Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 25

Advertisement

lekha_1

Active member
Member
காதல் 25

1328

“முகிலா…”

“ம்…”

“டேய்… முகிலா…”

“என்னடி?” யாருக்கும் கேட்காதவாறு தன்னை படுத்தியெடுக்கும் அனிலாவிடம் அதேபோல் கிசுகிசுத்தான் முகில்.

“இந்த சடங்கு பேர் என்னடா?” ஊரில் உள்ள கோவிலில் சக்தி-ஆதினி திருமணத்திற்கு உப்பு ஜவுளி மாற்றும் சடங்கு நடந்துகொண்டிருந்தது.

“இத உப்பு ஜவுளின்னு சொல்வாங்க. அதாவது, பெண் மாப்பிள்ளை வீட்டார் உப்பையும் ஜவுளியையும் மாற்றிக்கொண்டு, இனி வரும் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் இருவீட்டாரும் இணைந்திருப்போம் என்னும் அர்த்தத்தில் செய்வது. இப்போதெல்லாம் ஒரு கோவிலில் உப்பு மட்டும் மாற்றிவிட்டு, அங்கிருந்து கடைக்கு சென்று பெண்ணுக்கு ஜவுளி எடுத்து வருகிறார்கள். சில இடங்களில் மட்டும் தான் கையோடு இரண்டையும் செய்யறாங்க. கிட்டத்தட்ட இது நிச்சயம் போலத்தான்” என்று அவன் சுருக்கமாக கூற, அதனை கேட்டுக்கொண்டவள், “நமக்கும் இப்படித்தான் செய்வாங்களா?” என்று கேட்டாள்.

அதில் அவள் முகம் பார்த்தவன் அவளையே பார்த்தவாறு நிற்க, அப்போதுதான் தான் கூறியதன் அர்த்தம் உணர்ந்தவள், அவனை காண நாணம் கொண்டு நிலம் பார்த்தாள்.

பல மாதங்களாக காதலிக்கிறார்கள் தான். ஆனால், இருவரும் இதுபோல் பேசுவது புதிது. அவள் நாணம் கொள்வதும் புதிது. நேற்றைய அட்மோஸ்ட் முத்தம் முற்றிலும் புதிது. இவை அனைத்தும் ஒருங்கே நிகழ, என்னவென்று வரையருக்க முடியாத நிலையில் இருந்தான் முகில்.

இருவருமே கூட்டத்தில் இருந்து தள்ளி இருக்க, அதுவே வசதியாகப்போக, அவள் கையை பிடித்துக்கொண்டான் முகில். அதில் சங்கடம் அடைந்தது பெண்ணவள் தான்.

அவனிடம் இருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்டே, “முகி… இது கோவில்…” என மெல்லிய குரலில் அவள் கடிய, அதில் பெருமூச்சுவிட்டவன், தன் கைகளை விலக்கிக்கொண்டான்.

அனைவரும் நிகழ்ச்சி முடிந்து கிளம்ப, சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதை செயல்படுத்தவும் செய்தான்.

அனிலாவை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு செல்ல, ‘இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்?’ என்று எண்ணியவாறே அவனைத் தொடர்ந்தாள் அவள்.

‘துணிக்கடைக்கு பொம்மை கம்மியா இருக்காம். நீ நிக்க முடியுமான்னு கேட்க வந்திருக்கான். போய் நிக்கறியா?’ என்று அவள் மனமே கலாய்க்க, அதனை தட்டி தூங்க வைத்தவள் அவனையே பார்த்தாள்.

முகில் சென்று நின்றது, பட்டு செக்ஷனில்.

“முகி! இங்க என்ன செய்யப்போறோம் முகி?” என்று அவள் கேட்க, அவளை பார்த்தவன், அவள் சிறிது நேரத்திற்கு முன் மனதில் நினைத்ததையே கூறினான்.

அவள் தான் ‘மைண்ட் வாய்ஸை கூட கேட்ச் பண்றானே!’ என வாயை மூடிக்கொண்டது.

‘பின், நீ என்ன வேணாலும் செய்துக்கோ, எனக்கென்ன?’ என நினைத்தவள், அவன் அருகிலேயே அமர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க, அப்போதுதான் சில தலைகள் அவனையே நோக்குவதைக் கண்டாள்.

‘ஏன் இப்படியே பாக்குறாங்க?’ என நினைத்தவள் அவனைக் காண, ஏதோ கொள்ளைக்கூட்டத் தலைவன் கொள்ளையடிக்க தயாராக இருப்பது போல் முகத்தை கர்ச்சீப்பைக் கொண்டு மூடியிருந்தான் அவன்.

‘ஒரு மச்சம் மட்டும் வெச்சா அக்மார்க் கொள்ளையன் தான்டா நீ’ என தனக்குள் கூறிக்கொண்டவள், அவனை சுரண்டி, “ஏன் இப்படி முகத்தை மூடியிருக்க?” என்று கேட்டாள்.

சேலைத் தேர்வில் இருந்தவன் அவளை திரும்பிப் பார்த்து, “என்னை யாராவது பார்த்து கூட்டம் கூடினால் என்ன செய்யறது? அதுதான்” என்க,

“ஆமா… பெரிய அப்பாட்டக்கர்! இவர பார்க்க தான் எல்லாரும் வராங்க. இப்போ தாண்டா உன்ன சுத்தி நின்னு லாடம் கட்டிருவாங்க போல தோணுது…” என்று தனக்குள்ளேயே முனங்கியவள், வெளியே, “அதுக்கு வராமையே இருக்க வேண்டியது தான?” என கேட்டாள்.

அதில் அவளை முறைத்தவன், “வராம இருந்தா, எப்படி உனக்கு புடவை எடுக்கறது?” என்று கேட்க,

குதுகலமடைந்தவள், “ஐ… எனக்கா முகி புடவை?” என்று அவனோடு சேர்ந்து தானும் பார்க்கலானாள்.

தேர்வு செய்தவாறே, “ஆனால், நீ எனக்கு திடீருன்னு ஏன் புடவை எல்லாம் எடுத்து தர்றேன்னு தான் புரியல முகி” என்க,

அவள் காதோரம் குனிந்தவன், “நீ கோவில்ல கேட்டதற்கு” என்று கூற,

‘அப்படி என்ன சொன்னோம்?’ என்று நினைத்தவள், அது நினைவிற்கு வர, அவள் வதனம் செங்காந்தள் மலர்களை அரைத்து பூசிக்கொண்டது.

அவளையே பார்த்தவாறு இருந்தவன், அவளை இழுத்து தன் கையணைப்புக்குள்ளாகவே வைத்துக்கொண்டு சேலைகளை பார்க்க, பெண்ணவள் தவித்துத்தான் போனாள்.


செங்காந்தள் கையாலே உயிரை தொட்டுப் போனாள்
ஒரு செந்தூர ஆகாயம், கண்ணில் தந்து போனாள்
ஓயாத பூத் தூறல் உள்ளே ஊற்றி போனாள்
அவள் தோள் சாய்ந்து நான் பேச, ஆசை மூட்டிப் போனாள்
பழகிய நாட்கள் எல்லாமே, அழகை மாற்றி போனாளே
பலமுறை அவளை பார்த்தாலும், அடங்கா ஆவல் கொடுத்தாளே
ஈரம் மனதோரம் நதி நதி என
தானே வந்தாள் வந்தாள்
தூரம் வெகு தூரம் ஒரு அலை என
தானே தீண்டி சென்றாள்


அதன்பின், அவள் சேலையை தேர்வு செய்தாளோ இல்லையோ, முகிலை கண்டும் காணாமல் பார்ப்பதே அவள் வேலையாகிப் போனது. முகிலுக்கும் அவள் நிலை புரிய, அவள் தன்னை பார்க்காமலே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு எங்கேயேனும் அவளை தூக்கிச் சென்று விடுவோமா? என யோசிக்கும் நிலைக்கு வந்துவிட்டான். அதற்கு அவன் வளர்ப்பு தடை போட, தன்னை முயன்று ஆடை தேர்வில் ஈடுபடுத்திக்கொண்டான்.


எதோ போல ஆனேன்.. எதனாலே மாறி போனேன்
எமன் போலே கொள்ளும் பார்வை..
என்னை உரசும் போதும் உயிர் வாழ்கிறேன்
அட யாரை தாண்டும் பொழுதும்,
ஏதும் தோன்றிடாது
அவளை பார்க்கும் பொழுது.
என் கால்கள் தாண்டிபோகாது
நேற்று பார்த்த நிலா எட்டாத தூரம் தூரம்
ஏனோ ஏனோ இன்று என் கைகள் நீட்டும் தூரம்
காற்றில் போகும் நிலை ஆனேனே ஏனோ நானும்
தூக்கி போனாள் என்னை எங்கேயோ… போனேன் நானும்
தேடி நிறம் தேடி உடை உடுத்திடும் மாற்றம் தந்தாள் தந்தாள்
மாயம் இது தானோ, என் நிழலுக்கு வண்ணம் ஏன் வந்ததோ

ஒரு வழியாக இருவரும் கடையை விட்டு வெளியேற, அவளோடு தனிமை இன்னும் வேண்டும் என்று கேட்ட மனதை மறுக்க முடியாமல் அருகில் இருந்த கடைக்கு அழைத்துச் சென்றான். அதற்கு எடுத்துக்கொண்ட ஐந்து நிமிடங்களும் அவன் கைகளை பிடிப்பதா வேண்டாமா என அவள் தனக்குள் போராடிக்கொண்டிருக்க, முகிலே மெதுவாக அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.

அதில் அவள் மனம் மகிழ்ந்தாலும், அதுவரை இல்லாத சுற்றுப்புறம் எல்லாம் அப்போதுதான் உரைத்தது பாவையவளுக்கு. அதனை மெலிதாக அவனிடம் அவள் கூற, “பார்த்தா பாக்கட்டும்” என அவளைப் போலவே கூறினான் அவன்.

இருந்தும் அவனிடம் இருந்து அவள் தன் கைகளை விலக்க போராட, அதனை அழுத்திப் பிடித்தவன், அவளிடம் ஒரு ப்ளீஸ் போட, அதற்குமேல் அவளால் மறுக்க முடியுமா என்ன?

கூட்டம் கூடும் சாலை.. விரல் கோர்த்து போகும் வேளை
பலர் பார்த்து போகும்போதும்... அது தனிமை போல ஏன் தோன்றுதோ..?
அவள் கூந்தல் ஆட தானே, தோளில் மேடை கேட்பேன்..
மெலிதாய் தீண்டும் போது, சிறிதாக கர்வம் கொள்வேனே..
தீயில் செய்த கண்கள் என் நெஞ்சை எட்டி பார்க்கும்..
பூவில் நெய்த கைகள் ஏதேதோ என்னை கேட்கும்..
வானவில்லின் ஏழு வண்ணம் தான் சாயம் போகும்..
வெள்ளை மேகம் அவள் எல்லோர தோற்று போகும்

ஈரம் மனதோரம் நதி நதி என
தானே வந்தாள் வந்தாள்
தூரம் வெகு தூரம் ஒரு அலை என
தானே தீண்டி சென்றாள்

அந்நாளின் முடிவில் காதலர்கள் இருவருக்கும் தங்களின் நினைவடுக்கில் பொக்கிஷமாக பூட்டிவைத்துக்கொள்ள ஒரு நாளும் கிடைத்தது.

பழகிய நாட்கள் எல்லாமே, அழகை மாற்றிப் போனாளே
பலமுறை அவளை பார்த்தாலும், அடங்க ஆவல் கொடுத்தாளே…
வானம் அதன் தாகம், கடல் கொடுத்திடும் காலம் வந்தாள் வந்தாள்…

நேரம் வெகு நேரம், உடன் நடந்திடும் ஆசை தந்தாள் அவள்…


*****

ஆதினிக்கு அயினி நெருங்கிய தோழி என்பதால், அவள் ஆதினிக்கு உதவியாக செல்ல விழைந்தாள். அயினியை விட்டு பிரிய விரும்பாத அனிலாவும் ஆதினியின் வீட்டிற்கு சென்றாள்.

தன் பிரியமான அண்ணனின் மனம் கவர்ந்த பெண்ணுடன் பழக வேண்டும் என்னும் ஆசையும் அதிகமாக இருக்க, உடனே அவளோடு கிளம்பிவிட்டாள் அனிலா. வந்து சில நாட்களே ஆனாலும், அயினிக்கும் அனிலாவிற்கும் நல்லதொரு பழக்கம் ஏற்பட்டிருந்தது.

ஆதினியின் வீட்டிற்கு சென்ற அனிலாவிற்கு அவ்வீட்டின் தோற்றம் எளிமையாக இருந்தாலும், வெகுவாக பிடித்திருந்தது.

முன்புறம் சிறியதாக ஒரு தோட்டம், அவர்கள் வீட்டு உபயோகத்திற்காக மட்டும் வைத்திருப்பார்கள் போல. அதில் கறிவேப்பிள்ளையும், தக்காளியும் ரோஜாவும் அடக்கம். முன்புறம் சிறு திண்ணை, அதனை தாண்டி ஒரு கூடம், ஒரு படுக்கையறை, சமையல் கூடம். இவ்வளவே தான். வந்தவர்களை வாசலிலேயே வரவேற்ற ஆதினியின் தாயார், அவள் யாரென்று அயினி கூறியதும், முதலில் ஆச்சரியத்தையும், பின்பு அன்பையும் வெளிப்படுத்திய ஆதினியின் விழிகள் என, அவ்விடம் மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு.

அதே பிடித்தத்தோடு அவள் ஆதினியிடம் பேச ஆரம்பிக்க, இருவருக்குள்ளும் ஒரு சொந்தம் ஏற்பட்டது.

ஆதினிக்கு அனிலாவின் பெயர் கூறப்பட்டவுடனேயே கண்டுகொண்டாள், அவள் யாரென. சக்தி தான் அனைத்தையும் அவளிடம் ஒப்பித்துவிட்டானே! பார்ப்பதற்கு முன்பிருந்தே பிடித்தது அவளுக்கு அனிலாவை. இப்போது பார்த்ததும், இன்னும் பிடித்தது அவளுக்கு.

அயினியோடு அனிலாவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டவள், வேலைகளை கவனிக்கலானாள். அவள் தாயார் புகுந்த வீட்டிற்கு செல்வதற்காக தற்போதே பெட்டிகளை தயார் செய்து வைக்கச் சொல்ல, அவற்றை அடுக்கிக்கொண்டிருந்த போது தான் இருவரும் வந்தனர்.

எனவே, அவர்களோடு பேசியவாறே அவள் அதனை தொடர, அப்போது அவளை அழைத்தார் அவள் தாயார். அவள் உடனே எழுந்து செல்ல முடியாத நிலையில் இருந்ததால், தான் சென்று பார்த்து வருவதாகக் கூறி அயினி வெளியேற, அவள் செல்வதற்காகவே காத்திருந்தாற்போல் ஆதினி அனிலாவை அழைத்து, “அண்ணி… முகில் அண்ணாக்கு நீங்க செம்ம ஜோடி…” என சான்றிதழ் வழங்கினாள்.

அதில் வெட்கம்கொண்ட அனிலாவும், “நீங்களும் சக்தி அண்ணாவும் சூப்பர் ஜோடி அண்ணி… எனக்கு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்கனும்னு ரொம்ப ஆசை” என்று அவளும் கூற, “அது நீங்க எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஐடியா கொடுத்தப்போவே தெரிஞ்சுதே!” என்றாள் ஆதினி.

ஆதினியை ஒரு முறை சக்தி போட்டோவில் காட்டி அவளைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் கூறிவிட, அவள் தான் அவனுக்கு பொறுத்தமாக இருப்பாள் என்று தோன்றியதால் இருவருக்கும் காதல் பிக்கப் ஆக பல ஐடியாக்களை தூவிவிட்டு சக்தி காதல் கடலில் ஆதினியை கூட்டிக்கொண்டு தொபக்கட்டீர் என விழ காரணகர்த்தாவானவளே அனிலாதான்.

இருவரும் அடுத்து எதுவும் பேசுவதற்குள் அங்கே அயினி கையில் மோருடன் பிரசன்னமாக, அதனை அத்தோடு விட்டுவிட்டு வேறு கதைகளை பேசலானர் மூவரும்.
 
Top