

"நீ அப்படியா நினைக்கற? எதை வெச்சி அப்படி சொல்ற?"

"அவரு பின்ன எதுக்கும்மா நம்மைத் தேடி வரணும்? நம்ம கிட்ட பணம் என்ன கொட்டியா கிடக்கு? அவரு பாசத்தை மட்டும் எதிர்பாக்கறதுனால தான் நம்ம கிட்ட வராருன்னு நினைக்கிறேன்"

"எனக்கும் அகிலா சொல்றது சரின்னு தான் படறது. ஏன் அகிலா நீ வந்தது உங்கப்பாவோட சொந்தக்காரா?"

"தெரியல்ல மாமி! ஆனா அவரு இப்ப பெரிய தொழிலதிபராம். லட்சக்கணக்கான ரூபாய்க்கு சொத்து இருக்காம். அம்மா நினைப்பாலயே தான் இன்னும் ரெண்டாம் கல்யாணம் கூடப் பண்ணிக்கலையாம். அப்டீன்னு சொன்னாரு"

"ராதா ! பாத்தியா? அப்ப ஏதோ ஒரு கெட்ட நேரம் உன்னையும் கைக்குழந்தையா இருந்த அகிலாவையும் விட்டுட்டு போயிட்டாரு. அதான் திரும்பி வந்துட்டாரேம்மா! அவரை மன்னிச்சு ஏத்துக்கோ"

"மாமி ! உங்களுக்கு அவரைப் பத்தித் தெரியாது ! அதான் இப்படிப் பேசறீங்க! அவன் மனுஷனே இல்ல! பணப்பேய் ! காசு காசு அதான் எப்பவும் அவனுக்கு கனவு , வாழ்க்கை எல்லாமே"

"அதான் அவரே ஒத்துண்டுட்டாரே! அப்ப எனக்கு பணத்தாசை இருந்ததுன்னு! எல்லாம் ஒரு நேரம் தான். கெட்ட நேரம் போகும் போது நல்ல சிந்தனையும் தானா வரும். வசதியான வாழ்க்கையை வேண்டாம்னு சொல்லாதே ராதா"

"இந்த வசதியெல்லாம் ஒண்ணும் எனக்குப் புதுசில்லை மாமி! இதை விடப் பணத்தைப் பாத்தவ நான். "

"நீ என்ன சொல்ற? நீ பேசறதைப் பாத்தா ஏதோ பெரிய பணக்கார ஆத்துப் பொண்ணு மாதிரின்னா பேசற? உன் மனசுல என்னவோ இருக்குன்னு நான் நெனச்சது சரி தான். அது என்னன்னு வெளிய சொல்லி மனசை ஆத்திக்கோ ராதா! உனக்கும் அது ஆறுதலா இருக்கும்"

"ஆமாம்மா! உன் மனசுல இருக்கற பாரத்தை வெளிய சொன்னாத்தான் அது குறையும். அதனால உன் ரத்தக் கொதிப்புக் கூடக் குறையும்னு டாக்டர் சொன்னாரும்மா! தாராளமாச் சொல்லு! நீ யாரு? உனக்கும் அப்பாவுக்கும் எப்படிக் கல்யாணம் நடந்தது? எல்லாம் விவரமாச் சொல்லு"

நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது ராதாவிடமிருந்து. அவள் கண்கள் கடந்த காலத்தைப் பார்ப்பது போல மிதந்தன.

"மாமி ! நீங்க நினைக்கறா மாதிரி நான் சாதாரண வீட்டுப் பொண்ணு கிடையாது. உங்களுக்கு ஆர் வி இண்டஸ்டிரீஸ் பத்தித் தெரியுமா? கேள்விப்படிருக்கீங்களா?"

"என்னடி இப்படிக் கேட்டுட்ட? நம்ம நாட்டுல அதைத் தெரியாதவா இருப்பாளோ? கிட்டத்தட்ட நூறு வருஷமா பல தொழிற்சாலைகள் நிறுவி தொழிலதிபர்களா இருக்கறவா அவா. என் தங்கை ஆத்துக்காரர் சென்னையில இருக்கற அவா ஆபீஸ்ல தானே வேலை பாத்தார்?"

"ஏம்மா ஆர் வி இண்டஸ்டிரீஸ்னா கார் , டூ வீலர்லாம் தயாரிக்கறாங்களே அவங்களா? அவங்க பெரிய கோடீஸ்வர்களாச்சே?"

"ஆமாம்! அதோட ஓனர் சதாசிவத்தோட ஒரே மக தான் நான்."

ராதா போட்ட போட்டில் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள் அகிலாவும் மாமியும். இருவரின் கண்களும் அவளையே பார்க்க தன்னுடைய கதையைச் சொல்லத் துவங்கினாள் ராதா.
 
Nirmala vandhachu ???
 
அட பாவமே இவ்ளோ பெரிய கோடீஸ்வரிக்கு ஏன் இந்த நிலைமை
Interesting update sis :love: :love: :love:
 
Top