Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்....அத்தியாயம் 9.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அகிலாவும் அவள் அன்னை ராதாவும் காலி செய்து விட்டு நாகராஜனுடன் போகிறார்கள் என்ற செய்தி ஆனந்தை எட்டியது. அவன் மனதில் பல விதமான எண்ண அலைகள். நம்பிக்கை கொஞ்சமாக தலை தூக்கியது.

"ஒருவேளை அகிலாவின் அப்பாவுக்கு என்னைப் பிடித்து விட்டால் அவள் எனக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா? என்று அவன் மனம் கணக்குப் போட்டது. மேலும் விவரங்கள் அறிய அவன் மனம் பரபரத்தது. எப்படியாவது அவளை ஒரு முறை சந்தித்துப் பேசி விட மாட்டோமா என தவித்தான். மரியாதை நிமித்தமாக ராதாவை வீட்டில் சென்று பார்த்தான்.

அவனைப் பார்த்ததும் ராதாவின் முகம் சுருங்கியது.

"என்னப்பா? எங்கே வந்த? அகிலா உன்னைப் பாக்க மாட்டா" என்றாள் முகத்தில் அடித்தது மாதிரி.

"இல்லை ஆண்ட்டி! நீங்க வீட்டைக் காலி பண்றீங்கன்னு சாந்தா மாமி சொன்னாங்க! ஆனா நீங்க எங்கிட்ட எதுவுமே சொல்லல்ல! அதான் என்ன விவரம்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்"

"ஆமாம்ப்பா! நீ எங்களுக்கு சரியான நேரத்துல இந்த வீட்டைக் கொடுத்த? இல்லைன்னா எங்க கதி என்ன ஆயிருக்குமோ? நீ சாதாரண விருந்தாளியா என்னைப் பாக்க எப்ப வேணா வரலாம். ஆனா அகிலா பேரைச் சொல்லிக்கிட்டு நீ வரதை நான் அனுமதிக்க மாட்டேன். அவளும் என்னை மீறி ஒண்ணும் செய்ய மாட்டா"

"நான் அந்த மாதிரி ஆள் கிடையாதுங்க! இப்பக் கூட உங்களுக்கு ஏதாவது உதவி தேவையான்னு பாத்துட்டுப் போகலாம்னு தான் வந்தேன். நீங்க எப்ப காலிப் பண்ணப்ப் போறீங்க?"

"நாளைக்கு! அவங்க அப்பா வந்து அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காரு. "

"அப்படியா ரொம்ப சந்தோஷம்! நீங்க காலி செஞ்சதும் வீட்டைப் பூட்டி சாவியை சாந்தா மாமி கிட்டக் கொடுத்துடுங்க நான் வாங்கிக்கறேன். என்ன உதவியா இருந்தாலும் செய்யறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டான். மனம் படபட வென அடித்துக் கொண்டது.

"நான் அப்படி என்ன தப்பு செய்து விட்டேன்? எதற்கு இப்படி நாயைத் துரத்துவது போல துரத்த வேண்டும்? இத்தனை நாள் பழகிய பழக்கத்திற்காகவாவது அகிலாவின் அப்பாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கலாமே? நன்றி கெட்ட ஜென்மங்கள். நான் என்ன அகிலாவைத் தூக்கிக் கொண்டா போகப் போகிறேன்? அகிலாவும் தான் என்ன? நான் காலி செய்யப் போகிறேன். ஏதாவது பேச வேண்டுமானால் இது தான் என் நம்பர் என்று சொல்லிக் கொடுத்தாளா? நீ தான் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறாய். அவளுக்கு உன் நினைவே இல்லை"

ஏதேதோ யோசித்தபடி மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்.

"என்னப்பா ஆனந்து! உன்னோட அகிலா காலி பண்றா போல இருக்கே?"

குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். சாந்தா மாமி கையில் காய்கறிப்பையை சுமந்தபடி நின்றிருந்தாள்.

"மாமி!!"

"என்ன தம்பி பாக்கற? எனக்கு எல்லாம் தெரியும். "

"என்ன தெரியும்?"

"சும்மா எங்கிட்டயே மறைக்காதப்பா! நீயும் அகிலாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறது எனக்குத் தெரியும்னேன்." என்றாள் அழுத்தமாக.

முகம் கன்றிப் போனவனாக பேசாமல் நின்றிருந்தான் ஆனந்த்.

"பல வருஷம் கழிச்சி ராதாவோட ஆத்துக்காரர் வந்திருக்கார்ப்பா! அவா அவர் கூட இருக்கறது தான் நியாயம். நீ என்ன நினைக்கற?"

"நான் என்ன மாமி நினைக்கறது? இத்தனை வருஷமா இல்லாத அப்பா இப்ப எங்கிருந்து திடீர்னு மொளச்சாரு? நீங்க தான் சொல்றீங்க அகிலா என்னை விரும்பறான்னு ஆனா அவ ஒரு வார்த்தை இதைப் பத்தி எங்கிட்ட சொல்லவே இல்லியே? இப்பக் கூட நான் அவ வீட்டுக்குப் போயிருந்தேன். ராதாம்மா என்னை அடிச்சித் தொரத்தாத குறையா விரட்டி விட்டுட்டாங்க! ஆனா அவ ஒரு வார்த்தை ஏன் இப்படி செய்யறேன்னு கேக்கவே இல்லியே? அவ்வளவு ஏன் வெளியவே வரல்ல?"

"இப்ப அவ வீட்டுல இல்லப்பா! ஸ்கூலுக்குப் போயிருக்கா! வேலையை ராஜினாமாப் பண்ணத்தான் போயிருக்கா"

"அவளுக்கென்ன பைத்தியமா? நல்ல வேலையை எதுக்கு விடணும்?"

"நோக்கு விஷயமே தெரியாதா? அவ அப்பா பெரிய பணக்காரராத் திரும்பி வந்துருக்காருப்பா! ராதாவுக்கும் அகிலாவுக்கும் நல்ல காலம் பொறந்தாச்சின்னு நெனச்சிக்கோ"

சந்தோஷப்பட முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது அவனை.

"ஓ! அதுனால தான் என்னைக் கண்ணு தெரியலையா அவளுக்கு! இனி பெரிய பணக்கார வீட்டுப் பையனாப் பாப்பாங்க! இந்த ஏழை ஆனந்தோட நினைப்பு யாருக்கு இருக்கப் போவுது?"

"அப்படிச் சொல்லாதப்பா! அகிலா உன்னை மறக்கவே இல்ல! பாவம்! அவ இரு தலைக் கொள்ளி எறும்பு மாதிரி தவிக்கறா! ஒரு பக்கம் நீ ! இன்னொரு பக்கம் அவ அம்மா! என்ன செய்வா அவ?"

"ஏன் மாமி எனக்கு என்ன குறைச்சல்? நான் அனாதை தான் ஒத்துக்கறேன். பெரிய பணக்காரனும் இல்ல! ஆனா எங்கிட்ட உழைப்பு இருக்கே மாமி! படிச்சிருக்கேன் , நல்ல வேலையில இருக்கேன். இதை விட என்ன வேணும்? "

"தம்பி ஆனந்து! உன்னை யாருப்பா குறை சொல்ல முடியும்? என்னைப் போல எத்தனையோ பேருக்கு அடைக்கலம் குடுத்தவனாச்சே நீ? உன்னை வேண்டாம்னு சொல்லுவாளா?"

"சொல்லிட்டாங்களே! என்னை தூக்கித் தூர எறிஞ்சிட்டு அகிலா போறாளே மாமி ! என்னால பார்த்துக்கிட்டு தானே இருக்க முடியுது. அவளைத் தடுக்க முடியலையே?"

"சொல்ல வேண்டாம்னு பாத்தேன்! சொல்லித்தான் ஆகணும் போல இருக்கு! ஆனந்து ! ராதா உன்னை வேண்டாம்னு சொன்னது உன்னைப் பிடிக்காம இல்லை! இன்னும் சொல்லப் போனா அவ உன் மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கா! ஆனா அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவளை தப்பா முடிவெடுக்க வைக்குது"

"எனக்குப் புரியல்ல!"

"சொல்றேன்" என்றவள் ராதாவின் கதை முழுவதையும் சொன்னாள்.

"அதுனாலத்தான் அவளுக்குக் காதல்னு யாரு சொன்னாலும் சந்தேகப்படறா! தன்னோட வாழ்க்கை மாதிரி மக வாழ்க்கையும் நாசமாகிடக் கூடாதுன்னு நினைக்கிறா. இது தப்பா? சொல்லுப்பா!"

"இல்லை மாமி! நான் தான் அவங்களைத் தப்பா நெனச்சிட்டேன்! எப்படியோ அகிலா நல்லா இருந்தாப் போதும்"

"உனக்கு ரொம்பப் பெரிய மனசுப்பா! நான் பல விஷயங்களையும் யோசிச்சி தான் நாகராஜனோட அவாளைப் போகச் சொன்னேன். அந்த மனுஷர் இவாளை நன்னா கவனிச்சிண்டா ராதாவுக்கு நாளா வட்டத்துல காதல் மேல உள்ள வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக் குறையலாம் இல்ல? அப்ப நேரம் பாத்து நாம போயி பொண்ணு கேட்டா முடியாதுன்னா சொல்லிடுவா?"

"இல்லை மாமி! நீங்க அந்தப் பேச்சை விட்டுடுங்க! இனிமே அகிலா எனக்கு இல்லை! போங்க மாமி ! உங்க தங்கச்சி காய்கறிக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க! என்னால உங்க சாப்பாடு லேட்டாக வேண்டாம்." என்றவன் நடக்க ஆரம்பித்தான்.

மாமி காய்கறிப்பையை பத்மாவிடம் கொடுத்து விட்டு கருவேப்பிலை பறிக்க வரும் போது அகிலா பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

"இந்தா அகிலா கொஞ்சம் நில்லு!" என்றாள்.

"என்ன மாமி?"

"நீ உன் மனசுல என்ன நினச்சிண்டு இருக்க? பணம் வந்ததும் பழைய காதலை மறந்துட்டியா? ஏன் ஆனந்தைப் பாக்கல்ல?"

கண்களில் நீர் முட்ட மாமியைப் பார்த்தாள் அவள்.

"என்ன மாமி எல்லாம் கூட இருந்து பாத்தவங்க நீங்க! என்னை இப்படி ஒரு வார்த்தை கேக்கலாமா? நான் அவரைப் பாத்தா ஒடஞ்சி போயிடுவேன் மாமி! எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு அவர் பின்னால போயிடுவேன். மனசைக் கஷ்டப்பட்டு அடக்கி வெச்சிருக்கேன் தெரியுமா?"

"சரி சரி! அழாதே! நான் தெரியாமக் கேட்டுட்டேன்! இப்ப கொஞ்சம் முன்னாடி அவனைப் பாத்தேன். பாவம் ரொம்ப வருத்தப்பட்டான். நீ அவனை வந்து பாக்கலைன்னு அவனுக்கு ரொம்ப வருத்தம். உங்கப்பாவோட போயாச்சுன்னா இங்க வரவா போற? ஒரு தடவை அவனைப் பாத்து பேசிடும்மா! உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என்ன?" என்றாள்.

தலையாட்டி விட்டு நடந்தாள்.

"நீ இங்கயே நில்லு! நான் அவனை வரச் சொல்றேன்!" என்ற மாமி கருவேப்பிலையுடன் போய் விட்டாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் ஆனந்தோடு திரும்பி வந்தாள். அகிலாவைப் பார்த்ததும் அவன் கால்கள் நின்று விட்டன.

":சின்னஞ்சிறிசுகள் உங்களுக்குப் பேசிக்கறதுக்கு எவ்வளவோ இருக்கும். நான் எதுக்கு எடஞ்சலா?" என்ற மாமி உள்ளே போய் விட்டாள். ஆனந்த் கிட்ட வந்தான்.

"ரொம்ப சந்தோஷம் அகிலா! உங்கப்பா வந்துட்டாராமே? இனி உனக்கு நல்ல காலம் தான்"

"ஆனந்த்! நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க! என் நிலைமை அப்படி! எங்கம்மாவுக்காகத்தான் நான் உங்களை விட்டுப் போறதுங்கற முடிவுக்கு வந்தேன். நான் அவங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க ஆனந்த் பிளீஸ்"

"எனக்கு எல்லாம் தெரியும்! மாமி சொன்னாங்க! பாவம் உங்கம்மா ! அவங்களுக்கு வாழ்க்கையில இருக்கற ஒரே பிடிப்பு நீ தான். நீ அவங்களை ஏமாத்திட்டீன்னா அவங்களால தாங்கவே முடியாது. ஏற்கனவே பலகீனமானவங்க அவங்க! பரவாயில்லை! எல்லாக் காதலும் நிறைவேறவா செய்யுது? "

"ஆனந்த் ! உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிற அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமப் போயிரிச்சே! நீங்க நல்லா இருப்பீங்க!" என்றாள் அகிலா நெகிழ்ந்து.

"நான் அதுக்காகக் கூப்பிடல்ல! நீ வேலையை விட்டுட்டியாமே?"

"உங்களுக்கு யாரு சொன்னா? எங்கப்பா தான் விடச் சொன்னாரு. அவருக்கு தொழில் லாபகரமாப் போகுதாம். இனியும் நீ வேலை செஞ்சி கஷ்டப்பட வேண்டாம் அப்டீன்னு சொன்னாரு"

"இருக்கட்டும்! நான் வேண்டாம்னு சொல்லல்ல! அதுக்காக நீ படிச்ச படிப்பை வீணாக்கிக்கப் போறியா? பி எட் படிப்பையும் விட்டுடப் போறியா?"

"இல்லை! அதை நான் தொடரத்தான் போறேன்! முதல்ல எங்கம்மா உடம்பு தேறி வரணும். அப்புறம் தான் மத்ததெல்லாம்."

"எங்க போறீங்க?"

"அடையார்ல வீடு! ஆனா முதல்ல அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊட்டி போறாரு. அங்க பதினஞ்சு நாள் தங்கறோம். அப்புறம் தான் திரும்புவோம். வர திங்கக் கிழமை ஊட்டிக்குக் கிளம்பணும்னு சொன்னாரு"

"ரொம்ப நல்லது! அகிலா என்னடா இவன் இப்படிச் சொல்றானேன்னு நினைக்காதே! உங்கப்பாவை ஒரேடியா நம்ப வேண்டாம். உங்கம்மாவை எப்பவும் உன் கண் பார்வையிலேயே வெச்சிக்க! ஏதாவது உங்கப்பா அதிர்ச்சி தரா மாதிரி சொல்லி உங்கம்மாவுக்கு திரும்ப ரத்தக் கொதிப்பு அதிகமாயிடிச்சின்னா அப்புறம் அவங்களைக் காப்பாத்தவே முடியாதுன்னு டாக்டர் சொன்னது நினைவிருக்கு இல்ல?"

"நல்லா நினைவிருக்கு! நான் ஜாக்கிரதையாப் பாத்துக்கறேன்! "

"சரி! நீ அவசரப்பட்டு வேலையை விட்டிருக்க வேண்டாம்னு தோணுது"

"இல்லை ஆனந்த் நான் வேலையை விடல்ல! எனக்கும் அவசரப்பட வேண்டாம்னு தோணிச்சி! அதனால ஆறு மாசம் சம்பளமில்லாத விடுப்பு தான் எடுத்திருக்கேன். எதுவா இருந்தாலும் அதுக்கப்புறம் முடிவு பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்"

"நல்ல முடிவு தான் அகிலா! எங்க போனாலும் உனக்கு ஒரு நண்பன் இருக்கான்னு நெனச்சிக்கோ! என்ன உதவியா இருந்தாலும் தயங்காமக் கேளு" என்றவன் அவளுக்கு விடை கொடுத்தான்.

அகிலாவின் அப்பா வந்து விட்டார். மிகவும் படடோபமான மனிதர். அனைவரிடமும் கலகலப்பாகப் பேசினார். சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றியாயிற்று. சாவியை வாங்கும் போது கண் கலங்கி விட்டாள் சாந்தா மாமி.

"எங்களை மறந்துடாதே ராதா! அப்பப்ப வந்து பாத்துக்கோ! அடிக்கடி ஃபோன் பண்ணு" என்று விடை கொடுத்தாள்.

அகிலாவின் கண்களும் ஆனந்தின் கண்களும் சந்தித்து மீண்டன. நிறையப் பேச வேண்டும் எனத் தோன்றியது ஆனால் என்ன பேச என்று புரியவில்லை. கனத்த மனத்திலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

கார் கிளம்பியது. தேக்கி வைத்திருந்த கண்ணீர் கொட்டி விடுவேன் என பயமுறுத்தியது. உதட்டைக் கடித்து அடக்கியபடி வெறுமே தலையசைத்து விட்டுக் கிளம்பினாள். ராதா ஒன்றுமே பேசவில்லை.

கார் வெளி கேட்டைக் கடக்கையில் தன் உயிர் தன்னை விட்டுப் போவதைப் போல மனம் உணர வேதனையோடு நின்று கொண்டிருந்தான் ஆனந்த்.
 
Nirmala vandhachu ???
 
Top