Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே

lekha_1

New member
Member
ஹாய் ப்ரென்ட்ஸ்...

சில மாதங்களுக்கு முன்பு தோன்றிய ஒரு எண்ணத்தின் பிரதிபலிப்பே இக்கதை. அப்படி என்ன பெருசா சொல்லப்போறேன் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம். நமக்கு சீரியசா எல்லாம் கருத்து சொல்ல வராது. சோ, சீரியஸ் கதை என்று எல்லாம் நினைக்கவே வேண்டாம். இன்று ஆரம்பிக்கும் இந்த தொடக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஒரு குட்டி டீசர், அனைவருக்காகவும்.நாளை முக்கியமான நாள் அவனுக்கு. தன் திறமையை இந்த உலகிற்கு நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் தேர்ந்தெடுத்த துறையில் திறம்பட செயல்பட்டுகொண்டே இருக்க வேண்டும். அதுவும் இப்பொழுது அதான் அவசியத்தை அவன் அறிந்தே இருந்தான். இந்த யோசனைகளோடே தன் அறைக்கதவை திறந்து உள் நுழைந்தவனை வரவேற்றது அங்கே முன்பே அமர்ந்திருந்த ஒரு உருவம். அது பெண் என்பது பார்த்தவுடனே தெரிந்துவிட்டது அவனுக்கு.

'இவன அன்னைக்குதான் அவ்ளோ திட்டுனேன். இன்னிக்கு திரும்ப இப்படி செய்துருக்கான். இனி அவன்கிட்ட சொல்லி நோ யூஸ். இந்த பொண்ண திட்டுற திட்டுல இனி எந்த பொண்ணுமே என் ரூம் பக்கமே வர யோசிக்கனும்' என்று நினைத்தவன்,

"ஹலோ... உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எனக்கு விருப்பமில்லைன்னு உங்கள அனுப்புனவன்கிட்ட ஆல்ரெடி சொல்லியும் அவன் கேட்கவே இல்ல. உங்களுக்கு பணம் தான வேணும்? இதோ!" என்று தன் பர்சில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து அவள் புறம் வீசியவன், "ஜஸ்ட் கெட் அவுட்" என்று வாயிலைக் காட்டி திரும்பி நின்றான்.

தான் இவ்வளவு சொல்லியும் எந்த எதிரொலியும் இல்லையே என்று மீண்டும் திரும்பி, போய்விட்டாளா என பார்க்க, அங்கே இவனை முறைத்தவாறு கைகட்டி நின்றிருந்தாள் அந்தப் பெண்.

"நீ இன்னும் போகலியா? இன்னும் பணம் வேண்டுமா?" என்று கேட்டவனிடம் வெகு நிதானமாக உறைத்தாள் அவள், "இது என் ரூம். If someone has to leave, then it should be you!"

அவள் சொல்வது என்னவென்று புரிய, அந்த அறையின் வெளியே கதவில் ரூம் நம்பரை பார்த்தவன், 'ஐயையோ' என்று மானசீகமாக தலையில் கை வைத்தான்.

உள்ளே அவளோ, வெட்டவா குத்தவா என்று அவனை அன்போடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.


டீசர் எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்கப்பா. விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.
 
Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "காதலாகி
காதல் செய்வோமே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லேகா_1 டியர்
 
Last edited:
Top