Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

#கரிசல் #காட்டு #காவியம் Part-5

Advertisement

Puthumairaj A

Member
Member
#வள்ளித் #திருமணம்

வெலிங்டன் தமிழ்நாட்டில் உள்ள இடமாக இருந்தாலும் குறிஞ்சி நிலமான மலையும் மலை சார்ந்த இடம் என்பதால் அதனுடைய சீதோசன நிலை தென் மாவட்டங்களை விட வித்தியாசமாக காணப்பட்டது . இதனால் அங்கிருந்து வந்த இளைஞர்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டன .

இருப்பினும் இவர்கள் இந்தியா முழுவதும் வாழ வேண்டியவர்கள் என்பதால் அதனை தாங்கிக் கொள்ளும் அளவில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது .

இராணுவப் பயிற்சிக்குரிய அரைக் கால் டவுசரும் பனியன்கள் வழங்கப்பட்டன . முடிகள் கட்டையாக வெட்டப்பட்டு , மழுமழுவென்று சவரம் செய்யப்பட்ட நாடிகளோடு இருந்தார்கள் . அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சிக்கு ஆயத்தமாக வேண்டியிருந்தது .
மொத்தத்தில் பயிற்சியின் கெடுபிடி
ஊரை நினைத்துப் பார்ப்பதற்கே நேரம் இல்லாத அளவில் இருந்தது .

இவர்களது கிராமம் இவர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது .
செல்லம்மா இரண்டாம் ஆண்டு பயிற்சி தொடங்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் .
அவள் நினைத்தது போலவே ஒரு வாரத்தில் வரச்சொல்லி கடிதம் வந்திருந்தது .

மாசானம் , " அக்கா காளைமாட்டை வாங்க தரகர் வந்திருக்கார் .கொடுப்போமா ? " என்றான் .

" ஆமாப்பா , இன்னும் இராமையா விவசாய வேலைக்கு இப்போதைக்கு வர முடியாதே . இராணுவப் பணி முடிந்து அவன் வரும்போது வேறுமாடுகள் பிடித்துக் கொள்வான் . இதுகளை வைத்து நான் என்ன செய்ய முடியும்?
கொடுத்துவிடுப்பா " என்றாள் முத்தம்மா . எழுபத்தைந்து ரூபாய் விலை பேசி இரண்டு மாடுகளும் விற்பனையானது .

ஒரு தொழுவத்தில் உள்ள மாடுகள் என்பதால் , " அவை காயடிக்கப்பட்ட காளைகளாக இருந்தாலும் , பிரிந்து செல்லும்போது பசு பரிதாபமாக பார்த்தது . புதியவரோடு செல்ல காளைகளும் முரண்டு பிடித்தது .
முத்தம்மா கண்களில் கண்ணீர் .

செல்லம்மா இரண்டாம் ஆண்டு பயிற்சிக்கு செல்லும் நாளும் வந்தது .
" தாயி , கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே விடுமுறை கேட்டுட்டு வந்துரு " என்றாள் வள்ளி .

" கவலைப்படாதே அக்கா கண்டிப்பாக வந்து விடுவேன் . ஒரு வாரம் விடுமுறை தருவார்களா என்பது தெரியவில்லை . ஆனால் கல்யாணத்துக்கு கண்டிப்பாக
இருப்பேன் அக்கா " என்றாள்
செல்லம்மா .

கிராமத்திலிருந்து வந்த செல்லம்மாவை கேலி பண்ணிய நகரத்துத் தோழிகள் எல்லாம் இப்போது செல்லம்மாளை வரவேற்று மகிழ்ந்தார்கள் .

" ஏன் செல்லம் இந்த வருடம் நீ எங்களை விட்டு விலகி இருக்கக் கூடாது . நீ எந்த முறையில் படிச்ச என்று சொல்லு . நாங்களும் உன்னோடு போட்டி போட்டுப் படிக்கப் போகிறோம் . சொல்லித் தருவே தானே " என்றார்கள் கேலியாக .

" இதிலென்ன இருக்கு ? . மனசுல ஒரு லட்சியம் இருந்தால் யாரும் படிக்க முடியும் . எல்லோரும் அதிக மதிப்பெண்கள் வாங்கினால் நமது நிறுவனத்திற்குப் பெருமைதானே " என்றாள் செல்லமா .

முதல்நாள் காலைக் கூட்டத்திலும் செல்லம்மாள் முதல் வருடம் வாங்கிய மதிப்பெண் பற்றி முதல்வர் பாராட்டிப் பேசினார் .

மாதங்கள் சில உருண்டோடின .
வள்ளிக்கான திருமண நாள் நெருங்கியது . அக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க செல்லம்மாள் ஒருவாரம் விடுப்பு கேட்டாள் .

முதல்வர் , " முதல் வருடம் பிடித்த இடத்தை இந்த வருடமும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .
உன்னோடு ஐந்து பேர் நமது பயிற்சி மையத்திலேயே போட்டிபோட்டுப்
படிக்கிறார்கள் என்பதை நீ அறிவாய் .
ஆதலால் மூன்று நாள் விடுப்பில் போய் வாம்மா " என்றார் .

செல்லம்மாவால் முதல்வர் பேச்சை மீற முடியவில்லை . மூன்று நாள் விடுப்பில் ஊருக்கு வந்தாள் செல்லம்மா . ஊரில் வந்து இறங்கியதும் அவள் விழிகள் அகல விரிந்தன .

ஆம் ! நிறைய வீடுகளில் மின்சார விளக்கு எரிந்தது . ஆசையோடு தனது வீட்டிற்கும் போனாள் . அங்கே திருமணத்திற்காக அழகிய பந்தல் போடப்பட்டிருந்தது . புத்தம் புதிதாக குழாய் ரேடியோ கட்டப்பட்டிருந்தது .
வீட்டிற்குள் நுழைந்த உடனே மின்சாரம் வந்த சந்தோசத்தைக் கொண்டாட வள்ளியும் , செல்லம்மாவும் கைகளைக் கோர்த்துக்கொண்டு
சுற்றி சுற்றி ஆடினார்கள் .

பந்தல் காரனிடம் , " குழாய் ரேடியோ எப்ப போடுவீங்க ? " என்று கேட்டாள் செல்லம்மா . " நாளைக்கு சாயங்காலம் போட வேண்டும் . பந்தல்
அலங்காரம் முடிந்தபின் தான் போடமுடியும் அம்மா " என்றான் .

முதலில் தெருவிளக்கு , சிறிது
கால இடைவெளியில் வானொலிப் பெட்டி , அடுத்து சிறிது கால இடைவெளியில் வீட்டு மின்சாரம்
எத்தனை எத்தனை அற்புதம் !
எண்ணிலடங்கா விந்தைகள் !
பேசிப் பேசி மகிழ்ந்தார்கள் செல்லம்மாவும் வள்ளியும் .

ஆச்சி , பொக்கை வாய்ச் சிரிப்போடு சொன்னாள் , " என் பேத்திகளை யாரும் ' தாயற்ற பிள்ளைகள் ' ன்னு சொல்லக்கூடாத அளவுக்கு நான் வளத்துட்டேன் . இன்னும் எங்க செல்லம்மா கல்யாணத்தை மட்டும் பார்த்துவிட்டு நான் கண்ணை மூட அந்த பகவான் அருள் பாலிக்க வேண்டும் " என்று சிரித்தாள் .

செல்லம்மா , " ஆச்சி அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்ன விடமாட்டோம்.
" எங்களுக்கு ' பேறுகாலம் ' பார்க்க நீ இருக்க வேண்டும் " என்றாள் .

ஆச்சி சிரித்துக் கொண்டாள் .
முதுமரத்தின் பட்டை போல கோடு கோடாக சுறுக்கம் விழுந்திருக்கும் தன் கைகளால் தன் பேத்திகளை அணைத்தபடி !

மகிழ்வாய் இருந்தது அந்தச் சின்னஞ்சிறு குடும்பம் . எத்தனை சோகங்களை சகித்துக் கொண்டிருந்தாலும் , பாதுகாத்து வளர்த்த இந்தச் சின்னஞ்சிறு
பெண்களின் வாழ்வு மலர்வதில் அந்தக் கிழவிக்கு அவ்வளவு ஆனந்தம் .

இரவுப் பொழுதுகள் இனிமையாய்க் கழிந்தது . பறவைகளின் சுறுசுறுப்போடு விடிந்தது அதிகாலைப் பொழுது .

உறவினர்கள் ஒவ்வொருவராய்
வரத் தொடங்கியிருந்தனர் . வத்திரம் பெட்டியிலிருந்து மாப்பிள்ளை வீட்டார்கள் வள்ளிக்கு மஞ்சள் பூசி பூ வைத்தனர் . அனைவரின் கண்களும் வள்ளியின் மீதும் இருந்தது .

பந்தல்காரன் வேலையை முடித்துவிட்டான் . ஒலிபெருக்கியை தயார்செய்து குழாய் ரேடியோவில் பாட்டுப் போட முயற்சி செய்து கொண்டிருந்தான் . ஆயிற்று ! ஆயிற்று ! இந்த ஊரில் முதன் முதலாக குழாய் ரேடியோ பாடப் போகிறது .

" விநாயகனே வினை தீர்ப்பவனே "
என்ற பாடலோடு ஆரம்பித்தது . அடுத்து சம்பூர்ண இராமாயணம் பாடல் ஓடிக் கொண்டிருந்தது .

செல்லம்மா , " அண்ணே 'கல்யாணப்பரிசு ' பாட்டு வச்சிருக்கீங்களா ? " என்றாள்.

" இருக்கும்மா " என்றார் பந்தல்காரர் .

வள்ளி தங்கையிடம் , " என்ன தாயி ! உங்க அத்தான் ஞாபகமா ? ரெண்டு பேரும் அந்தப் படம் தானே பார்த்தீங்க " என்றாள் .

ஆச்சி திருதிருவென விழித்தாள் 'எப்போது தன் பேத்தி இராமையாவோடு படத்துக்கு போனாள் ? ' என்று .

செல்லம்மா , " ஆச்சி அப்படிப் பார்க்காதே . நீ தானே திருநெல்வேலிக்கு போகச்சொன்னே... அன்று பார்த்ததுதான் " என்றாள் .

கூத்தும் கும்மாளமுமாக வள்ளியின் திருமணம் நடைபெற்றது .
கிழவி மட்டும் ' இந்தக் கல்யாணக் கோலத்தைக் காணத் தன் மகள் இல்லையே ' என்று கண்களைக் கசக்கிக் கொண்டாள் . தபால்காரர் வந்து செல்லம்மாள் பெயருக்கு மணியாடர் வந்திருப்பதாகச் சொன்னார் .
வியப்பாயிருந்தது செல்லம்மாளுக்கு !

இராமையா தான் அனுப்பியிருந்தான் . ' திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் . செல்லம் , 30 ரூபாய் அனுப்பி இருக்கிறேன். இது எனது ஒரு மாதச் சம்பளம் . உனது விருப்பப்படி நமது சார்பாக திருமணத் தம்பதிகளுக்கு ஏதாவது எடுத்துக் கொடுத்துவிடு 'என்று குறிப்பிட்டிருந்தான் .

செல்லம்மாளுக்கு போதிய அவகாசம் இல்லாததால் பணமாகவே திருமணத் தம்பதிகளுக்குப் பரிசளித்தாள் .

மறுநாள் திருமணத் தம்பதிகளை
திருச்செந்தூர் கோவிலுக்கு அழைத்துச் செல்லும்போது , செல்லம்மாவும் அவர்களோடு கோவிலுக்குப் போய்விட்டு அருகிலிருக்கும் தான் படிக்கும் குலசேகரப்பட்டினத்திற்குச் சென்றுவிட்டாள் .

இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் பயிற்சி முடிந்து விட இராமையா செல்லம்மாள் திருமணம் தானே !

(கரிசல் கதை தொடரும் )
 
Nice EP
 
Top