Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்....அத்தியாயம் 8….

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அந்த அறையே மௌனமாக இருந்தது. அகிலா மட்டும் தேம்பித் தேம்பி அழும் சத்தம் கேட்டது.

"சீ ! அசடு ! ஏன் அழற? இதெல்லாம் நடந்து முடிஞ்சி பல வருஷம் ஆயிட்டது. இப்ப எதுக்கு அழற?"

"இல்லம்மா! நீ எனக்காக எத்தனை துன்பங்களைத் தாங்கியிருக்க? அதை நெனச்சா எனக்கு..." மீண்டும் கண்ணீர் பொங்க அழுதாள் மகள்.

"சரி ! ராதா! அப்புறம் என்ன ஆச்சு?"

"அன்னிக்குப் போனவரு தான். அப்புறம் நாங்க இருக்கோமா செத்தோமான்னு கூடப் பாக்க வரல்ல அவரு. எப்படியோ கஷ்டப்பட்டு இவளை வளத்து ஆளாக்கினேன். அப்ப உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருந்தது, இப்ப அடி வாங்கி அடிவாங்கி நஞ்சி போன இதயம் மக்கர் பண்ணுது" என்றாள்.

"ராதா! நான் கேக்கேறேனேன்னு கோச்சுக்கப்படாது. இதுக்கும் நீ அகிலா காதலை எதிர்க்கறதுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியலியே?"

"ஐயோ மாமி! இன்னும் புரியலியா? ஆனந்த் அகிலாவைக் காதலிக்கல்ல! அப்படி நடிக்கறான். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சித்திரவதை பண்ணுவான். எனக்கு நேர்ந்தது என் மகளுக்கும் நேரணுமா? அவளாவது நல்லா வாழட்டுமே!"

"என்ன ராதா இது? ஆனந்த் எவ்வளவு நல்ல பையன் தெரியுமா? அவனுக்கு எத்தனை பெரிய மனசு இருந்தா இந்த முதியோர் இல்லத்தை நடத்துவான்? அவனுக்கு பணம் காசு மேல ஆசையிருந்தா பெரிய பணக்காரப் பொண்ணாப் பாப்பானே தவிர அகிலாவை ஏன் பாக்கணும்?"

"மாமி! நீங்க அவனுக்குப் பரிஞ்சு பேசறதா இருந்தா இனி இங்க வர வேண்டாம். என் பொண்ணுக்கு யாரு புருஷனா வரணும்னு நான் பாத்து முடிவு பண்றேன். பெரியவங்க பாத்து செய்யற எதுவும் தப்பாப் போகாது. நான் மட்டும் எங்கப்பா பேச்சைக் கேட்டிருந்தா எனக்கு இந்த கதி வந்திருக்குமா?"

"அம்மா! நீ என் பேச்சை விடு! உன் விஷயத்துக்கு வா! இப்ப அப்பா வந்து நம்மைக் கூப்பிடுறாரு. நாம போகணுமா வேண்டாமா? நீ என்ன முடிவு பண்ணியிருக்க?"

"நான் இத்தனை சொல்லியும் உனக்குப் புரியலியா? அவனுக்கு உன்மேல பாசம் ஒண்ணும் இல்ல! எதையோ மனசுல வெச்சுக்கிட்டுத்தான் கூப்பிடுறான். ஒரு தடவை அவனை நம்பி நான் ஏமாந்தது போதாதா? மறுபடியும் போயி அவமானப்படணுமா?"

"நீ நினைக்கறது தப்பு ராதா! பல ஆண்டுகளுக்கு முன்னால நீ ஒரு தப்பு பண்ணினே! ஆனா இன்னி வரைக்கும் அதை நெனச்சு வருத்தப்பட்டுண்டு இருக்கியோன்னோ? அதே மாதிரி ஏன் அவரும் திருந்தியிருக்கப்படாதா? அவருக்கு ஒரு வாய்ப்பு நீ குடுத்துத்தான் பாரேன்!"

"அவன் கண்டிப்பா திருந்த மாட்டான் மாமி! இப்ப எனக்கு என்ன குறை? நீங்க இருக்கீங்க? அகிலா இருக்கா? அப்புறம் என்ன?நான் நிம்மதியா இருந்துட்டுப் போறேன்!"

"அம்மா! அகிலா உள்ள போயி கொஞ்சம் காப்பி கலந்துண்டு வா! நான் உங்கம்மா கிட்ட பேசிண்டு இருக்கேன்" என்றதும் அகிலா உள்ளே எழுந்து போனாள். அவள் போனதும் நாற்காலியை கட்டிலை நெருக்கிப் போட்டுக் கொண்டாள் மாமி.

"ராதா! நான் சொல்றேனேன்னு தப்பா நெனச்சிக்கப்படாது ! உன்னை என் சொந்த தங்கை மாதிரி நெனச்சுண்டுட்டேன். அதான் சொல்றேன்!" என்று பீடிகை போட்டாள்.

"என்ன விஷயம் மாமி? ஆனந்த் விஷயம்னா நான் கேக்கத் தயாரில்ல!"

"இல்லைடி! இது வேற! நான் கேக்கற கேள்விக்கு நீ பதில் சொல்றியா?"

"கேளுங்க!"

"இன்னிக்கில்லைன்னாலும் என்னிக்காவது நீ அகிலாவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சித்தானே ஆகணும்?"

"ஆமாம் மாமி! அவ பி எட் முடிச்ச ஒடனே மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடுவேன்"

"ரொம்ப சரி! மாப்பிள்ளை எப்படிப் பாக்கப் போற? பேப்பர்ல விளம்பரம் குடுப்பியா? இல்லை டிவியில வருதே கல்யாண மாலை அதுல அகிலாவை காட்சிப் பொருள் மாதிரி நிக்க வைக்கப் பொறியா?"

"இல்லை இல்லை! நான் நல்ல தரகர் ஒருத்தர் கிட்ட சொல்லி நல்ல மாப்பிள்ளையா பாக்கச் சொல்லுவேன்."

"ஆங்க்! இப்பத்தான் நீ பாயிண்டுக்கு வந்திருக்க! தரகர் மூலமாப் போனா கண்டிப்பா நல்ல குடும்பமா கெடைக்கும். அதுல சந்தேகம் இல்ல! ஆனா மாப்பிள்ளையாத்துக்காரா பொண்ணோட அப்பா யாரு? எங்க இருக்கார்?னு கேப்பாளே அப்ப என்ன பதில் சொல்லுவ? எல்லார்கிட்டயும் நீ ஏமாந்த கதையைச் சொல்லுவியா? அவா அதை நம்பணுமே? "

ராதாவால் பதில் பேச முடியவில்லை. மாமி தொடர்ந்தாள்.

"உனக்கு புருஷன் வேண்டாம் ஆனா அகிலாவுக்கு அப்பா வேணுமே? நீ சின்ன வயசுல எல்லா சுகங்களையும் அனுபவிச்சுட்டு காதலுக்காக அதையெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு வந்தே! ஆனா பாவம் அகிலா பொறந்ததுலருந்து வறுமையைத் தவிர என்ன பாத்திருக்கா? இப்ப அவ அப்பா நிறைய பணத்தோட இருக்கும் போது அவரோட பொண்ணு எதுக்குக் கஷ்டப்படணும்?"

யோசிக்க ஆரம்பித்தாள் அம்மா.

"நன்னா யோசிச்சிப் பாரு! இன்னிக்கு உங்கிட்ட அப்படி பிரமாதமா பணம் ஒண்ணும் இல்லை! அப்படி இருக்கும் போது அந்த மனுஷர் எதுக்கு உங்களைத் தேடி வரணும்? சொல்லு! அவர் நெனச்சா இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்க முடியாதா? "

"மாமி! நான் வேணும்னா ஒண்ணு செய்யவா? பேசாம அகிலாவை மட்டும் அவ அப்பாவோட அனுப்பிடறேன். நான் தனியா இருந்துக்கறேன் . எப்படி ஐடியா?"

"ரொம்ப நன்னாயிருக்குடிம்மா ரொம்ப நன்னாயிருக்கு! இதுக்கு அகிலா ஒத்துப்பாளா? அவளுக்கு நீ தான் உலகமே! உன்னை விட்டுட்டுப் போக அவ எப்படி சம்மதிப்பா? ஏன் இப்படி சுயநலமா இருக்கே ராதா?"

"யாரு நான் ..நானா சுயநலமா இருக்கேன்? அகிலாவுக்காகத்தான் மாமி நான் என் உசிரையே பிடிச்சி வெச்சிருக்கேன். அவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன்"

"பெரிய நூத்துக்கிழவி மாதிரி பேசாத! அப்படி என்ன வயசாயிடுத்து நோக்கு? இனி தான் நீ எல்லாத்தையும் பாக்கணும் , பேரன் பேத்திய எடுத்துக் கொஞ்சணும்! அதுக்குள்ள என்ன அவசரம்?"

"ஒரு பேச்சுக்கு சொன்னேன் மாமி அவ்ளோ தான்"

"இதப்பாரு ராதா! வாழ்க்கையில தப்புப் பண்ணாதவா யாரு? எல்லாரும் ஏதோ ஒரு தப்பைப் பண்ணிட்டு அதைத் திருத்த முடியாம தவிச்சிண்டு தான் இருக்கோம். பாவம் உங்க ஆத்துக்காரர் அவர் திருந்தி வந்திருக்கார். இப்ப நீ அவரை ஏத்துண்டு அகிலாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சிக் குடு"

"அவர் நல்லவர் இல்லை மாமி! இதே எங்கப்பா பாத்து கட்டி வெச்ச மாப்பிள்ளையா இருந்தா என்னை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிருப்பாரா? சொல்லுங்க மாமி"

சிரித்துக் கொண்டாள் மாமி.

"நல்ல கதை! உனக்கு உலகமே தெரியல்ல! நீ என்ன படிச்சியோ வேலை பாத்தியோ போ!"

"என்ன மாமி சொல்றீங்க?"

"என்னைப் பாரு! என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"நீங்க சாந்தா மாமி! உங்க வீட்டுக்காரர் இறந்து போயிட்டார். உங்களுக்கு பிள்ளைங்க இல்லாததால நீங்க இங்க வந்து சேர்ந்துட்டீங்க! அப்படித்தானே?"

"அது தான் உலகத்துக்கு நான் என்னைப் பத்தி சொல்லியிருக்கறது. உன் கதை மாதிரி தான் என் கதையும். என்ன ஒரு வித்தியாசம் நீ காதலிச்சே நான் எங்கப்பா பாத்து வெச்ச மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிண்டேன்."

"அப்புறம் என்ன?"

"அப்புறம் என்னவா? அதுக்கப்புறம் தானே எல்லாமே இருக்கு? எனக்கு ரெண்டு குழந்தை ! தெரியுமா உனக்கு? ஒரு பொண்ணு ஒரு பையன். "

"ரெண்டு பேரு இருந்துமா நீங்க இப்படி..?"

"ஹூம்! என்ன சொல்ல விதி! முதல்ல எனக்குப் மகன் பிறந்தான். ஆசையா சங்கர்னு பேரு வெச்சி வளத்தோம். அப்புறமா மூணு வருஷம் கழிச்சி பொண் குழந்தை ஒண்ணு பொறந்தது. அப்பத்தான் விதி என்னைப் பாத்து சிரிக்க ஆரம்பிச்சது"

"நீங்க என்ன சொல்றீங்க?"

"எனக்குப் பொறந்த பொண் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லைன்னு ஆறாம் மாசமே தெரிஞ்சிடித்து! அதுக்கு எதுவுமே தெரியாது. ஜடம் மாதிரி தான் இருக்கும்னு டாக்டர்கள்ளாம் சொல்லிட்டா! வைத்தியம்ம் பாத்தாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னுட்டா"

"அடப்பாவமே?"

"பாவம் தான்! ஆனா என்ன பண்றது பெத்தாச்சே ! என் குழந்தையாச்சே விட்டுட முடியுமா? ஆத்துக்குக் கூட்டிண்டு வந்து அதைக் கண்ணாப் பாத்துண்டேன். ஆனா அவர் அதான் எங்காத்துக்காரர் பயந்துட்டார். அவருக்கு சம்பளம் கம்மிதான். எங்கே தன்னோட சம்பளம் எல்லாம் அந்தக்குழந்தையைப் பாத்துக்கறதுக்கே போயிடுமோன்னு அவருக்குக் கவலை வந்துடுத்து! அந்தக் கொழந்தையை அனாதை ஆசிரமத்துல விடச் சொன்னார்" சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மாமி.

"சே! இப்படிக் கூடவா கல்நெஞ்சா இருப்பாங்க?"

"இருந்தாரே? என்னை ரொம்பக் கட்டாயப் படுத்தினார். நான் என்ன ஆனாலும் சரி அவளை அனாதை ஆசிரமத்துல விட முடியாதுன்னு சொல்லிட்டேன். "

"அது தான் சரி"

"என்ன சரி? நான் என் முடிவைச் சொன்னப்புறம் ரெண்டு நாள் கூட ஆத்துல இல்லை! சொல்லாமக் கொள்ளாம எங்கியோ போயிட்டார். ஆத்துக்கே வரல்ல! நான் விவரம் எதுவும் தெரியாம அவரோட ஆபீஸ்ல போயி விசாரிச்சேன். அவர் வடக்க எங்கியோ மாத்தல் வாங்கிண்டு போயிட்டதாச் சொன்னா! இருபத்தி ஏழே வயசுல ரெண்டு கொழந்தைகளை வெச்சுண்டு அனாதையா நின்னேன்."

"உங்க அப்பா அம்மா?"

"அம்மா போயிட்டா. அப்பா அண்ணா கூட இருந்தார். எங்கே நான் பாரமா வந்துடுவேனோன்னு எங்க அண்ணி என்னை கிட்ட சேர்க்கவே இல்ல! வேற யாரும் இல்ல! என்ன செய்வேன் நான்? அம்பாள் மேல பாரத்தைப் போட்டுட்டு சமையல் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். இதுக்கு நடுவுல அந்தப் பொண் குழந்தை பத்தாவது வயசுல வலிப்பு வந்து போயிடுத்து! ஆனா நான் மனசு தளராம கேண்டீன் ஆரம்பிச்சேன். அதுல வந்த வருமானத்துல தான் என் மகன் சங்கரை சி ஏ வரைக்கும் படிக்க வெச்சேன்! "

"அடேயப்பா ! உங்க மகன் சி ஏ படிச்சிருக்காரா?"

"ஆமா! ஆமா! படிப்புக்கு ஒண்ணு கொறச்சல் இல்ல! ஆனா பாசத்துக்குத்தான் கொறச்சலாப் போச்சு!"

"ஏன் மாமி அப்படி சொல்றீங்க?"

"அவனுக்கு நல்ல இடத்துல பொண்ணு அமஞ்சது. இவனோட படிப்பைப் பாத்துட்டு ஒரு பெரிய பணக்காரா பொண்ணு குடுத்தா. நானும் சந்தோஷமாக் கல்யாணம் பண்ணி வெச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது வந்தவ எனக்கு மருமக இல்ல! எனக்கு எமன் அப்டீன்னு."

"அவ ரொம்பக் கொடுமைப் படுத்தினாளா?"

"கொஞ்சமா நஞ்சமா? என்னைக் கண்டாலே அவளுக்கு ஆகாது. நான் சமையல்காரின்னு அவளுக்கு அலட்சியம். என்னை மதிச்சு பேசவே மாட்டா! ஒரு நாள் அவளோட உறவு காரா யாரோ வந்தா! நான் அவங்க வீட்டுக்கு சமையல் பண்ண போயிருக்கேன். அதை அவா நினைவு வெச்சிண்டு என்னை விசாரிச்சா. அவ்ள தான். என்னமோ மானமே போயிட்டா மாதிரி கத்தினா என் மருமக"

"எதுக்கு?"

"அவ புருஷன் பெரிய வேலையில இருக்கானாம். இவளும் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவளாம். அவா உறவுக்காரா முன்னால நான் வேணும்னே வந்து நின்னு அவளை அவமானப்படுத்திட்டேனாம். இன்னும் என்ன என்னவோ சொன்னா"

"நீங்க என்ன சொன்னீங்க?'

"நான் என்னம்மா சொல்ல? ஏழை சொல் அம்பலமேறுமா? கொஞ்ச நாள் பொறுமிண்டு இருந்தவ என்ன சொன்னாளோ ஏது சொன்னாளோ அவன் அதான் என் மகன் சங்கர் என்னை இந்த முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுடறேன் , மாசாமாசம் பணம் கட்டிடறேன். நீ வசதியா இருக்கலாம்னு சொல்லி இங்க கொண்டு சேர்த்து விட்டுட்டுப் போயிட்டான். இதெல்லாம் வெளிய தெரிஞ்சா அவமானம்னு எனக்கு ஆத்துக்காரர் செத்துப் போயிட்டார் , குழந்தை இல்லைன்னு பொய் சொல்லி வெச்சிருக்கேன்."

நீண்ட மௌனம் நிலவியது.

"எனக்கு நடந்தது பெரியவா பாத்து பண்ணி வெச்ச கல்யாணம் தான். நான் என்ன வாழ்ந்துட்டேன் பெரிசா? நான் பெத்த மகனே என்னைக் கொண்டு இங்க சேர்த்து விட்டுட்டுப் போறான். இது தான் விதிங்கறது"

"பாவம் மாமி நீங்க! இத்தனை சோகத்தை மனசுக்குள்ள போட்டு பூட்டி வெச்சுட்டு சிரிச்சு சிரிச்சு பேசறீங்களே? உங்க மனசு யாருக்கும் வராது"

"நீ என்னைப் பாராட்டணும்ங்கறதுக்காக நான் இதைச் சொல்லல்ல! வாழ்க்கையில இன்பமும் துன்பமும் சகஜம். இப்படி இருந்திருந்தா துன்பமே வந்திருக்காதேன்னு சொல்ல முடியாது. எல்லாமே பகவான் கையில இருக்கு. நீ உன் துக்கம் தான் பெரிசுன்னு நெனச்சிண்டு இருக்க! கொஞ்சம் மத்தவாளைப் பாரு. இந்த இல்லத்துல இருக்கறவா ஒவ்வொருத்தர் கிட்டயும் சோகக்கதைகள் பல இருக்கு. நீ உன்னோட கடந்த காலத்தையே நெனச்சிண்டு நிகழ் காலத்தைக் கோட்டை விட்டுடாதே" என்றாள் மாமி.

அம்மா யோசித்தாள்.

"மாமி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை! தவறு செய்யாதவர்கள் யார்? ஆனால் என்னால் நாகராஜனை மன்னிக்கவே முடியாது. மன்னிக்காவிட்டால் பரவாயில்லை! அகிலாவுக்காக நான் அவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மாமி சொல்வது போல நாளை அகிலாவின் தந்தையைப் பற்றிய பேச்சு வரும் போது அவள் வெட்கித் தலை குனியக் கூடாது. தலை நிமிர்ந்து நின்று இவர் தான் என் அப்பா என்று சொல்ல வேண்டும். அதற்கு நான் நாகராஜனை ஏற்றுக் கொள்ள வேண்டும்."

ஒரு முடிவுக்கு வந்தாள் ராதா.

"மாமி! நீங்க சொன்னதை நான் யோசிச்சிப் பாத்தேன். நீங்க சொல்றது தான் சரி! அகிலாவுக்குகாக நான் அவரை ஏத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அகிலா நீ போயி உங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வாம்மா" என்றாள்.

மகிழ்ச்சியில் அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அவள்.
 
Nirmala vandhachu ???
 
இன்னும் என்ன திட்டம் வச்சு
இருக்கானோ அந்த அப்பன்
இவங்க அவன் கிட்ட
போக போறாங்களா
 
எதையுமே உடனே முடிவெடுக்காம கொஞ்சம் யோசிச்சு செய்யலாம் இந்த ராதா
அவசரமா முடிவெடுத்து அப்புறம் நிதானமா அழுவுறதே பொம்பளைங்க வழக்கமாப் போச்சு.
 
இன்னும் என்ன திட்டம் வச்சு
இருக்கானோ அந்த அப்பன்
இவங்க அவன் கிட்ட
போக போறாங்களா
பட்டும் புத்தி வரலையே இந்த ராதாவுக்கு. என்ன மகளுக்கு தகப்பன் பாசமும் கெடைக்கட்டுமேன்னு நெனச்சா போல இருக்கு.
 
Top