Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி..(E8.2)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
கச்சேரி-8.2


"புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...
அந்த மணமகள்தான்
வந்த நேரமடா..." என்ற பாடல் வரிகள் அந்த மண்டபத்தை நிரப்பியிருக்க

'எல்லாம் என் நேரமடா!!!' என்று புலம்பியபடி அவனருகில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் அவன்.. அகமகிழன்..!!

அத்தனை நேரம் அவன் இடது காலின் வலியினால் ஏற்பட்ட எரிச்சலில் இருந்தவன் பக்கத்தில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவளைக்காண… அவளும் அவனைதான் பார்த்திருந்தாள்.

ஒருவரை ஒருவர் பார்த்திருந்த இருவருள்ளும் இனம்புரியாத நிம்மதியுணர்வொன்று எழ எங்கிருந்தோ வந்து எதிர்பாராமல் உரசிய தென்றலாய் இதழ்களில் சிறு கள்ளச்சிரிப்பொன்று தாமாய் மலர்ந்திருந்தது இருவரிலும்!!
மணவாழ்வின் தொடக்கமான அந்நிகழ்வின் ஒவ்வொரு நொடியும்… மகிழ்ச்சியில் தொய்த்த மணித்துளிகளாய்….. அவர்களே அறிந்திரா தருணம் கதவை தட்டிய குதூகலத்தை கையில்பிடித்தவர்களாய்… அத்தனை மகிழ்வும்… பெற்றோர்களின் நெகிழ்வுமாய்…
ஆர்ப்பாட்டமாய் நடந்தேறியது அவர்களின் கல்யாண கச்சேரி….

இரவு நேரத்திற்கே உரித்தான குளுமையும்… வானில் ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்ச்சத்திரங்களும்… வெள்ளி தகடாய் மின்னும் நிலவும்... தனிமையின் இனிமையுமென அந்த அறையின் பால்கனியில் நின்று விட்டத்தை வெறித்திருந்தான் மகிழன்..!!

இன்னுமே அவனால் நம்ப இயலவில்லை அவனுக்கும் முகிலினிக்கும் கல்யாணமாகிவிட்டதென… நேற்றைய இரவிலிருந்து நடந்தவை எதையும் அத்தனை சுலபமாக எடுத்துக் கொள்ள கூடியவை அல்லவே!?
இன்னும் அவனுக்கு ஆச்சர்யமே!!
ஃப்ரெண்ட்டுக்கு ஒன்னுன்ன ஒடனே… எவ்வளோ பெரிய ரிஸ்க் அது?!! அதுவும் அந்த நேரத்துல… நான் பாக்கலன்னா…???? அவள் சமாளித்திருப்பாள்தான்…இருந்தும்... என்றோடிய எண்ணமே அவனை உலுக்கியது!! மனமோ அதன் போக்கில் போய்க்கொண்டிருக்க ஏனோ பாதி வழியில் கைப்பிடித்து ஓடிவந்தவள் நின்று கடகடவென சிரித்த அவளின் முகமே நினைவில் வந்து அவன் இதழை சிறிதாய் வளைத்திருந்தது!!

அவன் எண்ணத்தில் நிறைந்தவளே அந்த அறையினுள் நுழைந்தாள்.
கதவை தாழிட்டவளாக அழகாய் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் வந்தமர்ந்தவளைக் கண்டவனோ.. பால்கனியிலிருந்து அறையினுள் வந்திருந்தான்.

அமைதியாய் வந்தமர்ந்தவளிடம் “என்ன முகில்??” என்று வினவியவாறே அவளுக்கு எதிரில் அமர்ந்துக் கொண்டான் மகிழன்.

“ஒன்னுமில்ல!” என்றவள் அமைதியாகிட அவனுக்குமே அதற்குபின் என்ன பேசுவதென்று தெரியவில்லை….
பொறுத்து பொறுத்து பார்த்தவனால் அதற்குமேலும் அமைதி காக்கமுடியவில்லை! எவ்வளவு நேரம்தான் விட்டத்தையே வெறித்திருப்பது??!! அவன் ஃபோனை வேறு கீழே வைத்துவிட்டிருந்தான். இல்லையெனில் அதையாவது நோண்டிக்கொண்டு நேரத்தை கடத்தியிருப்பான். மறுபடியும் பேச்சை தொடங்கினான் அவன்…

“ரொம்ப போரடிக்குதுல…??” என்றவனையே பார்த்தவளோ

"சரி....அப்போ பாடு!" என்றிருந்தாள் எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலிக்காது. அவளையே பார்த்திருந்தவனுக்கும் உள்ளுக்குள் ஆசைதான்...அவளை பார்த்து

'ஏ!!! சண்டிக் குதிரை...வாயேண்டி எதிரே'னு பாட... ஆனால் எங்கு தான் பாடி அவள் அதை கேட்டப் பிறகு,

'திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா'னு வந்துட்டா...என்ன பண்ணறது??? என்றெண்ணியவனோ
சமாளிப்பாய் சிரித்தான்,தப்ப வேண்டுமே?!
ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில்தான் அவளில்லையே..

இயல்பிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல்..தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்திருந்தவன் அவள் முகத்தை அப்பொழுதே கூர்ந்து கவனித்தான்...

அவள் எதையோ மனதுக்குள் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிய அவனுக்கோ… ‘சாந்திரம் வரைக்கும் நல்லாதானே இருந்தா?? இப்போ என்னாச்சு இவளுக்கு??’ என்றுதானிருந்தது.

அத்தனை நேரம் சிரித்த முகமாய் இருந்தவளுக்கு திடீரென என்னவாயிற்று?? என்ற கேள்வியே எழ…

"ஹே! என்ன முகில் இதெல்லாம்???"... என்றவனின் குரல் என்ன சிம்ரன் இதெல்லாம் டோனில் ஒலிக்க அவளோ
"என்ன??" என்றாள் எதையும் பிரதிபலிக்காமல். முகிலினிக்கோ அவளிடமே…அவளுக்கு அவளே கேட்க வேண்டிய பல கேள்விகள் இருந்தன… இது இன்று நேற்றல்ல மகிழனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து…ஏன் அதற்கு முன் அவள் சரியென்று சம்மதம் தெரிவித்ததிலிருந்தே இதே கேள்விதான் அவளுள்!! எதற்காக சம்மதித்தோம்?? என்ற வினா முளைக்கும்பொழுதெல்லாம் அதை அமிழ்த்தியிருந்தவளால் காலையில் யுக்தாவும் அதையே கேட்டுவிட… அது அப்பொழுது உறைக்காவிட்டாலும்… இப்பொழுது அவளை குழப்பியது.

‘ஏன்??’ என்று எழுந்த கேள்விக்கு. பதில்தான் அவளுக்கு கிடைக்காமல்போனது… இருந்தும்…

ஏன்?? எதுக்குனே கேக்காம அவனால எப்படி வர்ற முடிஞ்சது??...


சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைக் கண்டவனுக்கோ, என்ன இவ? என்றிருந்தாலும் அவன் மனம் வேறொன்றில் வேரூன்றிப்போக...
"நீ இந்த படமெல்லாம் பாக்கமாட்டீயா??" என்றான் சம்பந்தமேயில்லாமல்.
அவனது திடீர் கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவளோ “என்ன??” என்றாள் கேள்வியாய்.

"என்ன முகிலு!" என்று போலியாய் அலுத்துக்கொண்டவன் ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு அறைவாயில்வரைச் சென்றான்.

‘என்னாச்சு இவனுக்கு??’ என்றவள் பார்த்திருக்க அவனோ பூட்டப்பட்டிருந்த கதவில் சாய்ந்து நின்றவனாக,
“நீ இந்த ஃப்ர்ஸ்ட் நைட் ஸீன்லாம் பார்த்ததில்லையா?? சாஸ்த்திர சம்பிரதாயமே தெரியல!! நீ பாட்டுக்கு தேமேன்னு வந்து உக்காந்துட்ட!” என்க முதலில் என்ன பேசறான் இவன்?? என்று விழித்தவள் பிறகு புரிந்துவிட.. லேசாக விரிந்த சிரிப்பை அடக்கியவளாய் எழுந்து நின்று ‘அச்சோ’ என்று ஒரு கையை தலையில் வைத்து இன்னொரு கையை உதறியவளாய்..

“எனக்கு தெரியாதுங்களே!!” என்றாள் பேந்த பேந்த விழித்து.
அவளது பாவனையில் ‘பரவால்லயே!!’ என்று மெச்சிக் கொண்டவனோ,

“சரி சரி! நான் சொல்லித் தர்றேன்! அத அப்படியே ரிபீட் பண்ணு! ஒருவாட்டி மன்னிக்கறேன்!” என்றான் பெரிய மனதுபண்ணி.

அடங்கப்பா!! என்று கமெண்ட் அடித்த மனதை அடக்கியவளாய் கண்களில் குறும்பு மின்ன… “சரிங்க” என்றாள் அப்பாவியாய்.

“ம்ம் ம்ம்!” என்றவன் பின் பொறுமையாய் அந்த ஃப்ளாஸ்க்கை கையில் எந்தியவனாக.. பொறுமையாய் அடிமேல் அடிவைத்து… குனிந்த தலை நிமிராமல் என… 50ஸ் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்தான்.

கண்கள் விரிய அவனையே பார்த்திருந்தவளோ வாயைப்பொத்தி சிரிக்க… அவளிடம் வந்தவனோ “என்ன சிரிப்பு??!! போ போ!!” என்று அமர்ந்துவிட

ஏதோ ஒலிம்பிக் தீபத்தை பிடிப்பதுபோல் அந்த ஃப்ளாஸ்க்கை வாங்கியவளோ வாயில்வரை சென்றாள்.. அவன் செய்ததுபோலவே அடிமேல் அடிவைத்து நடந்து வந்தவளோ… அந்த ஃப்ளாஸ்க்கை டேபிளில் வைத்துவிட்டு கட்டிலின் மறுபுறம் நுனியில் அமர்ந்து அவன் முகம் கண்டவள்..

“ப்ராணநாதா!!” என்று மூக்கால் பேச… கேட்டிருந்தவனுக்கு மட்டுமின்றி சொல்லிய அவளுக்கே அதற்குமேல் அடக்கமுடியாமல் வெடித்துச் சிதறியது சிரிப்பு!!

அடக்கமாட்டாமல் சிரித்தவளிலேயே சில கணங்கள் அவன் விழிப்பார்வை இரசனையாய் படிந்தாலும் சுற்றத்தை உணர்ந்தவனாய் ஓடிச்சென்று அவள் வாயில் கைவைத்து அவளது சிலீர் சிரிப்பை அடக்கினான். அதுதான் அவனும் எதிர்ப்பார்த்தது.. அவளது அமைதியைக் கண்டுதான் அவன் தொடங்கி வைத்தான்… இருந்தும் அந்த நேரத்தில்… சிரிப்பு சத்தம் வெளியே கேட்டால்?? என்று தோன்றிவிட அடக்க முயற்சித்தான்.

ஓர் நொடி அதிர்ந்தவள்... அவன் செயலின் காரணம் புரிய இன்னுமின்னும் சீறிக்கொண்டுவந்த சிரிப்பில் அவனையே கேலியாய் பார்த்தவளின் உடல் மௌனச்சிரிப்பில் குலுங்க... விழிகளிரண்டின் விளிம்புகளோ கண்மையின் கடைசித் துளிகளாய் கசிந்தன..

“உஷ்!! முகில்! வெளில சத்தம் கேக்கப்போவுது!! மெதுவா!” என்றான்.

சற்று நிதானித்த முகியோ “நீ எப்பவுமே இப்படிதானா??!!” என்றாள் கிண்டலாய்.

அவள் கேள்வியின் அர்த்தம் உணர்ந்தவனோ “ப்ச் ப்ச்!! அப்பப்போ நார்மலாவும் இருப்பேன்!” என்றுவிட மறுபடியும் அங்கொரு சிரிப்பலை!!

“ஏன் அகன்… நீ என்ன எத்தன தடவ பாத்திருக்க??” என்றவளின் கேள்வியில் அவள்புறம் முழுதாய் திரும்பி அமர்ந்தவனோ “மொத தடவ ஜீவா காலேஜ் வாசல்ல பாத்தேன்…” என்று அன்றைய தினத்தை விவரித்தவன் ஒவ்வொன்றாய் உரைத்தான்.

“அனா எனக்கு மட்டும் உன்ன ஏன் ஞாபகமில்ல??” என்றவனின் கேள்வியில் புன்னகைத்தவள்.

“அது… நான் அவ்வளவா எந்த ஃபங்ஷனுக்கும் வந்ததில்ல… அதுனாலக்கூட இருக்கலாம்”

“ஓ…” என்று கேட்டிருந்தவனின் காலில் இவள் தட்டிவிட ஸ்ஸ் என்று அவன் லேசாக முனங்கவே அவளுக்கும் நினைவு வந்ததுபோலும்..

இருவரும் எதிரெதிரில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க “ஹே! என்னாச்சு?? “ என்று அவன் காலை கவனித்தாள்.

நன்றாக வீங்கியிருந்தது. அதை மெதுவாக தொட்டவளோ “வலிக்குதா??” என்க அவனோ “உயிரே போயிருச்சு!!” என்றான் வசனமாய்.

அவனை முறைத்து பார்த்தவளோ “அலைபாயுதே மாதவனாக்கும்??!! உனக்கெல்லாம் காலுல குண்டான தூக்கி போட்றுக்கனும்!!” என்றவாறு ஃப்ளாஸ்க்கில் இருந்த பாலை ஒரு க்ளாஸில் ஊற்றினாள்.

“அதான்.நீ விழுந்திட்டியே!!” என்றவனை முறைத்தவள் பெட்ஷீட்டை உருவி அதால் அந்த க்ளாஸை சுற்றி அதை அவன் இடது காலில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.
அவர்களது பேச்சும் கால்வாரல்களும் நீண்டுக்கொண்டே போக… ஒருகட்டத்தில் பேசிக்கொண்டே இருந்த முகி அப்படியே அந்த மெத்தையில் குறுக்காக படுத்து உறங்கிவிட… போர்வை ஒன்றை எடுத்து அவளுக்கு போர்த்தியவனாய் அவனும் உறங்கிப்போனான்…

மனதின் சஞ்சலங்கள் நீங்கியிருக்க…
கவலையற்று கண்ணயர்ந்திருந்தனர் இருவரும்…

கச்சேரி களைகட்டும்!!!!!!
 
Top