Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 10

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்தப்பகுதி. சென்ற பகுதிக்கு ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...:love::love:


காதல் 10

1232

அன்று காலை எழுந்தவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படி இல்லாமல் இருக்கும்? வருடத்திற்கு ஒரு முறை அல்லவா வரும் இந்த நாள்? அவளின் பிறந்தநாள்.

அதுவும், அவளுக்கு முதலில் இன்று வாழ்த்தியதே முகில் தான். பதினொன்றறைக்கு அழைத்தவன், சரியாக பன்னிரெண்டு மணிக்கு அவளுக்கு வாழ்த்திவிட்டே வைத்தான். அதனை நினைத்தவுடனே அவள் அதரங்கள் புன்னகை சிந்தியது. நமக்கு முக்கியமானவர்களுக்கு நாமும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தானே!

அறையை விட்டு வெளியேறியவளை சூழ்ந்துகொண்டு வாழ்த்தினர் அவள் குடும்பத்தினரும் தோழர்களும். தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கார்ட் கொடுக்க, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதே புரியவில்லை அவளுக்கு.

எண்ணியதில் ஒன்பது இருந்தது. அனைவரும் சென்றுவிட, பாயல் மட்டுமே உடனிருந்தாள்.

“என்னடி இது?” என்று கேட்டவளிடம், “கண்டுபுடி” என்று கண்ணடித்தவள், ‘இனி நீயாச்சு அந்த கார்டாச்சு’ என்று சோபாவில் அமர்ந்துகொண்டாள்.

அவள் உதவமாட்டாள் என்பதை புரிந்துகொண்டவள், கட்டிலில் அமர்ந்து ஒவ்வொன்றையும் எடுத்துப்பார்க்க, புரியவேயில்லை. பின்பு, ஏதோ தோன்ற, அனைத்தையும் விரித்து வைத்தவள், ஒரு மணி நேரம் செலவு செய்து ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டாள்.

ஒரு பிரபல உணவகத்தின் பெயரை எழுதி அதன்கீழே அங்கே வரவேண்டிய நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அருகிலேயே ஒரு உடையும் வரையப்பட்டிருந்தது.

‘யார் அனுப்பியிருப்பா?’ என்று யோசித்தவள், அதையே பாயலிடமும் கேட்க, அவளும் கார்டை பார்த்தவள், “ஒரு நிமிஷம்” என்றுவிட்டு எங்கோ சென்று ஒரு பெட்டியுடன் வந்து அனிலாவிடம் .

“நீங்க தான் ஏதாவது ப்ளான் செய்யறீங்களா?” என கேட்டவாறே அதனை வாங்கியவள் திருப்பி திருப்பி பார்க்க, பெயரே இல்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிந்துபோனது. அது யாரோ தெரிந்தவர் செய்யும் வேலை தான் என.

பெட்டியை திறந்தவளுக்கு காணக் கிடைத்தது ஒரு சிவப்பு நிற டாப் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ். அதனைக் கண்டவளின் மனம் மீண்டும் சற்று முன் அவள் யோசித்த கேள்விக்கே வந்து நின்றது. ‘யாரா இருக்கும்?’

“டைம் ஆச்சுடி… சீக்கிரம் ரெடியாகிட்டு வா…” என்று அவளை குளியலறையினுள் தள்ளிவிட்டு சென்றுவிட்டாள் பாயல்.

அரை மணி நேரம் கழித்து வந்த அனிலாவை இழுத்துக்கொண்டு வெளியேறினாள் அவள். பாயல் இவ்வளவு சிரத்தை எடுத்து செய்வதைக் கண்டு ‘இவளே தான் ஏதோ ப்ளான் செய்திருக்கா’ என்று நினைத்தவள், தைரியமாகவே அவளுடன் செல்லலானாள்.

சில கிலோமீட்டர் பயணத்திற்குப் பின் அந்த இடத்தை அவர்கள் அடைய, லாபியிலேயே பூங்கொத்தோடு வரவேற்றது ஒரு உருவம்.

காரில் இருந்து இறங்கும்போதே அவனைக் கண்டுவிட்ட பாயல், ‘ஓ… இவனா?’ என்று இளக்காரமாய் ஒரு பார்வை பார்த்தாள். அதனை அவள் கூலிங் கிளாஸ் இட்ட விழிகள் மறைத்துவிட, அதனை அறியாதவனோ மெலிதாக விசிலடித்தான் தன்னை நோக்கி வரும் அந்த அழகியைக் கண்டு.

“வெல்கம் அண்ட் ஹாப்பி பர்த்டே” என்று அனிலாவிடம் நீட்டியவன், அதில் இருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என ஒற்றை ரோஜாவை மட்டும் எடுத்து பாயலிடம் நீட்டியவன், “வெல்கம் மை டியர் சன்” என்றான்.

இதனை அனிலா கவனிக்கவில்லை. அவள் தான் சந்தோஷைக் கண்டதில் இருந்து முகில் எங்கிருக்கிறான் என தேடிக்கொண்டிருந்தாளே!

“வாட்?” என்று பாயல் கேட்க, “சன் (Sun) என்று சொன்னேன். ‘காஸ், யூ ஆர் பர்னிங் மீ அப் (‘Coz, you are burning me up)” என்றவன் சட்டென கண்ணடிக்க, எதிர்புறம் அவனை வறுத்தெடுத்தது.

அதற்குள் இடத்தை சல்லடை போட்டவள், அவள் தேடியது கண்ணில் படவில்லை எனவும், எதிரில் இருந்தவனிடமே, “நீங்க மட்டும் தான் வந்தீங்களா?” என கேட்டுவிட்டாள்.

“ஆமாம். இங்கே எனக்கு சில தொழில்கள் இருக்கு. அதனை பார்க்க வரதா சொல்லவும், உனக்கு இந்த பொக்கேவை கொடுக்க சொல்லி இன்னைக்கு இங்க லஞ்ச் அரேஞ்ச் செய்து கொடுத்தான். கம் லெட்ஸ் கோ” என்றவாறு சந்தோஷ் முன்னே நடக்கத் துவங்க, அவனை தொடர்ந்தவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

பாயல், ‘இவனோட ஜகதலப் பிரதாபங்கள என்கிட்ட காமிக்க நினைக்கிறான் போல. மவனே! உன் லிஸ்ட்டுக்கு அடுத்த ஆளா என் பேர சேர்க்க நெனச்ச, சித்ரகுப்தனிடம் சொல்லி அன்னைக்கு எடுக்க வேண்டிய உயிர்ல உன் பேர சேர்க்க வெச்சுருவேன்!’ என அவனை திட்டியவாறு வர,

அனிலாவோ, ‘பொக்கே கொடுத்து விட்டிருக்கான்… அங்க வெட்டியா அங்கையும் இங்கேயும் ஓடிட்டு தான இருப்பான். (அதுக்கு பேர் ட்ரைனிங்!) அதுக்கு ஒரு ரெண்டு நாள் லீவ் விட்டால் தான் என்ன? இங்க வரவங்க யாருன்னு மட்டும் தெளிவா விசாரிக்க தெரிஞ்சது இல்ல, அவங்களோட அப்படியே வித்அவுட்-ல தொங்கிட்டு வரவேண்டியது தான? (ப்ளேன்ல வித்அவுட் இல்ல பாப்பா!)’ என்று அங்கு இல்லாதவனை நிற்கவைத்து கேள்விகேட்டுக்கொண்டிருந்தாள்.

இந்த இடைவெளியில், லிஃப்டின் உதவியுடன் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வந்துவிட, ஒரு கதவின் முன் நின்ற சந்தோஷ், “லேடீஸ் ஃபர்ஸ்ட்” என்க, அதனை ஆமோதித்து கதவைத் திறந்துகொண்டு உள்ளே கால் வைத்தாள் அனிலா.


******

அந்த இருட்டு அறையில் அவள் நின்ற இடத்தில் மட்டுமே வெளிச்சம் இருந்தது. சுற்றிலும் எதுவுமே தெரியாததால் திரும்பி கதவைக் காண, அதுவோ அடைபட்டிருந்தது.

“ஹலோ! யாராவது இருக்கீங்களா?” என்று அவள் நின்றிருந்த இடத்தைவிட்டு அசையாமல் கேட்க, அவள் மீது பூக்கள் தூவப்பட்டன. அதோடு மெலிதாக பாடலும் இசைக்கப்பட, அதனை கேட்டவளின் இதழ்கள் விரிந்தன.


ஏன் என்றால்

உன் பிறந்தநாள்

உலக பூக்களின் வாசம்

உனக்கு சிறைபிடிப்பேன்

உலர்ந்த மேகத்தைக் கொண்டு

நிலவின் தரை துடைப்பேன்

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

அர்த்தம் அவ்வளவாக புரியவில்லை என்றாலும், அது இசைத்ததில் இருந்து யார் இதனை செய்கிறார்கள் என்பது புரிந்துவிட, அவனைத் தேடி கண்கள் அலைந்தன அந்த இருட்டில்.

அப்போது ஒரு சொடக்கு சத்தம் கேட்க, அவளிடம் இருந்து அடுக்கடுக்காக லைட்டுகள் எறிய ஆரம்பிக்க, அந்த ஹாலின் நடுவே சிகப்பு நிற ஷர்ட் அணிந்து தன் ஒரு கையை மேஜையிலும் மற்றொரு கையை பேண்ட் பாக்கெட்டிலும் விட்டு நின்றிருந்தான் முகில். அவன் எதிரில் இருந்த மேஜையில் ஒரு கேக் வீற்றிருந்தது.


கிளை ஒன்றில் மேடை அமைத்து

ஒளி வாங்கி கையில் கொடுத்து

பறவைகளை பாட சொல்வேன்

இலை எல்லாம் கை தட்ட

அதில் வெல்லும் பறவை ஒன்றை

உன் காதில் கூவ செய்வேன்

உன் அறையில் கூடு கட்டிட

கட்டளையிடுவேன்......

அதிகாலையில் உன்னை

எழுப்பிட உத்தரவிடுவேன்...

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

அவனைக் கண்டநொடி சீறிப்பாய்ந்தவள், “முகீகீகீகீ…” என்றவாறு அவனை கட்டிக்கொள்ள, காதலை உணர்ந்தபின் அவனுக்கு அவளோடான முதன் அணைப்பு. ‘அவளை உன் இதயத்தோடு இணைத்துக்கொள்’ என்று மனம் கட்டளையிட, ‘அவளுக்கு இன்னும் உன் மேல் காதல் வரவில்லை. பொறுத்திரு’ என்று அவனை நிதானப்படுத்தியது இதயம். அதனால் தன்னை மெல்ல கட்டுப்படுத்தியவன், அவளை லேசாக அணைத்து விலக்கி நிறுத்த, அவனைப் பார்த்த மகிழ்வில் இருந்தவளோ, மெல்ல அதில் இருந்து வெளிவந்து, “போடா… நீ இங்க வந்திருப்பன்னு நான் எவ்வளவு ஆவலா தேடினேன் தெரியுமா?” என்று கேட்டவாறு அவன் புஜத்தில் குத்தினாள்.

மலை உச்சி எட்டி

பனி கட்டி வெட்டி

உன் குழியில் தொட்டியில் கொட்டி

சூரியனை வடிக்கட்டி

பனியெல்லாம் உருக்கிடுவேன்

உன்னை அதில் குழிக்கத்தான்

இடம் பார்த்து இறக்கிடுவேன்

ஏய் ஏய் ஏய் ய ய ய....................

கண்ணில்லா பெண்மீன்கள் பிடித்து

ஓ ஓ ஓ ஓ..................

உன்னோடு நானே தூவிடுவேன்

நீ குளித்து முடித்து துவட்டத்தான்

என் காதல் மடித்து தந்திடுவேன்

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

அதில் மனம் மகிழ்ந்தவனோ, “ஹோட்டல் வாசல்லயே வந்து நின்றிருந்தா உன் கண்ணுல இவ்வளவு சந்தோஷத்த பார்த்திருக்க முடியாது. ஆனால், இப்போ உன் கண்ணுல இருக்க அந்த ஆச்சரியம் இந்த சர்ப்ரைஸால தான?” என்று கேட்க, அவனிடம் சண்டையிட மனம் இருந்தாலும், அதனை செய்து நாளை கெடுத்துக்கொள்ள விரும்பாதவள் ம்ம்ம் கொட்டினாள்.

“சரி சரி… நின்னது எல்லாம் போதும்… முதலில் கேக் கட் பண்ணு…” என்றவன் அவளிடம் கத்தியை நீட்ட, அதனை வாங்கியவள் அவன் வாழ்த்துப்பாட மகிழ்வுடன் கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாள்.


நெஞ்சத்தை வெதுப்பாக மாற்றி

அணிச்சல் செய்திடுவேன்

மெழுகு பூக்களின் மேலே

என் காதல் ஏற்றிடுவேன்

நீ ஊதினால் அணையாதடி

நீ வெட்டவே முடியாதடி

உன் கண்கள் நீ மூட்டி

என் வேண்டுவோர்

அதை

கேளடி

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

ஏனென்றால்

உன் பிறந்தநாள்

வெட்டிய துண்டினை முகிலுக்கு ஊட்டியவள், அவனிடம் இருந்தும் வாங்கியவாறு கண்களை சுழற்ற, அங்கே இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் காணவில்லை.

“முகி… பாயலும் சந்தோஷும் என்கூட தான் வந்தாங்க. ஆனால் இப்போ காணோம். அவங்கள வெளியவே விட்டுட்டேன் போல. இரு, நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று அவள் நகரப்போக,

‘எம்புட்டு சீக்கிரமா நியாபகம் வந்துருச்சு இவளுக்கு’ என தன் மனதிலேயே கவுண்டர் கொடுத்தவன், அவள் கையைப் பற்றி இழுத்து, “அவங்க எப்பவோ கிளம்பியிருப்பாங்க. உன்னை இங்கே கொண்டுவந்து மட்டும்தான் விட சொன்னேன்” என்றான்.

அப்போதுதான் இவை அனைத்திலும் பாயலும் உடந்தை என்பது புரிய, இடுப்பில் கை வைத்தவள், “அவகிட்ட எப்போ நீ ஹெல்ப் கேட்ட?” என்க,

தன் கைப்பேசியை எடுத்துக்காட்டியவன், “எஃப்.பி.” என ஒற்றை வார்த்தையில் உரைத்தான்.

“ஓ…” என்றவள் அத்தோடு முடித்துக்கொண்டாள். ஆனால் அவனோ, அங்கே தயார் செய்துவைத்திருந்த லஞ்சை அவளை உண்ண வைத்தவன், நேரம் ஆவதை உணர்ந்து அவளுடன் அங்கிருந்து வெளியேறினான்.


******

“விட்றா கைய… என்னை தொட்ற வேலை வெச்சுக்கிட்டன்னா பாரு…” என்று எகிறிக்கொண்டிருந்தாள் பாயல். அனிலா உள்ளே சென்ற நொடியிலேயே அவளை தொடரப்போன பாயலை இழுத்திக்கொண்டு நகர்ந்திருந்தான் அங்கிருந்து. அதற்காகத் தான் இந்த மண்டகப்படி.

அவளுடன் ஓரமாக வந்தவன் அவள் கையை விட, “ஹே… இங்க யாரும் ஆசைப்பட்டு உன் கைய புடிக்கல. முகில் அனிலாவ மட்டும் தான் உள்ள அனுப்பிவிட சொன்னான். உன்ன மாதிரி அரைடிக்கெட்ட இல்ல” என்க,

“யாரடா அரைடிக்கெட்டுன்னு சொன்ன?” என்று பதிலுக்கு எகிறினாள் பாயல்.

“வேற யாரு… நீ தான்” என்று அவன் சொல்ல, அவன் பேச்சில் அருகில் இருந்த சிறிய பூந்தொட்டியை குனிந்து எடுத்தவாறே மீண்டும், “என்ன சொன்ன?” என்று நிறுத்தி நிதானமாக கேட்க,

“ஆத்தாடி… அவனுக சொல்றது எல்லாம் உண்மைதான் போல இருக்கு. பொசுக்குன்னு கல்லு கெடைக்கலைன்னு பூந்தொட்டிய தூக்கிட்டா… விடு ஜூட்…” என இடத்தை காலி செய்தான் சந்தோஷ்.

‘என்ன சொல்லிட்டு போறான் இவன்…’ என யோசித்தவளுக்கு சில நொடிகளுக்கு பின்பு தான் அந்த ஃபேஸ்புக் மீம் நினைவிற்கு வர, “பக்கி… குள்ளச்சின்னு சொல்லிட்டா போற… அடுத்த முறை கண்ணுல படு… உனக்கு பாறங்கல் தான்” என தன்னை அறியாமலேயே அவன் சொன்னதை ஒத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள் பாயல்.


******

“எங்க முகில் கூட்டிட்டு போற?” என்று இத்தோடு பத்தாவது முறையாக கேட்டுவிட்டாள் அனிலா.

இருவரும் அந்த ரெஸ்டாரெண்டிலேயே ஒரு பைக்கை வாங்கி அடிலைட்டின் வீதிகளில் சென்றுகொண்டிருந்தனர். அவள் எத்தனை முறை மாற்றி மாற்றி கேட்டாலும், ‘அங்கே போனதும் தெரியும்’ என்று ஒற்றை பதிலை மட்டுமே சொன்னான் முகில்.

சில நிமிட பயணத்தில் அவர்கள் நின்ற இடத்தைக் கண்டவள் முகிலை மகிழ்வுடன் அணைத்துக்கொண்டு, “எப்படிடா…” என்று கேட்டாள்.

“நீ வீட்ல பர்மிஷன் கொடுக்கலைன்னு சொன்னியே! அப்போவே டிக்கெட் புக் செய்துட்டேன்” என்று அவள் ஆனந்தத்தைக் கண்டு தானும் மகிழ்ந்து கூறினான்.

அனிலாவிற்கு விருப்பமான பாடகர் ஒருவரின் இசைநிகழ்ச்சி அன்று நடைபெற, அதற்கு அனுமதி கேட்டவளுக்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. பின்பு, இதற்கு முன்பே இரண்டு முறை பார்த்துவிட்டாள். அவர்களும் ஒரு முறை அவளுடன் சென்று தூங்கியெழுந்து வந்துவிட்டனர். இத்தோடு போதும் என்றவர்கள் தடா உத்தரவு போட, அதனை முகிலிடம் புலம்பவும், நினைவில் வைத்து இன்று அழைத்துவந்துவிட்டான்.

தன் தலைக்கவசத்தை எடுத்தவன் உடனே தன்னை ஒரு தொப்பியால் மறைத்துக்கொள்ள, “நல்லா உஷாரா தான் பாஸ் இருக்க” என்றாள் அவள்.

“நாம முதலில் இருந்த இடத்தில் பத்திரிக்கையாளர்கள் அதிகமா வரமாட்டாங்க. ஆனால், இங்க திரும்பற இடம் எல்லாம் பத்திரிக்கையாளர்களும் ஜனங்களும் தான் இருப்பாங்க. என்னதான் ஃபங்க்ஷன் ஆரம்பித்ததும் அவங்க கவனம் மேடைக்கு திரும்பிரும் என்றாலும், நாமும் கவனமா இருப்பது நல்லது” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடக்க, இருவரும் கன்சேர்ட் நடக்கும் பகுதிக்குள் நுழைந்தனர்.


******

“செமயா இருந்துச்சுல்ல முகி…” என்று கேட்டவாறே அனிலா வர, அவளுடன் இணைந்து வண்டியை நிறுத்தியிருந்த இடம் நோக்கி நகர்ந்தான் முகில். அப்போது அவன் பின் வந்தவர் அவனை இடித்துவிட, அதில் கீழே விழுந்த தொப்பியை எடுத்து அணிந்தவன் அவளோடு அவ்விடத்தை விட்டு விரைந்தான்.

******

விடிந்தும் விடியாத நேரத்தில் கைப்பேசி சத்தமிட, ‘எந்த பக்கியோ நேத்து பர்த்டேயை இன்னைக்குன்னு நினைச்சு விஷ் பண்ண கூப்பிடுது’ என நினைத்தவள் அதனை வைப்ரேஷனில் போட்டுவிட்டு தூங்க, மீண்டும் விடாது ஒலித்து அவளை கடுப்பேத்தியது. அதில் எரிச்சலுற்றவள், டிஸ்ப்ளேயை காண, சதாஃப் அழைத்திருந்தாள். ‘இவ முக்கியமான விஷயமா இல்லாம கூப்பிட மாட்டாளே!’ என்று நினைத்தவள் அழைப்பை இணைத்து காதில் வைக்க, மறுமுனையில் கூறிய தகவலில் அதிர்ச்சியடைந்தவள் விரைந்து முகநூலினை திறக்க, அதில் நேற்று முகிலும் அவளும் கன்சர்டில் இருந்து வெளிவரும் படம் ஒன்று இருந்தது. அதன் மேலே, ‘வளர்ந்துவரும் இந்திய கிரிக்கெட் வீரரின் ரகசிய காதல்’ என்று எழுதியிருந்தது.

இரவு நேரத்தில் எடுத்ததால் படம் சரியாக இல்லாமல் இருந்தாலும், உற்றுப்பார்த்தால் அவள் தான் என்பதை அவளைப் பார்த்தவர்கள் அறிந்துகொள்ளலாம். அந்த அளவிற்கு தெளிவாகவே இருந்தது.

பதட்டமடைந்தவளின் மூளை முதலில் சொன்னது எல்லாம், ‘முகிலிடம் கூறு’ என்று. மணியைக் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அவனை அழைத்திருந்தாள் அனிலா.

முகில் மறுபுறம் எடுத்தவுடன், “முகி…” என்று ஆரம்பித்தவள் விடயத்தைக் கூற, தான் பார்த்துவிட்டு அழைப்பதாகக் கூறியவன் இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தான்.

“சாரி அனி… நான் இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல. பார்த்து கவனமா இருந்தும், எப்படி நியூஸ் போச்சுன்னே தெரியல… ஐ ஷுட் ஹவ் பீன் மோர் கேர்ஃபுல்” என்று அவன் உண்மையில் வருந்த,

அவன் வருந்துவது பிடிக்காதவளோ, “சென்ஷேஷனா இருக்கனும்னு நியூஸ்ல ஏதாவது எழுதிட்டு தான் இருப்பாங்க முகி… இப்போ நான் அத பத்தி எல்லாம் கவலைப்படல. எனக்கு ரெண்டே ரெண்டு விஷயம் தான் இடிக்குது” என்று அவள் தன் மனதில் இருப்பதை கூற, “என்ன?” என்று கேட்டான் அவன்.

“எங்க வீட்டுல விஷயம் தெரிஞ்சா என்ன சொல்வாங்கன்னு தெரியல. அதுவும், மத்தவங்க புரிஞ்சுப்பாங்க. ஆனால், பாட்டியை எப்படி சமாளிக்கப்போறேனோ!” என்றவள், “அடுத்து…” என இழுத்து கூறாமல் நிறுத்தினாள்.

“என்ன அனி… என்ன ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் சொல்லு…” என்று கேட்டான் அவன்.

“இந்த நியூஸால உன் ரெப்புடேஷன் ஏதாவது ஸ்பாயிலாகும் இல்ல… யூ வில் பீ ஃபீலிங் அன்கம்ஃபர்ட்டபிள் ரைட்?” என்று பரிதவிப்போடு கேட்க, சில நொடிகள் எதிர்முனையில் மௌனம். பின் மெல்ல உதிர்ந்தான் அந்த சொற்களை.

“No Anila. Infact, I’m somewhere happy that they made the news of us being together, because I want us to be together” (இல்லை அனிலா. நான் அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டதற்கு மகிழ்கிறேன். ஏனென்றால், நாம் இருவரும் சேர்ந்திருப்பதைத் தான் நான் விரும்புகிறேன்)
 
Last edited:
Top