Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரிசல் #காட்டு #காவியம்-Part- 3 (இராணுவம்,தருவை #மைதானம்)

Advertisement

Puthumairaj A

Member
Member
இராணுவம்

விழா நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது செல்லம்மாளுக்கு .

கல்வியின் பயன் என்னவென்பதை க் கண்டு அதிசயித்தாள் . கூடவே இராமையாவின் அருகாமையும் ,
அவன் நேர்மையும் மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு .

விருந்தினர்களுக்காகச் செய்த உணவுகள் செல்லம்மாவுக்கும் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது .

செல்லம்மா , " அக்கா இன்றைய விழாவிற்கு உன்னை அழைத்துப்போகாதது எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது அக்கா .திருநெல்வேலி போகும் பசுமையான பாதை , மேம்பாலம் , அரசுப் பொருட்காட்சிச் திடல் , திரையரங்கம் இவை யாவும் நான் கண்டு ரசித்த இடங்கள் அக்கா . நீயும் வந்திருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்கும் " என்றாள் .

" என்ன செய்வது தாயி . மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும்போது நாம் ஒன்றும் சொல்ல முடியாதே " என்றாள் வள்ளி ஏக்கத்தோடு .

" இன்னொரு முறை வாய்ப்புக் கிடைக்கும்போது நான் உன்னை கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன் அக்கா " என்றாள் செல்லம்மா .

" உனக்கொன்று தெரியுமா தாயி.
இன்னும் ஒருவாரத்தில் நமது வீட்டில் மின்சார விளக்கு எரியும் . இன்று வந்து நம்ம ஊர்ல கணக்கு கேட்டுட்டு போனாங்க யார் யார் வீட்டுக்கெல்லாம் மின்சாரம் வேணுமின்னு . அம்பது ரூபா ஆகுமாம் " என்றாள் வள்ளி .

" அக்கா , வானொலிப் பெட்டியும் நல்லா இருக்கு அக்கா . இன்று பார்த்த 'கல்யாணப்பரிசு ' படத்தில் எல்லாம் நல்ல பாட்டாக இருந்தது . நம்ம வீட்டிலும் வானொலிப்பெட்டி இருந்தா நாம தினசரி பாட்டு கேட்கலாமே . இரண்டாவது வருடத்துக்கு படிக்கறதுக்கு எனக்கு துட்டுக் கட்டவேண்டியது இல்லை . மாமா கிட்டச்சொல்லி நாமளும் வானொலிப் பெட்டி வாங்குவோம் அக்கா " என்றாள் செல்லம்மா .

" கண்டிப்பா வாங்குவோம் தாயி .
ஆச்சி நாளைக்கு பருத்தி வியாபாரியிடம் பருத்தி போட்டுவிட்டு கல்யாணச் சேலை எடுக்கணும் என்று சொல்லி இருக்கா. உனக்கும் எனக்கும் ஒன்றுபோல சேலை எடுப்போமா ? "
என்றாள் வள்ளி .

" வேண்டாம் அக்கா . பட்டுச் சேலை விலை அதிகமாக இருக்கும் உனக்கு மட்டும் எடுக்கட்டும் . மிச்சம் மீதி காசு இருந்தா ஒரு வானொலிப் பெட்டி மட்டும் வாங்குவோம் " என்றாள் செல்லம்மா.

வள்ளி பேசிக்கொண்டே இருக்க செல்லம்மா தூங்கிப் போனாள் .

மறுநாள் காலையில் பதினோரு மணிக்கு தபால்காரர் ஓரிரு வீடுகளுக்குத் ' தினமலர் ' செய்தித்தாளையும் கொண்டு வந்து கொடுத்தார் . செல்லம்மா காசு எதுவும் கட்டாமலே செல்லம்மாள் புகைப்படத்தை பார்த்த தபால்காரர் தன்னுடைய சார்பாக செய்தித்தாளை கொடுத்துவிட்டுச் சென்றார் செல்லம்மாளிடம் .

" அண்ணா காசு " என்றாள் செல்லம்மா .

" ஊருக்கே பெருமை தேடித் தந்திருக்க .
இதற்கெல்லாம் காசு வேண்டாம் அம்மா " என்றார் தபால்காரர் .

இராமையா வீட்டிற்கு அவசரமாய் வந்தான் சுப்பிரமணி . " அத்தான் , நாளைக்கு காலைல ஏழு மணிக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில்
இராணுவத்துக்கு ஆள் எடுக்காங்களாம் . ஏற்கனவே நீங்க போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே . நம்ம ஊர்ல இருந்து பத்து பையங்க போறாங்க . நீங்க போறதா இருந்தா நானும் வாரேன் "
என்றான் ‌.

" மாப்பிள்ள என்னோட இலட்சியமே இராணுவத்துக்கு போறதுதான் . நேத்து திருநெல்வேலிக்கு போயிட்டு வந்ததனால சட்டை அழுக்காக் கிடக்கு . நாளைக்கு அதைத்தான் போடணும் . துவைச்சு காயப்போடுதேன் இப்பவே "
என்று தடபுடலாக வேலையில் இறங்கினான் இராமையா .

முத்தம்மா பாவம் போல , " ஐயா
வீட்டில நீயும் நானும் மட்டும்தானே இருக்கோம் . நீயும் இராணுவத்துக்கு போய் விட்டால் அம்மா ஒத்தையில இருப்பேனே " என்றாள் .

" வாரம் தவறாமல் உனக்கு கடுதாசி போடுவேன்மா ‌ . மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பேன் . இந்த வானொலிப் பெட்டியை எப்படி பாட வைப்பது என்று உனக்குச் சொல்லித் தந்து விட்டுப் போகிறேன் . உனக்கும் வயசாகுது இனிமேல் நீ காட்டு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் " என்றான் இராமையா .

" ஐயா ,. அங்கே பாகிஸ்தான் , சீனாவோடு சண்டை நடக்கும் என்று சொல்லுவாங்களே ஐயா . உண்டான வேலையைச் செஞ்சுட்டு இங்கேயே இருக்கலாமே " என்றாள் .

" அம்மா நாட்டைக் காப்பாற்ற இராணுவத்தினர் இருப்பதால்தான்
நாம் நாட்டுக்குள்ள நிம்மதியா இருக்க முடியுது . நம்ம குடும்பத்தில் இருந்து நான் ஒருத்தன் தானே இராணுவத்துக்குப் போறேன் . வீட்டுக்கு ஒருத்தன் இராணுவத்துக்கு போனால்தான் அது நாட்டுக்குச் சேவை செஞ்சதா ஆகும் அம்மா " என்றான் .

அரைகுறை மனதோடு சரியென்றாள் முத்தம்மா .

மறுநாள் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் செல்வதற்கான பொருட்களை தயார்நிலையில் வைத்தான் இராமையா .

மயக்கும் மாலைப்பொழுதில் மனம் இட்ட கட்டளைப்படி ஆலமரத்தடி வசந்த மண்டபம் ஆனது .

நேற்று முழுவதும் இராமையா செல்லம்மாளோடு சுற்றி இருந்தாலும் , இன்று எப்பொழுதும் போல இயல்பாகவே இருந்தார்கள் .

செல்லம்மாள் சொக்கியிடம் நேற்றுக்காலை ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் இரசனையோடு வர்ணனை செய்து கொண்டு வந்தாள் .

சொக்கி , " நாம ஊர விட்டு எங்கும் போவதில்லை என்கிறதனாலே எதுவும் தெரிவதில்லை . வெளி உலகத்துல இவ்வளவு இருக்கான்னு ஆச்சரியமா இருக்கே ! " என்றாள் .

சுப்பிரமணி ," நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு மிலிட்டரிக்கு ஆள் எடுக்குற இடத்துக்கு போகப் போறோம் " என்றான் இராமையாவை முந்திக்கொண்டு .

" மெய்யாலுமா ? " என்றாள் செல்லம்மா....

ஆமாம் என்று தலையாட்டினான் இராமையா . செல்லம்மாளை பார்த்த இந்த நொடியில் அவன் மனம் சற்று பேதலிக்கத் தான் செய்தது 'இராணுவத்திற்கு கட்டாயம் போக வேண்டுமா? ' என்று .

நீண்ட மவுனத்திற்குப் பிறகு மௌனம் கலைத்தாள் சொக்கி. " இந்த ஊர் களையிழந்து போகுமே ! " என்றாள் .

" அட.... அதிசயமாய் இருக்கே . நான் செல்லம்மாள் தான் அத்தானைப் பிரிந்திருக்க முடியாமல் கவலைப் படுவாள் என்று நினைத்தேன் . நீ ஏன் கவலைப்படுகிறாய் ? " என்றான் சுப்பிரமணி .

" கண்டிப்பாய் போகத்தான் வேண்டுமா ? " என்றாள் செல்லம்மா .

" நீ படித்திருக்கும் படிப்புக்கு உன் படிப்புக்கு சமமான படிப்பு இல்லாவிட்டாலும் , வேலையாவது எனக்கு வேண்டும் செல்லம் . அப்பொழுது தான் உன் மாமாவுக்கு மனப்பூர்வமான சம்மதம் இருக்கும் .
நீயும் நானும் ஒருவரை ஒருவர் மறக்கப் போவதில்லை . படிப்பிற்கும் வேலைக்காகவும் பிரிந்து செல்கிறோம் அவ்வளவுதான் . அதில் நம் நலமும் அடங்கியுள்ளது . நாட்டின் நலமும் அடங்கியுள்ளது . நீ படித்தவள் . சிந்தித்துப் பதில் சொல்லு . உன் விருப்பத்தை நான் மீற மாட்டேன் " என்றான் இராமையா .

" சரி. கடைசிக் குடம் தண்ணீர் எடுக்க வரும்வரை யோசித்து விட்டுச் சொல்கிறேன் " என்றாள் .

செல்லம்மாளும் சொக்கியும் முழுவதுமாக ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களைப் பற்றியும் ஆராய்ந்து பேசிக் கொண்டே வந்தார்கள் . இராணுவத்திற்குச் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் பற்றி அலசி ஆராய்ந்தார்கள் .

" சரி. இருவரும் நாளை சென்று வாருங்கள் . ஒருவேளை இருவரும் இராணுவத்தில் சேர்ந்து விட்டால்
இராணுவப் பயிற்சி முடிந்ததும் ,
திருமணம் முடித்துக்கொண்டு எங்களையும் அழைத்துச் செல்லவேண்டும் " என்று தங்கள்
ஒருமித்த முடிவைச் சொன்னார்கள் செல்லம்மாளும் , சொக்கியும்.

"சரி" என்றான் இராமையா .

சொக்கி " நீ முழிக்கிற முழியை பார்த்தாலே தெரியுது . உங்க அப்பன் அரைக்கால் சங்கிலி நிலத்துக்காக
எங்க ஆத்தா கிட்ட சண்டை போட்டுவிட்டு எட்டு வருடமா பேசாம இருப்பவன் தானே . அவர் புள்ள எப்படி இருப்ப. நீ மிலிட்டரி போயிட்டா மாதச்சம்பளம் வாங்குவ . அதற்கான அளவு சீர் செனத்தி கொடுக்க எங்க வீட்ல இருக்காது . அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணுவது ? . உன் லட்சணம் தெரிஞ்சுதான் உன்னை காதலிக்க யோசிக்கணும் ." என்றாள் சொக்கி சுப்பிரமணியிடம்.

" ஏய்.... இன்னும் என்ன யோசிக்கக் கிடக்கு ? . உன் ஆத்தா சொன்னான்னு வேறு எவனையும் கட்டிக்கிட்டாதே . அப்புறம் உன் வீட்டில் வந்து நின்னிருவேன் " என்றான் சுப்பிரமணி .

" மாப்பிள்ள , காதல்னா அடைமழை மாதிரி பலமா இருக்கனும். பாட்ட மழை மாதிரி அப்பப்ப வந்து போகக் கூடாது . அதுதான் இவ்வளவு சந்தேகம் வருது உங்களுக்கு . நாங்க பாருங்க எப்படி இருக்கோம் " என்றான் இராமையா .

" சரி ரொம்ப நேரமாச்சு . யாராவது வந்திடப் போறாங்க " என்றாள் செல்லம்மா .

விடைபெற்றுக் கொண்டார்கள் புன்னகையோடு .

காலை ஏழு மணிக்கே இராணுவ ஆள் சேர்ப்புப் பணி ஆரம்பம் என்பதால் அந்த கிராம இளைஞர்கள் முன்தினம் இரவுப் பேருந்திற்கே தூத்துக்குடி தருவை மைதானம் வந்து
முகாமிட்டு விட்டார்கள் அதிகாலை ஆள் சேர்ப்பில் கலந்து கொள்ள...

#தருவை #மைதானம்

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஆள்சேர்ப்பு மைதானத்தில் நடைபெறும் தேர்வுகளுக்காக தங்கள் உடலை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள் .

சரியாக ஏழு மணிக்கெல்லாம் அதிகாரிகள் வந்துவிட , வரிசையில் நின்று உடல்தகுதித் தேர்விற்காக தயாரானார்கள் .

கண்பார்வையில் குறிப்பிட்ட உயரம் உடையவர்கள் அப்படியே ஓட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள் . ஆயிரத்து ஐநூறு மீட்டர் ஓட்டத்தை ஆறு முதல் எட்டு நிமிடங்களுக்குள் கடந்து அந்த கிராமத்திலிருந்து வந்த அத்தனை பேரும் சாதனை படைத்தார்கள் .
கயிறு ஏறுவது , தூரம் தாண்டுவது இவர்களுக்கு ஒன்றும் கடினமல்ல .

அன்றைய காலகட்டங்களில் சொல்வதை எழுதுதல் மட்டுமே எழுத்துத் தேர்வாக அமைந்தது .

உடல் தகுதித் தேர்விலும் , எழுத்துத் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்ற அவர்கள் மறுநாள் மருத்துவ தகுதித் தேர்வுக்கான அழைப்பினைப் பெற்றுக் கொண்டு இரவுப் பேருந்துக்கு ஊருக்கு கிளம்பினார்கள் .

பேருந்து பன்னிரெண்டு இராணுவ வீரர்களைச் சுமந்து சென்றது கம்பீரமாய். பேருந்து ஊருக்குப் போய்ச் சேர்ந்த எட்டு முப்பது மணி , இரவுப் பொழுதாகத் தெரியவில்லை அவர்களுக்கு . அவ்வளவு ஆரவாரம் !

" அம்மா இன்றைய தேர்வுகள் அனைத்திலும் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன் அம்மா . இனி மருத்துவப் பரிசோதனை மட்டுமே .
இனி உனக்கும் மாதாமாதம் மணியாடர் வரும் அம்மா " என்று மகிழ்ச்சியாகக் கூறினான் இராமையா .

முத்தம்மாளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் மகனைப் பிரிய வேண்டி இருக்குமே என்ற கவலை .

" இன்று முழுவதும் ஒழுங்கா சாப்பிட்டு இருக்கவும் மாட்டே . ஓட்டமும் சாட்டமுமாக இருந்திருப்பே . ஒரு பானை வெந்நீர் போட்டு வச்சிருக்கேன் . குளிச்சிட்டு சாப்பிட வாப்பா " என்றாள் முத்தம்மா.

" அம்மா எனக்கு ஒரே ஒரு உதவி செய்கிறாயா . இந்த ஒரு சட்டை தான் இருக்கிறது . அழுக்கு ஆகிவிட்டது நாளைய மருத்துவத் தேர்விற்கும் இந்தச் சட்டையைத்தான் போட்டுச் செல்ல வேண்டும் . எனக்கு உடம்பு ரொம்ப வலிக்கிறது . இந்த சட்டையை மட்டும் கொஞ்சம் துவைத்துப் போடுகிறாயா ?"
என்றான் .

" கண்டிப்பா செய்றேன் பா . இது என்ன பெரிய வேலையா ? கொடுப்பா." என்றாள் .

முத்தம்மா துவைத்து விட்டு வருவதற்கும் , இராமையா குளித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது . நிம்மதியாக உணவருந்திவிட்டு ஓடிய ஓட்டத்தின் களைப்பில் படுக்கச் சென்று விட்டான் இராமையா .

மறுநாள் காலையில் அருகில் இருக்கும் செக்காரக்குடி ஊருக்குச் சென்று பேருந்து ஏறிச் சென்றார்கள் மருத்துவர் தகுதித் தேர்வுக்கு . பன்னிரெண்டு பேருமே தேர்வானவர்கள் .

மாலை ஐந்து மணிக்கெல்லாம் அதிகாரி கையெழுத்திட்ட உத்தரவை பெற்றுக் கொண்டார்கள் . இன்னும் ஒரு வாரத்தில் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்திற்கு அழைப்பு அது .

உத்தரவுகளோடு பயணம் மேற்கொண்டவர்கள் , பேருந்திலேயே ஒரே ஆரவாரமும் , மகிழ்ச்சியுமாகச்
சென்றார்கள் . பேருந்தில் வந்த உறவினர்கள் அனைவருக்குமே தங்கள் ஊரைப் பற்றிய கர்வம்
அவர்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளச் செய்தது .

ஒரே நேரத்தில் தங்கள் கிராமத்தில் இருந்து பன்னிரெண்டு பேர் ராணுவத்திற்குத் தேர்ச்சி பெற்றிருப்பது ஊர் முழுவதும் காட்டுத் தீயாய்ப் பரவியது . செல்லம்மாள் காதுகளுக்கும் எட்டியது . இருப்பினும் காத்திருக்க வேண்டுமே மாலை ஐந்து மணி வரை .

அப்போதைய வானொலியில் தினசரி மூன்று முறை செய்திகள் ஒளிபரப்பாயின . விவித் பாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் தமிழும் இடம்பிடித்தது .

இந்தியாவின் வட எல்லையில் " லடாக் " பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டன .

அவை செய்தியாகும் போதெல்லாம் அந்த கிராமங்கள் துடித்துத் தான் போகும் . ஆயினும் தாய்நாட்டைக் காப்பது தங்கள் கடமை எனவே எண்ணும் .

இந்த இராணுவ ஆள்சேர்ப்புக் கூட நமது படையை பலப்படுத்துவதற்காக இருக்கலாம் . 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு . தாயகம் காப்பது கடமையடா '
என்ற எண்ணம் கொண்ட கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவரை இராணுவத்திற்கு அனுப்பி வைப்பதைத் தன் கடமை எனக் கொண்டவர்கள் .

வேலைக்கான உத்தரவை கையில் கொண்டு சென்ற இராமையா " அம்மா ஆசீர்வாதம் பண்ணும்மா " என்று தன் தாயின் கால்களில் விழுந்து வணங்கினான் .

" நல்லா இருப்பா " என்று ஆசி வழங்கி தன் மகனை உச்சி முகர்ந்தாள் . அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

" அண்ணன் , அக்கா எல்லாருக்கும் நாளைக்கு தந்தி கொடுத்திருப்பா . நீ
ஊருக்குப் போகும்போது அவங்க வழியனுப்ப வரட்டும் " என்றாள் .

தாயிடம் கொடுத்து வாங்கிய வேலைக்கான உத்தரவை , தன் அப்பா , இறந்து போன இராசய்யா அண்ணன் ஆகியோரின் புகைப்படத்த ருகே கொண்டு வைத்தான் அவர்களின் ஆசி வேண்டி .

மனதிற்குள் தன் தாயைப் பிரியப் போகின்றோம் என்கின்ற வருத்தம் இருந்தது . வெகுநேரம் தன் தாயோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் .
வெகுநேரம் கழித்தே தூக்கம் கண்களைத் தழுவியது .

மறுநாள் சூரியன் சுள்ளென்று வரும் வரையில் உறங்கிக் கொண்டிருந்தான்
இராமையா . சுப்பிரமணி வந்திருந்தான் இராமையா வீட்டிற்கு .

" அத்தான் இன்று முக்கியமான வேலை எதுவும் உங்களுக்கு இருக்கா ? இல்லையென்றால் நாம் வேலைக்குப் போகும் முன் நம்முடைய காடு கரைகளை எல்லாம் போய்ப் பார்த்து வருவோமா ? " என்றான்.

" மாப்ள...செக்காரக்குடியில போயி
நம்ம வீட்ல உள்ள எல்லாத்துக்கும் தந்தி கொடுக்கணும் . ஒரு சட்டைதான் இருக்கு . இரண்டு சட்டைத்துணி எடுத்து தைக்கக்
கொடுக்கணும் . இந்த வேலைகளை முடித்துவிட்டு நாளைக்கி போவோமே " என்றான் இராமையா .

" சரி . அப்போ ஒன்பது மணிக்கு வாரேன் . செக்காரக்குடிக்கு ப்ளூ போயிட்டு வருவோம் . எனக்கும் கூட சட்டை வேணும் தான் " என்றான் சுப்பிரமணி.

" அப்போ கிளம்பி வா போவோம் " என்றான் இராமையா.

இருவரும் வேலை முடித்து வர மதியம் மணி இரண்டாகி விட்டது .

மகனுக்காக பிரத்தியேகமாக அக்கறை எடுத்துக்கொண்டு சிறப்பாய்ச் சமையல் செய்தாள் முத்தம்மா.

" அம்மா எனக்காக ஏன் இத்தனை வகை செய்கிறாய் ? எப்போதும் போல் சமைத்தால் போதும் . நாம் இரண்டு பேர் தானே " என்றான் இராமையா.

" இருக்கட்டும் பா . நல்லா சாப்பிடு . எனக்கு மனசு கேட்கல " என்றாள் .

" இனி கோழி ஆடு மாடு எல்லாம் உனக்கு பார்க்க முடியாது அம்மா.
விலைக்கு கொடுத்துடுங்க . உங்களுக்கு முட்டைக்காக ஒன்றோ , இரண்டோ கோழி மட்டும் வச்சுக்கோங்க " என்றான் இராமையா .

" ஆமாம்பா வண்டி மாட்டைக் கொடுத்துவிடலாம் . பசுமாடும் கோழியும் இருக்கட்டும் . என் பிள்ள காடோ செடியோன்னு இமயமலையில் அலைஞ்சி வேலை செய்த பணத்தை நான் செலவு பண்ண மாட்டேன் பா .

என் கைச்செலவுக்குப் பசு மாடும் கோழியும் இருந்தாப் போதும் .
தூத்தல் விழுந்தா புல்லறுத்துப்
போட்டால் பச்சப் புல்லுக்கு பால் அதிகமாகக் கறக்கும். அது போதும் எனக்கு . சும்மாவே வீட்டில விட்டத்தை பார்த்துகிட்டு இருக்க முடியுமா ? "
என்றாள் முத்தம்மா .

" சரிம்மா . சாயங்கால நேரம் ஆச்சு . நான் அப்படியே குளத்துக் கரைக்குப் போயிட்டு வரேன் " என்றான் .

" சரிப்பா " என்றாள் .

குளத்தில் கொஞ்சமாய்க் கிடந்த தண்ணீரில் சிறுசிறு அயிரை மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன . ஒற்றைக் காலில் தவம் இருந்த கொக்குகள் வெகுநேரம் நின்று பார்த்துவிட்டு இனி பெரிய பெரிய மீன்கள் எல்லாம் இங்கு கிடைக்காது என்று தெரிந்து மேலே வந்த அயிரை மீன்களைத் தன் பனங்கிழங்கு போன்ற அலகுகளால் கொத்திக்கொண்டு சற்றுத் தள்ளி அமர்ந்து விழுங்கின .

பறந்து திரிந்த காகங்கள் எல்லாம் வெயிலின் வெப்பத்தை தணிக்கத் தலையைத் தண்ணீரில் ஆட்டி ஆட்டி குளித்தன . குளத்தின் நடுவே இருக்கும் கிணற்றில் மூன்று புறத்தில் தண்ணீர் எடுக்கும் மகளிர் கூட்டம் .

கடமைக்கும் தண்ணீர் எடுக்கும் கூட்டம் . காதலுக்கென தண்ணீர் எடுக்கும் கூட்டம் ‌ . இதில் செல்லம்மா இராமையாவைக் காண்பதற்காகவே தண்ணீர் எடுக்க வருபவள் .

இராமையாவுக்குத் தன்னாளுமை மீது மிகுந்த கர்வம் . எந்த வகையிலும் தன் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை தனக்கு இருக்கின்றது என்பதில் .

இராமையா சுப்பிரமணியிடம் ," மாப்பிள உனக்கு சொக்கி மேலே விருப்பம் என்றால் உன் முடிவை தைரியமாகச் சொல்லு . நம்ம ஊர்ல மாப்பிள பாக்கும் போது பொம்பள பிள்ளைங்க கிட்டக் கேட்கமாட்டார்கள் . அதனால உங்க வீட்டிலேயும் நீ உறுதியா சொல்லிட்டு , உனக்கு அத்தை வீடு தானே! சொக்கி அம்மாவிடமும் சொல்லிவிட்டுப் போ "
என்றான் .

" எங்க அப்பாகிட்ட பேசத்தான் பயமாயிருக்கு . எட்டு வருடமா பேசமாட்டார் அத்தை வீட்டில் " என்றான் சுப்பிரமணி.

" அப்போ சொக்கிய மறந்திடுவியா " என்றான் இராமையா .

" இல்ல அத்தான் . எப்படியும் நாம விடுப்பில் வரும்போது தானே நமக்கு கல்யாணம் பேசி முடிப்பார்கள் . அதுவரை எங்க அப்பாவுக்குத் தெரிய வேண்டாம் . ஆனா அத்தைகிட்ட அப்பாவுக்கு தெரியாம நான் இன்று ராத்திரி போய் உறுதி கொடுத்துவிட்டு வந்திடுவேன் . எனக்கு சீதனம் முக்கியமில்லை . என் அத்த மக வேணும் . அப்படி எங்க அப்பா சம்மதிக்காட்டா எங்களுக்கு முன்னாடி உங்களுக்குக் கல்யாணம் ஆகி விடும் . நீங்க எங்களுக்கு உதவி செய்ய மாட்டீங்களா " என்றான் பாவம் போல ...

" மாப்ள.... நீயும் சொக்கியும் உறுதியா இருந்தா எங்க உயிரே போனாலும் நாங்க உங்க கல்யாணத்தை நடத்தி வைப்போம் . கவலைப்படாதே.
இது சம்பந்தமா நாம சொக்கி கூடவும் பேசணும் . உங்க அத்தை வீட்டிலேயும் போய் நீ பேசிரு " என்றான் இராமையா .

செல்லம்மாவும் , சொக்கியும் ஏதோ பேசியபடி தூரத்தில் வருவது தெரிந்தது . காத்திருந்தார்கள் இருவருமே .

" வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் " என்றாள் செல்லம்மா .

செல்லம்மாவின் உறுதி மனம் இராமையாவை வியப்பில் ஆழ்த்தியது .

" பரவாயில்லையே செல்லம் . இராணுவத்துக்கு போகிறேன் என்றதும் அழுவாய் என்று நினைத்தேன். நீ வாழ்த்தி அனுப்பு வாய் போல் தெரிகிறது எனக்கேற்றவள்தான்" என்றான்
இராமையா...

" தமிழர்களின் வீரம் பற்றி நாம் படித்தது இல்லையா ? ஏன் பயப்பட வேண்டும் . நமது தலை தரையில் விழும் முன் பத்து தலையை நாம் உருள வைக்க வேண்டும் . அதுதான் நமது வீர மரபு . வெற்றித் திலகமிட்டு உன்னை அனுப்புவேன் கண்ணாளனே ! " என்றாள் செல்லம்மா.

இதுவல்லவோ இவர்களின் மரபு .

( கரிசல் கதை தொடரும் )
 
Super
 
Top