Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 01

Advertisement

lekha_1

Active member
Member
அனைவருக்கும் வணக்கம்.

போன மாதம் ஒரு டீசர் மட்டும் கொடுத்துட்டு ஓடிட்ட பொண்ணுங்க நானு. இதோ, இப்போது முதல் எபியுடன் வந்துட்டேன். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா...


காதல் 01
496
“ஏ… மாப்ளே!!!” என்றவாறு ஓடி வந்துகொண்டிருந்தான் அவன் அந்த வயல்வெளியில்.

அவன் யாரைத் தேடி வந்தானோ, அவனோ, அந்த வயலின் மற்றொரு புறத்தில் பாத்தி கட்டிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி வேகமாக சென்றவன், வயலில் இறங்கியிருந்தவன் தன்னை நோக்கி திரும்பியதும் அவன் கையில் இருந்த மண்வெட்டியை பிடுங்கி எறிந்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டான்.

“டேய் மாப்ளே! ரொம்ப சந்தோஷமா இருக்குடா… உன் ஆசை நிறைவேறிடுச்சுடா…” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் அவன், சக்தி.

“என்னன்னு சொல்லித் தொலடா… ஒன்னும் புரியல” என்றான் முகிலன்.

“இப்போதான் மாப்ளே நியூஸ்ல சொன்னாங்க, அடுத்த மேட்ச்ல உன் பேரயும் டீம்ல சேர்த்துருக்காங்கலாம். உன் போட்டோ எல்லாம் டீவில வந்துது மாப்ளே!” என்றான் சக்தி.

“அப்படியா மச்சான்!” என்று கேட்டவனுக்கு இது பழைய செய்திதான். அவனை டீமில் சேர்க்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள் என்று அவனுக்கு முன்பே தெரிந்திருந்ததுதான். இருந்தும், இருந்த போட்டியில் தன்னை எடுப்பார்களா இல்லையா என்று சாத்தியம் இல்லாதபோது அதைப் பற்றி பிறரிடம் கூறவேண்டாம் என்று யாரிடமும் அவன் அதுபற்றி கூறவில்லை. தற்போது வந்த செய்தி அவனுக்கு மகிழ்ச்சியளித்தது என்றாலும், அதற்கு தன்னை தயார் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமே மிகுந்திருந்தது. ஏனென்றால், அவன் அடைய நினைக்கும் உயரத்திற்கு இவை எல்லாம் படிக்கட்டுகள். இவற்றை சரியாக செய்தால் மட்டுமே அவன் தன் இலக்கை அடைய முடியும். இவற்றை எல்லாம் யோசித்து அவன் நிற்கவும்,

“என்ன மாப்ளே! அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்ட? உன் அப்பா உன்னை கையோட கூட்டிட்டு வர சொல்லிருக்காரு. வா, போவோம்” என்று அவனை அழைக்க,

“இரு மாப்ளே! முடிச்சுட்டு வந்துர்றேன்” என்றவன் தன் நண்பன் ஓரமாக வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து மீண்டும் வயலில் இறங்கினான்.

“ஏன்டா, உன் வாழ்க்கையே மாறப்போகுது, நீ என்னடான்னா இப்படி மண்ண பூசிட்டு நிக்கற?” என்றவனைப் பார்த்து சிரித்தவன்,

“அங்கேயும் நான் மண்ண பூசிட்டு தான நிக்கப்போறேன். எங்க போனாலும், எந்த நாட்டு மண்ண பூசி எழுந்தாலும், இதோ இப்போ நான் நிக்குறேன் பாத்தியா, இந்த இடத்தோட மண் தாண்டா எனக்கு ஒசத்தி. இதுதான் நம்ம எல்லாருக்கும் சோறு போட்டது” என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்.

அவன் கூறியதைக் கேட்டவன் ‘இவன் என் நண்பன்’ என்ற பெருமிதத்துடன் அவனைப் பார்த்தான். இருவரும் சேர்ந்து பாத்தி கட்டி தண்ணீரை மாற்றிவிட்டதும் பம்புசெட்டில் ஒரு மினி குளியல் போட்டுவிட்டு தங்கள் ஊரை நோக்கி நடந்தனர்.

அந்த ஊரில் முகிலின் தந்தைக்கு மிக்க மரியாதை. வழிவழியாக தருவதும் உண்டு, அவர் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பதால் தருபவர்களும் உண்டு. தானாக ஊர் விடயத்தில் தலையிடமாட்டார் என்றாலும், அவரை வருந்தி அழைத்து ஒவ்வொன்றிலும் தலைமைதாங்க வைத்துவிடுவர்.

இந்த வள்ளுவனுக்கு ஏற்றவாறு வாசுகியே மனைவியாக வாய்த்தார்; திருமணமான புதிதில் அவர் எல்லைக்கு செல்ல, அவரை அன்போடு அனுப்பி வைத்ததாகட்டும், அதன்பின்னர் வீட்டை எடுத்து நடத்துவதாகட்டும், அனைத்திலும் இந்த காதலனைக் கைபிடித்து அவர் காரியம் யாவற்றிலும் துணை நிற்பவர். தற்போது, அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு தங்கள் காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். அவர்களது மகன், முகிலன்; மகள் அயினி.

முகில்: தென்னாட்டு நிறமும், ஆறடி உயரமும், பயிற்சியினால் கிடைத்த உடற்கட்டும் அவனை ஆணழகனாக காட்ட, அவை அனைத்தையும் விட பசும்பால் போல் இருக்கும் மனம் அவனை பண்புள்ளவனாகக் காட்ட, மொத்தத்தில் அனைவரையும் தன்பால் இழுத்து வைக்கும் மாயக்காரன். சிறுவயதில் இருந்து அவன் ஆர்வம் ஒன்றே. அதற்கு அவன் பெற்றோரும் உறுதுணையாக இருக்க, அவன் ஆர்வம் பண்மடங்கானது. அந்த குறிக்கோளில் வெற்றிபெற பல தடைகள் கடந்து தற்போது கிடைத்துள்ளது முதல் வெற்றி அவனுக்கு.

வீதியில் நடந்து வந்தவனை வழிமறித்து, “அய்யா, முகிலு! ரொம்ப சந்தோசமுய்யா… நம்ம ஊரு புள்ள நாட்டுக்காக ஆடப்போகுது! என் ராசா!” என்று நெட்டை முறித்தார் ஒரு பாட்டி. அதனை புன்னகையோடு பார்த்திருந்தான் முகில்.

“சரி, சரி! அப்படியே உன் சந்தோஷத்த நாட்டுக்கோழி குழம்பா மாத்தி வைய்யு. மதியம் வீட்டுக்கு வாறோம்” என்று சக்தி சொல்ல, “அதுக்கென்ன, என் தங்கத்துக்கு இல்லாததா? அவனுக்கு தாறதுல கொஞ்சம் உனக்கும் ஊத்திட்டா போச்சு” என்று சொல்லிச்சென்றவரைக் கண்டு,

“கெளவிக்கு லந்தைப் பாரு முகிழு! ஏதோ அது கைமணம் நல்லா இருக்குமேன்னு கேட்டதுக்கு என்னையே கலாய்ச்சுட்டு போவுது” என்று அவன் அங்கலாய்க்க, “விடுடா!” என்று அவனை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் முகில்.

*****
“முகிலு! மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா… உங்க அப்பாவைப் போய் பாரு ராசா. அம்மா இனிப்பு எடுத்துட்டு வாறேன்” என்று எதிர்ப்பட்ட தாயார் சொல்லிச் செல்ல, அவனும் தன் தந்தையைத் தேடிச் சென்றான்.

மாடியில் இருந்த அறையில் தந்தை அவருக்கான நாற்காலியில் அமர்ந்திருக்க, உள்ளே நுழைந்தவன் தந்தையின் அருகில் சென்று மண்டியிட்டான். அவன் வருகையை உணர்ந்த அவன் தந்தையோ, ஒரு வார்த்தையும் பேசாமல் அவன் தலையில் கைவைத்தார். அவரது அந்த செய்கையே அவர் மனநிலையை எடுத்துக் கூற, அவர் கையை எடுத்து தன்னிரு கைகளுக்குள்ளும் வைத்து அவர் கண்களை நோக்கினான் முகில். இருவரது கண்களும் என்ன பேசிக்கொண்டனவோ, அவர்கள் மட்டுமே அறிவர்.
அதன்பின், இருவரது பேச்சும் வரவிருக்கும் போட்டியைப் பற்றி திரும்பியது. தந்தை கூறிய அறிவுரைகளை மனதில் ஏற்றிக்கொண்டவனுக்கு புதிய தைரியம் பிறந்தது.

****

You were the shadow to my light
Did you feel us?
Another star
You fade away
Afraid our aim is out of sight
Wanna see us
Alight

Where are you now?
Where are you now?
Where are you now?
Was it all in my fantasy?
Where are you now?
Were you only imaginary?

Where are you now?
Atlantis
Under the sea
Under the sea
Where are you now?
Another dream
The monster's running wild inside of me
I'm faded
I'm faded
So lost, I'm faded
I'm faded
So lost, I'm faded

These shallow waters never met what I needed
I'm letting go a deeper dive
Eternal silence of the sea, I'm breathing
Alive

Where are you now?
Where are you now?
Under the bright but faded lights
You've set my heart on fire
Where are you now?
Where are you now?

Where are you now?
Atlantis
Under the sea
Under the sea
Where are you now?
Another dream
The monster's running wild inside of me
I'm faded
I'm faded
So lost, I'm faded
I'm faded
So lost, I'm faded
என்று அந்தப் பெண் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாவனைகளிலும் குரலிலும் அவளை சுற்றியிருந்த அனைவரும் தங்களை தொலைத்திருந்தனர். அவள் முழுவதும் பாடி முடித்ததும் அவ்விடத்தை மௌனம் சூழ, மெதுவே அவள் மதுரகாணம் என்னும் மாயவுலகில் இருந்து வெளிவந்தவர்கள் தங்கள் கரகோஷங்களை எழுப்பினர். அதில் கண்திறந்தவள் தன்னை சுற்றியிருக்கும் தன் தோழர்களைக் கண்டாள்.

“வாவ் அனி. சூப்பரா இருந்துச்சு” என்றாள் அவள் அருகில் வந்த பாயல்.

அதற்கு மெலிதாக புன்னகை பூத்தவள், “தேங்க்ஸ்யா! பட், நாம இன்னும் நிறைய தடம் பயிற்சி செய்யனும். இந்த காண்சர்ட் மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா நம்ம பேண்ட் நேம் எங்கேயோ போய்விடும்” என்றாள்.

“ஹே! நோ வர்ரீஸ்! நீ வேணா பாரு, இந்த டைம் எல்லாம் நல்லபடியா முடியும்” என்று அவளை சமாதானம் செய்தாள் பாயல். அதனை ஆமோதித்தான் அவர்களது நண்பன் ஆலன்.

அனி என்று மற்றவர்களால் அழைக்கப்படும் அனிலா, கனடாவில் AAP என்னும் பேண்டினை கடந்த ஒன்றரை ஆண்டாக நடத்தி வருகிறாள். அவர்களிடம் திறமையிருந்தும் பெரிதாக ஜொலிக்க முடியாமல் இருந்தது. அப்பொழுது தான் ஆலனுக்கு பல்வேறு பாடல்களை கவர்களாக செய்து யூட்யூபில் பதிவேற்றம் செய்யலாம் என்ற யோசனை தோன்ற, அதனை செயல்படுத்தத் தொடங்கினர்.
முதலில் ஆங்கிலப்பாடல்களைத் தொடங்க, அதற்கு சிறிது வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சிறிது சிறிதாக வியூஸ்களும் லைக்ஸ்களும் குவிந்தன. பார்வையாளர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள் என்று அறிந்தவர்கள் அவர்களைக் கவர பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று போட்டுத்தாக்க, எல்லாமே வெற்றிதான். அதன்பின், அவர்கள் தயாரித்த ஆல்பமும் பதிவேற்ற, அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாடல்கள் வாட்ஸப் ஸ்டேட்டஸாகவும் டிக்டாக் வீடியோக்களாகவும் வைக்கப்பட, அவர்களது குழு உலகெங்கும் அறியப்பட்டது. இதனைக் கண்ட ஒரு புகழ்பெற்ற கம்பெனி அவர்களை தங்களுக்காக கண்செர்ட் செய்து தரச் சொல்லி கேட்க, உடனே ஒத்துக்கொண்டனர் அனைவரும்.
அவர்கள் செய்யப்போகும் முதல் பணி. இது நன்றாக அமைந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகம் ஏற்படும் இசையுலகில். எனவே, அதற்காக தற்போது தீவிரமாக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

*******
“ஹாய் முகில்! எப்படி இருக்க? கங்கிராட்ஸ் மேன்!” என்றான் தீபக். அவனும் முகிலும் ஒரே இடத்தில் தான் பயிற்சி மேற்கொண்டார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்கள். தீபக்கிற்க்கு வெகு விரைவிலேயே இந்திய அணியில் இடம் கிடைத்திட, முகிலுக்கு சிறிது தாமதமானது. திறமைசாலியான முகிலுக்கு இடம் கிடைக்காதது தீபக்கிற்கு வருத்தமே! ஆனால் தற்போது அவனுக்கு கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான் தீபக்.

“மச்சான்! நல்லா கேட்டுக்கோ, நீ சீக்கிரமே ப்ராக்டீசுக்கு வரனும். அப்போ நான் உனக்கு மத்த விஷயங்களை சொல்றேன். இப்போ நம்ம டீம்ல தோனி இல்ல. சோ, அவரோட இடத்தை நிரப்புற மாதிரி ஒரு திறமையான விக்கெட்கீப்பர் வேணும். இன்னும் அப்படி யாரும் கிடைக்கலைன்னு தான் சொல்லனும். உன் டேலண்ட் என்னன்னு எனக்கு நல்லா தெரியும். நீ தான் இதற்கு சரின்னு என் மனசுக்கு படுது. அதை ப்ரூஃப் பண்ண ஒரு நல்ல டைம் இது. பட், நம்ம இப்போ எதிர்த்து நிக்கற டீம்ஸ் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து. சோ, அதையும் நாம நல்லா பாத்துக்கனும். இப்போ ஃப்ரீயா இருந்தா இந்த ரெண்டு டீம்லயும் ஆடப்போற ப்ளேயர்ஸ் பத்தியும், மேட்ச் நடக்குற கிரவுண்ட்ஸ் பத்தியும் ஒருதடம் பார்த்துட்டு வா” என்ற அந்த வளர்ந்த கிரிக்கெட் வீரன், தன் நண்பனிடம் மேலும் சிலவற்றைப் பேசிவிட்டு தொலைப்பேசியை வைத்தான்.

முகிலின் உயிர், மூச்சு அனைத்தும் கிரிக்கெட் மட்டுமே. வளரும்போது சச்சினால் கிரிக்கெட்டை ஆட ஆரம்பித்தவன், வளர்ந்தபின்னர் தோனியை தன் மானசீக குருவாகக் கொண்டான். அவனது இந்த செய்கையோ என்னவோ, சில பல தருணங்களில் அவரைப் போன்றே அவன் செயல்களும் இருக்கும். களத்திற்கு உள்ளும் சரி, வெளியிலும் சரி, அவன் ரசிக்கும் அந்த வீரனுக்காகவே பேட்டிங்கும் விக்கெட்கீப்பிங்கும் தேர்ந்தெடுத்தான். ரஞ்சிக் கோப்பையில் அவன் விளையாடிய விதத்தைக் கண்டு அவன் குருவே அவனை பரிந்துரை செய்ய, முதல்முறையாக கடந்த ஆண்டு அவன் ஐபிஎல்-ல் விளையாடினான். அது அவனுக்கு நல்லதொரு அறிமுகம் தந்தது.

ஐபிஎல்-ல் அவன் விளையாடி பெற்ற வெற்றிகள் தற்போது இந்திய அணிக்கு அவன் பெயரை சேர்க்கும் அளவிற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று அவன் திறம்பட விளையாட வேண்டும்.
இவற்றையெல்லாம் நினைத்தவன், தன் நண்பன் கூறியதுபோல் அடுத்து நடக்கப்போகும் முத்தரப்பு போட்டிக்கான வேலைகளில் இறங்கலானான்.

******
மும்பை
“மாப்ளே! என்னடா… இவ்வளவு நெரிசலா இருக்கு?” என்றான் சக்தி.

“இது மும்பை மச்சான். இங்க இப்படித்தான் இருக்கும்” என்று அவனை அழைத்துக்கொண்டு தாங்கள் தங்கவிருக்கும் விடுதியை நோக்கி சென்றான் முகில்.

இருவரும் ஒப்பந்தம் கையெழுத்திட பிசிசிஐ அலுவலகம் வந்திருந்தனர். பயணக்களைப்பு தீர குளித்தவர்கள் வாங்கடே ஸ்டேடியம் நோக்கி பயணப்பட்டனர்.

அங்கே பிசிசிஐ தலைவர்களை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவன் சக்தியை கூட்டிக்கொண்டு மரைன் டிரைவ் செல்லும்போது மாலையாகிவிட்டது.

மும்பை அவனுக்கு என்றுமே பிடிக்கும் ஊர். அவர்கள் ஊரின் அமைதி ஒரு வகை அழகென்றால், இங்கிருக்கும் பரபரப்பு மற்றொருவகை அமைதி. சில சமயங்களில் ஏதேனும் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் பலமணி நேரம் காரணமே இல்லாமல் அமர்ந்து கடந்து செல்லும் மனிதர்களை பார்த்திருக்கிறான். அது அவனுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

ஆனால், தற்போது மனம் அமைதியைத் தேடி செல்ல, நண்பனை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டான். நல்லவேளை, அவன் வந்த நேரம் கூட்டமில்லை. இரவாக கண்டிப்பாக கூட்டம் சேர்ந்துவிடும். அதுவரை இங்கேயே இருக்கலாம் என்று நினைத்தவன் அங்கே அமைத்திருந்த சுவர்களில் அமர்ந்து கடலை நோக்கி அமர்ந்து கொண்டான்.

சக்தியோ, தனது மிகவும் முக்கியமான வேலையில் ஈடுபட துவங்கிவிட்டான். (அதுதாங்க, சைட் அடிப்பது)

திடீரென்று சக்தி முகிலை உலுக்கி, “மச்சான், நான் சாமியாரா போறேன்டா!” என்க,

அதில் எண்ணம் கலைந்த முகிலோ, “என்ன மாப்ளே சொல்ற?” என்று ஒன்றும் புரியாமல் வினவினான்.

“பின்ன என்னடா! அங்க பாரு! நண்டு சிண்டு எல்லாம் ஜோடி போட்டுட்டு போகுது. இருபத்தியஞ்சு வயசாச்சு! இன்னும் ஒரு பொண்ணு மாட்டல! சரி, நாமலே போய் ஏதாவது ட்ரை பண்ணலாம்னு ஒரு பொண்ணு கிட்ட பேசப்போனா, பையான்னு சொல்லிருச்சு.அப்படின்னா என்னன்னு நம்ம கூகிளாண்டவர் கிட்ட கேட்டா, ‘அண்ணா’ன்னு சொல்லுறாருடா! எப்படி மச்சான் எல்லா ஊர் பொண்ணுகளும் இப்படி சொல்லிவைச்ச மாதிரி அவங்கள சுத்தற பசங்கள அண்ணான்னு சொல்லியே கவுத்துடறாங்க? நஸ்‌ரியா இங்க கூடவா ஃபேமஸ்?” என்று புலம்பினான் சக்தி.

அதில் சிரித்தவன், சக்தி முறைக்கவும், சிரிப்பை அடக்கியபடி, “இதுக்கும் நீ சாமியாரா போறதுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று கேட்டான்.

“சிங்கிள் பசங்க சாபம் பலிக்கும் மச்சான். அதுவும் நான் 90’ஸ் கிட், மொரட்டு சிங்கிள் வேற. அதான் சாபம் குடுத்து சாமியாரா போகலாம்னு” என்று அவன் சொல்ல,

“போடா! எங்கேயோ ஃபேஸ்புக்ல பாத்துட்டு வந்து ஒளரிட்டு இரு” என்று அவன் தலையை தட்டினான் முகில்.

முகில் தட்டியும் தன் தலையை இன்னொரு கை தட்டவும், யாரென்று பார்க்க திரும்பினான் முகில். அங்கே ஹெல்மெட் மாட்டிக்கொண்டு ஒருவன் உயரமாக நிற்கவும், முகம் முழுவதும் மறைந்திருந்ததால் யாரென்று தெரியாமல் “ஆத்தாடி! வாடா மச்சான் போயிடலாம்! எவனோ நம்மல கிட்நேப் பண்ண வந்துருக்காங்க” என்று சொல்ல,

“ஆமா! இந்த மூஞ்சிய கிட்நேப் வேற செய்ய வர்றாங்க. ஏதோ போனா போகுதுன்னு பார்க்க வந்துருக்கேன்” என்று கூறியவாறு சக்தி பார்க்க தன் ஹெல்மெட்டை கழற்றியவன் உடனே அதனை அணிந்தும் கொண்டான்.

“அட, நம்ம தீபக்கு! எதுக்கு இப்படி முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி திரியுற?” என்று சக்தி கேட்க, அதற்கு பதிலளித்தான் முகில்.

“பொது இடத்தில் இப்படிதான் சுத்த முடியும். இல்லைன்னா, இவனைப் பார்த்துட்டு கூட்டம் கூடிவிடும்” என்றவன் சக்தியை அழைத்துக்கொண்டு தீபக்கை பின்தொடர்ந்தான்.

பின் வந்த நாட்களில் சக்தியுடன் இருவரும் ஊர் சுற்றிவிட்டு அவனை தங்களது ஊரை நோக்கி பார்சல் செய்துவிட்டு தங்கள் பயிற்சியை தொடங்கினர்.

*********
பூஜையறையில் அனைத்து தெய்வங்களையும் கும்பிட்டவன், வெளியில் வந்து தாய் தந்தையரைக் கண்டான். இன்று அவன் இந்திய அணியின் சார்பாக விளையாட முத்தரப்பு போட்டி நடக்கும் லண்டன் நோக்கி செல்கிறான்.

“அம்மா! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா!” என்று தன் தாயின் காலில் விழுந்தவன், பின் தந்தையின் காலிலும் விழுந்தான்.

அதன்பின்னர், அனைவரிடம் இருந்தும் விடைபெற்று காரில் ஏறி விமான நிலையம் நோக்கி விரைந்தான். அங்கே அவனுக்காக காத்திருந்தான் தீபக்.

இருவரும் சேர்ந்து மும்பை சென்று மற்ற வீரர்களுடன் லண்டன் செல்வதாக திட்டம்.

முகில் சென்ற வண்டியை பார்த்தவாறு கண்கலங்கி நின்ற வாசுகியை நோக்கிய ஒரு வயதான பெண்மணி, “ஏன் புள்ள கண்கலங்கி நிக்குறவ? உன்ற மயன் ஒலகத்தையே கட்டி ஆளப்பொறந்த ராசா. அவன உன்ற முந்தானைலயே முடிஞ்சு வைச்சிக்க பாக்காதத்தா” என்க,

“அதுக்கெல்லாம் அழல பெரியம்மா. பிள்ள தெரியாத ஊருக்கு போகுது. அங்க அவன் என்ன சாப்பிடுவானோ? குளிரு அவனுக்கு ஒத்துக்குமான்னு தெரியல” என்று தாயாக தன் கவலையை வெளிப்படுத்த,

“இதுக்கா அழுவுற? உன்ற மகனுக்கும் வயசாவுதுல்ல, ஒரு கண்ணாலத்த பண்ணிப்போட்டா வர்றவ அவன பாத்துக்கப்போறா. ஏதோ இவங்க எல்லாம் பொண்டாட்டியையும் கூட கூட்டிட்டு போகலாம்னு இந்த சக்திப்பய சொன்னானே!” என்று கேட்க,

தன் கவலையை தீர்க்க வழி சொன்ன பெரியம்மாவைப் பார்த்து, “செய்யலாம் பெரியம்மா! இவன் கிட்ட கேட்டா, ‘இப்போதானம்மா நான் டீம்லயே செலக்ட் ஆகிருக்கேன். இன்னும் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கு. அதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்’ன்னு சொல்லுவான்” என்று மகனின் மனதறிந்த தாயாக அவர் கூற,

“இனிதான் நம்ம முகிலுக்கு ஒருத்தி வானத்துல இருந்து குதிக்கப்போறாளாக்கும்? அவ எங்கேயாவது இவனுக்காக காத்திட்டிருப்பா. நாமதான் தேடோனும்” என்றுவிட்டு செல்ல,

சரியாக அதே நேரத்தில் லண்டனின் ஹெத்ரோ விமானநிலையத்தில் ஒரு தேவதை இறங்கிநின்று காத்திருந்தது.



Waiting to know your views...
 
Last edited:
உங்களுடைய "காதலாகி
காதல் செய்வோமே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லேகா_1 டியர்
 
Last edited:
Top