Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E5)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Hellllooooo makkale!!!!

Thanksss alottt for the support you gave for the last epi :love: ?

Here comes the next epi from...
கல்யாணம்..கச்சேரி..??

share your thoughts makkale!!!!


கச்சேரி-5



குளிரூட்டப்பட்ட அந்த கிஃப்ட் ஷாப்பினுள் நுழைந்த மறுகணமே ஃப்ரெஞ்ச் லாவண்டரின் மனம் அவன் நாசியை தீண்டியது.
அவர்களிருவரும் உள்ளே நுழைய வேகமாய் அவர்களிடம் வந்தாள் அப்பெண்.
அங்கு வேலையில் இருப்பவள்.
“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ சர்?” என்று வந்தவளை பார்த்த மகிழனுக்கும் ஜீவனுக்கும் திருதிருவென விழிப்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.

எதாவது ஒன்றை முடிவு செய்திருந்தால் சொல்லலாம். இங்குதான் இவர்கள் எதையும் தீர்மாணித்திருக்கவில்லையே. அப்பெண்ணிடம் தலையசைத்த மகிழன் இரண்டு வயது குழந்தைக்கு பரிசு வாங்கவேண்டும் என்றுவிட
அவர்களை பின்தொடரும்படி உரைத்தவள் முன்னேறினாள்.

“இது கர்ள்ஸ் ஸெக்ஷன். பசங்களுக்கு அந்த பக்கம்” என்று எதிர்பக்கத்தை காட்டியவள் பின் அவர்கள் தேர்ந்தெடுப்பதற்காய் சற்று ஒதுங்கியவளாக அமைதிகாத்தாள்.

மகிழனோ அந்த ஸெக்ஷனையே அதிசயமும் ஆச்சரியமும் போட்டிபோட பார்த்து நின்றான்.

‘பிங்க்-ல இத்தன ஷேட்ஸா??!!’ என்றுதானிருந்தது அவனுக்கு.
மற்ற நிறங்களும் இருந்ததுதான் ஆனால் அங்கு தொன்னூறு சதவிகிதமிருந்ததால் மேஜாரிட்டியாகி பிங்கின் ஆட்சியே!!

கண்களிரண்டும் பிரதானமாய் நின்ற பிங்க் நிறத்திலேயே நிலைத்திருக்க அவன் எண்ணங்களோ அடுத்தக்கட்டத்தை தொட்டிருந்தன.

“இன்னுமாடா இந்த பொண்ணுங்கனா பிங்க் பசங்கனா ப்ளூனு இருக்காங்க?” என்றவன் ஜீவனின் காதை கடிக்க அவனுக்குமே அதே எண்ணம்தான்.

நட்புவட்டத்தில் நண்பன் ஒருவன் ‘என் ஃபேவரெட் கலர் பிங்க்!’ என்றப்பொழுது மற்ற அனைவரும் சேர்ந்து அவனை கலாய்த்து தள்ளியதெல்லாம் நினைவிலாடின ஜீவனுக்கு.

“அதான்.மகி புரியல! பிங்க் பொண்ணுங்க கலர்னு இவனுங்களே முடிவுகட்டிருப்பானுங்கபோல!” என்று இருவரும் ரகசிய குரலில் பேசிக் கொண்டிருக்க அங்கு நின்றிருந்த பெண்தான்.

“எதாவது வேணுமாங்க?” என்று அவர்களை கலைத்தாள்.
அவளுக்கு அவள் கடுப்பு! அன்று அவளால் நிற்கக்கூட முடியாத நிலை. விடுப்பு எடுத்தால் சம்பளத்தில் பிடித்து விடுவர். இவர்கள் முடிவெடுக்கும் வரை சற்று அமரலாமென்றால் அதற்கும் ‘கஸ்டமர் வந்தபொழுது பார்த்து செய்யவில்லை’ என்றுவரும். அவர்கள் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியே செல்லும்வரை அவள் பொறுப்பு. மற்றவளிடம் ஒப்படைக்கலாம் என்றால். அதற்கும் தனி கதை கிளம்பும். என்றெண்ணியவள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் அவர்கள் எதையும் தெரிவு செய்யாமல் பேசிக் கொண்டிருக்க என்ன வேண்டுமென்று கேட்டுவிட்டாள்.

அவளது கேள்வியில் அவள் புறம் திரும்பிய மகிழன்,
“இல்ல…இங்க எல்லாம் பார்பி,எல்ஸானுதான் இருக்கு… இல்லன்னா கிட்சன் செட், ஸாஃப்ட் டாய்ஸ்… மாதிரிதான் இருக்கு… வேற மாதிரி எதுவும் இருக்கா? லைக்… கொஞ்சம் யூஸ்ஃபுல்லா..கத்துக்கறமாதிரி..??” என்று கேட்ட மறுகணம் மற்றவள் முகத்திலும் புன்னகை அரும்பியது.

ஜீவனின் எண்ணவோட்டமும் கிட்டத்தட்ட அதுவே!
‘பொண்ணுங்களுக்கு கார்..பாஸ்கெட் பால் ரகங்கள் பிடிக்காதா?..இல்லை பசங்களுக்கு ஸாஃப்ட் டாய்ஸ் பிடிக்காதா? இவனுங்களே முடிவுகட்டிருவானுங்கபோல!’ இது அவன் மைண்ட் வாய்ஸ்!

அவனை வலது பக்கத்தின் மூலைக்கு அழைத்துச் சென்றவள்

“இங்க பாருங்க” என்றுவிட அவன் பார்வையும் ஆர்வமாய் அந்த ரேக்குகளை ஆராய்ந்தது. முதல் இரண்டு ரேக்குகளில் நிறைந்திருந்த கலரிங்க் புக்ஸையெல்லாம் தாண்டி மூன்றாவது தட்டில்… வீற்றிருந்த அகலமான பெட்டி ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது.

அதை கண்டுக் கொண்டவளாக, “இது Name block puzzle சர்” என்று சாம்பிள் பீஸ் ஒன்றை பிரித்து காட்டினாள்.
நல்ல திடமான அட்டையில் சட்டங்களிருக்க அதற்கு ஏற்றார்போல தனியாக ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ஒவ்வொன்றாய் அதில் பொருத்தி வார்த்தைகளை கற்கும்படி இருக்க அதை பார்த்து நின்றவனிடம் இன்னொன்றை நீட்டினாள் அவள்.

“இது wooden jigsaw puzzle சர்” என்று அவனிடம் கொடுக்க அவன் அதை ஜீவனிடம் காட்டினான் அபிப்ராயத்திற்காக.

மரத்தால் ஆனதை போன்றதொரு உணர்வை கொடுக்கும் அந்த போர்டில் விதவிதமாய் வடிவங்களை பொருத்துவதற்கு ஏற்றார்போலிருக்க அதற்கு கீழ் ட்ரையாங்கிள்,சர்கிள், போன்ற வார்த்தைகள் வெவ்வேறு வண்ணங்களில் எழுதப்பட்டிருக்க அதே நிறங்களில் அந்த வடிவங்களுக்கும் இருந்தன.

அண்ணன் தம்பி இருவருக்கும் அந்த இரண்டையும் பிடித்துப்போக இரண்டையுமே வாங்கிக் கொண்டனர்.

“எத்தன மணிக்குடா கேக் கட்டிங்??” என்று கேட்டவாறே உண்டு முடித்த தட்டை தூக்கிக் கொண்டு அடுக்களைக்குச் சென்றான் மகிழன்.

உணவு ஒன்றே பிரதானம்போல… குனிந்த தலை நிமிராமல்.. கைக்கும் வாய்க்கும் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஜீவன் இவன் கேள்வியில் தலை நிமிர்த்தினான்.

“ஆறரை மகி! “என்றவன் மறுபடியும் பாஸில் வைத்துவிட்டு வந்த தன் யுத்தத்தை தொடர்ந்தான்.

“அப்போ… ஒரு அஞ்சே முக்கால்வாக்குல கிளம்பலாம். சரியாயிருக்கும்!” என்ற மகிழனுக்கு தலையை மட்டும் சம்மதமாய் அசைத்தான்.


“இந்த காஃபிய குடிச்சிட்டு பண்ணுங்க. எவ்வளோ நேரமாச்சு” என்று ஒரு பெரிய காஃபி ட்ரேயுடன் அறை வாசலில் வந்து நின்றாள் இலக்கியா.

யுக்தா கீழே நின்று பிடித்திருக்க மரத்தாலான ஸ்டூல் ஒன்றின்மேல் ஏறி நின்றவாறு அடர் கத்திரிப்பூ நிற பூ ஒன்றை ஒட்டிக் கொண்டிருந்தாள் முகிலினி.

அதைக் கண்டவளின் கண்கள் விரிந்தன,”வாவ்வ்வ்!!! அப்படியே பாக்கும்போதுகூட அவ்வளோவா தெரியல…ஆனா இப்போ வெள்ள கலர் பெயிண்ட் பேக்ரௌண்ட்ல பாக்கும்போது… அவ்வளோ ஃப்ரெஷ்ஷா!! அப்படியே உண்மையான பூ மாதிரி இருக்கு முகி!!!” என்றவள் வந்த வேலை நினைவு வர

“காஃபி எடுத்துக்கங்க ரெண்டுபேரும்… ப்ரேக் வேணாமா??” என்க, அதில் கைகடிகாரத்தில் கவனம்பதித்த முகிலினி

“அஞ்சு நிமிஷம் இலா! ஃப்ரெஷ்ஷாயிட்டு வந்துடறேன். வெளில போகவேண்டியிருக்கு!” என்று உரைத்தவள் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
முகம் துடைத்து வந்தவள் கையில் வாட்ச்சை கட்டியவாறு காஃபி கோப்பையை தூக்கிக் கொண்டு அந்த அறையின் பால்கனிக்குச் சென்றாள்.

காஃபி உள்ளே இறங்க இறங்க புது தெம்பு வருவதுபோலிருக்க அருகில் நின்ற யுக்தாவுடன் இணைந்து பேசியபடி கண்ணெதிரே விரிந்திருந்த காட்சிகளை பார்த்து நின்றாள்.

“சரி யுகா! நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றவள் கிளம்ப யுக்தாவோ அவளை தடுத்து நிறுத்தியவளாக,

“அத்தனை பலூன எப்படி கொண்டு வருவ நீ?? அதுவும் ஹீலியம் பலூன் வேற! ரெண்டு நிமிஷம் இரு! நானும் வரேன்!” என்றுவிட்டு கை பையை எடுக்கச் சென்றாள் யுக்தா.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பேஸ்மெண்ட்டில் வண்டியை நிறுத்தியவன் பரிசு பொருள் அடங்கிய பையை தூக்கிக் கொண்டு ஜீவனுடன் லிஃப்ட்டை நோக்கி முன்னேறினான்.

முதல் தளத்தை அடைந்தவர்கள் இருவரும் இலக்கியாவின் அப்பார்ட்மெண்டடினுள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்தவனின் நாசியில் வந்து மோதியது அதே ஃப்ரென்ச் லாவண்டரின் வாசம்!! கண்ட காட்சியில் கண்கள் விரிய நின்றிருந்தனர் இருவரும்.

அடர் கத்திரிப்பூ நிற பலூன்களும்… அதற்கு இடையில் வெளிறிய கத்திரிப்பூ நிற பலூன்களும் அந்த வெள்ளை நிற உத்தரத்தை மறைத்தவாறு… வானை முட்டி நிற்கும் லாவண்டர் மேகங்களாய் காட்சியளித்தன.

ஸிக்ஸாக்காக தொங்கவிடப்பட்டிருந்த பூக்களும் அதே இரு நிறங்களில்!!
பந்தைப்போல உருண்டு நின்ற பேப்பர் பூக்களை கண்டவனுக்கோ ‘சாமந்தி லாவண்டர் கலர்ல இருந்தா இப்படிதானிருக்குமோ??’ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

கேக் வைத்து வெட்டுவதற்கென வைக்கப்பட்டிருந்த மேசை முதல் அனைத்திலும்… லாவண்டர்!...லாவண்டர்!...லாவண்டரே!!!

வெள்ளைநிற பிண்ணனியில் பூத்து நின்ற பூக்கள் என்று அத்தனையையும் பார்த்து நின்றவனின் மனம் தித்தித்தது!

சில வண்ணங்களுக்கு மட்டுமே உண்டானது! அதை பார்க்கும்பொழுதே எழும் அந்த தித்தித்திப்புணர்வு..!!

அந்த அழகியலில் லயித்து நின்றவனுக்கோ “முகி எப்பவுமே பெஸ்ட்!!” என்ற தம்பியின் வார்த்தைகள் அவன் செவிப்பறையை தீண்டவேயில்லை!

அவன் கவனத்தை கலைத்தது அவனை வேக நடையுடன் கடந்துச் சென்ற பெண் ஒருத்தி.

அவளைக் கண்டவனின் கண்களிலோ இரசனையின் சாயல்!!
காரணம் அவளது உடை! அதன் நிறம்!!

அதே அடர் கத்திரிப்பூ நிறத்தில் முழங்கைவரை நீண்டு.. இடுப்பில் இருந்து சில சென்ட்டிமீட்டர்களை மட்டும் தாண்டி நின்ற ஷாட் டாப்பும்! கணுக்கால்வரை மட்டும் நீண்டு நின்ற கருப்பு ஜீன்ஸ்!! கழுத்தை சுற்றியிருந்த வெளிர் நிற ஸ்கார்ஃப்!!! கிட்டத்தட்ட வெளிறிய குறிஞ்சிப்பூவின் நிறத்தில்..!!

“ஹே!!! மகி...ஜீவா... வாங்க வாங்க!!” என்று உற்சாக குரலெழுப்பியபடி வந்த இலக்கியா அவன் கவனத்தை கலைத்து… உள்ளே அழைத்துச் சென்றாள்.


அவர்களிருவரையும் அமரவைத்தவள் குடிக்க வென்று கையில் ஒரு தம்ளர் குளிர்பானம் ஒன்றை கொடுத்துவிட்டு மற்ற விருந்தினர்களையும் கவனிக்கச் சென்றாள்.
அதே சோஃபாவில் அவன் அருகில் அமர்ந்திருந்த குழந்தை ஒன்று அவன் கையை தெரியாமல் தட்டிவிட அந்த பானம் அவன் வெள்ளைநிற சட்டையை பதம்பார்த்தது. மன்னிப்பாய் நோக்கிய பிள்ளையின் தாயிடம் புன்சிரிப்பொன்றை பரிசளித்தவன் “நோ ப்ராப்ளம்!” என்றுவிட்டு குளியலறைக்குச் சென்றான்.

வந்த குழந்தைகளுள் ஒரு குட்டிப் பெண் கதவை சாத்துவதாக எண்ணி அதை பிடித்து தள்ள அதுவோ தொங்கிக் கொண்டிருந்த wind chime-ல் பட்டு கீழே விழுந்தது.

‘தொப்’என்ற சத்தத்துடன் கீழே விழுந்ததையே மிரண்ட விழிகளுடன் அழுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பிள்ளையை அத்தனை நேரம் அதற்கு எதிர் அறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த முகிலினி ஓடிவந்து அவளை தூக்கிக் கொண்டாள்.

“பாப்பா எதுக்கு அழறீங்களாம்??” என்றவள் குரலை தணித்து கேட்க குழந்தையோ அங்கு கீழே கிடந்ததை சுட்டிக்காட்டினாள்.

“வீந்திருச்சி” என்று உதடுபிதுங்க உரைத்தவளையே பார்த்த முகிலினி

“இவ்வளவுதானா?? நான் மாட்டிடறேன் அத!” என்றாள் சமாதானமாக.

“நெஜமா??” என்று உறுதிசெய்துக்கொள்ளும் குரலில் கேட்ட பிள்ளையிடம்

“நெஜம்மா!!” என்று வாக்கு கொடுத்திருந்தாள் முகி.

அதற்குள் அங்கு வந்த பெண்ணொருத்தியிடம் குழந்தை தாவிக் கொள்ள சொல்லாமலேயே புரிந்தது அவள்தான் அம்மாவென்று. தாயின் கழுத்தை கட்டிக் கொண்டவள் பார்வையை இவளிடம் பதிக்க முகிலினியும் கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள் மாட்டிவிடுவதாக.

அவர்களிருவரும் அங்கிருந்து அகல… கீழே விழுந்துக் கிடந்ததை அவள் எடுத்துப் பார்த்தாள். கீழே தொங்கியபடி நிற்கும் இதயவடிவங்களில் ஒன்று தனியாக கிடந்தது. அதன் கம்பியை வளைத்து பொருத்தியவள் கொக்கியில் மாட்ட முயல அதுவோ அவளுக்கு அன்னாந்து பார்க்கும் உயரத்தில்.

அவள் கண்களிரண்டும் நாற்காலியை தேட கிட்டியதோ மரத்தாலான ஸ்டூல். அதில் ஏற வேண்டும் என்றால் யாராவது கீழிருந்து யாராவது பிடித்துக் கொள்ள வேண்டும்.

அவள் கண்களில் பட்டது அந்த குளியலறை!!

அவளுக்கு மிக அருகே இருந்த ஒன்று! வெளிபக்கம் பூட்டப்படாமல் இருந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள்போலும் என்று எண்ணியவள் அந்த ஸ்டூலை குளியலறை கதவோடு ஒட்டிப் போட்டவளாக மேலே ஏறிவிட்டாள்.

எக்கி நின்று அதை மாட்டியவளுக்கு அப்பொழுதுதான் ஒன்று உரைத்தது. குளியலறைக் கதவை யாரும் திறந்துவிடக்கூடாதே!! என்றவள் எண்ணிக் கொண்டிருக்கும்பொழுதே கதவு திறக்கப்பட்டிருந்தது.

அவ்வளவுதான்!!! என்று நினைத்தவள் லாண்டாகியதோ இரு கரங்களில்!!!


சட்டையில் கொட்டியிருந்ததை லேசாக தண்ணீர்விட்டு துடைத்தவன் பின் உடையை சரிசெய்துக் கொண்டு கதவைத் திறக்க ‘க்டக்!’ என்ற ஸ்டூல் ஆடும் சத்தத்தில் அவன் நிமிர அடுத்த கணம் அவன் கைகள் தாமாகவே அவளை தாங்கிப் பிடித்திருந்தன.

ஓர் நொடி அதிர்ச்சியில் உறைந்தவன் மறுகணம் அவளில் கவனம்பதிக்க அடுத்தக்கட்ட அதிர்ச்சி!!

‘இவ.. அவ-ல???’ என்றெண்ணியபடியிருக்க மெல்ல மெல்ல விழிகளைத் திறந்தவளோ அவனைக் கண்டு முதலில் அதிர்ந்து பின் எதையும் பிரதிபலிக்காத முகபாவத்துக்கு மாறியிருந்தாள்.

“முகி!!!” என்ற பதற்ற குரல்கள் இரண்டு ஒன்றாக பதறியது.

அவள் தலையை திருப்ப அங்கோ யுக்தாவும்,ஜீவனும். அவளைத் தேடி யுகா வந்திருப்பாள்… ஆனால் ஜீவா…??? என்றெண்ணியவளின் எண்ணங்கள் தடைபட

சுற்றத்தை உணர்ந்தவர்களாக இருவரும் விலகினர். அவள் கீழிறங்கிய மறுநொடி அவளிடம் விரைந்த யுக்தா “எங்காச்சும் பட்டுச்சா?? கூப்பிட்டிருக்கலாம்ல? என்ன முகி!!” என்று பேசிக் கொண்டே போக அவளை ஒரு நொடி லேசாக அணைத்தாள் முகி. “எனக்கு ஒன்னுமில்ல யுகா!” என்றவள் ஹாலுக்குச் சென்றுவிட்டாள்.

இது உள்ளே நடந்ததால் யார் பார்வையிலும் விழாமல் போனது.

“என்னாச்சு மகி??” என்ற தம்பியிடம் நடந்தவற்றை அவன் உரைக்க… மகிழனையே புருவ மத்தியில் சிறுமுடிச்சுடன் பார்த்த ஜீவனோ

“உனக்கு அவங்கள தெரியலையா மகி??” என்றான் சந்தேகமாய்.

ஜீவனின் கேள்வியில் இன்னும் குழம்பியவன் இல்லையென்று உதட்டை சுழித்தான். ஜீவன் எதோ சொல்லவர அதற்குள் இலக்கியா வெளியே அவன் பெயரை ஏலம்போட தொடங்கிவிட்டாள்.

மகிழனையே ஒரு பார்வை பார்த்தவன் சென்றுவிட்டான்.


கச்சேரி களைகட்டும்!!!!!!!
 
Wow...Wow ...Hero correct ah catch pidichu tan....Darling violet sema sema...Enaku romba pidicha clr...Heroine velir kurinji poo...Luv u da...sema
 
Top