Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E3)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew

Makkale!!!!!

thankssss alottt for the support you people gave for the last episode friendsss :love: ?

Here comes the next episode from
கல்யாணம்..கச்சேரி..??

share your thoughts makkale!!!!




கச்சேரி-3



அவன் எண்ணவோட்டங்கள் பின்னோக்கி பயணித்தன…

ஒரு வருடத்திற்கு முன்…

“ஆஃபீஸுக்கு கிளம்பலையா மகிழா??” என்று தட்டில் சுடச்சுட தோசையை வைத்தவாறு…. கலைந்த கேசமும் கசங்கிய டீஷர்டுமாய் அமர்ந்திருந்த மகிழனிடம் வினவினார் தாமரை.

“ம்ம்..” என்று வாயிலிருந்த தோசையை மென்று விழுங்கியவன் “இன்னைக்கு ஃபீல்ட் வொர்க்தான்மா. லேட்டா கிளம்பினா போதும்” என்றுவிட அவரும் ஒரு நொடி நின்று அவன் இரசித்து உண்பதை கவனித்தவராக அடுக்களைக்குள் விரைந்தார்.

நிதானமாய் கிளம்பினால் போதும் என்றிருக்க பொறுமையாய் எழுந்து.. பொறுமையாய் கிளம்பி… ஒவ்வொரு வில்லையையும் இரசித்து ருசித்துக் கொண்டிருந்தான் அவன்.
ஆனால் அது பொறுக்காததுபோல ஒலித்து அவனைக் கலைத்தது அவனது ஃபோன்.

முதல் தரம் எடுக்காமல் விட்டவன் அதுவே தொடரவும் எழுந்து சென்றான்.

அவன் அழைப்பை ஏற்ற மறுகணம் அந்தப் பக்கத்திலோ மூச்சுவிடாமல் பேசி முடித்திருந்தான் ஜீவன்.

“ப்ளீஸ் மகி….” என்றவனின் கெஞ்சல் குரலில்

“சரி! எங்க வச்சிருக்க??” என்றான் எரிச்சலை அடக்கியவனாக.

“டேபிள்-ல இருக்கும்” பதில் அவசரமாய் வந்தது அதை தொடர்ந்து,

“அது இல்லன்னா உள்ள விடமாட்டாங்க மகி….”என்றவன் இழுக்க

“சரி வரேன்!” என்று அழைப்பை துண்டித்துவிட்டு தட்டை தூக்கிச் சென்று அவன் கழுவி கவிழ்த்த, அவனுக்காக தோசை வார்த்து நின்ற தாமரையின் பார்வை அவனை கண்டித்தது.

அவர் அப்படிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியே திருவுருவாய் ஒரு சின்ன புன்னகையுடன் எல்லாவற்றையும் கடந்துவிடுவார் தாமரை.

அவர் பார்வையை உணர்ந்தவனோ,

“எல்லாம் உங்க புள்ளையாலதான்!” என்க ‘அப்போ நீ யாராம்??’ என்றவர் பார்வை அவனை குடைய அதை கண்டுக் கொள்ளாதவனாய்.

“ஐடிய வச்சிட்டு போயிட்டானாம்! இப்போ எடுத்துட்டு வரச் சொல்றான்” என்றவனின் பார்வை கடிகாரத்தை தேடியது. ஜீவன் இங்கு வந்து மறுபடியும் திரும்புவது என்றால்… அது சரிவராது என்று உணர்ந்தவன் அதற்குமேல் தாமதிப்பது சரியில்லை என்றுபட கிளம்பிவிட்டான்.

அவன் கல்லூரிக்கு எதிரில் கடுகாய் நின்ற பெட்டிகடையில் வண்டியை நிறுத்தியவனாக ஜீவனிற்கு அழைத்தான். அவன் பார்வையோ ஒருமுறை சுழண்டு மீண்டது.

“டேய்! எங்க இருக்க??” என்றவனின் குரலிலேயே அவன் வந்துவிட்டது புரிய

“அதுக்குள்ள வந்துட்டியா? வர்றதுக்கு லேட்டாகுமோன்னு பக்கத்துல கடைக்கு வந்தேன் மகி” என்றதுதான் மிச்சம். மகிழனுக்கு அப்படியொரு கடுப்பு.

“சீக்கிரம் வா!” என்று வைத்துவிட்டான்.

அவன் வைத்த மறுகணம் “பளார்ர்ர்” என்றொரு சத்தம் அவன் செவிப்பறையை தீண்டிச் செல்ல சுற்றி சுழண்ட பார்வை அந்த கல்லூரி வாசலின் இடதுபுறத்தில் நிலைத்தது.

வழக்கம்போல அவனுள்ளம்’காதல் அறை ஒன்னு விழுந்துச்சு!’ என்று சிட்டுவேஷன் பாட்டு பாட அதை அடக்கியவனாக கண்ட காட்சியில் கவனம் பதித்தான் அவன்.

அறைந்தவளையும்… அறைவாங்கியவனையும் பார்த்தவனின் மனமோ அடித்துரைத்தது… அது காதல் அறையில்லை என்று.
#

“அம்மா! நான் கிளம்பறேன்!” என்று கையில் வாட்சை கட்டியவளாக உள்ளே நோக்கி குரல் கொடுத்தவள் கை பையை தூக்கிக் கொண்டு வாசல்புறம் விரைந்தாள்.

வண்டியை எடுப்பதற்கு வாகாய் வாசற்புறமாய் திருப்பியவள் அதை உயிர்ப்பிக்க அவள் பின்னாடி அதைவிட வேகமாய் ஏறிக் கொண்டான் சஞ்சயன்.

அவன் ஏறிய வேகத்தில் வண்டி அதிர… தரையில் காலூன்றி அதை நிலைபடுத்தியவள் பின்னாடி இருந்தவனையே வெறிகொண்டு நோக்கினாள். அவனோ ‘ஈஈஈ’ என்று சிரித்து “ஏற்கனவே லேட்டாச்சு முகி…போற வழிதானே காலேஜ்ல விட்டுறேன்…” என்றான் பவ்யமாய்.

எந்நாளும் எதிரும் புதிருமாய் நிற்கும் தம்பி இன்று சிரித்து பேசியதின் காரணம் விளங்க “எறங்கு!!” என்றாள் அழுத்தமாக.

இறங்கியவன் அவள் முன் வந்து நிற்க

“காலேஜ் பஸ் என்னாச்சு??” என்று.கேட்க

“மிஸ் பண்ணிட்டேன் முகி! ஒருவாட்டி…” என்றவன் இழுக்க. விரிய துடித்த சிரிப்பை அடக்கியவள் முகத்தை கடுமையாய் வைத்துக் கொண்டு,

“ம்ம்…சரி! அப்போ அக்கானு கூப்பிடு!” என்றாள் அதிகாரமாய்.

அவள் எண்ணம் புரிந்தவன்போல “நான் நடந்தே போயிக்கறேன்” என்று வாசல் புறம் நடந்தவனை பிடித்திழுத்து நிறுத்தியவள், சிறுபிள்ளையைபோல அவன் முறுக்கிக் கொள்வதை இரசிக்க மறக்கவில்லை.

“சரி வா! ஏறு! ஆனா இந்த ஒரு தடவைதான்!” என்று அவனை ஏற்றிக் கொண்டவளோ, “ஒரு நாளில்ல ஒரு நாள்… உன்ன அக்கானு கூப்பிட வைக்கறேன் பாரு!” என்க அவனோ “பாப்போம் பாப்போம்!” என்றான்.


கல்லூரி வாசலில் இருந்து ஐந்தடி தொலைவில் வண்டியை நிறுத்தியவள் அவன் உள்ளே செல்ல காத்திருந்தாள்.

அங்கு வாசலின் இடதுபுறமாக இரண்டு வண்டிகள் நிற்க அதில் அமர்ந்தபடி சில சீனியர் செல்வங்கள் மற்றவர்களை வம்பிழுத்தபடி இருந்தனர்.

அவர்களது பேச்சு கொஞ்சம்.கொஞ்சமாய் வரம்பு மீறிக் கொண்டுதான் இருந்தது அதிலும் இவர்கள் வந்த சமயம் அது உச்சத்தை தொட்டிருக்க.. இவர்களிருவரும் வந்ததில் இருந்து கவனித்திருந்த ஒருவன் “அங்க பாரு….” என்று ஆரம்பித்ததுதான் தெரியும். அந்த கூட்டத்தின் பேச்சு இவர்களை பற்றிதானிருந்தது. எல்லாம் கீழ்தரமானவை! நகைச்சுவை என்ற பெயரில் விளையும் நச்சுக்கள் அவை! அதை அவளும் உணர்ந்தே தான் இருந்தாள். ஆனாலும் ஒருவார்த்தை பேசாது. ஏன் பார்வையை கூட அவர்கள்புறம் திருப்பாது நின்றிருந்தாள்.

அங்கிருந்த ஒருவன் அவளை வர்ணிக்கும் முயற்சியில் இறங்க அதற்குமேல் தாங்காது என்பதுபோல அவனின் சட்டையை பிடித்திருந்தான் சஞ்சயன்!

எப்படியும் அவன் அவர்களை கடந்துதான் உள்ளே செல்ல வேண்டும் அவன் அவர்களை நெருங்கும் பொழுதே புரிந்துவிட்டது. அவர்கள் பேசுவது தன் அக்காவைப் பற்றிதான் என்று. எப்பொழுதும் பொங்கிவிடும் முகிலினியே அமைதி காக்க.. கடக்க முயன்றவனால்… மற்றவன் உரைத்த அந்த ஒரு வார்த்தையை சீரணிக்க இயலவில்லை!

எப்படி என் அக்காவைப் பற்றி இப்படி பேசலாம்?? என்றெழுந்த வேகத்தில் மற்றவனின் சட்டை கொத்தாய் இவன் கையில் சிக்கியிருந்தது.

அவ்வளவு நேரம் அமைதி காத்தவள் சஞ்சயன் ஒருவனின் சட்டை கொத்தாய் பிடித்திழுக்கவும் அவர்களிடம் விரைந்தாள்.

சஞ்சயனின் கையை அவன் சட்டையிலிருந்து பிரித்தெடுக்க அவள் முயல அது முடியாது போகவும் ஒரு அறை விட்டிருந்தாள் சஞ்சயனை.

அவன்.அதிர்ந்து விழிக்க “கைய எடுறா!!” என்றாள் அழுத்தமாக.

அதற்குள் அவள் விட்ட அறையிலேயே எல்லோர் கவனமும் அவர்கள்புறம் திரும்பியிருக்க தம்பியைக் கண்டவள் “உள்ள போ!!” என்றாள்.

“அக்கா அவன்…” என்று தொடங்கியவன் “போன்னு சொன்னேன்” என்றவளின் அழுத்தமான குரலில் திரும்பித் திரும்பி பார்த்தவனாக உள்ளேச் சென்றான்.

அவன் உள்ளே சென்றுவிட… இங்கோ அதற்குள் அந்த கும்பலோ துள்ளிக் கொண்டிருந்தனர்.
சட்டை கசங்கி நின்றவனின் சட்டையை இழுத்துவிட்டவள் “தாங்கஸ்!” என்றாள்.

எதற்காக இந்த தாங்க்ஸ்? என்று புரியாமல் மற்றவன் மட்டுமின்றி அந்த கும்பலே குழம்பியது.

“இனிமே என் தம்பி விளையாட்டுக்கு கூட எந்த பொண்ணையும் கிண்டலடிக்க மாட்டான்!” என்றவளின் கரம் அடுத்த கணமே அவன் கன்னத்தில் இறங்கியிருந்தது.

விழுந்த அறையில் அவன் சுதாரித்து நிமிரும் முன்னே இன்னொரு அறைவிட்டவள் “இது பேசுனதுக்கு!” என்றுவிட

அவன் அதிர்ந்து நிற்க அந்த கூட்டத்தில் இன்னொருவனோ “ஏ!! நாங்க யாரு தெரியுமா???” என்று இவளை நோக்கி முன்னேறினான்.

அவளோ கைகளிரண்டையும் கட்டிக்கொண்டு ‘என்ன பண்ணிடுவ?’ என்ற பாவனையில் நின்றாள்.
அவள் நின்ற விதத்தையும்… அதற்குள் அவர்களை சூழ்ந்திருந்த கூட்டத்தையும் கண்டு அதில் சுதாரித்த மற்றொருவன் இரண்டாமவனை பிடித்து இழுத்தான் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தவனாக.

இவளிடம்,” சாரிக்கா! ஏதோ விளையாட்டுக்கு ஆரம்பிச்சு வரம்பு மீறிடுச்சு சாரி!” என்றான் நிலமையை சீராக்கும் முயற்சியில். இன்னும் சற்று நேரம் தாழ்ந்தால்… ப்ரச்சனை பூதாகரமாகிவிடக்கூடும் என்பது அவனுக்கு நிச்சயம்.

அவனது ‘அக்கா’ என்ற அழைப்பில் இதழ்கள் ஏளனமாய் வளைய நின்றவள் வாக்கியத்துக்கு இரண்டு முறை அவன் சாரி போட வேறெதும் சொல்லாது தோளை குலுக்கியவளாக அங்கிருந்து அகன்றாள்..

அதற்குப் பிறகுதான் அவனுக்கு மூச்சு வந்தது போல மற்றவர்களையும் அங்கிருந்து அழைத்துச் சென்றான்.


அவள் அங்கிருந்து அகன்றுவிட்டாள்… ஆனால் அவள் மனமோ அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என்றில்லை. என்ன தைரியம் இருந்தால் அப்படி பேசியிருப்பான் என்றுதான் இருந்தது அவளுக்கு. அவளும் எவ்வளவோ பொறுத்துதான் போனாள். அமைதியாய்தான் நின்றாள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டல்லவா?!

அவர்கள் அதை தாண்டவும்தான் பொங்கிவிட்டாள் அதுவும் தவறாக பேசியது மட்டுமின்றி சஞ்சயனின் மேல் கை வைக்கவும் அதற்குமேல் அவளால் ஒருகணம்கூட பொறுமையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

யுக்தா அறிவுறுத்திய… தியானம்…மூச்சை பிடித்து எண்ணுவது எல்லாம் நினைவில் கூட நிற்கவில்லை. என்று அவள் எண்ணம் ஓடிக் கொண்டிருக்க அது வந்து நின்றதோ சஞ்சயனின் “அக்கா” என்ற அழைப்பில்.

அவன் அவளை அக்காவென்று அழைத்தது நினைவில் வர அத்தனை ரணகளத்துலயும் அது அவளுக்கு குதூகலமாய்தான் இருந்தது.

அதுதான் முகிலினி! கோபம் வந்தால் கொட்டி தீர்த்துவிடுவாள். ஆனால் அடுத்த கணமே அதை மறந்தும் விடுவாள். கோபத்தை பிடித்து வைக்கத் தெரியாதவள்.

அதிலும் இன்று அவன் அக்காவென்று அழைத்திருக்க வண்டியை ஓரம் கட்டியவள் சஞ்சயனிற்கு ஒரு குறுந்தகவலை தட்டிவிட்டவளாக மென்சிரிப்புடனேயே வண்டியை உயிர்ப்பித்தாள்.

அங்கோ…

ப்ளார்ர்ர்’ என்ற அறை சத்தத்தில் நிமிர்ந்தவனின் பார்வை அங்கேயே நிலைத்துவிட்டது. முதலில் ஒருவனை அறைந்தவள் அவனை உள்ளே செல்லும்படி உத்தரவிட்டதிலேயே ஓரளவு புரிந்து போயிற்று அவன் அவளுக்கு வேண்டியவன் என்று. ஆனால் அதுவல்ல விஷயம். அதன்பின் அவள் செய்த அனைத்தையும் அவன் கவனித்துதான் நின்றான். அதில் விஷயம் இன்னதென்று புரிபட்டுவிட அவன் பார்வை அங்கிருந்து விலக மறுத்தது.

அவள் அங்கிருந்து கிளம்பிய பின்னும் அவன் பார்வை அங்கிருந்து அகலவேயில்லை! ஏதேதோ சிந்தனைகள் வலைபின்ன அமர்ந்திருந்தவனின் தோள்தொட்டு அவனை கலைத்தது ஜீவனே!

அவனது ஸ்பரிசத்தில் கலைந்தவன் அவனிடம் அவன் ஐடியை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் எண்ணம் முழுக்க அவளே நிறைந்து நின்றாள்.

இன்னதென்று விளக்க முடியாத உணர்வு! அவனால் அவள் செயலை பாராட்டவும் தோன்றவில்லை அதே சமயம் மற்ற சிலரை போல என்ன திமிரு அவளுக்கு என்று ஒதுக்கவும் மனமில்லை.

மனம் அவள் செயலிற்கு ஆயிரம் சபாஷ் போட்டாலும் மூளையோ அதை ஏற்க மறுத்தது. அவன் எண்ணமெல்லாம் இதுவே,

‘இவ பாட்டு அடிச்சிட்டு போயிருவா! நாளைக்கு அந்த பையன்தான இங்க படிக்கனும். இன்னும் எத்தன வருஷம் இங்க படிக்கனுமோ?... இவனுங்க அவன்கிட்ட ப்ரச்சனை பண்ணா என்ன பண்ணுவா?? அத பத்திலாம் யோசிக்க வேண்டாமா???” என்றுதான் அவன் சிந்தித்தான். ஒருபுறம் இப்படியிருக்க மற்றொரு புறமோ அவளுக்காக வாதாடியது.

‘அதுக்காக? வாய மூடிட்டு போகனுமா? அவ செஞ்சதுல என்ன தப்பு? இவனுங்களுக்கெல்லாம் இதுதான் சரியான ட்ரீட்மெண்ட்!’ என்று தோன்ற அதிலிருந்து வெளியே வந்தவனின் மனமோ ‘ஆமா நாம ஏன் அவளுக்கு யோசிக்கறோம்?’ என்று கேள்வியெழுப்பியது.

அதில் குழம்பியவனின் உள்ளமோ அடித்துச் சொல்லியது ‘அவளை எங்கோ பார்த்திருக்கிறோம்” என்று.

அன்று தலையை உலுக்கி அதிலிருந்து விடுப்பட்டவன் அதை பின்னாளில் மறந்தும் போனான்.
ஆனால்…இன்றோ? அதே போல் மற்றொரு சந்திப்பு…இல்லை சம்பவம்!

அதே அறை! ஆனால் இதுவேற ப்ரச்சனை போலும். கடந்ததில் உழன்ற மனதை தலையை உலுக்கி சரி செய்தவனின் பார்வை அவளை தேட..அவள் அங்கிருப்பதற்கான அறிகுறியே இல்லை. எப்பொழுதோ சென்றிருந்தாள்.

“ரொம்ப டெரர் பீஸா இருப்பாளோ?” என்று எழுந்த எண்ணத்தை பெருமூச்சொன்றை வெளியேற்றியவனாக வண்டியை கிளப்பினான்.


“எங்க முகி இருக்க???” என்ற யுக்தாவின் கேள்விக்கு

“வந்துட்டிருக்கேன்! வர வழில ஒரு பரதேசி தப்பா வந்து இடிச்சது மட்டுமில்லாம தப்பா பேசிட்டான்! அதான் லேட்டு!” என்க மற்றவளோ ஆழ மூச்செடுத்து “சீக்கிரம் வந்து சேரு!” என்றிருக்க

“இதோ! ஃப்ளாட்டுக்கு வந்துட்டேன்! அண்ணிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றுவிட அந்த பக்கத்தில் யுக்தா அழைப்பை துண்டித்தாள்.

வண்டி அந்த பெரிய அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைந்தது.
ப்ளூ டூத்தை கழட்டி பையினுள் போட்டவள் ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள்… தனது வேகநடையுடன்..!!


கச்சேரி களைகட்டும்!!!!!!

 
Top